கி.வா.ஜகந்நாதன்/” புது மெருகு”

“புறப்படு.”“எங்கே?”“கொலைக்களத்திற்கு.”“ஆ!” அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் …

>>

ரம்யா வாசுதேவன்/என்றென்றும் அன்புடன் – 3

சந்தோஷமாக இருப்பது எப்படி ? பள்ளிகளில் , கல்லூரிகளில் சொல்லிக் கொடுப்பது என்ன? நம்மை எதற்கு தயார் செய்கிறார்கள்? நம்மை ஒரு வேலைக்கு, பணம் சம்பாதிக்கத் தயார் படுத்துகிறார்கள் . உறவு முறைகளும் திரும்பத் திரும்ப நம்மிடம் எதிர்பார்ப்பது அதுவே. அவர்கள் …

>>

என்றென்றும் அன்புடன் – 2/ரம்யா வாசுதேவன்

கவனகுவிப்பு எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. Focus இல்லை. வேலையோ, படிப்போ எதுவாக இருந்தாலும் கவனச் சிதறல் இருக்கிறது . அது நாம் செய்யும் வேலையை மட்டும் அல்லாமல் உறவுகளின் மீதும் அந்த அலுப்பு படர்கிறது . ஒய்வு நேரத்தை கழிப்பது …

>>

என்றென்றும் அன்புடன்…(1)/ரம்யா வாசுதேவன்

நண்பர்களுக்கு வணக்கம்! இன்றிலிருந்து ‘‘என்றென்றும் அன்புடன்,,, ’’ என்கிற தலைப்பில் புத்தம் புதியத் தொடரை எழுத இருக்கிறேன். இதோ இந்த தொடரின் முதல் அத்தியாயம். சண்டைகள் பெருகுகிறது. யாருக்கும் யார் மேலும் நம்பிக்கையோ, பிடிப்போ இல்லை. அலைபேசிகள் அலைக்கழிக்கின்றன. ஆரம்பத்தில் இனித்த …

>>

ஜெயகாந்தன்/குருபீடம்

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.அவன் ஜெயிலிருந்து …

>>

நாகேந்திர பாரதி/ஆராய்ச்சி

கையில் கிடைத்ததை எல்லாம் கடித்துப் பார்த்தும்உடைத்துப் பார்த்தும் ஆராய்ச்சி செய்த பேரன்அமெரிக்கா போய் விட்டான் கடிப்பதற்கும்உடைப்பதற்குஇன்னும் இருக்கின்றனஏராளம் இங்கே ஆராய்ச்சி தொடர்வதற்குஅடுத்த வருடம் வருவான்

>>

சுரேஷ்ராஜகோபால்/இனிய உறவு

விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஒன்பதாவது கவிதை கண்களால் பார்த்துஇதயத்தால் இணைக்கப்பட்டஉறவென்பது சுமுகமாகவாழ்ந்து வந்தால்பல ஜென்மங்கள் தொடரும்யாராலும் பிரிக்க இயலாதது… உண்மையான அன்புஇதயத்தில் விதைக்கப் பட்டிருந்தால்நித்தமும் மகிழ்ச்சியேசித்தம் தெளிவு பெரும்வாழ்க்கை அமைதி பெரும்பெருவுவகை காத்திருக்கும் சுரேஷ்ராஜகோபால்/மலருக்கு …

>>

கி.வா.ஜகந்நாதன்/” புது மெருகு” :

முற்றுகை! சாமான்யமான முற்றுகையா என்ன? முடியுடை மூவேந்தர்களும் சூழ்ந்து- கொண் டிருக்கின்றனர். சேர சோழ பாண்டியரென்னும் அம்மூன்று அரசர்களும் தம்முடைய படைப்பலம் முழுவதையும் திரட்டிக்கொண்டு வந்து பறம்பு மலையைச் சுற்றிக் குவித்திருக்கின்றனர். சேரனுடைய யானைப் படையின் மிகுதியைச் சொல்வதா? சோழனுடைய ஆட்படையைச் …

>>

அல்பெர்டோ மோராவியா/ஒரு பிரபலமான பெண்

எல்லாமும் சரியாக இருந்தது. விமான நிலையத்தில், நான் விமானத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் நின்றேன்; அப்போதுதான் அந்தக் குழு என்னை நோக்கி வந்தது. ஆப்பிரிக்காவின் கண் குத்தும் ஒளி இருந்தது, எனவே நான் நன்றாகப் பார்க்க முடியவில்லை. அந்த ஒளியில் ஆப்பிரிக்க மக்கள், …

>>

சுரேஷ்ராஜகோபால்/மலருக்கு ஜாதி உண்டா?

விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த எட்டாவது கவிதை பூவித்த பெண்ணொருத்தி“மல்லி முல்லை ஜாதி”என்றே குரல் கொடுத்துவீதியில் சென்றாள்,அவளையே பார்த்தான். 1 மலரிலே ஜாதி உண்டா?கண்ணைக் கசக்கிக்கேட்டுக் கொண்டான்உள்ளது போலும்மௌனமாக ஏற்றுக்கொண்டான். 2 அவனோட பெண்சாதிபூக்காரியை அழைத்துபூச்சரம் …

>>

புதுமைப்பித்தன்/சாப விமோசனம்

ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை. 1 சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் …

>>

சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில்

பரவையை மணந்து இன்பவாழ்க்கை வாழ்ந்து கொண் டிருக்கும் சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் சில நாட்கள் தங்கியிருந்தார். பரவையின் குணங்களையும் அவளுக்கிருந்த தர்ம சிந்தனையையும் நன்குணர்ந்த சுந்தரர், கடமை மறவாத கணவன் என்ற முறையில் பரவைக்கு அவ்வப்போது தேவைப் பட்டவைகளை வாங்கிக் கொடுத்துவந்தார். …

>>

லாவண்யா சத்யநாதன்/கேசவன் செய்த முதலீடு

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 51 ஸ்போர்ட்ஸ் பைக் கோரிக்கை வைத்தான். மனைவி பத்மா இந்தியா முழுதும் சுற்றுலாசென்றுவரும் கோரிக்கையை வைத்தாள். அவற்றைக் -கேட்டதிலிருந்து கைக்கு வந்த பணம்கடைசி நாட்கள் வரை தங்குமா என்ற பயம் …

>>

சுரேஷ்ராஜகோபால்/”வாழ்வில் யதார்த்தம்”

விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஏழாவது கவிதை*காலை வரும்மாலை வரும்நாள் மாறி வாரம் வரும்மாதம் கடக்கும்வருடங்கள் உருண்டோடும். நல்ல நாள் வரும்நல்ல சேதி வரும்நாள் தரும்கவலைதனை கடந்து நடந்தால்புது வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கும். நாளும் …

>>

ஜெ.பாஸ்கரன்/என் சுயசரிதை – பம்மல் சம்பந்தம் (சந்தியா பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2016)

புத்தக அறிமுகம் 22 நாடகப் பேராசியர் பம்மல் சம்பந்தம் (முதலியார் என்ற சாதிப்பெயரைத் தவிர்த்து, தன் பெயரை எழுதுவதே அவரது வழக்கம்) அவர்களின் சுயசரிதை, “என் சுயசரிதை”. ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் தன் நாடகத் தொடர்பான எல்லா விபரங்களையும் எழுதிவிடதால், …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/திலகர் நினைவு தினம்: ஆகஸ்ட் 1:

………………………………. *சரித்திரம் புறக்கணித்த சத்தியபாமாக்கள்!* (நிறைவுப் பகுதி) *திலகர் சிறையில் இருந்தபோது, நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் `கீதா ரகசியம்` என்ற நூ¨லை எழுதி முடித்தார். திலகரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் விவேகானந்தரால் மதிக்கப்பட்டவரும் ஜெர்மனியில் வாழ்ந்தவருமான உலகப் புகழ்பெற்ற …

>>

வில்லியம் ஹென்ரி டேவிஸ்/ஓய்வு நேரமின்றி

(மூலக் கவிதை: W. H. Davies)(தமிழில் மொழிபெயர்ப்பு) எந்த வாழ்க்கை இது, கவலையால் நிரம்பியதாயின்,நாம் நின்று நோக்க நேரமில்லை என்றால்? மரக் கிளைகளின் கீழே நின்று,மாடுகள் போலவே நெடுங்காலம் பார்த்திருக்க நேரமில்லை. காட்டில் நடக்கும்போது கூட,அணில்கள் வைக்கிற தங்களின் விதைகள் பார்த்தறிய …

