Month: ஏப்ரல் 2025
வி.வி கலைச்செல்வி/அதெல்லாம் ஒன்றுமில்லை
வெள்ளை அடிக்கையில்இடறிவிழுந்து கொஞ்சம் அடிபட்டுவிட்டதுஅடிபடுவது மிகச் சாதாரணம்அதை விடவும் வலி பொறுத்தல் மிக மிகச் சாதாரணம் அடிபட்ட இடத்திற்கு அம்மம்மா அரதப் பழைய. வைத்தியமாய் எண்ணெய் பூசு என்கிறாள்அம்மாவோ டைக்ளோ பினாக் ஆயின்மெண்டோடு நிற்கிறாள்அப்பா வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் சரியாகுமென்கிறார் நானாக …
>>பிரம்ம ரிஷியார் முகநூலில்..
தங்கள் மகன் முதல்வராக வேண்டும், அமைச்சராக வேண்டும் இன்னும் எங்கெல்லாமோ கொடிநாட்டி உச்சத்தில் இருக்க வேண்டும் அவன் பெற்றோராக தாங்கள் செல்வாக்காக வலம் வரவேண்டும் என பலர் விரும்பும் நாட்டில் சன்னியாச வாழ்வுக்கு , இனி தனக்கும் தங்கள் மகனுக்கும் பந்தமில்லை …
>>ஷான் கருப்பசாமி/மிகவும் அழகிய ஒரு புகைப்படம்
மிகவும் அழகிய ஒரு புகைப்படம். சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். ராகுல் டிராவிட் தான் ஆடிய காலகட்டத்தில் ஒரு சிறந்த வீரர் ஆனால் டி20 கிரிக்கெட்டின் எழுச்சியும் அதன் பின்னிருந்த வியாபாரமும் அவரைப் போல நின்று நிதானமாக அதே நேரம் அலட்டிக் …
>>காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய பீடாதிபதி தேர்வு
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய பீடாதிபதி தேர்வு… காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேஷ சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை நாளில் தீட்சை வழங்கப்படும் என்று …
>>மீனாட்சி சுந்தரமூர்த்தி/போதுமோ புன்னகை
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மாலை மயங்கும் வேளையில்கடைவீதிபுது மணப்பெண் போல்வண்ணவிளக்குகளில் மிளிர்ந்தது. அருகிருந்த பேருந்து நிலையம்மணமேடைஅரங்கம் போல் ஆரவாரத்தில்அதிர்ந்த்து. ஓடி வந்து ஏறுவார் சிலர்,பெயர்ப்பலகைஉற்றுப் பார்ப்பார் சிலர். அழும் குழந்தையின் கையில்தின்பண்டம்திணித்து, படியில் ஏற்றிவேல்விழிவீசி இடம் தேடுவார்சிலர். ஈரமண் …
>>மனச்சிதைவு /விஞ்ஞானி
“என்ன இது இங்கேயும் வந்திட்டீங்க” என்று மெல்லியக்குரலில் முணுமுணுத்த கோபண்ணாவின் பக்கத்தில் அவர் அமர்ந்திருந்த பார்க் பெஞ்சில் தானும் அமர்ந்துக் கொண்டு புன்னகையுடன் “சும்மா உம்மை பார்க்கத்தான் வந்தேன்” என்றார் கடவுள்.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் தன்னை கவனிக்கவில்லை என்ற திருப்தியுடன் …
>>முகநூலில் ரம்யா வாசுதேவன் பதிவு..
முதலில் அனைவருக்கும் நன்றி! நேற்று மாலை (26-4-2025) 5: 30 மணிக்கு under the tree foundation ஏழாம் ஆண்டு கதைக் கொண்டாட்டம் தொடங்கி 8:30 மணியளவில் இனிதே நிறைந்தது. இதை எழுதும்போதே மனம் முழுதும் ஒரு விம்மிதம் பரவியபடி இருக்கிறது. …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 115
விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – 25.04.20256.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. இதுநிகழ்ச்சி எண் – 115 லட்சுமிஹர் கதைகள்மெழுகு – ஜீவ கரிகாலன்கதவுச் சிறகு – பேராசிரியர் இராமச்சந்திரன்கித்தானுடைய வண்ணப் பேழை – நாகேந்திர …
>>அரவிந்தன் ராஜாமணி/மூன்றாம் ரகம்
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை பள்ளியில் இரண்டு விதமானமாணவர்களைப் பத்தி தான் பேசுவார்கள்.நோட்டீஸ் போர்டுல பேர் வரணும்னுஆசைப் படுபவர்கள்,பிளாக் போர்டுலா பேர் வந்தாலும்பார்துக்கலாம் என இருப்பவர்கள். விதிமுறைக்கு உட்பட்டு நடப்பவர்கள்,விதிமுறைகளை மீறி புது விளையாட்டுகளைஆடுபவர்கள். ஃபர்ஸ்ட் பென்ஜில் ஆர்வம் கொண்டவர்கள்,கடைசி …
>>அதிரன்/ஜன்னல்
இவர் அறையின் ஜன்னல்வழியே பார்த்தால் .எதிர் திசையில்அவர் அறையின் ஜன்னல் தெரியும் சரியான நேரத்திற்குஜன்னல் அருகேஇருவரும் வந்து விடுவார்கள் சாப்பிட்டாச்சா? என்பது போல்சைகையில்இவர் அவரை கேட்ப்பார்? ஆமாம் என்பது போல்அவர் தலையசைத்து விட்டுநீ ? என்பது போல் சைகை காட்டுவார் இப்படி …
>>அசோகமித்திரனும் நானும் – அழகிய சிங்கர்/முகமத் இப்ராஹிம்
ஒரு எழுத்தாளரின் வாழ்வியலை வைத்து அவரின் எழுத்தை தரப்படுத்தக் கூடாதது தான், ஆனால் அசோகமித்திரனின் எழுத்து பெரும்பாலும் அவரின் வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடாக இருப்பதாக நான் உணர்ந்ததால், அவரோடு நெருங்கிய இருந்த நபர்களில் அழகிய சிங்கரும் ஒருவர், அவர் அமியுடன் இருந்த …
>>இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள்…
இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். இதுவரை கீழ்க்கண்ட கதாசிரியர்கள் கதைகளை வாசித்திருக்கிறோம்.இங்குக் குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளைக் திரும்பவும் காணோளியில் கேட்டு மகிழலாம். 11.04.2025 25.04.2025
