அ.எபநேசர் அருள் ராஜன் /உதவிவரைத்தன்றுஉதவி

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 13 சுருக்கம் விழுந்த மலர்முகத்தையும் உதட்டு விளிம்பில் பொங்கும் சிரிப்பையும் காண்பதற்காகவோ அல்லது அந்த வாழ்ந்து முடித்த பூரிப்பை எட்டிப் பார்க்கும் ஆவலினாலோ தேநீர்த் தாத்தாவின் கடையில் பால் பொங்கி …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – ( 30.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. கவிஞர் ஸ்ரீ நேசன் , குமார் அம்பாயிரத்தை அறிமுகப் படுத்தி சிறப்பாகப் பேசினார். இந்நிகழ்ச்சியை காணொலியில் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 119

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 30.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. கவிஞர் ஸ்ரீ நேசன் , குமார் அம்பாயிரத்தை அறிமுகப் படுத்தி பேசுவார் நிகழ்ச்சி எண் – 119 குமார் அம்பாயிரம் கதைகள் …

>>

சை புதிது ஆண்டு விழாவில் ரம்யா வாசுதேவன் அவர்களின் ‘ கிருஷ்ண சரிதம் ‘

அழகியசிங்கரின் இசை புதிது வாட்ஸ் அப் குழுவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் ரம்யா வாசுதேவன் அவர்களின் ‘ கிருஷ்ண சரிதம் ‘ சங்கீத உபன்யாசத்தின் காணொளிப் பதிவு, சாந்தி மேடம் குழுவினரின் இசைப் பாடல்களோடு . 27 – 03 …

>>

ஜெயதேவன்/பழைய நண்பரை இழந்தேன்

1975 . 80களில் வேலை தேடி சென்னையில் அலைந்து கொண்டிருந்த நேரம். எங்கள் குடும்ப நண்பர் சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சினிமா வெளியிட்டாளர் திரு தங்கப்பாண்டியன் அவர்கள் மூலமாக சாதாரண ஆசிரியராக எனக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் ராஜேஷ். …

>>

இரவி ரெத்தினசபாபதி/ ஒரு மதிப்பெண்

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 11 ”டேய் கதிர், ரிசல்ட் வந்துடுச்சாம்”வேகமாக வீட்டிற்குள் வந்தாள் கடைசி சித்தி.அப்போது அவன் வீட்டின் முகப்பு ஜன்னலில் மடங்கி உட்கார்ந்து கதைப்புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.ராயர் சார் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகம். …

>>

குமார் அம்பாயிரம்/தேடூ

நாட்களாகக் கிணறு அமைதி இழந்துவிட்டது. இக்குடியிருப்புப் பகுதியும்கூட. கைப்பிடிச் சுவரின் கரையேறி வெளியே வழிந்து போய் விடாமலும், உள்ளே ஒரு சுனை கண்பிடுங்கி வற்றி உலர முடியாமலும் தண்ணீர் துக்கமடைந்திருக்கிறது. நீரின் இளகிய தோல்மீது யாரோ புரிந்துகொள்ள முடிவற்று வரைந்து கொண்டிருக்கும் …

>>

குமார் அம்பாயிரம்/வழக்கு எண் 235/2020

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பிணையில் வந்த நாள் அன்றுதான் அது நிகழ்ந்தது. சுமை தாங்கி கற்கள் நகருக்குள் நகர்ந்து வருவதை சிறுவர்களே காண்பித்து சொன்னதைப் போல முப்பது நாட்களுக்கு முன்பே மரணக் கொட்டடியில் சுற்றப்பட்ட பேண்டேஜ் காடா துணியோடு சவப் பெட்டியில் …

>>

குமார் அம்பாயிரம்/ஈட்டி

பகலிலிருந்து சரிந்து சூரியன் பாதாளத்தில் புதையும் வரை, வேலியற்ற மரத்தடியில் பறிக்கப் படாமல் தானே பழுத்து விழுந்திருந்த சுளைகள் சிலவற்றைப் பசியில் நாங்கள் தின்றிருந்தோம். நாங்கள் தின்ற சுளைகளுக்கான சில்லறைகளை பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை அங்கே. எனது பயண உடையின் பலவிதமான …

>>

கரந்தை இந்து / விடுதலை

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 10 எல்லாம் நல்லபடியா நடக்கும் , நீ ஒன்றும் கவலைப்படாதே என்று தங்கைநிவேதிதா சொன்னது கேட்டு ரஞ்சனி மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது.நாளை காலை கோர்ட்டுக்குப் போக வேண்டும் என்று …

>>

குமார் அம்பாயிரம்/ஃஎன்றொரு கதை

அங்கே எனது பண்ணையில் நிகழ்ந்துவிட்ட துயர சம்பவத்திற்கு நானே முழுப் பொறுப்பாக இருந்தேன். அன்றாட தொழுவப் பணிகளின் மேலே மேலே கொட்டப்படும்சாணம் எருவாக மக்குவதுபோல அத்துயரமும் மக்கி மண்ணோடும் காற்றோடும் ஒருநாள் கலந்துவிடும்தான். எனினும் எனது பண்ணைக்கு நான் வருகை புரிவது …

>>

குமார் அம்பாயிரம்/ன்யாக்

நான் ஆவிகளோடு பேசவும் நட்பு கொள்ளவும் தொடங்கிய திலிருந்து மனிதர்களுடனான எனது உறவை நான் முறித்துக் கொள்ளு முன்பே, தங்கள் பாதையில் அவர்கள் விலகிச் சென்றார்கள். எனது ஒரே நண்பன் வெள்ளைப் புறா வில்ஸனின் 13 புறாக்கள் வலுவான காற்றை எதிர்த்துப் …

