அவரவர் பாடு
எஸ்ஸார்சி தெரு நாயெல்லாம்அசைவப்பிரியர்கள் வீட்டைச்சுற்றியபடிவாலைக்குழைப்பதும் சலாம் போடுவதும்அவர்கட்குத்தான்நாயுக்குச் சோறு போட்டுநன்றியுள்ளது நாயென்றுநவிலத்தான் விருப்பமெனக்குபோடும் சோற்றைத்தொட்டால்தானே அதுஎதனைத்தான் போட்டாலும்முகர்ந்து முகர்ந்துநகர்ந்தே போகிறது. அது.நாயின் கண்கள்பேசுவது கேட்டேன்’சோம்புமில்லை பட்டையுமில்லைஇன்னும் இதைத்தான் தின்கிறாய் நீ—–
>>