நகுலனின் சுருதி கவிதைகள்

தேடல் எதைத் திறந்தால்என்ன கிடைக்கும்என்றுஎதை எதையோதிறந்துகொண்டேஇருக்கிறார்கள். நினைவு ‘யார் தெரியவில்லையே”என்றார்அப்பொழுது அவருக்குவயது 68 இருக்கும்“டி. கே. துரைசாமி”என்றேன்“அடப் பாவி, நீயா?” என்றார்வழக்கம்போல் பொழுதுவிடியும் வரைபேச முடியாது அவரால்என்று கண்டவன்“உவப்பக் கூடிஉள்ளப் பிரிதல்”இனி இயலாதுஎன்றுவழி நீளஅவர் நினைவு உடன் வரஊர் திரும்பினேன்.

>>

நடமாடும் தையற்காரர்

சிறுகதை: கு. மா. பா. திருநாவுக்கரசு தாகீர் பாய் ஒரு ராசியில்லாத நடமாடும் தையற்காரர். தெருவோர மரத்தடி நிழலில் தினமும் கடை போடுவார். காலால் மிதித்து ஓட்டும் பழைய தையல் இயந்திரத்திற்கு, பற்றவைத்துப் பொருத்திய நான்கு சக்கரங்கள் தேய்ந்த நிலையில் இருக்கும். …

>>

என்பா48, 49

அழகியசிங்கர் என்பா 48 இன்று சரஸ்வதிபூஜையென்று தெரியும்விரட்டுகிறாள் மனைவிசந்தனம் குங்குமம்எடுத்துக் கொண்டுகிளம்பினேன். வரிசையாய்நின்ற வண்டிகள் சிரித்தன என்பா 49 சிலர் சந்திப்பதாகக்கூறினார்கள். எப்போதுஎந்த இடத்தில் என்று கூறவில்லைஏன் சந்திக்க வேண்டும்என்றகேள்வியைக் கேட்கிறேன் இப்போது

>>

இலக்கிய இன்பம் 1

கோவை எழிலன் இத்தொடரைத் கடவுள் வாழ்த்துடன் தொடங்கலாம் என்றால் சிலர் கடவுள் ஒருவரே என்றும் சிலர் பல கடவுளர் உள்ளனர் என்றும் கூறுகின்றனர். கடவுளரின் தன்மையும் அவர்களிடையே வேறுபடுகின்றது. சிலரோ இத்தன்மை கடவுளுக்கு உண்டு என்கின்றனர்; சிலர் இல்லை என்கின்றனர். சிலரோ …

>>

யார்

புஷ்பால ஜெயக்குமார் யாரோ ஒருவர்  எழுதிக்கொண்டிருக்கிறார்  அவர் யார் என்று  எனக்குத் தெரியாது  அவர் இதற்கு முன்  எழுதியவராக இருக்கலாம்  இனிமேல்  எழுதப் போகிறவராக  இருக்கலாம்  எதோ ஒன்று  நடந்து கொண்டே இருக்கிறது  என்னால்  தொடமுடியாத தூரத்தில்  என் தலை இருக்கிறது  இருந்தாலும் …

>>

நாளெலாம் எனைப் பிரியாது இருக்க வேண்டும் கலைமகள் துதி- தொடர்ச்சி

Inbox பானுமதி ந நாளெலாம் எனைப் பிரியாது இருக்க வேண்டும் கலைமகள் துதி- தொடர்ச்சி மண்ணிலே பிறப்பெடுத்தும் மறை வேதவன் நாயகி நினைக் கண்ணென நினைக்கும் கருத்தழிந்தேன் இன்று எண்ணியே வருந்துகிறேன் என்னிலே உனை ஏற்றுவதை உன்னியே உணரச் செய்தாய் உத்தமியே! …

>>

விருட்சம் 100வது இதழ் வந்து விட்டது

அழகியசிங்கர் விருட்சம் இதழின் 100வது இதழ் வந்துவிட்டது. நேற்று மதியம் வந்தது. கிட்டத்தட்ட 100வது இதழ் முடியும்போது 25 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும். 28 ஆண்டுகள் ஓடி விட்டன. 99வது இதழ் விருட்சம் பிப்ரவரி 2016ல் வந்தது. அதன்பின் 8 மாதங்கள் …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 18

14.10.2021 அழகியசிங்கர் சம்பிரதாயமான வணக்கங்களுக்குப் பிறகு, ஜெகன் பேச்சைத் துவங்குகிறான். ஜெகன் : நீங்கள் முபீன் சாதிகாவின் கட்டுரைகள் என்ற  புத்தகத்தைப் படித்தீர்களா ?. அழகியசிங்கர் : சில புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கும்போது நம்மை உதைக்கும். கிட்ட வர விடாது.  அதில் இந்தப் புத்தகமும் ஒன்று. ஜெகனும் : தமிழில்தானே எழுதியிருக்கிறார். அழகியசிங்கர் :தமிழில்தான் …

>>

காட்சிப்பிழை

உதயசங்கர் அம்மா அவனைக் கூப்பிட்டாள். நூறாவது முறையாகச் சொன்னாள், “ யாரும் கேட்டா என்ன சொல்லுவே.. கோபால் மாமா ஸ்டூலைப் போட்டு ஏறி மேலே இருந்த டிரங்கு பெட்டியைத் திறந்தான்.. அதிலேர்ந்து சங்கிலியை எடுத்து பையில் போட்டுகிட்டான்.. சரியாச் சொல்லணும்.. இன்ன..” …

>>

தகனமேடைத் தொழிலாளி

நவஜீவன் தகனமேடைத் தொழிலாளி இறந்து போனான்; ஆயிரம் தாய்தந்தையர்க்குக் கொள்ளிவைத்த பிள்ளை; அவன் வாரிசுக்குச் சொத்தாய்க் கிடைத்தது பிணம் எரிக்கும் வேலை.             *** ஆழ்கடலில் முத்துக் குளித்தவன் மூழ்கி மரித்தான் மதுக்குப்பியில்.      …

>>

இனிக்கும் தமிழ் – 6

நாலடியார் பாடல் ஒன்று -டி வி ராதாகிருஷ்ணன் வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-வைகலும் வைசுற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்வைகலை வைத்துணரா தார் ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்து …

>>

வேப்பமர நிழல்

சுரேஷ் ராஜகோபால் என்வீட்டு வேப்பமர நிழலில்நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்நன்றாகக் காற்று வீசவேசுகமாக இருந்தேன்நேர்மேலே தண்ணீர் தொட்டிமோட்டர் போட்டு நீர் நிரம்பக்காத்திருந்தேன்; நிரம்பியதால்நீர் வெளியே கொட்டமரமும் லேசா நனைந்துஎன்மீதும் தெளித்ததுமரத்தின் மீதிருந்தகாக்கை வெகு வேகமாய்சிறகடித்து எங்கோ பறந்தது.

>>