மாலன்/களவு
தோழமையான விரல் தோளில் தட்டுவதைப் போல வானிலிருந்து வந்தமர்ந்தது மழைத்துளி. சிலிர்த்துக் கொண்ட அவன் நிமிர்ந்து பார்த்தான். நீலவானம் இருட்டத் தொடங்கியிருந்தது. தூறலொடு நின்று விடுமா? தொடர்ந்து பொழியுமா? இறங்கி நடக்கலாமா, இல்லை எங்கேயேனும் ஒதுங்கி நிற்கலாமா என்று அவன் முடிவெடுப்பதற்குள் …
>>