ஸ்ரீ சிவன் சார் தீர்க்க தரிசனம்/தொகுப்பு ஸ்ரீதர் சாமா

நல்லி குப்புசாமி செட்டி `ஞான ஏணி’ யில் சொல்கிறார் ஸ்ரீ சிவன் சார் 1996இல் சித்தி அடைந்தபோது `எதற்கும் துக்கப்படாதே ‘ என்ற அவர் அறிவுரை என்னை ஆசுவாசப்படுத்தியது . சாரின் உறவினர்கள் `நீங்களே எல்லாக் காரியமும் செய்யத் தகுதியானவர் ‘ …

>>

ஒரு வாசகர் சுஜாதா அவர்களைச் சாடுவதும்……

முதலிய கவிதைத் தொகுப்புகளையும் கதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். பிறகு வந்தவை குறித்து தெரியாது. எல்லா தொகுப்புகளும் நம்ம ஊர் ‘சரோஜா தேவி’ புத்தக வரிகளைப் போல இருக்கும். தண்ணி அடித்துவிட்டு பெண்கள் கிடைக்காத நேரத்தில் படித்து மனசாந்தி அடையக்கூடியவர்

>>

தங்கேஸ்/ஒரு சிறிய மின்னல் தீற்றில்

வாசல் நாற்காலிமழையில் நனைந்து கொண்டிருப்பதுநீயே நனைவது போல் இருக்கிறதுபார்ப்பதற்கு மின்சாரம் இழையறுந்த பொழுதுகளில் தான்பின்னி பின்னி மேலேறுகின்றனஇந்த நினைவுகள் யார் வீட்டிலிருந்து வந்தாலும்அழுகைச் சத்தம் முதலில் தொடுவதுஇதயத்தை தானே ஒரு சிறிய மின்னல் தீற்றில்ஜீவலிக்கத் தான்இந்த பூமிஇன்னும் இருட்டாகவே இருக்கிறது மழை …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் -207

வடபுலத்தில், இடையர் குலத்தில் அவதரித்த கண்ணபிரான் அருளிய
பகவத்கீதையைப்போல், தென்புலத்தில் இடையர் குலத்தில் அவதரித்த மகான்
திருமூலர் அருளிய தமிழாகமம் திருமந்திரம். சைவ சமய அறுபத்துமூன்று
நாயன்மார்களில் ஒருவர். திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம்
திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

>>

சரோஜா ராமமூர்த்தி/ நீலா போட்டியிட்டாள்…

மீனாட்சியின் மத்தியானத் தூக்கம், கலைந்ததும் முதன் முதலில் அவசரமாக சங்கரனின் ஜாதகத்தைப் பெட்டி யிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டாள். அன்று சாயங்காலம் டாக்டர் மகாதேவன் வந்தால் சாக்குப்போக்கு ஒன்றும் சொல்லாமல் ஜாதகத்தைக் கொடுத்து வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். ஜாதகத்தை எடுத்துச் சமையலறையில் …

>>

வல்லிக்கண்ணன்/காதலுக்குத் தேவை

அவன் கைவிரல்கள் அவன் முன்னே கிடந்த நோட்டில் சில தாள்களைப் புரட்டின. அவன் எழுதி வைத்திருந்த வரிகள் இப்போதும் அவனுக்கு இனித்தன.
“அசைந்து வரும் அழகே மயக்கம் போல் என் அகம் புகுந்து விட்ட சுந்தரி என் அருமைச் சித்ரா. உள்ளத்தில் உணர்ச்சிப் புயலைக் கிளப்பும் நீ தென்றலென வருகிறாய். அழகு மலர்த்தோட்டம் என விளங்கும் நீ அடி எடுத்து வருகையில் ம

>>

சாவி/கடிதமும் கவலையும்

போஸ்ட்மாஸ்டர் சம்பந்தம் பிள்ளையின் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் ரத்தின முதலியார். ” என்னோடு சண்டை போடுவதற்காகவே இந்த முதலியார் இங்கே குடியிருக்கிறான். போன ஜன்மத்தில் இவன் எனக்குச் சத்துருவா யிருக்க வேண்டும். இப்பவும் சத்துரு. அடுத்த ஜன்மத் திலும் அப்படித்தான் போலும்” …

>>

ஜெயதேவன்/ வயலார் கண்ணீர் சிந்துகிறார்

ஒரு நாள் மரங்களில் இருந்த குருவி முட்டைகளை எடுத்துச் சென்றீர்கள்காடுகண்டு கொள்ளவில்லைஇன்னொரு நாள்குருவி கட்டிய கூட்டை சிதைத்தீர்கள் ஒன்றும் சொல்லவில்லை காடு .உங்கள் அவரைக் கொடிக்கு முட்டுக் தர அந்த மரத்தின்கிளையை வெட்டினீர்கள்விக்கித்தது காடுஇன்னொரு நாள் அறுவை எந்திரத்தை நட்டு வைத்தான் …

>>

எஸ். சண்முகம் கவிதை

நன்றாக உலர்ந்தவிட்ட போதும்கொடியைவிட்டு அகற்றாமல்ஆடைகள் ஒருநொடி பார்க்கையில்காற்றில் படபடப்பதை நிறுத்த வேண்டுமா கொடியிலிருந்த களைந்த ஆடைகளின்சுருக்கங்கள்வாழ்தலில் நேர்ந்த ஒரு அவமடிப்பாக இருக்கலாமோஉதறாமல் விடுத்த நுண் தூசுகள்சட்டை பையில் சேகரமாயிருந்தனவிழிசாத்தி உயரே நிமிர்ந்து திறந்தேன் மேகமிலா கதிரொளிவயதின் ஊற்றுக் கண்ணை ஓளிர்விக்ககறுப்பு வெள்ளைக்குள்சிறுவனொருவன் …

>>

விஞ்ஞானி)/மண்

கண்ணில் விழுந்த மண்துகளின் உறுத்தல்தாங்க முடியவில்லை வீட்டு மருத்துவம்பலன் தரவில்லைமருத்துவரை நாட வேண்டியதாயிற்று கணிசமான வலிக்கும்செலவுக்கும் பின்னரேமண்ணில்லா கண்ணுடன்வீடு திரும்ப முடிந்தது ஆண்டவன் தன்னைமட்டும் ஏனிப்படிபடுத்தி வைக்கிறான்துக்குணி மண்ணால்எவ்வளவு அவஸ்தை எனும் புலம்பல்களுக்கிடையே தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது கேரளத்தில் பேரிடர்கனமழையால் மண் …

>>

வே.கல்யாண்குமார்/ஐயோ! வயநாடே!

