ப.மதியழகன்/பட்டாசு கனவு

எனக்கு புத்தாடைகளில்விருப்பமில்லைபட்சணங்கள் கூடஇரண்டாம்பட்சம் தான்எனக்கு தீபாவளியென்றால்வானத்தில் வெடித்துச் சிதறும்ராக்கெட்டுகள் தான்ஞாபகத்திற்கு வரும்திரும்பும் திசையெங்கும்ஒளி வெள்ளம்நட்சத்திரங்கள் மின்னிமறைவதைப் போலஊரெங்கும் கேட்கும்சற்றும் இடைவெளிவிடாதவெடிச் சத்தம்தலைக்கு எண்ணெய்வைத்த பின்புசாமி படத்தின் முன்புஅம்மா பலகாரங்கள்எடுத்து வைப்பாள்அப்பா புத்தாடைகள்எடுத்து வைப்பார்நான் பட்டாசுகளைஎடுத்து வைப்பேன்பால்யத்தில் தீபாவளியென்றால்விதவிதமாக வெடித்துச் சிதறும்பட்டாசுகள் தான்கனவில் …

>>

சாவி/எதிர்பாராதது

ஜயந்தி பெயருக்கேற்ற அழகு வாய்ந்தவள். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். எனவே, ஆடம்பரமான ஆடை ஆபரணங்கள், நகை நட்டு எதுவும் அவளுக்குக் கிடையாது . ” ’எனக்கென்னத்திற்கு நகை?’ என்பதைப் போல் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டிருக்கும்!அவளுடைய தாயார் இறந்து …

>>

கல்கி /மாந்தருக்குள் ஒரு தெய்வம்

கும்பகோணத்தில் மாமாங்கம்(மகாமகம்) என்னும் திருவிழா பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நடைபெறுகிறதல்லவா? அதுபோல வடக்கே இமயமலைச் சாரலில் உள்ள ஹரித்வாரம் என்னும் ஷேத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ‘கும்பமேளா’ என்னும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.1915ஆம் வருஷத்தில் ‘கும்பமேளா’ உற்சவம் வந்தது. …

>>

பி.ஆர். கிரிஜா/தீபாவளி!

தீபத் திருநாளாம் தீபாவளி!மகிழ்ச்சியாய்க் கொண்டாடும்நன்னாளாம் தீபாவளி!மகாலெட்சுமியின் அருள் வேண்டிவரிசையாய் நீயும் விளக்கேற்று!அக இருள் அகன்று புறமதில்இன்பம் என்றும் நாம் பெறுவோமே!புத்தாடை அணிந்து இனிப்பைச் சுவைத்துகூடியாடி மகிழ்வோமே!பெரியோர் சிறியோர் உ ற்றார் உறவினர் நண்பர்அனைவரும் ஒன்றாய்க்கூடிகண்ணனை வணங்கித் துதிப்போமே!நல்லதை நினைத்து தீயவை களைந்துநற்பணிகள் …

>>

அழகியசிங்கர்/மறுபடியும் பூதம்…

‘நான்தான்’ என்று மெல்லிய குரல் கேட்டதுபோல் இருந்தது. பூதம்.எப்போதோ விட்டுவிட்டோமே பூதத்தை. ஏன் திரும்பவும் வருகிறது பூதம்?“என்ன வேண்டும்?” என்று கேட்டேன்.“எனக்குப் பசிக்கிறது. எனக்கும் டிபன் வேண்டும்?”“உனக்கு வாங்கிக் கொடுத்துக் கட்டுபடியாகாது. சரி சொல்லு.”“முதலில் 20 இட்லி,”கேட்டவுடன் கலவரப்பட்டேன். நான் மினி …

>>

செந்தில் பிரசாத்/தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

கடலோடி தீர்ந்தாலும்மிதவை என மிதந்துதொற்றிக்கொள்கிறது.காற்றோடி திரிந்தாலும்பறவை என பறந்துபற்றிக்கொள்கிறது.பனி பிரதேசம் சென்றாலும்நெருப்பாய் வந்து வெப்பம்கூட்டிக்கொள்கிறது.நினைவுகளில் நிலையாய்நிரந்தரமாய் நிற்கிறது.வண்ணங்களை விடவாழ்க்கையில் என்றுமே“வாழ்த்துகள்”. “அன்பு உள்ளங்களுக்கு

>>

விஞ்ஞானி/இன்னொரு ‘இருந்தாலும்’

இதுவரை தீபாவளியைஎட்ட நின்னு பாத்துதான்பழக்கம்.அதுலயும் சௌகரியங்கள்உண்டுபட்டு புடவை விலைக்கும்பருத்தி புடவை விலைக்கும்உள்ள வித்தியாசத்த பற்றிகவலை பட தேவையில்லை பட்டாசு கொளுத்தறபசங்களோட கூடவே ஓடதேவையில்லை பலகாரம் எப்படியும் நம்மளதேடி வந்திடும் பயப்படதேவையில்லை வாழ்த்துக்களையும்நன்றிகளையும் மாறி மாறிவரிசையா அனுப்பிகைப்பேசியில் மூழ்கி கிடக்கதேவையில்லை அந்நாள் முதல் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின் என்பா அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.கனிவுடன் சொல்கிறது; அனைத்து ஊடகங்களும்,பொருத்தமான வாசகம்; பொருத்தமான நாளில்,எனக்குத்தான் கொஞ்சமும் பொருந்தவில்லை. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.அனைவரும் சொல்கிறார்கள் இன்முகத்துடன்; அனைவருக்கும்.அறிந்தவருக்கும், அவ்வளவாக அறியாதவருக்கும் கூட;நல்ல பழக்கம்தான்; தொடரட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி …

>>

அனங்கன்/எல்லோரும் கொண்டாட!

அரக்கன் பூமித்தாயைத் தூக்கிச்சென்றபோதுஅவளதுகற்புக்கு எந்தக் களங்கமும் இல்லை… காப்பாற்ற வந்த கடவுளால் கர்ப்பமுண்டாகிவிட்டது….எல்லாம் தெரிந்தவனால் எதையும் தடுக்கமுடியவில்லை. தீபாவளிக்கான கதைகள் அவரவர் மனம்போனபோக்கில் இருக்கட்டும்…அதனாலென்ன…கொண்டாடஒரு காரணம் கொண்டாடிவிட்டுப்போகட்டும். வியாபாரம் பெருகி…இல்லாதவர்களுக்குஆண்டுக்கு ஒருமுறையாவதுஊக்கத்தொகையும்…உடையும்கிடைக்கிறதே…ஆயினும் உலகில் போர்இருக்கும் வரைஅரக்கர்களும் இருப்பார்கள்…ஆனால் மீட்டெடுக்கஆண்டவன்தான் வருவதில்லை. மதங்களைத் …

>>

ரவி அல்லது /அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின்என்பா. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அசைந்தாடும் கிளைகள் உதிர்க்கிறது பூக்கள்.உள்ளத்தில் புகைகிறதுஉதிராத மனம்.மௌனத்தால்தான் சிறக்கிறதுநடுக்கடல்.*அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பகைவருக்கு இனிதாக மாறட்டும் வாழ்க்கை.பாதகருக்கு புரிதல் தோதாக சிறக்கட்டும்.விநாயகருக்கும் தும்பிக்கையற்ற முகம் கிடைக்கட்டும்.விளக்கத்தீபம் ஒளிரட்டும் யாவருக்குள்ளும். *

>>

ஏர்வாடி இராதகிருஷ்ணன் கவிதை

வந்து போகக் கூடாதாஎன்றாள்.போவதற்காக ஏன் வருவதுஎன்றேன். வந்து போய் இருக்கலாமேஎன்றாள்.வந்து போய் விட்டால் எங்கிருப்பதுஎன்றேன். நீ வரவே வேண்டாம் போஎன்று போய் விட்டாள்.

