நாபா.மீரா/கண்ணா வருவாயா!

DLF தொழிற் பூங்கா. சிமெண்டு பெஞ்சில் வந்தமர்ந்த மீராவின் தரிசனம் பெறக் காத்திருந்தது போலவே  ஆஜரானது அந்த சிகப்புப் பறவை. “ஏய் , ஸ்கார்லெட், இன்னைக்கு நீயும் , நானும் மேட்சிங், மேட்சிங்”,கையசைத்துப் பறக்கும் முத்தம் அனுப்பி வைத்தாள்.  மீரா அவள் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அவளும் அதுவும்

அந்த சிவப்பு பறவை‌  அவள் பக்கத்தில்  அமர்ந்து, தன் பாஷையில் என்னவோ சொல்லியது. அம்மன் கோயில் இருக்கையில் இருந்த அவள், தன் போக்கில், கையில் புத்தகத்துடன், தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.மனநிலை பிறழ்ந்த, அவளைச் சுற்றி ஜனங்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். ஜனங்களின் …

>>

உமா ஸ்வாமிநாதன் /செண்பகத்தின் காத்திருப்பு

​செண்பகம் தன் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவள் கைகள் புத்தகத்தை பிடித்திருந்தாலும்,அவள் மனம் அங்கில்லை. அந்த பழைய நினைவுகள் அவள் முகத்தில் ஒரு புன்னகையைப் படரச்செய்தது.​ஆறு மாதங்களுக்கு முன், இதே திண்ணையில் அமர்ந்து அவள் அந்த புத்தகத்தை முதன்முறையாகப் படித்தாள். அது …

>>

நாகேந்திர பாரதி /முதுமையில் இளமை

‘என்னடி முறைச்சுப் பார்க்கிறே, அதான் பழம் கொடுத்துச் சாப்பிட்டு முடிச்சிட்டியே, , என்ன படிக்கிறேன்னு கேட்கிறியா ‘தலையை ஆட்டியது கிளி . ‘சொல்றேன் கேளு, இது என்னோட அவரோட கவிதைப் புத்தகம் , என்னைப் பற்றி எழுதின கவிதை இருக்குன்னு அந்த …

>>

மரு.ச.கந்தசாமி/வால் குருவி

மாலா சிறு வயது முதலே இயற்கையை ரசிப்பவள். படித்தது மருத்துவம் ஆனாலும் ,தமிழை மறக்காது தன் மனம் போன போக்கில் கதை , கவிதை என எழுதுவாள். வார மலரில் சிறுகதைப் போட்டி ஒன்று வர, அதற்காக மாலையில் பூங்காவில் அமர்ந்து …

>>

முனைவர் என்.பதரி/ தூது சென்ற கிளி

லதா தன்னுடைய பட்டப் படிப்பை இன்னும் மூன்று மாதங்களில் முடிக்க இருக்கிறாள். அவளுடைய பெற்றோருக்கு அவள் ஒரே செல்ல மகள். அவளுடைய மாமன் மகன் சிவாவின் மீது இவளுக்கு ஒரு ஈர்ப்பு. அவனுக்கும் தான். இந்த நிலையில் சீக்கிரமாகத் திருமணத்தை முடிக்க …

>>

வசந்தா கோவிந்தராஜன்/ஊமத்தம்பூ

இத்தனை நாள் இந்தப் பூங்கா அருகில் வரத் தயங்கும் சினேகா இன்று ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். புத்தகம் படிப்பதுபோல் பாவனை செய்தாலும் ஓரக்கண்களால் சுற்றிலுமுள்ள ஆண்களை நோட்டமிட்டது. வேலை போய் ஐந்து மாதங்களாயிற்று. எந்த நிறுவனத்திலிருந்தும் அழைப்புகூட வரவில்லை. தங்கும் விடுதிக்கு ஒரு …

>>

மடிப்பாக்கம் பிரபாவதி/எழுத்தாளன்

புத்தகத்தை படிக்க விடாமல் ஏதோ அதன் பாஷையில் கூறிக் கொண்டே இருந்தது அந்த சிகப்புப் பறவை.சித்ராவுக்கு கோபமோ எரிச்சலோ வரவில்லை. இருந்தாலும் புத்தகம் வாசிப்பதில் சற்றுத் தொந்தரவாக இருந்தது.மெல்ல திரும்பி “என்ன பறவையே, உனக்கு என்ன வேண்டும்? பசிக்குதா? பழங்கள் வேண்டுமா?” …