தயவில்யோ தேவனே உனக்கு.?வயநாட்டிலே என்னஉன் கணக்கு? தாய் உறங்க அவள்மடியில் மகனுறங்க..தயவின்றியே தலையில் இடி இறங்க..வாய்திறக்கவும் வழியின்றி மலையிறங்க..மலையிறங்க கூடவே மழையிறங்க… மண்ணெல்லாம் உடல் புதைய..நிலமெல்லாம் சரிய..கண்ணில்லையோ தேவனே உனக்கு?கருணை என்ற பெயரெதற்கு உனக்கு? கடவுளின் தேசமே..கண்ணீரின் தேசமாச்சே!தண்ணீரில் மிதக்கும்தருணமே நரகமாச்சே!அழகான …

>>

ஒரு ஆன்மிக சிந்தனை /தொகுப்பு : ஸ்ரீதர் சாமா

(இணையத்தில் படித்தது. பகவான் ரமணர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ) புண்ணிய பாபங்கள் போக எளிய வழி பகவான் ஒரு கோடைக்காலத்தில் மாலை நேரம் காற்றோட்டமாக ரமணாஷ்ரமம் கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் . அன்பர்கள் தொலைதூரத்தில் தெரியும் அருணை மலை அழகை அவர் …

>>

தங்கேஸ்/அழுவது ஏனென்று தெரியாது…

கோப்பையில் ஊற்றிவைக்கப்பட்டிருக்கும் தேனீரைஆளுக்கு ஒரு மிடறுபருகுவதற்காயிருக்கலாம் கை குழந்தை போலகாதுக்கு மேலேஎட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும்முதல் நரைக்காகவும் இருக்கலாம் ஒரு வெள்ளை காகித கப்பல் போலஅந்தி வானில் பறந்து கொண்டிருந்தவெண் நாரையை வெகுநேரம்பார்த்ததற்க்காகவும் இருக்கலாம் அல்லதுமொட்டை மாடியில்நடை பயிற்சியின் போதுஎதுவுமே பேசாமல்நீ என் விரல்களைப்பிடித்துக் …

>>

சண்டே ஸ்பெஷல் டாபிக்/ரங்கராஜன் இ.வி

#முதுமை சென்ற பிப்ரவரி மாதம் எனக்கு 86 நிறைந்து 87 தொடங்கியது. சுமார் 30 வருடங்களுக்கு முன் நான் இத்தனை ஆண்டு காலம் ஜிவித்திருப்பேன் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பியே இருக்க மாட்டேன். 30 வயது முதல் 64 வயது …

>>

செ.புனிதஜோதி கவிதை

பெண்டுலத்தின்ஆட்டம்கடிகாரத்தின் விசையால் நாட்காட்டியின்படபடக்கும் ஓசைகாற்றின் திசையால் அண்டை வீட்டுக்காரியின்ரோஜாச்செடியும்என் வீட்டிற்குள் கிடக்கிறதுநிழலால் வாழ்ந்தேதீர வேண்டும்கட்டாயத்தில்இரு வேறு உயிர்கள் இங்குஎல்லாம் அப்படித்தான்ஒருவரின் கைப்பிடிக்குள்ஒருவரின் வாழ்க்கை சுயம் தேடிநிற்பவையெல்லாம்அல்லாடிக் கொண்டிருக்கிறதுபட்டமாய் பாரபட்சமின்றிவிழுங்க காத்திருக்கிறதுஆறடி மண்.

>>

மா. காளிதாஸ் கவிதை

ஒரு சிறிய கல் அல்லதுஒரு சிறிய தடுப்பு ஏதுமின்றிக்காற்றுக்குப் படபடக்கிறதுஒரு சிறிய கதவு. யாரும் உட்புகவில்லையாரும் வெளியேறவும் இல்லைகாற்றும் நிற்கவில்லை. கைகட்டி நிற்கின்றனவீடும் பொதுவெளியும். காரணமும் காரியமும் அறிந்துசிரிக்கும் தச்சன்தயாராக வைத்திருக்கிறான்மேலும் 365 தாழ்ப்பாள்கள்.

>>

ஷண்முக சுப்பையா/அறிஞர்கள்

நேற்றுவரைஇருப்பது போல்இருந்து வந்தான்.இன்றவன்இல்லவேயில்லை. “மகராசன் ! ஐயோ!போய் மறைந் தான்’என அவனைஅறியா தாரும்தவியாய்தவிக்கின்றார். இன்றுவரைஇல்லாதது போல்இருந்து வருகின்றேன்.நேற்று நான்இல்லவேயில்லை.“நடைப்பிணம்! சீச்சீ!நடமாடித் திரிகின்றான்”என என்னைஅறிந்தோறும்நகையாய்நகைக்கின்றார்.

>>

மகரிஷி ஏழைகளுடன் அடையாள படுத்திக் கொள்ளுதல்/ரமேஷ் கண்ணன்

தாழ்மையான மற்றும் சாந்தகுணமுள்ள மகரிஷி ஏழைகளுடன் அடையாள படுத்திக் கொள்ளுதல். ஒரு நாயிடமிருந்து ஒரு அணிலை காப்பாற்ற முயன்றபோத தற்செயலாக மகரிஷியின் கழுத்தெலும்பு உடைந்தது. கழுத்தெலும்பு குணமடைய சிறிது காலம் பிடித்தது. இந்த விபத்தும் கூட அவரை கணிசமாக பலவீனப்படுத்தியது. அது …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 26.07.2024/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 26.07.2024 அன்று வெள்ளிக்கிழமை
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இங்குப் பதிவு செய்துள்ளேன்.

>>

அழகியசிங்கர்/டிவி பார்க்காமல் ஓடுவது எப்படி?…….

(Photo taken by Clik Ravi) நான் டிவி பார்ப்பதற்கு எதிரி இல்லை. ஆனால் ஒருவர் டிவியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பதை நான் வெறுக்கிறேன். டிவி நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது. அது பெரிதும் நம்முடைய வாழ்க்கை முறையைக் …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/தீப ஸ்தம்பம்………

தீப ஸ்தம்பம்…………… கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்ஆசிரியர் கலை மகள்………………. கிராமங்களில் தெருவின் நடுவில், தெரு முக்குகளில் உயரமான கல் தூணில் மேல் பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் தூணில் அந்தக் காலத்தில் நல்லெண்ணெயிலோ அல்லது இலுப்பை …

>>

சரோஜா ராமமூர்த்தி/காமுவின் கண்ணீர்

சங்கரனின் தகப்பனார் நடேச சர்மாவின் குணமும், போக்கும் அலாதியானவை. அவர், எதையும் தன்னுடைய உரிமையோடு செய்யக் கூடிய மனம் படைத்தவர் அல்ல. சம்பாதிக்க வேண்டியது ஒன்றுதான் தன்னுடைய கடமை களில் ஒன்று என்று நினைத்திருந்தவர். அவர் வீட்டில் அவர் மனைவி மீனாட்சி …

>>

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி/ஹரன் பிரசன்னா

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி 2001கள் வாக்கில் மரத்தடி யாஹூ குழுமத்தில் கைக்கு வந்தவற்றை எழுதுவது வழக்கம். அப்போது அந்திமழை.காம் என்றொரு ஆன்லைன் இதழ் இருப்பதே எனக்குத் தெரியாது. என் கவிதை ஒன்றை அந்திமழை என்னும் வலைத்தளம் வெளியிட்டிருப்பதாக நண்பர் ஒரு சொல்லவும், …

