இது என்ன சொர்க்கம்1

ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. ‘தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா’ என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. “அம்மா! இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு …

>>

கலாரசிகன் தினமணியில்..

அவரை நான் சந்தித்ததில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளைப் படித்திருக்கிறேன். நான் அவரிடம் பேசியதில்லை. ஆனால், அவரது இலக்கியப் பங்களிப்புகள் பற்றி என்னுடைய நண்பர்களிடம் பலமுறை சிலாகித்துப் பேசியிருக்கிறேன். தமிழில் வெளிவரும் இலக்கியச் சிற்றேடுகளில் தரமானதும், தனித்துவம் வாய்ந்ததுமான இதழ் அழகியசிங்கரின் “நவீன …

>>

புதுமைப்பித்தன்/சாமாவின் தவறு

மகத்தான தியாகம் என்பதற்கு சாமாவின் அகராதியில் வெள்ளி குளத்திலிருக்கும் பாட்டியின் வீட்டிற்குப் போவது என்று பொருள். இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், வருஷம் முழுவதும் கையில் சில்லறை ஓட்டத்திற்கு மிகுந்த தடை ஏற்படும் என்று பூரணமாக அறிவான்.சாமா பள்ளிக்கூட மாணவன். கல்விக் கடலில் …

>>

எஸ்.ராமகிருஷ்ணன்/விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம்…..

விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. வங்கியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.சில ஆண்டுகளுக்கு முன்பாக பழைய விருட்சம் இதழ்களைப் பைண்டிங் செய்து புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தார். …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

13. வேற்றுமையின் எல்லை… நீலாவின் பிறந்த வீட்டாருடன் மனஸ் தாபம் ஏற்பட்ட பிறகு மீனாட்சி அம்மாளுக்குப் பாதிக் கொட்டம் அடங்கி விட்டது. யார் எங்கே அவளைப் பார்த்தாலும், “உங்கள் பிள்ளை நாட்டுப் பெண்ணின் வளையல்களை நொறுக்கி விட்டாராமே?” என்று கேட்டார்கள்.”ஆயிரம் இருந்தாலும் …

>>

தொகுப்பாளர் : அழகியசிங்கர்/வினோத செய்தி 4

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் நடத்திய பஞ்சாலைக்குச் சுப்பையாவும் சாம்பசிவமும் அடிக் கடி போய்வருவார்கள். தம் மகன் யந்திரக் கலை பயில இது ஊக்கமளிக்குமெனச் சின்னச்சாமி ஐயர் மகிழ்வார். ஒரு சமயம், சாயந்திரம் அந்தி வேளையில், இரு சிறுவர்களும் பஞ்சாலைக்குள் சுவரேறிக் …

>>

ஜெ.பாஸ்கரன்/மெளனப் பிள்ளையார் – சாவி (விருட்சம் வெளியீடு 2024)

புத்தக அறிமுகம் 11. “இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில “மெளனப் பிள்ளையார்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் …

>>

கல்யாண்ஜி கவிதை

அனாதை இல்லச் சிறுவர்கள்வேதக்கோவில் வழிபாட்டுக்குச் செல்கிறார்கள்.இரண்டு இரண்டு பேராகத்தான்செல்ல வேண்டும்.பராக்குப் பார்க்கக் கூடாதுசிரித்து விளையாடக் கூடாது.கடைசி இருவருக்கு முன்புஇடது ஓரம் இருந்த சிறுவன்நேற்றுப் பெய்து கிடந்தமழைத்தண்ணீரைக் காலால் எத்தினான்.பேருந்து நிறுத்த ஆட்டுக் குட்டியை விரட்டிவிட்டுவரிசையில் சேர்ந்து கொண்டான்.அவன் வாயில் பாதி கடித்த …

>>

தி.சோ.வேணுகோபாலன்/பல்லிடுக்கில் பழநார்

நேற்றிரவுஎன்வெறியும் உன்னதும்மோதிப் பறந்த சூட்டில்நினைவழியபின் நித்திரை இன்று காலையில்நாக்கில்மார்பக முள்நெருடியது மட்டும்நினைவு ‘ஞானரதம்’ நவம்பர் 1973

>>

ஷண்முக சுப்பையா/பசி

உனக்கும் பசிக்கும்அதுஎனக்கும் தெரியும்எனினும்யாரோ படைத்தபடைப்பைஏதோ கிடைத்ததுஎன்றுநீ விழுங்கிடவிழைந்தால்விபரீதங்கள் பலவிளைந்திடலாம்இவ்வென் கூற்றுக்குஆதாரம்எதுவேனும் வேண்டுமெனில்விழுங்கிவிட்டுவிழிக்கின்ற எனைவந்துபார்த்திடலாம்.

>>

வல்லிக்கண்ணன்/ “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

பாரதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வசன கவிதை முயற்சிகள் பாரதி காட்டிய வழியில் செல்லவில்லை; பாரதியின் ‘காட்சிகள்’ போல் அவை அமையவில்லை என்று கவிஞர் திருலோக சீதாராம் கருதினார். எனவே, ‘பாரதியின் அடிச்சுவட்டில், ‘காட்சிகள்’ என்ற படைப்பு முயற்சியை நாமும் தொடர்ந்து செய்வோமே; …

>>

திரு வி. கலியாணசுந்தர முதலியார்/பெண்ணின் பெருமை

(பெண் ஆண் வடிவம் – தாவரங்கட்கு உயிரும் பெண் ஆண் வேற்றுமையும் உண்மை. உலகம் காரியமா காரணமா என்பது – உள்ளது போகாது இல்லது வராது – கடவுளில் பெண்மையும் ஆண்மையும் – கடவுள் தாய் தந்தை – பெண் ஆண் …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தி/எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

1 “கேட்டீரா சங்கதியை” என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார்.அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது ‘நெடி’ அரை நாழிகைக்கு முன்னமே தெரிவித்து விட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் போது, “கேட்டீரா சங்கதியை” என்றார் மறுபடியும்.“போட்டால் தானே …

