சரோஜா ராமமூர்த்தி/ மழை

ஆற்றங்கரை மணல் சூரிய வெப்பத்தால் வெந்தழல்மாதிரி சுட்டது. ஆற்றங்கரையில் இருந்த மரங்கள் சூரியனின் கடுமை தாங்கமுடியாமல்சலனமற்று நின்றன. காக்கை, குருவிகள் கூட அயர்ந்து வானைப் பார்த்து ஓங்கின. சில்லெனறு ஒரு சொட்டு ஜலம் தங்கள் வாயில் விழாதா என்று குருவிகள் வாயைப் …

>>

சரோஜா ராமமூர்த்தி/மீனாக்ஷியின் வீணை

“வீணைத் தந்திகளை மீட்டிக்கொண்டிருந்தாள் மீனாக்ஷி. நான் உள்ளே நுழைந்த சமயம் சரியானதுதான் என்று நினைத்துக் கொண்டே மீனாக்ஷியின் எதிரில் போய் அமர்ந்தேன்.“வா, உட்கார்!” என்று என்னை வரவேற்றுவிட்டு மீண்டும் தந்திகளை மீட்டி வீணையின் மேல் படிந்திருந்ததூசியை துணியால் தட்ட ஆரம்பித்தாள் மீனாக்ஷி. …

>>

சரோஜா ராமமூர்த்தி/பிச்சைக்காரன்

குறுகுறுவென்று மாசி நிலவு ஊர் முழுதும் படர்ந்து வீசிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த பூட்டப்பட்ட பங்களாவின் தென்னை மரங்கள் காற்றில் ‘உய்ய்’ என்று ஆடி அசைந்தன. தெருவில் போவோர் வருவோருடைய இரண்டொரு வார்த்தைகளின் சத்தம் இடையிடையே கேட்டது. அத்துடன் இராப் …

>>

தங்கேஸ்/ பாடம்

நேரம் காலை பதினொரு மணிக்கு மேல் இருக்கும். . நல்ல ஏறு வெய்யில் அடிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்கூடத்தின் காம்பவுண்ட் கேட்டை கிறீச்சென்று சத்தத்தோடு திறந்தபடி கைலி கட்டிய ஒல்லியான உருவம் ஒன்று உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. நல்ல மிதமான வெயிலுக்கு ஆசைப்பட்டு …

>>

தங்கேஸ்/காணாமல் போனவர்கள்

நான் கீழக்கரை பேருந்து நிலையத்தில் இறங்கி தர்க்காவுக்குப் போய்சேர்ந்த போது வெய்யில் கொஞ்சம் கூட தாழ்ந்திருக்கவில்லை. சிறு சிறு மணல் துகள்கள் செருப்புக்குள் புகுந்து கொண்டு குறு குறுவென்று பாதத்தை உறுத்தின. வெட்ட வெயிலில் மட்ட மணல் வெளியைப்பார்க்கும் போது வறுத்தெடுத்த …

>>

தங்கேஸ்/ பயல்

பயல் மார்பில் கிடந்து முட்டி மோதிக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் பார்த்தும் பயனில்லை . மூக்கால் சுரண்டிப்பார்த்தான் எதுவும் கிடைக்கவில்லைஅடிவயிற்றில் காலை வைத்து அழுத்தி மார்பை நோக்கி உண்ணிப்பார்த்தான் ஒன்றும்ஆகவில்லை. வயல் காட்டிலிருந்து எடுத்து வந்த குழைவான ஈரக்களிமண்ணை …

>>

தங்கேஸ்/இளநீர்

சித்தி​ரை மாதத்து உச்சி​வெயில் தலையைப் பிளந்து ​கொண்டிருந்தது.​ ஜே​கே சூப்பர் மார்க்​கெட்டில் அம்மு​வை இறக்கிவிட்ட ​கை​யோடு நானும் இரண்டு மூன்று க்ரீம் பிஸ்​கெட்பாக்​ கெட்டுகளையும் ஒரு நான்கு நூடுல்ஸ் பாக்​கெட்டுக​ளையும் ஏக​தேசமாக அள்ளி டிராலி கூ​டையில் போட்டுக்​கொண்​டேதானிருந்தேன். அவ​ளே என்னருகில் வந்து …

>>

தங்கேஸ்/ மரகதப்புறா

தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின் மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தயிர்ப் பானையின் உள் பக்கத்தை வெளியே இழுத்து கவிழ்த்தி வைத்தது போல வெள்ளை வெளேர் என்று தொப்பையும் தொந்தியுமாக …

>>

அழகியசிங்கர்/டீ

அந்தக் கிராமத்தில் அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் வயதானவர்கள். தினமும் அவர்கள் சந்திக்கும் இடம். அந்தக் கிராமத்திலேயே பிரதானமாக இருக்கும் அந்த டீ கடையில்தான். என்ன அந்த டீக் கடையில் முக்கியமானது என்றால் ஒன்றுமில்லை. அது கொஞ்சம் பெரிய டீக் கடையாக …

>>

கொனஷ்டை/மௌனி

எனக்குத் தனுஷ்கோடியில் ஓர் அலுவல் இருந் தது. அதன் பொருட்டு எழும்பூர் ஸ்டேஷனில் போட்மெயிலில் ஏறினேன். நல்ல வேளையாகக் கூட்டமில்லை. என்னுடைய வண்டியில் பிரயாணி வேறு ஒருவர் மாத்திரம் இருந்தார். அவ ருடைய தாடியைப் பார்த்தால் ஒரு மகரிஷி மாதிரி இருந்தது. …

>>

வல்லிக்கண்ணன் /துரும்புக்கு ஒரு துரும்பு

சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன்.எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர்.“அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/ பெருமாள் புண்ணியத்தில்!

“மாமா! இப்போல்லாம் ஏன் எல்லா சன்னதியும் மூடி இருக்கு? ராமர் சன்னதியில் இருக்கும் சேஷாத்ரி மாமாவ என்ன கொஞ்ச நாளா காணும்?” என்று அர்ச்சகர் ராகவனிடம் கோயிலுக்கு வந்த ஒரு பெண் விசாரித்தார். “அவருக்கு கொஞ்ச நாளா உடம்பு முடியல… போன …

>>

மஞ்சுளா சுவாமிநாதன் /தேசம் தான் பெரியது!