>>

வளவ. துரையன் /காலத்தின் சாட்சிகள்

ஊருக்கு வெளியிலந்தஆலமரம் இன்னும் இருக்கிறது// பெரியவர்கள் அதன் கீழேதான்காலைமாலைகளில்உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சற்றுத் தள்ளி உள்ளவேப்பமரத்தடியில்வேப்பங்கொட்டை பொறுக்குகிறாள் மயிலாத்தாள் மதிய வெயிலில் மாடுகளைநிழலில் பத்திவிட்டு தாத்தா கண்ணுறங்கும்கட்டிலும் அதுதான் பிள்ளைகளெல்லாம் வெளிநாட்டில் வலசைப் பறவைகளாய் வந்துபோகும்பேரன் பேத்திகள்வாசம் தோளிலும் நெஞ்சிலும் இந்த வருசமாவது …

>>

எல்.ரகோத்தமன்/இன்னும் கொஞ்சம் தேநீர்

ஆவி பறக்க சூடாகஒரு கோப்பை தேநீர்அருந்திக் கொண்டிருந்தேன்! ஏதோ ஒரு நினைப்பில்கை தவறி விழுந்துஉடைந்துவிட்டது கோப்பை! தேநீரின் சுவைஒட்டிக்கொண்டிருந்தசில்லுகளை பொறுக்கிசுத்தம் செய்தேன். நான் உடைத்த கோப்பைகளில்இது எத்தனாவது என்பதுஎனக்கே தெரியாது! தேநீர்அது வெறும் தேநீரல்ல! இருவர் உரையாடலின் நடுவேதேநீரும் பேசிக்கொண்டே இருக்கும்! …

>>

தங்கேஸ்/வானம் திறக்கப்படும்

ஒரு மனது ஒரு வானம்அதில் பறக்கின்றனஎண்ணற்ற பறவைகள் எந்தப் பறவையை எந்தப் பறவைதுரத்தப் போகிறதோ? எந்தப் பறவையை எந்தப் பறவைஉண்ணப் போகிகிறதோ? எந்தப் பறவையை எந்த அம்புவீழ்த்தப் போகிறதோயார் கண்டது ? இன்னும் சற்று நேரத்தில் வானம் திறக்கப்படும்வாருங்கள் பறவைகளே வாருங்கள் …

>>

ஆர். வெங்கடேஷ்/எந்த வயது அழகு?

போட்டோ பிடிக்கக்கூடாத வயசு என்று ஏதேனும் உண்டா என்று யாரேனும் கேட்டால் உண்டு என்று தான் சொல்வேன். இப்படியெல்லாம் யோசிப்பார்களா? அதுவும் இன்று செல்போன் கேமராக்கள் திரும்பிய திசையெங்கும் காட்சிகளையும் செல்ஃபிக்களையும் சுட்டுத் தள்ளும்போது இது என்ன பத்தாம்பசலித்தனம் என்று கேட்கத் …

>>

பானுமதி கண்ணன்/பிரேமா அக்கா

பிரேமா அக்கா எங்கள் வீட்டுக்குக் குடி வந்ததை என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பிரேமா அக்கா போன்ற தனித்த, கல்யாணமாகாத பெண்களுக்கு அம்மா வீட்டை வாடகைக்குத் தருவதில்லை.நான் அம்மாவுக்குப் பக்கத்தில் பவ்யமாக நின்று கொண்டிருந்தேன். ப்ளஸ் ஒன் …

>>

நாகேந்திர பாரதி/’தகப்பனும் பிள்ளையும்’

க நா சு அவர்கள் சிறுகதை மதிப்புரை – கதை புதிது நிகழ்வுக நா சு அவர்களின் ‘தகப்பனும் பிள்ளையும்’ சிறுகதையைப் படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றியது இந்தப் பழமொழிதான் .‘பெத்த மனம் பித்து , பிள்ளை மனம் கல்லு’ .இதன் …

