வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

புதுக்கவிதை வரலாற்றில் 1962 விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு காலகட்டம் ஆகும். அதை சாதனைகள் நிறைந்த வருஷம் என்று கூறலாம்.அவ்வருடத்தின் நவம்பர் இதழில் (ஏடு 47) ‘எழுத்து’ நியாயமான பெருமையோடும் மகிழ்ச்சியோடும் எழுதிய தலையங்கத்தின் முக்கிய பகுதியை இங்கே தரவேண்டியது அவசியமாகும். …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

முதல் பாகம் : கோடை 1.2. சாலை ஸ்டேஷனுக்கு வெளியே மாட்டு வண்டிகள் கிடந்த இடத்துக்குச் சம்பு சாஸ்திரி போனதும், வண்டிக்காரர்களில் ஒருவன், “சாமி! வண்டி பூட்டட்டுமா?” என்றான். இன்னொருவன், “அட ஏண்டா சும்மா? எஜமானுக்குத்தான் சொந்த வண்டி பூட்டி நிக்குதேடா?” …

>>

பி. ஆர்.கிரிஜா/சுவர்க்கம் !

அனுதினம் விடியலில்புள்ளினங்கள் இசைமயக்கும் சரசாங்கிசன்னலோர அணிலின் பக்க வாத்திய இசைபனி படர்ந்த புல்லில்நுணல் பாடும் பண்தெருவோர ஆலயநாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்சுவற்றில் பல்லியின்பாவனி ராகம்தென்னை மர உச்சியில் பாளையின் அசைவுசெவிக்கினியசண்முகப்பிரியாஎன் அன்னையின் இனிய ஆபேரிஇதை விட சுவர்க்கம்வேறுண்டோ இப்புவியில் !

>>

அழகியசிங்கர்/இந்த மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழுக்கு நன்றி

சமீபத்தில் ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெ‌ற்ற கவிதைகள் நூல் வெளியீட்டு விழா நடத்தினேன்அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னையில் வசிக்கும் கவிஞர்கள் ஞானக்கூத்தன் கவிதைகளோடு தங்கள் கவிதைகளையும் சேர்த்து வாசித்தார்கள்.அந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.இக்கூட்டத்தைப் பற்றி லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அதன் ஆசிரியர் …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

முதல் பாகம் : கோடை “நிழல் அருமை வெயிலிலே நின்றறிமின் ஈசன்கழலருமை வெவ்வினையில் காண்மின்.” 1.1. ரயிலடி டிங்! டிங்! டிங்!டிணிங்! டிணிங்! டிணிங்!போர்ட்டர் கண்ணுசாமி மணியைக் கீழே வைத்து விட்டுக் கைகாட்டி மேடைக்கு ஓடினான். ‘டக்-டக்’, ‘டக்-டக்’ என்று இழுத்தான். …

>>

சுஜாதா / நகரம்

(இன்று எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாள். அவர் நினைவாக இந்தக் கதை) சுஜாதா: சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன் சென்னையில் 3-5-1935 அன்று பிறந்தவர். எழுபதுகளில் இவருடைய இலக்கியப் பிரவேசம், தமிழ் நடையிலும் கதைகளின் உட் பொருளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் விளைவித்தது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/என் பொம்மை

தென்காசி வீட்டை திரும்பி ஒருதரம் பார்த்தே ஆகவேண்டும்; என்ற நினைப்புடன் தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்; நானும் நாணாவும். அந்த வீட்டை விற்க அண்ணா முடிவெடுத்தது தவறில்லை. விற்பதற்கு முன்னால் நாங்கள் அதை ஒருதரம் பார்க்க வேண்டும்; என்று சொன்னதை தான் அவனால் …

>>

ரமண விருந்து/சிவ.தீனநாதன்

முந்திரிப்பருப்புதான் வேண்டும் (ஆசிரமத்திற்குச் சாப்பிட வர்றவா பாயசத்தில முந்திரிப்பருப்பு இல்லைதான்னு அழறாளோ!) பகவானது அன்பைப் பெற்ற பிராணிகளில் அணில்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை தவறாமல் தினந்தோறும் பகவானது சோபாவை ஒட்டி உள்ள ஜன்னல் வழியே பகவானிடம் வந்து உறவு …

>>

எல்.ரகோத்தமன்/ஒரு துளி காற்று

அப்பாவிற்கு நிறைய சிநேகிதர்கள் உண்டென்று தெரியும். ஆனால் இவ்வளவு நண்பர்களா என்று வியந்து கொண்டது இப்போது தான். தினமும் ஐந்தாறு பேராவது அப்பாவை விசாரித்து விடுகிறார்கள். அப்பா இந்தியா முழதும் நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். சுற்றியும் இருக்கிறார். ஏழெட்டு மொழிகள் …

>>

“அங்கும் இங்கும்”/நெ. து. சுந்தரவடிவேலு

சோவியத் பயனத்தின்போது, நாங்கள் யால்டா என்ற நகருக்குச் சென்றோம். அந்நகரம் அண்மை வரலாற்றில் சிறந்த இடம் பெற்றது, அது கருங்கடல் கரையில் உள்ள அழகிய நகரம்.அந்நகரில்தான், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் முப்பெருந் தலைவர்களின் மகாநாடு நடந்தது. அம் மும்மூர்த்திகள் யார் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கதைகள்

ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அஸௌகரியமாக இருந்த படியால், தனக்கு, ஆஹாரம் வேண்டாமென்று …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 7: விடுதலை ”ஒருகால் விடுதலை யுற்றான்எப்போதும் விடுதலை யுற்றான்” மறுநாட் பொழுது விடிந்தது. சோமநாதய்யர் வீட்டில் சிரார்த்தம், அவடைய பிதாவுக்கு. முத்தம்மா தூரங்குளித்து வீட்டுவேலைக்கு மீண்டு விட்டாள். முத்துசுப்பா தீட்சிதரும், குப்புசாமி தீட்சிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்விருவருள்ளே முத்துசுப்பா …

>>

எல்.ரகோத்தமன்/வெள்ளைக் காகிதம்

இரவு ஒரு வழியாய் கழிந்துவிட்டது. உன்னதமான காலைப் பொழுது புலர்ந்திருக்கிறது. இன்று ராசியான வியாழக்கிழமை: ‘நமஸ்காரம் பண்ணிக்கோம்மா.. அப்பா நேற்றுதான் சொன்னது போல் இருக்கிறது. அதுவும் ஒரு வியாழக்கிழமை. இருபத்திரண்டு வயதில் வாழ்க்கைக் கனவுகளை அரங்கேற்ற மேடையமைத்துக் கொண்ட கோலாகலமான அந்த …