ஜனவரி 26, 2022 – புதுடில்லி குர்மித் தன் பீரோவிலிருந்து ஓர் காவி நிற கதர் புடவையை எடுத்து உடுத்துகிறார், பின்பு அதன் லாக்கரில் இருந்து மிகவும் நுணுக்கமான வேலைபாடு உடைய ஓர் நகைப்பெட்டியை எடுத்து பிரிக்கிறார். நாமும் உள்ளிருக்கும் விலையுயர்ந்த …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/தன யோக ஜாதகி

“ஆஹா! அருமையான கட்ட அமைப்பு. உங்க பொண்ணு சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கும். யோகக்கார ஜாதகம்! இவ தன யோக ஜாதகி!” இப்படி குடும்ப ஜோசியர் நம்ம கதாநாயகி ஜனனி என்கிற ஜானும்மா ஜாதகத்தைப் பார்த்து சொல்ல, காக்கா உட்காரப் பனம்பழம் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/கடைசி அழைப்பு

மியூசிக் அகாடெமியில் மாலை கச்சேரி கேட்டு ரசித்து விட்டு சேது வீட்டிற்கு வந்தபோது மணி பத்து. இரவு படுக்கும் முன்பு அலைபேசியில் லதா எட்டு மணி அளவில் அழைத்திருப்பதை கண்டார். சிவப்பு நிறத்தில் லதாவின் பெயரருகில் இருந்த டெலிபோன் ரிசீவரின் பிம்பத்தை …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மன்னிப்பு கேட்டா போதுமா?

“சுதா! என்ன இந்த வாரமும் சூப்பர் மார்க்கெட்ல கறிகாய் வாங்கிட்டியா? நம்ம வழக்கமா போற கடைக்கு போலாம்ல!” என்றார் என் கணவர்.“எனக்கு எப்போ போகணும்னு தோணுதோ அப்ப போறேன். ஐ நீட் சம் டைம், ” என்றேன் நான்.“அந்த விஷயத்த அவங்க …

>>

வ.வெ.சுப்பிரமணிய ஐயர்/மங்கையர்க்கரசியின் காதல்

சூசிகை குலோத்துங்க சோழனுக்காகக் கலிங்கம் சென்று வென்று வந்த கருணாகரத் தொண்டைமானுடையமகளான மங்கையர்க்கரசி என்னும் மங்கை, கருணாகரன் என்னும் வாலிபனைக் காதலிக்கிறாள்அவள் தகப்பன். இறந்துவிட்டதால், அவளுடைய சிற்றப்பன் தான் தற்காலம் அவள் குடும்பத்துக்குத் தலைவன். அவன் அவளை மார்த்தாண்டன் என்னும் வேறு …

>>

ஷண்முக சுப்பையா/ஆவி

ஸர்வம் பிரம்மம்;சத்தியம் அதுவேஎனவே உணர்ந்தேபாலில் நீரெனக்கலப்பாய் அதிலே.கலந்தபின்நின்று எரியும்தீயில் காய்ச்சும்பாலின் நீரெனஆவியாய் பறப்பாய்

>>

கோபிகிருஷ்ணன்/உரிமை

மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள்; ஒன்பது மாணவிகள். மதுரையில் என் பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பும், வீட்டிலுள்ள கோவிலில் தினப் பூஜையும், அவர் நடத்திய பஜனை மண்டபத்திற்கு வரும் பெண்களை அக்கா, …

>>

கோபிகிருஷ்ணன்/இனிமையான வக்கிரம்

நீண்ட மருத்துவ அறிக்கை ஒன்றை டைப் செய்து முடித்து விட்டு அப்பொழுதுதான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். என் அறையை அடுத்தது செவிலிகளுக்கான பணி அறை. அதற்கு முன் பார்த்திராத ஒரு புது முகம்தென்பட்டது. ஒரு இளம் பெண். தூய …

>>

கோபிகிருஷ்ணன்/குற்றமும் தண்டனையும்

5-1-85. முற்பகல். முக்கியமான ஒரு கடிதத்தை டைப் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசி மணி அடித்தது. சகஊழியர் க்ளமென்ட் அதை எடுத்தார். செய்தி அனைவருக்கும் தெரி விக்கப்பட்டது. அன்றைக்கு இரவு 10-45-க்கு டாஸ்டாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புதினத்தின் திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்போகிறார்கள். …

>>

ஜெயராமன் ரகுநாதன்/என்ன தவம் செய்தனை…….

ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும் பெண்களும் மார்பில் பாட்ஜ் அணிந்து வருவோரை வரவேற்று சீட்டில் உட்கார உதவிக்கொண்டிருக்க அங்கே மேடையில் டீச்சர்கள் கைகளில் பேப்பர் வைத்துக்கொண்டு யாரையோ மிரட்டிக்கொண்டும் தங்களுக்குள் டென்ஷனாக பேசிக்கொண்டும் பரபரப்பாக …

>>

லாவண்யா சத்யநாதன்/சிந்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும்

‘மாப்பிள்ளை அழைப்புக்குப் போவதைப் போல ட்ரஸ் பண்ணிக்கொண்டுஆபீசுக்குப் போகிறீர்கள். லாட்ஜுக்கு வருவதைப்போல நேரம் காலமில்லாமல் வீட்டுக்குவருகிறீர்கள்..எப்போது பார்த்தாலும் கம்பெனியைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்.சுநேத்ரா இன்னும் குழந்தையில்லை. இருபத்தேழு வயசாகிறது. இன்னும் எத்தனைநாள் அவளை நம்முடனேயே வைத்திருப்பது?அவளுக்கு வரன் பார்க்க வேண்டுமென்றஅக்கறை உங்களுக்கு …

