ஆர் கே இராமநாதன்/உம்மாச்சி!

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பணிகிறார்கள்பழிக்கிறார்கள்பயப்படுகிறார்கள்.உடைத்தெறிகிறார்கள்.தொழுகிறார்கள்தூக்கியெறிகிறார்கள்கொண்டாடுகிறார்கள்.கழுவிலேற்றுகிறார்கள்.காணிக்கை குவிக்கிறார்கள்கஜானா களவாடுகிறார்கள்.கதைகள் பரப்புகிறார்கள்கட்டுக்கதையென விமர்சிக்கிறார்கள்.காப்பியம் வடிக்கிறார்கள்கழிசடை என்கிறார்கள்.எங்கும் இருக்கிறதென்கிறார்கள்இல்லவே இல்லையென்கிறார்கள்.சாமியே இல்லையென்கிறார்கள்.என் சாமி/ஆசாமிகளே இறையென்கிறார்கள்.தப்பு செஞ்சாஉம்மாச்சி வந்து கண்ணைக் குத்துமாம்.தப்புகள் நடப்பதில்லையா?உம்மாச்சிக்கே கண்ணில்லையா?

>>

8. எஸ்ஸார்சி/கவியுளம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கடலூரில் இலக்கியப்பெருமன்றக்கவிதைமாலைப்பெரு விழாஞானக்கூத்தன் தலைமைபெருமன்றச் சிவப்பு மேடையில் ஞானக்கூத்தன்எப்படிச்சாத்தியம் எல்லோர்க்கும் ஆச்சரியம்கவிதைகள் படித்தனர்கடலூர்க் கவிஞர்கள்.கவி ஜி.ஜெ வாசித்தார்’ நண்டு’ கவிதைஉழவர்க்குத்தோழனாம் நண்டு அதுவேசிறப்பென்றார் ஞானக்கூத்தன்இவர்க்கு நண்டு பிடித்ததெப்படி?பேசிக்கொண்டனர் கவியரங்கக் கவிஞர்கள்கவிஞர் ’கவிதை …

>>

7. துரை.தனபாலன்/ தலைமுறை பேதம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் காதலும் வீரமும் மட்டுமே இலக்கியம்;அது அந்தக் காலம் – இன்றோ,காலைக் காப்பியில் தொடங்கி,இரவு உணவு வரையும்,காத்து நிற்கின்றன ஆயிரம் பிரச்சினைகள்;அவற்றிற்குத் தீர்வு காணஆட்களில்லை இங்கு…காவிய காதலுக்கும், காப்பிய வீரத்திற்கும்நடைமுறை வடிவமைக்க – …

>>

6. பி.ஆர்.கிரிஜா /எண்ண அலைகள் !

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் புத்தகங்களைபுரட்டிப் பார்த்தேன்.எழுதியதெல்லாம்எடுத்துப் பார்த்தேன்.மூளை முழுதும்கசக்கிப் பார்த்தேன்.எண்ணி எண்ணிநிலை குலைந்தேன்.கவிதை ஒன்றும் பிறக்கவில்லை.பறவை ஒன்று பறந்து வந்துபடபடவென்று சிறகடிக்கசாளரம் வழியேஎட்டிப் பார்த்தேன்.கவிதை பிறந்தது

>>

ஜோதிர்லதா கிரிஜா/பாகீரதியின் ‘பல்டி’

சாம்பு தற்செயலாக வாசற்பக்கம் எட்டிப் பார்த்தான். கையில் ஒரு சிறு மூட்டையுடன் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த மாமனார் சுப்பிரமணியத்தைப் பார்த்ததும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் மாறி மாறி ஏற்பட்டன.“வாங்கோ, மாமா!” என்று அவன் அவரை ஆவலுடன் வரவேற்றான்.சமையலறையிலிருந்து …