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 115
விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று – ( 25.04.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 115 லட்சுமிஹர் கதைகள் மெழுகு – ஜீவ கரிகாலன் கதவுச் சிறகு – பேராசிரியர் இராமச்சந்திரன் கித்தானுடைய வண்ணப் …
>>ஜெயகாந்தன்/புது செருப்புக் கடிக்கும்
ஜெயகாந்தன் பிறந்த தினம் இன்று. அவர் ஞாபகமாக இந்தக் கதை அரங்கேறுகிறது. அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்
விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -நாளை – ( 25.04.2025)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 115 லட்சுமிஹர் கதைகள் மெழுகு – ஜீவ கரிகாலன் கதவுச் சிறகு – பேராசிரியர் இராமச்சந்திரன் கித்தானுடைய வண்ணப் பேழை …
>>ஜெயகாந்தன் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த மேடையில்…
ஜெயகாந்தன் கலைஞர் கருணாநிதி அமர்ந்திருந்த மேடையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய தொடங்கிய ஜெயகாந்தன் யாரை வணங்குவது என்று தெரியவில்லை. இந்த மேடையில் நான் வணங்கத்தக்க மனிதர்கள் யாரும் இல்லை என்றார். ஆனால் ஒரு பொதுமேடையில் …
>>க.நா.சு/ வெங்காய வெடி
இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் ஒருதரம் தீபாவளி சமயத்தில் நான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்துக்குக் கிளம்பினேன். தீபாவளி சமயமாதலால் ரெயிலில் கூட்டமாகத்தான் இருந்தது. நாலுபேர் உட்கார வேண்டிய இடத்தில் எட்டுப் பேர் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். சாதாரணமாக எப்பவுமே கும்பகோணத்தில் எந்த …
>>லட்சுமிஹர் /கூத்தொன்று கூடிற்று
இவ்வளவு பரபரப்புக்கு நடுவே தனது செயலில் நேர்த்தியாக இருக்கக் கூடிய அவளைப் பார்க்கும் பொழுது அவளின் நினைவடுக்குகளுள் நீண்டு கொண்டிருக்கும் காட்சியினை அறிய பெரும் ஆர்வம் எழுகிறது.பெரிதும் அதன் நுணுக்கங்களுக்குப் பழகப்பட்டவனாக இருந்ததில்லை என்றாலும் ஏனோ ஒரு வித ஈர்ப்பின் பால் …
>>லட்சுமிஹர்/கூடாரக் கரிசனம்
இதுவரை இல்லாத ஒன்று அங்கு நிகழ்ந்தேறிக் கொண்டிருப்பதை அக்கிராம மக்கள் முதலில் மனக்குமுறலுடனே அணுகினர்.அது என்ன மாதிரியான விளைவை இங்கு ஏற்படுத்தப்போகிறது என்கிற கூச்சலே ஊர் முழுவதும் சொலவடையாக மாறிப்போயிருக்க அதை பற்றிய எந்த சிந்தனையையும் இன்றி இதனை ஆறு …
>>லட்சுமிஹர்/கித்தானுடைய வண்ணப்பேழை
அந்த சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர்நோக்கிய கண்களில் இருக்க கூடிய கேள்விகளுக்கு எந்த பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது நண்பனும் சுமந்து கொண்டு வரும் போது ஏனோ …
>>அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்
விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – வெள்ளி(18. 04.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது.அதன் காணொளியை கண்டு ரசியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.கவிதை …
>>மகாதேவன் சிஎம்/பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல் கடும் அதிர்ச்சியை தருகிறது. ஆயுதமில்லாத அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொல்வதென்பது எந்த ஒரு மனசாட்சி உள்ளவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதுவும் மதத்தை அடிப்படையாக வைத்து, இந்த படுகொலைகள் நடந்துள்ளது என்கிற போது நம்முடைய கவலை அதிகரிக்கிறது. இதன் …
>>எஸ்.வைத்தியநாதன் கவிதை
கெட்டும் பட்டணம் சேர் –கெட்டும் புலம்பெயர் –மேம்பட கெடு .
>>லட்சுமிஹர் /கதவுச் சிறகு
‘ கூர்தீட்டிக் கொண்ட ஆயுதங்களாகச் செவியின் மடல்கள் மாறினாலொழிய உங்களால் அதன் உயிர் நிலையை அறிய முடியாது, திசையின் வேர்கள் எங்கும் ஊடுருவும் இசையை அனுபவிக்க ஒரே விதி …..’ என்று தனது காந்த குரல் வலையினுள்ளிருந்து வெளிப்படும் இத்தனை வருட …
>>லட்சுமிஹர் /மெழுகு
இதுவரை ஒருநாள் கூட அவர்களின் புனித நூலை வாசித்தது இல்லை. மண்டியிட்டு யாதுமாகி நிற்கும் ஒருவனிடம் தனது உயிர் பலன்களை வடியும் மெழுகில் பிரகாசிக்க எண்ணியதும் இல்லை. ஏதாகினும் முறையிட ஒருவனை இதுநாள் வரை இழந்துவிட்டோம் என்கிற சிறு வருத்தம் கூட …
>>— செ. புனிதஜோதி கவிதை
என் வீட்டு வாசலின்முன்எப்போதும் படுத்திருக்கும்ஒரு பொன்னிறப் பூனை… இன்றுஎன்னவோ,பட்டுத் துணியைப் போல்அவ்வளவு குழைவு அதனை மடியில் வைத்துஅதன் முதுகுப்புறத்தைஎன் கைகளால்நீவி விட ஆசை… ஆனால் அது,தன் உடலுக்கு விடுதலை தந்த ஞானியெனப் படுத்திருந்தது… தூக்கி கொஞ்சுவதை விடபார்த்துக் கொண்டே இரு –அதுவே …
