ரவி அல்லது /புறப் பாசாங்குகள்

வெகு சீக்கிரமாகவிடிந்து விடுகிறதுஎப்பொழுதும்.வெகு சீக்கிரமாகவிடியவே மறுக்கிறதுஎப்பொழுதாவது.போர்த்திக்கொண்டபோர்வையின்பொருட்டாகவேஅமைகிறதுதூக்கமும்விழிப்பும்எப்பொழுதும்நேரத்தைநொந்த படி.மற்றபடிகொசுவைப்போன்றகொசுறுக் காரணங்களுக்கும்இருக்கத்தான்செய்கிறதுதன்னை நோக்கிஒரு பொழுதும்திரும்பிடாதபடிபாசாங்கில்பார்த்துக் கொள்வதற்கு.

>>

போர்ஹெஸ் கவிதை /தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி

ஈந்தவொரு இறப்புக்குமான துக்கம் நினைவிலிருந்தும் நம்பிக்கையிலிருந்தும்விடுதலையடைந்துவிட்டஎல்லைகளற்ற, அருவமான, ஏறத்தாழ எதிர்காலமானஇறந்த உடல் என்பது யாரோ ஒருவரல்ல; அது சாவு.மெய்யிலாளர்களின் கடவுள் எப்படி அவர்கள்அறுதியிட்டுக்கூறுவது போலக் குணங்களற்றவரோஅது போல இறந்த நபர் எங்குமுள்ள ஒருவருமிலர்,அது இழப்பும், உலகின் இன்மையும்தவிர வேறொன்றுமில்லை.அதிலிருந்து நாம் எல்லாவற்றையும் …

>>

மீ. விசுவநாதன்/”பராசக்தி வடிவம்தான் எல்லாம்”

பராசக்தி வடிவம்தான் பாரில் எல்லாம்பக்குவமாய் அதுபுரிய வடிவம் கண்டார்!நிராதரவாய் உணர்கின்ற உள்ளத் திற்குநிறைபலத்தைக் கொண்டுவர ஆன்ம சக்திவராததுபோல் வந்ததுதான் மூன்று சக்தி!மாகாளி, இலக்குமியும், வாணி என்றேமகாசக்தி தோற்றமுடன் கொலுவாய் நின்றுவரந்தரவே நவராத்ரி நாளில் வந்தார் ! படிப்படியாய் முன்னேறி வாழ்வில் ஒங்கபடியமைத்து …

>>

க.நா.சு. /புளிப்பு

நண்பர் கடிதம் எழுதியிருந்தார் “தங்களுடைய கதையைப் படித்தேன்; மாயவரத்துத் திராட்சையின் புளிப்பை நானும் அனுபவித்திருக்கிறேன்; அந்தத் திராட்சையிலுள்ள ஒரே இனிப்பு, தங்கள் வர்ணனையில்தான் இருக்கிறது.”எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. அந்த நண்பரிடம் எனக்கு ஏற்கெனவே நல்ல மதிப்பு உண்டு. சாதாரணமாகக் கதைகள் …

>>

ஸ்ரீதர்-சாமா/நொண்டி நாய்க்குட்டிக்கு பரிவு காட்டிய பகவான்

தனக்கிட்ட இட்லியை அது ஆஷ்ரம் வாயிலில் தான் அமர்ந்து சாப்பிட்டு மலமும் அங்கேயே கழிக்கும். கோபம் கொண்ட ஆஸ்ரம சர்வாதிகாரி கிருஷ்ணஸ்வாமி அதற்கு இட்லி தருவதைச் சில நாட்கள் தடை செய்தார் . பசித்த நாய்க்குட்டி பகவானை அண்டியது. பகவான் விஷயமறிந்து …

>>

கல்கி/ பித்தளை ஒட்டியாணம்

1 தங்கம்மாள் நடுநிசியில் திடுக்கென்று கண் விழித்துக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசையைப் போல் கேட்டது. படுத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள். ஸௌந்தரம் கதவைத் திறந்து கொண்டிருந்தான். வெளியே சென்று மெதுவாய்க் கதவைச் சாத்தினான்.மாடிப் படிகளில் அவன் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்டது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/கொலு

கொலு வைக்க ஆசைதான்.வேலை கொஞ்சம் மலைப்புதான்.காலை அலுவல் போகணும்.மாலை சுண்டல் செய்யணும்.இதொன்றும் பெரிய வேலையில்லை‌கூப்பிட்டவர் இல்லம் செல்லணும்.நாலு பேர் பார்க்க,நல்லதாய் நான் உடுத்தணும்.நாளை வீட்டு அலுவல்அலுவலக அலுவல்அத்தனையும் மனதில் ஓடசிந்தனைகளும் சவால்களும் முந்தி நிற்கமுறுவல் காட்டிஇன்முகத்துடன் பேசணும்வீடு வந்து சேரஅடுப்படி வேலைகள்கடுப்படிக்க …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 2. ஷி “பிள்ளைக்கு ஒரு கார். பெண்ணுக்கு ஒரு கார். தவிர, கல்யாணச் செலவுக்கென்று பத்து லட்சம் டாலரைத் தனியாக ஒதுக்கி வைத்துவிட்டார்களாம்” என்று பல் முப்பத்திரண்டும் தெரியக் கூறினாள் பெண்ணின் தாயார் விசாலம்மாள்.“பெண்ணுக்கு நகை நட்டெல்லாம் செய்து போடுகிறார்களாமா?” …

