வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

பிச்சமூர்த்தி கவிதைகள் (1937-1946) 1934 முதல் புதுக்கவிதை எழுதத் தொடங்கிய பிச்சமூர்த்தி 1946க்குப் பிறகு பதினான்கு வருடங்கள் எதுவுமே எழுதாமல் இருந்துவிட்டு 1959-ல் புது விழிப்புப்பெற்றவர் போல, மீண்டும் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதலானார். அவரது பிந்திய கவிதைகள் (1960 கள் காலத்தவை) …

>>

செந்தில் பிரசாத்/மழை மழை மழை மழை

மழை மழை மழை மழைபடைத்தவன் காட்டில் சோக மழைகாப்பவன் காட்டில் தடுமாற்ற மழைஅழிப்பவனுக்கோ மகிழ்ச்சி மழை. மழை மழை மழை மழைஇடிக்கும் மின்னலுக்கும் காதல் மழைமேகத்துக்கும் மண்ணுக்கும் மோக மழைவானத்துக்கு சோக மழை. மழை மழை மழை மழைமாடி வீட்டில் கொண்டாட்ட …

>>

அனங்கன்/புனிதநூல்கள் ஒன்றும் புரிந்துகொள்வதற்கில்லை

இரண்டு தேவதூதர்களும்திகைத்துநிற்கிறார்கள்.அவர்களது போதனைகளைவிண்ணைக்கிழித்துச்செல்லும்அனங்கன்/ஏவுகணைகள் கேலிக்குள்ளாக்குகின்றன. பாவங்களுக்கு மனிதன் பயப்படவில்லை….உயிர்தெழுந்தாலும் ஒன்றும்ஆகிவிடப்போவதில்லை. புனிதநூல்கள் அனுதினமும்வாசிக்கப்பட்டாலும்….அதன்உண்மைத்தன்மைவிளங்கிக்கொள்ளப்படாமலேஇன்றுவரை இருக்கிறது. ஆலயங்களை ஆயுதங்கள்ஒருபோதும் வணங்கிச்செல்வதில்லை. தனிமனிதர்களின் ஆணவம்தலைமுறைகளைப் பொசுக்குகிறது. மதம் மனிதர்களை தின்றுசெரிக்கும் விலங்காக இருக்கிறது. காரணம் அறியாது உயிர்விடும்மக்களுக்காக யாரும் கண்ணீர்சிந்தப்போவதில்லை. உங்களுக்கு ஒன்றும் நடக்காதவரையில்உள்ளூர்ச்செய்திகளோடு…உலகச்செய்தியாய் …

>>

அழகியசிங்கரின் 5 என்பாக்கள்

என்பா 1 மழை மழை மழை மழைவெளியே மழை பெய்து கொண்டிருக்கிறதுவெளியே காலடி எடுத்துவைக்க முடியவில்லைஎங்கும் போக முடியாமல்மழை மழை மழை என்பா 2 மழை மழை மழை மழைமழையைப் பற்றிய செய்திஅர்த்தமுள்ளதாகஇருக்கிறது. ஏனோ பலித்துவிடுகிறது. எப்படியோ துயரத்தைக் கூட்டுகிறது என்பா …

>>

பி. ஆர். கிரிஜா/என்பா

அழகிய சிங்கரின் என்பா! மழை மழை மழை மழைஇயற்கை அளிக்கும் அற்புத அமிர்தம்உலக மக்களின் உயிர் நாடிசேமிப்போம் கண்ணும் கருத்துமாக ! மழை மழை மழை மழைஓயாமல் கொட்டும் ஓரிரு சமயம்இயற்கையின் சீற்றம் வருணனின் கோபமோ ?சற்றே ஓய்வெடுமாரியே ! மழை …

>>

சசிகலா விஸ்வநாதன் /என்பா

அழகிய சிங்கரின் இன்றைய என்பா🌧️ மழை மழை மழை மழைசூல் கொண்டு சுழல்காற்றுசிலு சிலு சிலு சிலுவென;குளிர் குளிர் குளிர் குளிர்.🌧️ மழை மழை மழை மழைசர மழை;சாரங்கம் உதிர்க்கும்வாளி போல், சலிக்காமல் பெய்வதுசற்றே நின்றால், தேவலை.🌧️ மழை மழை மழை …

>>

கல்கி/தெய்வயானை

என்னுடைய நண்பர் வெற்றிலை பாக்குக் கடை ஓமக்குட்டி முதலியாரும் நானும் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. “இருக்கட்டும்; நீங்கள் ஒரு காலத்தில் சாராயக் கடை குத்தகை எடுத்திருந்தீர்களாமே. அதை எப்படி விட்டீர்கள்? உத்தரமேரூரை …

>>

புதுமைப்பித்தன்/இது மிஷின் யுகம்

நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்.உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். ‘அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!’ என்ற …

>>

தி.சோ.வேணுகோபாலன்/?

