உத்தமசோழன்/யாராவது ஒருவன்

நாகையிலிருந்து புறப்படும் இரவு நேர கடைசிப் பேருந்து அது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு வந்து திரும்பியவர்களால் இப்படியொரு நெருக்கடி.பஸ்ஸுக்கோ தள்ளாமை வந்து ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய வயதில், திரும்பிப் பார்க்காத பிள்ளைகளால் …

>>

இசை புதிது ஆண்டு விழாவில் இந்திரா ராமநாதன் அவர்கள் தொகுத்து வழங்கிய திரை இசை நிகழ்வு

அழகியசிங்கரின் இசை புதிது வாட்ஸ் அப் குழுவின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவில் இந்திரா ராமநாதன் அவர்களின் தொகுப்புரையோடு நடந்த இசை புதிது உறுப்பினர்களின் திரைப் படப் பாடல்களின் காணொளிப் பதிவு, 27 – 03 – 2025 அன்று நடந்த …

>>

அழகியசிங்கர்/பை

இந்தப் பைஓட்டையாய் இருக்கிறது ஓட்டைப் பையை நிரப்பதபால்கள், எல்லாம் ஞாபகமாய்போஸ்ட் செய்கிறேன். ஓட்டைப் பையைத்திரும்பவும்கொண்டு வந்து விடுகிறேன். இன்னும் பல தபால்களைநிரப்புவதற்கு…. காலம் காலமாய்ஓட்டைப் பையும் தபால்களும்.

>>

அதிரன்/ஜூன் 2

வண்ண வண்ண சீருடை அணிந்துமுதுகில் ஒரு மூட்டை சுமந்துசிறகில்லாம் பறந்து செல்கிறதுசின்ன பட்டாம்பூச்சி ஒன்று அதை டாட்டா காட்டிவழியனுப்பி வைக்கிறதுஒரு பெரிய பட்டாம்பூச்சி

>>

சசிகலா விஸ்வநாதன்/ஒரு மிடறு

ஒரு மிடறு நீர் போதும்என் விடாய் தணிந்து விடும். ஒரே ஒரு சொல் போதும்என் வெறுமை களைய, ஒரே ஒரு பார்வை போதும்என் உயிர் துளிர் விட, ஒரே ஒரு தொடுகை போதும்என் நம்பிக்கை நீள, நீ நீயாக இருந்தால் மட்டும்.

>>

உத்தமசோழன்/தப்புக் கணக்கு

சங்கரும் கண்ணனும் ஒட்டி உரசியபடிதான் உட்கார்ந்திருந்தார்கள். இருந்தாலும் பேசிக் கொள்ளவில்லை.பேசக்கூடாது என்றில்லை. பேசத் தோன்ற வில்லை. இருவருடைய முகத்திலும் என்னென்னவோ சிந்தனைகள். சங்கரின் முகத்தில் மகிழ்ச்சி அலைகள். கண்ணனின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள்.நான்கு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தபோது இப்படியில்லை. அப்போதும் …

>>

உத்தமசோழன்/ஒரே ஒரு துளி…

காலை எட்டு மணியானாலே பெரியசாமிக்கு பக்கத்தில் இருக்கும் கான்வென்ட் வாசலில் போய் நின்று கொள்வார்.இருப்புக் கொள்ளாது. எட்டரை மணிக்கெல்லாம் கான்வெண்ட் வாசல் களைகட்டிவிடும். பைக்… ஆட்டோ… கார்… சைக்கிள் என்று. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குழந்தைப் பூக்களை சுமந்துகொண்டு வந்து கொட்டிக் …

>>

அசோகமித்திரன்/அது

மறுபடியும் மனைவியோடு சண்டை. சண்டை போட்டு விட்டு அவள் சமைத்துப் போடுவதை மட்டும் சாப்பிட முடியுமா? காலைச் சாப்பாடு தவறிப் போய்விட்டது. இப்போது இராச் சாப்பாடுதான். ஆனால் படுத்துத் தூங்க வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டியிருக்கிறது. இந்த நடுநிசியில் அவளோ குழந்தைகளோ விழிந்திருந்தால் …

