திவ்யா ஈசன் கவிதை

முதலில்தேநீர் கோப்பை உடைந்தது பிறகுடீவி ரிமோட் உடைந்ததுஸ்விட்ச் போர்டு உடைந்ததுசெல்போன் உடைந்தது ஒரு நாள்முகம் காணும் கண்ணாடி உடைந்தது இன்னெரு நாள்மதிப்புமிக்க பரிசொன்று உடைந்தது அடிக்கடிசட்டிப் பாத்திரம் உடைந்தது நேற்றுமாறிமாறி மண்டை உடைந்தது ஓர் உறவை உடைப்பதற்கு பதிலாய்இன்னும்எதையெல்லாம் உடைப்பீர்கள்? _

>>