>>

ஆர் வத்ஸலா/மாமனிதர்

மாளிகையில் பிறந்துபட்டாடை உடுத்தி வளர்ந்துபள்ளி முதல்உயர் கல்வி வரைஇங்கிலாந்தில் படித்தவர் ஒற்றை ஆடை அணிந்தவரின் மெல்லிய குரலுக்கு செவி சாய்த்துமுரட்டு கதர் கட்டிஅடி வாங்கியும்அகிம்சை காத்துஒன்பதாண்டு சிறையில் வாழ்ந்தவர் எம்மதமும் சம்மதம் என்றவர்குழந்தையில் தெய்வம் கண்டவர்உடை மேல் ரோஜா மலரும்உள்ளம்‌ நிறைய …

>>

அழகியசிங்கர்/தபால் ஆபீஸ்

மேற்கு மாம்பலம்தபால் ஆபீஸில்தினமும் தபால்கள்போட வருவேன்அங்குள்ளவர்கள் என்னைப் பார்த்துபுன்னகைப்பார்கள்ஆனால்ஏனோ தெரியவில்லைவேறு தபால் ஆபீஸைஎனக்குப் பிடிப்பதில்லை (24.05.2025 அன்று தபாலில் அனுப்பிய கவிதை. இன்னொரு கவிதை வரவில்லை)

>>

அழகியசிங்கர்/ஒரு கவிதை எழுதுங்கள்

காலையில்என்நூலகத்திலமர்ந்துஇந்தக் கார்டில்ஒரு கவிதை எழுதுகிறேன்நான் எழுதுவதைநானேபடிக்கிறேன்மற்றவர் பற்றிஎனக்குக் கவலை இல்லைஎன் கையெழுத்துகோணல் மாணலாகப்போய்க் கொண்டிருக்கிறதுஎன்று இன்று காலைஅறிந்தேன்கவிதை எழுது எழுதுஎன்கிறது மனம்எழுதிக் கொண்டே இருக்கிறேன் (17.05.2025 அன்று தபாலில் எழுதிய கவிதை)

>>

விஜயகுமார் ஜெயராமன்/ பூப்பு

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 10 மாலை 4 மணி. எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள் ஷிவானியை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தேன்.நான் வழக்கமாக சில வினாடிகளில் கடந்துவிடும் …

>>

துடுப்பதி ரகுநாதன்/மாயமான் காப்பகம்!

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 9 மதுரையைச் சேர்ந்த ராம சுப்புக்கு தான தர்மத்தில் மிகுந்தளவு ஈடுபாடு உண்டு!ஆனால் அவருக்கு பெரியளவு வசதிகள் இல்லை. இருந்தாலும் ஆதரவற்றஅனாதை முதியவர்கள் பத்துப் பேர்களை வைத்து, அவர்களுக்காக ஒரு …

>>

கிரிஜா ராகவன்/அப்பா இறந்து ஆறாவது வருடம்

விரைந்து ஓடும் ரயில் பயணத்தில்பின்னோக்கி விரையும் காட்சிகள் போல்அப்பாவின் நினைவும் வேகம் அடங்கிகுமுறல் குறைந்து அமைதியாய் நிற்கிறது அப்பாவைக் கேட்காமல் ஒன்றும் செய்ய முடியாதுஅப்பா சொல்லி விட்டால் அது அரசு ஆணைஅப்பா கிட்ட சொல்லிடுவேன் என்னும் அஸ்திரம்எப்போது பாயுமோ என்ற பயத்திலே …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி 2

170. மஜீத் நிழலோடு வருதல் அதுவரும்எல்லோருக்கும் வரும்அதிசுகத்தோடுஎரிவேதனையோடுஆத்மாவில் உள்ளிருந்தும்அதுவரும் தாயின் கருப்பையிலிருந்தும்துப்பாக்கியின்குழாயிலிருந்தும்நண்பனின் சிரிப்பிலிருந்தும்அதுவரும் இயற்கையின் ஏக்கத்தோடுபெருமிடியின் சினத்தோடுபுயலின் பெருமூச்சோடுமேகத்தின் கண்ணீரோடுசிற்றருவியின் ஓசையோடுவைகறையின் பிறப்போடுகடலலையின் அழுகையோடும்அதுவரும்எனது கடைசி நிழலையும் பறித்துப் போகஇன்னமும் வருமதுமூங்கில் காட்டின் ராகத்தோடும்சிட்டுக்குருவியின்பாடலோடும்இரவின் மௌனத்தோடும்நிலவின் அழகோடும்என்னிடம் வரவேண்டுமது கடைசியாகஎனது கடைசி …

>>

சந்தியா ஷங்கர்/டெமன்ஷியா

“செல்லம்மா! நான் சித்த கோயில் வரை போயிட்டு வரேன் மனசே சரியில்லை. நீ எதைபற்றியும் யோசிக்காதே .நான் சீக்கிரம் வந்துட்டேறேன்..” என்று மேஜர்சுந்தர்ராஜன் போல் தோற்றம் கொண்ட பஞ்சாபகேசன் துண்டை தோளில்போட்டு கொண்டு வீட்டை விட்டு போனார்.“இப்படி சொல்லிட்டு போய் வருஷம் …

>>

பத்மா அர்விந்த்/நான் என்பது நானல்ல

நியுஜெர்சி செல்லும் புகைவண்டி டிராக் 3ல் புறப்படத் தயாராக இருக்கிறது என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம், உடனே தேனீக்கூட்டம் கலைந்தது போல ஆயிரக்கணக்கானோர் வெகு வேகமாக-நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளும் ஒலிம்பிக் வீரர்கள் போல-செல்லலானார்கள்.மாலை பீக் ஹவர் புகைவண்டி. நியூயார்க்கில் இருந்து நியுஜெர்சி …

>>

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்/இப்படியும் சிலர் இருக்கிறார்கள்!

