பிரேம சாகர லீலை – ரம்யா வாசுதேவன்

பாகவதம் எப்போதுமே என்னை தனக்குள் ஈர்த்துக்கொண்டே இருக்கும் ஒரு மகா சமுத்திரம்; அதிலும் குறிப்பாக அதன் தசம ஸ்கந்தம் என்னை ஏதோ ஒரு மாய உலகிற்குள் கட்டிப்போட்டுவிடும்.பிருந்தாவனத்தை விட்டுப் புறப்பட்ட கண்ணன், தன் வாழ்நாளில் மீண்டும் அங்கே திரும்பிச் செல்லவே இல்லை …

>>

அழகியசிங்கர்/நடிப்பு

“மேடம், கொஞ்சம் நடங்க மேடம்,” “முடியாதுப்பா..இந்தப் படமே வேண்டாம். நான் நடிக்கவே இல்லை..” அவள் தூக்கிக் கொண்டிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. குழந்தையின் உண்மையான அம்மா குழந்தையை நடிகையிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.  நடிகை பெருமூச்சு விட்டாள். பொம்மையை விற்க எப்படி இந்தப் பெண்கள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது நடிகைக்கு. எப்படியோ சமாளித்து விட்டாள் நடிகை. படம் ரிலீசு ஆகிப் பல நாட்கள் நல்ல வசூல். பத்திரிகைக்காரர்கள்  கொலு பொம்மைகளுடன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு போகிற காட்சி பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். அந்தப் படத்தை டைரக்ட் செய்தவருக்கு அந்தக் காட்சியை எடுத்தபோது நடிகையின் வசவுகளை எவ்வளவு தாங்கிக் கொண்டார் என்பது யாருக்குத் தெரியும்? 77 

>>

இந்திரநீலன் சுரேஷ் /பொம்மைச்சாமி

“உஸ்.. அப்பாடா என்னமா இருக்கு, சென்னை வெயில்?” “ஏன், என் சக்களத்தி கங்காதேவி கூட வரலையோ? ஐயாவை எப்பவும்  குளு குளு..ன்னு வச்சுப்பாளே?” “அவள வம்புக்கு இழுக்கலைனா, உனக்குப் பொழுதே போகாதே. அந்த கொழந்தையக் கவனி. பசியோடு வருது. என்னை மாதிரி கையில, ஒரு சூலத்தை வேற கொடுத்து, சுமக்க வச்சிட்டாங்க, பாவம்” “அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அடுத்த தெருவுல ஒரு பாட்டி திண்ணைல வச்சு சோறு கொடுக்கும். அப்படியே நீங்களும் கொஞ்சம் வெயில் தாழ உக்காரலாம். குளிர் பிரதேசத்துக்காரர் ஆச்சே. என் புருஷன் கருத்துப் போயிடக்கூடாது இல்லியா?” “அக்கறை..னா அன்னபூரணிதான்! என் பெண்டாட்டியாச்சே” “கன்னத்தைக் கிள்ளாதீங்க. நல்லவேளை நம்ம பசங்களும் கூ(டை)ல வரல” என்றாள் பார்வதிதேவி வெட்கத்துடன். 80 WORDS

>>

எம்.எல்.பிரபா/”கிருஷ்ணன் வருவான்”

தெருவில் பொம்மை விற்கும் சத்தம் கேட்டு, வாசலில் எட்டிப் பார்த்தாள் மங்களம். இடுப்பில் குழந்தையுடன், தலைமேல் பொம்மை கூடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் கலா. காலையிலிருந்து பொம்மை விற்பதால் மிகவும் சோர்ந்து போனாள். குழந்தையை மங்களம் வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, பொம்மை கூடையையும் இறக்கி வைத்தாள். அம்மா “குடிக்கக் கொஞ்சம்  தண்ணி குடுங்க , ரொம்ப தாகமா இருக்கு” என்றாள். மங்களம் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். என்ன பொம்மை இருக்கு ?என்று கேட்டுக்கொண்டே கூடையைப் பார்த்தாள். அவளுடைய கண்கள் அந்த குட்டி தவழ்ந்த கிருஷ்ணன் பொம்மை மீது பட்டது. “அந்த பொம்மை வேணும் மாம்மா,50 ரூபா தான் எடுத்துக்கோங்க” என்றாள் கலா. உனக்கு எத்தனை குழந்தைமா? மூணு குழந்தைங்க மா .ரெண்டு ஸ்கூலுக்கு போயிருக்கு இது சின்னது இதையும் தூக்கிக்கிட்டு தெருத்தெருவா சுத்த வேண்டியிருக்கு. என்ன செய்யறது? “சரி சரி இந்த கிருஷ்ணர் பொம்மையை உன் கையால கொடு. உன்னோட கைராசி அடுத்த வருஷம் எங்கள் வீட்டிலேயும் குட்டி கிருஷ்ணன் தவழட்டும்.”என்றாள் மங்களம். கலா, கிருஷ்ணர் பொம்மையை எடுத்துக் கொடுத்தாள். பொம்மையை வாங்கிய மங்களம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்தாள். அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது கையில் சூலத்துடன் அம்மனாக தெரிந்தது, திண்ணையில் உட்கார்ந்திருந்த கலாவின் சின்ன குழந்தை. 141 WORDS