>>

எல்.ரகோத்தமன்/ஓட்டம்

புலியுடன் சென்று கொண்டிருந்தேன். புலி நன்றாகவே இருசக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம் அதன் பிடியில் இருப்பது தெரிந்தது. தைரியமாக பின் அமர்ந்து செல்லலாம். மெல்ல சிவப்பு விளக்கில் தேங்கியது புலி.“ஆமா! இந்நேரத்துக்குப் போறோமே! அவர் …

>>

அழகியசிங்கர்/வகுப்பில் வரைந்த ஓவியம்

அவர்கள் இருவரையும் வரச் சொன்னார் வகுப்பு ஆசிரியர்.அவர்களுக்குப் புரியவில்லை. ஏன் வரச் சொன்னார் என்று.ஓய்வறையில் அவர்களைச் சந்தித்தார் வகுப்பாசிரியர்.“உங்களுக்கு ஒரு குழந்தைதானா?”“ஆமாம்.”“வீட்டில் எப்படி இருப்பாள்”“மற்றக் குழந்தைகள் மாதிரி இருப்பாள்”“அவள் வகுப்பில் பாடங்களைக் கவனிப்பதற்குப் பதில் ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறாள். “அவர்களுக்குத் திகைப்பாக …

>>

எல். ரகோத்தமன்/மரணித்த கைபேசி

இதே நாளில்தான் மூன்று வருடங்களுக்கு முன் ஜிலுவை சந்தித்தேன். அது ஒரு வெற்றிக் களிப்பில் மலர்ந்த நட்பின் தொடக்கம். அந்நட்பின் அடை யாளமாக ஒரு பரிசுப்பொருளை வாங்கியிருக்கிறேன். எப்படியோ என் மூளைக்குள் நுழைந்துவிட்ட ஜிலுவை இன்று சந்தித்தே ஆகவேண்டும். ரகசியமாக வாங்கிய …

>>

நாகேந்திர பாரதி/உலகம் உருண்டை

இந்தப் படத்தில் இருப்பது போல் தான் இருந்தாள் அவள் அப்போது . அப்போது இருவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்கள். அவன் வரைந்த முதல் ஓவியம் அதுதான். ‘ நான் இப்படியா இருக்கேன் ‘ என்று அவள் அடம் பிடித்து …

>>

எல். ரகோத்தமன் /கண்டடைதல்

கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய அந்தப் பெட்டி சற்றே கலையிழந்து தான் காணப் பட்டது. நீள் அரைகோள வடிவ மூடியுடன் கூடிய அந்தப் பெட்டிக்கு வினோதமான வடிவத்தில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. பூட்டை உடைத்துப் பார்க்க பேரவா மனதின் விளிம்பில் ஊசலாடி …

>>

மஞ்சேரி ஈஸ்வரன்/நியாயம்

ரிப்பன் சிலையின் பீடத்தில் அவன் படுத்துத் தூங்கினான். அந்தப் பையனுக்குப் பதினாறு வயதுதான் இருக்கும். குப்பையில் எறிந்த ஒரு கந்தல் சாக்குத்தான் அவனுடைய அரை வேட்டி, அது நழுவிக் கீழே விழுந்துகிடந்தது. அந்த அழகான சிலையோடு சிலையாய் அவன் ஒட்டிக்கிடந் தான். …

>>

பி.ஆர்.கிரிஜா/அபியின் பொம்மை

நீண்ட நாட்களாகவே அம்மாவிடம் ஒரு பொம்மை வாங்கித் தருமாறு அடம் பிடித்துக் கொண்டே இருந்தாள் அபி. அவள் அம்மா அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கையில் காசு இருந்தால்தானே வாங்கிக் கொடுப்பதற்கு. அது இந்த நான்கு வயது அபிக்கு புரிய வாய்ப்பில்லைதான்.அன்றும் …

>>

வினோத செய்தி – 9/எருமை மாடு வாங்குவதற்காக2ம் திருமணம் செய்ய முயன்ற பெண்

லக்னோ, பிப். 25- உத்தர பிரதேசத்தில் எருமை மாடு வாங்குவ தற்காக, முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயன்றபெண், கடைசி நேரத்தில் பிடிபட்டார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தில், ஏழை …

>>

செ.புனிதஜோதி/நிலையாமை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் சுருங்கிப் போனஉறவை கண்டுவருத்தப்படுகிறதுஅன்பியல்… முதுகிலேறி நிற்கும்தனக்கான அடையாளங்களைநோக்கி ஓடஎல்லோரும் சிறகை வளர்க்கும்பறவைகளானோம்என்று சொல்கிறதுவாழ்வியல்… நதியின் ஓட்டத்தில்விழுந்த சருகாயிருந்தால்அடையாளமற்று போவதுஉறுதி என்கிறதுஅனுபவம்.. சொற்களை அடுக்கிஆயிரம் சொன்னாலும்எதுவுமே நிலையில்லை என்னும்உண்மையை மெதுவாய் உணர வைக்கிறதுதத்துவம் …

>>

சௌமியா ரெங்கராஜன்/சொல் எனும் மந்திரம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நம் நா, உதிக்கும் முதல் சொல்லுக்குஏங்கிய உலகம்!நம்மைப் பேசாமலிருக்கக்கடவுகிறது…நம் நா, ஒருவரைப் பேசியேவாழவைக்கிறது!சிலரைப் பேசாமல் வீழ்த்துகிறது…நம் நா, இனிய சொற்கள் கொண்டு மயக்குகிறது!கொடும் சொற்களால் கொல்கிறது…நம் நா, விதைகள் வேரூன்றி விருட்சமாக …

>>

அ.முத்துலிங்கம்/ ரி

வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும், வயிறெரிபவர்களும் செய்த வேலை அது. அந்த வதந்தி அவ்வளவும் உண்மையே.பத்து வயதுப் பையனும் இதுவெல்லாம் தேவையா என்று சிலர் புத்திமதிகள் சொன்னார்கள். இதை பற்பனுக்கும், சிவராசனுக்கும் அல்லவா …