>>

சுஜாதா/இன்ன பிற –

முகநூலில் தகவல் : ராம் ஸ்ரீதர் மண்புழுக்கள் காமவெறி பிடித்தவைகள் என்று எங்கோ படித்த ஞாபகம்…அப்படியா? – ஆர். ஸ்வர்ண சுபா, திருநெல்வேலி-11சுஜாதா : அப்படி இல்லை. மண்புழுவுக்கு ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் ஒரே உடலில் இருக்கிறது. அதனால் எப்போது செக்ஸ் வேண்டுமானாலும் …

>>

புதுமைப்பித்தன்/தெரு விளக்கு

தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.நிற்கும் கல் …

>>

அசோகமித்திரன்/ரிக் ஷா

“அப்பா, அப்பா! ரிஷ்கா! ரிஷ்கா!” என்று ரவி உள்ளே என்னிடம் ஓடி வந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்ஷா ஒன்று போய்க் கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை. “ரிஷ்கா இல்லை. ரிக்ஷா.”ரவி அருகே வந்தான்.“எங்கே சொல்லு – ரிக் …

>>

சசிகலா விஸ்வநாதன்/நினைவு நாள்

நல் நினைவுகளைநிலத்தில் விட்டுசெல்பவர்கள், செவ்வனேசென்று இருப்பர்.தாபம் அவரை ஒருபோதும் தாக்காது.இருக்கும் போதுஇருந்து வாழ்பவர்,மறுமையிலும் அவ்வாறே; வருந்தார்.தீதென அறிந்துதீச்சொல் அறையார்.நினைவு நாள்அனுசரி; தவறில்லை;நயந்து.பயந்தல்ல; அன்னமும்,ஆடையும்,இன்வார்த்தையும், நற்பொருளும்,அளி; உன் தகுதியில், அவர்க்கு.எடுப்பதில் முனைவர்க்குகொடுப்பதிலென்ன மனநிறைவு;உனக்கு? வருடம்இரு முறைதம்பியர்,தங்கையருடன்சேர்ந்து நீத்தோர்நினைவில் நீந்தி,இன்புற்று இருக்க உன்னால் முடியுமெனில்அதுவே …

>>

அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்….

எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன். பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்தது. அப்துல்கலாம் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மரணம் அடைந்து விட்டார் என்ற துக்கச் செய்தியை அறிய நேர்ந்தது. சமீபத்தில் ஒ

>>

ஜெ.பாஸ்கரன்/தனிமை!

திருமணமாகி மூன்று மாதங்களில் பாரிஸில் மூன்று மாத டெபுடேஷன். மனைவியை உடன் அழைத்துப்போக கம்பெனியின் சட்டங்களில் ஓட்டைகளில்லை! கைக்காசு போட்டு அழைத்துப்போக, இன்னும் இரண்டு, மூன்று ப்ரமோஷன் வர வேண்டும். சனி ஞாயிறுகளில் நேரம் போவதே மிகவும் சிரமம். இரண்டு முறை …

>>

ஜெ.பாஸ்கரன்/டொராண்டோ டைரி 4.

டொராண்டோவிலிருந்து காரில் ஐந்து மணிநேரப் பயணம். நயாகரா அருகில் கனடா – யூ எஸ் பார்டரைக் கடந்து சுமார் 480 கி மீ சென்றால், பெனிஸில்வேனியா மாகாணம் வருகிறது. அதன் கிழக்குப் புறநகரில் பிட்ஸ்பர்கின் அமைதியான சூழலில் அமைந்துள்ளது ‘பென்ஸ் ஹில்’. …

>>

புனித ஜோதி கவிதை

ஓடி,ஓடிதேடி அலைந்தபிறைதன்னில்பௌர்ணமியைக்கண்ட பெருமிதம்… ஒற்றையடிப்பாதைதன்னில்இரு திசைகள்உணர்ந்ததருணம்… ஒரு இருண்மையைகைப்பிடித்துநடக்கையில்தன்னிலிருந்தேபுறப்பட்டக்கலங்கரைவிளக்கம் இங்கேபாதைகள்எல்லாம்நமக்குள்பார்க்கும் விதத்தில்ஆயிரம் ஓட்டைகள்

>>

சாவி/கலியுகக் கர்ணன்

பாலகோபால் வசித்து வந்த தெருவின் கோடியில் வெகு நாளாக ஒரு வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அதைச் சாதாரண வீடு என்று சொல்ல முடியாது. ஏறக்குறைய ஓர் அரண்மனையைப் போலவே இருந்தது. பாலகோபால் அந்த வீட்டை விலைக்கு வாங்குவதற்காக அதன் சொந்தக்காரர் யார் என்பதைப்பற்றிப் புலன் விசாரித்துக்

>>

சசிகலா விஸ்வநாதன் என்பா

அழகிய சிங்கரின் என்பா எண்ணம் போல் உண்ண வேண்டும். அதுவே ஒருவர்க்குபேரின்பம் தரும். எண்ணிய வண்ணம்உண்ணார்க்கு ஏதின்பம்? விருந்தும் அவர்க்குமருந்தே.

>>

சரோஜா ராமமூர்த்தி/ தை பிறந்தது

உழைப்பின் உழைப்பின் பலனை அனுபவிக்க விவசாயிகள் அந்தத் திருநாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் பெற்ற சேயை அன்புடன் தழுவிக் கொள்வதுபோல் அந்தக் காலை நேரத்தில் வயலில் பழுத்துச் சாய்ந்திருக்கும் நெற்கதிர்களை விவசாயிகள் ஆசையுடனும் பெருமையுடனும் பார்த்துச்

>>

என்னமோ போடா பென்னேசா

மத்திய அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாததால் எங்களால் ஒன்றும் பேசமுடியாமல் போனது என்று ஒரு தமிழக அமைச்சர் பேசியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் காலங்களில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலமும் இந்தியும் அறியாத பல அமைச்சர்கள் டெல்லிக்கு வந்து …

>>

விஞ்ஞானி/சார்லி சாப்ளின்.

மழை பெய்துக் கொண்டிருந்ததுஇவனுக்காக அழுவது போல. திண்ணையில் நின்றபடிமழையைபார்த்துக்கொண்டிருந்தான்வீட்டிற்குள் அழுகை சத்தம்இவன் அழவில்லைஇவன் ஆண்மகன்.அதனால் அழவில்லைஆனால் அழவேண்டும்போலிருந்தது சார்லி சாப்ளின்மழையில் நனைந்தபடிபிறருக்கு தெரியாமல்அழுவேன் என்றதுநினைவுக்கு வந்தது. சட்டென தெருவில் இறங்கிமழையில் நனைந்தபடிநடந்தான் சில அடிகள் வைப்பதற்குள்பின்னால் சத்தம்.திரும்பி பார்த்தான்அவன் அம்மாஇவன் தலைக்கு …

>>

எஸ் வி  வேணுகோபாலன் /தாய்நாடும் தாயும்

தயார் நிலையில்இருக்கிறதுஇராணுவம் என்றுமக்களுக்குத்தொலைக்காட்சி செய்தியில்தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அதிபர் ஒருவர் கண்ணீர்துடைத்துக் கொள்கிறாள்ஓர் அன்னை எல்லைக்குஇரண்டு பக்கம் இருக்கும்சிப்பாய்களுக்காகவும்!

