மதுவந்தி/யானை

காடு விட்டுநதி துறந்துதூய வளிஇழந்துவிரி வானம்இன்றிசுவர்கள் சூழ்ந்துசங்கிலி பிணைத்துநிற்க நேர்ந்தசோகம் விழிகளில்நிரந்தரமாய்…. ( பூபாளம் கீதம் 34 டிசம்பர்24) (மீள் பதிவு.)

>>

நாகேந்திர பாரதி/தலைமுறைகள்

வாழ்க்கையைஅதன் போக்கில் வாழ்ந்து விட்டுபோய்ச் சேர்ந்ததுஒரு தலைமுறை தன் போக்கில் வரவழைக்கமுயற்சி செய்ததுஒரு தலைமுறை யார் போக்கிலோ விட்டு விட்டுகுழம்பி நிற்கிறதுஒரு தலைமுறை

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 28வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 6 பெண் கவிஞர்கள் …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை 169

ஆ.அமிர்தராஜ் மழையும் முள்ளும் இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்இனிக்கிறது என்றுவண்ணத்துப் பூச்சி சொன்னதுமுள் மரத்திடம் இனிக்கிறதா?உன்னை விடக்கூடாதெனதனக்குள் நினைத்ததுஉச்சி முள்ளில் ஓணான் ஒன்று தரையிலிருந்து எறும்புகள்ஒட்டுக்கேட்டன குண்டத்து நெருப்பால் தான் மழை என்றதுமலைமீதிருந்து ஒரு குரல் காற்று வந்து மேலே கொண்டு சென்றதுபடையலாய் இலைகளில் …

>>

குமரித்துறைவன்/விமர்சனம்-விமர்சகன்

வேலைக்காரியைக் குறைசொல்லிமாமியார் அவல் இடிக்கஉமி ஊதி ருசி பார்த்துருசி பார்க்க உமி ஊதிஎஞ்சியதுஉரலும் உலக்கையுமே (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

>>

செ.புனிதஜோதி

பெயர்தெரியாத ஒருத்திஅவள் தலையில்செவ்வரளி சூடிச்செல்கிறாள் அவளுக்குப் பிடித்த அம்மனும்எனக்கு பிடித்த அம்மனும்செவ்வரளிக்குள்சேர்ந்து பயணிக்கின்றனர் இப்போதுஎன் கண்களுக்குள்அம்மனைச் சுமக்கும்பொன்னூஞ்சலாய்.ஆடிக்கொண்டிருக்கிறதுஅந்தச் செவ்வரளி

>>