>>

அழகியசிங்கர்/இருந்தாலும்…

இப்போதுஎழுதிக் கொண்டிருக்கும்கவிதை95 வது கவிதைஇத்துடன் கவிதை எழுதுவதைநிறுத்தி விடுவேனாநிச்சயமாக இல்லைஎன் குறிக்கோள்1000 கவிதைகள் எழுதவேண்டும்ஏற்கனவே 500 கவிதைகளைப்புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன்இன்னொரு புத்தம்கொண்டுவரஇன்னும் 100 கவிதைகள்வேண்டும்நூறு கவிதைகள் எட்ட5 கவிதைகள்தேவைதேவைதேவைதேவை

>>

ஷண்முக சுப்பையா/அழகு

குழந்தை வண்ண வண்ண மலரி லெல்லாம்வந்தமரும்வண்ணத்துப்பூச்சிஉன் பட்டுமேனியைத்தொட்டுப் பார்க்கஒட்டி வந்தால்எட்டிப் போவதேன்வண்ணத்துப்பூச்சி ! வண்ணத்துப்பூச்சி புழுதியான புழுதியெல்லாம்அளைந்துவரும்குழந்தையேஉன் அருமந்தக் கரங்களால்என் உருவையே மாற்றிடுவாய்ஒருவேளைஎன் உயிரையே எடுத்திடுவாய்ஆதலாலேஎன் அருமந்தக் குழந்தையேஎன்னை நீஎட்டிநின்றே பார்த்திடுவாய்என் அழகையெல்லாம்பருகிடுவாய். ஷண்முக சுப்பையா/வாழ்க்கை – விருட்சம் நாளிதழ்

>>

வினோத் பரமானந்தன்/தீபாவளி

நரகாசூரனைகொன்னதுக்குகொண்டாடுறோம்தீபாவளி ன்ணுபாட்டி சொல்ல… “கொன்னதுக்கு” என்னகொண்டாட்டம்என்ற குழப்பதுடனேகொண்டாடத் தொடங்கினேன்பால்யத்தின் தீபாவளியை … மூணு மீட்டர் துணி எடுத்துமுக்கு கடை டெய்லர் கிட்டகொடுத்துஅடுத்த சில தீபாவளிக்கும்போடுறாப்புலஅளவு குடுத்து…அதுக்காககாத்திருந்ததுஅம்புட்டு சொகம்… தைச்சு வந்த சட்டையைதினம், தினம்வச்ச கண்ணு வாங்காமஅலமாரியிலவச்சு..வச்சு..பார்த்தேனேஅதுவொரு சொகம்… சேர்த்து வச்ச காசுல..விளக்கு …

>>

என் கை நழுவிப் போன க்ராஸ்வேர்ட் விருது/இரா.முருகன்

நண்பர் சாரு நிவேதிதாவின் ‘அவுரங்கசீஃப்’ நாவல் (ஆங்கில மொழிபெயர்ப்பில்) இந்த ஆண்டுக்கான க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்று இறுதிச் சுற்றை அடைந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்ன். சாருவின் நாவல் க்ராஸ்வேர்ட் விருது பெற வாழ்த்துகிறேன். 2016-ம் ஆண்டு க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/தத்துவம் – இனி

கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து …

>>

சுந்தரராஜன்/ ஒரு தவறு செய்தால்

அமெரிக்க சாலையில் அவன் கார் தவழ்ந்து கொண்டிருந்தது. ‘குறை ஒன்றும் இல்லை’ பாடல் எம் எஸ்ஸின் குரலில் இழைந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலின் கருத்து அவனுக்கு என்றைக்கும் தாரக மந்திரம். அந்த உறுதிதான் அவனை இன்று மேகத்தில் பறக்க வைத்திருக்கிறது. அவனது …

>>

புலியூர் அனந்து/எனக்கு படம் வரைய வராது

இது நடந்து இப்ப இருபது வருஷம் இருக்கும்.“அப்பா, எனக்கு கொஞ்சம் இதை வரைஞ்சு தரியா?” என்று தனது சயின்ஸ் புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைக் காட்டிக் கேட்டாள் எனது ஆறாவது படித்துக் கொண்டிருந்த என் மகள்.சரியாக அப்போதுதான் யாரோ ஒரு சாவு …

>>

இரா.முருகன்/வைக்கோல் கிராமம்

எந்த நாளில்? சொன்னாள். அவள் கூறிய நாள் வெட்டுக்கிளிகள் மலைச்சாரல் ஊரை அழித்த தினம்.அவர்களில் இரண்டு பேர் அணிந்த உடைகளே நான் அணிந்திருப்பது.அவள் சிரித்தபடி சொல்ல நான் அரண்டு போய்ப் பார்த்தேன்.. இந்த உடைகளுக்கு உள்ளே வெட்டுக்கிளிகள் ஊர்ந்து சதையைப் பிய்த்தெடுத்து …

>>

லா. ச. ராமாமிருதம்/அரவான்

குழந்தையின் வீறலைக் கேட்டு, கிணற்றின் பிடிச்சுவரின் மேல் தவலையுடன் தாம்புக் கயிற்றை அப்படியே போட்டு விட்டு, உள்ளே ஓடிவந்து குழந்தையை வாரினான். பொங்கி வழியும் வியர்வை, மூலவர்மேல் பூசிய எண்ணெய் போல் அவன் கறுப்புடல் மேல் பளபளத்தது.அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை …

>>

விஞ்ஞானி/ மாற்றம்

அந்தஆடு மேய்க்கும் சிறுமியைஆடுகள் மலைக்காட்டுக்குள்அழைத்துக்கொண்டு போய்ஒரு மரத்தடி பாறையருகேவிட்டு விட்டு மேய செல்வதுவழக்கம்மாலை ஆடுகள் அவளைஅழைத்துக்கொண்டு வீடுதிரும்பும் வரைஅவளுக்கு அந்த பாறையில்இருக்கும் பெயர் தெரியாதஒரு சாமி சிலையே துணை இடத்தை சுத்தம் செய்துசிலையை குளிப்பாட்டிகாட்டுப் பூக்களால்அலங்கரித்து வீட்டிலிருந்துகொண்டு வந்த விபூதிகுங்குமத்தை பூசிதன் …

