வாழ்க சக்தி

பானுமதி ந மும்மலத்தை நீத்தருளும் முத்தமிழே நீ வாழி! முக்காலம் தாள் பணியும் முத்துமாரி நீ வாழி! நித்திலங்கள் தோற்றுவிக்கும் நித்திலமே நீ வாழி! நீக்கமற நிறைந்திருக்கும் வெண் சங்கே நீ வாழி! முகில் தழுவும் இமயத்தின் மென் பிடியே நீ …

>>

சரிந்த மணல்

பானுமதி ந  சரிந்த மணல் சுருங்கும் விரியும் வெளிச்சப் புள்ளிகள் ஒத்தைத் தடம் பதிந்ததோ பதிக்கக் காத்ததோ விரைந்த குளம்புகள் சருகாய்ப் புரண்டு புதைந்த கோணம் கோட்டோவியத்தின் கோணல் போல உச்சி தனில் ஒற்றை விளக்கு அணைந்தணைந்து மிச்ச வெளியில் அலைப்புறும் …

>>

மூன்று கவிதைகள்

நந்தாகுமாரன் ஸ்தூல இருளின் சூட்சும சொல் நாள் நீள இரவில்சலனச் சொற்களின் சதங்கை ஆட்டம்தொடர்ந்து மனப் பரண் ஏறுகிறது எரிநட்சத்திரக் கண்களின்சம்ஹாரச் சிமிட்டலில்சாம்பலாகிறது கூதல்ஒவ்வொரு பனித்துளியாகச் சிதைத்து வயிற்றின் குரல்வளையை நெறித்துஇன்னும் ஒரு மிடறு நீர் பருகஇடைக்கால விரதம் மேலும் நீடிக்கிறது …

>>

மாதிரிப் போலிகள்…

சு. விக்னேஷ் என்னை மாதிரி வெண்மை இந்த மலைகளுக்கு இல்லை என்னும் மேகங்கள் கருமையைக் கடலிடம் கடன்வாங்குகின்றன… என்னை மாதிரி பசுமை வெய்யிலுக்கில்லை என்னும் செடிகள் அதே வெய்யிலில் பழுத்து உதிர்கின்றன… உண்மையில்நம்மைப் போல யாருமில்லை… நம்மைப் போல யாருமில்லை என …

>>

தர்மராஜ் கவிதைகள்

 என்பா 61 நனைந்தசிறகு உணவில்லையெனினும்மழையைவெறுப்பதில்லை வாழ்வில்சோதனைமழைபோல்இயற்கையே பறவைபோலன்றிசோதனையைவெறுப்பதேன்மனிதன் வாழ்க்கையில் போராடு வெற்றிபெறு. என்பா. 62. எங்கள்வீட்டில்கொலுவைத்துள்ளோம் கடவுள்கள்மட்டும்மனிதர்கள்யாருமில்லை இடைவெளிஇல்லாகொலுவுக்கு வருவதில்லையாம் இன்று நவராத்திரி மூன்றாம்தினம். என்பா 63. செக்கிங்இன்ஸ்பெக்டர்வராமடிக்கெட்வாங்கமாட்டாங்க இப்பகாசில்லாதடிக்கெட்டசண்டைபோட்டுவாங்குறாளுக நாட்டுலநிறையபேர்நல்லவங்களாஆயிட்டாங்க அரசுப்பேருந்துநடத்துனரின்புலம்பல்.

>>

பெருமை

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚***அணுகுண்டினால்அமெரிக்காவிற்குப் பெருமைஎண்ணெய் வளத்தால்அரேபியா நாட்டுக்குப் பெருமைஅடர்ந்த காடுகளால்ஆப்பிரிக்க நாட்டுக்குப் பெருமைஆன்மீக அன்பர்களால்இந்திய நாட்டுக்கு பெருமை

>>

என்பா – 60, 61

: கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா 60 தஞ்சாவூர் தலையாட்டி ஜோடி பொம்மைகள்!படுக்கவைத்த மறுநொடியில் நிமிர்ந்து ஆடின!பஞ்சடைத்தப் பாதியுடல் நடன பொம்மைகள்பாவாடை கிடைக்காமல் பரிதவித்தன! என்பா – 61: விநாயகரின் காலடியில் உயிருள்ள எலிக்குஞ்சு!ஸ்ரீ ராமன் நெஞ்சின்மேல் அனுமாரின் பாதம்!தொட்டி …

>>

என்பா 43, 44

அழகியசிங்கர் என்பா 43 கொலுவைப் பற்றி எழுது என்றாள்என்ன எழுதுவது என்று கேட்டேன்மைதிலி கொலு வைத்திருக்கிறாள் என்றுஎழுதி விட்டேன் இப்போது என்பா 44 கொலுப்படிகளில் காந்திபாரதி இல்லையில்லைபுன்னகைக்கும் வள்ளலார் பாபா இல்லையில்லைஎன்றேன் மைதிலியிடம்ஆமாம்.கையில் கிடைத்த பொம்மைகளைவைத்தேனென்றாள்

>>

தலையாட்டி

வவேசு கொலுப்படி பொம்மைகள்கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தன;என்னைப் பார்த்ததும்“ கவிஞனே கேளும் !அருகிலுள்ள கொழுத்த முகத்தோன்எதற்கெடுத்தாலும் தலையாட்டுகிறான்;ஆடாமல் பொம்மையாய் இரு என்றால்அதற்கும் தலையாட்டுகிறான்.அசையாதிருக்கும் எங்களிடைஆடும் இவன் தலை எதற்காக ?தரைப்படியில் அவனைத்தனியாக வைத்துவிடு !” என்றன.நான்“ சரி எனத் தலையாட்டினேன்.”வவேசு