>>

லாவண்யா சத்யநாதன் / டெண்டர்

நேதாஜி நகரிலும் ராம் நகரிலும் வீதிகளிலுள்ள சுரங்கச் சாக்கடை மூடிகள்காணாமல் போயிருந்தன. .. பின்னிரவில் நைட் ஷிப்ட் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பியவர்கள் சிலர்தம்பாவும் அவன் சகாக்களும் அவற்றை கழற்றி ட்ரைசைக்கிளில் எடுத்துச் செல்வதைப்பார்த்திருந்தார்கள்இரண்டு நகர்களும் தம்பாவின் லீலைகளைச் சகித்துக் கொண்டிருந்தன. …

>>

க.நா.சு. /மந்திரமும் மாயமும்

‘பில்லி சூன்யம், மந்திரம், மாயம் இதிலெல்லாம் என்னவோ பாட்டி எனக்கு நம்பிக்கையே வருவதில்லை’ என்றேன் நான்.சுந்தாப் பாட்டிக்குக் கோபம் வந்தது. ‘பி.ஏ. படிச்சுவிட்ட யோல்லியோ, உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை வராதுதான்- வராதுதான்’ என்றாள்.“பி.ஏ. படிச்சதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்”‘ என்றேன் நான்.“முன்னெல்லாம் …

>>

க.நா.சு. /தகப்பனும் பிள்ளையும்

தகப்பனார் சொன்னார் : ஆமாம் சார். எனக்கு ஒரே ஒரு பிள்ளைதான். வேறு குழந்தை குட்டி கிடையாது. உற்றார் உறவினர்கூடக் கிடையாது.இந்தப் பிள்ளை தலைப்பட்டு எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. அவனை நம்பித்தான் நான் உயிர் வைத்திருக்கிறேன்.ஆமாம். ஹானர்ஸ் வகுப்பில் கடைசி …

>>

ஜனநேசன்/கிண்கிணிப் பேய் …

இரவு பத்துமணி செய்தியைக் கேட்டுகொண்டிருந்தேன் . சுவற்றிலிருந்த சுவிட்சு பெட்டியில் காற்றில் சிக்கிய ஒற்றைக் காகிதத்தாள் போல படபடவென்ற சத்தம் கேட்டது. குழல்விளக்கினை அணைத்தேன் . சத்தம் தொடர்ந்தது . தொலைக்காட்சி பெட்டியில் ஒலி இயல்பாகவே இருந்தது. ஒலியினைக் குறைத்துவிட்டுக் கவனித்தேன். …

>>

க.நா.சு. / ஐந்து ரூபாய்

நான் இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் மாம்பலத்தில் குடியிருந்தேன். அப்போதெல்லாம் சிரமத்தைப் பார்க்காமல் ‘பஸ் டர்மினஸுக்குப் போய்த்தான் பஸ் ஏறுவேன். நடு ஸ்டாப் எதிலும் பஸ் கிடைக்காது. பஸ்ஸுக்கு அப்படியும் தினம் காத்திருக்கத்தான் நேரும். அப்படிக் காத்திருக்கும் நேரங்களில் ஒரு பிச்சைக்காரன் …

>>

லா. ச. ராமாமிருதம்/மஹாபலி

சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் …

>>

வல்லிக்கண்ணன்/அக்கரைப் பச்சை

கடற்கரைக் கோயிலை ஒட்டிய வெளிப்புறத்தில், சிறிய கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். பிரகாரத்தில் போய் வந்து கொண்டிருந்த ஆட்கள் நல்ல வேடிக்கைப் பொருள்களாக விளங்கிய போதிலும், கிழக்கே விரிந்து கிடந்த கடலும் வானமும், கரையை ஒட்டியிருந்த …

>>

லா. ச. ராமாமிருதம்/ரயில்

வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் …

>>

கோபிகிருஷ்ணன்/காணி நிலம் வேண்டும்

அக்டோபர் 1980. திருமணமாகி தாராவுடன் மயிலையிலுள்ள ஒரு சிறு சந்தில் உள்ள வீட்டில் ஒரு பகுதியில் குடியேறினேன். சந்தில் பல நாய்கள், நாய்க்குட்டிகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள், வழிநெடுக புழுதி நிறைந்த மண், சகதி, ஆவினங்களின் கழிவுகள், மிகவும் ஓரமாக நடந்து …

>>

சாவி/எதிர்பாராதது

ஜயந்தி பெயருக்கேற்ற அழகு வாய்ந்தவள். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். எனவே, ஆடம்பரமான ஆடை ஆபரணங்கள், நகை நட்டு எதுவும் அவளுக்குக் கிடையாது . ” ’எனக்கென்னத்திற்கு நகை?’ என்பதைப் போல் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டிருக்கும்!அவளுடைய தாயார் இறந்து …

>>

சுந்தரராஜன்/ ஒரு தவறு செய்தால்

அமெரிக்க சாலையில் அவன் கார் தவழ்ந்து கொண்டிருந்தது. ‘குறை ஒன்றும் இல்லை’ பாடல் எம் எஸ்ஸின் குரலில் இழைந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலின் கருத்து அவனுக்கு என்றைக்கும் தாரக மந்திரம். அந்த உறுதிதான் அவனை இன்று மேகத்தில் பறக்க வைத்திருக்கிறது. அவனது …

>>

புலியூர் அனந்து/எனக்கு படம் வரைய வராது

இது நடந்து இப்ப இருபது வருஷம் இருக்கும்.“அப்பா, எனக்கு கொஞ்சம் இதை வரைஞ்சு தரியா?” என்று தனது சயின்ஸ் புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைக் காட்டிக் கேட்டாள் எனது ஆறாவது படித்துக் கொண்டிருந்த என் மகள்.சரியாக அப்போதுதான் யாரோ ஒரு சாவு …

>>

இரா.முருகன்/வைக்கோல் கிராமம்

எந்த நாளில்? சொன்னாள். அவள் கூறிய நாள் வெட்டுக்கிளிகள் மலைச்சாரல் ஊரை அழித்த தினம்.அவர்களில் இரண்டு பேர் அணிந்த உடைகளே நான் அணிந்திருப்பது.அவள் சிரித்தபடி சொல்ல நான் அரண்டு போய்ப் பார்த்தேன்.. இந்த உடைகளுக்கு உள்ளே வெட்டுக்கிளிகள் ஊர்ந்து சதையைப் பிய்த்தெடுத்து …