>>

அழகியசிங்கர்/ தீபாவளியும் அம்மாவும்

ஐம்பது ஆண்டுகள் முன்ஒரு சம்பவம் நடந்ததுஅம்மாஇறந்து விட்டாள்அப்போது தீபாவளி முடிந்திருந்ததுமழை கொட்டு கொட்டென்றுகொட்டியதுஅன்றிலிருந்துஒவ்வொரு ஆண்டும்அம்மா வருகிறாளென்றால்மழையோடுதான்வருவாள்ஆசி வழங்குவாள்அப்போதுமழை பேசும்அம்மாவும் பேசுவாள்புரியாத மொழியில்

>>

அழகியசிங்கர்/திரும்பவும்

அவர்கள் வாழ்க்கை திரும்பவும் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன், அவர்கள் தங்களுக்குள் நடந்த திருமணப் பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.அவன் அவளை நேசிப்பதில் எந்தக் குறையுமில்லை. ஆனால் அவள் அளவுகடந்து பேசுவதால் அவனால் அவளுடன் சேர்ந்து வாழ முடியாது என்று நினைக்கத் …

>>

சசிகலா விஸ்வநாதன்/தன்னம்பிக்கை

(இன்று அழகிய சிங்கரின் என்பாவாக என்பா) முன்னேற்றப் பாதையில்முள் பரப்பிடுவார்தன்னைத் தொலைத்து தெருவில் தேடுவார்பின்னும் அவர் தொடர்வார் நாளும்தன்னை நம்புவரவரை விலக்குவார்.

>>

அனங்கன்/எத்தனை இல்லை

கதவைத் திறந்துவைத்தேன்காற்றுவரவில்லை….நேற்றுவந்த பறவைஇன்று காணவில்லை. அன்பைத்தேக்கி வைத்தேன்யாரும் கொள்ளவில்லை….எதிரில்வாலாட்டிய அன்பை நான்உணரவில்லை. புனிதமென்று சொல்லஎப்பரப்பு எல்லை….?புனிதர்கள் பகர்ந்த சொல்லைஒழுகிடுவார் இல்லை. தேடிவைத்த செல்வம் அமைதிதருவதில்லை….அமைதி என்றசெல்வம்வெளியில் கிடைப்பதில்லை. நிலைக்குமென்று எதுவும்நின்றுகொடுப்பதில்லை…நின்றுகொடுக்கும் தெய்வம்எந்தன் திசையில் இல்லை.♦

>>

மோகன் ஜி/தீபாவளி வானம்

வானவெளி கொண்டாடும் தீபாவளி!நரகாசுரன் வதத்தைக் கண்ட நாள்தொட்டுதீபாவளிதனைக் கொண்டாட வானம்தவறுவதேயில்லை. இங்கே நடக்கும் சகலத்துக்கும்சாட்சி பூதம் இந்த வானவெளி!இலட்சம் இலட்சமாய் அதற்குநட்சத்திர விழிகள்.எதுவுமதன் பார்வையினின்றுதப்புவதில்லை. மேகங்களைத் திரட்டியே மழையாய்தன் மகிழ்ச்சிதனைப் பொழிகிறது.சோகம் வெளிப்படுவதும் அவ்வாறே!தந்தையின் கோபத்தை தடுத்தாளும்தாய்போல்விரிவானமும் மேகக் குடைகள் விரித்தேசூரியனின் …

>>

விஞ்ஞானி/பட்டாசு

ஓடி ஓடி பட்டாசுக்களைவெடித்து மகிழும் சிறுவர்களைரசித்தபடி நின்ற நண்பர்களில் ஒருவர் சொன்னார்நாமளும் இத போல்தானசந்தோஷம் வர வரைக்கும் காத்திருக்கோம் கிடைத்ததும்அடுத்தத தேடி ஓடறோம் என்று. அடுத்தவரோநம்ம வாழ்க்கையேபட்டாசு போலத்தானேஎங்கேயோ தயாராகிஎப்படியெல்லாமோ மாறிகடைசியில் கரியா போவுதுஎன்றார் மூன்றாவது நண்பர்அமைதியாய் இருந்தார்.அவரிடம்எங்க உங்க நெனப்புஎன்று …

>>

ஹரணி/ஏனிப்படி…•••

கண்விழித்துக்காலையிலெழுந்துமாலையில் மயங்கிஇரவினில் உறங்கும்வரை காண்பவரிடம்பேசுபவரிடம்படிப்பனவற்றில்சொல்வனவற்றில்உரையாடும் சூழலில்செய்யும் தொழிலில்எனக் கண்கொத்திப்பாம்பெனக்குற்றங்களையேபொறுக்கும்ஒருசிலரைப்பார்க்கையில்கோபமோவருத்தமோபதில் கூறவோஎதுவும்தோனுவதில்லை.. ஏனிப்படி

>>

லக்ஷ்மி ரமணன்./எல்லாம் குப்பை மயம்..

வனிதா கோயிலுக்குப்போகிறவழியிலிருந்தமுனைத்திருப்பத்தில் அந்தக்குப்பைத்தொட்டிமல்லாந்துகிடந்தது. அதன் சக்கரங்கள்தேய்ந்துபோய்,மேல்விளிம்பும் உடைந்துபோன நிலையில். அதிலிருந்துகீழே பரவலாக விழுந்துகிடந்த குப்பை குட்டிகோபுரங்கள் வடிவில் சாலைமறியல்செய்வதுபோல் விழுந்து கிடந்தது.பின்னால் நடந்துவந்த பாட்டியிடம்“எத்தனைநாளாக இப்படி குப்பை ரோடைஅடைச்சுக்கிட்டு அசிங்கமாக் கிடக்குது பாட்டி”என்றுகேட்டாள்.“அதை ஏன் கேட்கிறே. போனவாரம் பெரியமழை கொட்டித்தே அதிலிருந்தே …

>>

ஷண்முக சுப்பையா/வாழ்க்கை

பந்தல் கட்டிபடரவிட்டேன்கொடியொன்றை நான்.அதுபடர்ந்து பந்தளித்துகாயொன்றை ஈன்றிடஆனந்தம் மேலிட்டுவளையவளைய வந்தேன்அதைச் சுற்றி.வந்ததுதான்மிச்சம் எனும்படிபந்தலதுவும்படுத்ததொருநாள்.அதைஎப்பாடு பட்டேனும்எடுத்து நிறுத்திடலாம்என்றாலோஎல்லாம் ஒரே சிக்கல்அதனால்எப்படியோ போகட்டும்என்றிப் பொழுதுஎன்பாட்டிற்குஅதன் மூட்டில்என்னால் முடிந்தமட்டும்நீரை மட்டும்கொட்டுகின்றேன்.

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் /சிவபெருமானுக்கு தீபாவளி எப்பொழுது?

