அன்புச்செல்வி சுப்புராஜூ/மனிதத்தில் மட்டும் ஏனிப்படி?
விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த நான்காம் கவிதை தயக்கமென்பதே அறியாதுஅடுத்தொன்றின் அந்தரங்கத்தினுள்வரம்பு மீறி நுழைந்துஎதுவும் ஒழுங்கல்லஎனக் கூக்குரலிடும் மனிதத்தின்எச்சில் தெறிப்புகள் விழாதவாறுமுகத்தைக் கைகளால்மூடிக் கொள்கிறது அது! சீறும் சினத்தைசிதறவிடாது விழுங்கிட…வடித்த விசத்தில்தோய்த்த கொடுக்குளாய்குரல்வளையை நெரிக்கும் அவமானங்களின் உச்சத்தைவிழுங்க வியலாதுபிதுங்குகின்றன கண்கள்… …
>>