ஞானக்கூத்தன்/சுசீலாவும் பிறரும்

மௌனியும் சுசீலாவும்தெருவில் நடந்தால்மக்கள் எல்லோரும்சுசீலாவைப் பார்ப்பார்கள்.நகுலனும் சுசீலாவும்தெருவில் நடந்தால்மக்கள் எல்லோரும்சுசீலாவைப் பார்ப்பார்கள்மௌனியும் நகுலனும்தெருவில் நடந்தால்சுசீலா ஏன் வரவில்லை என்றுமக்கள் தெருவில் தேடுவார்கள்சுசீலாவும் தோழியும்தெருவில் நடந்தால்மௌனியும் நகுலனும்வரவில்லை என்றுமக்கள் மகிழ்வார்கள்நானும் சுசீலாவும்தெருவில் நடந்தால் மக்கள்என்னையே பார்ப்பார்கள்எப்படி இவளை இவன்பிடித்தான் என்று.

>>

வைதேகி‌ கவிதை

எதைச் செய்ய வேண்டுமென்றபடிப்பினைஎதையெல்லாமோ செய்து முடித்த பின்கிடைக்கிறது.தொலைத்து விட்டதாய்நினைத்த வாழ்க்கையோதேடி எடுத்துவாழ்ந்து விடுவேனென்றபெருநம்பிக்கையுடன்மௌனமாய் காத்திருக்கிறது.

>>

விருட்சம் நடத்தும் ஞானக்கூத்தன் நினைவுக் கவிதைப் போட்டி

ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். சிந்தனைதெளிவுசிக்கனம்ஆனந்தம்கவிதைஎன்று கூறி உள்ளார். இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும். கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன். கவிதையில் அவர் சாதித்த சாதனைக்கு உயர்ந்த பரிசு கிடைத்திருக்க …

>>

ரேவதி பாலு/குழந்தை வித்வான்!

அனுவின் ஒரே மகன் பத்து வயது அருண். சிறு வயதிலிருந்தே கையில் கிடைக்கும் எல்லாவற்றிலும் தட்டித் தட்டி ஒலி வரவழைப்பது அவனுக்கு பிடித்தமான விஷயம். அவனுக்கு தாள வாத்தியத்தில் ஆர்வம் இருந்தது புரிய வர, அவனைத் தகுந்த குருவிடம் சேர்த்து மிருதங்கம் …

>>

ஜெயராமன் ரகுநாதன்/இன்று எழுந்தது முதல் என்னமோ சுஜாதா நினைவாகவே இருக்கிறது

90 களின் தொடக்கத்தில் சுஜாதா சென்னைக்குடி பெயர்ந்து விட்டார். ஆழ்வார்ப்பேட்டையில் வீடு. ஒரு தெரு தள்ளி கணையாழி கி கஸ்தூரிரங்கனின் இல்லம், மற்றும் கணையாழியின் ஆபீஸ். கிட்டத்தட்ட கௌரவ ஆசிரியர் போல கணையாழி இதழை சுஜாதா மேற்பார்வையிட்டார். அவ்வப்போது இபாவும் வருவார். …

>>