>>

ஜி ஏ பிரபா/மறைப்பு

“ஆ” என்றாள் சுசி.யாரோ இடுப்பைக் கிள்ளியது போல் இருந்தது.பூங்காவில் அமர்ந்து ஆங்கில நாவலைநாவலைப படித்துக் கொண்டிருந்த சுசி திரும்பிப் பார்த்தாள். அருகில் உள்ள கல்லின் மீது ஒரு குருவிதான் அமர்ந்திருந்தது.“என்ன பார்க்கிறாய்? நான்தான் கொத்தினேன்.”- குருவி பேசியது.“அட நீ பேசுவியா!”“ஆம்”“எதற்காக என்னைக் …

>>

அர்ஜுனன்/நிறம்

காஜல், அந்த பூங்காவின் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.அவளது கட்டழகான உடலும், சிகப்பு நிறத்தில் அமைந்த புதிய உடையும் பார்ப்பவர் கண்களை ஈர்த்தது. அப்படிப் பார்த்தவர்கள் அவளது முகத்தைப் பார்த்தபிறகு,‘ப்ச்’ என்ற ஒலியுடன் பரிதாப உணர்ச்சியோடு முகத்தைத் திருப்பிக் …

>>

பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்/கிளியை பார்க்கும் பைங்கிளி!

லீலா ஒரு கல்லூரி மாணவி பெற்றோர் ஐடி கம்பெனி ஊழியர்கள். எப்பாவுமே டென்ஷனுடன் தான் இருப்பார்கள். சனி,ஞாயிறு வந்தால் தான் நிம்மதியாக இருப்பார்கள். லீலா பள்ளிக்கூட நாட்களிலேயே பெற்றோரைத் தொந்தரவு செய்யாமல் இருக்க ஆரம்பித்தாள். அவளே படித்தாள் பெற்றோரைத் தொந்தரவு செய்யாமல் …

>>

சுந்தர மணிவண்ணன்/ஊர்மிளா

ஒல்லியான உடல்.உச்சரிப்பும் குரலும் ஸோ ஸ்வீட். எல்லோரையும் ஈர்க்கும் முகவமைப்பு.எல்லாமே ஓகே.அறிமுகமாகும் முயற்சியில்,“ஒரு டயலாக் எழுதி குடிப்பா. டயலாக் டெலிவரி எப்படி இருக்குன பார்ப்போம்.”“லெங்க்த்தியான டயலாக் தரட்டுங்களா சார்?”“எதையாவது ஒன்னைக் குடுப்பா.”சொல்லிவிட்டு அடுத்த ஷூட்டுக்கு அவசரமாகப் போனார் டைரக்டர்.சிறிது நேரத்தில் திரும்பி …

>>

லீலா ராமசாமி/கார்டினல் விடு தூது

​”நாம வழக்கமா உட்கார்ற அந்த சிமெண்ட் பெஞ்சில காத்திரு. நான் வந்துட்டே இருக்கேன்” ஃபோனில் பேசிய சூர்யா அரைமணி நேரமாகியும் வரவில்லை. மூன்று மாதப் பிரிவுக்குப்பின் பார்க்கப் போகிறார்கள்.சூர்யாவுக்குப் பிடித்த சிவப்பு உடை, வளையல், பூவுடன் நிலா.“க்விக்…க்விக்”பார்த்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு …

>>

தி.வள்ளி /ஏக்கத்தின் நிறம் சிவப்பு

சிவப்பு வண்ணத்தில் சின்னப் பூக்கள் போட்ட அந்த உடை அவள் மேனியைத் தழுவியிருந்தது. அவளுக்கு பிரசாத் வாங்கி கொடுத்தது. தீபாவின் எண்ணம் முழுக்க பிரசாத் எப்போது துபாயில் இருந்து வருவான் என்ற ஏக்கத்திலேயே இருந்தது.கையில் இருந்த கடிதம்,அவள் கணவனின் உணர்வுகளை அப்படியே …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/அந்தப் பறவை

தேர்வு வரும் வாரம். எம்.பி.ஏ முடிக்கவிருந்த பவித்ரா, மரணித்த அம்மா நினைவால் படிக்க முடியாமல் தவித்தாள். ஹாஸ்டல் தோட்டத்தில் அமர்ந்திருந்தவள் பசி, தூக்கமின்மையால் மயங்கி விழுந்தாள்.மரத்திலிருந்த சிவப்புப் பறவை கூச்சலிட்டது. அந்த சத்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்த்த பேராசிரியர் சுமித்ரா …