கணேஷ் தியேட்டர் முன்புறம் உள்ள சாலையின் ஓரத்தில்மக்கள் கூட்டம் கூடியிருந்தது. ‘அங்கு பாம்பாட்டி ஏதும் வித்தைகாட்டிக் கொண்டிருக்கிறானா? அரசியல்வாதி யாரும் மனுக்கள் ஏதும்வாங்கிக்கொண்டு இருக்கிறார்களா? இப்ப நாட்டில் எதற்குதான் கூட்டம்கூடுகிறது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டதே?‘ என்றுசெந்தில் பலவிதமாக தனக்குள் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 118

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று – 23.05.2025 –மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 118 தலைப்பு : நான் எப்படி கதை எழுதுகிறேன்? பேசியவர்கள் …

>>

2025, புக்கர் விருது பெறும்கன்னட பெண் எழுத்தாளர்

முகநூலில் படித்தது ~இரவு படுக்கைக்குப் போகும்முன்ஒரு நல்ல செய்தி. டெலிகிராஃப் பத்திரிகையில் காண நேர்ந்தது.மே 20, 2025 அன்று லண்டனில் நடைபெற்ற சர்வதேச புக்கர் விருது நிகழ்வில் கன்னடத்தைச் சேர்ந்தபானு முஷ்டாக் , அவரது ‘ஹார்ட் லாம்ப்’ சிறுகதைத் தொகுப்புக்காக,புக்கர் விருதைப் …

>>

தாணப்பன் கதிர்/கொல்லபட்ட ஒரே ஒரு நரகாசுரன்

தீவாளி, பொங்கல் போன்ற நல்ல நாள் பொழுதெல்லாம் சீனியர்கள் இருக்கிற வரை அவர்களுக்குத்தான் லீவுக்கு முன்னுரிமை. ஆனா, இப்போ காலம் அப்படியே மாறிப் போச்சு. ஜுனியர்கள் எடத்தைக் காலி பண்ணிப் போயிருவாங்களாம். அவங்களுக்கு போகத்தான் மீதி.தீவாளி, பொங்கல் இப்படி பண்டிகை நாட்களிலெல்லாம் …

>>

வி.வி கலைச்செல்வி/மாறும் மழை

இது கோடைமழைகுடை எடுத்துப் போகுழந்தை மாதிரி நனைந்துவிடாதேபின் குளிரெடுக்கும்காய்ச்சல் வருமென்கிறாள் அம்மா . ஒரு மழையில் நனையாமலிருக்கஅம்மாவிடம் ஆயிரம் உப்புச்சப்பில்லாத காரணங்கள் இருக்கிறதுபோகட்டும் விடுங்கள் அம்மாவும்அம்மாவின் காரணங்களும் பூவரசங்கன்றை ஊன்றி வைத்தஎனக்கும் பூவரசங்கன்றுக்கும்இது கொடை மழை தாராபுரம்

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 93

ஆசிரியர் பக்கம் எல் கோபாலகிருஷணன் எழுதிய கிணற்றுப் பூனை, ஆர்.வெங்கடேஷ் எழுதிய மரணமடைந்தவனின் நண்பன் என்ற மூன்று கதைகளுக்கும்தான் போட்டி. மரணமடைந்தவனின் நண்பன் கதை சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், மரணம் பற்றிய கதைகள் அதிகமாக வந்திருந்ததால் அதைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இரண்டாவதாகச் சிறப்பான …

>>

G. சியாமளா கோபு /சில சுக்கான்களும் பல கப்பல்களும்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் தாண்டியதும் வளவனூர் சந்திப்பில் உள்ள அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தொடங்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. மாணவர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.ராதா டீச்சரும் அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தலைமை ஆசிரியை அறையில் கையொப்பமிட்டு …

>>

பி. ஆர். கிரிஜா/ஆதங்கம் !

பல்லாயிரம் ஆதங்க அலைகள், மனித மனதில்;பள்ளு பாட விடாமல் பரிதவிப்பு மனதோரத்தில் !பெண்ணின் ஆதங்கம் கல்வி !இளைஞனின் ஆதங்கம் பணி நிரந்தரம் !பெற்றோரின் ஆதங்கம் பிள்ளைகள் கரையேற்றம் !பாட்டியின் ஆதங்கம் ஊன்றுகோல் மேல் !பால்காரர் ஆதங்கம் கறவை மாடு மேல் !நடிகையின் …

>>

விஞ்ஞானி/Artificial intelligence

இருட்டில் இடித்துக்கொண்டேன்எதில் என்று தெரியவில்லைவெளிச்சம் வந்ததும் பார்த்தேன்எதிரில் எதுவும் இல்லை செயற்கை நுண்ணறிவிடம்இருட்டில் இடித்துக்கொண்டதுஎதன் மீது என்று கேட்டேன் நீ இடித்துக்கொண்டதுஇருட்டின் மீதுதான்என்று பதில் வந்தது

>>

லக்ஷ்மி ரமணன்/எலியும் வலியும்

வீட்டு முன் வராண்டாவில் உட்கார்ந்து யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த தீபக் திடீரென்று “அம்மா சீக்கிரம் வா”என்று அலறினான்.பயந்துபோன லலிதா சமைப்பதை நிறுத்திகேஸ் அடுப்பை அணைத்துவிட்டு “என்னஆச்சு தீபக்?” என்று பதட்டத்துடன் கேட்டவாறுவராண்டாவுக்கு விரைந்து வந்தாள்?“அதோபாரு எலி”“இதுக்கா என்னவோ புலியைப்பார்த்தவன்மாதிரி கத்தினே?”என் தட்டில் …