>>

லா. ச. ராமாமிருதம்/அரவான்

குழந்தையின் வீறலைக் கேட்டு, கிணற்றின் பிடிச்சுவரின் மேல் தவலையுடன் தாம்புக் கயிற்றை அப்படியே போட்டு விட்டு, உள்ளே ஓடிவந்து குழந்தையை வாரினான். பொங்கி வழியும் வியர்வை, மூலவர்மேல் பூசிய எண்ணெய் போல் அவன் கறுப்புடல் மேல் பளபளத்தது.அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை …

>>

க.நா.சு/ராஜா தேசிங்கு

குளக்கரையில் இருக்கும் ஜட்கா வண்டி ஸ்டாண்டில் தன் வண்டியை நிறுத்திவிட்டு, எதிரிலிருந்த பஸ்ஸ்டாண்டில்தான் அவன் வழக்கமாக நின்றிருப்பான். இடுப்பில் அழுக்கேறிய பச்சையும் சிவப்புமான ஒரு கைலி; பச்சைக் கலர் அரைக்கைச் சட்டைச் எண்ணெய் படாத கிராப்புத் தலை; காதில் ஒரு பீடி; …

>>

க.நா.சு./ சிரஞ்சீவி

ஆமாம், ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன், எனக்குக் கதை கிதை புனையத் தெரியாது. கதைகள் படிக்கக்கூடத் தெரியாது, பொய் சொல்வது பஞ்சமா பாதகங்களில் தலை சிறந்தது என்கிற கொள்கையை உடையவன் நான். கதை என்றால் பொய் என்கிற அசையாத நம்பிக்கையும் உடையவன் நான். …

>>

மோகன்ஜி/அங்கிங்கெனாதபடி….

‘இந்த கெடிலநதி மேம்பாலத்தின் மீதுதானே வெய்யிலில் நடந்து போனாள் ஜெயகாந்தன் கதையில் ஒரு பாட்டி’ மனோகர் தன்னை வினவிக் கொண்டான். ‘ஐய்யமாரு வீட்டுப்பாட்டி.. வேகாத வெய்யிலில் நடந்து போகும், புள்ளை வீட்டுக்கு.. ஜட்காவண்டியின் பக்கப்பலகைக்கு தோதாக முதுகை சரி செய்து கொண்டான். …

>>

மோகன்ஜி/’கூளம்’

‘கூளம்’ கதை குறித்த ஒரு அறிமுகம்:-நலம் தானே! ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் என்னிடம் 96 கதையைஅனுப்பக் கேட்டபோது எழுத்தாளர் விக்கிரமன் சாச் அவர்களிடம் ‘அமுத சுரபி’ இதழுக்காய் நான் தந்த இந்தக் கனத் நினைவுக்கு வந்தது. இதை எழுதி இருபத்து மூன்று …

>>

மோகன்ஜி/தத்த்தி

இன்னமும் இந்த தத்த்திப் பயலை எங்கே காணோம்?காலிப் பொடிமட்டையை மத்தியானத்துலேயிருந்து எவ்வளவு தான் முகர்வது? தீனதயாளு சாருக்கு கோபமாய் வந்தது. ஒரு வருஷமா இந்தத் திண்ணைதான். காலு விழுந்தப்புறம் எல்லாரோட சகாயம் இல்லாமல் ஏதும் முடிகிறதா? போதாததற்கு தெரிந்தவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய்க் …

>>

எஸ்ஸார்சி/சந்திராஷ்டமம்

என் மனைவிக்கு முட்டிக்கால் வலி. கொடியை நாட்டிக்கொண்டு அந்த முட்டிக்கால் வலி வந்து ஆண்டுகள் பலவாயிற்று. எத்தனையோ களிம்புகள் தைலங்கள் எண்ணெய்கள், மருந்துகள் மாத்திரைகள், காலுக்கு உறை எனும் தகரத்துணிகள் என்று அத்தனை ராஜ உபசாரங்களும் செய்தாயிற்று. கிலியுற்ற அந்த மனிதர்களை …

>>

புதுமைப்பித்தன் / ‘இந்தப் பாவி’ காதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு பெற்றோர் அவர்களைப் பிரித்தலும், பிரிவு மரணத்தில் மாட்டுவித்தலுமே அவர் இவ்வவனியில் இன்பத்துடன் வாசிக்க விரும்பும் …

>>

அம்பை/அம்மா ஒரு கொலை செய்தாள்

(சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில் சூர்ய விருதை இன்று (14.10.2024) பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு என் வாழ்த்துகள். நான் விரும்பிப் படித்த கதை ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’.இந்தக் கதையை daily.navinavirutcham.in ஆன்லைன் பத்திரிகையில் பிரசுரம் செய்துள்ளேன்.) அம்மா என்றதும் பளிச் …

>>

வல்லிக்கண்ணன்/ஆற்றங்கரை மோகினி

”குகுகூங்” – ஏதோ ஒரு பறவையின் இன்னொலிபோல் சிதறியது சிறு சிரிப்பு.அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு சிரிப்பை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். அவனுக்குப் பின்னால் சற்று தள்ளி, ஒரு மரத்தடியில் ஒரு பெண் நின்றதைக் கண்டு அவன் …

>>

தி.ஜ.ர /காளி தரிசனம்

5. கறுப்புப் பூனை பூனையும் பேசுமோ என்றே எவருக்கும் தோன் றும். ஆனால் அந்தக் கறுப்புப் பூனை என்னோடு பேசியது. அடுத்த வீட்டு ராமாச்சார் பேசுவதுபோல் பேசவில்லை. மூன்றாம் வீட்டுச் சங்கரையர் பேசுவதுபோல் பேசவில்லை. நீங்களும் நானும் பேசுவதுபோலவே அது பேசவில்லை. …

>>

நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 3

ஒரு குதிரை வீரன் ஒரு சமயம் ஒரு துருக்கி குதிரை வீரனும் அவன் மனைவியும் ஒரு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு வாய்க்காலைக் கண்டதும் மனைவி இளைப்பாறுவதற்காக இறங்கினாள். வீரன் தன் குதிரைக்குத் தண்ணீர் காட்ட ஆரம்பித்தான்.அப்பொழுது அவ்வழியாக …

>>

கலைச்செல்வி/நனப்பு

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) மகளுக்கு பொங்கல் சீருக்கான சாமான்களைக் கூட்டிக் கொண்டிருந்தாள் மரகதம். கரும்பங்கட்டு.. பச்சபயறு.. பச்சரிசி.. …

>>

ஜெ.பாஸ்கரன்/ இலவசம்தானே!

