சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை…

30.09.2021 வணக்கம். சி.சு.செல்லப்பா பிறந்த தின நிகழ்வை நடத்தி முடித்தோம். கடற்கரை மத்தவிலாச அங்கதம், கால சுப்பிரமணியன், பேராசிரியை செந்தமிழ் செல்வி, முத்துலட்சுமி என்றெல்லாம் நீண்ட நேரம் பேசி முடித்தோம். முன்னதாக மூத்த எழுத்தாளர் நரசய்யா, மூத்த கவிஞர் வைதீஸ்வரன் என்றெல்லாம் பேசினார்கள்.சி.சு செல்லப்பா இன்னும் அச்சில்  கொண்டு வர வேண்டிய …

>>

சரியான கில்லாடி

சுரேஷ் ராஜகோபாலன்  மத்தியான வேளை, தெருவில் எதோ ஒன்றிரண்டு வண்டிகள் போய் வந்தன. வெயில் அடித்தது. வீட்டுக்குள்ளே போய் பெரிய, மிகப் பெரிய அடுக்கு ஒன்றைக் கொடுத்துக் கலாய் பூசச்சொல்லி, “எவ்வளவு பணம்?” என்று கேட்டாள் ஒருவன் “பத்தணா” என்றான். இவள், …

>>

ஒரு தாயின் தவிப்பு

புஷ்பா விஸ்வநாதன் தாயின் தவிப்பறியா ஜடரயில்இன்று ஏன் இத்துணை தாமதம்?மகனைக் கண்டிடிலோ – தாயின்முகம் மலரும் மனம் துள்ளும் திறந்து போட்ட சூட்கேஸ் கள்இறைந்து விட்ட துணிமணிகள்லேப்டாப், ஐபாட், செல்போன் எனநிறைந்து விட்ட ஸாக்கெட்டுகள் அலறும் டிவியின் ஆரவாரக்கூச்சல்கள்அமரும் சோபாவில் புத்தகங்கள், …

>>

அதனதன் இடம்

மதுவந்தி மேசை மேல்படித்துப் பாதிமூடி வைத்தராமயணப் புத்தகம்.எடுத்து சரியாகவைக்கத் திறந்தால்,புத்தகத்தின் நடுவிலிருந்துசிதறிய சீனித் துகளுடேஒரு சிற்றெறும்பு உயிர் தப்பிஆச்சரியத்தோடு விரைந்துஇறங்குகிறது.

>>

ஈர விறகு

 எஸ் வி வேணுகோபாலன்  ‘வெறகுக்காரர் வந்தா குரல் கொடு’  என்பாள் பத்தாணிப் பாட்டி  காஞ்சிபுர வாசத்தில்  சவுக்குக் கட்டையின் வாசம் அதிகம்  ஒரு மில் அதிபர் போல் தான்   நடந்துவருவார் விறகுக்காரர்  பளிச்சென்ற ஜிப்பாவும் வேட்டியும்  கக்கத்தில் கறுப்புநிற தோல் பையும்  எந்நேரமும் …

>>

அற்புத நீரூற்று –

உதயசங்கர் அற்புத நீரூற்றுக்கு அற்புத நீரூற்று என்றே பெயர். அது குருமலையின் மீது அடர்ந்த வேப்பமரத்தின் வேரடியிலிருந்து ஊறி வந்து கொண்டிருந்தது. மழைக்காலத்தில் ஊற்றில் தண்ணீர் பெருகி ஓடையாய் ஓடி கீழே அம்புலிக்குளத்தில் நிறைந்து விடும். கோடையாக இருந்தாலும் ஊற்றில் நீர் …

