கவிதை
பலூன் காத்தாடி காதல்
வேண்டாம் வேண்டாம் என்று
பெற்றோர் மறுத்துத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாலும்
தொடுவானம்
எனக்கு மேலே இருக்கும்
வானத்தை
கிளிகள் கூட்டம் கடந்து சென்றது
கவிதை எழுதுபவரா?
உங்களிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன்
நீங்கள் கவிதை எழுதுபவரா?
அன்பின் வதைகள்
பானுமதி.ந ஒற்றைக் கண்ணை விரித்துக் கொண்டு தட தடத்துப் போன அந்த வண்டியில் பிரியும் முன் கூட உன் பார்வை படாதா எனத் தவித்தது நீ ஏசிய அந்த முரட்டு மனம் முன்னர் என்னிடம் பேசும் போது உன் வார்த்தை அமிலங்களால் …
>>
வனம் தொலைத்த சீதை
மனத்தூரிகை
(தொடர்ந்து படிக்கலாம்)
குறள் என்பா
நாட்குறிப்பு எழுத உட்கார்ந்த பொழுது
டைரியைத் தேடியும் கிடைக்கவில்லை
அவரவர் பாடு
எஸ்ஸார்சி தெரு நாயெல்லாம்அசைவப்பிரியர்கள் வீட்டைச்சுற்றியபடிவாலைக்குழைப்பதும் சலாம் போடுவதும்அவர்கட்குத்தான்நாயுக்குச் சோறு போட்டுநன்றியுள்ளது நாயென்றுநவிலத்தான் விருப்பமெனக்குபோடும் சோற்றைத்தொட்டால்தானே அதுஎதனைத்தான் போட்டாலும்முகர்ந்து முகர்ந்துநகர்ந்தே போகிறது. அது.நாயின் கண்கள்பேசுவது கேட்டேன்’சோம்புமில்லை பட்டையுமில்லைஇன்னும் இதைத்தான் தின்கிறாய் நீ—–
>>
இழுத்து வருகிறாள்
செபுனிதஜோதி அலுத்துப் போகாமல்பண்டிகைகளைஇழுத்து வருகின்றனர்…பாரம்பரியத்தின்அச்சாணியாய் பெண்கள்.
>>
என்பா48, 49
அழகியசிங்கர் என்பா 48 இன்று சரஸ்வதிபூஜையென்று தெரியும்விரட்டுகிறாள் மனைவிசந்தனம் குங்குமம்எடுத்துக் கொண்டுகிளம்பினேன். வரிசையாய்நின்ற வண்டிகள் சிரித்தன என்பா 49 சிலர் சந்திப்பதாகக்கூறினார்கள். எப்போதுஎந்த இடத்தில் என்று கூறவில்லைஏன் சந்திக்க வேண்டும்என்றகேள்வியைக் கேட்கிறேன் இப்போது
>>
நாளெலாம் எனைப் பிரியாது இருக்க வேண்டும் கலைமகள் துதி- தொடர்ச்சி
Inbox பானுமதி ந நாளெலாம் எனைப் பிரியாது இருக்க வேண்டும் கலைமகள் துதி- தொடர்ச்சி மண்ணிலே பிறப்பெடுத்தும் மறை வேதவன் நாயகி நினைக் கண்ணென நினைக்கும் கருத்தழிந்தேன் இன்று எண்ணியே வருந்துகிறேன் என்னிலே உனை ஏற்றுவதை உன்னியே உணரச் செய்தாய் உத்தமியே! …
>>
தகனமேடைத் தொழிலாளி
நவஜீவன் தகனமேடைத் தொழிலாளி இறந்து போனான்; ஆயிரம் தாய்தந்தையர்க்குக் கொள்ளிவைத்த பிள்ளை; அவன் வாரிசுக்குச் சொத்தாய்க் கிடைத்தது பிணம் எரிக்கும் வேலை. *** ஆழ்கடலில் முத்துக் குளித்தவன் மூழ்கி மரித்தான் மதுக்குப்பியில். …
>>
வேப்பமர நிழல்
சுரேஷ் ராஜகோபால் என்வீட்டு வேப்பமர நிழலில்நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்நன்றாகக் காற்று வீசவேசுகமாக இருந்தேன்நேர்மேலே தண்ணீர் தொட்டிமோட்டர் போட்டு நீர் நிரம்பக்காத்திருந்தேன்; நிரம்பியதால்நீர் வெளியே கொட்டமரமும் லேசா நனைந்துஎன்மீதும் தெளித்ததுமரத்தின் மீதிருந்தகாக்கை வெகு வேகமாய்சிறகடித்து எங்கோ பறந்தது.