>>

நாகேந்திர பாரதி /காத்திருப்பவள்

வழக்கம் போல் பரபரப்பான காலை நேரம் தான் அவளுக்கு. வீட்டில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் பெற்றோருக்கு வேண்டியன செய்து விட்டு , கையில் ஒலி எழுப்பும் செல்லில் அழைக்கும் அலுவலக அதிகாரியின் அவசரத் தொனிக்கு ஏற்றபடி பதில் அளித்து விட்டு, அந்த அவசரத்திற்குத் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

காந்திஜியும் போலீஸ் அதிகாரியும் ஏறியிருந்த ரயில் பம்பாயை நெருங்கியதும் போலீஸ் அதிகாரி, “உங்களை இப்போது விடுதலை செய்துவிடப் போகிறேன். ஆனால் மெரீன் லைன் ஸ்டே ஷனில் நீங்கள் இறங்கிவிட்டால் நலம். கொலாபா ஸ்டே ஷனில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருக்கிறதாம். உங்களைப் பார்த்தால் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 29வது நிகழ்ச்சி

29வது நிகழ்ச்சி(21.02.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 29வது கூட்டம் இது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆண் கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் …

>>

அழகியசிங்கர்/பருப்பு சாதம்

நான்தினமும் பருப்பு சாதம்இல்லாமல்சாப்பிட மாட்டேன்மனைவியும்என் குறிப்புணர்ந்துபருப்பு சாதம் வைத்துவிடுவாள் அன்றுபருப்பு சாதம் இல்லைசாப்பிட முடியாதுஎன்று எழுந்து விட்டேன் ஒரு மூலையில்போய்உட்கார்ந்து கொண்டேன் பசி வயிற்றைக்கிள்ளியதுஎன்ன செய்வதுதிரும்பவும் போய்தட்டின் முன் உட்கார்ந்தேன் இனிமேல்பருப்பு சாதமேகிடையாது என்றாள் மனைவி

>>

அழகியசிங்கர்/கூட்டம்

நேற்றைய கூட்டத்திற்குஎதிர்பார்த்தசிலர் வரவே இல்லை அவர்கள் கவிதைகள்தொகுப்பில்இருந்ததுதெரிந்தும் எதிர்பார்த்த சிலர்இன்னொரு கூட்டத்திற்குப்போயிருப்பார் அல்லதுசும்மாவேஎதற்குப் போக வேண்டுமென்றுவீம்பில்இருந்திருப்பார் ஆனால்அவர்கள்கவிதைகள் புத்தகத்தில்இடம் பெற்றிருக்கின்றன கவிதைகள்அவர்கள் வரவைஆவலுடன்எதிர்பார்த்து ஏமாந்துபோயிருக்கும்

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் துணை நிற்கிறார்

திரும்பவும்கவிதைகள் எழுதத்துணிந்தேன் ஞானக்கூத்தன் துணைநிற்கிறார் ஏற்கனவே 600 கவிதைகள்எழுதி விட்டேன்இனிமேலும் கவிதைகள்எழுதுவேன் நயத்தை எப்படிகவிதையில் சேர்ப்பதுஎன்று யோசித்தவண்ணம் இருக்கிறேன் ஞானக்கூத்தன்துணை நிற்கிறார்

>>

ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 15

‘ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதைகள்’ – தொகுப்பு: அழகிய சிங்கர். (விருட்சம் – பிப் 25.) 2025 ஜனவரி 15 முதல் 31 வரை முகநூல், வாட்ஸ் ஆப் தளங்களில், கவிஞர் ஞானக்கூத்தன் நினைவாக, கவிதைப் போட்டி ஒன்றை நடத்தினார் …

>>

இந்திரநீலன் சுரேஷ்/பூஜைக்கு வராத மலர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் முட்களுக்கு நடுவே பூத்த புது ரோஜாவைமுந்தி பறிக்கப் போட்டியிட்ட காலம் ஒன்று.பகலில் உறங்கி இரவில் மலரும் அல்லியாகமடை மாற்றிய பின் காவல் இல்லை,வேலியில்லை ; காதலிக்க ஆளும் இல்லை.மனம் காண, மணம் …

>>

இருளும் ஒளியும் /ஸரோஜா ராமமூர்த்தி

பிள்ளை வீட்டார் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டுச் சாப்பிடும் கூடத்தில் ஒரே இரைச்சலும், சிரிப்புமாக இருந்தது. எப்பொழுதும் பிறருடைய குற்றங் குறைகளையே சிலர் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும் ஒரு சிறு குறைகூட அவர்கள் மனதில் படுவதில்லை.“ஆமாம், என்ன …

>>

ஆர்க்கே!/டாக்டர் சிரித்தார்!

நேற்று வீட்டைப் பூட்ட மறந்து போய்விட்டேன். இன்று காலைமோட்டார் பைக் எடுக்கையில்வண்டியின் சாவியை எடுத்து வராமல்கீழே வந்து விட்டேன். நடைப் பயிற்சியில்ஆசுவாசப்படுத்திக்கொள்ளஉட்கார்ந்தபூங்காவின் ஒதுக்குப்புற பெஞ்ச்சில்என் மூக்குக் கண்ணாடியைவிட்டு விட்டேன். காய்கறிக்கடையில்பாக்கி வாங்காததுதண்ணீர் குழாயைமூட மறந்ததுமாத்திரை சாப்பிட மறந்ததுஏனஇப்படியானமறதிகளின் நாட்கள்அதிகமாகிக் கொண்டுவருவது பற்றிஎன்அருமை …

>>

கே.ஸ்டாலின்/தவறவிட்ட கணம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பரிசை வாங்கிக்கொண்டுமேடையிலிருந்து இறங்கியவள்புகைப்படம் எடுக்கத் தவறியதாய்மீண்டும் அழைக்கப்பட்டாள்.விருந்தினர் இன்னொரு முறைசெயற்கை பெருமிதத்தை எளிதாய்முகத்தில் அணிந்துகொள்ளஅவள் உதட்டுச் சுருக்கத்தில்எங்கோ மறைந்திருக்கும்வெட்கப் புன்னகையை மீண்டும்வரவழைக்க முயன்றுதோற்கிறார் புகைப்படக்காரர்.