ஆசிரியர் கலைமகள் எல்லோருக்கும் எனது தீபாவளி நமஸ்காரங்கள்.தீபாவளி’ என்றால் தீபங்களின் வரிசை (தீப+ ஆவளி) எனப் பொருள் கொள்ள வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்! தீபாவளியன்று அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி இறைவனை வழிபடுவது தேசம் முழுவதும் மரபாக உள்ளது.தீபாவளி திருவிழா …

>>

நாகேந்திர பாரதி/அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 126

36 ஆண்டுகளாக வெளிவரும் அழகியசிங்கரின் ‘ நவீன விருட்சம் ‘ 126 இதழில் வெளிவந்துள்ள வித்தியாசமான கதை, கவிதை கட்டுரைகளில் , தமிழவன் அவர்களின்’ இலக்கியம், சினிமா – இன்றைய நிலைமை’ யில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துகள் மிகவும் சிந்திக்க வைத்தன.உலகமே …

>>

ராஜ மார்த்தாண்டன்/விமர்சனம்

எழுது எழுது என்றாய்எழுதினேன். உன் மீசையின் கம்பிரத்தைப்போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்மீசையின் வரலாறு தெரியுமா?அதன் வகைகள் அறிவாயா?மீசையைப் பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன்எழுதியசர்ரியலிசக் கள்தை படித்திருக்கிறாயா?கேள்விகளை அடுக்குகிறாய். நண்பனே!உன் கற்பனை மீசையைத் திருகிநீ கொள்ளும் பரவசம்எவ்விதம் நானறிவேன்எங்ஙனம் அதுகுறித்து எழுதுவேன். கொல்லிப்பாவை: …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

தவலை போட்ட குட்டி! ஒரு சமயம் ஒரு பெரியவர் ஒரு கருமானிடமிருந்து ஒரு தவலையைக் கடனாக வாங்கினார். பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும்போது ஒரு தட்டை அதோடு வைத்துக் கொடுத்தார்.“தட்டு ஏது?” என்று கேட்டான் கருமான்.“தவலை குட்டி போட்டது?”கருமான் மிக்க மகிழ்ச்சியுடன் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருட்கடல் பகவான்

சித்தூர் நாகையா பகவான் ரமணரின் பக்தர் . அவர் தன் மனைவி இறந்து தனிமையில் வாடினார். கால் போன போக்கில் நடந்து ரமணாஸ்ரமம் வந்தார். அங்கே பால் ப்ரன்டனின் நட்பு கிடைத்தது . தாம் இழந்த மகிழ்ச்சியை திரும்பப் பெற்றார் . …

>>

ரஸவாதி/பெற்றவள்

தெருமுனையில் திடீரெனக் கூச்சல்.”ஆனை வரதுடோய்!” திண்ணையிலிருந்தபடியே எட்டிப்பார்தேன். சர்க்கஸ் யானைதான். கம்பீரமாக, மகாராஜாபோல, பாகன் அதன்மீது உட்கார்ந்திருந்தான். பின்னாலும் பக்கவாட்டிலும் ஊர்ப் பொடியன்கள் கூட்டம்.உள்ளேயிருந்து ஓடிவந்து எட்டிப் பார்த்தான் அம்பி. மடிந்திருந்த வலது புறங்கையிலிருந்து என்னவோ வழிந்து கொண்டிருந்தது. பாதிச் சாப்பாட்டில் …

>>

சாருநிவேதிதா/ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார்

இதேபோல் ஒரு தீபாவளி நேரம். சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னால். 2014. அக்டோபர் கடைசி. அவர் கதைகள் எனக்குப் பிடிக்கும். அவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியிருந்தார். எங்கே இருக்கிறீர்கள் என்று பதில் கடிதம் போட்டேன். திருவான்மியூர் என்றார். நேரில் போய் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/எஞ்சியவை

1ஒழுகும் பேனாதன் சித்திரத்தைத்தானே எழுதிக்கொள்கிறது—-2துக்கத்தின்சாம்பல்நீறு—-3ஆத்மாவின்காயங்கள்உன் சொற்கள்—4கடைசியில் எஞ்சியிருப்பதுஎதிரியின் சொற்களல்லநண்பர்களின் மௌனம்—-5மெல்லிய ஆம்பல்தண்டின் நாருறித்தகீற்றாகஒரு அல்குல்—6இரவில் கிசுகிசுக்காதேசொற்கள்நம்பிக்கையளித்துவிடும்—7ஓவியத்தூரிகைதீட்டாமலிருப்பதுபரிநிர்வாணம்—8மாயையைப் பற்றியார் பேசினாலும்நீ ஏன் புன்னகைக்கிறாய்?—-9கண்ணீர்த்துளிகளால்சில பக்கங்களைநிரப்பலாம்ஆனால் எல்லா பக்கங்களையும்நிரப்புவதுதகாது—-10இறந்த கவிஞர்களோடுபேசுதல் எல்லோருக்கும்வழமைஇறந்த பிறகே புகழ்தல்நம்மிடம் நிலைபெற்றுவிட்டமரபு—-11மிருகங்களையும் பறவைகளையும்உன் கவிதைகளுக்குள்வரவிட்டுவிடாதேஅவை நீ மனிதனல்லஎன்பதைச் சொல்லிவிடும்——12‘இதயபூர்வமாக’என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?அகராதியில் …

>>

அழகியசிங்கர்/வினோத செய்தி – 6

அர்ச்சகர்களின் தட்டு பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை பூம்பாறை கோவிலில் அலுவலர்கள் அடாவடி கொடைக்கானல், அக். 29- கொடைக்கானல் பூம் பாறை குழந்தை வேலப்பர் கோவிலில், அர்ச்சகர்களின் தட்டு பணத்தைப் பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்களின் செயலால் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.பழனி முருகன் …

>>

சித்தரஞ்சன் தாஸ்

1923-24இலேயே அவர் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆகிவிட்டார். 1921ஆம் ஆண்டு பம்பாயில் முதல் ‘டிரேட் யூனியன் காங்கிரஸ்’ (தொழிலாளர் சங்க மாநாடு) நடந்தது; அடுத்த ஆண்டு ஜரியாவில் நடந்தது. மேற்கத்திய பாணியில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதற்காகச் செய்யப்பட்ட முதல் முயற்சி இது. 1923இல் …

>>

பசப்பல் ராஜகோபால்/வேர்க்கும் ஜமுக்காளம்

அடிப்பதும் அணைப்பதும்கொடுப்பதும் எடுப்பதும்முடிப்பதும் தொடுப்பதும்நடிப்புனக் கென்றால்,ஜமுக்காளமா நான்?மேடை சமைத்த நாள்என்னைக் கேட்டாயா?நான் இல்லையென்றால்மேடை யாருக்குமேடைக்கு நானா?“என்னிஷ்டம்” என்றால்என்னிஷ்டம் ஏன்?கண்மூடிச் செவிபொத்திக்கட்டையாய்க் கிடப்பதற்கா?கட்டையாய்க் கிடந்தாலும்போகஸ்லைட் புழுக்கத்தில்உணர்வலை உருகிப்போய்வேர்வையாய் வழிகிறதேமூக்கைப் பொத்திக்கொள்.