>>

அழகியசிங்கர்/ சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில்

தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே இல்லை. …

>>

வண்ணதாசன்/மகப் பேறு மருத்துவ மனை

அனேகமா எங்க வீட்டுத் தபால் பெட்டி ‘ மகப் பேறு மருத்துவ மனை ‘ ஆகவே ஆகிவிட்டது.நாங்கள் கண் காண, இது ஆறு அல்லது ஏழாவது குஞ்சு பொரிப்பாக இருக்கும். இரண்டு மாசம் மூணு மாசம் நாங்கள் சேர்ந்தாற்போல வெளியூரில் இருந்த …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/ஜுரதேவர்

ஆசிரியர் கலைமகள். இம்மையில் நன்மை தருவாா் கோயில்,(மேல மாசி வீதி, மதுரை) மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பான அம்சமாகும்! பொதுவாக சிவன் கோவில்களில் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

காமு வாயிற்படி தாண்டுதற்கு முன்பு விசாலாட்சி இரண்டு தடவை பலமாக இருமினாள். அப்புறம் சிறிது சுதாரித்துக் கொண்டு, “காமு!” என்று கூப்பிட்டாள். காமு வந்து அவள் அருகில் உட்கார்ந்ததும் அவள் தலையை அன்புடன் வருடிக்கொண்டே, “சாயங்கால வேளையில் என்னைத் தனியாக விட்டுவிட்டு …

>>

பிசகு -எஸ்ஸார்சி

கொனஷ்டை ஒரு எழுத்தாளரின் புனை பெயர். அவர் யாரென்று கேட்கிறீர்களா சென்னையில் உயர்நீதிமன்ற நீதிபதியாய் உத்யோகம் பார்த்த சீனுவாசாச்சாரியார் அவரே தான். அழகிய சிங்கரின் இணையதள ’ கதை புதிது’ நிகழ்வில் பேசுவதற்கு அவரின் கதைத்தொகுப்பிலிருந்து சில கதைகளைத் தேர்வு செய்து …

>>

நாகேந்திர பாரதி/கால (ஏ)மாற்றம்

அம்மா தலை வாரி விட்டகாலம் அப்போது அப்பா சினிமா கூட்டிப் போனகாலம் அப்போது அண்ணனுடன் சைக்கிள் ஓட்டியகாலம் அப்போது தோழியுடன் அரட்டை அடித்தகாலம் அப்போது ஆபீசும் அடுப்படியும்ஆஸ்பத்திரியும் இப்போது

>>

விஞ்ஞானி/தாத்தா

குடு குடுவென ஓடி வந்துமடியினில் ஏறிஎன் தலையில் கிடந்தகாய்ந்த பூவினை எடுத்துகையில் கொடுத்து விட்டுகுடு குடுவென ஓடினாள்பேத்தி காய்ந்த பூவைதலையிலிருந்துதட்டி விடுவதைஎன் அம்மாசெய்திருக்க கூடும்என் சகோதரிகளும்என் மனைவியும்செய்திருக்க கூடும்என் மகள்கள் கூடசெய்திருக்க கூடும்கவனத்தில் அப்படிமனதை தொட்டநினைவு சுவடுகள்எதுவும் இல்லை. கையிலிருந்த காய்ந்தபூவிடம் …

>>

வி.வி. கலைச்செல்வி /திரும்புதல்

ஒரு தேநீர்குடித்துவிட்டு போஎன்று சொன்னாள்நான் சந்தித்துவிட்டு திரும்பிய தோழிதேநீரும் ஒரு தோழி போலத்தான் இனிப்பு குறைவாகவும்துவர்ப்பு அதிகமாகவும்இருக்கிறது என்றேன்இருந்தாலும் என்ன.என்று சொல்லிவிட்டுஎனக்குமட்டும் இன்னும்கொஞ்சம் இனிப்பு சேர்த்தாள். இல்லாது போகையில்சேர்த்துக் கொள்வதுஎத்தனை எளிதோ அத்தனை எளிதுஇருப்பதைஅப்படியே ஏற்பதும். தாராபுரம்

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

ஒரு காகம் ஒரு காகத்திற்கு வெகு தாகமாக இருந்தது, எங்கெங்கெல்லாமோ தண்ணீருக்காக அலைந்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் குறுகிய கழுத்துள்ள ஒரு கூஜாவில் தண்ணீர் இருப்பது தெரிந்தது. ஆனால் தண்ணீர் மிகவும் அடி யில் இருந்ததால் அதனால் மூக்கை கூஜாவிற்குள் …

>>

வத்சலா/கொண்டாடுபவர்

பாடும் கடிகாரம்அதுமணிக்கொருமுறைபாடிவிட்டுநேரத்திக்கேற்பமணியடிக்கும்என் பேத்திக்குபாட்டு பிடிக்கும்என்றுவாங்கியதுஅவள் சிறுமியாக இருந்தபோது ஒவ்வொரு மணிக்கும்ஓடுவாள்அதன் முன் நின்றுபாட்டை ரசிக்க பத்தாண்டு இயங்கிய பின்நிறுத்திக் கொண்டு விட்டது இன்றுபாடுவதை மட்டும் மணி காட்டுகிறதுஅடிக்கிறது அவள் நேற்று கிளம்பினாள்கல்லூரி மாணவ விடுதியில்சேர தளம் இதழ் 25 அக்-டிச 2022

>>

வானவில் கே.ரவி/வலிகள்

(ஐந்து நாட்களுக்கு முன்பு ஓர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்பொழுது வீட்டுக் காவலில் இருக்கிறேன். முதல் மூன்று நாட்கள் அவ்வளவு வலியில்லை. நேற்றில் இருந்து வலி, வலி! தொடர்ந்து இல்லாவிட்டாலும், விட்டு விட்டு வலி. எழுந்தால் வலி, அமர்ந்தால் வலி, …

>>

அழகியசிங்கர்/கயிறு

பத்மநாபன் வயது 71. வீட்டில் தெருவைப் பார்த்தபடி இருந்த இடத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கயிறு என்ற 1504 பக்கங்கள் கொண்ட தகழி சிவசங்கரன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி பாகீரதி அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருக்கிறாள். …

