உமா ஸ்வாமிநாதன்/வானம் தொட்ட விரல்

​அமாவாசை நள்ளிரவு. மயானத்தின் அமைதியை உலைக்களப் புகையும் சுடுகாட்டுச் சாம்பல் மணமும் சூழ்ந்திருந்தன. ​அங்கே அவன் நின்றிருந்தான். யாரிடமும் பேசமாட்டான். அவன் எதுவும் சாப்பிடுவது இல்லை.உடலெங்கும் திருநீறு பூசிய அகோரி. அவனது வலது கை ஆள்காட்டி விரல் எப்போதுமே வானை நோக்கி …

>>

முனைவர் என் . பத்ரி/நதியோரம் ஒரு சாமி

சங்கரன் மிகுந்த சிவ பக்தி உடையவன். அவனுடைய பெற்றோர்களும் அப்படியே. தினம் தினம் ஈசன் கோவிலுக்கு செல்லும் அவனுக்கு பன்னிரு திருமுறைகளும் மனப்பாடம். பொறியியல் பட்டதாரியான அவனுக்கு சமீபத்தில் வேலை கிடைத்தது. என்றாலும் வேலையில் மன அழுத்தம் கூடியது. என்ன செய்வது …

>>

நாகேந்திர பாரதி/சுழியம் என்ற கதையைப் பற்றி

நண்பர் சேது அவர்களும் நானும் வெங்கடேசன் அவர்கள் எழுதிய ‘வேள்பாரி ‘ நாவல் ரசிகர்கள் ஆரம்பித்த ‘ பாரியின் பாணர்கள்’ குழு உறுப்பினர்கள். நண்பர்கள். அவரது கதைக்குப் பரிசு கொடுத்ததற்கு செல்லப்பா சார் அவர்கட்கு நன்றியும் வணக்கமும். சுழியம் என்றால் ஒன்றுமில்லாத …

>>

எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

14/8/26இணையக்கவி அரங்கில்எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள் 1 நடப்புகள் பாம்புக் கடித்து செத்துப்போன தாத்தாமீதம் வைத்துச் சென்றது கிராமத்தில்ஒரு ஓட்டு வீடுஅதனைப்பாதி கபளீகரம்செய்தது நிலம் அளக்கும் சதித் துறைநடந்து நடந்து கால்கள் தேயும் நடப்புகள் நரவலாய்ஆயிரம் செலவு ஆனகதையொன்றில்லைகண்கள் துடைத்து நிற்கும் சதி …

>>

சுபாஷிணி ரமணன்/கங்கை கரையில்

கங்கைக்கரையில் சந்தானமும், முனுசாமியும், அலைந்து திரிந்து விட்டு அந்த மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். “டேய் முனு, எப்படியாவது எங்க அப்பனைக் கண்டுபிடிக்கணும்டா.” “நம்ம ஊர்ல தான, இத்தினி நாளு இருந்தாரு. அங்கல்லாம் விட்டுட்டு இங்க தேடி வந்திருக்கீங்களே! ” சலித்துக் கொண்டான் …

>>

கௌரி சங்கர்/அகோரி அண்ணாசாமி

அகோரி வந்திருக்காராம் நம்ம ஊருக்கு. எல்லோரும் அவரை பார்த்திருங்க. அவர் முன்னால நின்னு அவரை கும்பிட்டுட்டு மனசுல உங்க விருப்பத்தை நினைச்சுக்கோங்க. கையை உயர்த்தி காட்டுனாருன்னா, உங்க விருப்பம் நிறைவேறிடும்னு நினைச்சுக்கோங்க. மறக்காம சுருட்டு ஒண்ணே ஒன்னு அவர்கிட்டே குடுத்திடுங்க.கத்திக்கொண்டே முண்டாசுப்பட்டி …

>>

வசந்தா கோவிந்தராஜன்/மகனா, மகானா

அவனைப் பார்த்ததும் ரேவதிக்குப் பரபரப்பு. நான்கு வருடங்களாக இவனுக்காகக் காத்திருக்கிறாள். அவன். மகேஷ்வரன். அத்தை மகன். பொறுக்கி என்று ஊரே சபித்த வேளையிலும் இவளால் அவனைத் தன் மனத்திலிருந்து தூக்கி எறிய முடியவில்லை. அந்த நாள் அவள் நினைவுகளில் இன்னும் சிப்பிக்குள் …

>>

அழகியசிங்கர்/சித்தர்

அவன் ஆராய்ச்சி மாணவன். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சித்தி அடைந்த யோகி ராம்சுரத் குமார் பற்றி அவன் புத்தகம் எழுதி இருக்கிறான்.அது இன்னும் பரபரப்பாக விற்றுக் கொண்டிருக்கிறது. யோகியாரைச் சந்தித்த அனுபவத்தை எழுதி இருப்பான்.இப்போது திருவண்ணாமலைக்கு திரும்பவும் வந்திருக்கிறான்.திருவண்ணாமலையில் எல்லா இடங்களையும் …

>>

சரியா பரமா? – ஸ்ரீராம்

பரமன் வரைந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு ஆளாளுக்கு ஒரு கருத்து கூறிக் கொண்டிருந்தார்கள். சிலர் அவனை சிவன் என்றார்கள். சிலர் அவனை சித்தர் என்றார்கள். சிலர் அவனை பித்தன் என்றார்கள். ஆளாளுக்கு ஒரு கருத்து கூறிவிட்டு சரியா என்பதுபோல் பரமன் முகத்தை பார்த்தார்கள். …