>>அழகியசிங்கர்/லாவண்யாவின் கடலின் மீது ஒரு கையெழுத்து
எங்கள் வங்கி அலுவலகம் இருந்த தெரு முனையில்தான் பாரத வங்கி இருந்தது. ஒரு காலத்தில் அங்கு வண்ணதாசன் பணி புரிந்திருக்கிறார். நான் அந்த வங்கிக்குப் போகும்போது அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் எங்கோ எழுந்து போவதுபோல் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஆனால் நான் சொல்ல …
>>ஷைலஜா எழுதுகிறார்
— `நாங்கள் தமிழில் கவிதைகள் எழுத வேண்டும். எங்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ என பாவேந்தர் பாரதிதாசனிடம் புதிதாகக் கவிதை எழுத வந்த இளைஞர்கள் கேட்டபோது, பாரதிதாசன் சட்டென சொன்ன பதில்… ஆழ்வார் பாசுரங்களைப் படியுங்கள்’’ என்பதுதான்.நீங்கள் பகுத்தறிவுப் பாவலர். அப்படியிருக்க, …
>>ரமணரைப் பற்றி முகநூலில்
ஒரு முறை நான்கு பெண்மணிகள் ஆஸ்ரமத்திற்கு வந்து ஹாலில் பகவான் முன்னால் அமர்ந்தார்கள். அதில் ஒருவர் அமெரிக்கப் பெண்மணி. அவர் கேட்டார் “எங்களது ஆன்மிக முன்னேற்றத்திற்கு உங்கள் அருள் கிடைக்குமா?”. “அருள் இல்லையென்றால் இங்கே வருவதற்கே உங்களுக்குத் தோன்றியிருக்காது” என்றார் பகவான். …
>>பிருந்தா சாரதி/எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பற்றி…
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐*90- களின் தொடக்கத்தில் ‘தாவரங்களின் உரையாடல்’ என்ற நூல் மூலம் எனக்கு அறிமுகமான எஸ்.ரா. அவர்கள் 2000இல் எனக்கு நேரடியாக அறிமுகமாகிவிட்டார். அப்போது ‘ உப பாண்டவம்’படித்த பிரமிப்பில் இருந்தேன். …
>>மாலன்/கரிச்சான் குஞ்சுவைப் பற்றி…
தி.ஜானகிராமனின் மிக நெருங்கிய நண்பர் கரிச்சான் குஞ்சு. தி.ஜா.வின் இளமைக்கால அந்தரங்கங்களை அறிந்தவர். கரிச்சான் குஞ்சுவின் தந்தை தி.ஜா.வின் தந்தையின் சீடர். பழுத்த வைதீக குடும்பம்.ஆனால் கரிச்சான் குஞ்சுக்கு 8 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்து போனார். வறுமையில் …
>>வி. வி. கலைச்செல்வி/ இருவர்க்கும் நிம்மதி
நேற்று ஒரு கவிதை படித்தேன்அது ஒரு வாழ்வியல் கவிதைஇன்றுஅது நினைவில் வந்ததுஇப்போது அதுபாதி தான் புரிந்ததுமீதி புரியவேயில்லை எப்படியும் மீதியும்புரிந்துவிடும் என்றுநான் அதன் பாதியிலேயே நின்று கொண்டிருந்தேன் நான் அனாதைபோல் பாதியில் நின்றதுஅந்தக் கவிதைக்குவலித்திருக்கும் போலசட்டென்று என் நினைவிலிருந்து குதித்துவெளியே போய்விட்டது
>>கிரிகோரி ஓர்/ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
தமிழில் : க.மோகனரங்கன் – ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பாக,கணப்பொழுதுதனது காதலியைஏறிட்டுப்பார்த்தஒரு கவிஞர்அவரது கண்கள்நீரால் நிரம்புவதைஉணர்ந்தார்அவரது வாய்ஒரு புன்னகையாகமலர்வதை உணர்ந்தார்.அந்தக் கவிதையைநீங்கள் உரக்கப் படிக்கும்போது –உங்களுக்குள் அவைஎந்த ஆழத்திலிருந்துஇப்போது எழுகின்றன?உங்கள் கண்களில்,அந்தக் கண்ணீரும்அதேப் புன்னகையும்.
>>நாகேந்திர பாரதி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும்
ஒரே வரியில் சொல்லனும்னா , நீங்க கொடுக்கிற இது போன்ற தலைப்புக்கள் தான் ஒரு வேகத்தைக் கொடுக்குது கவிதை எழுத. ஒரு சவால்.சவால்கள் சந்திக்கத் தூண்டுகின்றன. சாதிக்கத் தூண்டுகின்றன.ஆழமாய் யோசிச்சா , ஏன் கவிதை என் கவிதை, என்று யோசித்தபோது தோன்றிய …
>>எஸ்ஸார்சி/எல்லாமே புரியணுமா?
என் பையன் தனி வீடு ஒன்றை சென்னைப்புறநகர் பழைய பெருங்களத்தூரில் வாங்கியிருந்தான். அப்படி அவன் வீடு வாங்கியதில் வங்கிக்கடனுக்கு மாதம் ஐம்பது ஆயிரம் ரூபாய் ஈ எம் ஐ வந்தது. அவன் குடும்பம் மனைவி ஒரு பெண் குழந்தை அவர்கள் மூவரும் …
>>மதுவந்தி/நான் ஏன் கவிதை எழுத வேண்டும் ?
(நான் ஏன் கவிதை எழுதுகிறேன்?)நான் ஏன் எழுதுகிறேன்? எனும் கேள்வியின் உப கேள்வியாகவே இந்தக் கேள்வி : நான் ஏன் கவிதை எழுத வேண்டும்? (அல்லது நான் ஏன் கவிதை எழுதுகிறேன்? ) என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.நான் …
>>அழகியசிங்கர்/தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டுகவிதையைஏன் எழுதவில்லை?மனம் துடித்துக்கொண்டிருந்ததுஎதாவது எழுதவேண்டுமென்றுசெயல்படுத்தி முடிவதற்குள்காலம் கடந்துவிட்டதுஎனக்கு ஒவ்வொரு நாளும்தமிழ்ப் புத்தாண்டுதான்
>>சசிகலா விஸ்வநாதன்/மௌனம்
தபால் கார்டில் வந்த கவிதை செயலற்ற ஒரு செயல் செய்யபேச்சற்ற ஒரு பேச்சே மௌனம்அமைதியின் ஆதாரநாதம்!அது ஒன்றே சாதனம்!ஓசையற்ற நினைவுஆசையற்ற உள்ளம்விசையற்ற நிலையில்நசையற்ற செயல்திறன்ஆம்!அதுவே மௌனம்.