>>

லலிதா சங்கர்/கோணங்கள்

“ஏங்க!”“என்னங்க?”“நான்..! நான்..! நானும் நாளைக்கு கல்யாணத்துக்கு வரணுமா? ஏன்? நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்!”“அபினவ் உன்னையும்தானே வரச்சொன்னான்? அண்ணி! அண்ணின்னு எவ்வளவு ஆசையா கூப்பிட்டான்? நீ வராம எப்படி?”‘அபினவ்..! அவனுக்காக மட்டுமா இந்தக்கல்யாணத்துக்குப்போறோம்? லட்சுமி! நீ எப்படி இருக்க? உன்னைக்கடைசியா உன் …

>>

செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 10

தர்ப்பை புல் ஆன்மிகம் மட்டுமல்ல அறிவியலுமே !! !!முக்கியமாக ஹோமங்கள் பூஜைகள் கோவில் வழிபாடுகள் போன்றவற்றிக்கு தர்ப்பை புல் பயன் படுத்துகிறோம் … மற்றவற்றை விட்டு விட்டு நாம் ஏன் தர்ப்பையை உபயோக படுத்துகிறோம் . அதில் என்ன விசேஷம் என்று …

>>

அனுராதா ஜெய்ஷங்க ர்/சுபாஷும் காந்தியும்

பேரன்பின் சுகந்தம் என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து ஆறாவது சிறுகதை – திருமதி அனுராதா ஜெய்சங்கர் எழுதிய சுபாசும் காந்தியும். – “சுபாஷ், நான் ஒரு முடிவு செஞ்சிருக்கேன். நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்.”சுபாஷ் அதிர்ச்சியுடன் நிலாவைப் பார்த்தான்.” ஏய், என்னடி …

>>

சுஶ்ரீ/நட்புக்கு ஒரு பறவை

“யுக்தா அபார்ட்மென்ட்ஸ்” அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கொண்ட காம்ப்ளெக்ஸ்.உத்பலா, ஏ விங்ல 12 வது மாடியில் இருக்கா.அதோ அந்த கான்கிரீட் பெஞ்ச்ல சிவப்பு ஸ்கர்ட்,சிவப்பு மேலாடை தலைல செம்பூனு ஆப்பிளா உக்காந்திருக்காளே அவதான.பிரபல இன்டீரியர் டெகரேடர் கிட்ட வேலை பாக்கற திறமை …

>>

கௌரி சங்கர்/பறவையின் மொழி

சஞ்சனா – புத்தகங்களைப் படிப்பதில் அவளுக்கு அதிக ஆர்வம் உண்டு. பறவைகளுக்கு, மிருகங்களுக்கு மற்றும் ஊர்வனவற்றுக்கு; தங்களுடைய இனங்களுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்ளும் அளவில் பேசும் திறன் உண்டு என்று சமீபத்திய ஆய்வு சொன்னதை அவள் நம்பினாள்.அன்று அவள் கையில் இருந்தது ஒரு …

>>

வி.கே.லக்ஷ்மி நாராயணன்/சிகப்பி

“ கீச்..கீச் “ சிமென்ட் இருக்கையில் அமர்ந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டிருந்த செவ்வந்தி சப்தம் கேட்டு வலது பக்கம் திரும்பிப் பார்த்தாள். கல் திட்டின் மீது அமர்ந்தவண்ணம் கத்திக் கொண்டிரு ந்த சிறு சிகப்பு நிற பறவையொன்று காணப்பட்டது. ஆச்சரியம் பொத்துக் …

>>

பாலசாண்டில்யன்/லவ் பேர்ட்ஸ்

​ பூங்காவின் மரப்பலகையில் சிந்து மட்டுமே அமைதியாகத் தனிமையில் அமர்ந்திருந்தாள். மனம் முழுவதும் அவளது காதலன் கார்த்திக்கின் நினைவுகளே நிறைந்திருந்தன.அப்போது, தீப்பிழம்பு போன்ற விசித்திரமான ஒரு சிகப்பு நிறப் பறவை பறந்துவந்து அவள் எதிரே இருந்த கல்லின் மீது அமர்ந்தது.​சிந்து வியந்து …

>>

ஆர். வெங்கடேஷ்/தூசு!

