ப.மதியழகன்/ஆழி

கடல் ஊமையாய் இருக்கஅலைகள் பேசுகின்றனபரந்து விரிந்த நீர்நிலைஒற்றை வானம்கடலுக்கும் தெரிந்திருக்கிறதுகுழந்தை பாஷைதீண்டுவது தித்திக்கத்தான்செய்கிறதுஓய்ந்திருக்கிறது கடல்மீதமிருப்பது காலடித்தடங்கள்மட்டுமேஎத்தனை முறை பார்த்தாலும்சலிப்பதே இல்லைஅள்ளி எடுத்துப் பார்த்ததும்உள்ளங்கையில்வண்ணத்தை இழக்கிறதுஅழைக்கிறது கடல்விலகிச் செல்கிறது கரைகடலின் அழகைஅள்ளிப் பருகிக் கொண்டிருக்கிறதுநிலவுஒரு பேரலை என்பதுஆயிரம் சிற்றலைகளைஉள்ளடக்கியதுகுழந்தைகள் கரையேறுவதுகடலுக்குப் பிடிப்பதில்லைகடல் எதனையும் …

>>

கலீல் கிப்ரான்/முறிந்த சிறகுகள்

மொழி பெயர்ப்பு : தங்கேஸ் நிசான் மாதம் இன்னும் கடந்து விடவில்லைநான் தொடர்ந்து பாரிஸ் எபாண்டியின்தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தேன் என் செல்மாவுடன் சந்திப்புகள் சந்திப்புகள்அடடாஅவள் அழகை ஆராதித்துக்கொண்டிருந்தேன்அவள் அறிவுக்கூர்மையை துதித்துக்கொண்டிருந்தேன்துயரத்தின் நிசப்தத்தை காதிலேயேகேட்டுக்கொண்டிருந்தேன் அவளுடனான ஒவ்வொரு சந்திப்பும்அவளது அழகுக்கு புதுப்புது அர்த்தத்தைகொடுத்துக்கொண்டிருந்தது …

>>

வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்

(துப்பறியும் நாவல், பாகம் 1) 1-வது அதிகாரம் பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்”பிராணநாதா! நான் எத்தனை நாட்களாகச் சொல்கிறேன். அதை அடியோடு மறந்து, மதியாது அலக்ஷ்யம் செய்கின்றீர்களே! பாழுங் குடியும்,வேசியும் ஒரு ஆளைக் கொள்ளும் யமனல்லவா! நமது குடும்பம் …

>>

சரோஜா ராமமூர்த்தி/சங்கரனின் சங்கடம்

அன்று ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டைக்கு ஏதோ அலுவலாகப் போய் இருந்தார். விசாலாட்சி தன் வழக்கம் போல் மத்தியானப் பொழுதைக் கழிக்கப் போய்விட்டாள். கீரைப் பாத்திகளுக்கு தண்ணீர் தெளித்துவிட்டுக் காமு உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடத் தொடங்கினாள். “இன்பம் வருகுதென்று சொல் …

>>

சாவி /பெண்ணைப் பெற்றவர்

பள்ளிக்கூடத்திலிருந்து வந்த கோதண்டராமய்யர் தமது கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினார்.உள்ளேயிருந்து வெளியே வந்த சமையலறைத் தெய்வம் அவரைப் பார்த்து, “இந்த வருஷமும் சீட்டாடி நாளைக் கழித்து விடாதீர்கள். மரகதத்துக்கு எப்படியாவது எங்கேயவாது நாலு இடம் அலைந்து வரன் பார்த்துக் கொண்டு வாருங்கள். …

>>

சசிகலா விஸ்வநாதன்/சுல்தானியா

சிந்தூரான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தில் மூன்றாம் லெவலில் இருக்கிறான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இப்போது நாம் இவனை சரியாக கவனிக்காமல் விட்டால் நாளை அவன் நமக்கு பெரிய பொறுப்பாகி விடுவான். அதுமட்டுமல்லாமல் அவனுக்கே அவன் பாரமாகி நிலை உருவான

>>

வல்லிக்கண்ணன்/நினைத்ததை முடிக்காதவர்

ளையாண்டான் பிழைக்கத் தெரியாத பயலாக இருக்கானே! ஒழுங்கா ஏதாவது வேலை பார்த்து, பணம் சம்பாதித்து உருப்படியாக வாழாமல், நாடகம், நடிப்புன்னு சொல்லி, தானும் கெட்டுப்போறதோடு ஊர்ப்பிள்ளைகளையும் கெடுத்துக் கிட்டிருக்கானே!” என்று சில பெருசுகள் குறைகூ