>>

வளவ. துரையன்/தரையில் விழுந்த மீன்

வலையைக் கரையில்உதறும்போதுவிழுந்த மீன்களில்ஒன்று மட்டும்தரைக்கும் நீருமாய்த்தத்தளிக்கிறது. அலைவந்து அழைக்கவில்லைஅவனுமதை எடுக்கவில்லைபெருநீர்ப்பரப்புக்க்குப்போனால் பேரானந்தம். அவனிடம் சென்றால்அரும்பசி தீர்க்கலாம். தப்பித்தலுக்கு இடம் தேடித்துள்ளித் துள்ளிக் குதிக்கிறதுஎட்டாப்பழத்துக்குக்கொட்டாவி விடுவது போல்.இருந்தாலும் இன்னுமதுதாவித் தாவி விழுகிறது. உயிர் வாழ்வதே வேண்டாம்என அதுஉள்ளே நினைக்கையில்பறந்து வந்த காகமதைப்பாய்ந்து கொத்துகிறது

>>

5. அன்பாதவன்/ஏதிலியாய் அலையும் மியாவ் குட்டி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் தாய்ப்பூனையால் நிராகரிக்கப்பட்ட குட்டியொன்றுஒதுங்குகிறது தெருவின் வீட்டு வாசல்களோரம்கதவுகளேதும் திறக்கப்படாமல் துளிப்பால் தரவும் எவருமில்லை.ஒட்டியவயிறோடு தனித்தலையுமதனைநடுங்கச்செய்கிறது கூதல் பனிக்காற்றுபழையக் கோணியோ பலனில்லா அட்டைப்பெட்டியோ போதும்கடந்துவிடலாமிக்குளிரை.ஜீவன் இரட்சிக்க ஏதோ உணவு…ம்ஹூம் வாய்ப்பேயில்லைதொலைக்காட்சி சப்தத்துள் மானுடர் …

>>

4. கலாவதி பாஸ்கரன்/நிறம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் குடி வந்த புது வீடு, மிகப் பிடித்துப் போனது.சிறு வீட்டு வாசலில், கண் பறிக்கும்வண்ண மலர்ச் செடிகள்.விளக்கெரியும் துளசி மாடம்,நேர்த்தியான கோலத்துடன்.பெரிய மொட்டை மாடி ,நடக்க மிக வசதி.வரும் பறவைகள் ஏராளம்.நித்தம் …

>>

3. லட்சுமி பாலா/முணுமுணுக்கும் பக்கங்கள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அந்தக் கங்குள் இரவில் எழுதி முடித்த கவி புத்தகம்கந்தக மண்ணிலிருந்து வந்த செந்தணலாய் பக்கங்கள்பசிக்கடியில் எழுதிய கவிதைஆதலால் தான் திருப்பும் போது சத்தமிடுகிறதோபாமரனின் சிலுவை வாழ்க்கையைப்பேசுவதால் முணுமுணுத்ததோகண்ணாடியில் அடைபட்டமூன்று பந்தயக்காரர்களின் ஓட்டத்தில்,மரண …

>>

2. கி.சரஸ்வதி/ஜன்னலற்றவள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நகரத்தில் இருக்கும் மூத்த மகனின்வீட்டுக்குக் குடிபெயர நேரிட்டது அம்மாவுக்குஅதுகாறும் இருந்த இருண்ட அடுக்களைஇவளுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்த நாளைச்சிறிது கண்ணீரோடுதான்அவள் ஏற்றுக்கொண்டாள்புத்தம்புதுக் கண்ணாடி அடுப்புபீங்கான் கிண்ணங்கள்பளபளக்கும் பாத்திரங்கள்நவீனச் சமையலறைஎன்று ஏகபோக …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

கொழிக்கும் வளமும் கொள்ளை அழகே!செழிக்கும் இயற்கை உயிர்வளி வீசும்!பொழிலின் அழகில் மகிழ்ச்சி பொங்கும்!எழிலாய் மணக்கும் பூக்கள் ஆனந்தம்!நெஞ்சம் மகிழும் சோலைகளின் காட்சி!கொஞ்சும் இனிமைக்கு வனங்களே சாட்சி!மலர்ச்சி காணும் மழலையர் புன்னகை!கிளர்ச்சி தருமே காதலியின் மென்னகை!பசுமை வளர்ச்சி பல்லுயிர் வாழும்!பசுமைச் சுழற்சி மழையே …