>>

எம்.எஸ்.விஸ்வநாதனை முதலாளியிடம் அழைத்துச் சென்றார்…/உதயேந்திரன்  அண்ணாச்சி

ஜுபிடர் பிக்சர்சார், கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். குத்தகை காலம் முடிவுக்கு வந்தது. ஊழியர்களை ஜுபிடர் அதிபர் அழைத்து, அனைவரது கணக்குகளையும் முடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அப்போது எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதனை முதலாளியிடம் அழைத்துச் சென்றார். …

>>

தொகுப்பு : ஸ்ரீதர் சாமா/ஒரு ஆன்மிக சிந்தனை

பகவான் ஒரு கோடைக்காலத்தில் மாலை நேரம் காற்றோட்டமாக ரமணாஷ்ரமம் கிணற்றடியில் அமர்ந்திருக்கிறார் . அன்பர்கள் தொலைதூரத்தில் தெரியும் அருணை மலை அழகை அவர் விவரிப்பதைக்

>>

தினமும் அம்மன் 7

நன்றி : தினமலர் அல்லல் தீர விரத்தியால் வாழ்க்கை கசக்கிறதா. நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலுக்கு வாருங்கள். பழைய ஆற்றின் கரையில் உள்ளபடி ஈஸ்வரன் கோயிலில். சுந்தரேஸ்வரருடன் அழகம்மாள் இருக்கிறாள்.ஆடி வெள்ளி அன்று இங்குவிளக்கேற்றினால் உடல் நலம் சிறக்கும்.விருப்பம் நிறைவேறும். குறை …

>>

மினி கதை 2/அழகியசிங்கர்

அவசரம்.. காலையில் அவசர அவசரமாகக் காரை எடுத்துக்கொண்டு சியாமளா கிளம்பினாள்.அவள் அம்மாவிற்கு எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தவுடன். சியாமளா காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். தன் கணவனிடம் பையனைப் பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு கிளம்பினாள். அவள் அம்மா இருக்குமிடம் …

>>

சாவி/பூங்காவனம்

பூங்காவனம் இருந்த கிராமத்திற்குப் பக்கத்தில் பட வேடு என்றொரு பெரிய கிராமம் இருந்தது. அங்கே காளி கோவில் ஒன்று உண்டு. அந்தக் காளி கோவிலின் முன்பு வருஷா வருஷம் வெகு விமரிசையாகப் படவேட்டம்மன் திருவிழா நடக்கும். தேர் ஊரைச் சுற்றி நிலைக்கு வருகிற வரைக்கும் தாரை தப்பட்டைகளின் சத்தம் காதைப்

>>

வல்லிக்கண்ணன்/உள்ளூர் ஹீரோ

நம்மூர் சின்னப்பண்ணையார் நடித்த அற்புதமான படம்” என்று அச்சடித்த விளம்பரத் தாள்கள் சுவர்களை அழகு செய்தன. தட்டிகளில் மினுங்கின. பஸ்களில் பளிச்சிட்டன.
அவை குறிப்பிட்டிருந்த தேதியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்

>>

நாகேந்திர பாரதி/பூக்களைப் பறியுங்கள்

பூக்களைப் பறிக்காதீர்கள்என்று சொல்லாதீர்கள் இவை பறிக்க வேண்டியபூக்கள் பறித்துக் கசக்க வேண்டியபூக்கள் கசக்கி முகர வேண்டியபூக்கள் முகர்ந்து உணர வேண்டியபூக்கள் உணர்ந்து பகிர வேண்டியபூக்கள் ஆம் , இவைபுத்தகப் பூக்கள் ———-

>>

செ.புனிதஜோதி கவிதை

நீ வளர்த்தரோஜா செடி தான்கேட்டவுடனேவாமலர் தருகிறது? ஐந்து விரல்களுக்குள்ளும்சிறு இடைவெளியும்ஏற்றத் தாழ்வும் உண்டு காற்றுவளைக்கநினைத்த போதுதான்முறிந்துவிடுகிறதுகிளை நதியின் கால்களைஉன் திசைகளுக்கேற்பதிருப்ப நினைக்கிறாய் கொத்த,கொத்தமுதுகை காட்டும்எருமை அல்ல நான் தன் சிறகு காட்டும்திசையில் பறக்கும்சுயம்பு பறவை.

>>

விஞ்ஞானி/இந்தியன் பட்ஜெட்

பட்ஜெட் பற்றியசெய்தியாளர்கேள்விக்கு எப்படி போட்டாலும்துண்டு விழுகிறதுமாத கடைசியில்கைமாத்து வாங்கிசமாளிக்கிறேன்என்றான்இந்திய குடிமகனாய். ()

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

எல்லா வேளைகளிலும்உங்கள் குழந்தைத்தனங்கள்ரசிக்கப்படுவதில்லை… எல்லா பொழுதுகளிலும்உங்களது வேசங்கள்பொருந்துவதில்லை.. எல்லா நாட்களிலும்உங்களுக்கான நாள்அமைந்து விடுவதில்லை.. எல்லா பயணங்களிலும்உங்களின் இலக்குவந்து விடுவதில்லை.. எல்லா மனங்களிலும்உங்களுக்கான அன்புகிடைக்கப்பெறுவதில்லை.. எல்லா முயற்சிகளிலும்உங்களுக்கான வெற்றிகிடைத்துவிடுவதில்லை.. எல்லா எழுத்துக்களிலும்உங்களுக்கான வரிகள்கண்டறியப்படுவதில்லை.. எல்லா நியாயங்களிலும்உங்கள் நியாயங்கள்பேசப்படுவதில்லை.. இந்த கவிதை கூடஎல்லா நேரங்களிலும்பேசப்பட …

>>

எஸ் வி வேணுகோபாலன்/இயற்கை

தன் பிம்பத்தைக்கண்ணாடியில் அல்லநீரருந்தும்ஓடையில் கூடப்பார்த்துக் கொள்ளாதுநடந்து போகிறது வேங்கை யாரும்அடைமொழிகளோடுஅறிமுகம்செய்விக்காமல்பேசத் தொடங்குகிறது கிளிபாடிக்கொண்டிருக்கிறது குயில் அகந்தையோடு அல்லஇயல்பானகம்பீரத்தோடுநடக்கிறது மயில் தன்னை இன்னுமின்னும்வியந்து பார்க்கின்றனர் மனிதர்கள்என்பதறியாதுஇயங்கிக் கொண்டே இருக்கின்றன எறும்புகள் இந்தக் கவிதையைவாசித்துஒன்றும்ஆகப் போவதில்லைஇந்தக் கணம்சன்னல் வழிஎன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்வீட்டு மொட்டை …

>>

வைதேகி./நம்பிக்கை..