>>சிவசங்கரி /அப்பா
3சென்ஸ் ஆஃப் வேல்யூ-அதாவது பொருள், நேரம் உழைப்பு இவற்றின் அருமையை உணரவேண்டிய அவசியத்தை அப்பா மிக முக்கியமாகக் கருதியதால் அதை மற்றவர்களுக்குப் புரியவைக்க ஏராளமாய் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்.அவை அத்தனையும்நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்துவந்து தூசிதட்டிச் சொல்வது சாத்தியமில்லை என்றாலும் ஒருசிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள …
>>பிஸ்ரீ/ராயப்பேட்டை முனிவர்
ராயப்பேட்டை முனிவர் என்ற திரு. வி. கலியாண சுந்தர முதலியாரை நான் முதல் முதல் சந்தித்தது காரைக் குடியிலே. அந்த நாளில் “குமரன்” பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்து வந்தேன். பத்திராதிபர் சொ. முருகப்பா ராயப்பேட்டை முனிவரின் சீடராகவும் நண்ப …
>>ரேவதி பாலு/அட்டகாசமான இசை விழா !
அமெரிக்கையான கிருஷ்ணசரிதம் உபன்யாசம்! அமைப்பாளர்களுக்கும், இணைப்பாளர்களுக்கும், பாடியவர்களுக்கும் , பகவான் கிருஷ்ணன் கதையை மனதை உருக்கும் வகையில் வழங்கிய ரம்யா வாசுதேவன் அவர்களுக்கும், இசைக் குழுவினருக்கும் , தொகுத்து வழங்கிய இந்திரா ராமநாதன் அவர்களுக்கும், நினைவில் நிற்கும் பரிசு வழங்கியவருக்கும் , …
>>க.நா.சு. / நாணயஸ்தன்
சிதம்பரத்தில் நான் ரயிலேறும் போது வண்டியில் இரண்டே ஆசாமிகள்தான் இருந்தார்கள். அவர்களிருவரும் ஒரே ஸீட்டில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ சுவாரசியமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.என் பையை எதிர் ஸீட்டில் வைத்தேன். விசிறிகளில் ஒன்றை என் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டேன். ஆனால் …
>>நாடோடி/அரசனும் சேவகனே!
ஆயிரம் நீதி கதைகள் ஆப்பிரிக்காவில் உள்ள கமேரூன்ஸ் என்னும் பிரதேசத்தை இன்னொரு சமயம் ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் கர்வம் உள்ளவன். எல்லாரும் தனக்குத் தொண்டர்கள், தான் யாருக்கும் தொண்டன் அல்ல என்று அவன் அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் …
>>ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்
6. நீலவானம் எத்தனை தெளிவாக இருக்கிறது! விரிந்து, பரந்து, காலங்கடந்திருக்கும் அதன் அழகே அழகு! தூரமும் வெளியும் மனதின் அனுமானங்கள். இவ்விடம் மற்றும் தூரத்திலிருக்கும் அவ்விடம் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், ஆசையின் தூண்டுதலால், அவை உளவியல் விஷயங்களாகி விடுகின்றன. பல்வேறு மனம், …
>>நகுலன்/நவீனன் டைரி
அதுநாள் உங்கிட்டெ சொல்லியாச்சேங்கன்’அவர் மீண்டும் தொடங்கினார்.“ஒரு கதைக்கு ரூ 100/-, 200/- கிடைக்கும்ன எழுத்தைப் பத்திக்கூட யோசிக்கத்தான் வேண்டியிருக்கு”“ஆமாம் அதைப்பத்தி இப்பப் பலரும் பலமாத்தான் யோசிச்சிண்டிருக்கா”“ஆனா ‘நவீனன்’ அப்படி ஒரு மோசமான எழுத்தாளன் இல்லென்னு ஒரு வட்டாரத்திலெ பேர் இருக்காமே”“ஏன்?”“இல்லெ உங்க …
>>கொனஷ்டை/யாகபங்கம்
பரத்வாஜ ரிஷியினுடைய ஆச்ரமத்திலிருந்து கூப்பிடு தூரத்திலுள்ளது. அக்கினிகர்ப்பருடைய ஆசிரமம். ஒரு யாகம் செய்து முடிக்கவேண்டுமென்று அக்கினிகர்ப்பருக்கு வெகு காலமாக மனோரதம் உண்டாயிருந்தது. அவ்விஷயத்தைப்பற்றி அன்று காலையில்தான் பரத்வாஜ ரிஷியிடம் பிரஸ்தாபித்தார். மகரிஷியும் தாமே கூட இருந்து சகாயம் செய்து முடித்துவைப்பதாக ஒப்புக் …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 114
விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி ( 11.04.2025) அன்று மாலை6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. நிகழ்ச்சி எண் – 114 மாலன் கதைகள் அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர் – ஆர்.வெங்கடேஷ் கனவு ராஜ்ஜியம் – ரமணன் …
>>மதுவந்தி/விஷ்வாவசு புத்தாண்டு வாழ்த்துகள்!!!