>>

அழகியசிங்கர்/இனிமேல் என்ன செய்யப் போகிறேன்

முதலில் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் daily.navinavirutcham.in இதழில் கொண்டு வர உள்ளேன். விருட்சம் அச்சிதழிலும் கவிதைகளைக் கொண்டு வர உள்ளேன்.எல்லாக் கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி அனுப்ப உள்ளேன்.கவிதைக்குச் சன்மானம் உண்டு. அது மிகமிகக் குறைந்த தொகையாக …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

புத்தகக் காட்சியில் உட்கார்ந்தபோதுதான் இந்த எண்ணம் தோன்றியது. தமிழில் குறிப்பிட வேண்டிய கவிஞராய் ஞானக்கூத்தனைக் கருதுகிறேன். 1988 ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்தபோது ஒவ்வொரு இதழ் வரும்போதும் ஞானக்கூத்தன் கவிதை வரவேண்டுமென்று நினைப்பேன் . அதனால் மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணியில் உள்ள அவர் …

>>

ஜெயராமன் ரகுநாதன் /தேவன் விருது 2025

ஐந்தாம் வகுப்பில் துப்பறியும் சாம்பு முதலில் படித்ததாக நினைவு. ஏழாம் வகுப்பில் மாரல் கிளாசில் பத்மா டீச்சர்தான் புதுமையாக சிஐடி சந்துருவை ஒவ்வொரு அத்தியாயம் ஒரு வாரமென படித்துக் காட்டுவார்.தாமோதரனுக்கு என்ன ஆகும், குள்ளன் அவனை பிடித்துவிடுவானா, சங்கரன் காப்பாத்திவிடுவானா சந்துரு …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/சிறை புகுந்தாயே..

பெற்றவர் யார், உடன் பிறந்தவர்யார்?ஊர் எது, பேர் ஏது, இங்கு ஏன்வந்தாய்?. நாள்தோறும் உன் அழுகைமனக்குகைபுகுந்து மாய்க்கிறதே , இருவிழிபளபளக்கிறது. கண்காணா இடம்தேடிநின்றாயோ,தெய்வம் கருணை காட்டமறுத்ததோ? பசி மறந்தாய், தூக்கமும்தான்விட்டிட்டாய்அதிரும் குரலும் அடங்கிப்போனாய். தேனீபோல் சுழன்றாடும்ஆற்றல்போனதெங்கே ?. ஓரிடத்தில்ஒடுங்கினாய். இரும்புச் சங்கிலியில் …

>>

விஞ்ஞானி/ராஜா முள்

பாட்டி வைத்த பதியன்களால்தோட்டத்தில் ஒருரோஜா காடேஇருந்தது பாட்டி இருந்தவரை அதில்பறிக்கும் முதல் பூ தாத்தாபடத்துக்கு இப்போதும் முதல் பூதாத்தாவுக்குதான்அடுத்ததுதான்பாட்டிக்கு. தாத்தா ரொம்பகோபக்காரராம்பாவம் பாட்டிஎன்பாள் அம்மாஅடிக்கடி.

>>

வளவ. துரையன்/ஒளிகிறான்

காலையில் அழகாகக் கனிவுடன் இருக்கிறான். அவன் பார்வையில்கையில் கலப்பையுடன் செல்லும்கடும் உழைப்பாளிகள்கட்டுசுமக்க, களையெடுக்கஅறுப்பறுக்கப் போகும்மகளிர் கூட்டம் மேலும்கசங்காத மடிப்பு ஆடையுடன்அலுவலகம் போகும்கருத்தாலுழைக்கும்அதிகார அடிமைகள் மதியம் உச்சி வேளையிலும்அவர்களைப் பார்க்கிறான்.ஆண்டைகளும் கொழுத்தவர்களும்கார்ப்பரேட் முதலாளிகளும்அளித்த வெப்ப்ப் பெருமூச்சுகளால் வாடிய கீரைத்தண்டாய்வதங்கிப் புலம்புகின்றார் அவன் கண்கள் …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 90/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம் அதில் என் பங்கு சிறு பத்திரிகைகளிலிருந்து பல எழுத்தாளர்களின் கதைகளை எடுக்க உதவி செய்தேன்.மோகினி : இலக்கியச் சிந்தனை கதைகளில் கூட பெரும்பாலான கதைகள் வெகுஜன பத்திரிகைகளிலிருந்துதான் எடுப்பார்கள்.அழகியசிங்கர் : எப்போதும் எனக்குப் பெரிய குறை உண்டு. இலக்கியச் …