>>

புதுமைப்பித்தன்/ நொண்டி

இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது.ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, சௌகரியமாகப் படுக்கையை விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது.“ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

வழிபாட்டுத் தலங்களுக்கும்மருத்துவமனைகளுக்கும்நடந்து நடந்துகால் வலித்துமனமுடைந்துதன் வீட்டுத் திண்ணையில்அமர்ந்திருக்கும்குழந்தையில்லா தம்பதி விடும்சோக மூச்சைசுவாசித்துக் கொண்டுகிளை விரித்துபூ காய் கனியெனஎல்லாம் உள்ளடக்கியஒரு நிமிர்ந்த மரம்காற்றோடு கொண்டு சேர்க்கமுயற்சிக்கிறதுதாய் தந்தையில்லாஒரு குழந்தைக்கு! நெருப்பு விழிகள்

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/விண்ணை வணங்குங்கள். மண்ணை வணங்குங்கள்

தெய்வப்பற்றுடன் தேசப்பற்றைப் போற்றுவது ஆன்மிகம். ஒரு உண்மை தேசப்பற்றாளன் வாழ்வில் சமீபத்தில் நடந்தது இது. கடல் மட்டம் மேல் 20,000 அடி உயரத்தில் சியாச்சின் பகுதியில் படை வீரர் அன்ஷுமன் சிங் பணியாற்றினார். 2023 ஆம் ஆண்டு ஜூலை 19 ம் …

>>

திண்டுக்கல்சமையல்/வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி …

. வேர்க்கடலை சட்னி செய்வதற்கு ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் அரை கப் அளவு வேர்க்கடலையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் அளவு …

>>

நாகேந்திர பாரதி/சொல்லுக சொல்லை

விழுந்த சொல் ஒன்றுமுளைத்து எழுந்துகிளைகள் பரப்பிஇலைகள் முட்களாய்க்குத்தவும் செய்யலாம் விழுந்த சொல் ஒன்றுபூத்துக் குலுங்கிவண்ணம் காட்டிமணத்தைப் பரப்பிமயக்கவும் செய்யலாம் ——

>>

விஞ்ஞானி/ஐந்தும் அவளும்

: அவளது கண்களிலே இருபதுகளில் தென்றலாய்வீசும் காற்று நாற்பதுகளில் கோபமாய்தெறிக்கும் நெருப்பு அறுபதுகளில் ஆற்றாமல்வழியும் நீர் எண்பதுகளில் வெறித்திடும்வெற்றிட வெளி இறுதியில் அணைத்துவருடிடும் நிலம் ()

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று மாலை –(27.09.2024)6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 98 திலீப் குமார் கதைகள் கடிதம் – டாக்டர் பாஸ்கரன் கண்ணாடி – கே.வைதேகி மூங்கில் குருத்து – பேராசிரியர் …

>>

அனங்கன்/நெய்மட்டுமா பொய்…?்்்்

உண்மைக்கருகில் எதுவுமில்லை என்றால்…பொய்யின் அலங்காரத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…நாம் அப்படித்தான்வாழப்பழகிக்கொண்டிருக்கிறோம். கடவுளைக்கூட அப்படித்தானென்றால்…அது நாத்திகவாதமாகிவிடும். பாலே உண்மையில்லை என்றாலும்…அந்த வெண்நுரையை அரசாங்க அங்கிகாரத்தோடு ஏற்றுக்கொள்கிறோம். எல்லா உணவுப்பொருள்களிலும் கலப்படம் இருக்கிறது…உணவுப்பாதுகாப்புத் துறையின் வரையறை எல்லையோடு… ஏலஎல்லை விலைக்குள் என்றுமே தூய்மையான நெய்யை அடையமுடியாது… …

>>

வே.கல்யாண்குமார்/சுற்றுலா

.. அரசியல்வாதி யெல்லாம் அமரிக்கா போகின்றான்! அன்றாடம் காய்ச்சிகளோ தெருத்தெருவாய்ப் போகின்றான்! கோடியிலே மிதப்பவனோ கோவாக்கு போகின்றான்..கோடிவீட்டு குப்புசாமி கோவில்குளம் போகின்றான்! குளுகுளு வண்டியேறிகொடுத்துவைத்தோன் போகின்றான்.. முன்பதிவில்லாப் பெட்டியிலே.. முட்டிமோதி யார்போவார்? சுற்றிவந்தால் சுகம் என்று சுற்றுலா சிலர் போக.. பற்றுடனே.. …

>>

வவேசு/மந்தையினம்

பரந்த புல்வெளியில்மர நிழல்கள் குடைவிரிக்கும்;புல்வெளிக்கு இடையும்சில பூக்கள் தரை நிரப்பும். மேய்ச்சல் நிலம்,மந்தை மந்தையாய் ஆடுகள்பாய்ச்சல் பழகும் களம். நாவால் புல்லை இழுத்து மடக்கிகழுத்தை நிமிர்த்திக்களை எடுப்பது போல்புல்லசை போடும் ஆடுகள் ஆடுகள். இன்றே மொத்தப் புற்பரப்பதனைதின்று முடிக்கத் தீவிரம் போலக்குனிந்த …

>>

திருப்பதி லட்டு/அழகியசிங்கர்

நான் எழுதியதிருப்பதி லட்டு என்றகவிதைமாயமாக மறைந்து விட்டதுபோனில் எனக்குலட்டு மீது இருந்தபிரியம் இப்போது இல்லைதிருப்பதி கோயிலுக்குச்சென்றால்லட்டு வாங்கும் கூட்டத்தில்இனிமேல்நிற்க மாட்டேன்.. ஆனால்லட்டு வாங்காமல்திருப்பதி கோயிலுக்குச்செல்வதும் என்னால் ஏற்கமுடியவில்லை

>>

இஞ்சி துவையல் செய்வது எப்படி/திண்டுக்கல்சமையல்

இஞ்சி துவையல் செய்ய முதலில் 50 கிராம் அளவு இஞ்சியை தண்ணீரில் கழுவி அதன் தோலை சீவி தொண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் …

