மோகன் ஜி/காத்திருப்பு
பூமுடித்த பொக்கிஷமே!பூத்தொடுத்து பொற்சிலையாய்காத்திருப்பும் யாருக்கென சித்தினியே? சீவிமுடித்து சிங்காரித்துகோவிலுக்கே கூடிச்செல்லநாடும்நல்ல தோழியர்க்கா? பேருவகைப் பெட்டகமாய்தெருப்புழுதி உடற்கப்பஆடச்சென்ற பிள்ளைக்கா? கோலமயிலே! குலவிளக்கேயெனசாலப்புகழ்ந்து மடிசாய்த்தேகாதலுரைக்கும் கணவனுக்கா? நோன்பிருந்து நைந்துருகிபைந்தமிழால் பாடித்துதித்துபக்திசெய்த பரமனுக்கா? பெண்மையினைப் போற்றியிங்குகண்ணியத்தில் உயர்த்திநிதம்சீர்காணுமொரு காலத்துக்கா? மகளொருத்தி இரவினிலும்திகைப்பின்றி நடமாடும்காந்திசொன்ன சமூகத்திற்கா? எதற்கென …
>>