>>

க. நா. சு வுடன் ஒரு உரையாடல் /தமிழவன்

படிகள் இதழ் 19வது இதழில் 1984ல் வெளிவந்த பேட்டி. க. நா. சு. வுடன் ஒரு உரையாடல் படிகள் குழுவினருடன், பெங்களூர் வந்த க. நா சு. நடத்திய உரையாடல் இவ்விதழில் தொடங்குகிறது இலக்கிய தத்துவப் பகுதிக்கு கவனம் அதிகம் செலுத்தி …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/சர்வேஸ்வரன் பாதுகை

ஜெயம் பாட்டி பல வருடங்களாக காஞ்சி ஸ்ரீ மட விசுவாசி. நினைத்த நேரத்திற்கு பரமாச்சார்யாளை தரிசனம் செய்ய வந்து விடுவாள். பெரியவருக்கும் மடத்து கைங்கர்யக்காரர்களுக்கும் பரிச்சயமானவள் . ஸ்ரீ பெரியவரின் அருளைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவள். ஸ்ரீ மடம் பாலு …

>>

அழகியசிங்கர்/ஒரு மகிழ்ச்சியான செய்தி

வணக்கம்.கடந்த சில மாதங்களாக செய்த முயற்சி இன்றுதான்முடிவடைந்தது. புலனத்தில் கவிதை வாசிக்க எல்லோரையும் அழைத்தேன். சிலர் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள்;சிலர் அலட்சியப் படுத்தினார்கள்; இன்னும் சிலருக்கு என்ன சொல்கிறேன் என்பது புரியவில்லை. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் கவிதை வாசிக்க …

>>

புதுமைப்பித்தன்/கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.’
‘இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.’
இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசார

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

வைசிராய் மிண்டோ பிரபுவின் சமாதான முயற்சிகள் பயன்தரவில்லை என்று மேலே கூறப்பட்டது. தீவிர தேசிய வாதிகள் பத்திரிகைகளில் அரசாங்கத்தை மிகவும் கடுமையாக எதிர்த்து எழுதினார்கள். அரசாங்கம் அப்பத்திரிகைகளை நசுக்க விரும்பியது; முதலில், ஆங்கில நாளிதழான ‘வந்தேமாதரத்’தின் மீது அதன் பார்வை விழுந்தது. …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/ஆடிப் பதினெட்டு: ஆகஸ்ட் 3

. *பிறந்த தேதியை வைத்துப் பிறந்தநாள் கொண்டாடுவது ஆங்கில மரபு. தமிழ் மரபில் பிறந்த நாளை நட்சத்திரத்தை மையப்படுத்தித் தான் கொண்டாடுவோம். நம் பண்டிகைகளும் கூட நட்சத்திரத்தை மையப் படுத்தியே கொண்டாடப் படுகின்றன. ஆவணி அவிட்டம், கிருத்திகை, மாசி மகம், ஆடிப் …

>>

எஸ். சண்முகம் கவிதை

அருகில் யாரும் இசைக்கவில்லைஎனினும் தவழ்ந்த வண்ணமுள்ளதுஓலிக் கோர்வையின் லயம் நீர் பாய்ந்தோடும் சில்லிடுதலாககுளிர்மையில் அலர்ந்துநிலைக்கும் அறை அதரங்களுக்கிடையில் ஒற்றைக் கோடாய்இடைவெளிபொம்மையின் அமர்வு போலும்மெய்யுறையும் காலை வெளிச்சத்தில் மிந்தலையும்கைப்பிடியளவு மணல்வண்ண பறவைநிழல்திட்டில் வந்திறங்குகையில் உடல்மீது குவியும் சிறகுகள்பாவும் சிறுகால்கள் என எவ்வேளையிலும் இசை …

>>

கே.ஜி. இராதா மணாளன்/திராவிட இயக்க வரலாறு

நெடுங் காலத்து இயக்கங்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்களான திராவிடர்களின் நலங் களையும் உரிமைகளையும் போற்றிப் பாதுகாக்க, நெடுங் காலத் துக்கு முன்னரே, சில சில இயக்கங்கள் தோன்றி மறைந்துள்ளன.1916 ஆம் ஆண்டு நீதிக் கட்சி என்னும் தென்னிந்திய நல வுரிமைச் சங்கம் …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே

மினி கதை 3 ஒரு சில தினங்களாக அவர்களுக்குள் சண்டை. எளிதாக திருமாவென்று தெரியவில்லை. ஒருநாள் கோபத்தில் அவள் கன்னத்தில் பளீரென்று  அறைந்து விட்டான். இத்தனைக்கும் அன்று நடந்தது அற்பமான விஷயம்தான். அவன் குடித்த காப்பி தம்ளரை  அவள் கொண்டு தொட்டியில் போடவில்லை  என்ற காரணம்தான்.அவள் ஒரு வார்த்தை சொன்னாள். “ஏன் தொட்டியில் நீ …

>>

T.S.ELIOT ‘ S poem PRELUDE(முன்னுரை)

மொழி பெயர்ப்பு – தங்கேஸ் அழுக்கடைந்த தெருக்களெங்கும்சேறு படிந்த பாதச்சுவடுகள்காபிக்கடைகளில் போய் முடிகின்றனஅங்கிருந்து கிளம்பி வரும்மயக்கமூட்டும் மது நெடியின் வழியேகாலைப்பொழுது புலர்கிறது எனக்குஅலங்கரிக்கப்பட்ட அலுவலகஅறைகளுக்குள்அபத்தமான நிழல்களென உயரும்ஆயிரமாயிரம் கரங்களில்அபிநயிக்கிறது காலத்தின் மீது ஏற்றப்படும் நடிப்பு

>>

ஆர் வத்ஸலா/மோமோ

மோமா குட்டி வந்தாள்அவள் எனது மகளுடன்- அவர்கள் வீட்டிற்கு வண்ணம்பூசப்படுவதாலும்குட்டிக்கு பெயிண்ட் வாசஒவ்வாமை இருப்பதாலும் அவர்கள் வருவதற்கு முன்பேஎன் மகள் சொல்படிஏக ஏற்பாடுகள்என் வீட்டில் –மோமோ குட்டியின் பாதுகாப்பு கருதி அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டனவேடிக்கை பார்த்துக் கொண்டேமோமோ வெளியில் விழுந்துவிடுவாளோ என்று …

>>

செ.புனிதஜோதி/இயற்கையை கொஞ்சம் நேசி

மலைகளுக்கு கால்கள் உண்டுஎனஅறிவித்திருக்கிறது மழைஅதற்கு கண்கள் இல்லை என்பதைகுவிந்துகிடக்கும்உயிர்சடலனங்கள் மீதுஎழுதியிருக்கிறது நெடுநாள் பசிகொண்டஅரக்கனைப்போல்மனித உயிர்களைஅள்ளி விழுங்கி இருக்கிறதுஅந்த மலை கதைகளிலும்கற்பனையிலும்கண்டிராதமலை விழுதல்மழையாலா?மனிதர்களாலா?பட்டிமன்றங்கள்நடந்தேறிக்கொண்டிருக்கிறதுஇங்கு மலையும்,மழையும்,சேர்ந்துவயநாட்டு மக்களுக்குவாக்கரிசி இட்டுயிருக்கிறது மீட்பு பணிகள்துரிதமாய் இயங்கினாலும்அதை விடதுரிதமாய்உயிர்களைஉரமாக்கி கொண்டிருக்கிறதுஅந்த நிலம் கருணை உள்ளம் கொண்டவர்களின்கண்களிலும் மழைகாவுகொண்ட உயிர்களைக்காணும்வேளையில்நெஞ்சிலும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா🪷தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்.மருண்டு இறந்த மக்களின் சடலங்கள்வருந்தி கண்ணீர் சிந்த; இயற்கையின்நிருத்தம் ; மிக வருத்தம். 🪷தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்;உறக்கம் தொலைத்தஇறைவனின் நாடு.இயற்கை புரியும் பெரும் பிழை;ஏன் என்றெமக்கு புரியவில்லை.🪷 தோண்டத் தோண்டும் வரும் …

>>

ஹரணி/தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்

தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்மீண்ட உடல்கள் துயரைப் பெருக்கும்பிழைத்தோரும் செத்தோரும் செய்தது என்னஆண்டவா தண்டிக்கணும் உன்னை. தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்துவண்டு போயினர் மீட்புக் குழுவும்வயநாடு வயமிழந்து வாழ்வற்றுப் போனது.இழந்தோர்க்கு எது வாழ்வு? தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்குழந்தைகள் முதியோர் குடும்பமும் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா தோண்ட தோண்ட வரும் சடலங்கள்நீண்டு போகுது காண்போர் துயரம்மாண்டு போனவர் மறைந்து போயினர்மீண்டு வந்தோர் உண்டோ?