>>

தீபன் ராஜ் தே /வேகம்

புயல் வேகத்தில் ஒரு சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று போய்க்கொண்டிருந்தது.அது மட்டுமல்ல அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள்.“எப்படி போறான் பாரு, இவனுங்க எல்லாம் எங்க உருப்பட போறானுங்க” என மாரிமுத்து, வாகனத்திலிருந்த தன் மனைவி இராக்கம்மாவிடம் சொல்லிக் கொண்டுவந்தார்.அதற்கு ராக்கம்மா “உங்க …

>>

ஜி பி சதுர்புஜன்/“தீர்வு”

விளக்கை அணைத்துவிட்டு வனஜாவைத் தாண்டி மெத்தையில் அந்த பக்கம் போய்ப் படுத்துக் கொண்டேன். மணி பத்து ஆனால், எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் டாண் என்று படுக்கைக்குச் சென்றாய் விடும். எங்களுடைய ரிடையர்மென்ட்டுக்கு முன்னாலேயே என்றோ தொடங்கிவிட்ட தூக்க அட்டவணை….. …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /மாற்றியவர் யாரோ?

அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2025 “மேரி ஒரு நிமிடம் நில்லு”, அண்ணன் அலெக்ஸ் தங்கையை அழைத்தான்.கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவள், அவனை என்ன என்பது போல் பார்த்தாள்.“அந்த ஹரியோட ரொம்பப் பழகறீயாமே? அதெல்லாம் வேண்டாம்.நல்லதுக்கில்லே.அவன் நீ நினைக்கிற மாதிரி நல்லவன் …

>>

ர. ரமேஷ்/செல்ல மகள்

(அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2025) யப்பா யப்பா எங்க பள்ளிக்கூடத்துல எல்லாரையும் ஒரு வாரம்கழிச்சு சுற்றுலா கூட்டிட்டு போறாங்கப்பா ஒரு வாரம் சுற்றுலாவாமாம்ப்பா நானும் போகவாப்பா என்று கூறிக் கொண்டே தனதுபுத்தகப் பையை தூக்கி வீசிய படி சந்தோசமாக ஓடி …

>>

அழகியசிங்கர்/அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2025 முடிவுகள் 

அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. 30.04.2025 வரை வந்து குவிந்த கதைகள் 153.   எல்லாக் கதைகளையும் நான் ஒருவனே படித்து முடித்தேன். இவற்றில் குறைகள் தென்பட்டால் என்னைச் சேர்ந்தது.  நிறைகள் தென்பட்டால் உங்களைச் சேர்ந்தது. கதைகளைப் பொறுத்தவரை …

>>

க. செல்லப்பாண்டி/உயிர்த்தெழுதல்

(ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதை) நிழற்படம் மாட்டுவதற்குக்கூடசுவரில் ஆணி அடிக்கஅனுமதியில்லாதவாடகை வீட்டில்வாழ்ந்தவள் வாக்கப்பட்டு வந்ததும்தன் சொந்தவீட்டில் ஆணி அடிக்கிறாள் ஆணியால் சிலுவையில் அறையப்பட்டஇயேசுவின் நிழற்படம்மாட்டுவதற்கு

>>

அனங்கன்/குறைகளில் நிறையும் நிறை

படியேறும் தருணத்தில்பளிச்சென்று சிரிக்கிறது அந்தப்பூ.இயற்கை அதற்கான நியதியைஒருபோதும் ஔித்துவைத்திருப்பதில்லை.மலர்ச்சியை வெடிப்புகளிடையே ஔிரவிட்டுதன்னிருப்பை நிறைசெய்கிறது அச்செடி.இருக்குமிடம் எதுவானால் என்ன …மனதை மலரவிட்டு வாழ்வதுஅனைவருக்கும் வாய்ப்பதில்லை.இன்னொரு பூவுக்குகாத்திருக்கும் வெறுமையில்இன்னும் காலம் நீளப்போகிறது.♦

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் –(16. 05.2025) வெள்ளி மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து …

>>

பி. ஆர்.கிரிஜாவின் இரண்டு கவிதைகள்

உருவம் தூரத்தில் புள்ளியாய்உன் உருவம்என் மனதில் என்றும்நீ விஸ்வரூபம்காலம் நமைப் பிரித்தாலும்கண்கள் என்றோ புகைப்படம் பிடித்ததே ! சித்திரம் அரூபமாய் நீ வானில்அழியாத கோலமாய்என் மனதில்உன் புகைப்படம் சித்திரமாய் சுவரில்அலங்கரிப்புஉன் வாசம் நாசித் துவாரம் வழியே உடல் முழுதும் பரவபரவச நிலையில் …

>>

பானுமதியின் ஐந்து கவிதைகள்

சுகம் எல்லைகளில் கால் கடுக்க நிற்கிறார்கள்.வீரமும் காதலும் எழுதுகோல களில் ததும்பத்ததும்பஎழுதிய பெருமிதங்கள்பொறுக்க மாட்டாமல் பொரூ முகின்றன.பச்சை பசும் வெளியில் குருதிப் பூக்கள்மலரும் வாசம் எங்கள் நாசிகளைஎட்டுவதில்லைஅன்றே சொன்னார் முண்டாசுக்கவிஞர்உரமற்ற நெஞ்சம்நேர்மை இல்லாத வாழ்வுவாய்ச்சொல் வீரர்களுக்கு ஒரு விண்ணப்பம்.உங்கள் கைகள் போரிட …