>>

அழகியசிங்கர்/கொலு

ஒவ்வொரு குடும்பமாய்நேரில் பார்த்துக்கூப்பிடுகிறாள்எங்கள் வீட்டில் கொலுஎன்று வாருங்கள் என்று யாரும் உடனே வருவதில்லை எல்லோருக்கும்சிந்தனைகள்தான்அதிகமாக இருக்கின்றன யாரும் கொலு பார்க்கஎங்கள் வீட்டிற்குவரவில்லை தூங்கப் போகும்போதுஇன்று யாரும் வரவில்லைஎன்று வருத்தப் படுகிறாள் நானும்வருத்தப் படுகிறேன்கவிதைப் புத்தகம் கேட்டுஎன்னிடம் யாரும்வருவதே இல்லை என்று

>>

ம.சக்திவேலாயுதம்/மரப்பாச்சி பொம்மைகளாய்

அம்மா வாங்கி வைத்தநளினமானகமகம சந்தன வாடை சுமந்தமரப்பாச்சி பொம்மையொன்றைநெஞ்சோடிருத்திஅம்மையை நினைக்கும்மகனொருத்தானநான் புரட்டாசி மாசத்தில்மனதில் அடுக்குகிறேன்கொலு ஒன்றை..ஐந்தே படிகளாக!ஒவ்வொரு படியிலும்ஒவ்வொரு படிப்பினைகள்…முதற்படியில்தெய்வீக இருப்பாய்தெளிந்தோடும் காட்சிகள்..இரண்டாம் படியில்தேரோட்டம் சப்பரமெனஇறை வீதி உலாக்கள்..மூன்றாம் படியில்மரங்கள் பூங்காக்களெனஅசையாத மனங்கள்..நான்காம் படியில்விலங்குகள் பறவைகளெனஆர்ப்பரிக்கா கூட்டங்கள்..ஐந்தாம் படியில்மரப்பாச்சி பொம்மைகளாய்நானும் அவளும்..இடையில் …

>>

விஞ்ஞானி/பிள்ளைகளின் கொலு

அம்மா பூ விற்கும்மரப்பலகை மேடையைஅடியில் போட்டனர் நல்ல துணி வைக்கும்ட்ரங்க் பெட்டி அடுத்தபடியானது சிறிய கல்லா மரப்பெட்டிமேல் தட்டாய் அமர்ந்துக்கொண்டது அப்பாவின் வேட்டியால்மூடி கொலுப்படியைதயார் செய்தனர். அம்மா வேலை செய்யும்வீடுகளிலிருந்து வாங்கிவந்த சிதிலமானமண்பொம்மைகளுக்குஅக்கா மருத்துவச்சிஆனாள். இலவசமாய் கிடைக்கும்களிமண் புல் செடிகள்இத்யாதியுடன் கவனமாய்கொலுவை …

>>

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/சென்னை கல்வெட்டுகள்

ஆசிரியர் கலைமகள்………………… நவராத்திரியை ஒட்டி நேற்று கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன அமைதி கிடைத்தது! பொதுவாக கல்வெட்டுக்கள் பற்றி எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. வீட்டுக்கு வந்ததும் சென்னை கல்வெட்டுகள் பற்றி ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். சென்னை கல்வெட்டுக்கள் …

>>

போர்ஹெஸ் கவிதைகள் / தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

வருட இறுதி இரண்டிற்குப் பதிலாக மூன்றுஎன்பதன் குறியீட்டு விபரமோஒரு பருவம் இறக்கும்போதுஇன்னொன்று உதயமாகிறதுஎன்ற கரடுமுரடான உருவகமோவானியல் செயல்பாடு ஒன்றின்நிறைவு என்பதோ அல்லாமல்இந்த இரவின் மேட்டுநிலம் என்பது நம்மைக்குழப்பி, குறைத்து மதிப்பிட்டுமணியின் சீர்படுத்த இயலாதபன்னிரெண்டு அடிகளுக்கு நம்மைக்காத்திருக்க வைத்திருக்கிறது.உண்மையான காரணம்காலமென்ற புதிரைப் பற்றியநமது …

>>

ஷண்முக சுப்பையா/தாலாட்டு

யாரும் அடிக்காமல்நீ ஏன் அழுகின்றாய்!நீ பிறக்காமலிருக்கநான் முயன்றேன்என்ற கறுப்பாலோ?காரணமில்லாமல்நீ ஏன் சிரிக்கின்றாய்?எனை ஏமாற்றிநீ பிறந்து விட்டாய்என்ற களிப்பாலோ!