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிக்கூடத்தில் ஏகக் கூட்டம் – இலவச மருத்துவ முகாம்!‘பெரியவரே, அங்க …

>>

பேயோன்/அகலிகைப் படலம்

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) 1 வேதா யுகம்… 2பல்லாயிரம் அடிகளுக்குக் கீழே, பூமி வர்ணிக்கப்படத் தொடங்கியது. அது …

>>

தமிழவன்/காந்தி லிபி

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.)

>>

மோகன் ஜி/பச்ச மொழகா

“ரசத்துக்கு ருசியே அதுல நாலு பச்ச மொழகா கிள்ளிப் போட்டாத்தான் சார்”ராஜாமணியின் வாய், புகையிலை அதக்கலில் குழைந்து, பச்சை மிளகாய் ‘பச்சமொழகா’ ஆகிவிட்டது எனத்தான் முதலில் நினைத்தான் மதுசூதனன். ஆனாலும், இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ராஜாமணி அதேவிதமாய் அவருடைய மெஸ்ஸில் உச்சரித்தார். …

>>

மோகன் ஜி/பொன்வீதி

கொடியில் உணர்த்தியிருந்த தாவணியும் பாவாடை சட்டையும் இன்னமும் முழுதாய்க் காயவில்லை. நாலுமணிக்கு சிவா வந்துவிடுவான்.மணி மூணாகி விட்டது.கிரைண்டரின் பெல்ட்டையெல்லாம் இழுத்துவிட்டு, அவன் வருவதற்குள், காலையிலிருந்து காத்திருக்கும் இரண்டு பாத்திரம் அரிசி, உளுந்து ஊறலை அரைத்த பின்தான் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். ஜானுவுக்கு …

>>

க.நா.சு. /புளிப்பு

நண்பர் கடிதம் எழுதியிருந்தார் “தங்களுடைய கதையைப் படித்தேன்; மாயவரத்துத் திராட்சையின் புளிப்பை நானும் அனுபவித்திருக்கிறேன்; அந்தத் திராட்சையிலுள்ள ஒரே இனிப்பு, தங்கள் வர்ணனையில்தான் இருக்கிறது.”எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. அந்த நண்பரிடம் எனக்கு ஏற்கெனவே நல்ல மதிப்பு உண்டு. சாதாரணமாகக் கதைகள் …

>>

தி.ஜ.ர/மளிகை நிபுணர்

கருங்கோணத்திலேயே, முனா பனா நாவன்னா என்ற விலாசம் மகா பிரபலமானது. முனா பன நாவன்னாவில் ஒரு மாசம் வேலை பார்த்தவன் என்றால், எப்பேர்ப்பட்ட கோடீசுவர சௌராஷ்டிர முதலாளியானாலும் சரி, செட்டியார் முதலாளியானாலும் சரி, பரம சந்தோஷமாக வேலைக்கு அமர்த்திக்கொள்வார்கள்.முனா பனா நாவன்னா …

>>

காயத்ரி ஆர்/செப்டம்பர் 30

சின்னப் பூனை ஒன்று எங்கோ கத்தும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கண்விழித்தேன். மணியைப் பார்த்தால் 5.45. கண் எரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம்போல் இருந்தது. மாமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூவிக்கொண்டிருந்தாலும், பூனையின் குரல் தனித்துக் கேட்டது. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு …

>>

தி.ஜ.ர/வெள்ளிக் கரண்டி

அன்று ஒரே ஒரு நாள் வீடு என்ன அவந்தரையாகிவிட்டது! எங்கே பார்த்தாலும் வீட்டிலே அவள் இல்லை. குப்பை. சாமான்களெல்லாம் தாறுமாறாகக் கிடக்கின் றன. என்ன போச்சோ? என்ன இருக்கிறதோ ?-இத் தனையும் பங்கஜத்தம்மாளின் எண்ணம். அத்தனை எண்ணமும் பலவிதக் கூச்சலாக குட்டிகளெல்லாம் …

>>

தி.ஜ.ர/காக்கை ராஜ்யம்

என்ன விநோதமான கனவு!சாரநாதனுக்கு மூடநம்பிக்கை எதுவும் கிடையாது. நிச்சயமான ருசு இல்லாத எதையும் அவன் நம்பமாட் டான். ஆனால், நுட்பமான விஷயம் எதற்குத்தான் நிச்சயமான ருசு அகப்படுகிறது? விஞ்ஞானிகள் கூட ஓர் எல்லைக்கு அப்பால் தர்க்க சாஸ்திரத்தை அந்தரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். யுக்திக்கும் …

>>

தி.ஜ.ர/வாசலில் சிங்கம்

சுந்தரம் ஒரு மேதை. மேதைகளெல்லாம் விசித்திர மாகத்தான் நடப்பார்கள். சுந்தரமும் அப்படியே நடந்து கொண்டான்.இவனுடைய கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் இப்படி ஒரு மேதை தங்கள் குலத்தில் தோன்றப் போகிறான் என்று எப்படித்தான் அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை; ஒவ்வொரு …

>>

பிசகு -எஸ்ஸார்சி

கொனஷ்டை ஒரு எழுத்தாளரின் புனை பெயர். அவர் யாரென்று கேட்கிறீர்களா சென்னையில் உயர்நீதிமன்ற நீதிபதியாய் உத்யோகம் பார்த்த சீனுவாசாச்சாரியார் அவரே தான். அழகிய சிங்கரின் இணையதள ’ கதை புதிது’ நிகழ்வில் பேசுவதற்கு அவரின் கதைத்தொகுப்பிலிருந்து சில கதைகளைத் தேர்வு செய்து …

>>

வல்லிக்கண்ணன்/வேலைக்காரி

”நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேணும்” என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம்.“ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?” என்று கேட்டார் பிள்ளை.”அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!” என்று சொல்லி, …