நாள்தோறும் பேருந்தில் ஏறியவுடன்மூன்று பேர் இருக்கையில் உடைமைகளைபரப்பியபடி ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கும் பெண்மணிநகர்ந்து இடம் தரும் வரை…நின்று கொண்டிருக்கின்றேன்..என் தோள்பையின் கனத்தையும்புன்னகையின் வீரியத்தையும்என்றாவது ஒருநாள் உணர்த்தி விடமுடியுமென்றபெருநம்பிக்கையை கைப்பிடியாய் பற்றிக்கொண்டு….

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

ஆயினும் அவ்வீட்டு அம்மாளுக்கு மாத்திரம் பாரதியாரிடம் உள்ளன்பு விசேஷமாக உண்டு. நாங்கள் அவ்வீட்டுக்குச் செல்லக் கூடாதென்று பலமுறை வேண்டிக்கொண்டும் கேளாமல் அழையா வீட்டிற்குள் பாரதியார் நுழைந்தார். வீட்டு எஜமான் அவரை வாவென்று அழைக்கவில்லை. பாரதியார் கொஞ்சங்கூட முகவாட்டமும்

>>

ஹீமோபோலியோ பற்றி அச்சமடைய வேண்டாம்/Vasu Devan 

பெரிய அளவில் நோய்கள் வந்த்ததில்லை. இளம் வய்தில் விளையாட்டு வீரன். சிறுவயதில் ஹீமோபோலியோ குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. இது நோய் அல்ல. ப்ரொட்டீன் குறைபாடு. லட்சத்தில் ஒரு ஆணுக்கு குறைபாடு இருக்கும். இதனால் ஆண்கள் பாதிக்கப்படவர்கள். பெண்கள் Carriers. 19ம் நூற்றாண்டு விக்டோரியா …

>>

அழகியசிங்கர்/மினி கதை 1

சங்கர் வழக்கம்போல ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவன் மனம் பரபரவென்று இயங்கியது. ஸ்கூட்டர் வேகத்தை விட மனோ வேகம் அதிகமாக இருந்தது. இன்று எப்படியும் வசந்தாவிடம் தன் உள்ளக்கிடக்கையை சொல்ல வேண்டுமென்று நினைத்தான்.வழக்கமாக பஸ் ஸ்டாண்டில் வசந்தாவைப் பார்த்தபோது, அவள் கேட்ட …

>>

புதுமைப்பித்தன்/கயிற்றரவு

1‘கள்ளிப்பட்டியானால் என்ன? நாகரிக விலாசமிகுந்தோங்கும் கைலாசபுரம் ஆனால் என்ன? கங்கையின் வெள்ளம்போல, காலம் என்ற ஜீவநதி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது… ஓடிக்கொண்டே இருக்கும். தயிர்க்காரி சுவரில் புள்ளி போடுகிற மாதிரி, நாமாகக் கற்பனை பண்ணிச் சொல்லிக்கொள்ளும் ஞாயிறு, திங்கள், செவ்வாய்க் கிழமைகள் எல்லாம் …

>>

சாவி/தங்கச் சங்கிலி

அம்புஜத்தின் பிறந்தகத்திலிருந்து திரள் திரளாக வந்து என் வீட்டில் முகாம் போட்டுச் சௌக்கியமாகச் சாப்பிட்டுக் காலம் கழிப்பவர்கள் அநேகம்பேர். பெயரைச் சொன்னால் அவரவர்களுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்து விடும். மனுஷ்ய சுபாவமே அப்படித்தானல்லவா? அவர்களைச் சொல்லி என்ன பயன்? சாதாரண நாட்களிலேயே …

>>

அலெஜாண்ட்ரா பிசார்னிக் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் கவிஞன் என்பவன்சிறந்த சிகிச்சையாளன் என்றும் கருதப்படுகிறது.அந்த வகையில்கவிதைச் செயல்பாடானது பேயோட்டுதல்,செப்பிடு வித்தை காட்டுதல்ஆகியவற்றோடு கூடுதலாக,பழுது நீக்கும் பணியுடனும்சம்பந்தப்பட்டிருப்பது.ஒரு கவிதையைஎழுதுவது என்பதுஅடிப்படையான காயத்தை,அதன் கண்ணீரை சரிசெய்வதாகும். ஏனெனில் இங்கே நாம் எல்லோருமே காயமடைந்துள்ளோம்.

>>

விஸ்வநாதன் ரமேஷ்/ஆற்றாமை

அலெக்ஸ் இந்ரஜால் காமிக்ஸ் படிக்ககொடுப்பான்கந்தசாமிகால்பந்து கபடிவீரன்சிராஜுதீன் பிரியாணிசாப்ட்ரியா மாப்ளஎன்று அன்புடன்கேட்பான்பரமசிவம்அவன் கடைபொட்டுக்கடலைஒரு கைப்பிடிகூட கொடுப்பான்பாஸ்கர் எனக்குசைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தான்கண்ணன்டேபிளில் தாளம்போட்டுக் கொண்டுமங்கியதோர் நிலவினிலேஅற்புதமாகப் பாடுவான்சுப்புராஜ் தான்அந்த மாதிரிகதைகள் அதிகம்சொல்வான்கல்லா மாங்காஅடிக்க தனி கும்பல்நவராத்திரி சுண்டலுக்குஒரு தனி செட்டுகுளத்தை எல்லோரும்துவம்சம் செய்யநான் …

>>

வல்லிக்கண்ணன்/ மூக்கபிள்ளை வீட்டு விருந்து

மூக்கபிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல் கொடுக்க ஆரம்பித்தது.அது அப்படி விழிப்புற்று அரிப்புதருவதற்கு பத்திரிகைகளில் வந்த சில செய்திகள் தான் காரணமாகும்.சுகமாய் சவாசனம் பயின்று கொண்டிருக்கிற மனசாட்சி சிலபேருக்கு என்றைக்காவது திடும்விழிப்பு பெற்று, குடை குடை என்று குடைந்து, முன் எப்பவோ பண்ணிய …

>>

ஸ்ரீதர் சாமா /யோகி ராம் – ஒரு ஆன்மிகச் சிந்தனை

ஒரு பக்தரின் பல வருடத்திற்கு முந்தைய அனுபவம். அவர் ஸ்ரீ ஞானானந்த கிரி தபோவனம் அடிக்கடி வருவார்.ஒருமுறை வந்து தங்கி விடை பெற்றுச்செல்ல ஸ்ரீ ஞானானந்தரிடம் வந்த போது “இன்னும் ஒரு நாள் தங்கிச் செல்லலாமே,. சாயங்காலம் விசேஷ ஹனுமான் பூஜை …

>>

ரஸிகன் கதைகள்/பலாச்சுளை

தங்கம்மாள் தன் வீட்டின் முன் தாழ்வாரத்தில் பலாப்பழத்தில் இளை எடுத்துக்கொண்டிருந்தாள். நல்ல தஞ்சாவூர்ப் பழம்; சுளை பெரி தாயும், தங்க நிறமாயுமிருந்தது; கூறுக்கு இருபது இருக்கும். வைத்தி நாதய்யர் தன் தகப்பனார் சிராத்தத்திற்கென்று, தஞ்சாவூருக்கு ‘ஈரங்கி’க் இப் போயிருந்தவிடத்தில் அதை வாங்கிக்கொண்டு …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 83