இடைக்காடர் வருடாதி வெண்பாபாடின பின்பு வேறென்னசொல்லிவிட முடியும்,தமிழ்ப் புத்தாண்டு பற்றி ? முதல்காடர் எவரேனும்பாடிய பின்னேஎண்ணூறு வருடங்களுக்கு முன்இடைக்காடருந்தானே பாடினார்!!!. இப்போ,அறிதிறன் பேசியும்அலெக்சாவும்அடுக்கக வீடுகளும்ஆகாயமே பாராத நாட்களுமாய்புத்தாண்டு பிறந்ததையும்சமூக வலைத்தளங்களிலேயேகொண்டாடுகிற பாட்டைநான் பாடாமல்வேறெந்தக் காடர் பாடுவார்? ஓட்டத்தின் நடுவேகொஞ்சம் நின்று,மேலே வானத்தையும்,கீழே …
>>“நீலவானம்” – ரமணன்/ஜெ.பாஸ்கரன்
வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதல் பி டி சாமி, தமிழ்வாணன் எனத் தொடர்ந்து சுஜாதா வரை ஏராளமான துப்பறியும் கதைகள், மர்ம நாவல்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனாலும் ஒரு விமானக் கடத்தலைப் பற்றியோ அல்லது மனிதர்களைக் கடத்துவது பற்றியோ பயங்கர தீவிரவாதிகளால் …
>>கொனஷ்டை/அறுபத்து மூவர்
என் வீடு மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் இருப்பதால், வனிதா தன்னுடைய சிநேகிதி லலிதாங்கி யுடன் அங்கே வந்து வீற்றிருந்து அறுபத்து மூவர் பவனி வரும்போது தரிசனம் செய்யப்போவதாகச் சொல்லியனுப்பினாள். வனிதா என்னுடைய சினேகிதரின் சகோதரி. பெண்களின் காலேஜில் சேர்ந்து படிப்பதற்காகச் சிறிது …
>>ரம்யா வாசுதேவன்/இன்று நானும் கிருஷ்ணாஜியும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி
வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் வாழ்க்கையை குறித்து சுருக்கமான பதிவு ஒன்றை வெளியிடலாமே என்று தோன்றியது. ஜே.கே. என்று அந்தக் காலத்தில் பேசிய எல்லோரும் அவரை intellectual personality ஆகவே பார்த்தனர். ஆனால், அவரை நெருங்க நெருங்க அவர் வேறு என்பதை …
>>பாக்கியலட்சுமி/நிராகரிப்பு
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மயக்கும் தமிழில் மனம் நிறைந்தகருத்துக்களைக் கோர்த்துதணிக்கை ஒன்றில் அரங்கேற்றினேன்கொங்கு தமிழில் கொடுத்த உரையைஅனைவரும் ஆர்ப்பரித்து ரசித்தனர்சகலரின் உரைகளை விட எனது சிறப்பாகவேஇருந்ததென்ற மனநிறைவில்கல்லொன்று பெரிதாய் விழுந்ததுதேர்ந்தெடுக்கப்பட்டதில் விடுபட்டது என் பெயர்விழாப் பொழுதில் என் சொற்கள்வேறொருவர் …
>>அசலும் நகலும்-மாலன் /ஜெ.பாஸ்கரன்
ஒரு தங்கச் சங்கிலியைச் சுற்றிச் சுழலும் கதை. அரசியின் அம்மா வேலை செய்த வீட்டில், தங்கச் சங்கிலி காணாமல் போக, அந்தப் பழி அம்மாவின் மேல் விழுந்து, ஊரின் பார்வை தாங்க முடியாமல் தூக்கிலிட்டு கொள்கிறாள். ”சங்கிலி ஒரு காலத்தில் குடும்பத்தின் …
>>திருப்பூர் கிருஷ்ணன்/ஏப்ரல் 8: ஜெயகாந்தன் நினைவு தினம்:
……………………………… *ஜெயகாந்தன் சில நினைவலைகள்…* …………………………….. *ஜெயகாந்தன் தற்கால இலக்கியப் படைப்பாளிகளில் மிகப் பெரிய அளவில் தடம் பதித்த ஓர் ஆளுமை. அவர் பெயரை நீக்கிவிட்டுத் தற்கால இலக்கிய வரலாற்றை யாரும் எழுத இயலாது. சமூகப் பிரச்னைகளைத் தன் கூர்மையான அறிவுக் …
>>ஹரணி/அஞ்சல் செய்த கவிதைகள்
6.4.25 (7)ஒருபோதும் முடிவதில்லைஎந்தப் பயணமும்…உள்ளவரைஉள்ளத்தில் இருக்கிறது..நினைத்தபோதுபயணிக்கவைத்துவிடுகிறதுஎல்லாவற்றையும்கடந்து.. (8) எழுதுவதற்குவெள்ளைத்தாள்எடுக்கையில்முற்றுப்புள்ளியைவிடச்சிறிதாய் அசைகிறதுபூச்சியொன்றுகடவுளைச் சுமந்தபடி… (9) பெயரன் கிறுக்கும்வண்ணங்களில்எதையும் கொண்டு வந்துவிடுகிறான்எனக்குத்தான் வரவில்லைசட்டென்றுஒரு சிறு கவிதைகூட… 000
>>லாவண்யா சத்யநாதன்/பிராணாவஸ்தை
மலையளவுசொத்திருந்தும்கைநிறையபணமிருந்தும்மனதுக்குள் வறியவன்.கடலை மிட்டாய் வாங்ககணக்குப் பார்ப்பான்.உடைகள் வாங்க பலகடைகள் ஏறி இறங்குவான்.அளவு சரியில்லைநிறம் சம்மதமில்லையென்றுசாயம் போன சட்டைஅணிந்து திரிவான்.சுயமறுப்பு சிகாமணிநாலு தலைமுறை வீட்டைநவீனப்படுத்துமாறுபிள்ளைப்பூச்சியாய்துளைத்தாள் மனைவி.எனக்கும் ஆசைதான்கல்லுக்கும் மண்ணுக்கும்காசைக் கொட்டவேண்டாமென்றுகாசை மிச்சம்பிடித்தான்.இப்போது பார்நிராகரித்த ஆசைகளைநினைத்துஅல்லாடுகிறது உயிர்.சட்டி லேசில் உடையாமல்.