>>

தமிழ் ஹைக்கூ

யாஸ்மின் சல்மா பனித்துளி தரை பார்த்து தலை வாரிக்கொண்டது மரம் புல்வெளியில் – பனித்துளி! நிலா அள்ளித் தெளித்த கோலப் புள்ளிகளில் கற்றையாய் விழுந்த ஒற்றைப் புள்ளி – நிலா சூரியன் இன்று போகிறேன் மீண்டும் வருவேன் இரவில் இருந்து மீண்டு …

>>

கவிஞன்

புஷ்பால ஜெயக்குமார் அவனிடம்  உங்களது  சராசரி விமர்சனங்களை  முன் வைக்காதீர்கள்  அவனை நீங்கள்  கண்காணிப்பது போல்  அசவுகரியமானது  வேறு எதுவும் இல்லை  அவன் காத்துக் கொண்டிருப்பது  ஒரு பெரிய காட்டில் என்றால்  நீங்கள் நம்புவீர்களா  என்று தெரியவில்லை  எப்படியோ எதுவோ  அவன் …

>>

நீ

டி வி ராதாகிருஷ்ணன் நீஉறங்குகையில்தாழ்ந்த இமைகளைமயிலிறகு போல என்றிட்டான்கவி ஒருவன்..கவிதைக்கு உண்மையும்அழகுதான்.

>>

எதிரெதிர்

பானுமதி.ந பார்த்து விட்டேன் அவனை வேலியோரம் ஏதோ போகிறது நிச்சலனமாகத் தாண்டிப் போகிறான் பல்லி, ஓணான், பச்சோந்தி, பாம்பு வேலி தாண்டிப் போவது எதுவோ? வால் சுழற்றி  திரும்பும் அதன் பார்வை அவனும் அப்படி எண்ணியிருக்கலாம். வேலிகள் அகழிகளாக பல்லிகள் முதலைகள் …

>>

தாகத்தைத் தணிக்காத தண்ணீர்!

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா – 1: பழம்பெருமை வாய்ந்த சுற்றுலாத் தலம்!  பலமாநிலத்தோர் வந்து பார்க்கும் இடம்!  வெகுபக்கம் கண்டுவர வாய்ப்பு இருந்தும் மகத்துவமே அறியாத உள்ளூரார்! என்பா – 2: நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்!  எத்தனை …

>>

சக்திகள் மூவர்- நவராத்திரி

பானுமதி.ந சுடரே! கன்னல் பின்னல் கைக் கொண்டவளே! இடரே படரின் அரிமாயேறி ஆட்கொள்பவளே! மடமை அகற்றி மதியச் செதுக்கும் அருள் கொண்டவளே! திருவே! கமலம் கவளம் கைக் கொண்டவளே! மருவே வாரின் கறுவே கொண்டு கடித்தெறிபவளே! உளமே அழகும் திருவும் பெறவே …

>>

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

பேசுகிறேன் ஒவ்வொருவருக்குள்ளும்  ஒரு விருப்பம் மறைந்திருக்கிறது  அதைப் பற்றிய பிழைகளோடு  அறைகள் என்றால் வீடு  வீடு முழுக்க காற்றைப் போல்  காலம் நிறைந்திருக்கிறது  என் எண்ணங்களைக்  கசக்கிப் பிழிந்து  ரசித்துச் சுவைத்தேன்  கரும்பின் சக்கையைத்  துப்பியபடி சாற்றைக் குடித்தேன்  நான் நினைத்ததைச் சரியாகப்  …

>>

திருட்டு ராஜ்யம்

வளவ. துரையன் இந்தக் காலத்தில்ஒரே ஒரு ஊர்லஎன்று ஆரம்பித்தால் சிறுவர்கள் ராஜாகதை வேண்டாமென்றுஅடம் பிடிக்கிறார்கள் ராஜாக்களின்சண்டையும் சரசமும்இன்று ரசிக்க முடியவில்லையாம் திருடர்களின் கதைதான்சிறுவர்க்கும் வேண்டுமாம் திருடர்கள்வேறு வேறு வேடங்களில்திடீரென்று வருவதும் நமக்குத் தெரியாமல்நம்மைக் கொள்ளையடிப்பதும்சிறுவர்களுக்குப்பிடித்திருக்கிறது. அவர்களும் அத்தொழிலையேவிரும்புகிறார்கள் திருடர் இப்பொழுதுதிருடிக் கொண்டதெல்லாம்பெரியவனாகி …

>>

பானுமதி ந கவிதைகள்

யார்? வாகை மரத்தின் கீழ்க் கிளையிலிருந்து கரைந்தது காகம் முன்பெல்லாம் விருந்து எனச் சொன்ன அம்மா தாளடி சென்று நெல் மணி அளந்து நெஞ்சு வலியுடன் வீடு திரும்பி காணாமல் போன அப்பா வந்திருப்பதாகச் சொன்னாள்.        பார்வைகள் தென்றல் எனும் தொட்டிலிலே …