21.07.2024 – ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் பக்கம் இப்படி விமர்சனம் செய்வது சரியில்லை என்று தோன்றியது. பேசியவர்கள் சிறுகதைகளைப் பற்றி ஞானம் உள்ளவர்கள் மாதிரி பேசியது வேடிக்ககையாக இருந்தது.மோகினி : அந்தப் பெண் எழுத்தாளர் சரியான நபர்களைக் கூட்டிக் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.அழகியசிங்கர் …

>>

கலில் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்

ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்புதங்கேஸ் இரண்டாவது அத்தியாயம் ‘’ விதியின் கரங்கள் ‘’ அற்புதமான வசந்த காலம் நிஸான் மலர்களாய்பூத்து குலுங்கிக் கொண்டிருந்தது. அப்போது நான் பெய்ரூட்டில் இருந்தேன்.தோட்டம் முழுவதும் மலர்களாக நிறைந்திருந்தன. பச்சைப்புல் வெளி தரை முழுவதும்பட்டுக்கம்பளம் போர்த்தியிருந்தது. பூமிக்குள் புதைத்து …

>>

தினமும் அம்மன் – 4

நன்றி : தினமலர் திருமணம் நடக்க…. திருமணம் நடக்கவில்லையே என்ற பெண்களின் வேதனையைப் போக்ககி, சந்தோஷமான வாழ்வைத் தரக் காத்திருக்கிறாள் கோவை கோனியம்மன்.முன்பு காடாக இருந்த இப்பகுகுதியை இருளர்களின் தலைவன் கோவன் ஆட்சி செய்தார். அப்போது பஞ்சம் ஏற்பட அம்மனுக்கு பூஜை …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

மனக் குவியலும் இவர்களின்சிறப்புத் திறமையும்! அர்ஜூனன் குரு துரோணரிடம் வில்வித்தை கற்று வந்தான். ஒரு மரத்தில் மேல் வைத்த குறியை மற்ற மாணவர்கள் அடிக்க முடியாமல் தோற்றுப் போனார்கள்.ஆனால், மனதை ஒருமுகப் படுத்தி, அர்ஜூனன் அம்பை எய்தி அதனை அடித்தான். இதனை …

>>

பதுமை சொன்ன கதை – சுஜாதா

முகநூலில் பகிர்ந்தவர்: ராம் ஸ்ரீதர் (சிறு சிறு கதைகள் புத்தகத்திலிருந்து)சிவதாசரின் பதுமை சொன்ன கதைகள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ராஜா விக்ரமாதித்தன் அரியாசனம் ஏறுவதற்கு முன் ஒவ்வொரு படியிலும் உள்ள தங்கப் பதுமை ஒரு கதை சொல்லி அதன் இறுதியில் ஒரு …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். அதன் காணொளிகளும் நவீன விருட்சத்தில் கிடைக்கும். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்றுள்ள 23வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி …

>>

இசை புதிது மாதாந்திர நிகழ்வு (13/7/24)/அழகியசிங்கர்

மாலை 6 30 மணிக்கு ஜூம் மில் ) சிறப்பாக நடந்து முடிந்தது.அம்மனோ சாமியோ என்ற தலைப்பில் .இந்த நிகழ்ச்சியைஉடனடியாக காணொளியில் கண்டுரசியுங்கள். இப்படிக்கு, அழகியசிங்கர்

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/என்ன செய்யப் போறீங்க

உலகின் மூலை முடுங்கெங்கும் ஒலிக்கும் உன்னதக் கேள்விஎன்ன செய்யப் போறீங்க… உதாரணத்திற்கு ஒன்று…கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு …எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க …ஆவேசமாக, அழுகையாக, ஆதங்கமாகஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன…என்ன செய்யப் போறீங்க….அடுத்தொரு பிரச்சினை வரும் வரை ஒலிக்கும்….பிறகும் ஒலிக்கும்… அடுத்தப் பிரச்சினைக்காக … …

>>

செல்லம்மா பாரதி /பாரதியார் சரித்திரம்

கிராமங்களில் ஏழைகளுடைய வீடு காற்றோட்டமில்லா மலும் வெளிச்சமின்றியுந்தான் இருக்கும்; சுகாதார வசதிகளே கிடையா. கிராமத்தில் யாராவது ஒருவருக்குக் காலரா, வைசூரி முதலிய நோய் கண்டால், தொத்து நோய் எல்லா வீடுகளுக்கும் பரவி, மனிதர்களைச் சூறையாடிவிட்டு, அதற்கே சலித்துப்போய் நின்றால்தான் நின்றது! அதைத் …

>>

தினமும் அம்மன் 3

குழந்தை வேணுமா தகவல் : தினமலர் குழந்தை இல்லாதவர்களின் வேதனை சொல்லி மாளாது. அக்குறையை ஈரோடு மாவட்டம். நஞ்சம் மட்டைக்குட்டைகருமாரியம்மன் தீர்க்கிறாள். இவளை ஆடி வெள்ளியன்று தரிசிப்பது விசேஷம். வேப்ப மரத்தடியில் கருமாரியம்மன் சிலையை. வைத்து சிலர் வழிபட்டு வந்தனர் நாளடைவில். …

>>

ப.மதியழகன்/குடை

எனக்கு நனைவது பிடிக்கும்எனவே குடை எடுத்துச்செல்வதில்லைமழை இயற்கையின் அற்புதம்அதற்கா கறுப்புக் கொடி காட்டுவதுபூமி மீது வானம் கொள்ளும்கருணையே மழைநான்கு சுவர்களுக்குள்அடைபட்டுக் கிடந்தாலும்வானத்துக்குக் கீழே தான்நாம் வாழ்கிறோம்மழைக்காலத்தில் மட்டுமேவரும் குடைகளின் திருவிழாமற்ற நேரங்களில்கேட்பாரற்று தூசி படிந்துஓர் மூலையில் உறங்கும்குடைக்கம்பியில் சிலந்திவலை பின்னும்கறுத்த மேகமும்ஈரக் …

>>

எஸ்ஸார்சி/ஜனநாயகம்

அமெரிக்க பூர்வீகக் குடிகள்அரைக் கோடிபேர்அமெரிக்க மொத்த ஜனத்தொகையில்ரெண்டு சதவிதம் இது98 சதவிதம் வந்தேறிகள்சமூகம்தான் இதுஅமெரிக்காவில்326 நிலத்திட்டுகளில்வாழட்டும் அவர்கள்ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்ரிசர்வேஷன் நிலம்.சட்டம் ஒழுங்குநிதி ஆளுகையெனபூர்வீக குடிகளின்அத்தனைப் பிரச்சனைக்கும்மொத்தமாய் அரசாங்கமேபொறுப்புமக்களால் மக்களுக்காகமக்களுடையஎன்ன விளக்கம்தருவார்களோ. கவிதை வாசிப்பு இணைய அரங்கு

