தங்கேஸ்/முள்படுக்கை
பாரஸ்ட் ரோடைத் தாண்டி புதிய பேருந்து நிலையத்திற்கு போகிற ஒற்றைச் சாலையில் வண்டி திரும்பிய போது, ஹெட்லைட் வெளிச்சத்தில் அந்த மஞ்சள் நிற உருவம் அசைந்தது விநோதமாக அவன் கண்களுக்குத் தெரிந்தது.
ஏதோ முள் வேலிக் கம்பியிலேயே சோளக்கொல்லை பொம்மையை நிறுத்தி விட்டார்கள் போல என்று தான் நினைத்தான். ஆனால் அருகி
