சசிகலா விஸ்வநாதன்/அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின் என்பா அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.கனிவுடன் சொல்கிறது; அனைத்து ஊடகங்களும்,பொருத்தமான வாசகம்; பொருத்தமான நாளில்,எனக்குத்தான் கொஞ்சமும் பொருந்தவில்லை. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.அனைவரும் சொல்கிறார்கள் இன்முகத்துடன்; அனைவருக்கும்.அறிந்தவருக்கும், அவ்வளவாக அறியாதவருக்கும் கூட;நல்ல பழக்கம்தான்; தொடரட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி …

>>

சசிகலா விஸ்வநாதன்/தன்னம்பிக்கை

(இன்று அழகிய சிங்கரின் என்பாவாக என்பா) முன்னேற்றப் பாதையில்முள் பரப்பிடுவார்தன்னைத் தொலைத்து தெருவில் தேடுவார்பின்னும் அவர் தொடர்வார் நாளும்தன்னை நம்புவரவரை விலக்குவார்.

>>

பி. ஆர்.கிரிஜா/எல்லோரும் நலமாக வாழ வேண்டும்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்தரணியிலே நற்செயல்கள் புரிவோர் இருந்தால்இயற்கையோடு இணைந்து வாழ முற்பட்டால்நன்றாக வாழ்வோம் அனைவரும் ! எல்லோரும் நலமாக வாழ வேண்டும்பேராசை என சிலர் நினைக்கலாம்கூட்டு முயற்சியில் எதுவும் சாத்தியம்நிச்சயம் நடக்கும் ஒருநாள் !

>>

செந்தில் பிரசாத்/மழை மழை மழை மழை

மழை மழை மழை மழைபடைத்தவன் காட்டில் சோக மழைகாப்பவன் காட்டில் தடுமாற்ற மழைஅழிப்பவனுக்கோ மகிழ்ச்சி மழை. மழை மழை மழை மழைஇடிக்கும் மின்னலுக்கும் காதல் மழைமேகத்துக்கும் மண்ணுக்கும் மோக மழைவானத்துக்கு சோக மழை. மழை மழை மழை மழைமாடி வீட்டில் கொண்டாட்ட …

>>

அழகியசிங்கரின் 5 என்பாக்கள்

என்பா 1 மழை மழை மழை மழைவெளியே மழை பெய்து கொண்டிருக்கிறதுவெளியே காலடி எடுத்துவைக்க முடியவில்லைஎங்கும் போக முடியாமல்மழை மழை மழை என்பா 2 மழை மழை மழை மழைமழையைப் பற்றிய செய்திஅர்த்தமுள்ளதாகஇருக்கிறது. ஏனோ பலித்துவிடுகிறது. எப்படியோ துயரத்தைக் கூட்டுகிறது என்பா …

>>

பி. ஆர். கிரிஜா/என்பா

அழகிய சிங்கரின் என்பா! மழை மழை மழை மழைஇயற்கை அளிக்கும் அற்புத அமிர்தம்உலக மக்களின் உயிர் நாடிசேமிப்போம் கண்ணும் கருத்துமாக ! மழை மழை மழை மழைஓயாமல் கொட்டும் ஓரிரு சமயம்இயற்கையின் சீற்றம் வருணனின் கோபமோ ?சற்றே ஓய்வெடுமாரியே ! மழை …

>>

சசிகலா விஸ்வநாதன் /என்பா

அழகிய சிங்கரின் இன்றைய என்பா🌧️ மழை மழை மழை மழைசூல் கொண்டு சுழல்காற்றுசிலு சிலு சிலு சிலுவென;குளிர் குளிர் குளிர் குளிர்.🌧️ மழை மழை மழை மழைசர மழை;சாரங்கம் உதிர்க்கும்வாளி போல், சலிக்காமல் பெய்வதுசற்றே நின்றால், தேவலை.🌧️ மழை மழை மழை …

>>

சசிகலா விஸ்வநாதன்/ரத்தன் டாடா

( அழகிய சிங்கரின் என்பாவாக.. என் )பா, இன்று விருது அளித்தாலும் அளிக்காவிடினும்; பாரதம் புகழும்பாரத ரத்தினமவர் பல சாமானியர்சாப்பிடும் சோற்றுப் பருக்கையிலுள்ளது அவரது பெயர்

>>

சுரேஷ்ராஜகோபால்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை 1. குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது/களிப்புடன் இருக்க மகிழ்ச்சி வேண்டும்/இன்பத்தில் திளைக்கவெற்றிகள் வேண்டும்/துன்பத்தைக் கடந்தால் துணிந்திடு. 2. குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஅதிகாலை விழித்தல் சாலச் சிறந்ததுவருடத்துக்கொரு முறை தீபாவளி வரும்சிலந்தி வலையில் பூச்சி. 3. குளிக்காதவருடன் …

>>

ரவி அல்லது/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.துவைக்காத துணி போடவும் இயலாது.அழுகாத குழந்தைக்குபால் கிடைக்காது.முயலாமல் வெற்றி வாய்க்காது.*–

>>

ஹரணி/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா வகைமை குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுமுடியாது குளித்தவருடன் குடும்பம் நடத்துவதும்நடத்துவது நாராயணன் செயலல்ல குடும்பம்குடும்பம் சமயத்தில் கல(ழ)கம்.