>>

சிறகா/உயிர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் புரளும் அலையில்சுழன்று சுழன்று தன்னைசுத்திகரித்துக் கொள்கிறதாஇந்த மனம் தெறிக்கும் நீர்த் திவலைகளாகநிலையற்ற வாழ்வின்தேவையற்றவற்றைஉதிர்த்து விடுகிறதாதெறித்துத்தெறித்து இறையிடம்தன்னை முழுமையாகச்சமர்ப்பிக்கக்காற்றில் கரைகிறதுகாற்றில் கரைகிறதுகாற்றில்கரைகிறது ஆத்மா

>>

சசிகலா விஸ்வநாதன்/ உற்றா உறவுகள்

அழகியசிங்கரின் என்பா சரம் 🤙🏽 🤙🏽 🍁ஊடும் பாவும் நைந்தே விட்டது.ஊட்டமான நூலெடுத்துத்தைக்க முயல,பின்னும் பெரிதாய் கிழிசல் ஆனது;வானம் தெரிந்தது தெளிவாய். 🍁ஒட்டுப் போடவும்வகை இன்றி,கிழிசல் அங்கும், இங்கும், எங்கும்;விட்டுத் தொலைக்கவும் மனதில்லை; எனக்கு.குட்டிசுவரிடம் சொல்லி அழுதேன். 🍁 நன்செய் நிலம் …

>>

தங்கேஸ்/கவிதை எழுதுபவன்

கவிதையும் எழுத வேண்டாம்ஒரு மண்ணும் எழுத வேண்டாம்என்றாள் அவள் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனமில்லைஎன்றாள் அம்மாஉருப்படியக ஏதாவது செய்யலாம்என்றார் அப்பாமுதலில் இந்தக் கவிதையைகுப்பைத் தொட்டியில்எறிந்து விட்டு வருகிறேன் என்றுபிடுங்கிப் போனான் பையன்நாயும் தன் பங்கிற்கு லொள் என்றுகுரைத்து வைத்தது வாசலுக்கு வந்தவன்செம்பருத்தியை வ …

>>

தாணப்பன் கதிர்/தீராப் பசி..

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் முடைந்த கீற்றில்உயிர்த்த தெய்வம்காட்சியாக நிற்கிறது.சல்லடையிட்ட புள்ளிகள்தீர்த்திடவில்லைமுடைந்தோரின் பசியினை.வேடிக்கை பார்க்கும்கூட்டத்திற்கொன்றும்குறைவில்லை.பத்தில் ஒருவர்வாங்கியிருந்தாலும்பசியாவது ஆறியிருக்கும்.பித்தம் தெளியா மனங்கள்பார்வைக் கடத்தலில்உச்சுக் கொட்டிப் போனது.சித்தம் இதுவேயெனஇன்னும் முடைந்துகொண்டிருக்கிறாள்.தீர்ந்திடவில்லைஇன்னும் பசி.

>>

தங்கேஸ்/ஓய்வு

பாங்கோதும் ஓசையும்தேவாலய மணிச்சத்தமும்கோவிலின் காண்டாமணிச்சத்மும்ஒட்டு மொத்தமாய் கேட்கசிதறிப்பறக்கின்றன கோபுர புறாக்கள் அது கண்டுசிலையாகிப்போய் சொல்கிறேன் அப்பாடா இப்பவாவது என் கடவுளுக்குஎன்னை விட்டு சிறிது நேரம்ஓய்வெடுக்க தோன்றியதேஅது போதும் எனக்கு

>>

மதுவந்தி /ஒரே ஒரு ஊர்ல

மகனும் மருமகளும்வீட்டு வேலை முடித்துவீட்டிலிருந்து வேலை செய்யஅவரவர் மடிக்கணினியோடுஅவரவர் அறைக்குச் சென்றுவிடமதிய உணவுக்குப் பின்கண்கள் கொண்டு செருக,எனது அறையில் சென்றுபடுத்தேன். விழிப்புக் கொடுத்தபோதுஹாலில் குழந்தைகளின்பேச்சுச் சப்தம்.மெதுவாக எட்டிப் பார்த்தால்ஊஞ்சலில் பேத்தி அமர்ந்திருக்ககீழே பேரன் அமர்ந்திருந்தான்.”நான்தான் பாட்டிஇப்போ கதை சொல்வேன் “பேத்தி சொல்லியபடிஊஞ்சலில் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – இன்று(21.02.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற உள்ளது. கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 29வது கூட்டம் இது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆண் கவிஞர்கள் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/வினையும் விளைவும்

காலைநேர வாகன நெரிசலில் அவசரமாகத் தனது இருசக்கரவாகனத்தை ஓட்டிவந்தான் லோகநாதன். அவனது சிறிய நகலகத்தைவழக்கமாக அவன் திறக்கும் நேரம்; மணி ஒன்பது, அப்போது ஒன்பதுஅடித்து கால் மணி நேரம் ஆகியிருந்தது. வேகமாக அவன் தனதுவண்டியை ஓட்டியபோது திடீரென்று ஒரு நாய் அவன் …

>>

இரா.சீனிவாசன்/இடைவெளி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் உன் வீட்டு வெளிக்கதவும்என் வீட்டு வெளிக்கதவும்அருகாமையிலிருந்தாலும்அவைகளே எல்லைக்கோடுகளாய் அமைகின்றனபார்வையை பரிமாறிக்கொண்டாலும்நேசத்தை பரிமாறிகொள்ளமுயல்வதில்லை.உன்னைச் சார்ந்த நிர்பந்தங்களும்என்னைச் சார்ந்த அழுத்தங்களும்எல்லைக்கோடுகளாய் நின்றுயாசிக்கவும் யோசிக்கவும்வைக்கிறது.

>>

மேரி சுரேஷ்/இன்னுமொரு வாழ்வு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் இன்னும்எங்கேயோஎன் வாழ்வுமீண்டுமாய்மற்றுமொரு பெயரில்வேறொருத்தியால்வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறதுநான் விரும்புவது போல. இருக்கிற இடம் தெரியாமல்நடந்து கொள்கிறாள்நிம்மதியாக. ஏனென்றால்அவள்புத்திசாலி.