>>

வே.கல்யாண்குமார்/கொலு பொம்மை!

வீட்டுக்கு வீடு சென்றேபாட்டுப் பாடுவோம்!வீதிக்கு வீதிசென்றேசுண்டல் வாங்குவோம்! கூட்டுக்குள் ஒன்றுகூடிபறவைகளாகுவோம்!நாட்டுக்கு நவராத்திரிகொண்டாடுவோம்! ஏட்டுக்கு அதிபதியைசரஸ்வதியை போற்றிஇயந்திர வடிவானஇலக்குமியை வணங்கி சக்தி சிவம் பெருமாளைசித்தி விநாயகரை..முத்துத் தமிழ் கடவுள்முருகனையே துதிப்பாம்! செட்டியார் பொம்மை..சிங்கப்பூரு பொம்மை..யானை பூனை குரங்குநாய்கள் பொம்மை பாரு! மேளக்காரர் நாதஸ்வரம்குடுகுடுப்பைக் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 1. வா அமெரிக்காவிலுள்ள மிஸஸ் ராக்ஃபெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், நியூயார்க் நகரில் உள்ள யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பணிபுரியும் மிஸஸ் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கலாசாலைத் தோழிகள். இணைபிரியா சிநேகிதிகள். கீழே தடுக்கி விழுவதாயிருந்தால் கூட, இருவரும் சேர்ந்தாற் போல் …

>>

மா. காளிதாஸ்/பழைய கோயில் யானை

1. கோயில் சங்கிலியின் கட்டறுத்துஓடிய யானைவனத்தின் நுழைவாயிலில் நின்றுதிரும்பிப் பார்த்தது.ஒரு கவள உருண்டையைப் போலநகரத்தின் வாயில்நுழைந்து கொண்டிருந்தது வனம். 2. கழுத்துமணி ஒலிக்கமீள வனம் புகுந்த கோயில் யானைஆற்றில் இறங்கி அலசியது மேனியை.மூக்கைத் துளைத்த சூட வாசனைதாங்க மாட்டாமல்ஓலமிட்டுக் கரைந்தன காட்டு …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!

திருப்பூர் குமரன் பிறந்த தினம்: ஜனவரி 4 *மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஓர் ஆச்சரியம்.தேதியும் ஆண்டும் வேறு வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம் பிறந்தார். (அக்டோபர் 4, 1904.) …

>>

எஸ் வி வேணுகோபாலன்/கழித்துக் கட்டுதல்

வெகு நேரம்பேசியும்பேரம் படியாமல்இரண்டாவது நபரும்அகன்று போனபின்எங்கிருந்தோ வந்தமூன்றாமவர்பேச விடாதுவேகப் படுத்திஅவர்சொன்ன பேரத்திற்குப் படிய வைத்துஆட்களைக்கொண்டு வந்துஇறக்கி விட்டார்அதைவிட வேகமாக அடுத்த வீடுபின் வீடுஅக்கம் பக்கம்போய்ச் சொல்லி வந்தாயிற்று அதற்குள்ஓசை கேட்கத் தொடங்கி விட்டதுரம்பம் வைத்து அறுக்கும் ஓசைகயிற்றைக் கட்டிஇழுக்கும் ஓசைகனத்த கிளைகளில்சிணுங்கிக் …

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/சுதந்திரப் பெண்டிர்

காலேஜக் கன்னியைக்கைப்பிடித்துக்கால்பிடித்துஇடையிலும் பிடித்துவிட்டேன்.பிறகுகைவிட்டேன்,அல்லாதுஇருபத்துநான்கு மணி நேரமும்பிடித்துக்கொண்டே இருக்கஎவரால் இயலும்?எனவேகைவிட்டேன்.மேலும்இன்றைய பெண்டிர்சுதந்திரம் வேண்டுவோர்.எனவேகொஞ்சநேரம் பிடித்துவிட்டுப் பின்விட்டு விடுவதேநல்லது.

>>

ரவி அல்லது/ஆகர்ச மிளிர்வு

கோவித்துக்கொண்டு போனஎதுவும் வரவே இல்லை.வருகின்ற எதுவும்இணக்கமாக இல்லை.இப்படியானஊசலாட்டத்தில்வார்த்தையற்றுஓய்ந்து போனஆயாசதருணத்தைமௌனமெனமட்டும்சொல்லிவிட முடியாது.*-ரவி அல்லது.