>>

நாகேந்திர பாரதி/கோலம்

அவள் போட்டகோலத்தின் நடுவேபூசணிப்பூ வைக்கும்பொறுப்பு அவனது அந்த ஊருணித் தோட்டத்தில்பூத்த பூவெல்லாம்காயாகிப் பழுத்தகாலமும் ஆனது அவன் கனவுத் தோட்டத்தில்பூத்த பூவெல்லாம்சருகாய் ஆனதுகோலமும் போனது

>>

சாய்ரேணு சங்கர்/கோலம்

வாசலில் இடுவது மாக்கோலம்வார்த்தையில் இடுவது பாக்கோலம்பரம்பொருள் தந்தது ஒளிக்கோலம்பாரிது கொண்டது களிக்கோலம் பாவையர் இடுவது இழைக்கோலம்பாவியர் இடுவது பிழைக்கோலம்வானகம் கொண்டது மழைக்கோலம்கானகம் பெற்றது தழைக்கோலம் மேகங்கள் சேர்ந்தால் கார்க்கோலம் – அவைமேனி சிலிர்த்தால் நீர்க்கோலம்வீரன் கொள்வான் போர்க்கோலம் – அவன்வெற்றியில் காண்பான் …

>>

ப.மதியழகன்/கோலம்

எனக்கு கிறுக்கல்களாகத்தான்தோன்றும் அம்மாவின் கோலங்கள்அம்மாவுக்கு எல்லா மாதமும்மார்கழி தான்அடுக்களை வேலை முடிந்தவுடன்கோலப்புத்தகத்தோடு தபஸ் பண்ணஆரம்பித்துவிடுவாள்அம்மாவால் முன்பு போல்விடியற்காலையில் கண்விழிக்கமுடிவில்லைதர்மபத்தினியின் உபயத்தால்கிழக்கு வெளுத்த பிறகுதான்இப்போது கோலமெல்லாம்ஆனாலும் அம்மாவின் கைகள்சும்மா இல்லை காகிதத்தில்கோலங்களை வரைந்துகொண்டுதான் இருந்ததுஒருமுறை அவள் சுகவீனமாகஇருக்கும்போதுநோட்டுப் புத்தகத்தைபுரட்டிப் பார்த்தேன்முன்பு கிறுக்கல்களாகத்தெரிந்ததுஇப்போது தான் …

>>

ஆர் வத்ஸலா/கோலம்

இயந்திரத்தில் அரைத்தஅரிசி மாவில்புள்ளி வைத்தஇதய கமலகோலம்,கால் படாதசாமி சன்னிதியில் – ஊற வைத்த அரிசியைஅம்மியில்‘நைஸ்’ஸாக அரைத்து அளவாக நீர் சேர்த்துசிறு துண்டு துணி தோய்த்துபிரித்த இரண்டு விரல்களின்மேல் கட்டை விரல்அழுத்திவழியும் ஈர மாவில்புள்ளி கணக்கில்லாஇரட்டை இழைஓவியமாய்படிக்கோலம்,சிவப்பு சிமென்ட் திண்ணையில் – தெருவை …