>>

மாதங்கி வி/தெய்வங்களைக் காக்கும் தெய்வம்

செல்வன் ஒரு YouTube சேனலில் வேலை செய்து வருகிறான், அவனுடன் உரையாடும் அவன் நண்பன், “இன்றைக்கு என்னடா புதுசாசொல்லபோற?” என்று கேட்டான்.“இன்னைக்கு வரும் வழியில ஒரு புகைப்படம் ஒன்னு பார்த்தேன். அது என் கண்களிலே நிற்கிறது. அதைப் பற்றி நான் சொல்ல …

>>

தாணப்பன் கதிர்/பதுமை

      யாரு என்ன சொன்னா என்ன?  நான் அவரோடு சேர்ந்து போயிட முடியாதில்ல. குடி.. குடி.. குடிச்சி குடிச்சே போய்ச் சேர்ந்திட்டார்.     நமக்கு இது வேண்டாம் மாமா. நமக்குன்னு ஒண்ணு அழகா பொறந்திருக்கு. குடிக்காதே மாமான்னு எத்தனை வாட்டி தலைப்பாடா அடிச்சிருப்பேன். கேட்டிருக்கலாம்ல்லா.     என்னைக் கூட்டிட்டு போய் வைச்சிக்கிடுவதற்கு அம்புட்டு யோசனையா? மூழியை வீட்டுக்குள்ளே வைச்சிக்கிட முடியுமான்னு சாம்பல் கரைச்சிட்டு வந்ததுமே பேச ஆரம்பிச்சிட்டாங்களே.    உனக்கு கைப் பொம்மைல்லாம் செய்ய வருமே, அதை ஏன் செய்ய மாட்டேங்கே? என்று நீ அடிக்கடி கேப்பியே மாமா. இதுக்குன்னு தெரியாமப் போச்சே மாமா.    கைக்குழந்தை வாசவிக்கு அழகழகாய் குட்டிக் குட்டிப் பொம்மைகள் இருக்கு. ஆனா பாரு அம்மன் கைல இருக்கச் சூலாயுதந்தான் வேணும்ன்னு ஒரே அடம்.         குழந்தை வேலப்பருக்கு ஆத்தா கொடுத்ததைப் போல நானும் கொடுத்தேன். இப்போ என் இடுப்புல இருக்கிற அவ தனக்கென்று ஒண்ணு வந்தா கொற்றவையா மாறிடமாட்டாளா என்ன?    ‘பொம்மை.. பொம்மை, கைப்பொம்மை’ என்று கூவிக்கொண்டே போகிறாள் வசந்தி.    தலைச்சுமை மண் பொம்மைகள் அங்குமிங்குமாய் ஆடாமலிருக்க வைச்சிருக்கிற தாளின் சலசலப்பை மீறித் திமிறி நின்று உலகைப் பார்த்து ஏளனம் செய்தன.  121 words

>>

பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/பொம்மை விற்பவள்!

அந்த வீதி வழியாக பொம்மைகளை விற்க முடியாது என்ற தன் தோழி அமலா சொன்னதைக்கேட்ட சுபத்ரா உடனடியாக ஒரு பொம்மை விற்பவனிடம் சென்று பொம்மைகளை வாங்கி அவன் குழந்தையையும் இடுப்பில் சுமந்து அதற்கான பயிற்சி எடுத்து பிறகு அந்த நகரின் உள்ளே …

>>

ஷைலஜா/கலைகளிலே அவள் ஓவியம்

. “இந்த ஓவியம் மிகவும் அர்த்தமுள்ளது ராகவ்.” “. ஓவியம் சொல்லும் செய்தி?” “ஒரு சாதாரண ஏழைத் தாய். தலையில் கடவுள் சிலைகள் நிறைந்த கூடை. இடுப்பில் தன் குழந்தை.ஆனால் அந்த குழந்தையின் கையில் சூலம்.” “இதன் அர்த்தம் என்ன ? …

>>