>>

எஸ்ஸார்சி 5 கவிதைகள்

காஷ்மீருக்கு உலா சென்றஅப்பாவிப்பயணிகளைச்சுட்டுப் பொசுக்கியதீவிர வாதிகள்பாகிஸ்தான் மண்ணில்தயார் ஆனவர்கள்தீவிர வாதிகளை வளர்த்துஉலகெங்கும் உலவ விட்டுஈனத் தொழில் நடத்தி வரும் பாகிஸ்தானையார்தான் கேட்க முடியும்அரசாங்கம் தீவிரவாதிகட்குகோட்டை போல் தங்குமிடம் அளிக்கும்தாராளம் பாகிஸ்தானிலுண்டுநோக்கம் சரியில்லாதவர்கள்நொந்து போவார்கள்ஒருநாள்சரித்திரம் எப்போதும்சரியாகவே தீர்க்கும்காலக்கணக்கு. 2 பொள்ளாச்சி பொள்ளாச்சி என்றாலேபெரிய …

>>

நாகேந்திர பாரதி 5 கவிதைகள்

அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் . சமீபத்தில் மதுரை, உத்தரகோசமங்கை, புக்குளம், நயினார்கோவில் என்று சொந்த ஊர்களுக்குப் பயணம் சென்று வந்த அனுபவத்தை நினைத்துப் பார்த்து இன்று காலையில் எழுதிய கவிதைகள் பக்திப் பயணம் …

>>

ஆர் வத்ஸலா வாசித்த 5 கவிதைகள்

16/5/25 அன்று “கவிதை வாசிக்கலாம் வாங்க” 33 ஆவது கூட்டத்தில் நான் வாசித்த 5 கவிதைகள் 1 என்றும்ஆர் வத்ஸலா இல்லாவிட்டாலும்இருக்கிறாய்நீ மருத்துவரின் விதி மீறிஇனிப்பை கையில் எடுத்தால்உனது நெற்றியின் சுருக்கம்என்னை லேசாக கண்டிக்கிறது ஆனால்சில சமயம் பரிதாபப் பட்டுநான் தேநீரில்சிட்டிகை …

>>

மோகன்ஜி/பாலா சார் – ஒரு இதமான சிநேகிதம்

பாலா சார் – ஒரு இதமான சிநேகிதம் 2001ஆம் வருடம் என்று நினைவு. வருடாந்திர முழு மருத்துவப் பரிசோதனை சென்னையில் செய்து கொண்டேன். பரிசோதித்த மருத்துவமனையோ, என் இதயத்தில் ஏதும் பிரச்னை இருக்குமோ என்று கலவரப்படுத்தியது. ‘ஹார்வே ஹாஸ்பிட்டல்’ இதய நோய் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 33

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – நாளை-(16. 05.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற …

>>

கிரிஜா ராகவன்/கை பிடித்துக் கூட்டிச் செல்

கை நீட்டி கன்னம் வருடிமெய்தடவி மோவாய் தொட்டுதலை முன்னுச்சி ஒதுக்கிதன்மையாய் பேசுவாய் ! விரல்களை மெதுவாய் நீவிகை கோர்த்து இறுகப் பற்றிஎன் உள்ளங்கை எடுத்துஉன் கன்னம் புதைப்பாய் ! அறுபது வயதுப் பெண்ணாய்அருகில் இருந்தாலும்பள்ளிக் குழந்தையாய்என்னைக் கொஞ்சி மகிழ்வாய் ! அம்மா …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 117

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – ( 09.05.2025) வெள்ளிக்கிழமை அன்றுமாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றதுகலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள்.அந்நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள் நிகழ்ச்சி எண் – 117 தி.இரா.மீனாவின் மொழிபெயர்ப்புக் கதைகள் செம்மண் பூமி – ரேவதி பாலு …

>>

ஜெ.பாஸ்கரன்/டாக்டர் சாந்தா எனும் அபூர்வப் பெண்மணி!

Ladies Special மே இதழில்…. டாக்டர் சாந்தா எனும் அபூர்வப் பெண்மணி! அரசுக்கொள்கைகள், அரசியல் முரண்களால், சருமவியாதிகளில் டிப்ளமோ வாங்கிய பிறகு எனக்கு மேலேபடிக்கவோ, அரசுப் பணியில் அமரவோ வாய்ப்பில்லாமல்போனது. குடும்ப சூழ்நிலை, எனக்கு ஒரு வேலை தேவை என்றது. அடையாறு …

>>

ஆர்.வெங்கடேஷ் முகநூலில்..

நான் பிரதமர் மோடியின் பேச்சைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர் வெளிப்படையாக பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்தியதில்லை. இன்று, தனது உரையில் வெளிப்படையாக பாகிஸ்தானையும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அதன் நடவடிக்கையையும் கண்டித்துள்ளார்.இரண்டு, டொனாடு டிரம்ப், போர் நிறுத்தம் என்ற சொல்லைப் …

>>

ஶ்ரீ பூமீஸ்வர க்‌ஷேத்ரம் (எ)திருநல்லம்!(கோனேரிராஜபுரம்)/ஜெ.பாஸ்கரன்

கும்பகோணத்தில் தூரத்துச் சொந்தம் வீட்டுத் திருமணம். முதல்நாள் மதியம் சாரதியுடன் கிளம்பி, கூகிள் வழிகாட்ட, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என ஊர்களை பைபாஸ் செய்து சென்றோம். அநுகூலச் சத்ரு என்பார்களே, அது போல ஏதோ சுற்று வழியில், கிட்டத்தட்ட திருச்சி எல்லை …

>>

ஜெ.பாஸ்கரன்/தொலைதூரக் காட்சிகள்

தொலைதூரக் காட்சிகள் –  காக்க நாடன் ( மலையாள சிறுகதை)  மொழிபெயர்ப்பு – தி.இரா. மீனா. மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள, கவித்துவமான நடையில் ஒரு சிறுகதை. கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் கடலைப் பார்த்தபடி இருக்கும் ஒரு தடுப்பறை. ஒருவரே புழங்கக்கூடிய அளவில் …

