ஜெ.பாஸ்கரன்./ஆஸ்டினில் கல்யாணமும், தவறிய சூட்கேசும்…

டெக்ஸஸ் – ஆஸ்டின் நகரில் கலாவின் அத்தை பேத்திக்குக் கல்யாணம் – குபெர்ட்டினோவிலிருந்து டொரொண்டோ போகிற வழியில் ஒரு நாள் ஆஸ்டினில் தங்கி, கல்யாணம் அட்டெண்ட் பண்ணிவிட்டு, டொரொண்டோ செல்வதாகத் திட்டம்.ஆஸ்டினில் இருந்து டொரொண்டோ செல்ல டைரக்ட் ஃப்ளைட் மதியம் 12 …

>>

வல்லிக்கண்ணன்/அந்த முகம்

அதை அவன் எங்கே எப்போது பார்த்தான்? சந்திரனுக்கு அதுதான் பெரும் குழப்பமாக இருந்தது. அந்த முகம் அவனை சதா அலைக்கழித்துக் கொண்டிருந்தது. விழிப்பு நிலையில் பசுமையான நினைவாக தூக்கத்தில் அழுத்தமான கனவுகளாக.குறுகுறுக்கும் கண்கள். அவனைப் பார்த்ததும் படபடக்கும் இமைகள். இனிய சிரிப்பு …

>>

புதுமைப்பித்தன்/ பயம்

அன்று பொழுது போகவில்லை. தேகாரோக்கியத்திற்குக் கடல் காற்று நல்லதாமே! பீச் ரோட்டில் நடந்து கொண்டே போனேன்.எவ்வளவு தூரம் போனேன் என்று எனக்குத் தெரியாது. கடற் காற்றும் மனவோட்டத்திற்குச் சாந்தியளித்தது. நானும் நடந்துகொண்டே போனேன். ஏறக்குறைய திருவல்லிக்கேணி ரேடியோ ஸ்டாண்டு கூப்பிடு தூரத்தில் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

வருஷப் பிறப்புப் பண்டிகை நெருங்கி வந்து கொண் டிருந்தது. சொல்லி வைத்தாற் போல் புடவைக்காரன் ஒரு மூட்டைப் புடவையோடு சர்மாவின் வீட்டிற்கே வந்திருந் தான். அடுக்கடுக்காகப் பீரோவிலும், பெட்டியிலும் பட்டுப் புடவைகள் மக்கிப் போய்க் கொண்டிருக்கும் போதே மேலும் மேலும் வாங்கிப் …

>>

மாஸ்டர் மெதுவடை/கல்கி

அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,“மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…”என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர் …

>>

வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

‘புதுக்கவிதை’ என்ற பெயர் அநேகருக்குப் பிடிக்கவில்லை, இந்தப் பெயரைக் கண்டு பலர் மிரளுகிறார்கள். கேலி செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை இது சிலருக்கு ஏற்படுத்துகிறது. இதன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்துக் குழப்பம் அடைகிறவர்கள் பலர்.காலவேகத்தில் கவிதைத்துறையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் …

>>

திண்டுக்கல்சமையல்/பாகற்காய் கடும் பிட்லைக் குழம்பு செய்வது எப்படி?

பாகற்காய் கடும் பிட்லைக் குழம்பு செய்வது எப்படி …oo தேவை: MTR குழம்பு மசாலா பொடி – 2 டேபிள் ஸ்பூன், பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் பொடி- 1/4 டீஸ்பூன், சீரகம், உளுத்தம் பருப்பு- தலா 1 டீஸ்பூன், …

>>

டாக்டர் கே.செல்லப்பன் அவர்களுக்கு அஞ்சலி/ரவிக்குமார்

பேராசிரியர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவரும் மகாகவி தாகூரின் ‘கோரா’ என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்ததற்காக 2020 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவருமான டாக்டர் கே.செல்லப்பன் தனது 86 ஆவது வயதில் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/WORDS ARE ENERGY

வேதத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படியோ அப்படித்தான் கேட்பதும். வேதம் ஓதினால் பலருக்குப் புரியாது . ஆனால் புரியாததைக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்றம் . அதர்வண வேதம் சொல்லும் : நீ கோவிலுக்குப் போய் சாமியைப் பார்ப்பே . ஆனால் …

>>

மா.பொ.சி/வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

மதம், அரசியல் கருவி! கிறித்துவ மதத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் ஒரு கருவியாய்ப் பயன்படுத்தினர் ஆங்கிலேயர். இந்தத் திருப்பணியில் வர்த்தக நோக்குடைய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் கல்வித் துறையில் ‘தொண்டு’ புரிந்த லார்டு மெக்காலே போன்ற அறிஞர்கள், சமயத் தொண்டர்களான …

>>

ஷண்முக சுப்பையா/காந்த முனைகள்

தந்தை தன் பாதியைவிட்டுச் சென்றார்நான் என் பாதியைகொண்டு வந்தேன்.பாதியும் பாதியும்கொஞ்சிக் குலாவிடசமகாந்த முனைகளவைஎவ்விதம்எதிர்காந்த முனைகளாய்மாறின என்று நான்எண்ணத்தில் ஆழுமுன்னேஅவைசமகாந்த முனைகளாய் மாறினவே!மாறியது மாறியதே.

>>

ஆர்க்கே!/புரிபடா வாழ்க்கை!

புள்ளி என நினைத்தேன்.முற்றும் எனப் போய் நின்று கொண்டது. விரிசல் என நினைத்தேன்.வேரறுத்தது. விலகாதென நம்பினேன்.விடைபெற்றுப் போனது. இடைவெளியென கருதினேன்.அகழியானது. திரையென இருந்தேன்.கண்ணாடிச் சுவராகிகருங்கல் கோட்டையானது. வெறும் சலனமென இருந்தேன்.மௌனச் சமாதியானது. கடைசிவரையான காப்பு எனஇருந்தேன்.கைவிட்டுப் போனது. இனியெலாம் சுகமென்றானேன்.இன்றிறுதியென்றானது. வெற்றூடலென்றிருந்தேன்.பிரிவொன்றையே …

>>

வ.ரா/மகாகவி பாரதியார்

“என்ன அநியாயம், பார்த்தீர்களா ?” என்றார் நண்பர் கேசவன்.திடீரென்று கேள்வி கேட்டால் யாருக்குத்தான் திகைப்பு உண்டாகாது?போலிக் கவிகளைத் தண்டிப்பதற்குப் பிள்ளைப் பாண்டியன், வில்லிபுத்தூரார், ஓட்டக்கூத்தர் முதலிய வர்கள் இல்லாமையால் ‘எவரும் தேசமெங்கும் புலவ ரெனத் திரியலாமே’ என்ற பாட்டு உங்களுக்கு ஞாபக …

>>