உங்களில் எத்தனை பேர் இந்தப் பிரச்னையைக் கவனிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாள் காலையும் என் எழுதுமேஜைக்கு வரும்போது, என் கண்ணை உறுத்துவது சன்னமான தூசு. மடிக்கணினியை இத்தனைக்கும் மூடித்தான் வைத்திருக்கிறேன். அதைத் திறந்து, விரல்களால் தட்டச்சு பலகையையும் அதன் ஓரங்களையும் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 168

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 168 – வெள்ளி – (02.10.2026) மாலை 6.30 மணிக்குக.நா.,சு வின் 3 கதைகளை எடுத்து 6 படைப்பாளிகள் சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். தேள் அலமேலு தகப்பனும் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/சிவப்புக் குருவி

குருவியைக் கண்டதும் பதறினாள் ஷைனி. ‘இதென்ன ரத்த மயமால்லா இருக்கு’ எனப் படபடப்பாக பின்னால் எட்டிப் பார்த்தாள். சற்று தூரத்தில் ஒருவன் தரையில் ரத்த வெள்ளத்தில். கத்தி இதயத்துக்கருகில். கண்கள் வெறித்தன ஷைனிக்கு. நம்ம பின்னாடி கொலை முயற்சியே நடந்திருக்கு; நாம …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/சிவப்பு பறவை

கல்லூரி முடிந்து வேலைக்காக நகரத்துக்கு வந்திருந்தாள் ரேவதி. தினமும் மாலை, அலுவலகம் முடிந்ததும் அருகிலிருந்த பூங்கா பெஞ்சில் சிறிது நேரம் அமர்ந்து புத்தகம் படிப்பது அவளுடைய வழக்கம்.அவள் அமரும் பெஞ்சின் அருகே ஒரு சிவப்பு நிறப் பறவை தினமும் வந்து அமரும்.ஒருநாள் …

>>

புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டி – 2026

போன ஆண்டு அசோகமித்திரன் நினைவாக சிறுகதைப் போட்டி – 2025-ல் நடத்தினேன். இந்த ஆண்டு புதுமைப்பித்தன் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்துகிறேன். இந்தப் போட்டி 31.10.2026 அன்று முடிவடைகிறது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு: 800 முதல் 1000 வார்த்தைகள் வரை …

>>

க.நா.சு./தகப்பனும் பிள்ளையும்

தகப்பனார் சொன்னார் : ஆமாம் சார். எனக்கு ஒரே ஒரு பிள்ளைதான். வேறு குழந்தை குட்டி கிடையாது. உற்றார் உறவினர்கூடக் கிடையாது.இந்தப் பிள்ளை தலைப்பட்டு எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. இவனை நம்பித்தான் நான் உயிர் வைத்திருக்கிறேன்.ஆமாம். ஹானர்ஸ் வகுப்பில் கடைசி …

>>

கடன் வாங்கி கார் வாங்கிய பிரதமர்

அக்டோபர் 2 வந்தாலே நம் நினைவுக்கு வருவது காந்தி. ஆனால் அதே அக்டோபர் 2-ல் பிறந்த இன்னொரு தலைவரை நாம் மெல்ல மெல்ல மறந்து வருகிறோம். அவர் தான் லால் பகதூர் சாஸ்திரி. இந்தியாவின் இரண்டாவது பிரதமர். எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாக …

>>

வவேசு/“பிரேக்கிங் நியூஸ்”

“பிரேக்கிங் நியூஸ் “ அண்டச் சிணுங்கலில்ஒரு பின்னிரவுப் போதில்உலக விலங்குகள் எல்லாம்மௌனம் உடைந்து பேசத் தொடங்கின. மொழியறிவும். படிப்பறிவும்வாசகத் தன்மையும் வந்து சேர்ந்தன. இதுவரை தம்மைப் பற்றிமனிதர்கள் என்ன எழுதி உள்ளனர்என்றெடுத்துப் படிக்கத் தொடங்கின. சமநீதி பேசும் பகுத்தறிவாளர்கள்நமெக்கென்ன நீதிவழங்கி உள்ளார் …

>>

வி.வி. கலைச்செல்வி/மனசே மனசே

வழக்கமாக வருகிற குயில் தான்வழக்கமாக கூவுகிற சத்தம் தான்வழக்கமான அதே காலை நேரம்தான்வழக்கமாக அமர்கிற அதே கருவேப்பிலை மரம் தான் இன்றுமட்டும் குரலில் அத்தனை நெகிழ்வுஅத்தனை இனிமைஅத்தனை சுகம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்எல்லாம் மகிழ்ச்சியாகத் தெரிகிறதுமற்றபடி ஒன்றுமில்லை தாராபுரம்

>>

எழுத்துச் சித்தர் பால குமாரன் அவர்களின் கடைசி நிமிட வலி மிகுந்த வார்த்தைகள்..