இளமைப் புதிரேநில்உன்னோடு ஒரு வார்த்தைநீயும்காஷாயத்துணிகாந்திக்குல்லாய்அணிந்துபோவோர் வழிதானோ? நீ செய்வதெல்லாம்முந்தையத் தலைமுறையின் குரூரங்களைதாளமுடியாத சலிப்பின்வெளிப்பாடா?அல்லது உந்தன் பலஹீனங்களுக்குமுகமூடியா? உன் ரோமச் ()ெசரிவுபுதுப் பாலுக்குக் காவலானால்அதுசரிபழைய பூனைக்கே தோழனானால்பிறக்கும்பேரனின்கையில்கத்தரிக்கோல் ‘கணையாழி’ அக்டோபர் 1973

>>

தி.சோ.வேணுகோபாலன்/முதுகு சொறிந்துகொள்ளும் பூண்நூல்கள்

(ஸ்ரீ வத்ஸ…ஆ: பஸ்த்தம்ப…ஸ்ரீய ஜூஸ்யா..) வேதத்தைக் கொளுத்துங்கள்வியாசனுக்கு வாஸக்டமிசெய்திருந்தால்குருக்ஷேத்திர மண்குருதியைக் கண்டிராதுவாத்ஸாயனனுக்கு எவனும்கொட்டை அடிக்கக் காணோம்போகட்டும் வியாசனுக்கும்வாத்ஸாயனனுக்கும்வாய்ப் பூட்டு போடுங்கள்காளிதாஸனைகழுவில் ஏற்றுங்கள்கும்பமேளா நாகருக்குஅவதூதருக்குகோமணம் கட்டிவிடுங்கள் சுசீந்திரச் சித்திரங்களைகைசிவக்கச் சிவக்கசுரண்டிச் சிதையுங்கள்கொனாரக் ஹளபேடுகோபுரத் தலையில்கூத்தடிக்கும் சிற்பங்கள் –இடியுங்கள் கூட்டிக் கழிக்கும்பூதாகாரக் குறிகளைஃப்ரஹதீஸ்வரப் பூசணியைசித்தாந்தச் …

>>

ஷண்முக சுப்பையா/தாளம்

மாமியார் தாளத்திற்குமாமனார்ஆடுவாரேல்நீ உன்மனைவியார்தாளத்திற்குமரியாதையாய்ஆடிடுவாய்.ஆடாவிட்டால்மாமியாரும்மனைவியாரும்தெருவில் நின்றுஆடுவார்நீ தாளம்போடுவாய்.

>>

ஷண்முக சுப்பையா/கண்ணே நீ

கண்ணே நீகண்ணாடிமுன் நின்றுகாலத்தை ஏன்வீணாக்குகின்றாய்.நித்தம் நிதம்நீ நின்நெற்றிக்கிட்டபொட்டாகண்ணுக்குத் தீட்டியமையாஉதட்டிற்குப் பூசியசாயமாமுகத்திற்குத் தடவியதூளாஇல்லைஇதுபோன்றஇன்ன பிறவாஎன்னை இச்சிறுகால அளவில்(அறுதியிட்டுக் கூறினால்அரைக்கால்நூற்றாண்டில்)கால் குசேலனாக்கியவை?இல்லையென்றுனக்குநன்றாய்த் தெரியுமேபின் எதற்குஎன் கண்ணே நீகண்ணாடிமுன் நின்றுகாலத்தை ஏன்வீணாக்குகின்றாய்.

>>

ஷண்முக சுப்பையா/செருப்பு

அழகான அளவானசெருப்பென்றால்அது கடிக்கத்தான் செய்யும்கடித்துக் கடித்துக்கடித்த இடமெல்லாம்காய்த்திட ஒருநாள்கடிப்பின் கடுமைதெரியாதாகும்.அதுவரைக்கும்பொறுக்கும் பொறுமைஉனக்கிலதாயின்பஞ்சுத் தோலால்பதப்படுத்தியசெருப்பணிந்துநடந்திட வேண்டியதே.அதற்குனக்குபோக்கில்லையெனில்பழம் செருப்புநாடிசென்றிடுவாயே.

>>

ஷண்முக சுப்பையா/கண்கள்

காதல் பிறந்துகண் அடையஓடிப்போய்நான் அவளைகைப் பிடித்தேன்.காலிட்டடிக்கஞானம் பிறந்துகண் திறக்கநான் அவளைகைவிட்டுஓடிப் போயிடதலையிட்டுடைத்தேன்.திறந்த கண்திரும்பவுமடையஎன்ன பிறந்ததுஎன்று நான் பார்க்க,கண்ணடைத்துக்கண் திறந்தஇடை வேளையிற்பிறந்த இருகண்களே காரணம்எனக் கண்டேன்.

>>

ஷண்முக சுப்பையா/பெண் கொள்ளல்

“தாயைப் பார்த்துபெண்ணையெடு”என்பது ஓர்பழமொழி.“தவறதுதந்தையைப் பார்த்துபெண்ணையெடு”என்கிறான் ஓர்அநுபவசாலி.எது சரி?எது தவறு?என்று தெரியஎடுத்தோரைஅடுத்துக் கேட்டால்ஏதேதோஉளறுகிறார்!அறியும் வழிஅதுவன்றிபிறிதொன்றுஇல்லையே !பின் என் செய்ய?தாயைப் பார்த்தொன்றுதந்தையைப் பார்த்தொன்றுஎன இரண்டு கொள்ளவா?

>>