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/உயிர்த்தலின் சத்தம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் விச்ராந்தியாய் நின்று கொண்டிருந்தேன்செய்வதற்கு ஒன்றுமில்லைபக்கத்தில் ‘ க்க்ரக்க்… க்ரக்க்…’ சத்தம்திரும்பிப் பார்த்தேன்ஒரு தவளை…. சத்தமிட்டபடியே தாவிக்குதித்தது.உற்றுப் பார்த்தேன்அதுவும் தலைதூக்கி என்னை பார்த்ததுபிறகு அதன் போக்கில்‘க்க்ரக்க்… க்க்ரக்க்…’ சத்தமுடன் நகர்ந்தது.நாலைந்து தாவல்களுக்கு ஒருமுறை …

>>

வ.ரா./மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

4பாரதியாரின் தாயார் இறந்து போனபின், சின்னச்சாமி ஐயர் மறுதாரம் விவாகம் செய்து கொண்டார். அந்த அம்மாள் மூலமாய்ச் சின்னச்சாமி அய்யருக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள். பாரதியாரோ, சமஸ்தானத்துச் சிறு கவிராயர். தம்பியும் தங்கையும் சிறு குழந்தைகள். …

>>

அதிரன்/இடைவேளை

இயந்திரமாய்பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்தேநீர் இடைவேளைமணி சத்தம் கேட்டுஆளுக்கொரு கோப்பை தேநீருடன்புல்த்தரையில் வந்தமர்ந்துசிரித்து மகிழ்ந்துபேசிக் கொண்டிருந்தனர். மீண்டும் மணி ஒலிக்கஇயந்திரமாய் மாறிப்போனார்கள் மகிழ்ச்சி என்பதுபலரது வாழ்வில்ஒரு தேநீர் குடிக்கும் நேர அளவு மட்டுமே

>>

அனுபவம்—-வளவ. துரையன்

மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு. இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன. தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டது ஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோ என்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும். அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது. அதை அனுபவிப்போம்

>>

பி. ஆர்.கிரிஜா/மனித நேயம் !

தினமும் நடை பயிலும் அதே இடம்அதே முகங்கள்ஸ்நேகமாய் புன்னகைமௌனமே மொழிசில நேரங்களில்நீண்ட இடைவெளிக்குப் பின் இன்றுவேறு சிலபுது முகங்கள்பழைய முகங்கள் எங்கே? மனம்அலை பாய்ந்ததுஇருவர் மறைந்த செய்தி இடியென இறங்கியது .நொறுங்கிப் போனது இதயம்புது முகங்களின்கையசைப்புமலர்ந்த புன்னகைஅன்பான உரையாடல்மனித நேயம்உயிர்ப்புடன்இன்றும், என்றும்என்றென்றும் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/சாலைகள்

நீண்டும்,நெளிந்தும்,வளைந்தும்,நிமிர்ந்தும்செல்லும் சாலைகள். ஒன்றிலிருந்து ஒன்றுதொடங்கும்.புதிதாய்ப்பளபளக்கும் சில. முதியவளின் உடலின்சுருக்கம்போல் வீறலாய்ச் சில. தறியில் நெய்திட்டசேலையெனக்கரைகட்டியவை சில. மரங்கள் அணிவகுப்பில்பீடுநடைபோடவட்டமடிக்கும் சில. வாங்கிய கடனுக்கு வட்டிகட்டாதுஉடைந்தமனமெனச் சில. சாலைகளுக்கு முடிவில்லை,மானுடத்தின்தேடலுக்கும.இல்லையே முடிவு.

>>

பஞ்சாபிக் கதைகள்/தொகுப்பு – ஹர்பஜன் சிங், வீழிநாதன் – மொழிபெயர்ப்பு

நானக் சிங்/ சீட்டாட்டப் பழக்கம் “ரஹீம்” ஸப்இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் ஹமீத் வீட்டில் நுழைந் ததுமே வேலைக்காரனுக்குக் குரல் கொடுத்தார். “பஷீரைச் சற்று என் அறைக்கு அனுப்பி வை!”சட்டென்று தம் அறைக்குள் நுழைந்து கோட்டையும் இடுப்புப் பட்டையையும் கழற்றி அவர் கொடியில் …

>>

எஸ்ஸார்சி /உலகம் பலவிதம்

அவன் வீடு கட்ட சென்னையில் இடம் ஒன்று வாங்கினான். முடிச்சூர் அருகேதான். தாம்பரத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் போங்கள் அந்த முடிச்சூர் வரும். அவனால் ஒரு அரை கிரவுண்ட்தான் வாங்க முடிந்தது. அதுவே பெரிய சாதனையாக உணர்ந்தான். அங்கே வீடொன்று கட்டவேண்டும்.’ …

>>

புதுமைப்பித்தன் / செல்லம்மாள்

கலைமகள், மார்ச் 1943 செல்லம்மாள் – 1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.நெற்றியில் வியர்வை …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்மாந்தருக்குள் ஒரு தெய்வம்

சென்னைச் சுற்றுப் பிரயாணத்தை காந்திஜி சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு பம்பாய்க்கு பிரயாணமானார். ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி கொண்டாட்டத்துக்குப் பம்பாய் வந்து விட வேண்டும் என்று பம்பாய் நண்பர்கள் மகாத்மாவுக்குத் தந்தியடித்திருந்தார்கள். எனவே, பம்பாய்க்கு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி மகாத்மா போய்ச் …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 6 : விசாலாட்சிக்கு நேர்ந்த சங்கடங்கள் கோபாலய்யங்காருக்குத் தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதமில்லையென்று தெரிந்த மாத்திரத்தில், விசாலாட்சி வீரேசலிங்கம் பந்துலுவின் மனைவியிடம் தனக்கு வேறெங்கேனும் நல்ல வரன் தேடி வாழ்க்கைப்படுத்த வேண்டுமென்று மேன்மேலும் மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தாள். அதற்குப் …

>>

ஜெயகாந்தன்/குருபீடம்

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.அவன் ஜெயிலிருந்து …

>>

19.09.1971 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த “சோ”வின் கவிதை

இதுதான் கவிதையா? ‘சோ’வின்(கேள்விக்) கவிதை “கவிதை என்றால் என்னவென்று இத்தனை நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது. சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால் என்னவென்று இப்போது புரிந்தது. எழுதுவதை எழுதிவிடவேண்டும்-எதுகை மோனை நடை தாளம் …

>>

ரகு மயில்வாகனன்/அழகு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நெகிழிப்பை கிழிந்து வீதியில் உருளுகிறது கொய்யாதாத்தாவின் விரல் பிடித்து வீதி உலா வந்த சிறுமிஉருளும் கொய்யாவைப் பார்த்து உற்சாகமாகிறாள்சிறுமியின் சிரிப்பைக் கண்ட சிறுவன்னி மரத்தடி பூக்காரம்மாபொக்கைவாய் சிரிப்போடு இரத்த சிவப்பு ரோஜா …