>>

உளவு பார்க்கும் நிலவு…

* யாழ்க்கோ லெனின் ” மீனா… மீனா… சீக்கிரமா எழுந்திருடி…. ஸ்கூல் பஸ் வர்ற நேரமாகுது…. சீக்கிரமா கிளம்புடி….” “ம்ம்…..ம்ம்…”என்றபடி இழுத்துப் போர்த்தினாள் அந்த மார்கழிக் குளிரைத் தாளாமல். “உத வாங்கப் போறடி நீ…. சீக்கிரமா எழுந்து கிளம்புடி…. கொரோனா வந்தாலும் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (3)

ஜெ.பாஸ்கரன் சுருளிப்பட்டியிலிருந்து திரும்பவும் 20கி பயணித்துச் சின்னமனூர் வழியே, மேகமலைக்குப் போகும் பாதையில் திரும்பினோம். சின்னமனூரிலிருந்து காடமலைக்குண்டு சாலை வழியே சுமார் 52 கிமீ தூரத்தில்  இருக்கிறது மேகமலை – சாலைகள் அருமையாக இருந்தன – சுற்றிலும் மலைகளும், காடுகளும், சிறிய நீர்வீழ்ச்சிகளும் …

>>

சி சு செல்லப்பாவிற்கு வீர வணக்கங்கள்.

அழகியசிங்கர்  ஒவ்வொரு நாளும் பல பதிவுகளை உண்டாக்கியபடியே விருட்சம் டெய்லி  போய்க் கொண்டிருக்கிறது.   படிக்கும்போது வியப்பாக இருக்கும். இன்று சி.சு செல்லப்பாவின் பிறந்த தினம்.  மணிக்கொடி எழுத்தாளர். 1960ஆம் ஆண்டில் அவர் ‘எழுத்து’ என்ற சிற்றேட்டை ஆரம்பித்தார்.  முக்கியமான இரண்டு விஷயங்களைத் தொடர்ந்து செய்து …

>>

வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்

அழகியசிங்கர் இப்போதெல்லாம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கே போவதில்லை. ஆனா அந்தத் தெரு வழியாகப் போனா அந்தக் கடையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே போவேன். ஒருநாள் அந்த வழியாகப் போனேன். இப்போதெல்லாம் தொற்றுக்கு யாரும் பயப்படுவதில்லை. ஒரே கூட்டம். அப்படியே படம் பிடித்து நார் …

>>

ஒரு கோனார் கதை

சுஜாதா சிறு வயதில் மாடுபின்னர் நான் ஒடி மாட்டின் கழுத்தில் இருந்த மூக்கணாங்கயிறைகோனார் இழுக்க மாடு மிரண்டு என்னைத் துரத்தி கீழே விழுந்த நான்விளையாட்டு எனசிரித்து கொண்டே எழுந்து சென்றேன்.

>>

ஆடும் கிளி!

     பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை**ஆடும் கிளியேஅசையாமல் நின்றுஎன்ன சொல்ல வருகிறாய் ! கொஞ்சும் கிள்ளை மொழியில் பேசுகயிற்றில் தொங்கும் நீகீழே இறங்கி விடு! நெஞ்சம் பதறுகிறதுசர்க்கஸ்காரன் ஜோதிடக்காரன்கையில் அகப்பட்டால்உன் சுதந்திரம்பறி போய் விடும்பார்த்தது போதும்பறந்து விடு கிளியே!

>>

தேடுதல் வேட்டை

சுரேஷ் ராஜகோபாலன்   வேகமாக வந்தவன் வண்டியை நிறுத்தினான் வீட்டு வாசலில். உள்ளே ஓடினான். தன் பெட்டியில் எதோ துழாவினான். கிடைக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. மனைவியைக் கூப்பிட்டான். “என்ன” “நான் பார்க்கவில்லையே?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.“குழந்தைக் கூடையில் இருக்கிறதான்னு பார்க்கிறேன்” என்றாள்.இருவரும் ஓடினார்கள்.அங்கும்  …