>>தேவியின் தேசியமும் தமிழும்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை திருவனந்தபுரத் தில் தமிழாசிரியப் பணிபுரிந்து வந்த காலத்தில் அடுத்த வீட்டு நண்பர் ஒரு விருந்து நடத்த விரும்பினார் தம் வீட்டில் இடவசதி இல்லாததால் இவர் வீட்டிலே நடத்த அனுமதி பெற்றிருந்தார். இவரும் உடனிருந்தார்; உதவி செய்தார். …
>>ஜெயமோகன் பத்தி
2000 த்தில் நான் வீடுகட்டினேன். அத்தனை கடன்களையும் வாங்கி எல்லா தவணைகளையும் கட்டியபின் மாதம் 1700 ரூபாய் மட்டுமே கையில்வரும், எனக்கும் அருண்மொழிக்கும் சேர்த்து. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலம். சுவரில் முட்டிக்கொண்ட திகைப்பு. நான் எவரிடமும் பொருளுக்கு நிற்கலாகாதென்பதனாலேயே கஞ்சனாக …
>>புதுமைப்பித்தன்/ ‘பூசனிக்காய்’ அம்பி
எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு அறிந்திருந்த சிறு பையனின் பட்டப்பெயர் என்றுதான் எனக்குத் தெரியும். அவனைப் ‘பூசனிக்காய் அம்பி’ என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். அவனுக்கு …
>>கல்கி/ஸினிமாக் கதை
“தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!” என்றான் ராமு.“மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம்.கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.“அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு.“இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம்.“சண்டை போடறதுன்னு ஒண்ணு …
>>புதுமைப்பித்தன்/சாமியாரும் குழந்தையும் சீடையும்
“மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.“இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.“நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு கட்டிக் கொண்டு வந்தான்.“இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு …
>>ஹரணி கவிதைகள்
விபத்து..•••கொஞ்சம் பார்த்துப்போயிருக்கலாம்அய்யோ பாவம்…பார்க்காமல் போகஇயலாது..பார்த்துப் போகும்போதுதான்நடக்கிறது எல்லாமும்.. யார் யாரைப் பார்ப்பது?எது யாரைப் பார்க்கிறது? இவற்றுடன்தான்..•••பாதிக்குமேல்செல்லரித்த வாழ்வில்..சிலர் நல்ல தூக்கத்தில்சிலர் இருமுகிறார்கள்கொஞ்சம் தும்மல்கள்தொண்டைக் கரகரப்பில்கொஞ்சம் பேர்..யோவ்.. நிறுத்துய்யாஸ்டாப்பிங் தெரியாதா?பாக்கிக் கொடுங்க..யாரும்…….. இறங்கணுமா?ஹைலி இன்டீசண்ட் பீப்பிள்சார்.. ஆமாம் சார்..தினமும் நடக்கிறதுஆனாலும் பேருந்து பயணம்பாதுகாப்பானதுஆமாம்.. …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -11.04.2025
விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் -11.04.2025 அன்று வெள்ளிக்கிழமை -6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.நிகழ்ச்சி எண் – 114 மாலன் கதைகள் அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர் – ஆர்.வெங்கடேஷ் கனவு ராஜ்ஜியம் – ரமணன் VSV அசலும் நகலும் – …
>>சசிகலா விஸ்வநாத்/ஏக்கம்
அம்மா, பாட்டியைக் கடிந்து ஒரு வார்த்தைசொல்வதைக் கண்டு ஓடி வந்த சிறுமி;அம்மாவைப் பார்த்து முறைத்தது!புரிந்ததா, அதற்கு? தெரியவில்லை,எனக்கு! அம்மா கையிலிருந்த தன்பொம்மையை பிடுங்கிக் கொண்டு”நான் இனி பாட்டி செல்லம் தான்’ என்றுசொல்லி பாட்டி மடியில் உட்கார்ந்துகொண்டு, வலது கை விரல்களை மடக்கி‘டூ’ …
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 113
இந்நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள். பிரமிள் கதைகள் முக்கிய பேச்சாளர் : கால சுப்ரமணியம் நீலம் – வேணு வேட்ராயன் ஆலா – ஜெ. பாஸ்கரன் காடன் கண்டது – முபீன் சாதிகா அங்குலீமாமா- ராஜாமணி சாமுண்டி – நிதா எழிலரசி …
>>மாலன்/களவு
தோழமையான விரல் தோளில் தட்டுவதைப் போல வானிலிருந்து வந்தமர்ந்தது மழைத்துளி. சிலிர்த்துக் கொண்ட அவன் நிமிர்ந்து பார்த்தான். நீலவானம் இருட்டத் தொடங்கியிருந்தது. தூறலொடு நின்று விடுமா? தொடர்ந்து பொழியுமா? இறங்கி நடக்கலாமா, இல்லை எங்கேயேனும் ஒதுங்கி நிற்கலாமா என்று அவன் முடிவெடுப்பதற்குள் …
>>மாலன்/அந்தரத்தில் கண்ணாடிதுடைப்பவர்
“இன்றும் பனிக்குல்லாயை மறந்து விட்டாயா?”சுவரிலிருந்த பித்தான்களில் எண்களை அழுத்தி விட்டுக் கண்ணாடிக் கதவுகள் திறக்கக் காத்திருந்த நெடுமாறன் திரும்பிப் பார்த்தான். சூ ஹவா புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள். சூவும் அவள் புன்னகையும் பிரிக்க முடியாதவை அது அப்படி யொன்றும் வசீகரமான புன்னகை …
>>நிஷாந்தன்/பரிமாறுதல்
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை மனச்சட்டியில் இட்டுமிகுந்த கவனத்துடன் சமைத்தஎனது எண்ணங்களைச்சொற்களின் கரண்டியில்பக்குவமாகப் பரிமாறுவதற்குஎனக்குத் தெரியவேயில்லை.என் முகத்தையும்ஏந்திய கரண்டியையும்அவநம்பிக்கையுடன்பார்க்கிறீர்கள்.சட்டியிலிடப்பட்டபொருட்கள் குறித்துசந்தேகம் கொள்கிறீர்கள்.காரசாரமாக விவாதிக்கிறீர்கள்.கரண்டிக்கும் உணவுக்கும்உள்ள வேறுபாட்டைஉங்களுக்குஎப்படித்தான் நான்புரிய வைப்பேன்எனது இன்னொருகரண்டி மூலம்?
>>மாலன்/கனவு ராஜ்யம்
பீரங்கிச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன். இந்தியானாவே அதிர்ந்து குலுங்குவது போல் முழங்கியது பீரங்கி. ஆனிக் காற்று ஆடையை உருவிக் கொண்டு போய்விடாமல் வேட்டியை வழித்துக் காலிடுக்கில் கவ்விக் கொண்டு இந்தியானா கப்பலிலிருந்து எதிரே தெரிந்த தீவை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். …
>>அழகியசிங்கர்/இலவசமாய் க நா சு கவிதைகள்
க நா சு நூற்றாண்டை முன்னிட்டு 2011ஆம் ஆண்டு சில க நா சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தேன். ஏற்கனவே மையம் வெளியீடாக வெளிவந்த புத்தகம். 14 கவிதைகள் கொண்ட சிறிய தொகுதி இது. 500 பிரதிகள் இதை …
>>ஆர் வத்ஸலா/ஏன்?
