க.நா.சு. /புளிப்பு

நண்பர் கடிதம் எழுதியிருந்தார் “தங்களுடைய கதையைப் படித்தேன்; மாயவரத்துத் திராட்சையின் புளிப்பை நானும் அனுபவித்திருக்கிறேன்; அந்தத் திராட்சையிலுள்ள ஒரே இனிப்பு, தங்கள் வர்ணனையில்தான் இருக்கிறது.”எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. அந்த நண்பரிடம் எனக்கு ஏற்கெனவே நல்ல மதிப்பு உண்டு. சாதாரணமாகக் கதைகள் …

>>

ஸ்ரீதர்-சாமா/நொண்டி நாய்க்குட்டிக்கு பரிவு காட்டிய பகவான்

தனக்கிட்ட இட்லியை அது ஆஷ்ரம் வாயிலில் தான் அமர்ந்து சாப்பிட்டு மலமும் அங்கேயே கழிக்கும். கோபம் கொண்ட ஆஸ்ரம சர்வாதிகாரி கிருஷ்ணஸ்வாமி அதற்கு இட்லி தருவதைச் சில நாட்கள் தடை செய்தார் . பசித்த நாய்க்குட்டி பகவானை அண்டியது. பகவான் விஷயமறிந்து …

>>

கல்கி/ பித்தளை ஒட்டியாணம்

1 தங்கம்மாள் நடுநிசியில் திடுக்கென்று கண் விழித்துக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசையைப் போல் கேட்டது. படுத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள். ஸௌந்தரம் கதவைத் திறந்து கொண்டிருந்தான். வெளியே சென்று மெதுவாய்க் கதவைச் சாத்தினான்.மாடிப் படிகளில் அவன் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்டது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/கொலு

கொலு வைக்க ஆசைதான்.வேலை கொஞ்சம் மலைப்புதான்.காலை அலுவல் போகணும்.மாலை சுண்டல் செய்யணும்.இதொன்றும் பெரிய வேலையில்லை‌கூப்பிட்டவர் இல்லம் செல்லணும்.நாலு பேர் பார்க்க,நல்லதாய் நான் உடுத்தணும்.நாளை வீட்டு அலுவல்அலுவலக அலுவல்அத்தனையும் மனதில் ஓடசிந்தனைகளும் சவால்களும் முந்தி நிற்கமுறுவல் காட்டிஇன்முகத்துடன் பேசணும்வீடு வந்து சேரஅடுப்படி வேலைகள்கடுப்படிக்க …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 2. ஷி “பிள்ளைக்கு ஒரு கார். பெண்ணுக்கு ஒரு கார். தவிர, கல்யாணச் செலவுக்கென்று பத்து லட்சம் டாலரைத் தனியாக ஒதுக்கி வைத்துவிட்டார்களாம்” என்று பல் முப்பத்திரண்டும் தெரியக் கூறினாள் பெண்ணின் தாயார் விசாலம்மாள்.“பெண்ணுக்கு நகை நட்டெல்லாம் செய்து போடுகிறார்களாமா?” …

>>

அழகியசிங்கர்/கொலு

ஒவ்வொரு குடும்பமாய்நேரில் பார்த்துக்கூப்பிடுகிறாள்எங்கள் வீட்டில் கொலுஎன்று வாருங்கள் என்று யாரும் உடனே வருவதில்லை எல்லோருக்கும்சிந்தனைகள்தான்அதிகமாக இருக்கின்றன யாரும் கொலு பார்க்கஎங்கள் வீட்டிற்குவரவில்லை தூங்கப் போகும்போதுஇன்று யாரும் வரவில்லைஎன்று வருத்தப் படுகிறாள் நானும்வருத்தப் படுகிறேன்கவிதைப் புத்தகம் கேட்டுஎன்னிடம் யாரும்வருவதே இல்லை என்று

>>

ம.சக்திவேலாயுதம்/மரப்பாச்சி பொம்மைகளாய்

அம்மா வாங்கி வைத்தநளினமானகமகம சந்தன வாடை சுமந்தமரப்பாச்சி பொம்மையொன்றைநெஞ்சோடிருத்திஅம்மையை நினைக்கும்மகனொருத்தானநான் புரட்டாசி மாசத்தில்மனதில் அடுக்குகிறேன்கொலு ஒன்றை..ஐந்தே படிகளாக!ஒவ்வொரு படியிலும்ஒவ்வொரு படிப்பினைகள்…முதற்படியில்தெய்வீக இருப்பாய்தெளிந்தோடும் காட்சிகள்..இரண்டாம் படியில்தேரோட்டம் சப்பரமெனஇறை வீதி உலாக்கள்..மூன்றாம் படியில்மரங்கள் பூங்காக்களெனஅசையாத மனங்கள்..நான்காம் படியில்விலங்குகள் பறவைகளெனஆர்ப்பரிக்கா கூட்டங்கள்..ஐந்தாம் படியில்மரப்பாச்சி பொம்மைகளாய்நானும் அவளும்..இடையில் …

>>

விஞ்ஞானி/பிள்ளைகளின் கொலு

அம்மா பூ விற்கும்மரப்பலகை மேடையைஅடியில் போட்டனர் நல்ல துணி வைக்கும்ட்ரங்க் பெட்டி அடுத்தபடியானது சிறிய கல்லா மரப்பெட்டிமேல் தட்டாய் அமர்ந்துக்கொண்டது அப்பாவின் வேட்டியால்மூடி கொலுப்படியைதயார் செய்தனர். அம்மா வேலை செய்யும்வீடுகளிலிருந்து வாங்கிவந்த சிதிலமானமண்பொம்மைகளுக்குஅக்கா மருத்துவச்சிஆனாள். இலவசமாய் கிடைக்கும்களிமண் புல் செடிகள்இத்யாதியுடன் கவனமாய்கொலுவை …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/சென்னை கல்வெட்டுகள்

ஆசிரியர் கலைமகள்………………… நவராத்திரியை ஒட்டி நேற்று கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன அமைதி கிடைத்தது! பொதுவாக கல்வெட்டுக்கள் பற்றி எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. வீட்டுக்கு வந்ததும் சென்னை கல்வெட்டுகள் பற்றி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். சென்னை கல்வெட்டுக்கள் …

>>

போர்ஹெஸ் கவிதைகள் / தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

வருட இறுதி இரண்டிற்குப் பதிலாக மூன்றுஎன்பதன் குறியீட்டு விபரமோஒரு பருவம் இறக்கும்போதுஇன்னொன்று உதயமாகிறதுஎன்ற கரடுமுரடான உருவகமோவானியல் செயல்பாடு ஒன்றின்நிறைவு என்பதோ அல்லாமல்இந்த இரவின் மேட்டுநிலம் என்பது நம்மைக்குழப்பி, குறைத்து மதிப்பிட்டுமணியின் சீர்படுத்த இயலாதபன்னிரெண்டு அடிகளுக்கு நம்மைக்காத்திருக்க வைத்திருக்கிறது.உண்மையான காரணம்காலமென்ற புதிரைப் பற்றியநமது …

>>

ஷண்முக சுப்பையா/தாலாட்டு

யாரும் அடிக்காமல்நீ ஏன் அழுகின்றாய்!நீ பிறக்காமலிருக்கநான் முயன்றேன்என்ற கறுப்பாலோ?காரணமில்லாமல்நீ ஏன் சிரிக்கின்றாய்?எனை ஏமாற்றிநீ பிறந்து விட்டாய்என்ற களிப்பாலோ!

>>