#சிகரெட்….“என்னுடைய நுரையீரல்கள் சரியாக இல்லாது, அதன் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள் சூழ்ந்து கொண்டன. நுரையீரல்கள் முழுவதுமான திறனோடு வேலை செய்யவில்லை. வயதான காரணத்தால், நுரையீரல்கள் மெல்ல மெல்ல வேலை செய்யும் திறனை இழக்க, இந்த நுரையீரல் அடைப்பும் …

>>

ஆர். வெங்கடேஷ்/நல்ல செய்தி உண்டா?

பெரும்பாலும் இந்த வகையான அழைப்புகள் இப்படித்தான் ஆரம்பிக்கும், “யூடியூப்ல பார்த்தேன், பி.எப். பென்ஷனை உசத்திட்டாங்களாமே? எப்போ வரும் சார்?” இந்தக் குரலில் லேசான நடுக்கம் இருக்கும், தளர்ச்சி தெரியும், அல்லது பரபரப்பு தென்படும்.இன்னும் கொஞ்சம் பேர், “எனக்கு 86 வயசு ஆகுதுங்க. …

>>

அழகியசிங்கர்/இன்று காந்தி பிறந்தநாள்

1. நாம் காந்தியை மறக்க வேண்டாம்ஆனால் நாம்எப்பவோ மறந்துள்ளோம்நம் தேசத்தந்தை அவர் இன்று காந்தி பிறந்தநாள்! இன்றைய அரசியல்வாதிகாந்தியாக வேண்டும்காந்தியாகி விட்டால்பிரச்சினை இருக்காதுஎல்லோரும் கோட்ஸேஆகஇருப்பதால் வன்முறை இன்று காந்தி பிறந்தநாள்! 3காந்தி காந்தி காந்தி காந்திநம் நாட்டுதேசப்பிதா தேசப்பிதாஇன்னொருவர் அவதாரம்எடுக்க வேண்டும் …

>>

கஸ்தூரி குருசாமி

பேரன்பின் சுகந்தம்(முதல் தொகுப்பு) WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு எதிர்பாராதது(கஸ்தூரி குருசாமி) “நான் இரவு என் நண்பர்களோடு சினிமா போகிறேன்.” “டேய், நாம மதியத்திற்கு மேல் கிராமத்துக்குப் போறோம்.” “பரவாயில்லை. நான் …

>>

எஸ் வி வேணுகோபாலன்/பேச்சற்றுப் போகும் தருணம்

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்தரையைநான் உள்ளே நுழைகையில் உறவினர் நிரம்பி இருந்தனர் அவர் அருகே இருந்தநாற்காலியில்போய் அமர்ந்தேன் என் கைகளைஇறுகப் பற்றிக் கொண்டது அவரது கரங்கள் அகன்று விரிந்த கண்களால் வினவுகிறார்யார் சொன்னதுஎப்படி தெரியும் தெரியும்உங்களோடுஇந்தத் தருணத்தில் இருக்க வந்தேன் என்பதாகக் கரம் …

>>

அப்புசிவா/மனப்பூட்டு

“சாவியெல்லாம் தரமுடியாது. அவனை முதல்ல என் கண்முன்னால இருந்து போகச்சொல்லு” இந்த ஆண்டும் அப்பா கத்துவதும், சித்தப்பா வாசலில் சோகமாக உட்கார்ந்திருப்பதும் வழக்கமான வகையில் நடந்துவிட்டது. கிராமத்தில் பாட்டி எல்லோருக்கும் சமமாகத்தான் சொத்தை பிரித்துக்கொடுத்தாராம். அவர் இருந்த இருநூறு சதுரஅடி வீடு …

>>

இந்திரநீலன் சுரேஷ்/பூட்டு சாமியார்

பொறை வாங்கிப் போட்டதுக்கு நன்றிங்கையா. இப்படிதான் தாடி வச்சுக்கிட்டு, பெரியவர் ஒருத்தர் தெனம் வந்து வீட்டு வாசல்ல இருக்கிற ஒடஞ்ச நாற்காலில உக்காருவாரு. கொஞ்ச நேரம் அழுவாரு. அப்பப்ப பூட்ட உலுக்கிப் பாப்பாரு. தேம்பி தேம்பி அழுவாரு. யாராவது கேட்டா, கல்லெடுத்து …