என் கவிதைகளை மட்டும்உன் கண்தாண்டிச் சென்று விடுகிறதேஏன்? அவைநல்ல கவிதைகள் அல்லஎன்பதாலா?அல்லதுநல்ல கவிதைகள்என்பதாலா? 5/4/25
>>அழகியசிங்கர்/மறக்க முடியாத மதுரை
நான் சென்னைவாசி. பெரும்பாலும் சென்னையை விட்டு எங்கும் போவதில்லை. ஏன் இந்த மாம்பலத்தை விட்டுக்கூட எங்கும் போக முயற்சி செய்வதில்லை. ஆனால் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவேன். உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்றெல்லாம் போவேன். எதாவது காரணம் இருக்க வேண்டும். அப்படி …
>>விருட்சம் நடத்தும் அசோகமித்திரன் நினைவு சிறுகதைப் போட்டி
அசோகமித்திரன் பெயரில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமென்று என் நெடுநாள் விருப்பம். அவர் நினைவு நாளை (23.03.2025) ஞாபகப்படுத்தும் விதமாய் இத்திட்டத்தைச் செயல் படுத்த விரும்புகிறேன். போட்டிக்கு ஒரே ஒரு கதையை மட்டும் அனுப்ப வேண்டும். கதை 800 வார்த்தைகளிலிருந்து …
>>அழகியசிங்கர்/நான்
நான்பொய் சொல்லவில்லைதிருடவில்லையாரையும்ஏமாற்றவில்லைஎன்ன பிரச்சினைஉங்களுக்குநான்வெறுமனேகவிதைத்தான் எழுதுகிறேன்அதைப் படித்துத்தொலைத்தால் என்ன?
>>அ பெருமாள்/பாதயாத்திரை
1 1994ஆம் வருடம் மகா சிவராத்திரி சமயம் எனது நண்பர் திரு. நாகராஜ் பெங்களூரில் இருந்து தர்மஸ்தலாவுக்குப் பாதயாத்திரை சென்று வந்தார். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் வழியில் மக்கள் அளித்த உபசரிப்பு பற்றியும், உடன்வரும் சமையல்காரர்கள் அளிக்கும் சுவையான உணவு பற்றியும், …
>>ஹரணி/முதலிரவு
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை விதவையாகத் தொடங்கும்முதலிரவு இது..கைப்பிடித்து நடந்த முதலிரவில்கைவிடமாட்டேன் என்று சொன்னவன்முப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தான்மூன்று குழந்தைகள் பிறந்தமுதலிரவுகளிலும் அருகிலேயேஇருந்தான்தன் அப்பாவையும் அம்மாவையும்பறிகொடுத்த முதலிரவிலும்பிள்ளைகளைச் சாப்பிடவைத்துஉறங்கவைத்துச் சென்றான்..யாரிடமும் பகையில்லைபேரன்பு ஒன்றே காட்டினான்பொறாமைப்படவே வாழ்ந்தோம்பிள்ளைகள் வளர்ந்து நிற்கிறார்கள்வாழத் துடிக்கிறார்கள்அவனின் அடையாளத்துடன்இனி …
>>அழகியசிங்கர் /புத்தர் இன்று பிறந்தால்..
ஜேப்படி திருடனாகமாறி இருப்பார்ஒரு அரசியல் கட்சியில்சேர்ந்துகொள்ளை அடிப்பவராகதோன்றி இருப்பார்பல பெண்களைமணந்து சகலகலாவல்லவராக இருந்திருப்பார்ஆனால்நீங்க நினைக்கிறநண்பராக இருப்பதுசந்தேகம்!
>>பிரமிள்/மாரி
குளமாய்ப் பூக்கும்மழை விதைகள்.முகிலின் குரல் எச்சில்.வானச் சுவரொட்டிபல்லிக் குமுறல்.பரிதி கிழித்துதொங்கும் மின்னல்.தண்ணீர் பின்னிநீர் நூல் திரளின்வேர் கிளைத்தமலை முளைகள்காற்றின் சவுக்குத் தொடர்உருகிய கண்ணாடிக்கடல் அலைப் பாறை.கணங்கள் கழன்றதுபருவத்தின் ஓர்ஒற்றை பிரிந்ததுவெளியில் மாரிச்கவர் எழுந்ததுதூரிகை இயற்கைபுரண்டது.
>>லக்ஷ்மி ரமணன்/இப்படியும்..
சுந்தர் தன் நண்பன் சுரேஷை உற்றுப்பார்த்துதிகைப்புக்குள்ளானான்.“என்ன அப்படிப்பார்க்கிறே?”“இல்லே உன் முகத்திலே எதேவோ மிஸ் ஆகுதே”ஓ அதுவா என்னனு கெஸ்பண்ணு”“கெஸ்ஸு கேஸு ஒண்ணு தாடி வெச்சுக்கஉனக்கு ரொம்பப்பிடிக்குது ஏன்னா அதுதான்லேட்டஸ்ட் பேஷன்னு சொல்லுவே. சினிமாமற்றும் சின்னத்திரை நடிகர்கள்கூட தாடியுடன் தான் நடிக்கிறாங்கன்னு சொல்லுவே …
>>சாய்ரேனு பானு/புத்தர் இன்று பிறந்தால்
புத்தர் இன்று பிறந்தால்புத்தம்புதிதாய் என்ன வரும்?புத்தர் என்றும் புத்தரே.சத்தியம் என்றும் சத்தியமே. இன்னொரு போதி புகழ்பெறும்இன்னொரு அசோகன் பிறப்பெடுப்பான்பின்னொரு சங்கரன் வந்திடுவான்இனியொரு புத்தர் பிறந்துவந்தால்! புத்தர் என்று பிறந்தாலும்நித்தம் நடப்பதுதான் நடக்கும்.புத்தம் என்பது மனதினிலேபுதிதென்ன காலத்தின் ஓட்டத்திலே?
>>விஞ்ஞானி/புத்தர் இன்று பிறந்தால்
அனைத்து துன்பத்துக்கும்காரணமான ஆசையைதுறக்க சொன்னதைமாற்றிஅனைத்துக்கும் ஆசை படுஎன்று சொல்லக்கூடும் யாதாயினும் துன்பம்விலகாது என்பதால்
>>சசிகலா விஸ்வநாதன்/புத்தர் இன்று பிறந்தால்
பிழைத்து பிழைக்கும்மனிதரை நினைத்துவருந்தியே இருப்பார்வையகம் திருத்தஉழைத்தே உயர்த்துவார்
>>மதுவந்தி./புத்தர் இன்று பிறந்தால்…?
கேள்வியே எனக்குப்புரியவில்லை. இதோ என் மேஜையிலமர்ந்துசாந்தமான முகத்தோடு,நான் சொல்வதையெலாம்பொறுமையாய்க் கேட்டுஆசீர்வதிக்கிறஇவர் யார்! 04.04.25.