>>

விஞ்ஞானி/கொள்ளிவாய் பிசாசு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் வலியோடு வெடித்த அப்பாவின்கோபம்கெஞ்சிப் பரிதவித்த அம்மாவின்வருத்தம்கொள்ளிவாய் என்றழைத்தநண்பர்களின் ஆதங்கம்புகைவண்டி இவன் என்றமடந்தையரின் கிண்டல்செல்லமாய் சண்டையிட்டமனைவியின் அக்கறைஉடலுக்குத் தீதெனச் சொல்லும்என்னுடைய அறிவுஈதெதற்கும் அசராத நான்ஒரு நாள்நெஞ்சுக் கூட்டுக்குள் புகுந்துதேள் ஒன்று கொட்டபுகைப்பதை விட்டு …

>>

விருட்சம் நடத்திய கதைஞர்கள் கூட்டம் – 108

வெள்ளி(14.02.2025)மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 108 ஜோதிர்லதா கிரிஜா கதைகள் பாகீரதியின் ‘பல்டி’ – மீனாட்சி சுந்தரமூர்த்தி அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே ஓர் அந்தரங்கம் – ரேவதி பாலு மனசு – …

>>

ராம் ஸ்ரீதர்/காதலர் தினம் – சுஜாதா

இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம் காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம்.காதல் …

>>

பெயரிட்டு அழைக்கவும்மி/யோஷி தட்சுஜி

தமிழில் : க.மோகனரங்கன் தயவுசெய்துஎன்னைப் பெயரிட்டு அழைஅருள் கூர்ந்துஎன் குழந்தைப் பருவப் பெயரைச் சொல்லி என்னைக் கூப்பிடுஎன் மீது இரக்கம் கொண்டுமீண்டுமொரு முறைஎன் சிறு வயதுப் பெயரைக் கூறி அழைத்திடுதயவு செய்துகாற்று வீசிக்கொண்டிருக்கும்கடந்தகால நாளொன்றிலிருந்துஎன் பெயரால் அழைக்கவும்தயவுசெய்து என்னைக் கூப்பிடுஎங்கள் வீட்டு …

>>

பி. ஆர்.கிரிஜா/காதலர் தினம் !

வண்ணத்துப் பூச்சிபடபடத்துபச்சிலை மேல்வீற்றிருக்கசெல்லமாய் வருடும்சிறகின் ஓசையில்பச்சிலையும்மெய் சிலிர்த்து நாணத்தில்உடல் வளைக்கவண்ணத்துப் பூச்சியும் ஸ்பரிசத்தில்முகம் சிவக்ககள்ளமில்லா காதல்களியாட்டம் அங்கேஆனந்தமான அரங்கேற்றம் ! 14/02/2025

>>

வே.கல்யாண்குமார்/காதல் இனிது..

நாடகத்தில் ஓவியத்தில்காதல் இனிது.!நடைமுறையில் காண்பதுவோஅநு மிக அரிது.! காவியத்தில்் கவிதைகளில்காதல் இனிது.!காட்சியிலே அனுபத்தில்அது மிகக் கொடிது.! சாதிமதம் இல்லையெனில்காதல் இனிது.!சற்றே நம் வீட்டிலென்றால்..கசக்கும் மருந்து.! அடுத்த வீட்டில்..தெருவிலென்றால்..காதல் இனிது..அதுநமது வீட்டிலென்றால்..ஏற்பவர் அரிது.! ஆண்களுக்கும் பெண்களுக்கும்காதல் பொதுஉடமை!கண்கள் செய்தபாபம் என்றால்..ஐயா அது கொடுமை.! …

>>

விஞ்ஞானி / இன்று காதலர் தினமாம்

இரண்டு காதல் வண்டுகளில்ஒன்றுதேடிவந்த ரோஜாப்பூக்களைஎங்கே காணோம் என்றுகேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று சொன்னது மற்றொன்று. இரண்டு காதல் குருவிகளில்ஒன்றுஏனிந்த பெற்றோர்கள் கவலையில்இருக்கிறார்கள் என்றுகேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று சொன்னது மற்றொன்று. இரண்டு காதல் தும்பிகளில்ஒன்றுஏன் மேல் தட்டு உணவகங்கள்வண்ணத்தில் ஒளிர்கின்றனஎன்று கேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று …

>>

ஆர்க்கே!/கேட்பதெல்லாம்!

ஒற்றைத் துளசிஒற்றைத் துளி அமுதம்ஒற்றைத் துளி கவிதைஒற்றைச் சொட்டுச் சூரியன்ஒற்றைக் கிரண வானவில்ஒற்றை உதட்டுச் சுழிப்புஒற்றை விழிக்குறும்புயாவையும் உள்ளடக்கித் ததும்பும்உன்ஒற்றை அன்பைத் தாயேன்–இன்றைய தானமாய் எனக்கு!–

>>

ம.சக்திவேலாயுதம்/எங்கள் கண்கள் மட்டும்

அன்று அது எப்படியெனஇன்று வரைதெரியவே இல்லை..இன்று இதுஇப்படியெனஅன்று கூடநினைத்ததே இல்லை..என்றும் அன்று போலவோஇன்று போலவோஅமைந்தால் போதுமெனஎங்கள் கண்கள் மட்டும்இன்றும் பேசிக்கொள்கின்றனஎம் சக மொழியைஎம் சகஜ மொழியைஎங்கள் காதலை

>>

சசிகலா விஸ்வநாதன்/காதல் பூத்தது

நீர் விழுந்துநிலம் நெகிழ்ந்தது போல்பண்ணோடு இன்னிசை ஒன்றியது போல்அரும்பாய் இருந்ததுமலராய் மலர்ந்தது போல்காலத்தே பொழியும் சாரல் மழை போல்எவரும் அறியாத தருணத்தில்எவரும் எதிர்பாரா வகையில்;நானும் எதிர்பாரா மனதில்பூக்கிறது ; எங்கள் காதல்.ஒரிரண்டு கண்ணீர் துளிகளில்இரு மனங்களையும் ஒன்றாக்கி!வினோதம் தான்!