>>

சசிகலா விஸ்வநாதன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌

இன்றைய அழகிய சிங்கரின் என்பா (1)குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது‌குடிப்போருடனும் குடும்பம் நடத்த முடியாதுஇவர்கள் “இன்னார்” என்று எப்படிஇனம் கண்டு கொள்வது? (2)குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.காமாந்தகருடனும் குடும்பம் நடத்த இயலாது.குறிக்கோள் இல்லாதவருடன் வாழ இயலுமா?விதி விட்ட வழி. (3)குளிக்காதவருடன் குடும்பம் …

>>

ப.மதியழகன்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

அழகியசிங்கரின் என்பா 1குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஹிப்பிகளின் வாழ்க்கைமுறை நமக்கு ஒத்துவராதுகிருமிகளின் கூடாரம்தான் இந்த உடல்குளிக்காமல் இருந்தால் எப்படி? 2குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்தெரியாமலா சொல்லி இருப்பார் திருமூலர்புரிந்ததா போய்க் குளியுங்கள்…

>>

செந்தில் பிரசாத்/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.எந்த கேள்விக்கான விடை இது?குளித்தவருடன் குடும்பம் நடத்த முடியுமா?பிடித்தவருடன் மட்டுமே முடியும்.

>>

அழகியசிங்கர்/குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம்நடத்த முடியாதுதினமும் குடிப்பவரிடம்சேர்ந்து வாழமுடியாது. முடியாது முடியாதுமுடியாதுஎன்னடா வாழ்க்கை இது

>>

விஞ்ஞானி/குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது

குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாதுஎருமைக்கு பிரச்சனை இல்லை ஆனால்எருமை வாகனனால் குளிக்கநேர்ந்தவருடனும்குடும்பம் நடத்த முடியாது

>>

சும்மா சும்மா/சசிகலா விஸ்வநாதன்

சும்மா சும்மா சும்மா சும்மா சுற்றாது, சும்மா இருந்தே சொல் அற, நில்!” என்றே சொன்னாலும்; அடங்குவது இல்லையே, மனது.🪷சும்மா சும்மா சும்மா சும்மா சுற்றும் மனது,நிலை பெற, சுகம் தரும்சொக்கேசன் மலர் பாதம் சூடுவாய்; நன்னெஞ்சே!🪷சும்மா சும்மா சும்மா சும்மா, …

>>

சசிகலா விஸ்வநாதன்/எவரும் விரும்புவதில்லை

அழகிய சிங்கரின் என்பாவாகஎன் பா ஒன்று ; இன்று🪷நாளும் கேள்விகள் பலவுண்டு நாவில் அரும்புவது உண்டுஅரும்பும் அவைகளை கிள்ளி எறிவதே;என் வேலை. வினாவைஎவரும் விரும்புவதில்லை.

>>

சசிகலா விஸ்வநாதன்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

அழகிய சிங்கரின் என்பா வயிற்றுப் பாடுஒன்று இருக்க; பயம் ஒன்றுஅற்றுப் போகும். நைந்த வலையானாலும்லாவகமாய் விரிக்க கண்ணீர் கடலில் மீனவர்கள். உப்புக் கடலோடிதப்பாமல் வலை வீசி, ஒப்புக் கொடுத்தேன் அத்தனையும் தூத்துக்குடி அங்காடியில் கங்காணியிடம் கடனுக்கு கண்ணீர் கடலில் மீனவர்கள் 🪷வலை …

>>

அழகியசிங்கர்/கண்ணீர் கடலில் மீனவர்கள்

என்பா 1 1. எப்போதும் மீனவர்கள்பற்றி செய்தி இலங்கை ராணுவத்தில்மாட்டிக் கொள்கிறார்கள் அவர்களை மீட்க அரசாங்கம் போராடுகிறது கண்ணீர் கடலில் மீனவர்கள் 2. இலங்கை ராணுவம்சொல்லிக் கொண்டிருக்கிறது எங்கள் கடலில்மீன் பிடிக்கிறார்கள் விடமாட்டோம் அவர்களை நாங்கள் எப்போதும் கண்ணீர் கடலில் மீனவர்கள் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாடிக்கை மனிதர்