>>

தளர்தல்

ஆர். வத்ஸலா பகலிலே இரவுபோர்த்து முடங்கிய வானம்பற்றி எரியும் மேகம்மூடும் இமைகள்வறண்ட சிந்தனைமரத்துப் போன உடல்கனத்துப் போன மனம்காற்றுக்கு சிறை முதல் துளிஉடன் உறிஞ்சிக் காயும் பூமிமூச்சிரைக்கத் தொடரும்துணைத் துளிகள்சிலிர்க்க வைக்கும் மின்னூசிகள்கண் கூசும்ஒளிச் செல்வம்முக்கண்ணன்முடி தேடும்ஆகாசகங்கை நிறைந்த பூமிஅலட்சியமாய் உமிழும் …

>>

தர்மராஜ் கவிதைகள்

என்பா 57 வெளியில்வந்தேன்மூக்கிலிரு சொட்டுநீர் விரைந்தேன் படுக்கையறைக்குஏனிங்கு வந்தேன் மீண்டும் வெளியில்மீண்டும் படுக்கையறை கைத்துண்டு கண்ணில் பட்டது. என்பா 58 பனைமரம் நாட்டின்நிலத்தடிநீர் தேக்கி அடிமுதல் நுனிவரைஅத்தனையும் தங்கம் பனைமரத்தின் அழிவுபஞ்சத்தின் அறிகுறி பனை விதை விதைப்போம்.

>>

திறக்கப்படும் நேரம்

செல்விபிரகாஷ்🌹 காத்திருப்புக்காவியத்தின் பக்கங்கள் எல்லாம் திருவிழா கனவுதான். பெட்டியில் அடைக்கப்பட்ட பொம்மைகளின் ஏகாந்த நினைவுகளில் அவதாரங்கள் இடம்மாற்றிப்படுக்கலாம்,புதுப்பபுது வேடம் பூண்டு தெய்வங்கள் தேவதைகளை வேடிக்கைப்பார்க்கச்சொல்லலாம். நடக்கும்வரை நடக்கட்டும்,எல்லாம் அடுத்தமுறைப்பெட்டியைத்திறக்கும்வரைதான்.அதுவரை காத்துக்கிடக்கட்டும் தெய்வங்கள் ஒரு பிடி சுண்டலுக்கும் ஒரு படி சங்கீதத்திற்கும்.

>>

நவராத்திரி நினைவுகள்

உமா பாலு கள்ளிப் பெட்டியை அம்மா திறக்க,சொல்லனா ஆவலோடு காத்திருப்போம் பிள்ளைகள்பழைய துணிகள் சுற்றிய பொம்மைகளை வெளியே கொண்டுவந்து ஒவ்வொன்றாக தூசி தட்டி வைத்த நினைவுகள் .பொம்மைகளை சுற்றிய துணிகள்யாவும் நினைவுப் பேழைகளேஎட்டாவதுபடிக்கையில் , ஒண்ணாவதில் போட்ட கவுன்கள் வெளிப்படும்இது என்னுடையது …

>>

படி ….கொலுப்படி

வவேசு படியில் கொலுவிருக்கும் பொம்மைகள்நாம் பார்க்கஅசையாதிருந்துவிட்டு நாம் தூங்கும் போதுஓடி விளையாடுமாம் குழந்தைசொல்லிவிட்டு உறங்கிவிட்டாள் பொம்மைகள்விழித்துக் கொண்டன.

>>

என்பா 42

அழகியசிங்கர் பொதுவாக ஞானக்கூத்தன்அதிகமாகப் பேசமாட்டார்கவிதைக் குறித்துப்பேசியது ஞாபகத்திலில்லைஆனால் சந்தித்துக்கொண்டிருந்தோம் பேசிக்கொண்டிருந்தோம்இப்போதோ அவர் கவிதைகள்தான்

>>

சுரேஷ் ராஜகோபால் கவிதை

யார் ஒருவரிடம்நம்மால் இயல்பாகஇருக்க முடிகிறதோ… யார் அருகாமையில்நம்மால் பாதுகாப்பாகஉணர முடிகிறதோ… யார் முன்னால்நம் முகமூடிகளின்திரை விலகுகிறதோ… அந்த ஒருவரைத் தான்அத்தனை அலட்சியமாய்நாம் தொலைத்து விடுகிறோம்.

>>

புனித ஜோதி கவிதைகள்

கவிதை 1 மழையில்லாத பொழுதுகளிலும்உன் நினைவு மழையால்நனைந்துக்கொண்டிருக்கின்றேன். மழைக்காலத்தில்சொல்லவா வேண்டும்உன் நினைவுத்தாவணியில்வாடையை அணைக்கின்றேன்… ஐம்பூதங்களில் சீற்றம்என்ன செய்யப்போகிறது?நீ தான்என் நாடி பூதமாயிற்றே… உன் மௌன யுத்தத்தை விடவாபெரிய யுத்தத்தைஇந்த பிரபஞ்சம் கண்டுவிடப்போகிறது…. என்காதல் தேசத்துநீலாம்பிரியே… கிளைகள் அடர்ந்தமரமென்றாலும்மழை விட்டுவிடவா போகிறதுஇச் சிறுகூட்டை…. …

>>

வண்ணமயமாதல்…!

ஆர்க்கே.! மலரில் அமர்ந்திருந்தஅந்த வண்ணத்துபூச்சிபூவுடன்என்ன பேசியதோஎன்ன தேடியதோஎன்ன பரிமாற்றம் நிகழ்ந்ததோஅவைகட்குள்.காற்றில் மீண்டது வண்ணத்துப்பூச்சி.மலரின் அழகு சரி பாதி குறைந்தது.