>>
அம்மானைப் பாடல்கள்
எழிலன் இணையம் தனிலமர்ந்தால்இவ்வுலகச் செய்திஅனைத்தும் எளிதாய்அறிந்திடலாம் அம்மானை;அனைத்தும் எளிதாய்அறிந்திடலாம் ஆமாகில்மனத்தில்நம் பெற்றோர்மருளுவதேன் அம்மானை?இணையத்தில் எல்லாம் இருப்பதனால் அம்மானை. முடிமீதில் மாதைமுடிந்தவரைக் கல்லதனால்அடித்தாரச் சாக்கியனார்அன்றொருநாள் அம்மானைஅடித்தாரச் சாக்கியனார்அன்றொருநாள் அப்போதில்தடுக்காமல் தானேற்றதத்துவமென் அம்மானைஅடித்தாரை அடியாராய் ஆக்கிடவே அம்மானை மாடதன்மேல் எறும்மதுராபுரிச் சொக்கர்ஆடுகின்றார் நாள்தோறும்அம்பலத்தே அம்மானைஆடுகின்றார் …
>>
என்பா – 66:
கு. மா. பா. திருநாவுக்கரசு பருந்தின் பார்வையில் சிக்கிய மலையணில்;விருந்தை நோக்கி விரைந்தது நொடியினில்!சிக்குமா? தப்புமா? இனப்பசி உலகினில்,திக்கின் தேடலில் வாழ்வு!
>>
நாளெலாம் எனைப் பிரியாதிருக்க வேண்டும்
கலைமகளைத் துதி செய்து எழுதிய நீண்ட பாடல் . எனவே இரு பகுதிகளாகப் பகிர்கிறேன். பானுமதி ந விநாயகர் காப்பு முக்கனிக் கைக் கொண்டு மும்மலம் அறுத்தொழித்து முப்புரி நூலணிந்து முத்தானி மண்டபத்தில் முருகனின் மூத்தோனாய் முதல்வனாய் அமர்ந்தோனே! மாலின் மருகனே! …
>>
முத்தச் செய்திகள்
கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ் வே மாலி கென்னடி விமான நிலையம்இன்னுமோர் சிறப்பு பெற்றது;மூன்றழ கியபெண் களுக்குநன்றிசொல் லவேண்டும், மாலி பெற்றோர் வரும்வரைக் காத்துநிற்கும் பொழுதை இலவசத்தோற்றம் தருவதில் போக்கச்சற்றும் சகியா அழகியர் வெற்றிகொ டுக்கும்அற்புத மானவிற்பனைத் திட்டம்கற்பனை …
>>கடிகாரத்தில் மணி பார்த்து…….