>>

பஹல்காம்: ஆபரேஷன் சிந்தூர் தரும் பலன் என்ன? — ஆர். வி. ஆர் https://rvr-india.blogspot.com சென்ற ஏப்ரல் 22ம் தேதி, பாகிஸ்தான் அரவணைக்கும் 4 பயங்கரவாதிகள் இந்தியாவின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தனர். அதற்குத் தற்போது இந்தியா பதிலடி …

>>

அனங்கன்/வேளச்சேரி பஸ் டெர்மினஸ்

வேளச்சேரி பஸ் டெர்மினஸ் தாண்டி வந்து கொண்டிருந்தேன். நடுவில் வந்த ஒரு தெருமுனையில் ஒரு பெண்மணி ஸ்கூட்டரில் எதிர்ப்பட்டார். என்னருகில் நிறுத்தி “சார்! பனகல் பார்க் எங்க இருக்கு?” “இது வேளச்சேரி. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் டி நகர்லதான் பனகல் பார்க் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 09.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது

நிகழ்ச்சி எண் – 117 தி.இரா.மீனாவின் மொழிபெயர்ப்புக் கதைகள் செம்மண் பூமி – ரேவதி பாலு .தொலைத்தூரக் காட்சிகள் – டாக்டர் பாஸ்கரன் ரத்னாகரனின் மனைவி – முபீன் ஆற்றின் கரையில் – பேராசிரியர் ராமச்சந்திரன அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்- …

>>

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்

இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். 11.04.2025 25.04.2025 02.05.2025 09.05.2025

>>

கிருஷ்ணா/போய் வாருங்கள் கே. கே…

நேற்று இரவு ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனின் ட்ரஸ்டியாக இருந்த கே. கிருஷ்ணமூர்த்தி மறைந்தார். மிகுந்த வருத்தத்தை அளித்தது. கடந்த மூன்று வருடங்களாக நானும் அவரும் நண்பர்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் க்ரீன்வேஸ் சாலையிலுள்ள ஜே. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் சென்றபோது அறிமுகமானார். மதியம் …

>>

ஜெ.பாஸ்கரன்/நவீன விருட்சம் 129 வது இதழ் பிப்ரவரி ஏப்ரல் 2025

புத்தக அறிமுகம் – 19.  அழகியசிங்கரின் நவீன விருட்சம் 37 வது ஆண்டு, பிப்ரவரி-ஏப்ரல் 2025, 129 வது இதழ் வாசித்தேன்.ஒரு சிறு பத்திரிகைக்குரிய இலக்கிய முகத்தோடு சிறப்பாக வெளிவந்துள்ளது. அட்டைப்படம் கவிஞர் வைத்தீஸ்வரன். இலக்கியத்தின் பல சுவைகளையும் – கவிதைகள் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் 129வது இதழ்

விருட்சம் 129வது இதழ் உரியக்  காலத்தில் வந்து விட்டது என்று பெருமையாகச்  சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 37வது ஆண்டின் துவக்கத்தில் வெளிவருகிறது. ஒரு காலத்தில் குறிப்பிடப்படுகின்ற எழுத்தாளர்களின் படைப்புகளைச்  சுமந்து  வந்துகொண்டிருந்த விருட்சம்,இன்று திசைத் தெரியாமல் இருப்பதாகத் தோன்றினாலும், தன்னுடைய முத்திரையைப் பதிவு செய்யாமல் இருப்பதில்லை. …

>>

ஆஷிதா/அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்

தமிழில் : தி.இரா.மீனா என் அம்மா என்னிடம் சொன்னது போன்ற அதிகமான பொய்களைஉலகில் யாரும் சொல்லியிருக்க முடியாது. அதை உணர்ந்த நிலைஎனக்குள் நிரந்தர ஜுவாலையாய்…பூஜை அறையில் ஒளிரும் விளக்கின் முன்னால் உட்கார்ந்து கொண்டுஅம்மா இராமாயணம் படித்துக் கொண்டிருக்கிறாள். கதவருகில் நான்உட்கார்ந்திருக்கிற இடத்திலிருந்து, …

>>

எஸ்.கே. பொட்டேகட்/ஆற்றின் கரையில்

தமிழில் : தி.இரா.மீனா மொட்டையாக இருந்த ஒரு சிறு குன்றைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தஅந்தச் சிறிய ஆறு பார்ப்பதற்கு ஓர் உருவமற்ற பெரிய குடிசை போலத்தோற்றமளித்தது.வலிமையான காட்டு மரங்களின் தாழ்வான கிளைகள் பூமியில் சரிந்துகிடந்தன. மரங்களின் அடியில் நெருக்கமாகப் படர்ந்திருந்த கொடிகளால்ஆற்றின் கரை …

>>

சந்திரிகா பாலன்/ரத்னாகரனின் மனைவி

தமிழில் : தி.இரா.மீனா ஒரே கதையில் இரண்டு பாத்திரங்கள் ஒரே பெயரைக் கொண்டிருந்தால்,கதாசிரியருக்கு அது ஒரு பிரச்னையாக இருக்கும். வாழ்க்கையிலும் கூட.உறவில் நெருக்கமான இருவர் ஒரே பெயரைக் கொண்டிருந்தால் அதுவும்பிரச்னைதான். ஒரு பாத்திரத்தின் பெயரைக் கதாசிரியர் ஏன் மாற்றிவைக்கக் கூடாதென்று நீங்கள் …