>>

திலீப் குமார்/நிலை

இவன் மெதுவாக நடக்க ஆரம்பித்தான். அந்த அகலமான கடைத்தெருவின் வலது கோடியிலிருந்த எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டிருந்தன. இவன் வேலை பார்த்த கடையையும் சற்று முன்தான் மூடியிருந்தார்கள். மறு கோடியில் இன்னும் நிறைய ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் திறந்திருந்ததை …

>>

அ. முத்துலிங்கம்/வடக்கு வீதி

அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் …

>>

கொனஷ்டை/வசீகரணம்

சென்னை பீபிள்ஸ் பார்க்கில் எனது சீமாட்டியின் நந்தவனம் என்று பெயரிட்டு ஒரு குளிர்ந்த சோலையை அதிகாரிகள் சிருஷ்டித்திருக்கிறார்கள். வெயிலின் தாபத்தினின்று தப்பித்துக்கொள்ள அது சரியான புகலிடம். அங்கே ஒரு நாள் உட்கார்ந்து பகற்கனவுகண்டுகொண்டிருந்தேன்.“நீங்கள் யார் ஐயா?” என்று ஒரு குரல் இரண்டு …

>>

வல்லிக்கண்ணன்/ உடைந்த கண்ணாடி

“காந்தி!”குளுகுளு என்று பசுமை கவிந்திருந்த மாந்தோப்பில், மாமரங்களுக்கிடையே வளைந்து நெளிந்து அழுத்தமாகப் பதிந்து கிடந்த ஒற்றையடித் தடத்தில் அவசரமற்று நடந்து கொண்டிருந்த யுவதியைக் குலுக்கியது அந்த அழைப்பு.தனது நினைப்பும் தானுமாய் மெது நடை நடந்த அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். முன்னாலும் …

>>

க.நா.சு. /அலமேலு

தனக்கு அலமேலு என்ற பெயர் வைத்திருந்தது பற்றி அவளுக்கு அளவு கடந்த கோபமும் ஆத்திரமும் வந்தது. ஆனால், வந்து என்ன செய்வது? பெயர் என்னவோ வைத்துவிட்டார்கள். இனி அந்தப் பெயர்தான் நிலைக்கும்.அலமேலு என்கிற பெயருடன் தற்காலத்துக்கேற்ற நாகரிகமான வாழ்க்கை நடத்த முடியும் …

>>

நகரம் (சிறுகதை ) — சுஜாதா

முகநூலில் பதிவு செய்தவர் : ராம் ஸ்ரீதர் ”பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!”-கால்டுவெல் ஒப்பிலக்கணம் சுவர்களில் ஓரடி …

>>

எஸ்ஸார்சி/ப்ராப்தம்

கடப்பா நகரத்து யோகி வேமனா பல்கலைக்கழகத்தில் எல் எல் பி நான்காவது செமஸ்டர் பரீட்சைஎழுதிவிட்டு வெளியில் வந்தேன். ஊர் பெயர் கடப்பா. அது பற்றி ஒரே ஒரு சமாச்சாரம். சொல்லாவிட்டால் என் தலை வெடித்து விடும் போல் இருக்கிறதே. சாதாரணமாக கடப்பா …

>>

“கொனஷ்டை”/துப்பறிவு

ஸஸ ரிரி கக மமபப தத நி நி ஸஸஎன்று ஜண்டை வரிசை நீண்டுகொண்டே இருந்தது. என்னால் பொறுக்க முடியவில்லை.“லலிதா! லலிதே! லலிதா! தே! தா! தே!” என்று கூப்பிட்டேன்.“வந்துவிட்டேன்! டேன்! டேன்! டேன்!” என்று அவள் பதிலுக்குக் கத்தினாள். ஒரு …

>>

க.நா.சு/கருகாத மொட்டு

தியாகராஜன் : இன்று காண்டேகர் எழுதிய ‘கருகிய மொட்டு’ என்கிற நாவலைப் படித்து முடித்தேன். இப்பொழுதுதான் படித்து முடித்தேன். காண்டேகர் எழுதிய ‘பாரிஜாத மலர்’ என்கிற கதையைப் பலரும் படித்துவிட்டு, அபிப்பிராயம் எழுதித் தங்கள் தங்கள் கதையைச் சொல்கிற மாதிரியும், அந்தக் …

>>

“கொனஷ்டை”/அதிகப்பிரசங்கி

என்னுடைய பெயர் வேங்கடரமண ஐயர். விலாஸம் 22/1, சகாராம் தெரு, முத்தியால் பேட்டை, மதராஸ். தொழில், கதை எழுதுவது. புனைபெயர் உபயோகிப்பதில்லை. மற்றவர் என்ன செய்தாலும் செய்யட்டும், என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டால், ஒரு கதையை எழுதிவிட்டு, பிறகு புனைபெயருக்குப் பின்னால் ஒருவன் …

>>

வல்லிக்கண்ணன்/அந்த முகம்

அதை அவன் எங்கே எப்போது பார்த்தான்? சந்திரனுக்கு அதுதான் பெரும் குழப்பமாக இருந்தது. அந்த முகம் அவனை சதா அலைக்கழித்துக் கொண்டிருந்தது. விழிப்பு நிலையில் பசுமையான நினைவாக தூக்கத்தில் அழுத்தமான கனவுகளாக.குறுகுறுக்கும் கண்கள். அவனைப் பார்த்ததும் படபடக்கும் இமைகள். இனிய சிரிப்பு …

>>

மாஸ்டர் மெதுவடை/கல்கி

அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,“மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…”என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும் அதே பெயர் …

>>

வ.சா.நாகராஜன்/மோர்க் குழம்பு

சேது சிறு வயதில் தாயை இழந்தவன். அத்தையின் பரிவில் வளர்ந்தவன். அத்தைக்கும் அன்பு வைக்க இவ்வுலகில் இரண்டே ஜீவன்கள்தாம் இருந்தன. ஒன்று சேது, மற்றொன்று படியளக்கும் எருமை மாடு.மாடு தாராளமாகப் பால் கறக்கும். வியாபாரத்துக்குப் போக மோர் மிஞ்சும். அதனால் அநேகமாகத் …