>>

சசிகலா விஸ்வநாதன்/அலங்கோலமாகிய கோலம்

தரைத் தளத்தில் அழகான வீடு. ஆசையாய் தேர்ந்தெடுத்தகிழக்கு பார்த்த வீடு. தினமும் அரிசி மாகோலம். தாமரைப்பூவும் கிளியும் மயிலும் மானுமாக… நன்றாகவே நடந்ததுகுடி புகும் விழாக்கள். பின்னே வந்ததுபெரும் தலைவலி. முதல் தளத்திற்குஎன் வீட்டு வாசல் குப்பைத் தொட்டியாகியது கோலங்கள் அலங்கோலம் …

>>

மதுவந்தி/கோலம்

ஏ 703 பிளாட் அக்காபேப்பர் பில் பணம்வாங்கப் போகையில்கேட்டார்கள்,நீ இரண்டு நாள் முன்னாடி பேப்பர்போட வரலியா? ஆமாம், எனக்கு வேறவேலை , தம்பியபோடச் சொன்னேன்.ஏன் என்ன ஆச்சு? வாசல் கோலம்அழியாம பேப்பர்போட்டுப் போவ நீ. அன்னிக்கு கோலம்மேலேயே பேப்பரப் போட்டுஅலங்கோலம் ஆயிடுச்சு.

>>

சசிகலா விஸ்வநாதன்/கோலம்

புள்ளி வைத்தவுடன்,மனத்தில் விரியும்ஒரு கோலம் அல்ல;ஒன்பது கோலங்கள்.ஒரு மயில்,ஒரு குயில்,ஒரு மலர்,ஒரு மனத்தில்உருவாகி;வளைந்தும், நெளிந்தும்மேலெழும்பியும்கீழெறங்கியும்புள்ளிகளை லாவகமாய் இணைக்கும் கரங்கள்அனிச்சையாய்;மனதின் இச்சையாய்.

>>

இசை புதிது நிகழ்வு 20 – 26 – 01 – 2025

அழகியசிங்கரின் ‘ இசை புதிது ‘ குழுவின் ஜனவரி மாத இந்த நிகழ்வு ‘ இசை புதிது ‘ குழுவின் ‘ அபிநயப் பாடகி ‘ பானு மேடம் அவர்களால் நடத்தப் பட்டது .அவர்களின் அபிநயச் சைகைகளை வைத்து திரைப் பாடல்களைக் …

>>

அழகியசிங்கர்/கோலம்

சாதாரண கோலம்தான்வாசல் கேட்டைத்தாண்டும்போதுகண்ணில் தட்டுப்பட்டதுஒரு நிமிடம்அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்உலகம் சுழன்றுகொண்டிருக்கிறதுதெருவில் நடக்கும்போதுமனதிலிருந்து கோலம் மறைந்து விட்டது

>>

மதுவந்தி/கோலம்

வெறும் புள்ளிகள்வெறும் கோடுகளில்ஒன்றுமில்லை. புள்ளிகளையும்கோடுகளையும்இணைக்கிறகரங்கள்கரங்களைஇயக்குகிறமனசு அங்கேபிறக்கிறதுகோலம்.

>>

ஜெ.பாஸ்கரன்/சொல்லட்டுமா கொஞ்சம்?

புத்தக அறிமுகம் 14. சொல்லட்டுமா கொஞ்சம்? – இராய செல்லப்பா (தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை 600020).நம் எல்லோருக்கும் இளமைக்கால நினைவுகள் நிச்சயமாக இருக்கும். அவற்றைச் சுவைபட, சுவாரஸ்யமாகச் சொல்வதும், எழுதுவதும் எல்லோருக்கும் வந்துவிடாது. தனது ‘அழியாமல் நிற்கும் அனுபவங்கள்’ சிலவற்றை, ‘சொல்லட்டுமா …

>>

அழகியசிங்கர்/நீங்களும் படிக்கலாம்… 26

கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதுவது எளிதானதா? இப்போதெல்லாம் நான் புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஒரு புத்தகத்தின் கால் பகுதியைப் படித்தவுடன், அப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க எனக்கு எண்ணம் தோன்றாது. மேலும் அப் புத்தகம் என் அருகில் இல்லாமல் எங்காவது …

>>

அழகியசிங்கர்/வினோத செய்தி – 8

(தினமலர் நாளிதழ் – 05.02.2025) காதலிக்கு ரூ.3 கோடியில் பங்களா கட்டிய திருடன் பெங்களூரு, பிப். 5- பெங்களூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட, மஹாராஷ் டிரா மாநில திருடன், தனது கோல்கட்டா காதலிக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு பங்களா …

>>

ஜெ.பாஸ்கரன்./“நல்ல நிலம்” நாவலும் கவிஞர் வைதீஸ்வரனும்!