>>

காக்கநாடன்/தொலைதூரக் காட்சிகள்

தமிழில் : தி.இரா.மீனா கடற்கரையிலுள்ள அந்த மிகப் பெரிய கட்டிடத்தில் கடலைப் பார்த்தபடிஇருக்கிற சிறிய தடுப்பு அறையில் அவன் ஒரு கைதியாக இருந்தான்.எப்பொழுதிலிருந்து, என்று அவனுக்குத் தெரியாது. மிக நீண்ட காலமாகஇருக்க வேண்டும். அவனிடம் காலண்டரோ அல்லது பஞ்சாங்கமோஇல்லை. சுவர்க் கடிகாரமோ …

>>

எம். டி.வாசுதேவன் நாயர்/செம்மண் பூமி

தமிழில் : தி.இரா.மீனா மதிய நேரச் சூரியனின் உக்கிரத்தில் இன்னமும் கருங்கல் தளங்கள்தகித்துக் கொண்டிருந்தன. சுற்றுலா வந்திருந்த குழு தம் காலணிகளைமிக அவசரமாக உதறியெறிந்து விட்டுப் பெரிய கதவிற்கு அப்பாலானதங்குமிடம் நோக்கி ஓடியது.தன் காலணிகளைக் கழற்ற அவன் அதிக நேரம் எடுத்துக் …

>>

கோவர்தனா/தொலைந்து போய்க்கொண்டிருக்கிறேன்

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை எப்பொழுதோ எங்கேயோதொலைந்து போய்விட்டஎன்னை மீட்கும் பணியில்தயவுசெய்துயாரும் என்னைமீட்க முயல வேண்டாம்மீட்கப்பட வேண்டியதுஎவ்வளவோ இருக்கின்றதுஅதில் எதை வேண்டுமானாலும்தாராளமாக தாங்கள்மீட்டு எடுக்கலாம்மீட்டுக்கொண்டிருக்கும் பொழுதேநீங்கள் தொலைந்து போய்விட்டால்தயவு செய்துஎன்னைத் தேடாதீர்கள்நானே அப்படி தான்என்னைத் தொலைத்துவிட்டேன்மீட்பர்களே அவதரிக்காத வெளியில்…

>>

லக்ஷ்மி ரமணன் / நண்பன்

“ராஜேஷ் ஏன் டல்லாக இருக்கே? எதுவும்பேசாமல் முகத்தில் சோகம் திரையிட இப்படிஉன்னை பார்க்கவே கஷ்டமாக இருக்கு”“என் தலைஎழுத்து. அதைப்பற்றி சொல்லிஎஉன்னையும் தொல்லைப்படுத்த விரும்பல்லே”” புரியும்படி சொல்லு”“இன்னும் ரெண்டுநாளில்பணம் கட்டாடிபரீட்சை எழுத முடியாதாம்.ஆசிரியர் சொன்னார்”“சரி கட்டிடு இதில் என்னப்ராப்ளம்”?“அதை ஏன் கேட்கிறே,அதுக்காக நான் …

>>

பெ.சு.மணியைப் பற்றி ரங்கியா முருகன்..

தமிழ் ஆய்வுலகின் பொக்கிசம்: ஐயா பெ.சு.மணி நான்காம் ஆண்டு நினைவு தினம் பல்கலைக்கழகம் தாண்டாத எளிய அறிஞர்.ஆனால் பல்கலை கழக மாணவர்களுக்கு இவரது புத்தகங்களே வளர்வதற்கான படிக்கட்டுகள். தேசியம் என்பது நமக்கு தெரியும். ஆனால் இவரது கன்னிப் படைப்பான “இந்திய தேசியமும் …

>>

ஞானத்தின் வழிக்குறிப்பு ஓயாமல் பேசிக் கொண்டிருந்த என் தோழி சில நாட்களாய் எதுவும் பேசுவதில்லை பேசிக் கொண்டிருந்தவள் பேசாமல் இருந்துவிட்டால் கவலையாகத் தானே இருக்கும்அதே கவலை தான் எனக்கும் போய்ப் பார்த்தேன் ஒருநாள் முன்பை விட மகிழ்ச்சியாக இருந்தாள் எப்படி? என்றேன்இந்தா …

>>

ஆர்க்கே/என் கவிதையை..

என் கவிதையை..!—–அன்புடன் ஆர்க்கே! இன்னும் சுருக்கமாகஎழுதி இருக்கலாம். இன்னும் சூசகமாகசொல்லி இருக்கலாம். இன்னும் புதியதாகயோசித்திருக்கலாம். இன்னும் அலங்கார வார்த்தைகள்சேர்க்காதிருந்திருக்கலாம். இன்னும் சிந்தனைத் தெளிவுடன்இருந்திருக்கலாம். இன்னும் தாமதமாகஎழுதியிருக்கலாம். எத்தனையோ தோன்றியபடியேதான்இருக்கிறது எனக்கு..ஒரு கவிதையை எழுதுவதற்கு முன். இப்போது கூடஎழுதாமலேயே இருந்திருக்கலாம்என் கவிதையைஎன்றும் கூடத்தான்.—-அன்புடன் …

>>

அதிரன்/இருக்கை

ஞாயிறு அன்றுசிறப்பு பயிற்சிக்கு வந்திருந்தபத்தாம் வகுப்பு ஜெயந்தியைதலைம ஆசிரியைஅறைக்கு சென்று வருகை பதிவேட்டை வைத்து வர பணிக்கிறார் வகுப்பு ஆசிரியை இன்று பள்ளி விடுமுறை என்பதால்தலைமை ஆசிரியை அறை ஆள் அரவமின்றி ஒய்வாகவே இருந்தது பதிவேட்டை வைத்து விட்டு திரும்புகையில்அவள் கண்ணில் …