>>

மௌனம்

ஆர் வத்ஸலா மனைவிமார்களை கிண்டல் செய்வதை ஒரு சில ஆண்கள் எரிச்சலூட்டும் அளவுக்கு ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு தாங்கள் மிகவும் பயப்படுவது போல பேசுவது. இதற்கு பட்டிமன்ற பேச்சாளர்கள் ஒரு பெரிய கிங் சைஸ் உதாரணம் என்றால் எழுத்தாளர்களும் …

>>

என்பா

அழகியசிங்கர் நண்பர்களுடன் பழகும்போதுஜாக்கிரதையாகஇருக்கவேண்டும்அனேகமாய் பேசாமலயேஇருக்கப் பழகவேண்டும்எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால் போதும்ஒன்றும் ஆகப்போவதில்லை இதனால்

>>

கடலலைகள்

 வளவ. துரையன் மீள முடியாது என அறிந்தும்  இந்தக் கடலலைகள்  தினமும் முயற்சி செய்கின்றன. கடற்கரையின் ரகசியங்கள்  அனைத்தையும் அறிந்ததால்  ஓவெனச் சத்தமிடுகின்றன. தம் மீது ஆசைப்பட்டு நனைத்துக் கொள்ளவரும்  பிஞ்சுப் பாதங்களை  முத்தமிடுகின்றன. தினம்தோறும் வந்து பேசும்  காதலர்க்கு எல்லாம்  …

>>

காற்றடைத்த வாழ்க்கைநிலை.!

ஆர்க்கே.! ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டுசிதறுறும் மீட்சி எல்லைக்கோடுவரைகாற்றடைக்கப்பட்டுப் பெருத்தாலும்வானளப்பதான நோக்கமாய்மேல்நோக்கி பயணித்தாலும்உயரே வெகு உயரே எங்கோகாணாமலேயே போய்விடுகின்றன-பலூன்கள் என்றழைக்கப்படும்வளிப்பந்துகள்.மற்றவை பெரும்பாலும்உற்றபடிக்குள்ளே பெருத்திருந்தாலும்சிறுவலியெனும் ஊசி முனைக்குக்கூடமுழுவதுமாய் உடைபட்டுசிதறி வெளியேறிவளியுலகு மறந்து வலியுலகில்கரையேறுகின்றன–சமயங்களில் என்னைப்போல.!! ReplyForward

>>

சாமி வண்டி

  இராய செல்லப்பா  “இவன் பீகாரில் இருந்து வந்தவன். பெங்களூரில் இரண்டு வருடம் இருந்தவன். இவள் ஒரிசாவில் இருந்து வந்தவள். கணவன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்தப் பையன், வீட்டில் சொல்லிக்கொள்ளாமல்  ஓடி வந்திருக்கிறான். பேசும் பாஷை யாருக்கும் …

>>

சிங்கிள் வரி சிறுகதைகள்

 நாகேந்திர  பாரதி காதல்————-அவளை விடாது பின் தொடர்ந்து சென்று , அவள் காலடியிலேயே கிடக்க விரும்பிய, தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில், அவளது நிழல். தலைகீழ்—————கண்ணாடியில் தன் உருவம் தலை கீழாய்த் தெரிவதைப் பார்த்து பயந்து போய் அதிர்ச்சி அடைந்த அவள், …

>>

ரெட்டியின் தோழன்

எஸ் வி வேணுகோபாலன்   ஓர் அடியாள் எத்தனை உயரம், எத்தனை அகலம், எத்தனை மூர்க்கமாக இருப்பான் என்பதை அந்நாட்களில் கேள்விப்பட்டுக் கூட இருக்கவில்லை. அவன் பெயர் மட்டும் எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. அதுவே என்னை நடுங்க வைக்கப் போதுமானதாக இருந்தது. கிருஷ்ணா …