ஆஸ்திரேலியா செல்லும் அவசரத்தில் இருந்தார் கவிஞர் வைதீஸ்வரன்! அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது பாவை சந்திரன் அவர்களின் ‘நல்ல நிலம்’ நாவல் வாசித்துக்கொண்டிருப்பதை நான் சொல்ல, முகம் மலர்ந்து, “அடடா, எவ்வளவு நல்ல நாவல். வாசித்து ரொம்ப நாள் ஆச்சு. …

>>

மற்றபடி ஒன்றுமில்லை/வி வி கலைச்செல்வி

இறந்துகிடந்தபட்டாம் பூச்சியைபூப் போல எடுத்துக் கொண்டு வந்தாள் பாப்பூ. வண்ணங்கள் கலையாமல் இருந்ததுஅது தூங்குவது போலத்தான் எனக்குத் தெரிந்ததுஅதன் நான்கு கால்களிலும் ஈரம் காயாமல் ஒட்டிக் கிடந்ததுபெயர் தெரியாத பூவின் மகரந்தம். பாப்பூ சொன்னாள் இறந்துடுச்சும்மா .ஆனால் நான்மறுபடியும் சொல்கிறேன் அது …

>>

மெளலானா ரூமி கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் தாக மிகுதியில்குவளையினின்றும்நீர் பருகிடும்போதுநீங்கள் காண்பதுஅதனுள் தென்படும்கடவுளின் முகத்தையே!இறைவனிடம் ஈடுபாடுஇல்லாதவர்களுக்கோதவறாமல் தெரிவதுதம் முகம் மட்டுமே. –

>>

நாகேந்திர பாரதி/நீ வந்த போது

மேகப் பொதியில் ஒன்றுமெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல்தொட்டுத் தடவியது போல் தெக்குத் தென்றல் என்னைத்தேடி வந்தது போல் முல்லைப் பூவின் வாசம்மூச்சில் நிறைந்தது போல் பக்கம் நீ வந்து மெல்லபட்டு அமர்ந்த போது —————————-

>>

எஸ்ஸார்சி யின்/சென்னைப் புத்தகக் காட்சி

நந்தனம் பேருந்து நிறுத்தம் இறங்கினால்அண்ணாசாலையைத் தாண்டத்தான் வேண்டும்பதினைந்து நாட்களுக்குஒரு டிராஃபிக் காவலரைப் போடாது நிர்வாகம்புத்தகக் காட்சிக்குச் செல்லும்நடைபாதையில்பழைய புத்தகக் கடைகள்அடைத்துக் கொண்டு.தார்ச்சாலை நடைபாதைஇவையிடை கிடக்கும் உடைந்த கருங்கல் சில்லுகள்காருக்கும் டூவீலருக்கும்நடப்போருக்கும் ஓரேயொரு பாதைஒரு கிலோ மீட்டருக்கு நடந்தால் புத்தகக் காட்சியை எட்டலாம்டிக்கட் …

>>

அழகியசிங்கர்/வினோத செய்தி – 7

திருக்குறளை மொழிபெயர்த்த தர்லோச்சன் சிங் காலமானார் சென்னை, பிப். 1- 2025 திருக்குறளை ‘பஞ்சாபி’ மொழியில் மொழி பெயர்த்தவர் தர்லோச்சன் சிங் பேடி, 97. சொந்த ஊரான பஞ்சாப் மாநிலத்தில் வசித்த இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.பஞ்சாப் மாநிலத்தில் …

>>