>>

சுரேஷ் ராஜகோபால்/கத்திரியில் மழை

கத்திரிவெயிலின்ஒரு நாள்கடந்தோம்….….என்று ஒருகவிதை எழுதஅமர்ந்தேன்,கடும் கோடை வெயில்நடுவே…. வானம்இருண்டுசூறைக்காற்றுபலமாகவீசதூரலாகஆரம்பித்துமழையும் வந்ததுநின்று பெய்ததுமனம் மகிழ்ந்தது..நின்றபின்சூட்டைக் கிளப்பலாம்இயற்கைசிரிக்கும் நேரம்

>>

பாலகுமாரன்/மனமும் மூச்சுக்காற்றும்

.. மூச்சுப்பயிற்சி என்பதையும் கூட வலிந்து வலிந்து செய்யாது மூச்சைக் கவனித்துக் கொண்டே இருக்கிற போது மனம் சீர் பெறுகிறது . மனமும், மூச்சும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. மூஞ்சைக் கவனிப்பது என்பது எளிதல்ல. அதற்கு இடையுறாது முயற்சி செய்ய வேண்டும். …

>>

சந்நியாசம் ஏற்றல் எனும் மகா வைபவம்/ரம்யா வாசுதேவன்

இதற்கு முந்தைய பதிவினில் காஞ்சி பீடாதிபதியாக புதியதாக சந்நியாசம் ஏற்றுக் கொள்ளும் வைபவத்தை குறித்து பார்த்தோம். சந்நியாசம் ஏற்றுக்கொள்ளும் விதமென்பது மடத்திற்கு மடம் மாறுபடும். காஞ்சி காமகோடி மடமென்பது சங்கர பகவத்பாதரால் உருவாக்கப்பட்ட அத்வைத மடமாகும். இது மிகமிகப் பழமையானதாகும். இந்த …

>>

கவிஞர் இளம்பிறை முக நூல் பதிவு

திரைப்பட இயக்குனரும் எடிட்டருமான பி.லெனின் அவர்கள், அழுக்குப் படிந்த கிழிந்த ஆடைகளுடன் சாலைகளில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, எங்கு பார்த்தாலும் அவர்கள் அருகில் சென்று பேச்சுக் கொடுத்து ‘சாப்பிடுகிறாயா… பிரியாணி வேணுமா?’ எனக்கேட்டு பிரியாணியும் தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்து சாப்பாட்டுப் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி ( 02.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை காணொளியில் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 116 லாவண்யா சத்யநாதன் கதைகள் The Clowns – ராஜாமணிடெண்டர் – எஸ்ஸார்சிசித்தனிகாவும் …

>>

எஸ் வி வேணுகோபாலன் /மூல காரணங்கள்

பத்தாவது தடவையாக கார்த்தி டீக்கடையில் கண்ணாடி தம்ளர் நிரம்ப வெந்நீர் வாங்கிக் குடித்தேன். தொண்டைக் கட்டு குறையவில்லை. பேசவே இயலாது இருந்தது.  அத்தனை வருத்தி எடுத்திருந்தேன் குரல் நாண்களை ! பொதுக் கூட்டம் தொடங்க இருந்தது.  திராவிடர் இயக்கத் தோழர் தண்டபாணி மேடையிலேறி அறிவித்துக் கொண்டிருந்தார். …

>>

நெஞ்சமெல்லாம் நிறைந்த ஆச்சார்யன்- ஸ்ரீ ராமானுஜர்/ரம்யா வாசுதேவன் 

என் இல்லத்து பூஜையறையில் கம்பீரமாக சேவை சாதிக்கும் ஸ்ரீ பாஷ்யக்காரரை, ஸ்ரீ ராமானுஜரை, என் ஆச்சார்யனை இன்று காலை வணங்கினேன். இன்று அவரின் 1008வது திருநட்சத்திரம். எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதெல்லாம் சாதாரணமான வார்த்தைகள். தனியே அமர்ந்து யோசிக்கத் தொடங்கினேன். ஆச்சார்யனின் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 02.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 116 லாவண்யா சத்யநாதன் கதைகள் The Clowns – ராஜாமணி டெண்டர் – எஸ்ஸார்சி சித்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும் – ஹெச்.என்.ஹரிஹரன் -யாத்திரை – இந்திரநீல சுரேஷ் ரயிலில் ஒரு பயணி – மீனாட்சி சுந்தரமூர்த்தி Join …

>>

எஸ் வி வேணுகோபாலன்/ஓ….எங்கள் சையத்!

குதிரைஉன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது, சையத்.. ஃபஹல்கம் புல்வெளியின்பசுமை விரிப்பு முழுக்கஎப்போதும் இருந்ததுஉனது கால் தடம்இப்போது குருதியின் தடமும் குழந்தைகளைகாதலர்களைகுடும்பங்களைஉனது குதிரையிலேற்றிஊர் முழுக்கசுற்றிக் காட்டிக் கொண்டிருந்தாய் புகைப்படங்கள்எடுத்துக் கொடுத்திருப்பாய்அன்பைமொழியாக்கிஉரையாடி இருந்திருப்பாய்அயல் மொழிக்காரரிடத்தும் எங்கெல்லாம் செல்லஎன்னென்ன பார்க்கஎந்த உணவகத்தைத் தேர்வு செய்யஎல்லாம் சொல்லி இருப்பாய் …

>>

பி. ஆர்.கிரிஜா/மே!

ஞாயிறு நன்றாய் உதிக்கட்டுமே !திங்கள் வேலைதுவங்கட்டுமே !செவ்வாய் பணி செவ்வனே தொடரட்டுமே !புதன் அனைத்தும் காரியம் துலங்கட்டுமே !வியாழன் முழுதும் அயராது உழைக்கட்டுமே !வெள்ளி தோறும் இறை துதி செய் மனமே !சனி குடும்பத்துடன் கொண்டாட்டமே ! 01/05/20252 pm

>>