>>

கரந்தை இந்து/கனவில் வந்த வீடு

“அம்மா ஆஆ” என சத்தமா கத்திய 5 வயது மகன் சாஸ்வந்தின் குரலில் பயந்து சமையலறையில் இருந்து ஓடிவந்த நளினி “ ஏண்டா இப்படிக் கத்தி பயமுறுத்தறே , என்னாச்சு இப்போ? என்று பதைபதைத்தாள் .“ இங்கே பார் , என் …

>>

நாகேந்திர பாரதி/காத்திருப்பேன்

‘ போட்டோ பேசுதுன்னு பார்க்கிறியா. பூட்டிட்டு எடுத்தியே ,அப்பவே என்னோட நினைவுகளோடே போனுக்குள்ளே புகுந்திட்டேன். ‘ ‘அப்பப்போ என்னைப் பார்த்து கண்ணீர் விடுவியே, நான் என்ன சொல்ல முடியும். நானும் உன்னை மாதிரியே தான். உள்ளுக்குள்ளே அழுதுக்கிட்டு இருக்கேன் . ‘ …

>>

ஆர். வெங்கடேஷ்/கருத்தே அபாயமோ?

பிளைதுபாய் விமானத்தில் பயணம் செய்த 174 பயணிகள் காப்பாற்றப்பட்ட விஷயம் தான் நேற்று முதல் என் மனமெங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்தியையும் வீடியோவையும் பார்த்து மாளவில்லை.இந்திய பைலட் ஸ்மித் மச்சார், தனக்கேற்பட்ட தாக்குதலையும் அதனால் உருவான அதிர்ச்சியையும் …

>>

ஆர்.சீனிவாசன்/ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

பள்ளிக்குச் செல்லும் பருவத்தைப் போற்றிபடிப்பினில் நாளும் கவனத்தை ஊட்டிகல்வியெனும் வாய்ப்பைக் கைவிடாது காத்துஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள். கல்லூரி வாய்ப்பினைக் கண்ணெனக் காத்துகற்றிடும் அறிவினைக் கருத்துடன் சேர்த்துஎதிர்கால வாழ்வினை ஏற்றமாய் மாற்றிஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள். வேலையைக் கிடைத்ததோர் வாய்ப்பென எண்ணிவிடாமுயற்சியுடன் திறமையை வளர்த்துவெற்றிக்குத் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்!

அழகிய சிங்கரின் என்பா(ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்)(1)முதன் முதலாக செய்த நேர்காணல்; முதன் முதலாகச் செய்த பணியறிக்கை; முதன் முதலாக வாங்கிய சம்பளம்; ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்!(2)முதன் முறையாக எழுதிய பொதுத்தேர்வு; அந்த பொதுத்தேர்வின் முடிவை, செய்தித்தாளில் பார்க்கும் கணத்தில் வரும் துடிப்பு; …

>>

ச. செந்தில் பிரசாத்/ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

(1)தாயின் வெப்பத்துக்காக துடித்த துடிப்பு,மனைவியின் அணைப்புக்காக பரிதவித்த துடிப்பு,மகளின் முத்தத்துக்காக ஏங்கிய துடிப்பு,ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள். (2)எதுவும் தெரியாத மழலை துடிப்பு,எதையும் செய்யும் இளமை துடிப்பு,எதையும் செய்யாத முதுமை துடிப்பு,ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள். (3)தினம் முகம் காட்டும் நடிப்பு,மனம் தினம் மாறும் …

>>

வி.வி. கலைச்செல்வி/சற்றாகிலும்

போதுமென்றஒற்றைச் சொல்லோடுநின்றுவிடுகிற உன்னைப் பார்க்கையில் எப்போதும்பாவமாய்த்தானிருக்கிறது கொஞ்சம் பொறுபற்றாக்குறை பற்றாக்குறையென்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்கும்என் முட்டாள் காதலைகட்டிவைத்துவிட்டு வருகிறேன் துளியூண்டுநிம்மதியாவது நிலவட்டும்நம் சந்திப்புகளில். தாராபுரம்

>>