>>

நாகேந்திர பாரதி/பயம்

அன்பாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அறிவாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அடக்கமாய் இருக்கிறாய்பயமாக இருக்கிறது அருளாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அழகாகவும் இருக்கிறாய்அதிகம் பயமாக இருக்கிறது

>>

சுரேஷ் ராஜகோபால்/இதய தீபம்

இதய தீபத்தையாரோ தூண்டிவிட்டார்பளிச்சென வெளிச்சம் பரவியதுஇருள் மெல்ல விலகியது. 1 எனக்குள் ஒளி வந்ததுஇத்தனை நாள்அது எங்கிருந்ததோஇப்போதாவது வந்ததே மகிழ்ச்சி. 2 என்னோடு மகிழப் பலரிருக்கமகிழ்ச்சி தளும்பியதுஒளி வெள்ளத்தேஉலகம் மகிழட்டும் . 3

>>

எஸ் வி வேணுகோபாலன்/அன்பின் பெருக்கு

ஒரே ஒரு நாள் அல்லசமூகத்தை நேசிப்பவர்களுக்குஅன்றாடம்காதலர் தினம்இன்றைக்குச் சிறப்பு தினம் அன்பின் திறப்புஅன்பின் சிலிர்ப்புஅன்பின் இனிப்புஅன்பின் பெருக்குகாதலர் தினம் பொறுப்புத் துறப்பு அல்ல, காதல்பொறுப்பின் இணை பகிர்வுபகிர்வின் இணை கொண்டாட்டம்கொண்டாட்டத்தின் இணை மலர்ச்சி, காதல் நூற்றாண்டுகளுக்கு முன்பேஆழ ஊன்றியிருக்கும்சாதீய நச்சு வேரைஓசையின்றிக்கல்லி …

>>

நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 4

டாக்டர் பிரகாஷ்(இது உண்மையில் நடந்த சம்பவம்) சீவீல்தாஸ் என்னும் அந்த இளைஞன் தம் வீட்டில் ஏதோ காரியமாக இருக்கையில் பக்கத்து வீட்டு அம்மாள் வெகு அவசரமாக உள்ளே நுழைந்தாள். “தம்பி! உடனே ஓடிப்போய் பக்கத்தில் உள்ள பிரகாஷ் டாக்டரை அழைத்துக் கொண்டுவா, …

>>

ஏ.என்.எஸ்.மணியன்/ஜெமினி கேண்டீன்

முதற்பகுதி 1950-ஆம் ஆண்டு சென்னை ஆவடியில் காங்கிரஸ் மகாநாடு நடத்த திட்டம்போட்டார்கள் தலைவர்கள். திட்டம் தீர்மானமாகி தமிழ்நாட்டின் சின்னமான கோபுரம், நுழைவாயிலில் மிகப்பெரியதாக சுமார் 200 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்று எண்ணினார்கள். த மிழ்நாட்டுத் தலைவர்கள் அதற்கு ஒரு கமிட்டி …

>>

20. வே. சரஸ்வதி உமேஷ்/ சிக்கனம்

தண்ணீர் குழாயில் நீர் கசிந்து கொண்டிருந்ததுநாளை சரி செய்வோம் ஒத்தி வைத்த மனதிற்கு,குழாயடியில் ஒரு வாளியை வைக்கத் தோணவில்லை..மூன்று நாட்களாய், கட்ட வேண்டிய மின் கட்டணம்,கனவிலும், நினைவிலும் காசு கேட்டு மிரட்டுகிறது..கட்டண உயர்வைக் கடுமையாய் சாடியபடியே சென்றேன்..ஓயாமல் சுழலும் மின்விசிறியும், ஒளிரும் …

>>

19. ஏ எப் எம் றியாட்/சுயமாக இருக்க விடுங்கள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நான் காற்றிலும் கவிதையிலும் வாழ்கிறவன்கரடு முரடுகளில் தேடித் தோற்காதீர்கள். நான் உண்மைக்கும் உழைப்புக்கும்ஊதியம் வாங்குகிறவன் என்னை உதாசீனத்தாலும்ஊழலாலும் களவெடுக்காதீர்கள். நான் பொறுமையாலும் பொக்கிஷத்தாலும் விதைக்கப்பட்டவன்என்னைப் போலிகளாலும் பொய்களாலும்அறுவடை செய்யாதீர்கள். மனிதாபிமானத்துக்கும் மலர்களுக்கும் …

>>

18 தங்கேஸ்/கடைத்தேற்றும் வெறுமை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் வானம் கம்மென்றிருந்ததுதெரு அசையவில்லைவாசலுக்கு முன்புறக் கதவுகள்அடைத்துக் கிடந்தனகூடடையும் பறவைகளும்தங்கள் பயணத்தைமுடித்துக் கொண்டன போலும்ஏழாவது முறையாகப் பார்த்தும்வானில் ஒரு நட்சத்திரம்தென்படவில்லை அவனுக்குஉயிரற்ற பொழுதைச் சபித்தபடிகல்லாகக் கிடக்கிறது மனதுநினைவுகள் தொடும் தூரம் வரைவெறுமை தான் …

>>

17. நாகேந்திர பாரதி/பருவ மாற்றம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் எல்லாமே பக்கத்தில்இருந்ததாய் ஞாபகம் நிலமும் நீரும்நெருப்பும் காற்றும் வண்ணமும் வாசமும்எண்ணமும் செயலும் எல்லாம் புதிதாய்எல்லாம் இன்பமாய் மண்ணை விட்டுவிண்ணை நோக்கி கழுத்தும் நீண்டதுகாலமும் மாறியது

>>

16. ஜெ.பாஸ்கரன்/மழை விட்டது…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் வெளியே மழைச் சத்தம்உள்ளுக்குள் அமைதியான புயல்.சத்தம் ஓய்ந்தது, வந்தான் வெளியே…. நீரற்ற மேகங்களின் விரிசலில்எட்டிப்பார்க்கும் காலைக் கதிரவன். காக்கையின் கழுத்துச் சிலிர்ப்பில்தெறிக்குது ஒரு சிறுமழைச் சாரல். ஈரத்தரையில் வழுக்கிச் செல்லும் நத்தைமுதுகில் …

>>

15. மதுவந்தி /கடலிடம் விடை பெறுதல்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கடற்கரை பார்த்தபின்கால் கூட நனையாமல்வர முடியுமா என்ன? வந்து வந்து பாதம்தொட்டுத் தொட்டுப்போகிற அலைகளில்ஆழ்ந்து நின்றிருந்தேன். வேகமாய் வந்த அலைகள்கால் தொட்டுபோ போவெனச் சொல்லபோகட்டுமாவெனக்கேட்டபடியே நின்றிருந்தேன். மீண்டும் கடலுக்குள்போகிற அலைகள்வா வாவெனச் …