>>

கல்கி/”தப்பிலி கப்”

கிண்டி குதிரைப் பந்தய மைதானத்திற்குள் நீங்கள் எப்போதாவது பிரவேசித்ததுண்டா? இல்லையென்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால், அந்தப் பூலோக சொர்க்கத்துக்குள் நானும் நுழைந்தது கிடையாது. இந்தக் கதையைப் பொறுத்த வரையில் அந்த மைதானத்திற்குள் நீங்கள் பிரவேசித்திருக்க வேண்டுமென்னும் அவசியமும் இல்லை.ஆனால் குதிரைப் …

>>

வி.வி.கலைச்செல்வி/ஒரு பரிசு ஒரு கவலை

என் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து எழுதிக் கொண்டு வா என்றாள் என் தோழிசத்தியமாக எதை எழுதுவது.?எதைவிடுவது.? என்று தெரியவில்லை. எதையாவது எழுதிவிட்டால் எதற்கு உனக்கு இந்த வேலையென்று .?கோபித்து கொள்வாள்எதையாவது விட்டுவிட்டால் உனக்குத் தெரிந்ததுஇவ்வளவுதானா.? என்பாள் ஏன் வம்பென்று வெறுங்கையை …

>>

அழகியசிங்கர்/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 3

இரு பெண்மணிகள் போலந்து நாட்டில் பிரபு குலப் பெண்மணிகள் இருவர் தத்தம் குதிரை வண்டிகளில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது வண்டிகள் ஒரு குறுகிய சந்தில் எதிரெதிராக வந்து நின்றுவிட்டன. எவராவது ஒருவர் மற்றவருக்கு வழி விட்டாலொழிய இருவருமே அச்சந்தைக் கடக்க …

>>

எல்.ரகோத்தமன்/படிக்கட்டுகளில் நெளியும் அரவம்

ஏறுவதற்கு மட்டுமல்லஇறங்குவதற்கும் கூடதேவை படிக்கட்டுகள்! அந்தவேடிக்கை மனிதர்கள்மிகவும் உற்சாகமுடன்பரவசமாய்மேலிருந்து கீழேகீழிருந்து மேலேநகர்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த சுறுசுறுப்பானநகரும் படிக்கட்டுகளில்வேடிக்கை மனிதர்களைவேடிக்கை பார்த்தபடி கடத்தும் நொடிகளில்என் காலுக்கடியில்ஓர் அரவம் போல் ஊர்கிறதுஒரு தயக்கம்!ஒரு அச்சம்!அது விரிக்கிறது ஒரு தடைசுழன்றுவரும் படிகளில்கால் வைக்க! என்னுள் அழகாய்படமெடுத்தாடுகிறஅரவத்திடம்தினம் …

>>

வல்லிக்கண்ணன்/வேலைக்காரி

”நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேணும்” என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம்.“ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?” என்று கேட்டார் பிள்ளை.”அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!” என்று சொல்லி, …

>>

திலீப் குமார்/நிலை

இவன் மெதுவாக நடக்க ஆரம்பித்தான். அந்த அகலமான கடைத்தெருவின் வலது கோடியிலிருந்த எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டிருந்தன. இவன் வேலை பார்த்த கடையையும் சற்று முன்தான் மூடியிருந்தார்கள். மறு கோடியில் இன்னும் நிறைய ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் திறந்திருந்ததை …

>>

அ. முத்துலிங்கம்/வடக்கு வீதி

அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் …

>>

திண்டுக்கல்சமையல்/மிளகு ரசம் செய்வது எப்படி …

மிளகு ரசம் செய்வதற்கு முதலில் ஒரு இடிக்கின்ற உரலில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக பொடி போல இடித்து எடுத்துக் கொள்ளவும். ஒருவேளை உங்களால் இடிக்க முடியவில்லை …

>>

கொனஷ்டை/வசீகரணம்

சென்னை பீபிள்ஸ் பார்க்கில் எனது சீமாட்டியின் நந்தவனம் என்று பெயரிட்டு ஒரு குளிர்ந்த சோலையை அதிகாரிகள் சிருஷ்டித்திருக்கிறார்கள். வெயிலின் தாபத்தினின்று தப்பித்துக்கொள்ள அது சரியான புகலிடம். அங்கே ஒரு நாள் உட்கார்ந்து பகற்கனவுகண்டுகொண்டிருந்தேன்.“நீங்கள் யார் ஐயா?” என்று ஒரு குரல் இரண்டு …

>>

ஷண்முக சுப்பையா/கடற்கரை

கடற்கரை யெல்லாம்சர்க்கரையென்றுகண்டவரெல்லாம்சொன்னார்கள்.சொன்னதைக் கேட்டுசுப்பென்றோனும்அப்பென்றோனும்அதைப் பார்த்திடவேசென்றார்கள்.சென்றவர் வந்துகடற்கரையெல்லாம்சர்க்கரையேகடல் நீர் மட்டும்உப்பென்றார்!

>>

திண்டுக்கல்சமையல்/தேங்காய் பால் சர்பத் செய்வது எப்படி

.. வெயில் அதிகரிக்க அதிகரிக்க நீர் அகாரமாக குடிக்க வேண்டும் என்று எண்ணம் அதிகரிக்க துவங்கியுள்ளது. நீர்மோர், இளநீர் என துவங்கி கரும்பு சாறு, சர்பத் என அதிக நீர்ச்சத்து நிறைந்த பொருட்களை நாம் தினமும் குடித்து வருகிறோம். அந்த வகையில் …

>>

‘எம்பாவாய்’ /அழகியசிங்கர்

ஆகஸ்ட் மாதத்தில் வெளியான கதைகளில் என் மனதுக்குப் பிடித்த கதைகளைத் தேர்ந்தெடுக்க நினைத்தேன். அவற்றில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் தோன்றியது. கதைகளைப் படிக்க நான் தேர்ந்தெடுத்தப் பத்திரிகைகளின் விபரத்தையும் இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