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின்என்பா தோண்ட தோண்ட வரும் சடலங்கள்மாண்டு போகும் வயநாட்டின் மக்கள்.என்று விடியும் அவலங்கள் நீங்கி,மீண்டும் வயனாடு வளம்பெற.

>>

ப.மதியழகன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்இயற்கையால் கைவிடப்பட்ட கடவுளின் தேசம்ஓர் இரவு விடியாமல் போனதுஅச்சுறுத்தும் பேய் மழை. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்கருணையற்ற கடவுளின் விளையாட்டு இதுஊழியின் கோரத்தாண்டவம் இந்த துயரம்இங்கே மலைகளுக்கு கால்முளைத்துவிட்டது. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்மானுட …

>>

அழகியசிங்கர்/க.சி.சிவகுமார் பற்றி சில வார்த்தைகள்..

க.சீ.சிவகுமாரின் சிறுகதைத் தொகுப்பான ‘என்றும் நன்மைகள்’ என்ற தொகுப்பை எடுத்து இன்று ஐந்து இலக்கிய நண்பர்கள் பேசத் தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை தொடர் நிகழ்ச்சியாக ஒரு சிறு கதை ஆசிரியரின் கதைகளை எடுத்துப் பேசுகிறோம். இது 92 வது …

>>

தேவிபாரதி/அஞ்சலி: க.சீ.சிவகுமார் – கதைகளின் நிகழ்த்துக் கலைஞன்

அது 1996 என நினைக்கிறேன், ஈரோடு சென்னிமலை சாலையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பேருந்து நிறுத்தத்தின் சிமெண்ட் பெஞ்சில் தன்னந்தனியாக உட்கார்ந்தபடி இளைஞர் ஒருவர் ‘இந்தியா டுடே’ தமிழ் இதழைப் புரட்டிக்கொண்டிருந்தார். பேருந்து நடத்துநர்களுக்குரிய காக்கி நிறச் சீருடையில் இருந்தார். ‘இந்தியா டுடே’ …

>>

சசிகலா விஸ்வநாதன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா1.தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்.மருண்டு இறந்த மக்களின் சடலங்கள்வருந்தி கண்ணீர் சிந்துவது; இயற்கையின்நிருத்தம் ; மிக வருத்தம். 2.தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்;உறக்கம் தொலைத்தஇறைவனின் நாடு.இயற்கை புரியும் பெரும் பிழை;ஏன் என்றெமக்கு புரியவில்லை. 3.தோண்டத் தோண்டும் வரும் …

>>

விஞ்ஞானி/நிலச்சரிவு

தோண்ட தோண்ட வரும் சடலங்கள்விதவை மண்ணின் வேதனைபிரசவத்தில்.வெட்டிய மரத்தை விற்றவன்மாளிகையில்வெட்டிய கூலியின் குடும்பம்மண்ணுக்கடியில்.மக்களை மக்களுக்காகமக்களே கொல்லும்கொடுமைக்கு பலியானது கேரளம்.

>>

தங்கேஸ்/மாறாதவை

மழை நாட்களில்என்றும் மாறாதவைஈரச் சிறகுகளைஉதறாமல்பறந்து வரும்கருங் காகங்களும்அது கொண்டு வந்துசேர்க்கும்நினைவுகளும்

>>

எல்.ரகோத்தமன்/பிரம்மம்

 முட்கள்ரோஜாவின்பாதுகாவலனெனபெருமை கொள்கிறது! ரோஜாதான் முட்சிறையில்சிக்கித் தவிப்பதாய்தலையசைத்து அசைத்துயாரிடமோ விடுதலைகேட்கிறது! நான் இல்லையெனில்நீங்கள் யாரேனகேலியாய் சிரித்துமுள்ளையும் மலரையும்காத்து நின்றதுவேர் கொண்ட செடி! அது செடியல்லபிரம்மம்!பிரம்மனுக்கேது விடுதலை! 30-07-2024

