இனி என்ன செய்வது.. ?/அனங்கன்
இன்றைக்கானக் கவலைகள்
எழும்போதே தொடங்கிவிட்டன…
நேற்றையக் கவலைகள் நிலுவையில் இருக்கின்றன…
இன்றைக்கானக் கவலைகள்
எழும்போதே தொடங்கிவிட்டன…
நேற்றையக் கவலைகள் நிலுவையில் இருக்கின்றன…
கையில் காசில்லை
கால்களில் வலு வில்லை,
சாலைகள் விரிவாக்கம் வேரறுந்த மரங்கள்
புதிய சாலைகள் பாலை தோற்றம்
பழைய சாலைகள் மரண பயத்தில்
அரிசி சோறு அறவே இல்லை;
கேப்பங்களியும் கம்பங்கூழும் காலையும் மாலையும்
சர்க்கரை அளவு என்றும் ஏறுமுகம்
புதுப் பிரச்சினைகள் தினமும்
முளைக்காவிடில்
இன்றைய நாளைய ஊடக தீராப்பசி
பொழுதுகள்
புலராமலே போனால்
காலை துவங்கிச் செய்தியே இல்லை.
மாலை ஓயுமுன் செய்திக் கடல்.
வாக்களித்து வாக்களித்துப் பார்த்தா யிற்று;
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
என்பாடு உன்பாடு அதே பாடுதான்!
படித்து வாங்கிய பட்டம் பையில்
வேலைக்கு போட்ட விண்ணப்பம்
முக்கால் ஆற்றை நீந்திக் கடந்தவன்
முடியவில்லை என்று திரும்பக் கூடாது!
சிக்கலைத் தீர்க்க பொறுமை வேண்டு
1. வாழ்வில் எருதோகாளையோ பசுவோகட்டப்படும் கொட்டிலிலும்முளையிலும் இல்லைஉரிமையாளர் வணிகத் தேவையறிதல் அன்றி இதற்கினி ஞானம் எதற்கு ? 2. திடீர் மழையில் பாதையெங்கும்குளமானதில்கடந்து சென்ற பஸ் இறைத்தசேறும் சகதியில் உடை அழுக்கானதில் இதற்கினி ஞானம் எதற்கு 28/06/2023
>>