>>

ம.பொ. சிவஞானம்./இலக்கியத்தின் எதிரிகள்

கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர் சிலப்பதிகாரத்திற்கு சிறப்புத்தேட தேசீய வாதிகள் மாநாடு கூட்டுகின்றனர் என்ற செய்தி கேட்டவுடனே திராவிடக்கழக் வட்டாரத்தில் கலக்கம் கண்டு விட்டது. தேசீய வாதிகள் என்றாலே, வடமொழிக்கும் வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள்; தமிழுக்கும் தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை …

>>

வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

‘பிக்ஷு’வின் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டு, நானும் கவிதைகள் எழுதலானேன்-1942 முதல், 1943ல் நான் ‘சினிமா உலகம்’ என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையின் துணை ஆசிரியர் ஆனதும், எனது கவிதைகள் அதில் அவ்வப்போது அச்சாயின. அந்த சமயத்தில் நாட்டியக்காரி, ஆடும் அழகி, கலை, சினிமா …

>>

புதுமைப்பித்தன்/ நல்ல வேலைக்காரன்

1மார்த்தாண்டம் பிள்ளைக்குக் குடும்பக் கவலை என்ற தொந்தரவு ஒன்றும் கிடையாது. மனைவி இறந்து வெகு நாட்களாகி விட்டது. பிள்ளை குட்டி என்ற விலங்குகள் அவருக்குத் தெரியாது. பொழுது போக்காக ஒரு மருந்து ஷாப் வைத்திருக்கிறார். அத்துடன் கொஞ்சம் லேவாதேவியும் உண்டு.அவருடைய வேலைக்காரன் …

>>

வல்லிக்கண்ணன்/ உடைந்த கண்ணாடி

“காந்தி!”குளுகுளு என்று பசுமை கவிந்திருந்த மாந்தோப்பில், மாமரங்களுக்கிடையே வளைந்து நெளிந்து அழுத்தமாகப் பதிந்து கிடந்த ஒற்றையடித் தடத்தில் அவசரமற்று நடந்து கொண்டிருந்த யுவதியைக் குலுக்கியது அந்த அழைப்பு.தனது நினைப்பும் தானுமாய் மெது நடை நடந்த அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். முன்னாலும் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

நீலாவின் மனக்கசப்பு வருஷப் பிறப்பிற்கு ‘அடுத்த நாள் மத்தியானம் சம்பகம் பகல் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு, வாசல் அறையில் உட்கார்ந்திருக்கும் சர்மாவின் எதிரில் வைத்து விட்டுத் திரும்பினாள். உற்சாகம் இல்லாமல் களை இழந்து வாடிப்போய் இருக்கும் அவள் முகத்தைச் சிறிது நேரம் …

>>

பிஸ்ரீ/நான் அறிந்த தமிழ் மணிகள்

நம் தேசிய மகாகவி இருபதாண்டுகளுக்கு மேலாக நாம் வளர்த்து வரும் சுதந்திரத்திற்கு இத்தமிழகத்தில் அடிப்படை அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்று பேசிக்கொண்டு வந்தேன் நண்பர் முதலியாரிடம்.”அப்படி அவர் என்ன செய்து விட்டார்?”சுந்தர முதலியாரே! உம்மைச் சுதந்தர முதலியார் ஆக்கி விட்டார்!”“அதனால் என்ன …

>>

மோகன் ஜி/இல்லாமை

பூக்காத செடிக்குஇலையே தான் பூவடியோ!பிள்ளையிலா பெண்ணுக்குபுருஷனே தான் பிள்ளையடி! ஆலையில்லா ஊருக்குசர்க்கரை இலுப்பையடி!ஆளில்லாக் கோயிலுக்கோவௌவாலே பக்தனடி! வேகமில்லா வண்டிக்குசாலையிறக்கம் வேகமடி!வேலையில்லா வீணனுக்குஊர்வம்பே வேலையடி! ரசிச்சவன் கண்ணுக்குராட்சசியும் ரம்பையடி !பசிச்சவனுக்கே பழையசோறும்பந்தி வைச்ச விருந்தடியோ! கெட்டுப்போன உறவுக்கேதிருவிழா ஒரு குசலமடி!விட்டுப்போன மனசுக்குஊர்சேவை மருந்தடியோ! …

>>

தி.சோ.வேணுகோபாலன்/கொலை

வானத்தவளையின் முட்டைகள்தார்பூசியதெருவில்சிதறபிறந்துடன் பறந்துமறையும் பூச்சிகள்நிறமற்ற ரத்தத்தில்நனையும்தெரு ‘கணையாழி’ மே 1973 .

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி அன்று(20. 09.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்து முடிந்தது. அந்நிகழ்ச்சியை இப்போது காணோளியில் காணுங்கள். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 25வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

நாடு வளர, மக்கள் முன்னேற, உழைப்பு, பெரும் உழைப்புத் தேவை. பாரதப் பெரு நாடு வளர, கோடி கோடி கைளின் உழைப்புத் தேவை. கோடி கோடி கைகள், கூடிக் கூடி உழைத்தால் கோடி, கோடி நன்மை, தேடித்தேடி வரும் ; உண்மை.ஆளை …

>>

ம.பொ. சிவஞானம்/ இலக்கியத்தின் எதிரிகள்”

‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’என்பது பழமொழி. அதுபோல, ஒரு கவிஞனின் உள்ளத்தை- உணர்வை இன்னொரு கவிஞந்தான் சரியாக அளந்து காட்ட முடியும். அறிஞன், கவிஞனை அனுபவிக்கலாம். ஆனால், கவிஞனுடைய உள்ளத்தின் ஆழத்தை அறியமுடியாது. அதனாற்றான்;”அணிசேய் காவியம் ஆயிரங்கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்” என்றார் …

>>

“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” / வல்லிக்கண்ணன்

5. கு.ப.ரா. கவிதைகள் புதுக்கவிதை வரலாற்றில் கு.ப.ராஜகோபாலனின் கவிதைகளுக்குத் தனியான-முக்கியமான-ஒரு இடம் உண்டு. அவர் வசன கவிதைகள் தான் எழுதினார். அதிகமாகவும் எழுதி விடவில்லை. ‘மணிக்கொடி’ நாட்களில் 24 கவிதைகள், ‘கலா மோகினி’யில் 5 கவிதைகள். இவ்வளவே-நான் அறிந்தவரை-அச்சில் வந்தவை. ‘நமக்குத் …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதைகள்