>>

கலில் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்

தமிழில் : தங்கேஸ் சில நாட்களில் தனிமை என்னைச் சூழ்ந்ததுபுத்தகங்களில்விழித்து விழித்துச் சலித்தேன்ஓர் நாள் ஒரு குதிரை வண்டியை வாடகைக்குஅமர்த்திக்கொண்டுபாரிஸ் எபாண்டியின் வீட்டை நோக்கிவிரைந்தேன் நாங்கள் பைன் மரக்காடுகளை நெருங்கிய போதுமக்கள் இன்பச்சுற்றுலாவில் திளைத்திருந்தார்கள்வண்டியோட்டியோ வில்லா மரக்காடுகள்நிறைந்திருந்த வேறொரு பாதையில்பிரிந்து சென்றார்ர்பச்சைப்புல் …

>>

ஜெ.பாஸ்கரன்/டொராண்டோ டைரி 5. (யூ எஸ் லிருந்து!)

வார நாள் ஒன்றில் காலையில் கிளம்பி, ஆஃப்ரிகன் லயன் சஃபாரி (African Lion Safaari) சென்றோம். டொராண்டோவின் மேற்குப் புகுதியில், (62 கிமீ) ஆண்டாரியோவின் ஹாமில்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த லயன் சஃபாரி.கனடா ஆர்மியைச் சேர்ந்த, ‘டான்’ டெய்லெ என்பவரால் …

>>

ஷண்முக சுப்பையா/பாதை விதிகள்

நட நீநடைப் பாதையில்இல்லையேல்நட நீவலப்பக்கமாய்நடப்பாயேல்முன்னிருந்துவருவனவைஒவ்வொன்றும்உன்மேல்ஏறவரும்.பார்த்து நீஒதுங்கிடலாம்.பின் விருந்துவருவனவைஉன்னருகேவரவே வரா.ஒதுங்கியேபோம்.குறுக்கே தாண்டவிரும்புவாயேல்இடம் பார்த்துவலம் பார்த்துமேலும் ஓர் முறைஇடம் பார்த்துநீ தாண்டியேதாண்டிடுவாய்.பாதை விதிகள்இவையெல்லாம்தெளிவானவைமிகமிகத்தெளிவானவை.

>>

க.சீ. சிவகுமார்/ராம்குமாரின் கறுப்பு ஆடு

குளங்களின் கரையில் கொக்குகள் அலையும் விதம் நிலம் செழித்திருந்தால் ஆட்டுக்குட்டி புதன்கிழமையானாலும் இதர கிழமைகள் ஆனாலும் புல்தின்று நீரருந்தி நாளொருமேனியும் பொழுதொரு கறுப்புமாக வளர்ந்து வந்தது.

>>

க.நா.சு. / சாம்பமூர்த்தி

பாட்டி சொன்னாள்: “பணக்காரர்கள் அசடாகவே இருக்கலாம். உண்மையில் பணக்காரர்கள் அசடாகத்தான் இருக்க முடியும். அப்படி இல்லாவிட்டால் பணம் ஒருநாளும் அவர்களிடம் சேராது. ஆனால் இந்த அசட்டுத்தனம் வேறு; நான் முதலில் சொன்ன அசட்டுத்தனம் வேறு. லக்ஷ்மி கடாக்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/வயநாட்டில் கோரத் தாண்டவம்

என்னுயிர் மண்ணே, உனக்கு ஏன் இந்த கோபம்?வயனாட்டின் வாழ்வையே புரட்டிஅடித்து எதை சாதித்தாய்? வீடும் வாசலும் சரிந்துவிடும் கண்ணீர் மட்டும் எதிலும் எங்கும். கேரளத்தின் அழகில் மயங்காதவர் இல்லை.அதேஅழகில் மறைந்து இருந்து கொல்லும்வேகத்தை என்னவென்று சொல்ல? எங்கு நோக்கினும்ஏலக்காயும், காபி தோட்டங்களும், …

>>

மனுஷ்ய புத்திரன்/வயநாடு 2024……..

ஒரு குட்டிச்சுவர் இடிவதுபோல
மலைகள் இடிந்து விழுந்த இரவில்
அடிவாரத்தில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள்
ஒரு பேய்க் கனவு கண்டனர்
மலைகள் பிசாசுகளாக எழுந்து வந்து
நீர்க் கரங்களால்
யாவற்றையும் தின்னும் கனவு

>>