>>

தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை/தமிழர் நாட்டுப் பாடல்கள்

மாரியம்மன் வைசூரி மிகக் கொடியதொரு வியாதி. அதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ, பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர். வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்ததொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று …

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் / அரசியல் அறம்

வாய்ச்சொல் வீரர் மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தாமாற்றமில்லேடா ராஜா-எம்மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்வந்ததுவரட்டும் போடா-சில ( மனு ) உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்ஒலகம் இதுதாண்டா-ராஜாஒலகம் இதுதாண்டாஉள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்குஉல்லாச புரிதாண்டா-இதுஉல்லாச புரிதாண்டா… ( மனு ) வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனைவயிறுபசிக்கிறவன் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – இனி நடந்தது எல்லாம் போக இனிமேல்: நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும்.கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 101வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை (25.09.2024) மாலை –6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது.அதன் காணொளியைக்கண்டு ரசியுங்கள். இந்த நிகழ்ச்சி 101வது நிகழ்ச்சி. மோகன் ஜி கதைகள் பொன் வீதி – டாக்டர் ஜெ.பாஸ்கரன்(மோகன் ஜி யை அறிமுகப் …

>>

க.நா.சு/ராஜா தேசிங்கு

குளக்கரையில் இருக்கும் ஜட்கா வண்டி ஸ்டாண்டில் தன் வண்டியை நிறுத்திவிட்டு, எதிரிலிருந்த பஸ்ஸ்டாண்டில்தான் அவன் வழக்கமாக நின்றிருப்பான். இடுப்பில் அழுக்கேறிய பச்சையும் சிவப்புமான ஒரு கைலி; பச்சைக் கலர் அரைக்கைச் சட்டைச் எண்ணெய் படாத கிராப்புத் தலை; காதில் ஒரு பீடி; …

>>

கிப்ஸ் பறவைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஒரு அமெச்சூர் பறவையியலாளனான (ornithologist) எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஆங்கில இந்து செய்தித்தாளில் முதல்பக்கத்தில் Great Indian Bustards (GIBs) பறவைகள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டனவா என்ற தலைப்புடன் வந்திருந்த செய்தி கவர்ந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த சையது ரிஸ்வான் …

>>

வே.கல்யாண்குமார்/எலியார்.!

எலியாரே.. எலியாரே..சௌக்கியமா.?எளியோரைப் போலிருப்பீர்..சௌக்கியமா.? வீட்டுக்குள்ளே பானையினைஉருட்டுவீரே..ஓடியாடி பரணிமேலேவிளையாடுவீரே.! சந்துக்குள்ளே பொந்துக்குள்ளே உருளுவீரே.!சாந்துநிறம் மின்னும் மேனி நிறத்தவரே.! ஊரையடிச்சு உலையில் போடும் பெருச்சாலிகள்உலவுகின்ற நாட்டில் பிறந்த சுண்டலியாரே! சுறண்டி பிழைத்து..நக்கித் தின்னும் கருப்புயெலிகள்சுதந்திரமாய் உலவுகின்ற நாட்டினிலே.. சுண்டலியாய் எங்கள் வீட்டின் கொள்ளைப்புறம் பிறந்தவரே.!முன்டியடித்து …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

புதுக்கவிதையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று ரீதியில் எழுதுவதற்காகவே இத்தொடர் பிறந்தது. அதனால்தான் புதுக்கவிதையின் ஆரம்பகாலமான 1940களில் அம்முயற்சி சம்பந்தமாக இலக்கியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பலரகமான அபிப்பிராயங்களையும் முழுக்கட்டுரைகளாக அவ்வப்போது எடுத்தெழுத நேரிட்டது1960களில் புதுக்கவிதை புதிய வேகம் பெற்று வளரத் தொடங்கியது. அப்போதும் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/யாரைத் தொழுவது?

பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. ஆதலால், வீர சைவன், வீர வைஷ்ணவன் இவர்களுடைய உபாஸனை வேத விரோதமில்லை. இதர …

>>

ஜெ.பாஸ்கரன்/நவீன விருட்சம் 126

புத்தக அறிமுகம் 12 நவீன விருட்சம் 126 வது இதழ். (ஆசிரியர், வெளியீட்டாளர் அழகியசிங்கர்). 36 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ‘நவீன விருட்சம்’ காலாண்டிதழின் 126 வது இதழ் பற்றிய ஒரு பார்வை. சிறுபத்திரிகையின் அடையாளங்களில் ஒன்றான அட்டைப் பட ஓவியம் …

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்தபாட்டுக்கோட்டை பாடல்கள்

1.1 கெட்டதை விடுங்கள்சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்செய்யுறதைச் செஞ்சுடுங்கநல்லதுன்னா கேட்டுக்குங்ககெட்டதுன்னா விட்டுடுங்க முன்னாலே வந்தவங்கஎன்னென்னமோ சொன்னாங்கமூளையிலே ஏறுமுன்னுமுயற்சியும் செஞ்சாங்க ஒண்ணுமே நடக்காமஉள்ளம் நொந்து செத்தாங்கஎன்னாலும் ஆகாதுன்னுஎனக்கும் தெரியுமுங்க ( சொல்லு ) முடியிருந்தும் மொட்டைகளாய்மூச்சிருந்தும் கட்டைகளாய்விழியிருந்தும் பொட்டைகளாய்விழுந்துகிடக்கப் போறீங்களா? முறையைத் தெரிஞ்சு நடந்துபழைய நினைப்பை …

>>

க.நா.சு./ சிரஞ்சீவி

ஆமாம், ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன், எனக்குக் கதை கிதை புனையத் தெரியாது. கதைகள் படிக்கக்கூடத் தெரியாது, பொய் சொல்வது பஞ்சமா பாதகங்களில் தலை சிறந்தது என்கிற கொள்கையை உடையவன் நான். கதை என்றால் பொய் என்கிற அசையாத நம்பிக்கையும் உடையவன் நான். …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

5. லெனின் நூலகம் மாஸ்கோ நகரத்துக் காரோட்டியின் கல்வி ஆர்வத்தை வியந்தவாறே, எங்களுடன் வந்த மொழி பெயர்ப்பாளரைப் பார்த்து. ” இந்த விஞ்ஞான நூல், கரோட்டியே சொந்தமாக வாங்கியதா ? அல்லது இரவலாகப் பெற்றதா ?” என்று வினவினேன். அதை அவர் …

>>

தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை/ தமிழர் நாட்டுப் பாடல்கள்

பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் பேச்சையே காணோம். மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில், அவரை வணங்கி வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மனித முயற்சிகளுக்கு, கேடு …

>>

கல்கி/கேதாரியின் தாயார்

முன்னுரை சமீபத்தில் பத்திரிகைகளில் ‘அம்மாமி அப்பளாம்’ என்னும் விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது. அவளுடைய அருமைப் புதல்வனும் என்னுடைய பிராண சிநேகிதனுமான கேதாரியின் அகால மரணத்தை எண்ணிய போது உடம்பை என்னவோ …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 11. ம் வைதிக கோஷ்டியினர் ‘ராக் க்ரீக் பார்க்’கை நோக்கி அணி அணியாகப் படையெடுத்துக் கொண்டிருந்தனர். உண்ட மயக்கத்துடன் நடந்து கொண்டிருந்த கனபாடிகள் ஒருவர், “என்ன இருந்தாலும் நம் தஞ்சாவூர் ஸைடைப் போல் ஆகாது. இந்த வாஷிங்டனில் பெரிய பெரிய …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