>>

க.நா.சு/கண்ணன் என் தோழன்

1 பத்து வயசுப் பையன், தனியாகத் திண்ணையில் படுக்கிறேன் என்று பாயைத் தூக்கிக் கொண்டு கிளம்பியவுடனே பாட்டிக்குப் பயமாகத்தான் இருந்தது.கையில் மண்ணெண்ணெய் விளக்குடன் வாசலுக்கு வந்தாள் பாட்டி. “பாயைத் தட்டிவிட்டுப் போடு. ஏண்டா இப்படிச் சொன்னதைக் கேட்காமல் நடமாட்டமே இல்லாத தெருவில் …

>>

வல்லிக்கண்ணன்/புது விழிப்பு

அவன் உளம் சோர்ந்து, உணர்ச்சிகள் குன்றி, செய்வதற்கு எதுவுமற்று, செய்யும் வகை என்னவென்று புரியும் சக்தியற்று, எதிலுமே ஆர்வமும் அக்கறையும் இல்லாதவனாய் மாறி இருந்தான்.அவன் பெயர் – என்னவாக இருந்தால் என்ன! இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்தவன். “எதிர்காலம் என்னுடையது!” என்று …

>>

க.நா.சு. /கல்யாணப் பெண்

1 ஜானகி வாய்த் துடுக்குக்காரிதான். யாரையுமே சகஜமாக உதறி எறிந்து பேசும் சுபாவம் உள்ளவள்தான். வெடுக் வெடுக் என்று யாரையும் வெட்டிப் பேசத் தயங்கவே மாட்டாள் அவள்வீட்டிலே ஒரே பெண். செல்லமாக வளர்த்து வந்தார்கள்; ”பாவம், அறியாதவள். வயசு வந்த பிறகு …

>>

பாவண்ணன் / சிவப்புக்கல் மோதிரம்

”இன்னைக்கு என்ன, பூமழையா? இப்பிடி ஏராளமா பூ உழுந்து கெடக்குது”இரண்டுசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வாசல் கதவைத் திறக்கிறவரைக்கும் தமிழிடம் எப்படி பேச்சைத் தொடங்குவது என்னும் குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால் சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் சுவருக்கும் வீட்டு வாசலுக்கும் …

>>

எஸ்ஸார்சி/அவரவர் கணக்கு

முதுகுன்றம் நகரில் எனக்குச்சொந்தமாய் ஒரு வீடு இருக்கிறது. அதனை வாடகைக்கு விட்டிருக்கிறேன். வாடகை எவ்வளவு என்று கேட்டுவிடாதீர்கள். வாடகையாய் வாங்கும் பணத்திற்கும் வீட்டுக்காக போட்ட முதலுக்கும் எப்பவுமே ஏகப்பொறுத்தம்தான்.நாற்பது லட்சத்திற்கு சற்று நகர்ப் புறமாய் வாங்கிய வீடு என்றால் மாதம் எட்டாயிரம் …

>>

பாவண்ணன் / வெள்ளைக்காரன்

ஜன்னல் வழியாகத் தெரிந்த பெயர்ப்பலகையைக் காட்டி பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜிப்பாக்காரரிடம் “என்ன ஊர் இது?” என்பதுபோல சைகையால் கேட்டான் அவன். ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்த ஜிப்பாக்காரர் கையிலிருந்த சூடான தேநீரை அருந்தியபடி “ஜபல்பூர்… ஜபல்பூர்” என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக …

>>

பாவண்ணன்/கலைமாமணி

ஒரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான்.எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு…’ …

>>

வல்லிக்கண்ணன்/ஊரும் ஒருத்தியும்

திருமணமாகி வந்த நாள் முதலே ரஞ்சிதத்துக்குக் கணவன் ஊரைப் பிடிக்கவில்லை.இது என்ன ஊரு இது பட்டிக்காட்டுப் பயஊரு. இதுவும் ஒரு ஊரா” என்று பழிப்பது அவளுக்கு வழக்கமாக அமைந்துவிட்டது.ரஞ்சிதம் டவுனில் பிறந்து வளர்ந்தவள். எட்டாம் வகுப்பு வரை அங்கே பள்ளியில் படித்தவள். …

>>

க.நா.சு. /காவேரி மடத்துக் கிழவர்

1எங்கிருந்தோ வந்தார்; வயது அறுபது அறுபத்தைந்திருக்கும். காவேரி மடத்தில் பத்திருபது நாள் தங்கப் போகிறேன் என்றார். ஊர் எங்கேயோ தெற்குச் சீமை என்றார். ஆனால் அவருடைய பேச்சு பாவனையெல்லாம தெற்குச் சீமையதைப் போலில்லை. மஹாதேவ அய்யரிடம் மடத்தின் சாவியை வாங்கிக்கொண்டு மடிசஞ்சியுந்தானுமாக …

>>

சரோஜா ராமமூர்த்தி/இடமாற்றம்

சங்கரன் பொன்மணி கிராமத்தை விட்டு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவனுடைய வாழ்க்கை யில் இந்த ஆறு மாதங்கள் பல மாறுதல்களைச் சிருஷ்டித்து விட்டன. மாமனாரால் பரிசாக அளிக்கப்பட்ட நீல வர்ணக் காரில் அவன் மனைவியும், அவனும் உல்லாசமாக பவனி …

>>

க.நா.சு. /சாவித்திரி

ஆபீஸிலிருந்து அன்று வெகு சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன்:வாசலில், அவருக்கு வழக்கமான நாற்காலியில், அப்பாவைச் காணோம். உள்ளே பானையிலிருந்து தண்ணீர் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருக்காக நான் புஸ்தகசாலையிலிருந்து கொண்டு வந்த புஸ்தகத்தை அவர் நாற்காலியில் போட்டுவிட்டு, ‘அப்பா…. வ்.வ்!’ என்று குரல் …