>>

மாம்பாக்கம் நாணா/பித்தன்

சாம்பலை உடலெங்கும் பூசியபடி, வெறித்த கண்களுடன் அமர்ந்திருந்தார் அந்த அகோரி. ஊரார் அவரை ஒரு பித்தன் என்று எள்ளி நகையாடினர். கையில் பிடித்திருந்த சுருட்டின் புகையை ஆழமாக இழுத்து வானத்தை நோக்கி ஊதினார். அவரது வலது கை சட்டென உயர்ந்து, ஒரே …

>>

லீலா ராமசாமி/அவனன்றி அணுவும் அசையாது

சத்திரத்தின் திண்ணையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தார் அந்தப் புதிய சாமியார். அவர் ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைக்க, அருகிலிருந்தவர் முகம் சுளித்தார். “ஏஞ்சாமி! ருத்ராட்சக் கொட்டையும் விபூதிப்பட்டையுமா சிவப்பழமா இருந்துகிட்டு, அந்தச் சிவத்தையே மறக்கடிக்கிற, அறிவை மழுங்கடிக்கிற இந்தக் …

>>

வனஜா முத்துகிருஷ்ணன்/பூச்சாண்டி

நெற்றி நிறைய விபூதிப் பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்து, சிவந்த தன் கண்களை உருட்டிக் கொண்டே வந்தவரைப் பார்த்து அந்த ஊரே அஞ்சியது. ‘யாருடி இவரு?பாக்கவே பயங்கரமா தலைய சாய்ச்சுகிட்டு நடக்கறாரு.’?என்று அவரைப் போலவே நடந்து கேலி செய்த கண்ணம்மா …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/புண்ணியகோடி

” ஏன்ட்டீ, டீ வச்சா சொல்ல மாட்டியா. ஆறி அவலாப் போச்சு. வரவர இந்த வீட்ல சாப்பாடு கூட ஏனோதானோன்னு பண்ண ஆரம்பிச்சுட்டே. எந்த நேரமும் மைபைலு, ஸீரியலுனுட்டு” பங்கஜத்தைத் தாளித்தெடுத்தார் அங்குசாமி. ஏதும் காதுல விழாத மாதிரி ஸீரியலில் மாமியார், …

>>

விஜி சம்பத்/மௌனகுரு

ஊருக்கு வெளியே இத்தனை வருடங்கள் யாராலும் கண்டு கொள்ளப் படாதிருந்த அந்தப் பாழடைந்த கோயிலில்நெற்றியில் பட்டை, கழுத்திலே ருத்ராட்ச கொட்டை. சிவந்திருக்கும் கண்கள். சடாமுடியும், விரலிடுக்கில் கனன்று கொண்டிருக்கும் சுருட்டு.இந்தக் கோலத்தில் ஒரு புது சாமியார். எந்தப் பிரச்சனை பற்றிக் கேட்டாலும் …

>>

சுஸ்ரீ/சுக்கா சித்தர்

பனாரஸ் பஞ்சகங்கா காட்.கங்கை அன்னிக்கு என்னவோ ஆரவாரமில்லாமல் ஓடிட்டிருந்தது. அதில் படகுகள் கூட அமைதியா மிதக்கற மாதிரி இருந்தன. சந்திரன் திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்தான்.சிங்கப்பூர்ல நல்லா சம்பாதிச்சு சந்தோஷம இருந்த சந்திரனுக்கு மூணு மாசமாய் மனதில் ஏதோ ஒரு கலக்கம் ஒரு …

>>

பாலசாண்டில்யன்/சாமிக்கண்ணு

​நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் குங்குமப் பொட்டும் துலங்க, கலைந்த தலைமுடியும் அடர்ந்த தாடியுமாக அந்த அரசமரத்தடியில் அமர்ந்திருந்த அவரை ஊர் மக்கள் ‘சாமிக்கண்ணு’ என்று அழைத்தார்கள். ஒரு கையில் புகை சுருளும் சுருட்டு, மற்றொரு கையின் ஒற்றை விரல் வானத்தை நோக்கி …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் – 2

கோவில்களில் சூரியன் சந்திரன் தனி சந்நிதி ஏன் ? நிறைய கோவில்களில் பிரகாரத்தில் நுழையும் போது இடது புறம் சூரிய பகவானுக்கு தனி சன்னதி பார்த்திருப்பீர்கள் . நவகிரக சன்னதியில் பொது பரிகாரமாக இல்லாமல் ஜாதகத்தின் தோஷம் தீர்க்க   சூரியனின் தனி சன்னதியில் பரிகாரம் செய்பவர்கள் சிவப்பு மலர் சாற்றி , கோதுமை தானியம் வைத்து தீபம் வைத்து ஞாயிறு கிழைமைகளில் பூஜிப்பர் . அதை போல் நிறைய சிவன் கோவில்களில் சந்திரனுக்கு தனி சன்னதியும் இருக்கும் நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்து இரண்டாவதாக வருபவர் சந்திரன் .. சூரிய சந்திரரை நம் கண்களோடு ஒப்பிட்டு கூறுவர் .   சூரியன் நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது.  ஆணவத்தையும் கர்வத்தையும் நீக்குபவர் சூரியன் . சந்திரனை புத்தி காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்கின்றனர். பொதுவாக கோவில்களுக்கு செல்லும்போது மனம் ஒன்று பட்டு வழிபட சூரிய பகவானிடம் வேண்டி கொண்டு பின்னர் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் மனம் ஒருமுகப்படுத்தி வேண்டி கொண்டு திரும்பி வரும் போது வலது புறம் உள்ள சந்திரபகவானிடம் நல் புத்தி தரும் படி கூறி வேண்டி கொண்டு வீடு திரும்ப வேண்டும் .  

>>