>>

மீ. விசுவநாதன்/”கொலுபாக்க வாங்கோ”

கொலுபாக்க வாங்கோ – எங்ககொலுபாக்க வாங்கோ கருவண்ண மேக ராமன்தருமத்தைக் காக்க வேண்டிபருவத்தில் காடு போன …. (கொலுபாக்க வாங்கோ) தாய்தந்தை வார்த்தை ஏற்றுவாய்வார்த்தை கோபம் இன்றிபோய்வந்த கதையைச் சொல்லும் ..(கொலுபாக்க வாங்கோ) நம்பிவந்த உயிரை எல்லாம்தம்பியாக ஏற்றுக் கொண்டஎம்பிரானின் பண்பைக் …

>>

ரவை கோதுமை ஊத்தாப்பம் செய்வது எப்படி /திண்டுக்கல்சமையல்

தேவையான பொருள்கள் கோதுமை மாவு – ஒரு கப் ரவை – ஒரு கப் உப்பு – அரை தேக்கரண்டி பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 2 செய்முறை தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும் வெங்காயம் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை(13.09.2024) அன்று சிறப்பாக நடந்தது.அதன் காணொளியைக் கண்டு ரசிக்கவும். நிகழ்ச்சி எண் – 97 கொனஷ்டை கதைகள் துப்பறிவு – எஸ்.ஆர.சி இல்வாழ்க்கை – பென்னேஸ்வரன்அதிகப்பிரசங்கி – பானுமதிகல்யாணப் பேச்சு – முபீன்வசீகரணம் – …

>>

செ.புனிதஜோதி/இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்

இந்த உலகம் பூங்காவனமாய்இருந்தபோதுநம் உடலும் பூ போல் இருந்திருக்குமா ?அம்மா என்கின்றான்வயிற்றில் புற்று ஏற்பட்ட பையன் . அவளுக்கு என்ன சொல்வதென்றேதெரியவில்லை ?கருப்பையில்பொத்தி வளர்த்த அத்தனை ஈரத்தோடுஇறுக்கி அணைத்துக் கொள்கிறாள். கணமேறி அவன் உடல்இப்போது கொஞ்சம்பூப்போல் மாறியிருக்கும்.

>>

வே.கல்யாண்குமார்/கொடிகாத்தக் குமரன்!

அடி..அடி..அடி… என்று அடிக் கொடுத்த போதும்பிடி..பிடி..பிடி.. என்றுகொடியைப் பிடித்த குமரன்! தடி..தடி..தடி.. அங்கேதலைவில் அடித்தப் போதும்..தலைக் கொடுத்து விடுதலைக்கு தனைக் கொடுத்தக் குமரன்! புடி..புடி..புடி..என்று விரட்டி வந்தபோதும்..கொடிப் பிடித்தே.. உயிர் கொடுத்த விடுதலையின் வீரன்! ஒடி..ஒடி..ஒடி..என்றுகையை ஒடித்தப் போதும்.. விடாமலே கொடியைப் …

>>

வானவில் கே.ரவி/கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்

பொம்மை பொம்மையாக வந்து புன்னகைப்பாளேதன்னையே விதவிதமாய்அடுக்கி வைப்பாளே – எங்கும்அவளிருப்பாளே நன்மை தீமை போர்நடத்திவெற்றி கொள்வாளேஉண்மை என்ற சுடராகஒளிதருவாளே – கொஞ்சம்ஒளிந்து கொள்வாளே கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்பட்டாம்பூச்சி போலத்தான்சிறகடிப்பாள் சிணுங்கிடுவாள்பாவாடைச் சட்டையுடன்ரெட்டைஜடைப் பின்னலுடன்பக்கத்து வீட்டுப் பெண்ணாகவந்தழைத்திடுவாள் – சுண்டல்தந்தனுப்பிடுவாள்கோலாகலமாக அவள்கொலுவிருப்பாளே …

>>

ம.சக்திவேலாயுதம்/இந்த கண்ணாடி உலகினில்

ஆக்கலைஅளித்தலைஅம்மா பார்த்துக்கொள்கிறார்..காத்தலைவகுத்தலைஅப்பா பார்த்துக்கொள்கிறார்..மறைத்தலைஅருளலைஅவள் பார்த்துக் கொள்கிறாள்..இருத்தலைஇல்லாமல்நான் பார்த்துக்கொள்கிறேன்..இந்த கண்ணாடி உலகினில்பிரதிபலிக்கும்பிரதிபலிக்காதஎல்லாவற்றையும்நாங்கள் நால்வரும்பார்த்துக் கொள்கிறோம்..ஏனோ எங்களைத் தவிர!

>>

சங்கரன்/இது சின்னக் கொலு!

இது சின்னக் கொலு!சிங்காரக் கொலு!குட்டி வைத்தகுதூகலக் கொலு! பிள்ளையார் சிவன்பெருமாள் புகழ்பாடும் ப்ரமாதக் கொலு! அலங்கார விளக்கோடுஅற்புதக் கொலு! சிங்கம் ரியாவின்சிங்காரக் கொலு! ஒன்பது இரவோடுஒளிரட்டும் வாழ்வே!