>>

எலிசபெத் ஜில்பர்ட்/ சாப்பிடு, பிரார்த்தனை செய், காதல் செய்

தமிழில் : அழகியசிங்கர் எஐ உதவியுடன 2. நான் ஏற்கனவே தரையில் அத்துமீறி பிரார்த்தனை செய்யும் நிலையில் இருப்பதால், இந்த முழு கதை துவங்கிய மூன்று ஆண்டுகளுக்கு முன்பான தருணத்திற்கு திரும்பி நான் அந்த நிலையில் இருக்கட்டும்-அந்த தருணமும் என்னை அதே …

>>

விஞ்ஞானி/கள யதார்த்தம்

மெத்து மெத்து என்றுஅவளுக்கு மட்டுமேபரிச்சயமானசன்னமான காலடி சத்தம்வாசலருகே கேட்கமுப்பது வருடங்கள் மனம் பின்னோக்கி ஓடவாசலை நோக்கி ஓடினாள்அங்கே ஒரு பூனை சென்றுகொண்டிருந்தது அவள் தன் உணர்வில்இருந்து மீளும்‌ முன்தரையில் செருப்பு உரசும்ஓசை முன்னே வர பின்னே வந்து கொண்டு இருந்தான் அவள் …

>>

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

தமிழாக்கம் : அழகியசிங்கர் with the help of AI பொதுமையாகப் போராடுவது மிகுந்த தைரியமான செயல், ஆனால் அதைவிட  அதிக வீரசாகசம் ஒன்று உண்டு என்று நான் அறிவேன், அதுவே உள்ளத்தில் எழும் போராட்டம், துயரத்தின் குதிர்ப்படைக்கு எதிரான போராட்டம். …

>>

நா. வானமாமலை/தமிழர் வரலாறும் பண்பாடும்

தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை …

>>

:கி.வா.ஜகந்நாதன்/ ” புது மெருகு”

தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார் தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். ‘குடியும் குடித்தனமு’மாக வாழ்வதற்கு வேண்டிய …

>>

சுரேஷ்ராஜகோபால்/கபடி கபடி

(விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஆறாவது கவிதை) கபடி கபடி சிறுவர்கள் ஆட்டம்சிறுவர்கள் கபடி விளையாட்டுபேரன் விளையாட்டை ரசிக்கவேபோனேன் வேட்டியோடுஎன் வயதோ எழுபதின் எல்லை . அணி பிரித்தார்கள்ஒரு அணிக்குஒரு ஆள் குறைந்ததுஎன்னையும் விளையாட்டில்சேரச் சொன்னார்கள். …

>>

கஹ்லில் ஜிப்ரான் (Kahlil Gibran)

“ஒருநாள் நீ என்னிடம் கேட்பாய் – என் உயிரா முக்கியம்? உன் உயிரா? நான் சொல்வேன் – என் உயிர், நீ போய்விடுவாய் – உன் முக்கியத்துவம் தெரியாமலே… ஏனெனில் நீயே என் உயிர்.”

>>

பாவம் அப்பா       -எஸ்ஸார்சி

’ சார் சார்’  என்று  வீதியில் யாரோ என்னத்தான் கூப்பிடுகிறார்கள். தோட்டத்தில் மாமரத்துக்குக் கீழாக நின்றுகொண்டிருந்தவன் சட்டென்று  தெருவுக்கு வந்தேன்.  கார்குடல் அருணாசல வாத்தியார்தான் நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் என் அப்பா. ‘ பூதாமூர் ஸ்டாப்பிங்கல  இறங்கின  உங்கப்பா உங்க வீட்டைத்தான் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 5

– மழை…வாழ்வாதாரங்களில் முக்கியமானது. இயற்கை அளித்த கொடைகளில் முக்கியமானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.இது மழைக்கும் பொருந்தும். மழை…..பெய்யத் தவறினால்….விவசாயம் மட்டுமா பதிக்கப்படும்? மக்களுக்கு அருந்த குடிநீரும் இல்லாது பஞ்சம் தலைவிரித்தாடும்.அதே..மழை..அளவிற்கு அதிகமாகப் பெய்தால்…நதிகள் வேண்டுமானல்..அந்த நீரை…தன் புகலிடமான …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று – ( 01.08.2025) -மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 125 பால் சக்காரியாவின் கதைகள் பேசுவோர் : கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அன்புடன்அழகியசிங்கர்9444113205 Please read daily.navinavirutcham.in

>>

நாகேந்திர பாரதி/அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் வாசித்த சிறுகதை மதிப்புரை