>>

ஆசிரியர் பக்கம்

வணக்கம் 28.09.2021 இது புதிய முயற்சி.   கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இது சாதாரணமான பத்திரிகை இல்லை.  இப் பத்திரிகையில் எல்லாவித முயற்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.  இதை வாசிப்பவர்களும் ஆச்சரியப்படலாம். நவீன விருட்சம் இதழ் 1988ஆம் ஆண்டு வந்தபோது, தொடர்ந்து 33 ஆண்டுகளாகத் …

>>

சோமசுந்தரி கவிதை

🌷க.சோமசுந்தரி. நினைவுகளின்பெரும் சுமையில்…இன்றும்!தனியே விடபட்ட மனதுபேசி சென்றது! கடந்த நெடுந்தூரப் பயணத்தில்…திரும்பி நடக்க முடியாமலேயேவாழ்வில்…பூக்களாய் உதிர்கிற சில தருணங்கள்! வாழ்ந்த காலத்தில்அனுபவங்களை கடந்தும்… நேற்றைய மிச்சத்தின்எச்சங்களாய் சுவடுகளைபதித்த சென்றதடங்கள்! அன்போ…அனுசரணையோ..எதுவுமற்ற வெற்றிடத்தில்சூழ்நிலை தான் நிர்ணயிக்கிறதுமனிதனின் வீழ்ச்சிகளில்உண்மை எதுவென்று? இப்படித் தான்! இன்றும்!பிரபஞ்சம் …

>>

ஜீவனில்லா ராமசாமி

கவிஞர்.செ.புனிதஜோதி எலும்பும் தோலுமாய்ஜீவனை மட்டும்தாங்கிநிற்கும்பெரியவரின்உருண்டு நிற்கும்வெள்ளை வேட்டியும்கிழிந்துவிடக் காத்திருக்கும்வெள்ளைசட்டையும்யாரும் சொல்லாமலேவறுமையின் முகவரியைஎடுத்துக்காட்டியது… நிறைமாத மகளைஅழைத்துவந்து அரசுமருத்துவமனைக்குள்சேர்த்துவிட ஆயிரத்தைகைமாத்தா வாங்கிவரஆயிரம் முறையாவதுசெல்லப்பன் வீட்டுக்குநடையாநடந்திருப்பாரு… ஒருநொடிக்குள்ள ஆயிரம்மறைஞ்சு போன மாயத்தஎண்ணி அரசுமருத்துவமனையில்இலவசம் பெயர் பொரித்தபலகையே வெறித்தேப் பார்கிறார்ஜீவனில்லாராமசாமி

>>

ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை

அழகியசிங்கர் அவளா இவள் அவள் அழைத்துக் கொண்டிருந்தாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஒருநாள் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று நினைத்தான். 40 வருடங்களுக்கு முன் பார்த்தது. கதவைத் தட்டினான். திறந்தாள். அவளா இவள் என்று நினைத்தான். ஏமாற்றமாக இருந்தது.

>>

மலைத்தேன்

சுரேஷ் ராஜகோபாலன் மை தீர்ந்த என்பேனாவுக்குத் தானே ​தெரியுமஎனக்கும் தெரியாமலேஎத்தனை முறைஒரே கவிதையை – என்கை எழுதியிருக்கும் என்று.. வார இதழ் போட்டிக்கும்போனதே தவிரப்பதிலொன்றும் வரவில்லை அத்தனையும் திருப்திதராததால் கசக்கிஎரியப் பட்டன,நொந்து நூலாகின இனிக்கவிதை எழுத மாட்டேன்முடிவுக்கு வந்த பின்னேதான்பரிசு பெற்றசெய்தி …

>>

கவிதைக்காரன்.!