சாந்தி நிகேதனம் இராஜகோட்டையிலிருந்து காந்திஜி ஸ்ரீ ரவீந்திர நாதரின் சாந்திநிகேதனத்துக்குச் சென்றார். ஏற்கெனவே அவ்விடத்துக்குப் போனிக்ஸ் பண்ணையில் வசித்தவர்கள் போயிருந்தார்கள். அவர்கள் சாந்திநிகேதனத்தில் மிக அன்பாக நடத்தப்பட்டு வந்தார்கள். அவர்களுக்குத் தனியாக இடம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்குத் தலைவர் ஸ்ரீ மகன்லால் …

>>

தாய் எனும் சக்தி/ சூர்யா பாலகுமாரன்

‘என்றென்றும் அன்புடன்’ என்றொரு புத்தகத்தின் துவக்கத்தை என்னால் எப்பவுமே மறக்க முடியாது. முழு புத்தகமும் கிறங்கடிக்க வைக்கும் என்றாலும் அந்த ஓப்பனிங் சீன், முதல் சில பக்கங்களில் வரும் காட்சியமைப்பு மிகவும் அழகாக இருக்கும். எழுத்தாளர் பாலகுமாரனைத் தெரிந்தவர்களுக்கு ‘என்றென்றும் அன்புடன்’ …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 10. ண காலையிலிருந்தே கல்யாண வீட்டில் பரபரப்பாயிருந்தது. சாஸ்திரிகள் அனைவரும் ஸ்நானத்தை முடித்துவிட்டு கோஷ்டியாக உட்கார்ந்து இட்லி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பெண்டுகள் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர். பொழுது புலர்ந்த பிறகும் அணைக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காஸ் லைட்டுகள் …

>>

திரு வி. க/பெண்ணின் பெருமை

(பெண்ணும் உலகமும் – நற்பிள்ளைப் பேறும் தாய் தந்தையர் பொறுப்பும் – பெண் உலகோபுந்தாய் – பிள்ளைகளை வளர்த்தல் பெருந்தொண்டு – நல்லிணக்கம் வேற்றுமை நினைவும் (பெண் ஆண் நினைவு – உயிர் நிலைச் சிறப்பு – பிஞ்சிற் பழுத்தல் – …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

குவாங்க் சீனாவில் குவாங்க் என்ற ஒரு பையன் இருந்தான். அவன் மிகவும் கெட்டிக் காரப் பையன்.ஒரு சமயம் அவனும் அவனுடைய நண்பர்களும் விளையாடிக் கொண்டிருக் கையில், ஒரு பையன் ஒரு பெரிய ஜாடிக்குள் விழுந்துவிட்டான். அந்த ஜாடி நிறையத் தண்ணீர் இருந்தது. …

>>

அழகியசிங்கர்/நவீன விருட்சம் 126வது இதழ்

இந்த ஆண்டு நவீன விருட்சம் 125 இதழுக்குப் பிறகு ரொம்ப நாட்களாய் அடுத்த இதழ் கொண்டு வர முடியவில்லை. ஏன் இந்த தாமதம் என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டேன்.ஒன்றுமே செய்யாமல் வெறுமையாக பொழுதை ஓட்டிக் கொண்டிருந்தேன்.ஆனால் எப்படியோ 125 வது இதழ் மே …

>>

அவல் லட்டு/ராஜேஷ் குமார்

லட்டுக்கு இல்லையா ஒரு எண்டுங்கறது போல… லட்டு ரெசிபி எடுத்தாலே சிம்பிள் லட்டுல இருந்து ரொம்ப மெனக்கெட்டு செய்யுற லட்டு வரைக்கும் நிறைய வெரைட்டிஸ் இருக்கு. அதுல ஒன்னுதான் இன்னைக்கு நம்ம பார்க்க போறோம். அது என்னன்னு கேட்கறீங்களா… அதுதான் அவல் …

>>

மோகன்ஜி/அங்கிங்கெனாதபடி….

‘இந்த கெடிலநதி மேம்பாலத்தின் மீதுதானே வெய்யிலில் நடந்து போனாள் ஜெயகாந்தன் கதையில் ஒரு பாட்டி’ மனோகர் தன்னை வினவிக் கொண்டான். ‘ஐய்யமாரு வீட்டுப்பாட்டி.. வேகாத வெய்யிலில் நடந்து போகும், புள்ளை வீட்டுக்கு.. ஜட்காவண்டியின் பக்கப்பலகைக்கு தோதாக முதுகை சரி செய்து கொண்டான். …

>>

சொல் புதிது எனும் குழுமத்தில்/தஞ்சாவூர் ஹரணி

வணக்கம். எழுத்தாளர் திரு அழகிய சிங்கர் அவர்கள் ஓராண்டாக நாள்தோறும் புலனத்தில் சொல் புதிது எனும் குழுமத்தில் மாலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் அவரவர் கவிதைகளை ஒலிப்பதிவாக ஒலிக்கச்செய்தார். திரு அழகிய சிங்கர் எதைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து சிரத்தையோடும் …

>>

மோகன்ஜி/’கூளம்’

‘கூளம்’ கதை குறித்த ஒரு அறிமுகம்:-நலம் தானே! ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் என்னிடம் 96 கதையைஅனுப்பக் கேட்டபோது எழுத்தாளர் விக்கிரமன் சாச் அவர்களிடம் ‘அமுத சுரபி’ இதழுக்காய் நான் தந்த இந்தக் கனத் நினைவுக்கு வந்தது. இதை எழுதி இருபத்து மூன்று …

>>

மோகன்ஜி/தத்த்தி

இன்னமும் இந்த தத்த்திப் பயலை எங்கே காணோம்?காலிப் பொடிமட்டையை மத்தியானத்துலேயிருந்து எவ்வளவு தான் முகர்வது? தீனதயாளு சாருக்கு கோபமாய் வந்தது. ஒரு வருஷமா இந்தத் திண்ணைதான். காலு விழுந்தப்புறம் எல்லாரோட சகாயம் இல்லாமல் ஏதும் முடிகிறதா? போதாததற்கு தெரிந்தவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய்க் …

>>

எஸ்ஸார்சி/சந்திராஷ்டமம்

என் மனைவிக்கு முட்டிக்கால் வலி. கொடியை நாட்டிக்கொண்டு அந்த முட்டிக்கால் வலி வந்து ஆண்டுகள் பலவாயிற்று. எத்தனையோ களிம்புகள் தைலங்கள் எண்ணெய்கள், மருந்துகள் மாத்திரைகள், காலுக்கு உறை எனும் தகரத்துணிகள் என்று அத்தனை ராஜ உபசாரங்களும் செய்தாயிற்று. கிலியுற்ற அந்த மனிதர்களை …

>>

ஆர்க்கே/காலத்திசையறிதல்

திரைகடல் திரிகிறேன்.தரைநிலம் அளக்கிறேன்.நிலமளித்தபூக்களனைத்தையும்வானளித்தநட்சத்திர மலர்களையும்என்எண்ணத்தின்படகில் இட்டு நிரப்பிஎன்உள்ளத்து ரோஜாவையும்உள்ளே மலர்த்தி வைத்துகாலச் சமுத்திரத்தில்கவிதையெனும்துடுப்புப்போட்டுநீ இருக்கும் இடம் நோக்கிநிறைய நிறையகுவித்து வாரேன்.நித்ய கண்மணியே!அத்தனையும் சூடிக்கொள்.ஆட்கொள்அத்தனைபூக்களையும்அதனோடுஎன்னையும்!