நீர்த்தட்டானின் கண்ணாடிச் சிறகெனவிரிந்த ஆகாயம் விரிசல்கண்டிருக்கிறது ராகம் பைரவிமட்டும் அதையும் மீறிமேலெழுவதன் தடுமாற்றம்தான் எல்லாம் எல்லாவற்றின் இருப்பும் என்னை மிகுந்த பதற்றத்துக்கு உள்ளாக்குகின்றன, சின்னஞ்சிறிய பூச்சி முதல் தெய்வீகத்தின் புதிர்கள் வரை; எல்லாமே எனக்கு விளக்கமளிக்கமுடியாதவையாக இருக்கின்றன. எல்லாமே தொற்றால் பீடிக்கப்பட்டிருக்கிறது. …

>>

திருப்பதி லட்டு/ஜெயதீபன்

திருப்பதி லட்டு தொடர்பாக நம் மனம் போன போக்கில் விமர்சனம் செய்யக்கூடாது .ஒரு வேளை ஜெகன் மோகன் ஆட்சியில் இது நடைபெற்றிருந்தாலும் ஆட்சிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை . லட்டு தயாரிப்பு முழுவதும் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த லட்டு தயாரிக்கப்படுவதற்கு …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள் ஒத்தைப் பனை மரம் கள்ளு இறக்கிய காலத்தில்காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில்கஞ்சி குடித்தவர் பல பேர் காஞ்சு போன காலத்தில்மட்டை உரித்தவர் சில பேர் உறிஞ்சு விழும் சட்டத்தில்முதுகு …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

மோகன் லால்ஜி கோரக்பூர், கல்யாண் பத்திரிகையைச் சேர்ந்த ஸ்ரீமோகன்லால்ஜீ நமது சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்தவர். ஒரு சமயம் அவருடைய குழந்தையொன்று காலமாகிவிட்டது. அதை அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவர் மிகுந்த துக்கத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் …

>>

வி.வி. கலைச்செல்வி/சாமிகளின் உருளுகிற தலை

அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்று வந்தார்கள்அம்பது ரூபாய் தந்தேன் கருப்புசாமிக்கு கட்டிடம் கட்டுகிறோம் என்று கறாராக நூறு கேட்டார்கள்கடனே என்று கொடுத்தேன் வருகிற புண்ணியத்தில் பாவத்தை கழுவிக் கொள்ளலாம்என்கிற நினைப்பில் விழுந்ததெல்லாம் மண்தான் நேற்று அந்த வழிபோகும்போது பார்த்தேன். கருப்புசாமி அதே …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/எம்.எஸ். …சில நினைவலைகள்

(பகுதி 2: நிறைவுப் பகுதி) *கலாட்சேத்ரா அரங்கில் காற்றினிலே வரும் கீதம் இயலிசை நாடக முத்தமிழ்ப் படைப்பு நடந்துமுடிந்து, சிறிது காலம் சென்றது.கெளரி ராம்நாராயண் கல்கியின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் புத்தகமாக்கினார். (தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதக் கூடிய வல்லமை …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

19/9/24இணையக்கவியரங்கில்வாசித்த கவிதை வந்தே மாதரம் எத்தனைக் கீழ்மைஎன் தாய் நாட்டிலேஉயிர்காக்கும் மருத்துவரைக்கற்பழித்துசீரழித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்மமதாவும் உண்டுமாகாளியும் உண்டுஅதே வங்கத்தில்தான்.இந்திய விடுதலையின்மூச்சுக்காற்று வந்தேமாதரம்வழங்கிய பங்கிம் சந்திரர்வாழ்ந்த மண்ராமகிரு‌ஷ்ண விவேகாநந்தரும்தாகூரும் நேதாஜியும்நிவேதிதாவும் சாரதாதேவியும்வழிகாட்டிய தேசம் இதுஉயிர்காக்கும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில்பெண் மருத்துவருக்கு அரங்கேறிய அவலத்துக்குநாம் வதியும் …

>>

திருமதி சாந்தா ரங்காச்சாரி/சத்குரு ஸ்ரீ ரமண மகரிஷி – ஸ்ரீ ரமணாச்ரமம்

1934-ஆம் வருடத்தில் எனக்கு எழுதப்பட்ட கடிதம் 1 தொலைந்து போனது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது.பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, திருவண்ணாமலை (நேரடி கவனத்திற்கு) என்று விலாசமிட்டு நான் எழுதிய கடிதத்திற்கு வந்த பதில் கடிதம்தான் அது. என்னுடைய மிகவும் தீவிரமான …

>>

மதுவந்தி கவிதைகள்

அடையாளம். வாக்களித்த அடையாளமாய்இடதுகை ஆட்காட்டி விரலில்நெடுநாளாய் மைத் தீற்றல். பிறை நிலா போலதுளித்துளியாய்தேய்ந்தபடியே இருந்தது . காலையெழுந்துஉள்ளங்கை தேய்த்துவிழி மூடித் திறக்கையில்நகத்தில் மையின்அடையாளமேயில்லை. இந்த அடையாள மை போலஉன் நினைவையும்இட்டுக் கொள்ளவும்நீக்கிக் கொள்ளவும்வாய்க்குமானால்வாழ்வு எத்தனைசுலபமாகி விடக்கூடும்?. எதிர்த் திசை. விடுமுறையில் வந்திருந்தபேத்தியுடன் …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் இன்றைய கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1அரைவட்டம் கொஞ்சம் பொறுங்கள்வசந்தத்துக்கு முன்இலைகளை உதிர்க்கத்தான்வேண்டும் நான் உணர்கிறேன்எங்கோ எவரோ என்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்என்று நான் நிலத்திலும்நீரிலும் நடப்பேன்புற்கள் நசுங்காதுஅலைகள் எழாது காற்று மரங்களைஉலுக்கும்விழுந்த சருகுகள்அண்ணாந்து மரத்தைவியந்து பார்க்காதுஅதற்குத் தெரியும்தான் அங்கிருந்துதான் வந்திருக்கிறோமென… 2ஆகக்கடவது நான் …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