எல்.ரகோத்தமன் பேருந்தைப் பிடிக்கஓடோடிச் சென்றேன்!புத்திசாலி பேருந்துஎன்னை உதாசினப் படுத்திவிட்டுஓடிவிட்டது! நான் ஏன் பேருந்தை தவறவிட்டேன்! கை புண்ணுக்கு மருந்து கண்ணாடியில்!உடைந்தது கண்ணாடி!சில்களில் தெரிந்தன முகங்கள்! கோரமோ அகோரமோமுகங்களெல்லாம்ஒவ்வொன்றாய்கழன்று விழுந்தனதிரை மறைவில் ! ஆனால்என் கை கடிகாரம்இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது! அதில் மணி பார்த்துநொடிகளை …
>>
இனிக்கும் தமிழ் – 5
டி வி ராதாகிருஷ்ணன் இப்பாடல் சுந்தர கவிராயர் என்பவரின் தனிப்பாடல் மரம் அது மரத்தில் ஏறி, மரம் அதைத் தோளில் வைத்து,மரம் அது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்திமரம் அது வழியே சென்று, வளமனைக்கு ஏகும்போதுமரம் அது கண்ட மாதர் மரமுடன் …
>>
ரயில்
புஷ்பால ஜெயக்குமார் நகரத்தின் நடுவே ஓடுகின்ற ரயில்களின் நிலையத்தில் நாகரீகம் உச்சம் தொட்டிருந்த மனிதர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் தனிமையில் பயணம் செய்தார்கள் புழக்கத்திலிருந்த புராதன சின்னமாகிய ரயில் நிலையங்கள் யாரும் மறந்து விடாதபடி இன்னும் இக்காலத்திலும் இருந்தது மனிதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள் அவர்கள் …
>>
நவராத்திரி
ஆர் வத்ஸலா எனக்கு துர்க்கையாக வேண்டாம்லக்ஷ்மி சரஸ்வதியாகவும் எனது அடையாளத்தைஎன் நெற்றி மையத்திலுள்ள பொட்டின் நிறத்திலும்கழுத்தில் தொங்கும்/ தொங்கா ஏதோ ஒன்றிலும்எனக்குத் தரும்வெற்றிலை பாக்கு பையில் வைக்கா பொருட்களிலும் அடைக்காமலிருங்கள்அது போதும்மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கு கொலுபார்க்கப் பிடிக்கும்அதில் அமர …
>>
என்பா – 64, 65
என்பா – 64: கு. மா. பா. திருநாவுக்கரசு பூக்கோலம் மாக்கோலம் புள்ளிக் கோலம்பூவையர்கை வரைகின்ற வண்ணக் கோலம்பாக்கோலம் ஆக்குகின்ற கவிதை யாவும்நீர்க்கோலமாய் மறக்கும் நினைவு. என்பா – 65: பேசாமல் பேசுவது காதல் விழிகள்!சொல்லாமல் சொல்லுவது கவிதை மொழிகள்!நனையாமல் நனைத்துவிடும் …
>>
என்பா 46, 47
அழகியசிங்கர் என்பா 46 யார் வரைந்தார் இந்தக் கோலம்என் கண்ணில்இப்போது பட்டதுபட்டவுடன் வந்தமர்ந்ததுஎனக்குப் பிடித்ததுஆழமாக உள்ளேசென்றது. என்பா 47 எல்லோரும் புத்தகங்களைத்தயாரித்து விட்டுஅலை அலையென்றுஅலைந்து கொண்டிருக்கிறார்கள்காகிதத்தைக் தின்னும்கழுதைகளை ஏனோகாணவில்லை. இன்றும்.இன்றும்
>>
கவிதை எழுதுபவர்கள்
அழகியசிங்கர் கவிதை எழுதுபவர்கள்எல்லோரும் இப்படித்தான்அவர் கவிதைகளை யாரும் சரியில்லை என்றால்அடிக்க வருவார்கள்முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு பேச மாட்டார்கள்ஊரிலுள்ள கவிஞர்களொல்லோரும் என்னிடம் பேசுவதில்லைநானும் கவிதைகளை வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்.எல்லோரும் தூர தூர போகிறார்கள்
>>
என்பா – 62, என்பா – 63
கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா – 62: நொடிமுள் விரைந்தும் பதிவது இல்லை!துடிக்கின்ற இதயம் கண்ணிற் படுவதில்லை!கடிகார முட்கள் மூன்றும் சுழன்றும்,மணிநிமிடங்களே நினைவில் நிற்கும்! என்பா – 63: உசுரை உருக்கி கிறுக்கி வச்சாங்க!அய்த்தைமகன் வரைஞ்ச அஞ்சல் அட்டைகள்!படிச்சிருந்தால் என்நெஞ்சில …
>>
இதுதானோ வாழ்க்கை
சுரேஷ் ராஜகோபால் நாம் தேடுவதுநமக்கு கிடைக்காதுகண்ணெதிரில்பக்கத்தி லுள்ளவனுக்குகிட்டி விடும்நாம் பார்த்துஏங்கும் நேரத்தில்நமக்குக் கிடைத்ததைமறந்து விடுகிறோம்
>>
என்றோ எழுதிய
🌷க.சோமசுந்தரி. என்றோ எழுதியபழையநாட்குறிப்பின்பழுத்தகசங்கியபக்கத்திலிருந்துஎதைச்சையாககீழே விழுகிறதுஒரு அஞ்சல் அட்டை! அப்பாநலம் விசாரித்தஅன்றையபிரிய எழுத்துக்கள்! கால ஓட்டத்தில்அடிக்கடி…! இன்றும்நலம் விசாரிப்பாய்சிரித்த முகத்துடனேஎட்டிப் பார்க்கிறது. நடு வீட்டுசுவற்றில் தொங்கும்அப்பாவின் புகைப்படம்!