>>

அன்றும் இன்றும் ஒரு எழுத்து

செல்லப்பா சுப்ரமணியன் காமிரா போட்டோ எடுக்கையில் என்னையே பார்த்தார்கள் போட்டோவை காட்டுகையில் தன்னையே பார்த்தார்கள்                    சி சு செல்லப்பா செல்ஃபி போட்டோ எடுக்கையில் தன்னையே பார்த்தார்கள் போட்டோவை காட்டுகையில் தன்னையே பார்த்தார்கள்            அன்றும் இன்றும் ஒரு எழுத்து மாற்றம்

>>

இறுக்கம்

ஆர். வத்ஸலா ரசிக்க முடிவதில்லைஇப்பொழுதெல்லாம்முன் போல்மழையை கருமேகம் சூழ்ந்ததும்வந்து விடுகிறதுகவலைகுடியிருப்பை கட்டியவர்செய்த தவற்றால்வெளியில் பெய்யும் போதெல்லாம்வீட்டிற்குள்ளும்பெய்கிறது மழை தண்ணீராய் பணம் செலவழித்துவேனிற் காலத்தில் சரி செய்தாலும்ரசிக்க முடிவதுமுதல் மழையை மட்டுமேஇரண்டாவதற்குதேவையாயிருக்கிறதுமறுபடியும்வீட்டினுள் குடை நேரம் கழித்து வரும் வேலைக்காரியை கடிந்து கொள்வதில்லைஇங்கு வந்தது …

>>

நண்பரின் கவிதை

இரா. முருகன்  தொலைபேசி ஒலிக்க,’ஒரு கவிதை எழுதினேன், கேளுங்கஎட்டு வரிக் கவிதைஎன் சந்திரஹாசன் அண்ணா பற்றிஎன் அப்பா பற்றி, என்னைப் பற்றிஎன் எண்ணங்கள் பற்றிஇரண்டு நிமிடத்தில்எல்லா உணர்ச்சியும் பொங்கிவரகலைத்துப் போட்ட பிம்பங்களாககுரலில் உருமாறும் கவிதை.சரி சார், பார்க்கலாம்விடைபெற்றோம்

>>

மழை

உமா பாலு வானத்திற்கு வந்தது பூமியின் மேல்காதல்மேகத்தை அழைத்தது தூது செல்லசிலிர்த்தது பூமி மழைக்கரம் தீண்டபுள்ளினம் புல்லினம் யாவும் உயிர்த்தனஎல்லாம் இன்ப மயம்.

>>

தொலைந்துபோகிறேன்

செல்விபிகாஷ்🌹 ஏதோ ஒன்றின் நிசப்த சிந்தனையில், எண்ணம் ஏதுமற்ற வெறுமைப்பொழுதுகளில், “காகிதத்தை எப்படி நிரப்புவது?” என்று எழுதுகோலைக் கேள்விகேட்டபடி, பார்வையைத் திருடனாய் ஒளிந்து நகர்த்திய ஒரு தந்திரப்பொழுதில், வாழ்க்கைக்காய், வயிற்றுக்காய் உறவுக்காய்,உணர்வுக்காய்,மணித்துளிகளை விழுங்கி,காலத்தைத்தின்று குவித்த சில ஓய்வற்றப்பொழுதுகளில் கண்களைக் கசக்கி இதயத்தைப் …

>>

கோணல்

 எல்.ரகோத்தமன்  வெண் சேனைகருஞ்சேனையார் மோதிக் கொண்டாலும்வெற்றி பெறுவது ராஜாதோற்பதும் ராஜாஆத்திரமடைவது மனிதன்!

>>

அவளும்தான்……

…வளவ. துரையன் சபரியைப் போலஇராமனின் வருகைக்குவிராதனும் கவந்தனும் கூடக்காத்திருக்கிறார்கள் நோக்கங்கள்வேறு வேறாயினும்எதிர்பார்ப்பு ஒன்றுதானே? ஒரு நீர்த்துளியாவதுவிழுமென்றுதான் அந்தஒரு முளை வெளியேவருகிறது அதன் எதிர்பார்ப்புஅன்று கருகுகையில்அது இடும் சாபம்கருக்குழந்தையும் கூடத்தாங்கமுடியாது சிறுபுழுவை அலகில்தூக்கிக் குஞ்சிற்காகவிரையும் குருவிக்குத் தெரியும்கூடு செல்லும் வழி பாதை இருட்டானாலும்பறந்து …

>>

எப்படியாயினும்

ஆர். வத்ஸலா நான் எழுதிய கவிதைநல்ல கவிதைசுமாரான கவிதைமோசமான கவிதைகவிதையே அல்லாத கவிதைஉனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்அது என் கவிதைநான் பெற்றது

>>

விசனம்

வ வே சு  தூரலோடு ஆரம்பம் தொடர்ந்தது ஜலதரங்கம்; சில நிமிடச் செல்வாக்கில் இடியுடன் கூடிய  மழை எங்கள் தெருவெங்கும் தலைபின்னிக் கொண்டது; பூ வைத்துக் கொண்டது. இதனை இரசிக்க சாளரம் அருகே சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு நொறுக்குத் தீனியைக் …

>>

மூன்று கவிதைகள்

பானுமதி ந 1.வானும், நிலமும் கூப்பிடு தூரம் தான் என்றார்கள். எட்டும் தொலைவில் என்று சொன்னார்கள். வானம் கூட தொட்டு விடும் தூரம் தான். என் கால்கள் பாவும் நிலம். 2. தேடல் மஞ்சள் குளத்தின் மதகில் மைனாக்கள் உல்லாசம் கிளையில் …

>>

கைத்தடியுடன் எழுந்து வா!