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 9. ம “மணி என்ன? நவார்த்தம் இருக்குமா?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி.“இங்கிலீஷ் பேசுமய்யா, இது வாஷிங்டன். நவார்த்தமாம், நவார்த்தம்! நைன் தர்ட்டி என்று சொல்லுமேன்“ என்றார் அம்மாஞ்சி.“ராக்ஃபெல்லர் மாமி ஆளுக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்தால் செளகரியமா …

>>

புஷ்பா விஸ்வநாதன்/மூட்டு புதிது

நிமிர்ந்த நன்னடையும்நேர் கொண்ட பார்வையும்வளைந்த மென்னடையும்வலிகொண்ட பார்வையுமாய்மாறிப்போனபின்வயதாகிப் போனவலது முழங்கால் மூட்டை“மூட்டு புதி”தெனமாற்றி வைத்திடமூட்டறுவை சிகிச்சைக்குமதுரை வந்தேன்.அழகர், மீனாட்சிஅருளாசிகளுடன்சுற்றமும் நட்பும்வாழ்த்தொலி முழங்கிடஅறுவை சிகிச்சைஅறைக்குள் நுழைந்தேன்மயக்கம் தெளிந்துகண்விழித்து பார்த்தால்வலி வலி வலி வலிவலி வலி வலி வலிமுதுகில் ஒரு‌குழாய்மூத்திரத்துக்கொரு குழாய்ஊசி மருந்துக்கெனகையில் ஒரு …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி அன்று(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்தது

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி அன்று(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்தது. அந்நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை …

>>

வெற்றிலை ரகசியம்/கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

ஆசிரியர் கலைமகள்………………..‌‌ வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இந்தியா இந்தோனேஷியா மலேசியா இலங்கை ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது வயிற்றுக் கோளாறு ,ஜீரண கோளாறு போன்றவற்றை நீக்கக்கூடியது வெற்றிலைச் சாறு!! கும்பகோணம் வெற்றிலை தமிழகத்தில் சிறப்பிடம் பெறுகிறது. ‌தேனி மாவட்டத்தில் …

>>

புதுமைப்பித்தன் / ‘இந்தப் பாவி’ காதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு பெற்றோர் அவர்களைப் பிரித்தலும், பிரிவு மரணத்தில் மாட்டுவித்தலுமே அவர் இவ்வவனியில் இன்பத்துடன் வாசிக்க விரும்பும் …

>>

எல்.ரகோத்தமன்/ சத்துணவு

புழுதி கிளப்பிக் கொண்டு ஒரு ஆடி கார் அந்த கிராமத்தில் நுழைந்து பயணித்தது. ஊரே  காரை உற்று பார்த்தன.  நேரே போய் பச்சை நிற பெயின்ட் அடித்த ஒரு மச்சு வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர்.  நீல …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

3 . சுங்கவரி நீக்கம் பம்பாயில் கவர்னர் லார்ட் வில்லிங்டனைச் சந்தித்துப் பேசிய பிறகு மகாத்மா பூனாவுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ கோகலே மகாத்மாவை மிக்க அன்புடம் வரவேற்றார். இந்திய ஊழியர் சங்கம் என்ற பெயருடன் ஸ்ரீ கோகலே நடத்தி வந்த …

>>

கல்கி/அருணாசலத்தின் அலுவல்

1 இது ஒரு கதை. இந்தச் செய்தியை ஆரம்பத்திலேயே நான் வற்புறுத்திச் சொல்லாமற் போனால், ஒரு வேளை இதை ஒரு கட்டுரை என்றோ, பிரசங்கம் என்றோ நினைத்துக் கொள்வீர்கள். மற்றோர் அபாயமும் உண்டு. இதில் வரும் சம்பவம் உண்மையாகவே நடந்தது என்று …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

புதுக்கவிதை புதிய மறுமலர்ச்சியும் இயக்க வேகமும் வலிமையும் பெறுவதற்கு ‘எழுத்து’ தோன்ற வேண்டியிருந்தது.சி.சு. செல்லப்பா 1959 ஜனவரியில் ‘எழுத்து’ மாசிகையை ஆரம்பித்தார். அப்போது அவர் புதுக்கவிதை சம்பந்தமாகத் தீவிரமான கொள்கைகளோ, ஆசை நிறைந்த எதிர் பார்ப்போ, ஆர்வம் மிகுந்த திட்டமோ கொண்டிருந்தார் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கடையநல்லூர் வெங்கட்ராமன் (நன்றி ஸ்வராஜ்யா)

திருமதி MS சுப்புலெட்சுமிக்கு நிறைய அன்னமாச்சார்யா கீர்த்தனங்களை அளித்தவர். அவர் இசையமைத்து MS பாடிய ராஜாஜி பாடல், ராகமாலிகாவில் அமைந்த குறையொன்றும் இல்லை’ பாடப்படாத இசைமேடை இல்லை எனலாம். வெங்கட்ராமன் சென்னை வானொலி நிலையத்தில் இசை வித்வானாக இருந்தவர். தம்பூரா வாசிப்பதில் …

>>

பிரமிள் மொழி பெயர்ப்புக் கவிதை

மலர் ஒன்று தன்னகத்தேதனது சுகந்தத்தைவைத்திருப்பதுபோல்ஓ,உலகே,உன்னைஎன்னுள்ளே வைத்திருக்கிறேன் நானே சுதந்திர நிலைநீயுன் இதயத்துள்என்னை,முடிவற்றமகிழ்ச்சியினை, கொள்பூமியின் ஆழத்தில் புதைந்துள்ளரத்தினம் போன்று நானுன்இதயத்துள் ஒளித்துள்ளேன் என்னை நீ நேசிக்காவிடினும்எனக்கு நீயேமாறாத அன்பன் என்னை நீ கோயிலில்மாதாகோயிலில்,மசூதியில்எங்கு வழிபட்டாலும்நான் உனக்குஅறிமுகற்றவன்ஆயினும்நீயே என் முடிவற்ற தோழன் பள்ளத்தாக்கினைமலைமீது பாதுகாப்பது …

>>

சமிஹ் அல்-காசிம் /பயண சீட்டுகள்

தமிழில் : க மோகனரங்கன் நான் கொல்லப்படும் நாளில்,என்னைக் கொல்பவன்என்னுடைய பையிலிருந்துபயணச் சீட்டுகளைக்கண்டுடெடுப்பான். ஒன்று, அமைதிக்குஒன்று,வயல்வெளிகளுக்கும் மழைக்கும்மற்றுமொன்று,மனிதகுலத்தின் மனசாட்சிக்கு. என் கொலையாளியே,போகாமல் தங்கியிருந்துஅவற்றை வீணாக்கிவிடாதே!உன்னைக் வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்,அச்சீட்டுகளைப் பயன்படுத்திபயணம் சென்று வா.