(20/9/24 அன்று நடந்த 25 ஆவது கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்) 1, போதும் நான் உன்னை மதித்தேன்காதலித்தேன் நீ என்னைமதித்தாய்காதலித்தாய் நீ இல்லைஎன் வாழ்க்கையில்இப்போது நான் மதித்த நீஎன்னை காதலித்தாய்ஒரு குறுகிய காலத்திற்கு காதலிக்கிறாய்என்னைஎன் கனவுகளில் ஏன் விலகினாய்நமது நட்பை …

>>

அதிரன் கவிதைகள்

விடாது அழுது கொண்டிருந்தகைக் குழந்தையிடம்எதோ ஒரு மொழியில்எதோ ஒரு வார்த்தையால்சமாதானம் சொன்னாள் பாட்டிசற்றைக்கெல்லாம் சிரிக்கத்தொடங்கியது குழந்தைதெய்வங்கள் பேசிக் கொள்ளும்வார்த்தைகளுக்குமொழியும் அர்த்தமும் தேவையில்லை போலும்.. – வாங்கி தந்தபலூனை காற்றில்நழுவ விட்ட மகன்பறக்கிறது பார்.. பறக்கிறது பார்என்றான்வாயு நிரப்பபட்ட பலூன்எல்லையில்லா வெளியில்உயர உயர …

>>

க.நா.சு. /அலமேலு

தனக்கு அலமேலு என்ற பெயர் வைத்திருந்தது பற்றி அவளுக்கு அளவு கடந்த கோபமும் ஆத்திரமும் வந்தது. ஆனால், வந்து என்ன செய்வது? பெயர் என்னவோ வைத்துவிட்டார்கள். இனி அந்தப் பெயர்தான் நிலைக்கும்.அலமேலு என்கிற பெயருடன் தற்காலத்துக்கேற்ற நாகரிகமான வாழ்க்கை நடத்த முடியும் …

>>

இசை புதிது மாதாந்திர நிகழ்வு (14/9/24 மாலை 6 30 மணிக்கு ஜூம் மில் ) 👇👇 Topic: Alagiyasingar’s Zoom MeetingTime: September 14 , 2024 06:30 PM India Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09&omn=81848059726 Meeting ID: 619 …

>>

புதுமைப்பித்தன் /இரண்டு உலகங்கள்

ஊழியன், 12-10-1934 1 ராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், …

>>

இதைப் போலத்தான் அதுவும்/வி.வி. கலைச்செல்வி

நேற்று எப்படியோ அப்படித்தான்இன்றும் இருந்ததுஎன்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. உறுதியாக கூறினால் அது உண்மையானதாகவும் இன்னும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். எல்லா உறுதிக்கும் இங்கே இப்போது சாட்சிகள் கேட்கிறார்கள். அது எப்போதும் என்னால் முடியாமல் போய்விடுகிறது. நேற்று ஒரு கவிதையை ரசித்தேன்இன்று …

>>

ரவி அல்லது/ஞாபக மூட்டிடாத அழைப்புகள்

அள்ளித்தந்த வாசனையைபூக்களென்றுசொன்னால்என்ன செய்வது.பருகத் தந்தஅன்பைபானமெனச் சொன்னால்என்ன செய்வது.பறக்கக் கொடுத்தவானத்தைபார்த்துக் கொண்டிருந்தால்என்ன செய்வது.இவ்வாறானபுறக்கூத்தில்நீங்கள்அழைக்கும் பொழுதுஎன்னைநான்மறந்துபோனேனேஇப்பொழுதுஎன்ன செய்வது… *

>>

நாகேந்திர பாரதி/வேலை இல்லா வேளை

திட்டியும் பார்த்தாச்சு – யாரும்திரும்பத் திட்டவில்லை பாராட்டியும் பார்த்தாச்சு – யாரும்திரும்பப் பாராட்டவில்லை அவனவளுக்குஅவளவன் வேலை நமக்கு என்னமோஇதுதான் வேலை

>>

சுரேஷ்ராஜகோபால்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை 1. குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது/களிப்புடன் இருக்க மகிழ்ச்சி வேண்டும்/இன்பத்தில் திளைக்கவெற்றிகள் வேண்டும்/துன்பத்தைக் கடந்தால் துணிந்திடு. 2. குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஅதிகாலை விழித்தல் சாலச் சிறந்ததுவருடத்துக்கொரு முறை தீபாவளி வரும்சிலந்தி வலையில் பூச்சி. 3. குளிக்காதவருடன் …

>>

பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்/எஸ். வையாபுரிப்பிள்ளை

பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச்செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன் முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல் காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் ‘பாட்டு’ என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80, உரை). …

>>

ம.பொ. சிவஞானம்/”இலக்கியத்தின் எதிரிகள்”

பூங்காவை போர்களமாக்குவதா? “இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. .. என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்த பண்புடைய அன்பர்கள் பலர், ராமாயணத்தைப் பற்றி எனது கண்ணோட்டத்தின் வழி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரவேண்டுமென்று கடிதங்கள் மூலமும் நேரிலும் என்னை வற்புறுத்தி வருத்துகின்றனர். …

>>

கடிதம்/புதுமைப்பித்தன்

சிங்கார வேலு ஓர் இலக்கிய கர்த்தா. வாழ்க்கையின் இலட்சியங்களை, வாழ்க்கையின் சிக்கல்களை – ஏன், வாழ்க்கையையே – திறந்து காண்பிக்கும் ஜன்னல்கள்தாம் சிறுகதைகள் என்றால் அவைகளுக்கு உதாரணம் சிங்கார வேலுவின் கதைகள்.‘பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்!’ என்று அவர் ஒரு நாளும் கனவு …

>>

செ.புனிதஜோதி கவிதை

பூ விழுதலைஇயல்பாய்ஏற்றுக்கொள்ளும்நிலமாய் இருந்திருக்கிறாள் காலம் முழுதும்அவள் மீதுவெயில்படர்ந்தும்ஒருமுறை கூடசலித்துகொள்ளவில்லைஇவ் வாழ்வை பனைமரத்தில்இருவாசல் வைத்துகட்டும்தூக்கணாங் குருவியின்கூடு போன்றதுவாழ்வு என்கிறாள் வாழ்வைஇனிதாய்காண்பவளிடத்தில்இதுபோன்றசொற்களைத்தவிரவேறு என்னஎதிர்ப்பார்க்க? இருள் நெருங்கமுடியாஒளியவள்..

