அழகியசிங்கர்/சம்மதம்

வீட்டில் பரபரப்பு. ஆனால் ரம்யா அலுவலகம் போய்விட்டு மாலை ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்று வருவதாகச் சொல்லியிருந்தாள்.பெண் பார்க்கிற அன்றுகூட இந்தப் பெண் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாளே என்று அவையத்திற்குக் கடுப்பு.சரியாக ரம்யா வந்தபிறகு அவர்களும் வந்திருந்தார்கள். முகத்தை நன்றாகத் …

>>

அழகியசிங்கர் கவிதைகள்

இன்று கவிதை வாசிக்கலாம் கவி அரங்கத்தில் அழகியசிங்கர் வாசித்த கவிதைகள் (15.11.2024 ) என் வீட்டில் நாற்காலியும்புத்தகங்களைச் சுமக்கின்றன. அதற்கும்தெரியும் அவற்றின் வாசனை அதனால்தான்என் இல்லத்தில்நாற்காலியும்பேசத் தொடங்கும் கவிதை வாசிக்கும்கதைகள் சொல்லும்பட்டிமன்றப் பேச்சாளர்மாதிரி இலக்கியம்பேசும்பொதிசுமக்கும் நாற்காலி மடிப்பாக்கம் வந்தவுடன்பக்கத்திலுள்ளபூங்கா வரவேற்கும் நான்போகும் …

>>

நாகேந்திர பாரதி வாசித்த கவிதைகள்

மௌன சப்தம் இலைகளின் மௌன சப்தம்வேர்களை நீள வைக்கும் மலர்களின் மௌன சப்தம்வண்டினை வரவழைக்கும் மலைகளின் மௌன சப்தம்மரங்களைச் செழிக்க வைக்கும் துளைகளின் மௌன சப்தம்காற்றுக்குக் காத்திருக்கும் இயற்கையின் மௌன சப்தம்இறைவனைத் துணைக்கழைக்கும் இறைவனின் மௌன சப்தம்உலகினை இயங்க வைக்கும் மௌனத்தின் …

>>

க.நா.சு. /தகப்பனும் பிள்ளையும்

தகப்பனார் சொன்னார் : ஆமாம் சார். எனக்கு ஒரே ஒரு பிள்ளைதான். வேறு குழந்தை குட்டி கிடையாது. உற்றார் உறவினர்கூடக் கிடையாது.இந்தப் பிள்ளை தலைப்பட்டு எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. அவனை நம்பித்தான் நான் உயிர் வைத்திருக்கிறேன்.ஆமாம். ஹானர்ஸ் வகுப்பில் கடைசி …

>>

செ.புனிதஜோதி/அனைவருக்கும் நன்றி

நன்றியைப் பற்றி ஒரு அதிகாரம் படைத்துள்ளார் திருவள்ளுவர். அதேபோல் இலக்கியங்களிலும் பல செய்திகள் உள்ளன. நன்றி உணர்வை வெளிப்படுத்தவே பல கல்வெட்டுக்களும், நடுகல்லும்,பல விழாக்களும் நம்மிடத்தில் நிறைந்துள்ளன . இந்தப்பிரபஞ்சம் நிலைத்து வாழ்வதற்கு அன்பு தான் ஆதாரமொழி. ஒவ்வொரு உயிர்களிடத்திலும் நிரம்பி …

>>

ஜனநேசன்/கிண்கிணிப் பேய் …

இரவு பத்துமணி செய்தியைக் கேட்டுகொண்டிருந்தேன் . சுவற்றிலிருந்த சுவிட்சு பெட்டியில் காற்றில் சிக்கிய ஒற்றைக் காகிதத்தாள் போல படபடவென்ற சத்தம் கேட்டது. குழல்விளக்கினை அணைத்தேன் . சத்தம் தொடர்ந்தது . தொலைக்காட்சி பெட்டியில் ஒலி இயல்பாகவே இருந்தது. ஒலியினைக் குறைத்துவிட்டுக் கவனித்தேன். …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கழுகாக அல்ல, மனிதனாக இருங்கள்

1993 ம் ஆண்டில் தெற்கு சூடானில் கடும் பஞ்சம். நியூயார்க் டைம்ஸ் நிருபர் ஒருவர் அது பற்றிய செய்தி திரட்ட சூடான் அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பசியால் வாடிய, மெலிந்த தோற்றம் கொண்ட ஒரு குழந்தையை புகைப்படம் எடுத்தார். அது எப்போது …

>>

ஷண்முக சுப்பையா/கரு

கவிதை பிறக்ககருவுற வேண்டிகட்டிலொன்றில்மெத்தை விரித்துகற்பனைக்காகக்காத்துக் கிடந்தேன்.வெளியேயாரோ ஒருத்தியாரிடமோ‘கருவிலே சிதைந்ததுமுதற் குழந்தைஇறந்து பிறந்ததுஇரண்டாவது குழந்தைபிறந்ததும் இறந்ததுமூன்றாவது குழந்தைஇப்பொழுது நான்கருவுற்றிருக்கிறேன்அது என்னாகுமோ?என்னையும்கொண்டு தான் போகுமோ?கண்டுதான்தெரிய வேண்டும்”என்று ஏனோஒப்பாரி வைத்துஓலமிட்டாள்.கேட்ட நான்வந்த கற்பனையைவிரட்டிவிட்டுநிம்மதியாய்தூங்கி விட்டேன். ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி – விருட்சம் நாளிதழ்

>>

ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி

பெட்டைக் கோழிமுட்டையிடும்!சேவற்கோழிஎன்ன செய்யும்?எனக்குத் தெரியாது.உனக்குத் தெரியாது.ஒருவருக்கும் தெரியாது. ஷண்முக சுப்பையா/திருடர்கள் – விருட்சம் நாளிதழ் ஷண்முக சுப்பையா/படம் – விருட்சம் நாளிதழ் ஷண்முக சுப்பையா/அமரன் – விருட்சம் நாளிதழ்

>>

ஷண்முக சுப்பையா/அமரன்

எழுதுகோலை எடுத்தேன்ஏனோ அதுவாருகோலாய் மாறியது.செய்வதறியாதுஒரு கணம் திகைத்தேன்.மறுகணம்வருவது வரட்டு மென்றதனால்பழங்குப்பையைவாரி வாரி இறைத்தேன்.புதுக் குப்பையைக்கூட்டிக் குவித்தேன்.கண்டு நின்றஇலக்கியக் காவலர்கூட்டமொன்றுஓடோடி வந்தெனக்குபட்டாடை போர்த்திபரிசில் அளித்துஇலக்கிய மேதை உன் போல்உலகிலுண்டோ”என்றென்னைவாயார வாழ்த்திவானளாவப் புகழ்ந்து,அமரர் உலகில் புகுத்திஅதற்கு மேல்செய்யும் வகை அறியாதுதவித்தது.அமரன் நான்அவர்க் கென்னகைமாறு செய்யஎன்று …

>>

ஷண்முக சுப்பையா/திருடர்கள்

திருடன் ஒருவன்குருடன் வீட்டில்திருடப் போனான்.முடிந்த மட்டும்திருடிவிட்டுதிரும்பிவந்துதிருட்டுப் பொருளைஎடுத்துப் பார்த்தால்எல்லாம்திருடன் வீட்டில்திருட்டுப் போனதிருட்டுப் பொருள்.

>>