>>

ப.மதியழகன்/யானை

குடியிருப்புப் பகுதியில்யானையின் கால்த்தடம்கோவில் யானை போலல்லகாட்டு யானைகள் மூர்க்கமானவையானையைக் குறித்த வதந்திஅப்பகுதி முழுவதும்தீயாய்ப் பரவியதுதினந்தோறும் விதவிதமானபுரளிகள்காத்திருந்த வனத்துறையினரின்கண்ணில் விரலைவிட்டு ஆட்டியதுஅக்காட்டு யானைஎதைத் தேடி வந்திருக்கும் எனஅவர்களால் யூகிக்கமுடியவில்லைமாநிலத்தின் மொத்தகவனமும் அவ்வூரின்பக்கம் திரும்பியதுபெண் யானைக்குமதம் பிடிக்காதுஎன்ற செய்தி சற்றுஆறுதலாய் இருந்ததுஇரவில் நடமாட வேண்டாம்என …

>>

நாகேந்திர பாரதி/கூரைத் தீயில் குஞ்சுகள்

கூரைத் தீயின் ஓரச் சிவப்புவேடிக்கை காட்டியதுவினாடி நேரம்தான் விறுவிறென்று மேலேறிவிழுந்ததும் தெரிந்ததுதீ சுடும் என்று தோல் எரிந்து கரியாகிதுவளும் போது பஞ்சு மிட்டாய் வாங்கி வரும்அப்பா நினைப்போடும்பாடம் சொல்லித் தரும்அம்மா நினைப்போடும்தோளில் தூங்க வைக்கும்தாத்தா நினைப்போடும்பக்கத்தில் படுத்திருக்கும்பாட்டி நினைப்போடும் துடிதுடித்தபடியேதூங்கிப் போனோம்

>>

தங்கேஸ்/நிழல்களின் விளையாட்டு

நிழல்களின் வழியேபாதை கண்டு பயணிப்பவன்நான் நிழல்களில் தான் பேதங்களில்லைஇனம் மதம் நிறம் பால் எனபாகுபாடுகள் இல்லை சில நேரம் குதித்து குதித்து வரும்நிழல்களை பார்க்கும் போதுமனதை பார்ப்பது போலவே இருக்கும் நடனமிடும் சுடரின் நிழல்நடராஜரின் அம்சம் திரியின் நிழல்பேசும் மௌனத்தின் நாவுகள் …

>>

பானுமதி ந/சலன மெழுத்து

அமைதியாக இருந்தது அந்தக் குளம்நான் எறிந்த கல் அலையலையாய்தாத்தாப் பூச்சி பறப்பது போலநடனமிட்டு அதன் சலனத்தின் மேல்எழுதி எழுதி மூழ்கியது.அரசிலைகள் கீழ் நோக்கி வளைந்துஅதைப் படிக்கப் பார்த்தன.மதியின் ஒளியும் அதை ஆய்வு செய்யப் பார்த்ததுமௌன குருவும், அங்கிருந்த பிள்ளையாரும்சிரித்த ஒலி அதன் …

>>

நாகேந்திர பாரதி/ஆவி அணைஞ்சுச்சா

(இன்றைய சொல் புதிது ஜூம் நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள்) குனிஞ்சு படிக்கிறப்போகுப்புன்னு மின்னுச்சாநிமிந்து பாத்தாக்கநெருப்புன்னு தெரிஞ்சுச்சா ஓடக் கிளம்புறப்போஓலைத்தீ தடுக்குச்சாசுத்திக் கரும்புகையாகண்ணைக் கருக்குச்சா கத்திக் குரலெடுக்கதொண்டை அடைச்சிருச்சாதண்ணித் தாகத்தில்நாக்கு வறண்டுடுச்சா வீட்டாரின் நினைப்பெல்லாம்விக்கலாய் வந்துச்சாவெளையாண்ட இடமெல்லாம்கண்ணுக்குள் ஓடுச்சா பக்கத்துப் …

>>

ஆத்மாநாம் /பதில்

குற்றுகர முற்றுகரச் சந்திகளைசீர்சீர் ஆய்ப் பிரித்துதளை தளையாய் அடித்துஒரு ஒற்றை வைத்துசுற்றிச் சுற்றி வந்துஎங்கும் மை நிரப்பிஎழுத்துக்களை உருவாக்கிபொருளைச் சேர்த்துவார்த்தைகள் ஆய்ச் சேர்த்துஒவ்வொரு வாக்கியத்திற்கும்கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்துஏதாவது சொல்லியாக வேண்டும்நமக்கேன் வம்பு

>>

ஆத்மாநாம் /சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்நீங்கள் யாரென்று சொல்லுங்கள்உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்முழித்த முழி முழியையே முழுங்கும் போலநீங்கள் யாரானால் என்னநான் யாரானால் என்னஅனாவசியக் கேள்விகள்அனாவசிய பதில்கள்எதையும் நிரூபிக்காமல்சற்று சும்மா இருங்கள்

>>

மதுவந்தி/அறை காலியாய் இருக்கிறது

அறையில் நான்தனியே இருந்தவரைஅறை காலியாக இல்லை. ஜன்னலை மூடிகதவைச் சாத்திவெளியே வந்தபின்அறை காலியாய்இருக்கிறதெனத்தோன்றியது. காலியாகத்தான்இருக்கிறதாவெனதிறந்து பார்த்தால்மீண்டும் அறையில் நான். அறைக் கதவைச்சாத்தியபின்அறை காலியாகத்தான்இருக்கிறதா?. . 14.06.24.

>>

ஆத்மாநாம்/பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய் போ.பிச்சை பிச்சை என்று கத்து.உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை.எல்லையற்ற பெருவெளியை கடக்கணும்.உன் பசிக்காக உணவு.சில அரிசி மணிகளில் இல்லை.உன்னிடம் ஒன்றுமே இல்லை.சில சதுரச் செங்கற்கள் தவிரஉனக்கு பிச்சையிடமும் ஒருவருமில்லை.உன்னைத் தவிர. இதனைச் சொல்வதுநான் இல்லை நீதான்

>>

ஆத்மாநாம்/அன்பு

அன்பு என்பதேகாண அரிதான உலகில்கொடூரம் அளப்பரியதாக உளதுஊசி ஏறிய அவள் கைவிரலில்ரத்தம் கசிகிறதுதுண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறதுமேலாளன் வருகிறான் அவன்வணிகப் பேச்சோடுசிகித்ஸைக்கு வேண்டியஅன்பு கூடவா இல்லைதுணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றனமனிதன்நிர்வாணமாய்த் திரிகிறான்நகரமெங்கும்அன்பைத் தேடிபயத்துடன்

>>

ஆத்மாநாம்/கண்டிப்பாக

விற்பனைஒரு அழைப்புநீங்கள்ஏதாவது ஒரு இடத்திலாவதுவாங்கியாக வேண்டும்மனைவியைபிள்ளைகளைஇத்துடனில்லாதுகடைகளில் ஏதாவதுஇன்றைக்குஇலக்கியம் ஒரு பொருள்அது உயிரல்லாததுஉயிருள்ள இலக்கியம்இன்றைக குமௌனமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றதுநீங்கள்ஏதாவது ஒன்றைச் சொல்லியாக வேண்டும்

