கு.மா.பா.திருநாவுக்கரசு/ஆனந்த சுதந்திரம்!

‌ சுதந்திரத் திருநாள் என்றால்சொல்லுக யாதென? இற்றை“புதியதோர் உலகம்” காணும்புதுமை இளைஞரைக் கேட்பீர்! “எதையும் செய்யலாம் இங்கே!எதையும் சொல்லலாம் இங்கே!எவர்க்குமே அடங்கிடா போக்கில்எவற்றையும் தூற்றலாம் இங்கே!” “வதைபட சுதந்திரம் தன்னைவாங்கிய காந்தியைக் கொன்றார்!மதங்களின் இணக்கம் தன்னைமதியாத போக்கில் சென்றார்” வாளுடன் இரத்தமும் …

>>

நாகேந்திர பாரதி/எது சுதந்திரம்

மற்றவர்க்காய் எழுதினாய்படித்தவர் பல பேர் மற்றவர்க்காய்ப் பேசினாய்கேட்டவர் பல பேர் உனக்காக எழுதுபடிப்பவர் படிக்கட்டும் உனக்காகப் பேசுகேட்பவர் கேட்கட்டும் இதுவே உன் இயற்கைஇதுவே உன் சுதந்திரம் ————

>>

ப.மதியழகன்/காந்தி பிறந்த மண்

காந்தியை மகாத்மா ஆக்கியதுஅகிம்சை எனும் மந்திரமேஅகிம்சையால் சுதந்திரம் பெற்றஒரேயொரு நாடுநம் பாரதத் திருநாடுஆயுதம் தாங்காமலேயேஆங்கிலேயர்களைகப்பலேறச் செய்தோம்காந்தி சொல்லேவேதவாக்கு என்று‘வெள்ளையனே வெளியேறு’என்ற கூக்குரலுடன்நாடே வீதிக்கு வந்துபோராடியதுகாந்தியைத் தவிரதலைவன் என்றசொல்லுக்கு தகுதியானவர்வேறு யாருமில்லைஅதனை இன்றையதலைமுறை உணரவேண்டும்அடக்குமுறைக்கு எதிராகவன்முறைகட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தால்நாட்டின் வரலாறேமாறியிருக்கும்நாளைய பொழுதுநமக்கான பொகுதுஎழுதட்டும் இந்தியாபுது வரலாறு!

>>

ஆர் வத்ஸலா/நாட்டுப்பற்று

நிறமிழந்த ‘பாலிஸ்டர்’சட்டை அணிந்த அவன்அந்த இடத்தைபெருக்கி சுத்தம் செய்தான்அடுக்கியிருந்தபிளாஸ்டிக் நாற்காலிகளைபிரித்துப் போட்டான்எல்லோரும் நல்லாடைகளில்கூடிய பின்சிறுகொடியும் குண்டூசியும்தந்துதானும் ஒன்றுகுத்திக் கொண்டான் பெருமையுடன் புதுக் கதர் சட்டை அணிந்திருந்தகுடியிருப்பு சங்கத்தின் காரியதரிசிக்குகடைசி நிமிடத்தில்தான் சாக்லெட் பாக்கெட் எடுத்து வர மறந்ததுநினைவுக்கு வரஓடினான் இவன்நிலவறையிலிருந்தசங்க அலுவலகத்திற்கு …

>>

சாய்ரேணு சங்கர் கவிதை

என் கால்கள் நடக்கும் பூமி நீஎனைக் காத்து நிற்கும் சாமி நீபொன்னாய் வளந்தரும் நாடு நீபுகலாம், சுகமாம் வீடு நீ அறம்காக்கும் போர் வீரன் நீஅகம் அடங்கிய தீரன் நீதிறனும் அறிவும் உன்சொத்துதேர்கல்வி ஞானம் உன்வித்து முகுந்தன் சொன்ன கீதைநீமுக்திநெறிக்கோர் பாதைநீஅகன்று …

>>

வே.கல்யாண்குமார்/இன்று காந்தி வந்தால்

வந்தேன் நான் நமதுபாரதத்தைப் பார்ப்பதற்கே!அந்தோ! அதிசயமே..அகிம்சை உண்டோ காண்பதற்கே!ஹே… ராம்! ஹே..ராம்! சாலையில் போதையிலே..இளைஞர் உருளக் கண்டேனே!சகலரும் இலஞ்ச ஆற்றில்மூழ்கிக் குளிக்க கண்டேனே! ஓலைக் குடிசையிலே..ஒதுக்குப்புறத்தில் பலர் இருக்க..பாலோடு பழரசத்தைசிலர் சுவைக்கக் கண்டேனே.! வெள்ளையர்கள் சென்ற பின்னே.. கொள்ளையர்கள் வந்தனரே..நல்லவர்கள் மூலையிலே.. …