>>

வினோத செய்தி 3/தகவல் : அழகியசிங்கர்

உலகையே அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா லெபனானை ஆட்டிப் படைக்கும் பரிதாபம் வாஷிங்டன், செப். 19- மேற்காசியாவில் உள்ள மிகவும் குட்டி நாடான லெபனானில் அதிபர். பிரதமர் அடங்கிய அரசு உள்ளது;ராணுவமும் உள்ளது. ஆனால், இவை அனைத்தும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதுவே, …

>>

மோகன் ஜி/ நானுமது….

நான்போஜராஜனல்லகவிதைக்கென உயிரை விட்டுவிட. நான்பிருதிவி ராஜனல்லஒரு சம்யுக்தையை தூக்கிச் செல்ல. நான்தேசிங்கு ராஜனல்லசெஞ்சிக் கோட்டையைக் கட்டி ஆள. நான்ராஜ ராஐனல்லதஞ்சையில் கோயிலை நாட்டிச் செல்ல நான்கவிராஜன் பாரதி வம்சம் உயிர்ப்பிக்கும் கவிதை சொல்லி,சம்யுக்தைகளுக்கு காதல் சொல்லி,கோட்டைகளில் தமிழை ஏற்றி,கோயில்களில் பாசுரம் பாடி,திரிகின்ற …

>>

அன்னபூரணி/கழுத்து வலி

நான் சுரேஷ். பத்தாம் வகுப்பு படிக்கிறேன். என் தங்கை யாமினி, எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.இன்று காலை எழுந்ததிலிருந்து கழுத்து வலி. இடதுபுறம் திரும்ப முடியவில்லை. யாராவது இடதுபுறத்திலிருந்து கூப்பிட்டால் தலையைத் திருப்ப முடியாமல் முழுதுமாய் நானே திரும்பி என்னவென்று கேட்கிறேன்.“என்னடா? கழுத்து …

>>

சசிகலா விஸ்வநாதன்/ராவுத்தர் வீட்டு பூனை

வெகு நாட்களாக ராவுத்தர் வீட்டில்தான் வாசம்.இறாலின் வாசனை தான் பிடிக்க முடியுமே தவிர ; ஒருநாளும் கிடைக்காது,ஒரு இறால் துண்டு.இன்று மீன் வாங்கி வந்தவுடன் ஷஹிரா மீனை கழுவி திருத்தும் போது, நழுவி கீழே விழுந்ததை அவள் கவனிக்கவில்லை.மீனை கவனமாய் கவ்வி …

>>

ஜெ.பாஸ்கரன்./கடைசி குரு (தீபன் – புஸ்தகா பப்ளிஷிங்)

புத்தக அறிமுகம் – 10 மகாபாரதத்தில் உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுகின்றது. நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் மகாபாரதம் பற்றிப் பேசுகின்றன. கட்டுடைக்கிறேன், மாற்றி யோசிக்கிறேன் என்று கூறி மகாபாரதத்தை சிதைக்கும் புத்தகங்களும் உண்டு! மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் உண்டு என்பதால், …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/முக்கூடல்………..

ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்று அழைக்கும் மரபு உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும்,மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். ’கிருதமாலா’ ‌எனும் பெயர் கொண்ட ஆறு மதுரை மாநகரை இரு பிரிவுகளாகச் …

>>

வினோத செய்தி 2/தகவல் : அழகியசிங்கர்

கல்திருப்பி உள்ளான் பறவை பள்ளிக்கரணையில் முதல்முறை வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது.இங்கு வரும் பறவைகள், கணக் கெடுப்பு வாயிலாக பதி பதிவு செய்யப்படுகிறது.இவ்வகையில், ‘தி நேச் சர் டிரஸட்’ வாயிலாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதுவரை, 199 …

>>

ரவி அல்லது/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.துவைக்காத துணி போடவும் இயலாது.அழுகாத குழந்தைக்குபால் கிடைக்காது.முயலாமல் வெற்றி வாய்க்காது.*–

>>

ஹரணி/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுமுடியாது குளித்தவருடன் குடும்பம் நடத்துவதும்நடத்துவது நாராயணன் செயலல்ல குடும்பம்குடும்பம் சமயத்தில் கல(ழ)கம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌

இன்றைய அழகிய சிங்கரின் என்பா (1)குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌குடிப்போருடனும் குடும்பம் நடத்த முடியாதுஇவர்கள் “இன்னார்” என்று எப்படிஇனம் கண்டு கொள்வது? (2)குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.காமாந்தகருடனும் குடும்பம் நடத்த இயலாது.குறிக்கோள் இல்லாதவருடன் வாழ இயலுமா?விதி விட்ட வழி. (3)குளிக்காதவருடன் குடும்பம் …

>>

ப.மதியழகன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா 1குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஹிப்பிகளின் வாழ்க்கைமுறை நமக்கு ஒத்துவராதுகிருமிகளின் கூடாரம்தான் இந்த உடல்குளிக்காமல் இருந்தால் எப்படி? 2குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்தெரியாமலா சொல்லி இருப்பார் திருமூலர்புரிந்ததா போய்க் குளியுங்கள்…

>>

செந்தில் பிரசாத்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.எந்த கேள்விக்கான விடை இது?குளித்தவருடன் குடும்பம் நடத்த முடியுமா?பிடித்தவருடன் மட்டுமே முடியும்.

>>