ஆர்க்கே.! “பேப்பர் பழைய பேப்பர்”என்று கூவிச்சென்றவனைமாடிக்கழைத்துநாளிதழ் மற்றும் புத்தகங்களைஎடைக்குப்போட்டேன்.தனித்தனித் தாள்களில்எழுதப்பட்ட என் கவிதைகளைதனியே பிரித்து வைத்தான்.” இது தேறாது” என்றான். “ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்”தருபவனும்“ஓட்டை ஒடசல்களுக்குபிளாஸ்டிக் வாளி” தருபவனும்“பழைய சரிகைப்புடவைக்குநல்லவிலை” தருபவனும்நான் எழுதிய கவிதைத்தாள்களைசீண்டவே இல்லை.புத்தகமாக்கினால் எடைக்காகுமாஎன யோசனை வந்தது.ஏதோ ஒரு …

>>

நத்தை ஒன்று

வளவ. துரையன் மாலைநேர நடை  காலையில் பெய்த மழையால்  தனித்தனியான மனிதர் போலத்  தண்ணீர்த் தேங்கல்கள் அவசரமாய்க் கூடடைய  அவற்றில் தலையாட்டிக் குளிக்கும்  ஆறேழு காகங்கள் நாய்கள் போலவே  அலைந்துகொண்டிருக்கும்  நகரத்து மாடுகள் மழையில் நனைந்ததால்  மகிழ்ந்து சிரிக்கும்  அரளிச்செடி  விமானத்தை  …

>>

துரிதக் கதை

பிடி கவிதையை ஆர் வத்ஸலா பால் குக்கரும் சாதா குக்கரும் இட்லி குக்கரும் போட்டி போட்டுக்கொண்டு விசில் அடித்தன. வாணலியில் வதங்கிய கத்திரிக்காய் எந்த நிமிஷமும் தீய்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. ஆண்டவன் புண்ணியத்தில், கேஸில் நான்கு அடுப்புகள்தான். அவளுக்கோ இரண்டே …

>>

என்பா கவிதைகள்

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா 1 எலியைப் பிடிக்க விரட்டியது பூனை! வளைபோன்ற குழாயுள் பதுங்கியது எலி!  வேட்கையில் பாய்ந்த பூனையின் தலை,  குழாய்வாயில் மாட்டியதே விதி என்பா – 2 பன்முகத் தன்மையின் பெருமிதம் கொள்வார்!  தன்மொழி இனத்தை …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (2)

ஜெ.பாஸ்கரன் அதிகாலை ஆறு மணிக்கு, நின்றபடி கும்பகோணம் காபி குடித்துக்கொண்டிருந்த அந்த தம்பதியருக்கு அறுபத்தி ஐந்து வயதிருக்கலாம் (இருவருக்கும் சேர்த்து!) – டீ கிளாஸில் கும்மோணம் காப்பி! அருகிலிருந்த கட்டிடத்தில் பல் தேய்த்து, முகம் கழுவி நாங்களும் கு.கா. கிளாஸில் குடித்தோம் …

>>

மேகமலையில் மூன்று நாட்கள்! (1).

ஜெ.பாஸ்கரன் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மூலையில், அதிக மழை பொழியும் சிரபுஞ்சி சென்றபோது, அங்கு மலைகளைத் தழுவிச்செல்லும் மேகக் கூட்டங்களைப் பார்த்து பரவசப்பட்டேன் – மேகங்களின் ஆலயம் – மேகாலயா – எனச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று …

>>

வாசிப்பனுபவம்

அழகியசிங்கர் இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன. ஒரு புத்தகம் லா ச ராமாமிருதத்தின் ‘நான்’. இன்னொரு புத்கதம் ‘காண்டாமிருகம்’. ஆனால் லா ச ராவின் …

>>

குறுங்கவிதைகள்

 ————————— நாகேந்திரபாரதி  சுயம் —————உள்ளேயும் வெளியேயும் முட்கள் ஒளிப்பதும் ஒழிப்பதும் விருப்பம்  அடிமாடுகள் ———————எப்போதும் போலத்தான் அசை போட்டபடி லாரியில்  அளவு —————–சும்மாயிருந்து பழகிப் போனதால் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை 