அழகியசிங்கர் கேட்டுக்கொண்டபடி எனது சிறிய அறிமுகம்.நான், நாகேந்திரபாரதி , அழகியசிங்கரின் இந்தியன் வங்கி. இலக்கிய வங்கி நண்பர் , தமிழில் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் பேசுவதிலும் , ஹிந்தியில் பாடுவதிலும் ஆர்வம். இப்போது சிறுகதை மதிப்புரைபிரபல கேரள எழுத்தாளர் பால் ஜக்கரியா அவர்களின் …

>>

*திருப்பூர் கிருஷ்ணன்*/திலகர் நினைவு தினம்: ஆகஸ்ட் 1:

………………………………. சரித்திரம் புறக்கணித்த சத்தியபாமாக்கள்!* (பகுதி 1) *திருப்பூர் கிருஷ்ணன்* ………………………………. *இன்று சுதந்திரப் போராட்ட வரலாற்றை மையால் எழுதப்பட்ட சில காகித வரிகளாய்ப் படிக்கிறோம். நடைமுறையில் அந்த வரலாறு நடக்க நடக்க நடக்கும்போதே பலரது கண்ணீரால் அல்லவா எழுதப்பட்டது? சுதந்திர …

>>

கலைஞர் மு. கருணாநிதி/திருக்குறள் கலைஞர் உரை

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டு. 81 இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82 விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாகஇருந்தாலும் அதனைத் …

>>

எலிசபெத் ஜில்பர்ட்/சாப்பிடு, பிரார்த்தனை செய், காதல் செய்

தமிழில் : அழகியசிங்கர் எஐ உதவியுடன் எனக்கு ஜியோவன்னி என்னை முத்தமிட வேண்டும் என்பதே ஆசை.ஆனால், இது ஒரு மோசமான எண்ணம் என்பதற்கான பல காரணங்கள் உள்ளன. முதலில், ஜியோவன்னி என்னைவிட பத்து வயது இளையவன் – மேலும், பல இளம் …

>>

யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி)/மாற்ற வேண்டிய எதுவும் இல்லை

Q: உங்களுக்கு சொந்தமான அனுபவம் என்றேதாவது இருக்கிறதா?U.G.: நீங்கள் அனுபவிப்பது ஏற்கனவே வேறொருவரால் அனுபவிக்கப்பட்டதே. நீங்கள், “ஆஹா! நான் ஒரு ஆனந்த நிலைமையில் இருக்கிறேன்” என்று சொல்வதனால், உங்களுக்கு முன்பே யாரோ ஒருவர் அந்த அனுபவத்தை கொண்டிருப்பதையும் அதை உங்களிடம் சொல்லியிருப்பதையும் …

>>

தங்கேஸ்/போக்கற்றவர்கள்

18 – 7 – 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 10 துயரத்தின் பிரதிநிதியாய்வந்து நிற்கும் நிலவைஎப்படி விளிப்பாய் சொல் ? மானுட சமுத்திரத்தின்அத்தனை கண்ணீரையும்ஒரு குவளையில் நிரப்பிபிறைசூடனின் ஆலவாய்க்குதந்துவிட்டால்உயிர்களை வதைக்கும் இருளிலிருந்துவிடுதலை கிடைத்து விடுமா? சொல்லப்போனாலகடவுளைப் …

>>

பால் சக்கரியா/கடல்

ஒரு நாள் நானும் என் மனைவியும் அது எந்தத் தேதியில் என்று மறந்து விட்டது. கடந்த மாதம், ஏதோ ஒரு நாள் மாலையில் நாங்கள் கடற்கரையிலமர்ந்து கொண்டிருந்தோம். பரஸ்பரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். உண்மையில் நாங்கள் உட்கார்ந்து கொண் டிருக்கவில்லை. ஒரு …

>>

இசாக் பாஷெவிஸ் சிங்கர் /ஆலோசனை

மொழிபெயர்ப்பு: எழுத்தாளர் தமிழில் : அழகியசிங்கர் எஐ உதவியுடன் நான் நியூயார்க்கில் உள்ள ஒரு யிடிஷ் செய்தித்தாளில் வேலை பார்த்த காலங்களில், மக்களுக்கு ஆலோசனை வழங்கினேன்; அப்போது பல வியத்தகு கதைகளை கேட்டேன்.பொதுவாக, எனிடம் வந்தவர்கள் வாசகர்கள்; எழுத்தாளர்கள் அல்ல. ஆனால் …

>>