>>

14. பானுமதி ந/ படகுகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் தானே பயணியாய்ச் செல்லும் படகுகள்.எளிய வடிவத்தில் சிறுவன் கைவினைகத்திக் கூர்மையாய் நீர்க் கிழிக்கும் சிலத்துக்கூடைத் தலையை நிமிர்த்திச் சிரித்துஇளமையின் மதர்ப்பில் ஓடும் அவற்றைஏந்திச் செல்லும் ஓடையும் காற்றும்கைகலத்து எக்களித்துக் குறுகும் வடிவாய்சிறு …

>>

13. ராஜ. கிருஷ்ணன்/ சந்ததி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் குறைகள் நீங்கிச்சந்ததி வாய்க்கக்குறி கேட்க,குலசாமிக்குஆடு வெட்டிப்பொங்கல் வைக்கஉத்தரவாயிற்று.வெட்டப்பட்டது ஆடு.இல்லாமல் போனது,சந்ததி….வெட்டப்பட்ட ஆட்டுக்கு

>>

12. ஆ ச கந்தன்/காதலராய் மட்டுமே இருப்பீர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அன்பில் தோன்றுவது காதல்ஆசையில் தோன்றுவது காமம் நெகிழ்ச்சியில் இன்பம் காதல்பொங்கிடும் வெப்பம் காமம் கண்ணீரில் ஆனந்தம் காதல்தன்னலக் கொடூரம் காமம் பார்த்துக் களிக்கும் காதல்தழுவத் துடிக்கும் காமம் முத்தம் கேட்கும் காதல்மொத்தமும் …

>>

11. கருமலைப் பழம் நீ/அதுமட்டும் தான்…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் என்னடா தம்பி கைக்கட்டிஇப்படி நிற்கிறாயே…உனக்குஎன்னதான் வேலை தருவது?யோசித்தவாறே கேட்கிறேன்எழுத படிக்கத் தெரியுமா உனக்கு?இல்லை என்று தலையாட்டுகிறான்வீட்டுவேலை தோட்ட வேலை?அதுவும் தெரியாதா? சரி சரிவேறு என்னதான் தெரியும்?அங்கே கத்தும் மாடுகளைக் கண்டுபொங்கிவரும் ஆனந்தத்தால்…அவன்முகமலர்ந்து …

>>

ஜோதிர்லதா கிரிஜா/போதும் ஸ்கூட்டர் சவாரி

ஞானசேகரனுக்கு அன்று முழுவதும் மனசு சரியாக இல்லை. தமயந்தியைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் என்ன எழுதப் போகிறார்களோ என்கிற கவலைதான். தங்கையைப் பற்றி ஓர் அண்ணனுக்கு இருக்கக்கூடிய இயற்கையான அக்கறையால் மட்டுமல்லாமல் தங்கையினுடையதை முடித்த பின்னர்தான் தன்னுடைய திருமணத்தைப் பற்றி வீட்டில் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/கிழவர்கள் ஒழிக!

ரகுபதிக்கு ஆயாசமாக இருந்தது. ‘என்ன உலகம் இது? என்ன மனிதர்கள்? என்ன அரசாங்கம்?’ என்றெல்லாம் விரக்தியான கேள்விகள் மனத்தில் முளைத்தன.கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்தும் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனுக்குப் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/மனசு

சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்று கொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும் பூரித்துக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாதமாக இருந்தாள். சாவித்திரிக்கு மனசு பொங்கிற்று. ‘அடிப் பாவிப்பெண்ணே, எவனையோ கல்யாணம்னு பண்ணிண்டு …

>>

ஜெய்சக்திவேல் தங்கவேல்/ மாணிக்கப் பரல்கள் – 87

அழகியசிங்கரின் “அப்பாவின் அறை” சிறுகதைத் தொகுப்பு, அவரது எழுத்துலகப் பயணத்தின் முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. விருட்சம் வெளியீடாக வந்துள்ள இந்தத் தொகுப்பு, அழகியசிங்கரின் அடையாளத்தை, வாசகர்களுக்கு உணர்த்துகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், அழகியசிங்கரின் தனித்துவமான கதை சொல்லும் பாணியையும், அவரது …

>>

தமிழ்நதி/குட்டி ரேவதி பதில்

தமிழ்நதி:‘முலைகள்’என்ற உங்கள் கவிதைத் தொகுப்பின் தலைப்பு இவ்வளவு சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டதன் அடிப்படையான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? குட்டி ரேவதி:இப்போது கேரளாவிலிருந்து என்னை நிறைய இலக்கியக்கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே என்னை இலக்கியக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. காரணம், என்மீது இருக்கின்ற அந்த …

>>

ஜி.பி.சதுர்புஜன்-/பரிசு

எப்போதுமே டி.டி.கே ரோடு அவசரகதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ! ஆனால் இன்று அந்த நீண்டு விரிந்த சாலையில் நடுநாயகமாக உள்ள டேக் சென்டர் வாயிலில் கார்களின் முண்டியடிப்பு சற்று அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். வந்திருந்த சிலர் அக்கம்பக்கத்துத் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/ அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையேஓர் அந்தரங்கம்

லலிதா தூங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை. சந்துரு வீட்டை விட்டு ஓடிப்போய்க் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. காவல் துறைக்குத் தெரிவிக்காமல் இரண்டு நாட்கள் தாக்குப் பிடித்தார்கள். அதற்குப் பிறகும் அவன் வராமல் …

>>

நன்றி: ஒன்இந்தியா தமிழ்

முகநூலில் : ஆர்.கந்தசாமி 72 கோடி சொத்துக்களை நடிகருக்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த ரசிகை.. ஆனால் அந்த நடிகர் ரியாக்ஷன்? சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் சிலருக்கும் கோவில்கள் கட்டுவது கேள்விப்பட்டிருப்போம். அதுபோல நடிகர்களின் படம் வெளியாகும் போது …

>>

10.இரா.காசிநாதன்/ அதே பெஞ்ச்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பல நாள்….தூங்கும்என் தாத்தாவைக்கீழே தள்ளி விட்டுவிட்டுபெஞ்ச் மல்லாந்து கிடக்கும் இன்றுபெஞ்சை குப்புறக்கவிழ்த்து போட்டுவிட்டுதாத்தா போகிறார்…. நன்மதிப்புடன்

>>