>>

சிந்திக்க வேண்டுகிறேன்

கணேஷ்ராம்  MGR என்கிற தனிநபர் ஒரு ஸ்தாபனமாகி பத்து வருடங்கள், அதில் மூன்று வருடங்கள் படுத்துக் கொண்டே தோற்காமல் ஜெயித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு முக்கிய காரணம் நான் ஆணையிட்டாலின் சௌந்தரராஜனும் விஸ்வநாதனும் வாலியும் அதைத் தாண்டி நாலைந்து முறை …

>>

கடிகாரத்தில் மணி பார்த்து…

எல்.ரகோத்தமன் பேருந்தைப் பிடிக்க ஓடோடிச் சென்றேன்! புத்திசாலி பேருந்து என்னை உதாசினப் படுத்திவிட்டு ஓடிவிட்டது!  நான் ஏன் பேருந்தைத் தவறவிட்டேன்!  கை புண்ணுக்கு மருந்து கண்ணாடியில்! உடைந்தது கண்ணாடி! சில்களில் தெரிந்தன  முகங்கள்!  கோரமோ அகோரமோ முகங்களெல்லாம்ஒவ்வொன்றாய் கழன்று விழுந்தன திரை மறைவில் !  ஆனால் என் …

>>

எல்லோருக்கும் வணக்கம்

நவீன விருட்சம் 34 ஆண்டுகளாக அச்சு இதழாக வந்து கொண்டிருக்கிறது.  அது இன்னும் தொடரும்.   இன்னொரு முயற்சியாக ஆன லைனாக விருட்சத்தைக் கொண்டு வரலாமென்று தோன்றியது.  அதன் விளைவாக ‘டெய்லி  நவீன விருட்சம்’ என்ற பெயரில் ஆன் லைனின்  கொண்டு வந்துள்ளேன். அனேகமாய் நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் இந்தப் பத்திரிகை.  …

>>

எல்லாரும் அழுத கதை!

🤣உமா பாலு  .அப்பா வேறு ஊரில் இருந்ததாலும் அம்மா உடல் நிலை சரியில்லாததாலும் என் கல்லூரி விடுமுறையில் நாலு வயது தம்பியை அழைத்துக் கொண்டு பள்ளியில் சேர்க்கச் சென்றிருந்தேன் . தலைமை ஆசிரியை அவன் இங்கேயே இருக்கட்டும் நீ போய் உன் …

>>

குறுங்கதைகள்- கல்

முபீன் சாதிகா சிறுமியை வன்புணர்வு செய்ததற்காக அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பல நாட்களாக அவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் காவல்துறையும் பாடுபட்டு வந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இருந்தது. அன்றும் வழக்கம் போல் அவனை அழைத்து வந்தார்கள். வழக்கு …

>>

கவிதை

அழகியசிங்கர் கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் தன்னைமேதை என்று நினைத்துக் கொள்கிறார்கள் அதுதான் பிரச்சினை ஒரு கவிதை எழுதினாலும் மேதைஎண்ணம் துவங்கி விடுகிறது ஒரு கவிஞர் இன்னொருகவிஞரைப் பாராட்டுவதில்லை. ஏன்,?பாராட்டினாலும் ஏதோ காரணம் வைத்துதான்பாராட்டுகிறார்கள் இப்படியே போனால்கவிஞர்கள் தங்கள் கவிதைகளை தாங்களே அச்சடித்துக்கொண்டு …

>>

நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்

26.09.2021 துளி – 219 அழகியசிங்கர் என் நண்பர் ஒரு முறை பழைய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘பாரதி புதையல் பெருந்திரட்டு.’ வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். இதுவரை தொகுத்து நூலாக்கப் பெறாத …

>>

விருந்து தடபுடல்

என்பா 113 ஆர் வி சுரேஷ்  கல்யாண வீட்டில் விருந்து தடபுடல்தெருவில் எச்சலிலைகள்  மொத்தமாக விழுந்தனஅவரவர் பங்கினை எடுத்து உண்டனர் .இரவு உணவு முடிந்தது.