>>

கந்தர்வன்/துண்டு

அவர் வாசலில் வந்து நின்று வீட்டைப் பார்த்து, “ஆத்தோவ்’ என்றார். ஆளடியிலும் பட்டக சாலையிலும் ஆள் நடமாட்டங்கள் தெரிந்தன. கூப்பிட்டதற்குப் பதில் வரவில்லை. இது வெகுகாலப் பழக்கம் அவருக்கு. குத்துக்கால் வைத்து உட்கார்ந்து ஒரு வைக்கோல் துரும்பைத் தூக்கி அந்தப்பக்கம் போட்டார். …

>>

கந்தர்வன்/ஒரு பொழுதாயினும்

புது சைக்கிள் என்றால் ரொம்ப விலையாகும். ஒரு பழைய சைக்கிளாவது வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது. இதற்கு முன் இவன் வேலை பார்த்த இடங்கள் கிராமமாகவும் இல்லாமல் பெரிய நகரமாகவும் இல்லாத இடங்களாக அமைந்து விட்டன.வீட்டிலிருந்து ஆபீஸுக்கு நடந்தே போய்விடுவான். பிள்ளைகளும் …

>>

கந்தர்வன் /யாரோ ஒருவர்

மகளும் மாப்பிள்ளையும் இரட்டை இருக்கை சோபாவில் உட்கார்ந்திருந்தனர். சம்பந்தியும் இவரும் ஒற்றை சோபாக்களில் இருந்தனர். பெரியவர்களாயிருந்த ஆண்கள் நாற்காலிகளிலும், பெண்களும் குழந்தைகளும் ஜமக்காளத்தில் நெருக்கமாகவும் உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மின் விசிறிகளிலிருந்தும் காற்று ஹால் முழுவதும் வீசிக்கொண்டிருந்தது. சென்னையில் வேலையாயிருக்கும் மகன் டிவியின் …

>>

கந்தர்வன் /தன்னோடு

இந்த ஊரைப் பற்றிப் பத்து வருஷங்களுக்கு முன்னாலேயே பேராசிரியர் வகுப்பில் நிறையச் சொல்லியிருக்கிறார். வரலாறு இந்த ஊருக்கு ஒரு தனி இடத்தை ஒதுக்கித் தந்திருக்கிறது. இதை ஆண்ட அந்தக் கால ராஜாக்கள் ஆட்சி பரிபாலனம், நகரமைப்பு கட்டிடக் கலைகளில் சிறந்திருந்ததாய் நிறையப் …

>>

புதுமைப்பித்தன்/ஆண்மை

மணிக்கொடி, 18-11-1934 ஸ்ரீனிவாசனுக்குக் கலியாணமானது நினைவில் இல்லை. ஏன் என்றால் அது பெப்பர்மின்ட் கல்யாணம். ஸ்ரீனிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம் நீங்காது பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப் பொம்மையை விட, தங்கள் நாலு வயதுக் குழந்தை சீமாச்சு …

>>

வல்லிக்கண்ணன்/வானத்தை வெல்பவன்

கண்ணாடி முன்நின்ற சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கிழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பைப் படரவிட்டான்.“தம்பி சிங்காரம்! நீ சாமானியன் இல்லை. அரும்பெரும் சாதனைகள் …

>>

எஸ்ஸார்சி/விடாது கருப்பு               

   அவன் அம்மாவும்  அவனும் தருமங்குடியிலிருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தஞ்சாவூர் விலாசமிட்ட   தந்தியொன்று சற்று முன் வந்திருந்தது. தஞ்சாவூர் மானம்பூச்சாவடியில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா இருந்தாள். அவள்தான் தவறிப்போயிருக்கிறாள்.  அவர்கள் இருவரும்  தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தருமங்குடி பேருந்து நிறுத்தத்திற்கு பொடி நடையாய்  வந்தார்கள். பேருந்து பிடிப்பதற்காய் நின்றார்கள். தருமங்குடியிலிருந்து  தஞ்சாவூருக்கு நேர் …

>>

பூனை – சுஜாதா சிறுகதை (1983)/ராம் ஸ்ரீதர்

============ இதன் தொடர்ச்சியாக சுஜாதா எழுதிய “பூனையைக் கொல்வது பற்றி” எனும் பதிவைப் படித்துவிட்டு, அதில் குறிப்பிடும் முதல் பதிவு எங்கே என்று கேட்டிருந்தனர். அவர்களுக்கும், படிக்காத மற்றவர்களுக்கும்…. ============== வாஹினியில் படப்பிடிப்பின்போது அந்தக் கருப்புப் பூனையைப் பார்த்தேன். இந்திப் படத்தின் …

>>

சரோஜா ராமமூர்த்தி/சங்கரனின் சங்கடம்

அன்று ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டைக்கு ஏதோ அலுவலாகப் போய் இருந்தார். விசாலாட்சி தன் வழக்கம் போல் மத்தியானப் பொழுதைக் கழிக்கப் போய்விட்டாள். கீரைப் பாத்திகளுக்கு தண்ணீர் தெளித்துவிட்டுக் காமு உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடத் தொடங்கினாள். “இன்பம் வருகுதென்று சொல் …

>>

சாவி /பெண்ணைப் பெற்றவர்

பள்ளிக்கூடத்திலிருந்து வந்த கோதண்டராமய்யர் தமது கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினார்.உள்ளேயிருந்து வெளியே வந்த சமையலறைத் தெய்வம் அவரைப் பார்த்து, “இந்த வருஷமும் சீட்டாடி நாளைக் கழித்து விடாதீர்கள். மரகதத்துக்கு எப்படியாவது எங்கேயவாது நாலு இடம் அலைந்து வரன் பார்த்துக் கொண்டு வாருங்கள். …

>>

வல்லிக்கண்ணன்/நினைத்ததை முடிக்காதவர்

ளையாண்டான் பிழைக்கத் தெரியாத பயலாக இருக்கானே! ஒழுங்கா ஏதாவது வேலை பார்த்து, பணம் சம்பாதித்து உருப்படியாக வாழாமல், நாடகம், நடிப்புன்னு சொல்லி, தானும் கெட்டுப்போறதோடு ஊர்ப்பிள்ளைகளையும் கெடுத்துக் கிட்டிருக்கானே!” என்று சில பெருசுகள் குறைகூ

>>

புதுமைப்பித்தன்/கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.’
‘இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.’
இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசார

>>