>>சிறகு இரவி/புத்தர் இன்று பிறந்தால்
புத்தர் இன்று பிறந்தால்போதி மரம் தேடிப்போகும் வழியில்சோதனைச் சாவடியில்தடுக்கப் படுவார்!
>>விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – 04.04.2025
6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 113 பிரமிள் கதைகள் முக்கிய பேச்சாளர் : கால சுப்ரமணியம் நீலம் – வேணு வேட்ராயன் ஆலா – ஜெ. பாஸ்கரன் காடன் கண்டது – முபீன் சாதிகா அங்குலீமாமா- …
>>வல்லிக்கண்ணன்/குடியிருப்பில் ஒரு வீடு
நாகரிக நகரங்களில் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகத் தலையெடுக்கிற எல்லா “எக்ஸ்டென்ஷன்”களையும் போல் தான் அந்தக் குடியிருப்பும் அமைந்திருந்தது.அமைதியான சூழ்நிலை, பரபரப்பு இல்லாத அருமையான தெருக்கள், “மொட்டைமொழுக்கென்று அழகோ கவர்ச்சியோ இல்லாது கட்டப்பெற்றுள்ள சதுர வடிவக் கட்டிடங்கள் முதலியவற்றை நாகரிக விதிகளின்படி கொண்டிருந்த …
>>வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”
குறை கூறல் க.நா. சுப்ரமண்யம் 1964ல் ‘இலக்கிய வட்டம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.அதன் 17வது இதழ் ‘தமிழ் இலக்கியத்தில் சாதனை’ யை அளவிடும் விசேஷ மலராகத் தயாராயிற்று. 1947-64 கால கட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் …
>>நா. பார்த்தசாரதி/துளசி மாடம்
(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது) அத்தியாயம் 8 வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் …
>>அவ்வை டி கே. சண்முகம் அவர்களின்”நாடகக் கலை”
வளர்ச்சி வேகம் சென்ற 40 ஆண்டுகளில் தமிழ் நாடக மேடை அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காணும் போது எனக்கே வியப்பாகத்தானிருக்கிறது. மூன்றே மூன்று ‘கியாஸ்’ லைட்டுகளை வைத்துக்கொண்டு நாடங்கள் நடைபெற்ற போதும் நான் நடித்தேன்; இன்று கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சத்திலேயும் நடித்து …
>>க.நா.சு /கல்யாணங்கள்
கும்பகோணத்தில் நான் ரெயில் ஏறும்போது வண்டியில் ஒரே கூட்டமாக இருந்தது.இடம் பூராவையும் ஒரு கல்யாணக் கோஷ்டி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. குடம் குத்து விளக்கு, பருப்புத் தேங்காய், புதுப்பாய் சகிதம், பிள்ளை, பெண், பிள்ளையின் பெற்றோர் தம்பி தங்கைகள், பெண்ணின் தாய் தங்கைகள் …
>>அமரர் கல்கி/எஸ்.ஜி. கிட்டப்பாகல்கி வளர்த்த கலைகள்
சென்ற சனிக்கிழமை இரவு இந்திர லோகத் துக்குச் சென்றிருந்தேன். அங்கே பெரிய மோக்ளா*வா யிருந்தது. அரங்க மேடை யொன்று வெகு அழகாகச் சிங்காரித்திருந்தார்கள். சபையில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாத கூட்டம்! தேவேந்திரன், இந்திராணி சகிதமாக வீற்றிருந்தார். தேவர்கள், முனிவர்கள், தேவ …
>>இராஜாமணி/இலக்கற்ற பயணம்
ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை முடிவில்லா நீண்ட பயணத்தைத்தொடங்கிய போதுபலரும் கூடப் பயணித்தார்கள். ஏற்றமும்,இறக்கமும்சவால்களுமானபயணத்தில் கூட வந்த பலர்சிலரானார்கள்.இலக்குகளை அடைந்தபின்புதிய இலக்குகளை நோக்கியபயணம் தொடர்ந்தது. நீண்ட தூரம் பயணித்தபின்இலக்குகளென்று எதுவுமில்லைஎன்றுணர்ந்த பொழுது,தொடங்கிய இடத்திற்குத்திரும்ப முடியாப் பயணமானது. கூடப் பயணித்தவர் யாரும் …
>>மதுவந்தி/வீதியுலா
உற்சாகத் தேரில்உலா வரும் சாமிபார்க்கப் போகணும் அசைந்தாடி தேரில்கண்கொள்ளா காட்சிதரும்சாமி காண மகிழ்வு சாமி நம்மைப் பார்ப்பார்என்பது அதிமகிழ்வு. .(25.03.25 தபாலட்டையில் எழுதிய கவிதை. சேர்ந்த நாள் 02.04.25).
>>கீழாம்பூர் சங்கர சப்பிரமணியன் /அக்கரைக்கு அப்பாத் தூக்கி கொண்டு செல்வார்!
ஆசிரியர் கலைமகள்……………….. திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் 57 ஆம் நெம்பர் வீட்டில் நான் வசித்து வந்தேன். 1980 முதல் 1995 வரை அங்கு தான் ஜாகை. 60 எண் வீட்டில் தி மெயில் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ராஜன் அவர்கள் …
>>ஜெ.பாஸ்கரன்/கோணலாய் ஒரு கோலம்!
ஒற்றையிழையில் வாசலில் போடப்பட்டுள்ள கோலம் என் கவனத்தைக் கலைத்தது!குழந்தை கிறுக்கினாற் போன்ற கோலம். ஆனாலும் அதில் ஓர் ஒழுங்கு இருந்தது. இது என்ன கோலம்?கீழே ஒரு சக்கரம், தேர்க் கோலமோ? நடுவில் ஒரு சூரியன்; அருகில் சந்திரனைக் காணோமே – பொங்கல் …
>>பிரமிள்/காடன் கண்டது
எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு.பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். …
>>அங்குலீமாலா/பிரமிள்
விபத்திலிருந்து தப்பித்தது விமானத்தின் பயணிகள் பகுதி மட்டும் தான். பம்பாயிலிருந்து ரோம் நோக்கிக் கிளம்பிய அந்த ஜெட்டின் நேவிகேஷன் கருவியில் கோளாறு. இதன் விளைவாக ஏற்பட்ட திசைப் பிசகிற்குப் பின்பு, பைலட் மற்றும் எஞ்சின் பகுதி பாதிக்கப்பட்டதன் காரணங்கள் புரியவில்லை. நேர்மேற்கு, …
>>