>>

தர்மராஜ் 

என்பா 34. காலை ஒருமணிமாலை ஒரு மணி மாதமொருதரம் அஞ்சுநிமிஷம்என்னம்மாவிடம் பேசேண்டி அவங்க பெத்ததுஉன்னத்தான நீயேபேசு .

>>

சந்திரசேகர்

நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது. எனோ இன்னும் தூக்கம் வரவில்லை காத்திருக்கிறேன் காலை ஆறுமணிஅலாரமடிக்க. அணைத்தபின் தூங்குவதே ஆனந்தம்

>>

அன்பு சூழ் உலகு

ஆர் வத்ஸலா நான் என்னுடன்எப்பொழுதும்என் வீட்டில்வேலைக்காரியும் சமையற்காரியும்தினப்படி விருந்தாளிகள்இஸ்திரி செய்பவரின் விஜயம்அவ்வப்பொழுதுஅதே போலஎலெக்ட்ரீஷியன்பிளம்பர் இன்னபிற பேசுவேன் மாஸ்க் அணிந்துஇவர்களுடன் அரசியல், சினிமா, சினிமாப் பாடல், பேருந்து பிரச்சினை, விலைவாசி ஏற்றம் பல சமயம்தம் வீட்டுப் பிரச்சினையை கூறுவார்கள்கேட்டுக்கொள்வேன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுசில சமயம் …

>>

செ.புனிதஜோதி

யானையாகவும்சிங்கமாகவும்புலியாகவும்மயிலாகவும்மானாகவும்பெண் உருவகப்படுத்திக்கொள்ளலாம்சுதந்திரமானகாடு எங்குஎங்குள்ளதுகொஞ்சம்தெரிந்தால்சொல்லுங்களேன்

>>

என்பா – 42:

கு. மா. பா. திருநாவுக்கரசு பழைய மேற்கூரை வெடிப்பில் விழுந்தபறவை எச்சத்தின் விதைத் துளிர்ப்பாய்,எழுதவேண்டாம் என்று இறுகுமென் மனத்துள்கவிதை வேர் முளைக்கிறது.

>>

நட்பூக்கள்

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை என்பா ***மண்ணில் பூத்த பூக்கள் மறையலாம்மனதில் பதிந்த நட்பூக்கள் மறையாதுஅதியமான் ஒளவைக்குகொடுத்த நெல்லிக்கனிஉண்மை நட்பூக்கள் அழிவதில்லை!

>>

காதல் என்பா 1

செல்விபிரகாஷ் சூரியன் உதிப்பது கிழக்கென்று அறிவோம் தெற்கிருந்து வீசுவது தென்றெலெனத்தெளிவோம் மார்கழி வாடை வந்தது என்னவோ மன்னன் உந்தன் பார்வையிலே

>>

துப்பாக்கி

அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி. கையில் ஒரு துப்பாக்கி. சுழற்றியபடி இருந்தான். எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லை..நிற்காமல் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.நான் நகர்ந்து வந்துவிட்டேன்.

>>

கவிஞர்கள் யாம்..!

வே.கல்யாணகுமார்.பெங்களூரூ. கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன்!வறுமை வந்த போதும்வாழ்வில் பெருமை கொண்டவன்! தன் வாழ்வை மறந்து உலகு வாழ பாடல் புனைபவன்!கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்! புத்தகமாய் விரிந்த மனம் அவனுக்கு உண்டுசத்தியமே அவனுடனே இருப்பதும் உண்டு.. கலைமகளின் ஆசியவன் …

>>

என்பா 28

அழகியசிங்கர் இந்த பூமியில் பாரதியார் வாழ்ந்திருக்கிறார்கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கூட வாழ்ந்திருக்கிறார்இருந்தும் நானும்நிகராக எழுதவில்லைதொட்டு எழுதிப் பார்க்கிறேன்.

>>