>>

லாவண்யாசத்யநாதன்/ நிகர்

புழுதி புழுக்கம்வாகன நெரிசல்சிறிய சந்தில்விமான வேகத்தில்வரும் ஸ்கூட்டர்வழி மறிக்கும் மாடுகுறுக்கே ஓடும்பாதசாரிதுரத்தி வந்துபின்வழியில் ஏறும்வாலிபக்கிறுக்கன்இத்தனை நடுவிலும்விபத்தில்லாமல்அரசு பேருந்து ஓட்டும்ஓட்டுநருக்கு நிகராய்பூமிதனில்யாருமில்லையிஸ்ஸையே!

>>

ஷைலஜா/மாயச்சூது

அசோகமித்திரன் நினைவாக மின் நூலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் வரிசை – 15 ஆறு மாதங்கள் முன்புசென்னை புறநகர் ஆதம்பாக்கம்- கிண்டிக்குமிடையே அமைந்துள்ள மிகச்சிறிய பாலம் அது .அந்த பாலத்தின் கீழ் அங்குள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் கருமையான நிறத்தில் ஏதோ சாயப்பட்டறையிலிருந்து வெளி …

>>

உத்தமசோழன்/ஆதாய அறுவடை

ஒரு வாரம் ஆயிற்று. தாசில்தார் செல்வத்தை தூக்கம் தொட மறுத்து.படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தார், கண்களை மூடி உறக்கத்தை வரவழைக்க முயன்றார். தூக்கம் வரவில்லை. விதம் விதமான விபரீதமான கற்பனைகள் தான் வந்தன.கும்பல் கும்பலாக கையில் ஆயுதங்களோடு இவர்கள் அவர்களைத் தாக்குவது …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருக்கடவூரில் மார்க்கண்டர்க்கருளிய காலசம்ஹார மூர்த்தியை வணங்கிக்கொண்டு அபிராமியம்மையின் தரிசனத்தையும் பெற்றுக் கொண்டு, குங்கிலியக்கலயர், காரி நாயனார், உய்யவந்த தேவனார், அபிராமிபட்டர் ஆகியோரிடம் விடை பெற்றுக்கொண்டு, மாயவரத் துக்குத் திரும்பிவரும் வழியில் ஆக்கூர் என்ற தலத்தையடைந்தோம்.நாங்கள் போன சமயம் மாலைநேரம். சிறிய கோயில். …

>>

அழகியசிங்கர்/பஸ்

இப்போதெல்லாம்பஸ்ஸில்செல்வதில்லைபஸ்ஸில்எப்போதும் வழியும்கூட்டத்தைப் பார்ப்பதுண்டு நான்ஆட்டோவைநம்பி வாழ்கிறேன்பயணத்துடன்அவர்கள் புலம்பல்களையும்கேட்பதுண்டு ஆனால்பஸ்ஸில் போக எனக்குப் பிடிப்பதில்லை

>>

விஞ்ஞானி/ஓட்டுநர்

ஓட்டுநர் என்றதும்முறுக்கிய மீசைஇறுக்கி முடிந்த சிகைதிரண்ட தோளில் துண்டுதிறந்த மார்பில் சுருள் முடிகையில் தார் குச்சி சகிதம் ஒற்றை மாட்டு வண்டியைஓட்டும் தாத்தா பக்கத்தில்உட்கார சண்டை போட்டஅந்த நாட்கள் நினைவுக்குவருகிறது