 கு. மா. பா. திருநாவுக்கரசு நெட்ட நெடு உயரம்!  புன்னகைத் தவழும் முகம்!  கைத்தடியுடன் வட்ட வடிவக் முகக்கண்ணாடி!  முழுவழுக்கைத் தலை!  அரையாடையில்  ஆடும் கடிகாரம்!  எளிய நின் தோற்றத்தை…  இன்று நின் பிறந்தநாளைக் கொண்டாடி காந்தியம் பேசும்  அரசியல்வாதி மட்டுமல்ல,  …

>>

காந்தி வந்தார்..

வே.கல்யாணகுமார் காந்தி வந்தார்..காந்தி வீதியிலே.!பிராந்திக் கடைகள்நிறைந்திருக்கும்காந்தி வீதியிலே.!வருந்தி நின்றார்..வருந்தி நின்றார்..சிலையின் வடிவிலே!வாங்கித் தந்தசுதந்திரத்தால்..காந்தி வீதியிலே.! அரையாைடை யைக்கூட ஒருவன்..உருவி ஓடுகிறான்!அடிதடிக்கு இவர்த்தடியை.. எடுத்து ஓடுகிறான்.!மதுக் குடித்துசிலையருகே உருண்டு புரள்கிறான்.!மனம் பதைத்து நின்றிருந்தார்..காந்தி வீதியிலே.! கதர் சட்டைப் போட்டு ஒருவன் காரில்வருகிறான்!கறுப்புப் பணத்தைவெளிநாட்டில்..பதுக்கித் …

>>

மகாத்மாவே மீண்டும் வா!

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚 அண்ணல் தேசபிதாவேஅகிம்சை சத்தியம்புன்னகையுடன் கடைபிடித்துஉடல் வருத்தி கண்ணீர் விட்டுவாங்கித் தந்த சுதந்திரம்விழலுக்கு இறைத்த நீராயின ! அப்பாவி மக்களின்அன்றாட வாழ்க்கையேவன்முறை வெறியாட்டத்தில்குண்டு முழக்கத்தின் நடுவேகுருதியில் மிதக்கிறது ! துப்பாக்கிக் குண்டில்நீ மட்டும் மடியவில்லைஅகிம்சை சத்தியம்மனிதநேயம் எல்லாம்மடிந்து கொண்டு …

>>

பத்தாவது?…….

வளவ. துரையன் பாற்கடலில்படுத்திருக்கும் பரந்தாமனே பத்தாவது எப்பொழுதென்றேன்பதிலின்றிச் சிரித்தார் கண்ணுக்குத் தெரியாமல்கைகுலுக்க வழியின்றி முகம் வாய் மூடிவிட்டுமூச்சுக்குக் காற்றின்றி படுக்கையும் இல்லாமல்புதைக்கவும் இடமின்றிஎரிக்கவும் விறகின்றிஎடுத்ததுதான் பத்தோ? எம்பெருமான் சிரித்தார் கையூட்டுக் கைகளிலேஅகத்தின் அழுக்குமுகத்தில் வடிகிறது தருக்களைத் தரிசாக்கித்தகர்த்தீர் நற்காற்றை எதிரதாக் காக்கும்அறிவினை …

>>

காந்தி ஜெயந்தி கவிதை

–இராய செல்லப்பா ஆகிடுவேன் ஓர் நாள் – அண்ணல்காந்தியைப் போலே வாழ்வினில் நானும் (ஆகிடுவேன் .. ) உப்பும் மிளகும் அப்பிய கூந்தல்ஒருநாள் உதிர்ந்துவிடும் -அதில்செப்பழகுடைய கண்ணாடி வழுக்கைசீக்கிரம் மலர்ந்துவிடும்! (ஆகிடுவேன் .. ) எத்தனை நாள் தான் முப்பது பற்கள்என்னுடன் …

>>

காந்தீ மஹ்ஹான்

ஞானக்கூத்தன் எழுந்ததும் கனைத்தார்; மெல்லசொற்பொழிவாற்றலானார்- வழுக்கையைச் சொறிந்தவாறு‘வாழ்கநீ எம்மான்’ என்றார்; மேசையின் விரிப்பைச் சுண்டி‘வையத்து நாட்டில்’ என்றார்வேட்டியை இறுக்கிக் கொண்டுüவிடுதலை தவறிý என்றார் பெண்களை நோட்டம் விட்டு‘பாழ்பட்டு நின்ற’ என்றார் புறப்பட்டு நான் போகச்சே‘பாரத தேசம்’ என்றார்; ‘வாழ்விக்க வந்த’ என்னும்எஞ்சிய …

>>

பஸ்

அழகியசிங்கர்  அந்தப்பஸ்இந்தவழியாகப்போகிறது அதில்ஒரு மனிதர்பேப்பர் படித்துக்கொண்டுஇருக்கிறார் பேப்பரில்யார் தலையோஉருண்டு கிடக்கிறதுசிலர் மகுடம்சூடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால்பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது

>>

மஞ்சள் பூக்கள் மீது என்பா கவிதைகள்

  தர்மராஜ்  மஞ்சள்மலருக்குகருப்புபடுக்கை சூரியன்வேறுஎட்டிப்பார்க்கிறான் மனிதஜென்மங்கள்வராதவரைஎல்லாம்நலமே 2. துரை தனபால்  பள்ளி செல்லும் பாதையிலே துள்ளி ஓடும் பிள்ளைகளின் மெல்லிய சிறு பாதங்கள் கல் உறுத்த நோகுமென, பூச்சிந்தி வரவேற்கும் பொன்னரளிச் செடியும்! 3.அழகியசிங்கர் மஞ்சள் பூக்களே மஞ்சள் பூக்களேசாலையில் யார் …

>>

எதிர்பார்ப்பு

வளவ. துரையன் அந்த ஆடு அதோவாய்க்குக் கிடைத்தபுற்களை மட்டும்அவசரம் அவசரமாகமேய்ந்து கொண்டிருக்கிறது. கொட்டிலுக்குச் சென்றவுடன்மூன்று குட்டிகள் ஓடிவந்துமுட்டி முட்டிப் பால் குடிக்குமே எங்கலைந்து பார்த்தாலும்இன்று வயிறு நிரம்பவே இல்லை.இப்பொழுதுதான் தன்எதிர்காலமே கிடைத்தாகஎண்ணி அவசரமாக அதுமேய்ந்துகொண்டிருக்கிறது கிடைப்பதைக்கிடைத்தவுடனேயேஅனுபவிக்க வேண்டும். காலம் தாழ்த்தல்கடினமான வாழ்வில்கண்டிப்பாகத் …

>>

ஒரு தாயின் தவிப்பு

புஷ்பா விஸ்வநாதன் தாயின் தவிப்பறியா ஜடரயில்இன்று ஏன் இத்துணை தாமதம்?மகனைக் கண்டிடிலோ – தாயின்முகம் மலரும் மனம் துள்ளும் திறந்து போட்ட சூட்கேஸ் கள்இறைந்து விட்ட துணிமணிகள்லேப்டாப், ஐபாட், செல்போன் எனநிறைந்து விட்ட ஸாக்கெட்டுகள் அலறும் டிவியின் ஆரவாரக்கூச்சல்கள்அமரும் சோபாவில் புத்தகங்கள், …

>>

அதனதன் இடம்

மதுவந்தி மேசை மேல்படித்துப் பாதிமூடி வைத்தராமயணப் புத்தகம்.எடுத்து சரியாகவைக்கத் திறந்தால்,புத்தகத்தின் நடுவிலிருந்துசிதறிய சீனித் துகளுடேஒரு சிற்றெறும்பு உயிர் தப்பிஆச்சரியத்தோடு விரைந்துஇறங்குகிறது.

>>

ஈர விறகு

 எஸ் வி வேணுகோபாலன்  ‘வெறகுக்காரர் வந்தா குரல் கொடு’  என்பாள் பத்தாணிப் பாட்டி  காஞ்சிபுர வாசத்தில்  சவுக்குக் கட்டையின் வாசம் அதிகம்  ஒரு மில் அதிபர் போல் தான்   நடந்துவருவார் விறகுக்காரர்  பளிச்சென்ற ஜிப்பாவும் வேட்டியும்  கக்கத்தில் கறுப்புநிற தோல் பையும்  எந்நேரமும் …

>>

ஒரு கோனார் கதை

சுஜாதா சிறு வயதில் மாடுபின்னர் நான் ஒடி மாட்டின் கழுத்தில் இருந்த மூக்கணாங்கயிறைகோனார் இழுக்க மாடு மிரண்டு என்னைத் துரத்தி கீழே விழுந்த நான்விளையாட்டு எனசிரித்து கொண்டே எழுந்து சென்றேன்.

>>

ஆடும் கிளி!

     பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை**ஆடும் கிளியேஅசையாமல் நின்றுஎன்ன சொல்ல வருகிறாய் ! கொஞ்சும் கிள்ளை மொழியில் பேசுகயிற்றில் தொங்கும் நீகீழே இறங்கி விடு! நெஞ்சம் பதறுகிறதுசர்க்கஸ்காரன் ஜோதிடக்காரன்கையில் அகப்பட்டால்உன் சுதந்திரம்பறி போய் விடும்பார்த்தது போதும்பறந்து விடு கிளியே!

>>

என்பா

அழகியசிங்கர் நண்பர்களுடன் பழகும்போதுஜாக்கிரதையாகஇருக்கவேண்டும்அனேகமாய் பேசாமலயேஇருக்கப் பழகவேண்டும்எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால் போதும்ஒன்றும் ஆகப்போவதில்லை இதனால்

>>

கடலலைகள்

 வளவ. துரையன் மீள முடியாது என அறிந்தும்  இந்தக் கடலலைகள்  தினமும் முயற்சி செய்கின்றன. கடற்கரையின் ரகசியங்கள்  அனைத்தையும் அறிந்ததால்  ஓவெனச் சத்தமிடுகின்றன. தம் மீது ஆசைப்பட்டு நனைத்துக் கொள்ளவரும்  பிஞ்சுப் பாதங்களை  முத்தமிடுகின்றன. தினம்தோறும் வந்து பேசும்  காதலர்க்கு எல்லாம்  …

>>

காற்றடைத்த வாழ்க்கைநிலை.!