>>

அழகியசிங்கர்/சுதந்திரதினம்

சுதந்திரதினம் 1 கிடைத்து78 ஆண்டுகள் முடிந்து விட்டதுஇன்னும் வறுமைஒழியவில்லைஏழை ஏழையாகத்தான்இருக்கிறான்பணக்காரன் பணக்காரனாகத்தான்இருக்கிறான் உண்மையில்சுதந்திரம்என்பதுகொண்டாட்டமாதிண்டாட்டமாதெரியவில்லை சுதந்திர தினம் 2 எனக்குஉண்மையில்பாரதிதான்ஞாபகத்திற்குவருகிறார் போகின்ற பாரதமும்வருகின்ற பாரதமும்என்று கவிதை எழுதினார் திரும்பிப்பார்த்தால்பாரதம்போய்க் கொண்டேஇருக்கிறது

>>

ஜெயராமன் ரகுநாதன்/சிகப்பு கார்

100 வார்த்தைக்கதைசிகப்பு கார், இரு இளைஞர்கள். அழகான பெண் அந்தப்பெண் அழகாக இருந்தாள். இருவத்திரெண்டு வயதுதான் இருக்கும். கூட வந்த அம்மாவுக்கே வாளிப்பான உடல்வாகு. நல்ல நிறம். வசதியான மேல்தட்டுப்பெண்கள். இருவர் காலிலும் அடிடாஸ் ஷூ. வாக்கிங் போக மெயின் ரோடைத்தாண்டிய …

>>

மோகன் ஜி/லொட்டாங்கை

இன்று உலக இடதுகை பழக்கக்காரர்கள் தினம்.எல்லா இடங்கை இனியவர்களுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும் . நானும் ஒரு ‘பீச்சாங்கை பிளாட்டோ’ தான். இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு பால்யத்தில் விளையும் குழப்பங்கள் சற்றே அதிகம். இடதுகையால் எழுதுவது, சாப்பிடுவது என்று துவங்கிய என் …

>>

இலத்தூர் கி.சங்கர நாராயணன்/இதயமே இந்தியா

இந்திய மண்ணை நினைந்து விட்டால்இந்தியர் உள்ளம் இணைந்து விடும்சிந்திய ரத்தம் சிந்தனை வடிவாய்முந்தையர் நினைவை முடிக்கி விடும் கட்டப் பொம்மனை நினைந்து விட்டால்கட்டுடல் மீசை நினைத்து விட்டால்கட்டிளங் காளையர் நாட்டைக் காக்ககயத்தாறு நாடிக்கவனம் கொள்வர் போர்பந்தரிலே காலடி வைபுண்ணிய மண்ணை நெற்றியில் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மூவர்ண கொடி

தன்னிகர் அற்ற,தனிக் கொடி. பட்டொளி வீசி,பறக்கும் கொடி. பளிஞனும் இருளனும்,பணியும் கொடி செழுமை காட்டும்பச்சை வர்ணம்; உயர்வைச் சுட்டி,உயர்ந்த கொடி தூய்மை விளக்கும்வெண்மை நிறம்; அமைதி துலங்கும்,அருட் கொடி தியாகம் துளங்கும்காவி நிறம்; தீரம் செறிந்த,வீரக் கொடி தர்மம் விளையும்மண் இதுவென, …

>>

ஜெயதேவன் கவிதை

கடலிலிருந்து ஒரு சொம்புதண்ணீரைக் கொண்டுவந்துநடுஹாலில் வையுங்கள்வீடெங்கும் கேட்கும் அலையோசை காட்டுப்பூவை அதன்காம்பு நோகாமல் பறித்துவந்துபூஜை அறையில் வையுங்கள்காட்டின் பாடல் அதில் கேட்கும் ஒற்றை இறகுகூட ஒரு பறவையைஒற்றை சதங்கைகூடஒரு நாட்டியக்காரியின்மென்மயிர் பாதத்தையும் நினைவூட்டலாம் தனித்திருக்கும் ஒரே ஒரு நாற்காலி சொல்லிவிடுமேகுழந்தைகள் அற்ற …

>>