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/இலங்கையை வென்ற மணிவாசகர்

மாணிக்க வாசகர் இலங்கை சென்று வந்ததைப் பற்றி சிவன் சார் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். தில்லை தீக்ஷிதர்களை மாந்தரீகம் மூலம் வெல்ல பௌத்த மதத்தினர் திட்டமிட்டனர்.தீக்ஷிதர்களை வென்றால் தென்னாடு முழுவதுமாக புத்த நாடாகிவிடும் என்று கணக்கிட்டனர். இலங்கையிலிருந்து பௌத்தர்கள் தீட்சிதர்களுக்கு சவால் …

>>

நன்றி – எஸ்தர் ராணி

ஹோட்டல் உரிமையாளர்மதிய உணவு பரிமாறுவதற்காக குனிந்த போதுஅந்த பெரியவர் கேட்டார்….. மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்…… உரிமையாளர் சொன்னார்…மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்…. கிழிந்த சட்டை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி …

>>

நாகேந்திர பாரதி/நம்பிக்கை

வண்ணப் பூக்கள் எல்லாம்வாசம் வீசுவ தில்லை வாசம் வீசும் பூவிலும்விஷத்தின் தன்மை உண்டு புறத்தில் சிரிப்பவர் எல்லாம்அகத்தில் மகிழ்பவர் அல்லர் ஆராய்ந்து நம்பிக்கை வைத்தால்அடிகள் சறுக்குவ தில்லை நம்பிக் கெட்டவரும் உண்டுநம்பாமல் கெட்டவரும் உண்டு –

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

முன்னுரை இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன் நானும் நண்பர்கள் சிலரும் திருவையாற்றில் நடைபெற்ற தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். காவிரிப் படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்து கொண்டிருந்தபோது, நாலைந்து வெள்ளைக்காரர்கள் தண்ணீரில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.தென்னையும், வாழையும் மண்டிய காவிரிக் …

>>

அழகியசிங்கர்/எங்கள் வீட்டுக் கொலு

நான்விரும்பும் ஜே.கிருஷ்ணமூர்த்திரமணர்அரவிந்தர்காந்தி பொம்மைகள்எதுவுமே இல்லை பிள்ளையார்பத்து இடத்தில் இருக்கிறார்மரப்பாச்சி பொம்மைகள்செட்டியார் பொம்மைகள்இருக்கின்றன

>>

தங்கேஸ்/சொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லை

விளையாட்டுப் போலஒடுகிறது பொழுதுசோழிகளை உருட்டுபவன்யார் என்றே தெரியவில்லை நிலவின் மீதுதவளை குதிக்கதவளையைப் பிடித்துநீர்பாம்பு விழுங்கஇரண்டையும் கபளீகரம்செய்கிறது இரவு தொடரும் விளையாட்டைவேடிக்கை பார்க்கும் குளத்திற்குசொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லைஒரு அலகிலா விளையாட்டின்சாட்சி என்பதை தவிர

>>

லக்ஷ்மி ரமணன்/ சிகரம்

வாழ்நாள்சாதனையாளர் விருது பெறவிருந்தபிரபல மூத்தநடிகர் உதயசந்திரனை பேட்டிகாண அடையாரில் இருந்த அவர் வீட்டுக்குப்போன அருண் தோட்டத்தில் தனயாகசெடிகளுக்குநீரூற்றியவண்ணம் நின்றஉதயசந்திரனைக்கண்டு திகைத்தான்.முன்பெல்லாம் இவர்வீட்டில் ரசிகர்களின்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.பிரபல இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள்,நடிகர்கள்,என்று யாராவது வந்தவண்ணம்இருப்பார்கள். கைப்பேசி அடித்து அழைத்தவண்ணமிருக்கும்.சோப்பு, வேட்டி,நெய்,பேஸ்ட் என்று எல்லா விளம்பரங்களிலும் …

>>

சட்னி செய்ய சூப்பரான டிப்ஸ் /திண்டுக்கல்சமையல்

இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னி அரைக்கும் போது பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக …

>>

மீ. விசுவநாதன்/”புதுப்புது பொம்மைகள் பாருங்க”

புதுப்புது பொம்மைகள் பாருங்க – இதில்பொலியும் கலைநயம் ரசியுங்கஅதுக்கது துனையினைக் காணுங்க – முகம்அன்பில் சிரிப்பதை உணருங்க மைனா குருவியும் கிளி,அணிலும் – கருமைபோல் காக்கையும் இருக்குங்கசைனா பொம்மையே வேண்டாங்க – நம்மசெந்தூர் முருகன வாங்குங்க உயர்ந்த தியாகியின் உருவமுங்க – …

