பி. ஆர். கிரிஜா/ஏளனம் !
காரிருளைக் கண்டுவிடிகாலை எள்ளி நகையாடியதாம் !உன்னைக் கண்டு நடுங்குவோர் பல பேர் !என்னைக் கண்டு மகிழ்வார் எண்ணிக்கை எண்ணிலடங்கா !இறுமாப்புடன் மார் தட்டியது விடியல் ;உனக்குத் தெரியுமா, என்னாலே ஜனனம்உன்னாலே தகனம் , அமைதியான பதில்காரிருளிடமிருந்து !விடியல் வெட்கித் தலை குனிந்தது …
>>