>>
தினசரி ஆலாபனை
அழகியசிங்கர் கொய்யாப் பழம் கிலோ முப்பதுசத்தம் போட்டப்படி தள்ளு வண்டிக்காரன்மாதாகோயில் மணி நேரம் தவறாமல்ஹாலில் டிவி அலறல். என்பா 45 மடிப்பாக்கக் கொலுபார்க்க வந்தேன்கொஞ்ச பொம்மைகள்அதிகமாக இருந்தனபாரதியும் சாய்பாபாவும்ஒயிலாக இருந்தார்கள்பெண் வீட்டுக் கொலு
>>நானும் ராமகிருஷ்ணனும் யார்?
G S மணிமுத்து * நீண்ட நாட்களாக எனக்குள் என்னை குடைந்து கொண்டிருந்த நான் யார் எனும் கேள்விக்கு பால்ய நண்பண் ராமகிருஷ்ணனின் மரணநாளன்றே விடை கிடைத்தது! *ராமகிருஷ்ணன் சித்தப்பா இவன் தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை குழந்தையில் கொள்ளை அழகன் …
>>வாழ்க சக்தி
பானுமதி ந மும்மலத்தை நீத்தருளும் முத்தமிழே நீ வாழி! முக்காலம் தாள் பணியும் முத்துமாரி நீ வாழி! நித்திலங்கள் தோற்றுவிக்கும் நித்திலமே நீ வாழி! நீக்கமற நிறைந்திருக்கும் வெண் சங்கே நீ வாழி! முகில் தழுவும் இமயத்தின் மென் பிடியே நீ …
>>
சரிந்த மணல்
பானுமதி ந சரிந்த மணல் சுருங்கும் விரியும் வெளிச்சப் புள்ளிகள் ஒத்தைத் தடம் பதிந்ததோ பதிக்கக் காத்ததோ விரைந்த குளம்புகள் சருகாய்ப் புரண்டு புதைந்த கோணம் கோட்டோவியத்தின் கோணல் போல உச்சி தனில் ஒற்றை விளக்கு அணைந்தணைந்து மிச்ச வெளியில் அலைப்புறும் …
>>
மூன்று கவிதைகள்
நந்தாகுமாரன் ஸ்தூல இருளின் சூட்சும சொல் நாள் நீள இரவில்சலனச் சொற்களின் சதங்கை ஆட்டம்தொடர்ந்து மனப் பரண் ஏறுகிறது எரிநட்சத்திரக் கண்களின்சம்ஹாரச் சிமிட்டலில்சாம்பலாகிறது கூதல்ஒவ்வொரு பனித்துளியாகச் சிதைத்து வயிற்றின் குரல்வளையை நெறித்துஇன்னும் ஒரு மிடறு நீர் பருகஇடைக்கால விரதம் மேலும் நீடிக்கிறது …
>>மாதிரிப் போலிகள்…
சு. விக்னேஷ் என்னை மாதிரி வெண்மை இந்த மலைகளுக்கு இல்லை என்னும் மேகங்கள் கருமையைக் கடலிடம் கடன்வாங்குகின்றன… என்னை மாதிரி பசுமை வெய்யிலுக்கில்லை என்னும் செடிகள் அதே வெய்யிலில் பழுத்து உதிர்கின்றன… உண்மையில்நம்மைப் போல யாருமில்லை… நம்மைப் போல யாருமில்லை என …
>>
தர்மராஜ் கவிதைகள்
என்பா 61 நனைந்தசிறகு உணவில்லையெனினும்மழையைவெறுப்பதில்லை வாழ்வில்சோதனைமழைபோல்இயற்கையே பறவைபோலன்றிசோதனையைவெறுப்பதேன்மனிதன் வாழ்க்கையில் போராடு வெற்றிபெறு. என்பா. 62. எங்கள்வீட்டில்கொலுவைத்துள்ளோம் கடவுள்கள்மட்டும்மனிதர்கள்யாருமில்லை இடைவெளிஇல்லாகொலுவுக்கு வருவதில்லையாம் இன்று நவராத்திரி மூன்றாம்தினம். என்பா 63. செக்கிங்இன்ஸ்பெக்டர்வராமடிக்கெட்வாங்கமாட்டாங்க இப்பகாசில்லாதடிக்கெட்டசண்டைபோட்டுவாங்குறாளுக நாட்டுலநிறையபேர்நல்லவங்களாஆயிட்டாங்க அரசுப்பேருந்துநடத்துனரின்புலம்பல்.