அழகிய சிங்கரின் என்பா கேளிக்கை விரும்பும்வாடிக்கை மனிதர் வேடிக்கையும் விளையாட்டும்விரும்பும் மனம் உளியெடுத்து செதுக்குவது கடினமென பள்ளுப் பாடும் மனம்

>>

சசிகலா விஸ்வநாதன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா🪷தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்.மருண்டு இறந்த மக்களின் சடலங்கள்வருந்தி கண்ணீர் சிந்த; இயற்கையின்நிருத்தம் ; மிக வருத்தம். 🪷தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்;உறக்கம் தொலைத்தஇறைவனின் நாடு.இயற்கை புரியும் பெரும் பிழை;ஏன் என்றெமக்கு புரியவில்லை.🪷 தோண்டத் தோண்டும் வரும் …

>>

ஹரணி/தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்

தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்மீண்ட உடல்கள் துயரைப் பெருக்கும்பிழைத்தோரும் செத்தோரும் செய்தது என்னஆண்டவா தண்டிக்கணும் உன்னை. தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்துவண்டு போயினர் மீட்புக் குழுவும்வயநாடு வயமிழந்து வாழ்வற்றுப் போனது.இழந்தோர்க்கு எது வாழ்வு? தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்குழந்தைகள் முதியோர் குடும்பமும் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா தோண்ட தோண்ட வரும் சடலங்கள்நீண்டு போகுது காண்போர் துயரம்மாண்டு போனவர் மறைந்து போயினர்மீண்டு வந்தோர் உண்டோ?

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின்என்பா தோண்ட தோண்ட வரும் சடலங்கள்மாண்டு போகும் வயநாட்டின் மக்கள்.என்று விடியும் அவலங்கள் நீங்கி,மீண்டும் வயனாடு வளம்பெற.

>>

ப.மதியழகன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்இயற்கையால் கைவிடப்பட்ட கடவுளின் தேசம்ஓர் இரவு விடியாமல் போனதுஅச்சுறுத்தும் பேய் மழை. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்கருணையற்ற கடவுளின் விளையாட்டு இதுஊழியின் கோரத்தாண்டவம் இந்த துயரம்இங்கே மலைகளுக்கு கால்முளைத்துவிட்டது. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்மானுட …

>>

சசிகலா விஸ்வநாதன் என்பா

அழகிய சிங்கரின் என்பா எண்ணம் போல் உண்ண வேண்டும். அதுவே ஒருவர்க்குபேரின்பம் தரும். எண்ணிய வண்ணம்உண்ணார்க்கு ஏதின்பம்? விருந்தும் அவர்க்குமருந்தே.

>>

சசிகலா விஸ்வநாதன்/திருத்தும் அன்பு

அழகிய சிங்கரின் என்பாவாக* என் பா இன்று👇🏽என் தவறை உணர்ந்தும் ஏற்றுக்கொள்வாய்; முழுமையாய்உணர்த்துவாய் அதை, எனக்கு. காரணங்கள் ஆராய்ந்துதிருத்தி செம்மையாக்குவாய்.; என்னை நீ நினைத்தால் ….

>>

சசிகலா விஸ்வநாதன் /வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
முன்வாசல் தாண்டி
முற்றத்து நீர்த்தொட்டிக்கு,
காக்கையும், குருவியும்; நாயும், பூனையும்.

>>

சாய்ரேணு சங்கர்/வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது

வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
வெளியிலும் உள்ளும் ஒரே வெப்பம்
பொய்கள் வஞ்சனை கள்ளம் வன்முறை
பொறுக்காத மனத்தின் துன்பம்!

>>

அழகியசிங்கர் என்பா கவிதைகள்

என்பா 1 மே தினமே வருக வருக உழைப்பை நம்பி வாழ்க்கை ஓடுகிறதுஎந்த உழைப்பும் இழிவானது இல்லைமே தினமே வருக என்பா 2 மே தினமே வருக வருகஉழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்உழைப்பாளி இல்லாவிட்டால் நம்கட்டுமானம்இல்லைமே தினமே வருக

>>

ஹரணி/இறைவன் அருள் புரிய வேண்டும்

இறைவன் அருள் புரிய வேண்டும்
பொய்யும் முரணும் பேதமும் பெருங்கேடும்
பண்பாய்க் கொண்டு குறுக்குவழிப் பேணிடும்
மாக்களைத் தவிர்த்து வாழ.

>>