ஆர்க்கே.! ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டுசிதறுறும் மீட்சி எல்லைக்கோடுவரைகாற்றடைக்கப்பட்டுப் பெருத்தாலும்வானளப்பதான நோக்கமாய்மேல்நோக்கி பயணித்தாலும்உயரே வெகு உயரே எங்கோகாணாமலேயே போய்விடுகின்றன-பலூன்கள் என்றழைக்கப்படும்வளிப்பந்துகள்.மற்றவை பெரும்பாலும்உற்றபடிக்குள்ளே பெருத்திருந்தாலும்சிறுவலியெனும் ஊசி முனைக்குக்கூடமுழுவதுமாய் உடைபட்டுசிதறி வெளியேறிவளியுலகு மறந்து வலியுலகில்கரையேறுகின்றன–சமயங்களில் என்னைப்போல.!! ReplyForward

>>

சோமசுந்தரி கவிதை

🌷க.சோமசுந்தரி. நினைவுகளின்பெரும் சுமையில்…இன்றும்!தனியே விடபட்ட மனதுபேசி சென்றது! கடந்த நெடுந்தூரப் பயணத்தில்…திரும்பி நடக்க முடியாமலேயேவாழ்வில்…பூக்களாய் உதிர்கிற சில தருணங்கள்! வாழ்ந்த காலத்தில்அனுபவங்களை கடந்தும்… நேற்றைய மிச்சத்தின்எச்சங்களாய் சுவடுகளைபதித்த சென்றதடங்கள்! அன்போ…அனுசரணையோ..எதுவுமற்ற வெற்றிடத்தில்சூழ்நிலை தான் நிர்ணயிக்கிறதுமனிதனின் வீழ்ச்சிகளில்உண்மை எதுவென்று? இப்படித் தான்! இன்றும்!பிரபஞ்சம் …

>>

ஜீவனில்லா ராமசாமி

கவிஞர்.செ.புனிதஜோதி எலும்பும் தோலுமாய்ஜீவனை மட்டும்தாங்கிநிற்கும்பெரியவரின்உருண்டு நிற்கும்வெள்ளை வேட்டியும்கிழிந்துவிடக் காத்திருக்கும்வெள்ளைசட்டையும்யாரும் சொல்லாமலேவறுமையின் முகவரியைஎடுத்துக்காட்டியது… நிறைமாத மகளைஅழைத்துவந்து அரசுமருத்துவமனைக்குள்சேர்த்துவிட ஆயிரத்தைகைமாத்தா வாங்கிவரஆயிரம் முறையாவதுசெல்லப்பன் வீட்டுக்குநடையாநடந்திருப்பாரு… ஒருநொடிக்குள்ள ஆயிரம்மறைஞ்சு போன மாயத்தஎண்ணி அரசுமருத்துவமனையில்இலவசம் பெயர் பொரித்தபலகையே வெறித்தேப் பார்கிறார்ஜீவனில்லாராமசாமி

>>

மலைத்தேன்

சுரேஷ் ராஜகோபாலன் மை தீர்ந்த என்பேனாவுக்குத் தானே ​தெரியுமஎனக்கும் தெரியாமலேஎத்தனை முறைஒரே கவிதையை – என்கை எழுதியிருக்கும் என்று.. வார இதழ் போட்டிக்கும்போனதே தவிரப்பதிலொன்றும் வரவில்லை அத்தனையும் திருப்திதராததால் கசக்கிஎரியப் பட்டன,நொந்து நூலாகின இனிக்கவிதை எழுத மாட்டேன்முடிவுக்கு வந்த பின்னேதான்பரிசு பெற்றசெய்தி …

>>

கவிதைக்காரன்.!

ஆர்க்கே.! “பேப்பர் பழைய பேப்பர்”என்று கூவிச்சென்றவனைமாடிக்கழைத்துநாளிதழ் மற்றும் புத்தகங்களைஎடைக்குப்போட்டேன்.தனித்தனித் தாள்களில்எழுதப்பட்ட என் கவிதைகளைதனியே பிரித்து வைத்தான்.” இது தேறாது” என்றான். “ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்”தருபவனும்“ஓட்டை ஒடசல்களுக்குபிளாஸ்டிக் வாளி” தருபவனும்“பழைய சரிகைப்புடவைக்குநல்லவிலை” தருபவனும்நான் எழுதிய கவிதைத்தாள்களைசீண்டவே இல்லை.புத்தகமாக்கினால் எடைக்காகுமாஎன யோசனை வந்தது.ஏதோ ஒரு …

>>

நத்தை ஒன்று

வளவ. துரையன் மாலைநேர நடை  காலையில் பெய்த மழையால்  தனித்தனியான மனிதர் போலத்  தண்ணீர்த் தேங்கல்கள் அவசரமாய்க் கூடடைய  அவற்றில் தலையாட்டிக் குளிக்கும்  ஆறேழு காகங்கள் நாய்கள் போலவே  அலைந்துகொண்டிருக்கும்  நகரத்து மாடுகள் மழையில் நனைந்ததால்  மகிழ்ந்து சிரிக்கும்  அரளிச்செடி  விமானத்தை  …

>>

என்பா கவிதைகள்

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா 1 எலியைப் பிடிக்க விரட்டியது பூனை! வளைபோன்ற குழாயுள் பதுங்கியது எலி!  வேட்கையில் பாய்ந்த பூனையின் தலை,  குழாய்வாயில் மாட்டியதே விதி என்பா – 2 பன்முகத் தன்மையின் பெருமிதம் கொள்வார்!  தன்மொழி இனத்தை …

>>

குறுங்கவிதைகள்

 ————————— நாகேந்திரபாரதி  சுயம் —————உள்ளேயும் வெளியேயும் முட்கள் ஒளிப்பதும் ஒழிப்பதும் விருப்பம்  அடிமாடுகள் ———————எப்போதும் போலத்தான் அசை போட்டபடி லாரியில்  அளவு —————–சும்மாயிருந்து பழகிப் போனதால் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை 

