இனிக்கும் தமிழ் – 171/டி வி ராதாகிருஷ்ணன்

‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து,
பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச்
சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து,
குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும்

>>

கம்பனைக் காண்போம்—67/வளவ.துரையன்

தயரதன் தம் நாட்டை எப்படி ஆட்சி செய்தான் என்று கம்பன் இப்பாடலில் கூறுகிறான். அவனுக்குப் பகைவர் என யாரும் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்கள் “எம் மீது உன் படைக் கருவிகளைச் செலுத்து” என்று வருவர்.

>>

இலக்கிய இன்பம் 67/கோவை எழிலன்

இலக்கியத்தில் பேய் என்றாலே கலிங்கத்துப் பரணியும் தக்கயாகப் பரணியும்தான் நினைவிற்கு வரும். அவ்விலக்கியங்களுக்கு வெகுகாலம் முன்பே நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் பேய்மகள் அச்சமூட்டும் தோற்றம் கொண்டவளாக வருணிக்கப் படுகிறாள்.

>>