மழை/செ.புனிதஜோதி

பள்ளங்களில்தவறிவிழுந்த மழைஎழுந்து நடக்கமுடியாமல்கிடக்கிறது சாலையில்… கிளை விரித்துத்தலைவணங்கித்தூக்க முயல்கிறதுமரம் ஊர்ந்து சென்றமேகமும் நடை நிறுத்திபள்ளத்தில் இறங்கிவிட்டன சட்டென வந்தவாகனத்தின்வேகத்தில்என் உடலெங்கும்மேகமும்மரக்கிளையும்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு/அழகியசிங்கர்

240 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும். நான் முதன் முதலாக இத் தொகுப்பின் மூலம்தான் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை என்று நினைத்தேன்.

>>

88வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.

>>

நாயகா விநாயகா/சுரேஷ் ராஜகோபால்

கோலாகலம் கொண்டாட்டம்பிள்ளையார் சதுர்த்தி திருநாளில்களிமண்ணில் சிலை வடித்துஅருகம் புல்லில் அலங்காரம்எருக்கம் பூமாலை மேனியில் மின்னப்பலவித மலர்கள் தூவி வரவேற்புஅப்பமுடன் அவல் பொரிமோதகம் கொழுக்கட்டை வடைபாயசம் சுண்டல் நைவேத்தியம்உந்தன் புகழ்பாடிப் பூஜிக்கிறோம்மூஷிக வாகனனைக் கொண்டாடுகிறோம்ஞான முதல்வனாம் வரம்தரும் வள்ளலாம்யானை முகத்தோனாம் வேலவன் சோதரனாம்உன்புகழ் …

>>

விநாயகர் வந்துவிட்டார்/அனங்கன்

வரும்போதெல்லாம் கவலையாய்
இருக்கிறது கலவரம் வருமோ என…
நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல்
கெடுமென ஒரு கும்பல் வழக்கம்போல்
கத்தி ஓயும்.

>>

உயில்/க.நா.சு

என் பெட்டியில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்துவிடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்

>>

சௌவி கவிதை

ஒரு தேநீர் அருந்தி வரலாமென
சற்றே நடந்து
சந்தடி மிகுந்த கடைத்தெருவுக்கு வந்து
தோதான தேநீர்க்கடையைக் கண்டுபிடித்து

>>

கூஃபி/க. நா. சு.

பிறந்தவுடன் அவனுக்கு ஷேக்ஸ்பியர் என்று
பெயர் வைத்து வில் என்று கூப்பிட்டேன்.
டாலி என்கிற அவன் தாய் மூத்தவனான
அவனைக் கவனியாமல் நோஞ்சானாக

>>

நீதிக்கிளி/க.நா.சு

என் நெஞ்சுக்குள் உட்கார்ந்து கொண்டு
நான் எதையும் செய்து முடித்தவுடன்
இது தப்பு, இது சரி. இது ஏன் தப்பு. இது
ஏன் சரி என்று ஒலிக்கும் அருவமாக

>>

தோழன்/ அனங்கன்

நானோபலர் மிதிக்கமிதிக்க
உழண்டுபோன சேறாய் அலைகிறேன்…
உன்னோடு பேசிக்கொண்டு
செல்கையில் பிறர் என்னை
பார்க்கும் பார்வையின்

>>

தடங்கள்/ இராஜா மணி

மனைவியின் நினைவா, மகனின் படிப்பா மகளின் திருமணமா அடுத்த வேளை உணவா வாழ்வின் மீது காதலா..எதோ ஒன்று உந்திந்தள்ள சுவடுகள் அற்ற பாதையில்அவர் மிதித்துச் சென்ற சைக்கிளின் தடங்கள் பாதையாகிபின்சாலையானது. ஆனாலும் பயணங்கள் எளிதாக இல்லை.

>>

எஸ்.சண்முகம் கவிதை

வெளிப்பக்கமுள்ள மாடிப்படியின் கீழுள்ள
குறுகலான இடத்தில் மரஸ்டூலில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து மூன்று நாட்களாகிவிட்டன
அவ்வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
தென்படவில்லை
அவர் அமர்ந்திருந்த ஸ்டூல் வாசலோரமாக வைக்கப்பட்டுள்ளது

வயோதிகரென எண்ணத் தகுந்தவரல்ல
மூக்கின் கீழ்வளைவில் பொருந்திய கண்ணாடி
கொஞ்சம் கீழ்வெட்டுப் பார்வை
தன்னைக் கடப்பவர்களுக்கெல்லாம்
ஒரு விஷமச் சிரிப்பு
அவர் எழுந்து நின்றதை பார்த்ததில்லை
ஆனால் யாரையும் மிரட்டாத வாளிப்பு

அந்த மாடியின் கீழுள்ள இடுக்கு
ஏழு அடி நீளமும் நான்கடி அகலம் இருக்கலாம்
அங்கு காலை பத்துமுதல் மாலை ஆறு மணிவரை
வாரத்தின் ஆறுநாளும் அமர்ந்திருப்பார்
எதையோ செய்து கொண்டிருந்தார்

அவரிருந்த மாடிப்படியின் இடப்பக்கம்
ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்பு பகுதியின்
முன்கதவு திறந்திருந்தது
தெருவிலிருந்து இரண்டு படிகள் ஏறிச்சென்று
ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தவரை
மாடியின் கீழிருந்தவர் இல்லையா என்றேன்
அவர் இடத்தை காலிசெய்துவிட்டார் என்றவர்
ஏன் அவரது புதிய முகவரி வேண்டுமா
உங்களுக்கு ஏதாவது தரவேண்டுமா எனக் கேட்டார்
ஒன்றுமில்லை என்றேன்

பலர் அவர் எங்கே எனக் கேட்கின்றனர்
நீங்கள் எதையாவது அவரிடம் தந்தீர்களா என்றதும்
அப்படியெல்லாம் இல்லை
சரி உங்கள் பெயர் பெயர் என்றவரிடம்
தயங்கியபடியே கண்சிமிட்டிவிட்டு விடைபெறுகையில்
அந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தவரின் பெயரைக் கேட்காமல் மீண்டேன் .

-எஸ்.சண்முகம் –
(எண்: 055)

>>