>>

கடிகாரத்தில் மணி பார்த்து…

எல்.ரகோத்தமன் பேருந்தைப் பிடிக்க ஓடோடிச் சென்றேன்! புத்திசாலி பேருந்து என்னை உதாசினப் படுத்திவிட்டு ஓடிவிட்டது!  நான் ஏன் பேருந்தைத் தவறவிட்டேன்!  கை புண்ணுக்கு மருந்து கண்ணாடியில்! உடைந்தது கண்ணாடி! சில்களில் தெரிந்தன  முகங்கள்!  கோரமோ அகோரமோ முகங்களெல்லாம்ஒவ்வொன்றாய் கழன்று விழுந்தன திரை மறைவில் !  ஆனால் என் …

>>

கவிதை

அழகியசிங்கர் கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் தன்னைமேதை என்று நினைத்துக் கொள்கிறார்கள் அதுதான் பிரச்சினை ஒரு கவிதை எழுதினாலும் மேதைஎண்ணம் துவங்கி விடுகிறது ஒரு கவிஞர் இன்னொருகவிஞரைப் பாராட்டுவதில்லை. ஏன்,?பாராட்டினாலும் ஏதோ காரணம் வைத்துதான்பாராட்டுகிறார்கள் இப்படியே போனால்கவிஞர்கள் தங்கள் கவிதைகளை தாங்களே அச்சடித்துக்கொண்டு …

>>

விருந்து தடபுடல்

என்பா 113 ஆர் வி சுரேஷ்  கல்யாண வீட்டில் விருந்து தடபுடல்தெருவில் எச்சலிலைகள்  மொத்தமாக விழுந்தனஅவரவர் பங்கினை எடுத்து உண்டனர் .இரவு உணவு முடிந்தது.

>>

தர்மராஜ் 

என்பா 34. காலை ஒருமணிமாலை ஒரு மணி மாதமொருதரம் அஞ்சுநிமிஷம்என்னம்மாவிடம் பேசேண்டி அவங்க பெத்ததுஉன்னத்தான நீயேபேசு .

>>

சந்திரசேகர்

நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது. எனோ இன்னும் தூக்கம் வரவில்லை காத்திருக்கிறேன் காலை ஆறுமணிஅலாரமடிக்க. அணைத்தபின் தூங்குவதே ஆனந்தம்

>>

அன்பு சூழ் உலகு

ஆர் வத்ஸலா நான் என்னுடன்எப்பொழுதும்என் வீட்டில்வேலைக்காரியும் சமையற்காரியும்தினப்படி விருந்தாளிகள்இஸ்திரி செய்பவரின் விஜயம்அவ்வப்பொழுதுஅதே போலஎலெக்ட்ரீஷியன்பிளம்பர் இன்னபிற பேசுவேன் மாஸ்க் அணிந்துஇவர்களுடன் அரசியல், சினிமா, சினிமாப் பாடல், பேருந்து பிரச்சினை, விலைவாசி ஏற்றம் பல சமயம்தம் வீட்டுப் பிரச்சினையை கூறுவார்கள்கேட்டுக்கொள்வேன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுசில சமயம் …

>>

செ.புனிதஜோதி

யானையாகவும்சிங்கமாகவும்புலியாகவும்மயிலாகவும்மானாகவும்பெண் உருவகப்படுத்திக்கொள்ளலாம்சுதந்திரமானகாடு எங்குஎங்குள்ளதுகொஞ்சம்தெரிந்தால்சொல்லுங்களேன்

>>

என்பா – 42:

கு. மா. பா. திருநாவுக்கரசு பழைய மேற்கூரை வெடிப்பில் விழுந்தபறவை எச்சத்தின் விதைத் துளிர்ப்பாய்,எழுதவேண்டாம் என்று இறுகுமென் மனத்துள்கவிதை வேர் முளைக்கிறது.

>>

நட்பூக்கள்

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை என்பா ***மண்ணில் பூத்த பூக்கள் மறையலாம்மனதில் பதிந்த நட்பூக்கள் மறையாதுஅதியமான் ஒளவைக்குகொடுத்த நெல்லிக்கனிஉண்மை நட்பூக்கள் அழிவதில்லை!

>>

காதல் என்பா 1

செல்விபிரகாஷ் சூரியன் உதிப்பது கிழக்கென்று அறிவோம் தெற்கிருந்து வீசுவது தென்றெலெனத்தெளிவோம் மார்கழி வாடை வந்தது என்னவோ மன்னன் உந்தன் பார்வையிலே

>>

கவிஞர்கள் யாம்..!

வே.கல்யாணகுமார்.பெங்களூரூ. கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன்!வறுமை வந்த போதும்வாழ்வில் பெருமை கொண்டவன்! தன் வாழ்வை மறந்து உலகு வாழ பாடல் புனைபவன்!கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்! புத்தகமாய் விரிந்த மனம் அவனுக்கு உண்டுசத்தியமே அவனுடனே இருப்பதும் உண்டு.. கலைமகளின் ஆசியவன் …

>>

என்பா 28

அழகியசிங்கர் இந்த பூமியில் பாரதியார் வாழ்ந்திருக்கிறார்கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கூட வாழ்ந்திருக்கிறார்இருந்தும் நானும்நிகராக எழுதவில்லைதொட்டு எழுதிப் பார்க்கிறேன்.

>>