>>

தி.ஜ.ர/மளிகை நிபுணர்

கருங்கோணத்திலேயே, முனா பனா நாவன்னா என்ற விலாசம் மகா பிரபலமானது. முனா பன நாவன்னாவில் ஒரு மாசம் வேலை பார்த்தவன் என்றால், எப்பேர்ப்பட்ட கோடீசுவர சௌராஷ்டிர முதலாளியானாலும் சரி, செட்டியார் முதலாளியானாலும் சரி, பரம சந்தோஷமாக வேலைக்கு அமர்த்திக்கொள்வார்கள்.முனா பனா நாவன்னா …

>>

மோகன் ஜி/பவான்யாஷ்டகம்

.இந்த வருடத்திற்கான நவராத்திரி கோலாஹலம் தொடங்கிவிட்டது. வருகின்ற ஒன்பது நாட்களிலும், தனது பல்வேறு ரூபங்களில் சர்வ மங்களங்களையும் அருள்வதற்காகவே ஆதிபராசக்தி வருகைதரும் பொன்னான தருணம் இது. அம்பிகையைப் போற்றி ஆதிசங்கர பகவத்பாதர் துதிசெய்த சிரேஷ்டமான பவானி அஷ்டகத்தை இப்புனிதமான நாட்களில் சிந்திக்க …

>>

வி.வி. கலைச்செல்வி /சொற்கள் விற்பனைக்கு

அவனிடம் நூறு வாழ்த்துச் சொற்கள் இருந்தனஎனக்கு ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும் இருந்ததுஎல்லா வாழ்த்துச் சொற்களும் இங்கிதம் தெரிந்தவைஇடத்திற்கு தகுந்தது போல் தன்னை உருமாற்றிக் கொள்பவை.எல்லோர் மனதையும் குளிரவைப்பவை .இத்தனை வாழ்த்துச் சொற்களை வைத்துக் கொண்டு நீ என்ன செய்வாய் என்றேன்.தட்டேந்தும் போது விழுகிற …

>>

காயத்ரி ஆர்/செப்டம்பர் 30

சின்னப் பூனை ஒன்று எங்கோ கத்தும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கண்விழித்தேன். மணியைப் பார்த்தால் 5.45. கண் எரிந்தது. இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலாம்போல் இருந்தது. மாமரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூவிக்கொண்டிருந்தாலும், பூனையின் குரல் தனித்துக் கேட்டது. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு …

>>

தி.ஜ.ர/வெள்ளிக் கரண்டி

அன்று ஒரே ஒரு நாள் வீடு என்ன அவந்தரையாகிவிட்டது! எங்கே பார்த்தாலும் வீட்டிலே அவள் இல்லை. குப்பை. சாமான்களெல்லாம் தாறுமாறாகக் கிடக்கின் றன. என்ன போச்சோ? என்ன இருக்கிறதோ ?-இத் தனையும் பங்கஜத்தம்மாளின் எண்ணம். அத்தனை எண்ணமும் பலவிதக் கூச்சலாக குட்டிகளெல்லாம் …

>>

தி.ஜ.ர/காக்கை ராஜ்யம்

என்ன விநோதமான கனவு!சாரநாதனுக்கு மூடநம்பிக்கை எதுவும் கிடையாது. நிச்சயமான ருசு இல்லாத எதையும் அவன் நம்பமாட் டான். ஆனால், நுட்பமான விஷயம் எதற்குத்தான் நிச்சயமான ருசு அகப்படுகிறது? விஞ்ஞானிகள் கூட ஓர் எல்லைக்கு அப்பால் தர்க்க சாஸ்திரத்தை அந்தரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். யுக்திக்கும் …

>>

ப.மதியழகன்/காந்தியம்

எங்கே போகிறதுஎன் தேசம்காந்தியின் கொள்கைகள்காலாவதியாகிவிட்டனவருடத்துக்கு ஒருமுறைமட்டுமே அவரது பெயர்ஊடகங்களில் அடிபடுகிறதுஅப்படி ஒரு தலைவன்இருந்தான் என்பதேதெரியாமல் போய்விடுமோஅடுத்த தலைமுறையினருக்குஇன்றைய வன்முறை மிகுந்தஉலகத்தில்அகிம்சையின் மேல்நம்பிக்கை வைப்பதுகேலிக்குரியதாகிவிட்டதுபிரிட்டிஷார் அவரைஒரு போராளியாகப் பார்த்தனர்வேற்று மதத்தினர் அவரைஒரு இந்துவாகப் பாரத்தனர்வேற்று நாட்டினர் அவரைஒரு இந்தியனாகப் பார்த்தனர்உயிர் பிரியும் வரையாரும் …

>>

அழகியசிங்கர்/காந்தி

கற்பனைக்கூட செய்யமுடியவில்லை/இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று எங்கள் வீட்டுக்கொலுவில்எங்கள் காந்தி இருக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் இருந்தால்தினமும் ஒரு நிமிடம்உன்னை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுவேன்

