ஷண்முக சுப்பையா/சுடுகாடு
சுடுகாடொன்றுசுற்றித்திரிந்தது.அதி அற்புதசடலந்தாங்கிஆண்டுக் கணக்காய்சுடுகாடொன்றுசுற்றித் திரிந்தது.சுடுகாடென்றால்அது மெய்ச் சுடுகாடுஅதில் கொள்ளிவைப்புகுத்தகையல்ல.இதுவரைக்கும்கொள்ளி வைத்தார்எண்ணிலாதார்என்றிருந்தும்சடலமட்டும்வெந்து வெண்ணீறுஆகவில்லை.நீறி நீறிஇருந்ததல்லால்வெந்து வெண்ணீறுஆகவில்லை.அதனால் தானோஎன ஐயுறுமாறுமெய்ச்சுடுகாடதுவும்நெட்டுயிர்த்துநெட்டுயிர்த்துசுற்றித் திரிந்தது.யாரோ இறுதியில்கருணை கூர்ந்துவைத்த கொள்ளிபற்றிப் பிடித்திடநீறி நீறிஇருந்த சடலமும்மாயமாய் மறைந்தது.மெய்ச்சுடுகாடதுவும்பொய்ச் சுடுகாடுபோய்ச் சேர்ந்தது.
>>