விஜி சம்பத்/கனவில் வந்த கணபதி

ஆற்றங்கரை பிள்ளையார் முன்.. “கஜானனம் பூத கணாதி சேவிதம்..” தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்ட பரத் தலையில் மழைச்சாரல். திடுக்கென்று எழுந்தவன்  எதிரில் செம்பில் தண்ணீருடன் நின்றிருந்தாள் வித்யா. “என்ன வித்யா நீ? நம்ம ஊர் ஆத்தங்கரை பிள்ளையார் கனவுல வந்தார்.  விபூதி வாங்கறதுக்குள்ள நீ எழுப்பி விட்டுட்டே” என்றவன் சட்டென்று யோசனையில் ஆழ்ந்தான். “என்ன பரத் யோசனை” “இல்ல.. பிள்ளையார் நெத்தியில  விபூதி பூசி வட்டமா சந்தனம் குங்குமம் வைக்கறதுதானே வழக்கம். ஆனா இன்னிக்கு குங்குமம்  கரைஞ்சு வழிஞ்ச மாதிரி.. வித்தியாசமா இருந்தது. இந்த மாதிரி யார் நெத்தியிலயோ பாத்திருக்கேன்.  ம்.. ம். ஆங்..! அப்பா இறந்தப்ப ஒரு வயசான பாட்டி இப்படித்தான் நெத்தியிருந்து குங்குமம் வழிய, முக்காடு போட்டுகிட்டு ஓரமா நின்னு அழுதுட்டு இருந்தாங்க. நம்ம சொந்தக்காரங்களான்னு கேக்கணும்னு நினைச்சு வேலை மும்முரத்தில் மறந்துட்டேன். இன்னைக்கு அதை ஞாபகப்படுத்தற மாதிரி வந்த கனவுல பிள்ளையார் என்ன சொல்ல நினைச்சிருப்பாரு..!”. கனவு தொடர்ந்திருந்தால்..! “அந்த வயசான பாட்டிதான் உங்கப்பாவைப் பெத்தவங்க. அவங்க மனநிலை சரியில்லாததால உன்னோட தாத்தா, குழந்தையையும் பிடுங்கிட்டு அவங்களை காப்பகத்துக்கு அனுப்பிட்டாருனு பிள்ளையார் சொல்லியிருப்பார்.” 127 வார்த்தைகள்

>>

கரந்தை  இந்து /கணேச லீலை

      ”  என்னாச்சுங்க,   அப்போதில்  இருந்து நம்  வீட்டு  வாசல்  பிள்ளையாரையே வைச்ச கண்டெடுக்காமல் பார்க்கறீங்க”  என்று கேட்டாள் சிவகாமி  தன் கணவன்  சங்கரனிடம்.       ” உனக்கு  நினைவிருக்கா?  அம்மா  எப்போதும்  சொல்வாங்க,  விநாயகர்  தான்  இருப்பதிலேயே எளிமையான  கடவுள். …

>>

ஷைலஜா /விடாது நெருப்பு

டில்லி அருகே அது ஒரு சின்ன ஊர். ஆனால் அந்த ஊர் கோயிலின் பிள்ளையார் மிக சக்தி வாய்ந்தவர். அதுமட்டுமா? “. டேய். கதிரேசா.இது அபூர்வ உலோகத்தில் ஆன பிள்ளையார் .6 கோடிக்கு விலை பேசியாச்சி ..இப்ப ராத்திரி11மணி.விடியறதுக்குள்ள ஆஸ்திரேலியாக்குநாம அனுப்பியாகணும் …

>>

வனஜா முத்துக்கிருஷ்ணன் /பசி தீர்த்த விநாயகர்

“ஏம்பா.. விநாயகா!திடீரென ஒரு நாளு என் கனவுல வந்தே.”  “செல்லம்மா..நீ பாதி நாளு பசியோட இருக்கே! அப்படின்னு சொன்னே.” “நம்ம உடம்புல உசுரு இருக்கற வரை உழைச்சு தான் சாப்பிடனும்னு இருக்கேன்னு சொன்னேன்.” “அப்போ என் கோவிலுக்கு தினமும் வந்து தண்ணீர் …

>>