>>

கல்கி/தந்தையும் மகனும்

1 தேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர் எலியா அல்லது புலியா என்பதைப் பற்றிச் சரித்திரக்காரர்களிடையே அபிப்பிராய பேதம் உண்டு. ‘புலி நகம் படைத்த ஓர் எலி’ என்பதாகவும் சிலர் சமரசமான தீர்ப்புக் கூறியிருக்கின்றனர். …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

நீலாவா சங்கரனை வேண்டாம் என்கிறாள்? இந்திர பதவியை வேண்டாம் என்றானாம் ஒருவன்! அதைப்போல அல்லவா இருக்கிறது இந்த விஷயம்? அழகும், படிப்பும், குணமும் நிரம்பிய சங்கரனை மணந்த பாக்கியசாலி அவள் என்று அல்லவா நீலாவைக் காமு நினைத்திருந்தாள்? அந்த பாக்கியம் தனக்குக் …

>>

தி.ஜ.ர/வாசலில் சிங்கம்

சுந்தரம் ஒரு மேதை. மேதைகளெல்லாம் விசித்திர மாகத்தான் நடப்பார்கள். சுந்தரமும் அப்படியே நடந்து கொண்டான்.இவனுடைய கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் இப்படி ஒரு மேதை தங்கள் குலத்தில் தோன்றப் போகிறான் என்று எப்படித்தான் அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை; ஒவ்வொரு …

>>

“தன்னை வென்ற குருநாதர்”/மீ. விசுவநாதன்

அந்தி பகலாய் ஊர்சுற்றிஅடைந்த பலன்கள் ஒன்றில்லைபந்தி விரிந்த இடமெல்லாம்பசிக்கு ஏற்ற உணவில்லைசந்தி சிரிக்க வாழ்ந்தோனைசரியாய்க் கண்டு அழைத்தீரேசந்தி ரசேக ரபாரதியேசரணம் சரணம் சரணமய்யா ! தன்னை வென்ற குருநாதாதவத்தோன் சந்ர சேகரரே !என்னுள் கோடி எண்ணங்கள்என்னை வதைத்து வாட்டுகையில்உன்னை எண்ணி ஓர்நிமிடம்உள்ளே …

>>

ஞானக்கூத்தன்/காந்தீ மஹ்ஹான்

எழுந்ததும் கனைத்தார்; மெல்லசொற்பொழிவாற்றலானார்-வழுக்கையைச் சொறிந்தவாறு‘வாழ்கநீ எம்மான்’ என்றார்;மேசையின் விரிப்பைச் சுண்டி‘வையத்து நாட்டில்’ என்றார்வேட்டியை இறுக்கிக் கொண்டுüவிடுதலை தவறிý என்றார்பெண்களை நோட்டம் விட்டு‘பாழ்பட்டு நின்ற’ என்றார்புறப்பட்டு நான் போகச்சே‘பாரத தேசம்’ என்றார்;‘வாழ்விக்க வந்த’ என்னும்எஞ்சிய பாட்டை தூக்கிஜன்னலின் வழியாய்ப் போட்டார்தெருவிலே பொறுக்கிக் கொள்ள, …

>>

தி.சோ.வேணுகோபாலன்/யோக ஏக்கம்

பால்பகுத்துக் காட்டும்வெளிவேற்றுமையில்நின்றுநினைவுகண்வாயால் மேய – ”உள்ளே வாருங்களேன்”விகற்பமற்ற குரல் – என்னை ஒருகணத்தில்அ-பாலனாக்கியநெருப்புப் பொறிச்சுடர்நிரந்தரமாய்என்னுள்…? ‘ஞானரதம்’ நவம்பர் 1973

>>

ஷண்முக சுப்பையா/ஒரு பிரார்த்தனை

அப்பா! சிவனே!எனை ஆண்டவனே!அடுத்த பிறவியில் நான்பெண்ணாய் பிறந்திட வேண்டும்என் மனைவியும் அதுபோல்ஆணாய் பிறந்திட வேண்டும்அவ்வாறு பிறந்த அவளுக்கு நான்எவ்வாறெனினும்வாழ்க்கைப்பட்டிட வேண்டும்.பட்டு நான் அவள் உயிரைஎடுக்காமல் எடுத்திடவும் வேண்டும்.

>>

தொகுப்பாளர் : அழகியசிங்கர்/வினோத செய்தி – 5

எரியூட்டப்பட்ட உடல்களில் இருந்து ₹ 377 கோடி சம்பாதிக்கிறது ஜப்பன் டோக்கியோ, அக். 1- ஜப்பானில் எரியூட் டப்படும் உடல்களில் இருந்து கிடைக்கும் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்கள் வாயிலாக, கடந்தாண்டில் மட்டும் 377 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆசிய …

>>

பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)வை. மு. கோதைநாயகி அம்மாள்

4-வது அதிகாரம்பிறைமதி – நிறைமதி பரிமளவல்லியின் புகழ் வளர்பிறை மதியம் போலப் பிரகாசிக்கத் தொடங்கியது. பரிமளாவும் கேசவனும்- சிறுமியும் சிறுவனும் – நடிக்கும் திறனும், பாடலின் எழிலும் பொது மக்களின் மனத்தை முக்கியமாகக் கவர்ந்தன. அதோடு அந்த நாடகத்தின் பணம் முற்றும் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

அன்று மாசி நோன்பு. ‘ஒருக்காலும் கணவனை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகப் பெண்கள் அன்னை கௌரியை வணங்கிப் பூசிக்கும் தினம். அதிகாலையில் எழுந்து சம்பகம் நோன்புக்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள். பலபலவென்று பொழுது விடியும் வேளையில் வீட்டில் இருப்பவர்கள் பூஜை …

>>

ம.பொ. சிவஞானம்/”இலக்கியத்தின் எதிரிகள்”

சென்னையில் கூடிய சிலப்பதிகார மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. தலைமை வகித்த டாக்டர்.மு.வ. கூறியது போன்று, தமிழ் மொழியின் வரலாற்றிலேயே சிலப்பதிகாரத்தின் பெயரால் மாநாடு கூடியது இதுதான் முதல் தடவை. என்றாலும், முடிவானது அன்று. இனி, மாவட்டங்கள் தோறும், …

>>

திரு.வி.க/பெண்ணின்‌ முதன்மை

(பெண்ணும் பெண்மையும் – பெண்மை இன்ப நிலை – பெண், இன்பத்தின் பருமை – பெண், இன்பம் அழகுக் கடவுள் – கவிவாணரும் பெண்ணும் – பெண்பிறவி நோக்கம் – தாய்மையும் தொண்டும் – வாழ்க்கைப் பெண் – பெண்ணின் தியாகம் …

>>

கல்கி/சின்னத்தம்பியும் திருடர்களும்

ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன். ஒருநாள் அவன் பணம் சம்பாதித்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டான்.அவன் கிளம்பிய போது அவன் தாயார் அவனிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்துப் பின் வருமாறு சொன்னாள்:- “குழந்தாய்! உன்னுடைய …

>>

ஆடம் ஜகாஜெவ்ஸ்கி/கடைசி நிறுத்தம்

தமிழில் : க.மோகனரங்கன் டிராம் வண்டியானதுசெந்நிற வீடுகளை உறுமலுடன் கடந்து சென்றது.கண்காட்சி மைதானங்களில் சுற்றும் இராட்டினம் போலசுரங்க கோபுரங்களில் சக்கரங்கள்சுழன்றன.புகைக் கரியால் மங்கிய ரோஜாக்கள் தோட்டங்களில் வளர்ந்திருந்தன,இனிப்புக் கடைகளில் சிந்திக்கிடக்கும் கேக் துணுக்குகளின் மீதுகுளவிகள் ரீங்காரத்துடன் பறந்தன.எனக்கு பதினைந்து வயது,வீட்டுக் கட்டுமானப் …

>>

மோகன் ஜி/உலக முதியோர் தின வாழ்த்துகள்

மூப்பின் ராப் கிழவி:தடியெதுக்கு? ஏய் கிழவா !துள்ளிக் குதித்தாடு!தாடையிலே கையெதுக்கு?தாவி விளையாடு! நாட்படவே மரம் வளரும்.காலமேறக் கல் இறுகும்.வயதானால் மனிதன் மட்டும்,மூப்பென்று முடங்குவதேன் கிழவா?முனைந்திடா தடங்குவதேன் கிழவா? கிழவன்: ஆடியாச்சு ஆட்டமெல்லாம்.ஆயிரமாய்ப் பார்த்தாச்சு!ஆடுவதெலாம் அடங்குமடி கிழவி!ஆடுசதை ஓய்ந்துபோச்சு கிழவி! துள்ளவொரு காலமடி! …

>>

அழகியசிங்கர்/சில துளிகள்…….2

ஒரு வழியாக 100வது இதழ் விருட்சம் அடுத்த வாரம் வந்துவிடும். அதன்பின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள். எப்படி இந்தக் கூட்டத்தை நடத்தலாமென்று யோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.*அக்டோபர் மாத ஆனந்தவிகடன் தடம் இதழில் நான் எழுதிய ‘நானும் …

>>

ஷண்முக சுப்பையா/மண்ணாங்கட்டி

என்னைக் கண்டால்அவள் பனிக்கட்டிஅவனைக் கண்டால்அவள் தங்கக் கட்டிஅவன் பெரும்பணப்பெட்டிநான் வெறும்தோற் பெட்டிஎல்லாம் ஒரேமண்ணாங்கட்டி

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை(27.09.2024) அன்று6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது.அதன் காணொளியை கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 98 திலீப் குமார் கதைகள் கடிதம் – டாக்டர் பாஸ்கரன்கண்ணாடி – கே.வைதேகிமூங்கில் குருத்து – பேராசிரியர் …

>>