>>

தினமும் அம்மன் 2

தகவல் : தினமலர் குழப்பம் தீர ஒரு செயலை. செய்வோமா…. வேண்டாமா…என மனம் குழம்புகிறதா….. தர்மபுரிக்கு அருகில் உள்ள நல்லம்பள்ளி. ‘கரூர் மாரியம்மனிடம்’ பூவாக்கு கேட்டால் குழப்பம் தீரும்.கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் காலத்தில் உருவான கோயில் இது . முன்பு. …

>>

எஸ் வி வேணுகோபாலன் /காதல் கடத்தி

காஃபி வெறும் பழக்கமல்லவெற்று நடைமுறையும் அல்ல காஃபி ஒரு கடிகார முள் சிலருக்கு –காலத்தைச் சரியாகக் காட்ட வேண்டும்அன்றாடத்தின் ஒவ்வொரு காஃபியும் காஃபி அருந்துவதற்கு அல்லபேச வைப்பதற்குசொக்க வைப்பதற்குநாக்கிலேயே குடியிருப்பதற்குநினைவில் தங்கி வாட்டுவதற்கு விரலில் சுற்றிவிட முடியுமெனப்படும்டாக்கா மஸ்லின் சேலை போலவேஇறுதிச் …

>>

தங்கேஸ்/மீன் குஞ்சுக்களைப் போல

ஒரு சிறிய தேங்காய் சில்லுக்காகபொறியில் அகப்பட்டுசெத்துப் போனபருத்த எலியின் குரு மிளகு கண்கள்இன்னும் மனதிற்குள்உருண்ட படியே தான் இருக்கின்றன வெட்டுப்பலகையில்விறைத்துக் கிடக்கும்கெண்டை மீனின்விரிந்த விழிகளுக்குள்கடல் வண்ணம்தீர்ந்து விடாமல்இன்னும் கொஞ்சம்மிச்சமிருக்கிறது பாதியில் முறிந்து போனஒரு அந்தரங்க கவிதை கூடதொண்டைக்குள் மாட்டிக் கொண்டகெளுத்தி முள்ளைப் …

>>

இராய செல்லப்பா/மேரி டீச்சரும் வெள்ளரிக்காயும்

நின்றும் நடந்தும் (6) எலிமெண்டரி ஸ்கூலில் ஐந்தாவது படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி இது.மொத்தம் ஐந்து ஆசிரியர்கள் இருந்தார்கள். நான்கு பேர் பெண்கள் ஆண் வாத்தியார் நடேசய்யர் மட்டுமே. அவர் கணக்குப் பாடம் நடத்துவார்.பெண் வாத்தியார்களில் மேரி டீச்சர் பிரபலமானவர்.வெள்ளிக்கிழமைகளில் கடவுள் வாழ்த்தாக …

>>

மோகன் ஜி/அந்தி மயக்கம்

சற்று நேரம் அப்படியே நில்லும்ஆதித்யரே!சந்தி பண்ணி முடித்து விடுகிறேன்.கொஞ்சம் காயத்ரியை வாங்கிக் கொண்டுதெம்பாகச் செல்லும் வே! நாளை உதயகாலம் ‘பல்’லென்று விடிவீர் தானே?யுகம்யுகமாய் எரிந்து கொண்டிருப்பதாய்சலித்துக் கொள்ளாதீர்!ஒரு நாள் நீர் உதிக்காமல் போனால்என்னாகும் என நினைக்கவே இயலவில்லை. இருந்த வரை பெற்றோர் …

>>

அழகியசிங்கர்/ மா. அரங்கநாதன் என்ற படைப்பாளி

2017ஆம் ஆண்டு மா. அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் . சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்து கொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள். பேசும்போது உடல் உபாதையைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் …

>>

வல்லிக்கண்ணன்/மனம் வெளுக்க

சிவசிதம்பரம் பெருமூச்சு உயிர்த்தார்.ஒரு பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நெஞ்சு உந்திய நெடுமூச்சுதானா அது..? அல்லது, மேலும் எதிர்நோக்கி நின்ற புதிய பிரச்சினைகளை மனம் அசை போட்டதால் எழுந்த அனல்மூச்சுதானோ என்னவோ!அவர் மகள் கமலத்துக்கு ஒருமட்டும் கல்யாணம் முடிந்து விட்டது.அந்த நினைப்பு …

>>

நாம்/விஸ்வநாதன் ரமேஷ்

:இருக்கிறார்கள்எல்லோரும் இருக்கிறார்கள்எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள்எல்லோரும்மிக கவனமாகஇருக்கிறார்கள்எல்லோரும்மிக மிக கவனமாகஇருக்கிறார்கள்இருக்கிறார்கள்.

>>

ஜெ.பாஸ்கரன்/ டொராண்டோ டைரி 2

டொராண்டோ வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. வந்த காரியமும் ஓரளவுக்கு நலமாகவே முடிந்தது. இறைவனுக்கு நன்றி!முகநூல் நண்பர்களின் ‘பிறந்தநாள் வாழ்த்து’ மழையில் நனைந்து, போன ஜலதோஷம் திரும்ப வந்துவிட்டது. தனிப் பதிவுகளாகப் போட்டு, தன் அன்பைப் பகிர்ந்துகொண்ட நட்புகளுக்கும், டைம் லைனில் …

>>

ஆத்மாநாம்/குளிர் கண்ணாடிகள்

குளிர் கண்ணாடிகளைஅணிந்து கொண்டேன்சாயம் பூசப்பட்ட உலகம்ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.சாயம் பூசப்பட்ட மனிதர்கள்என் கண்களை உற்றுப் பார்த்தனர்ஒருவன் என்னைக் கேட்டான்ஏன் இந்தக் கண்ணாடி..ஆயிரம் காரணங்களைநான் கூற எத்தனித்தேன்உண்மையை அவன் நம்பவேயில்லை.கணணாடியைக் கழற்றி வைத்தேன்உலகம்ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.

>>

செ.புனிதஜோதி/கனவு

நிறைவேறுமா?நிறைவேறாதா?பதற்றத்தைகையில் பிடித்தபடிஅழைத்துச்செல்கிறான்கனவை… நெருக்கடிகள் சூழும் வேளையில்திருவிழாவில் கைநழுவும்குழந்தையைப் போல்தொலைக்க நினைப்பான்.. கொள்கைப் பிடிமான நாளில்கலவி முடிந்துநெற்றியில் முத்தமிட்டுஅணைத்துக்கொள்ளும்தலைவனைப்போல்மகிழ்வான்.. பசியை நிரப்பி விட்டுகலைகூத்தாடியைவேடிக்கை காணும்கனவிற்கு மட்டும்எந்தவொரு வலியுமில்லை விரட்டி அடிக்கமுடியாமல்ஒட்டிக்கொண்டகனவினால்பொதிசுமக்கும்கழுதையாய்மாறியமன முதுகில்மட்டும்எப்போதும்பள்ளம்.

>>