>>

சசிகலா விஸ்வநாதன்/ஓட்டுநர்

ஒரு ஓட்டுநரைத்தான்நான் மணந்துள்ளேன்;என்பது எனக்குமூன்றாம் மாதமே தெரிந்துவிட்டது. தேர்ந்த இயக்குநர் அவர்!இப்படி உடுத்து!அப்படி பேசு!இதை இவ்வாறு செய்!அவரிடம் அவ்வாறு பேசு!ஒரு வார்த்தை கூடஎதிர்மறை பதமாய்இருக்காது; எனக்குஎதிர் சொல் எடுக்கவோ;எதிர்வினை ஆற்றவோ;இயலாது!என்னால் இயலும்;எதிர்வினை ஆற்றவும்எதிர்சொல் பேசவும்.அதற்கான வாய்ப்பைஅவர் அளித்ததே இல்லை.என்பதில் எனக்கு குறைதான்!வலுவுக்கு …

>>

ரவி அல்லது/ஏக்கப்பொழுதான பயண சாஸ்வதங்கள்

ஓட்டுநர் தினம்: விடிபொழுதின்முன் பகுதிதொடங்கிவிடாதுபயணிக்கிறதுவாழ்க்கைஅலுவலெனவும்அகங்காரத்துக்கெனவும்ஆசைக்கெனவுமாகநேரத்தையும்நிம்மதியையும்கரைத்துஈட்டலும் செலவுமாகஎப்பொழுதும். மூச்சுக் கயிற்றின்முடிச்சுஇறுகும் முன்அன்றாடங்கள்ஒருவரின் கையில்அனாயசமாகஒப்புக்கொடுக்கப்பட்டுஓடுகிறதுயாதொருபயமற்றதாகபயணங்கள். விலைவைக்க முடியாததுஉயிரென்றாலும்வேதனையாகத்தான்இருக்கிறதுஎங்கும்ஓட்டுநருக்குஊதியத்தைகொஞ்சம்கூட்டிக் கொடுப்பதற்கு தயங்கும்அரசுகளையும்அதன்மக்களையும்நினைக்கும்பொழுது.* 01/06/25.12:47ம.

>>

சந்துரு மாணிக்கவாசகம்/தானம்

பொதுவாக உங்களுடைய நாள் எப்படித் துவங்கும்? வழக்கமான நேரத்தில் எழுவீர்கள்.. கொட்டாவி விட்டு, உடலைமுறித்தபடியே வந்து கதவைத் திறப்பீர்கள்.. பேப்பர், பால் எனத் துவங்கி ஸ்நானம் முடித்து அதன்பிறகான தினசரி இயந்திர வாழ்க்கைக்குள் உங்களைபொருத்திக்கொள்வீர்கள்.ஆனால்.. ஒரு விடியல் இப்படியில்லாமல், நீங்கள் வாசற்கதவைத் …

>>

கலாவதி பாஸ்கரன்/பொங்கல் விடுமுறை

படித்து பட்டம் பெற்றகிராமத்து இளைஞன்,வேலையின் பொருட்டுநகரவாசியானவன்.உடன் பணி செய்யும்பட்டணத்துப் பெண்ணைஆசை ஆசையாககாதலித்து மணந்தவன் ! நன்றாகத்தான் ஆரம்பித்ததுமண வாழ்க்கை !இருவரும் பணி செய்ததால்,வீட்டு வேலையில் பாதிஇவன் தலையில் !சனி ஞாயிறு வந்தால்துணிகள் துவைத்து,வீட்டை சுத்தம் செய்துமாலை டின்னர் வெளியில்,நைட் ஷோ கட்டாயம்! …

>>

செந்தில் பிரசாத்/கவிதை கூத்து

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை சல்லடைப் போட்டுசலித்துப் பார்த்தேன்…எழுதியதில் போட்டிக்கு என்றுகவிதை தேறவில்லை. சிந்தனை கழுவிபுதுப்பித்து பார்த்தேன்…போட்டிக்கு எழுதிய எந்தகவிதை தோதுமில்லை. தனிமையின் மகிழ்ச்சி துணையில்எழுத எத்தனித்துப் பார்த்தேன்…போட்டிக்கு என்று எழுதக்கவிதை ஏதுமில்லை. பக்கத்துக்குக் கவிஞரின் காகிதத்தைஎட்டியும் பார்த்தேன்…போட்டிக்கு என்று …

>>