ஒரு நான்/புஷ்பால ஜெயக்குமார்

அடுத்து நிகழப் போவதைச் சொல்கிறேன்
ஒன்றன்பின் ஒன்றாக
என்னைத் தாக்கப் போவதைச் சொல்கிறேன்
நான் வாழ்ந்து கொண்டிருப்பது
என்பது ஒரு ஆவணப்படம் போல்
என் கூடவே வருவதைச் சொல்கிறேன்
என் புத்திக்கு
எட்டாமல் போவதைச் சொல்கிறேன்
நான் திடுக்கிடுவது போல்
அது நிகழ்வதைச் சொல்கிறேன்
நான் எந்த காரியத்தையும்
முழு ஈடுபாட்டுடன்
செய்ய முடியாததைச் சொல்கிறேன்
என் வேகமும் வீரியமும்
எங்கோ விரயம் ஆவதை சொல்கிறேன்
கடைசியில் நான்
என்னால் முடிந்ததை
செய்வதைச் சொல்கிறேன்
புத்தி பேதலித்தவன் போல்
நான் எதற்கோ
காத்திருப்பதைச் சொல்கிறேன்
வண்டி வாகனங்கள்
ஓடும் சாலையில்
ஒரு ஓரத்தில் நான்
தனியாக நடப்பதைச் சொல்கிறேன்

>>

“தீக்குள் விரலை வைத்தால்”/மீ. விசுவநாதன்

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் மகாகவி பாரதியாரின் இல்லத்தில் “வானவில் பண்பாட்டு மையம்” ஏற்பாடு செய்திருந்த கவிப் பொழிவு நிகழ்ச்சியில் கொண்டு வாசித்த,

>>

இலக்கிய இன்பம் 15/மால் செய்கின்ற கூத்து

நம் பக்தி இலக்கியங்கள் வெறும் இறைவனைப் புகழும் புறத்திணைப் பாடல்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. இறைவனின் மேல் காதல் கொண்ட அகத்திணைப் பாடல்களையும் கொண்டவை.

>>

விருட்சத்தில் பிரசுரமான சிறந்த படைப்புகள் /அழகியசிங்கர்

சூரியனே, நீ உதயமாகும் பொழுது
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை.
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி

>>

கூனூரா? கூற்றின் ஊரா?/கு. மா. பா. திருநாவுக்கரசு

இயற்கை நிகழ்வா?செயற்கை விபத்தா?இமய மலைமீதுபறந்து விளையாடியஇராணுவ தளபதிபிபின் ராவத்திற்கு,குன்னூர் மலையின் குற்றுயரம்சறுக்கி நொறுக்கி விட்டதே!அந்தோ! பாதுகாப்பாக பயணித்தஇராணுவ வானூர்தியே – நம்படைத்தளபதியைபலி கொள்ளுமா?ஏது சூழ்ச்சி? என்றறியஇருண்ட கருப்புப் பெட்டிஏதேனும் தகவல் தருமா?தீயுடன் மரத்தைத்தீண்டியதா? – மரத்தைத்தீண்டியதால் வானூர்திதீக்குளித்ததா?கூனூரே கூற்றின் ஊராய்வானூர்தியைக்கொளுத்திப் போட்டதே!ஊடகங்கள் …

>>

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்… / வித்யாசாகர்

எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது
மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல

>>

புரியாத வயதில்/அனங்கன்

சிறுவயதில் சரோஜாதேவியை தீவிரமாய்க் காதலித்தேன்.
ஆனால் அவர் அன்பெல்லாம் எம்.ஜி.ஆரிடம்தான்
எனப்பல படங்களில் தெரிந்தபோது எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன்.

>>

நத்தை

மழைக்காலத்தில் மனிதர்கள்
வீட்டில் முடங்கிக் கிடக்கும் போது
நத்தையாரே நீ மட்டும்
நகர்ந்து வருகிறாயே

>>

அகல்

நேற்றைத் தினங்களில்
கூடையில் சுமந்துவரும்
பாட்டியிடம் கதைபேசி
வாங்கிய மண்விளக்கை
அம்மா தண்ணீர் தொட்டியில் போட்டு வைப்பாள்….

>>