>>

ந. பானுமதி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் பாத நிழல் சிற்றகல களில் தீபங்கள் ஏந்தி தெரு வாசலுக்கு வந்தாள்ஒளியில் மூக்குத்தியின் வண்ண ஜாலங்கள்கன்னகதுப்புகளில்மனை கோலத்தின் மீது வைத்து அழகு பார்த்தாள்.நிமிர்ந்து மேலே நிலவைப் பார்த்து …

>>

ஆனந்த் கவிதைகள்

கோரைப் பற்கள் நான்கு கால்கள்வளைந்த ஒரு வால்நான்கு கோரைப் பற்கள்எச்சில் வழியதுடித்துத் தொங்கும்நீண்ட நாக்குஅனைத்தும் இருந்ததுபயத்துக்கு நானென்னில் அறியாதிருப்பதை அறியாதிருந்தான்கரும்புக்கும் இனிப்புக்கும் இடையில்வந்து போகாது நிற்கும்சுவையறிந்ததும்மொட்டை மரம் நின்ற இடத்தில்முளைத்தெழுந்தது மலையொன்று அறியாதிருப்பதை அறிந்தான்புற்கள் காய்ந்துதொடுவான் வரைக்கும்விரிந்தது வெட்டவெளி நிலைமாறியது அறியாமல்அறிந்திருப்பதை …

>>

ஆனந்த் கவிதைகள்

அந்த இடம் – 1 அதுஎன்னை விழுங்கிய பிறகும்நான் அதே இடத்தில்தான்இருந்தேன்ஆனால் அதுவேறொரு இடத்தில் இருந்தஅதே இடமாகஇருந்தது மண்ணெல்லாம்மாபெரும் மலைகளாகதாடும் நதியின்இருந்த காலத்தில்தோன்றிய இடமாகஅது இருந்தது மயில்களும் மான்களும்கூடிக் குலவும் வனமாகஅது விரிந்திருந்தது கடல் செல்லும் வழியில்நதி சற்று இளைப்பாறிச் செல்லும்நந்தவனம் …

>>

தங்கேஸ் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் 1. கல்வி வியாபாரமாகி விட்டதுமதம் வியாபாரமாகிவிட்டதுகலை வியாபாரமாகிவிட்டதுஅரசியல் வியாபாரமாகிவிட்டதுநாடும் உலகமும் மனிதமும்வியாபாரமாகிவிட்டன யாவும் எவையும்வியாபாரமாகிவிட்டஇந்த உலகத்தில்அன்பின் நிமித்தம்நான் எதை உனக்கு பரிசளிப்பேன் ? வேண்டுமானால்இன்னும் வணிகமயாமாகிவிடாதஇந்தக் கவிதையின்ஒரு …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் மழைக்காலம் 1 முடிச்சூர்சமீபம்அடையாற்றங்கரையில்வீடு கட்டிக் குடியிருப்பதால்அக்டோபர் மாதம் தொடங்கிபுலம்புவதே வாடிக்கைமழை என்று வந்துவிட்டால்அடையாற்றில் தண்ணீர்எவ்வளவு போகிறது என்பதைப்பார்ப்பதுதான் முதல் திருப்பணிஆறு நிரம்பிக் கரை வழிய ஆரம்பித்தால்தரைதளவாசிகள் மூட்டைக்கட்டிக்கொண்டுபுறப்படத் …

>>

கல்கி / மாந்தருக்குள் ஒரு தெய்வம்

2 . ஜன்ம பூமி காந்தி மகாத்மாவுக்கு இங்கிலாந்தில் பாரிச வாயு நோய் கண்டிருந்தபடியால் அவர் சைனிய சேவைக்குப் போக முடியாமற் போயிற்றல்லவா? டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்திஜிக்கு மேற்படி நோய் நீங்கச் சிகிச்சை செய்தார். ஆனால் டாக்டர் குறிப்பிட்ட உணவு …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் நடத்திய இன்றைய இணைய கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1ஒரு நொடி இப்போதெல்லாம் மழையைரசிக்க முடிவதில்லைகுடைக்கு வெளியேகைகளை நீட்டக்கூடதயக்கம் எனக்கு‘நேரம் கெட்ட நேரத்தில்’ –என மனம்சலித்துக் கொள்ளும்நாற்பதைக் கடந்தபின்இராமன் ஆண்டால் என்னஇராவணன் ஆண்டால் என்னஎன்று இருக்கிறதுமழை வசீகரித்தாலும்நாளையைப் பற்றியகவலைகள் அங்கேயேநங்கூரமிட்டு நிற்கச் …

>>

சுரேஷ் ராஜகோபால் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் கவிதை – 1 மழை நாளில் குடை குடையோடு கிளம்பினேன்லேசான தூறல்பெரும் மழையானதுகுடை பாதுகாப்பில் சாலையில்கணுக்கால் நீரில் நடந்தேன்மழைக்கு ஒதுங்கினேன்குடையை மடித்து கீழேசொட்ட வைத்தேன்மழை நின்றவுடன்குடை மறந்துவீட்டுக்கு …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

18/10/24 அன்று விருட்சம் அழகிய சிங்கர் நடத்திய ”கவிதை வாசிக்கலாம் வாங்க” இணைய கவியரங்கத்தின் 26 ஆவது கூட்டத்தில் வாசித்தகவிதைகள் உனக்கு என் மேல் நிறைய மதிப்புஎனக்கு உன் பால்அதீத பாசம்இந்த உறவுக்குநல்ல பெயர் ஒன்றுதயார் நிலையில் உள்ளதுநான் பெண் என்பதால் …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் நிற்கும் பொம்மைகளிடம்கதைகள் இருக்கின்றன படுக்க வைக்கப் படும்போதுபகிர்ந்து கொள்ளப்படும் மண்ணாக இருந்த காலத்தின்மகிழ்ச்சிக் கதைகள் கேட்கும் அம்மாவுக்கும்கண்கள் கசியும் மணமான காலத்திற்குமுன்பிருந்த நிலை நினைந்து ஓரக் குடை …

>>

அழகியசிங்கர் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் இன்று நல்ல நாள்முகூர்த்த நாள்என் மனக்கிடைக்கையைசொல்ல நினைத்தேன்அவள் இருக்கும்தெருவைசுற்றி சுற்றி வந்தேன்கோபுர மணி அடித்தது 2. திரும்பவும் திரும்பவும் மழைதிரும்பவும் தெருவில் தண்ணீர்திரும்பவும் பக்கத்து வீட்டில் சாக்கடைதிரும்பவும் …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

சட்டமன்றத்தில் நுழையும் பிரச்சனை காங்கிரஸில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. மாறுதல் வேண்டுவோர் – வேண்டாதார் என்று இரு கட்சிகள் தோன்றின. கயையில் கூடிய காங்கிரஸில் இவ்வேற்றுமை தெளிவாகப் புலப்பட்டது; ஆனால், அங்குச் சட்டமன்ற எதிர்ப்பாளர்கள்தாம் வெற்றிபெற்றனர்.எனினும், தாஸும் அவருக்குத் துணை நின்ற …

>>