>>
என்பா – 60, 61
: கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா 60 தஞ்சாவூர் தலையாட்டி ஜோடி பொம்மைகள்!படுக்கவைத்த மறுநொடியில் நிமிர்ந்து ஆடின!பஞ்சடைத்தப் பாதியுடல் நடன பொம்மைகள்பாவாடை கிடைக்காமல் பரிதவித்தன! என்பா – 61: விநாயகரின் காலடியில் உயிருள்ள எலிக்குஞ்சு!ஸ்ரீ ராமன் நெஞ்சின்மேல் அனுமாரின் பாதம்!தொட்டி …
>>
என்பா 43, 44
அழகியசிங்கர் என்பா 43 கொலுவைப் பற்றி எழுது என்றாள்என்ன எழுதுவது என்று கேட்டேன்மைதிலி கொலு வைத்திருக்கிறாள் என்றுஎழுதி விட்டேன் இப்போது என்பா 44 கொலுப்படிகளில் காந்திபாரதி இல்லையில்லைபுன்னகைக்கும் வள்ளலார் பாபா இல்லையில்லைஎன்றேன் மைதிலியிடம்ஆமாம்.கையில் கிடைத்த பொம்மைகளைவைத்தேனென்றாள்
>>
தலையாட்டி
வவேசு கொலுப்படி பொம்மைகள்கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தன;என்னைப் பார்த்ததும்“ கவிஞனே கேளும் !அருகிலுள்ள கொழுத்த முகத்தோன்எதற்கெடுத்தாலும் தலையாட்டுகிறான்;ஆடாமல் பொம்மையாய் இரு என்றால்அதற்கும் தலையாட்டுகிறான்.அசையாதிருக்கும் எங்களிடைஆடும் இவன் தலை எதற்காக ?தரைப்படியில் அவனைத்தனியாக வைத்துவிடு !” என்றன.நான்“ சரி எனத் தலையாட்டினேன்.”வவேசு
>>தமிழ் ஹைக்கூ
யாஸ்மின் சல்மா பனித்துளி தரை பார்த்து தலை வாரிக்கொண்டது மரம் புல்வெளியில் – பனித்துளி! நிலா அள்ளித் தெளித்த கோலப் புள்ளிகளில் கற்றையாய் விழுந்த ஒற்றைப் புள்ளி – நிலா சூரியன் இன்று போகிறேன் மீண்டும் வருவேன் இரவில் இருந்து மீண்டு …
>>
தாகத்தைத் தணிக்காத தண்ணீர்!
கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா – 1: பழம்பெருமை வாய்ந்த சுற்றுலாத் தலம்! பலமாநிலத்தோர் வந்து பார்க்கும் இடம்! வெகுபக்கம் கண்டுவர வாய்ப்பு இருந்தும் மகத்துவமே அறியாத உள்ளூரார்! என்பா – 2: நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்! எத்தனை …
>>சக்திகள் மூவர்- நவராத்திரி
பானுமதி.ந சுடரே! கன்னல் பின்னல் கைக் கொண்டவளே! இடரே படரின் அரிமாயேறி ஆட்கொள்பவளே! மடமை அகற்றி மதியச் செதுக்கும் அருள் கொண்டவளே! திருவே! கமலம் கவளம் கைக் கொண்டவளே! மருவே வாரின் கறுவே கொண்டு கடித்தெறிபவளே! உளமே அழகும் திருவும் பெறவே …
>>புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பேசுகிறேன் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு விருப்பம் மறைந்திருக்கிறது அதைப் பற்றிய பிழைகளோடு அறைகள் என்றால் வீடு வீடு முழுக்க காற்றைப் போல் காலம் நிறைந்திருக்கிறது என் எண்ணங்களைக் கசக்கிப் பிழிந்து ரசித்துச் சுவைத்தேன் கரும்பின் சக்கையைத் துப்பியபடி சாற்றைக் குடித்தேன் நான் நினைத்ததைச் சரியாகப் …
>>திருட்டு ராஜ்யம்
வளவ. துரையன் இந்தக் காலத்தில்ஒரே ஒரு ஊர்லஎன்று ஆரம்பித்தால் சிறுவர்கள் ராஜாகதை வேண்டாமென்றுஅடம் பிடிக்கிறார்கள் ராஜாக்களின்சண்டையும் சரசமும்இன்று ரசிக்க முடியவில்லையாம் திருடர்களின் கதைதான்சிறுவர்க்கும் வேண்டுமாம் திருடர்கள்வேறு வேறு வேடங்களில்திடீரென்று வருவதும் நமக்குத் தெரியாமல்நம்மைக் கொள்ளையடிப்பதும்சிறுவர்களுக்குப்பிடித்திருக்கிறது. அவர்களும் அத்தொழிலையேவிரும்புகிறார்கள் திருடர் இப்பொழுதுதிருடிக் கொண்டதெல்லாம்பெரியவனாகி …
>>
பானுமதி ந கவிதைகள்
யார்? வாகை மரத்தின் கீழ்க் கிளையிலிருந்து கரைந்தது காகம் முன்பெல்லாம் விருந்து எனச் சொன்ன அம்மா தாளடி சென்று நெல் மணி அளந்து நெஞ்சு வலியுடன் வீடு திரும்பி காணாமல் போன அப்பா வந்திருப்பதாகச் சொன்னாள். பார்வைகள் தென்றல் எனும் தொட்டிலிலே …
>>
தளர்தல்
ஆர். வத்ஸலா பகலிலே இரவுபோர்த்து முடங்கிய வானம்பற்றி எரியும் மேகம்மூடும் இமைகள்வறண்ட சிந்தனைமரத்துப் போன உடல்கனத்துப் போன மனம்காற்றுக்கு சிறை முதல் துளிஉடன் உறிஞ்சிக் காயும் பூமிமூச்சிரைக்கத் தொடரும்துணைத் துளிகள்சிலிர்க்க வைக்கும் மின்னூசிகள்கண் கூசும்ஒளிச் செல்வம்முக்கண்ணன்முடி தேடும்ஆகாசகங்கை நிறைந்த பூமிஅலட்சியமாய் உமிழும் …
>>
தர்மராஜ் கவிதைகள்
என்பா 57 வெளியில்வந்தேன்மூக்கிலிரு சொட்டுநீர் விரைந்தேன் படுக்கையறைக்குஏனிங்கு வந்தேன் மீண்டும் வெளியில்மீண்டும் படுக்கையறை கைத்துண்டு கண்ணில் பட்டது. என்பா 58 பனைமரம் நாட்டின்நிலத்தடிநீர் தேக்கி அடிமுதல் நுனிவரைஅத்தனையும் தங்கம் பனைமரத்தின் அழிவுபஞ்சத்தின் அறிகுறி பனை விதை விதைப்போம்.
>>
திறக்கப்படும் நேரம்
செல்விபிரகாஷ்🌹 காத்திருப்புக்காவியத்தின் பக்கங்கள் எல்லாம் திருவிழா கனவுதான். பெட்டியில் அடைக்கப்பட்ட பொம்மைகளின் ஏகாந்த நினைவுகளில் அவதாரங்கள் இடம்மாற்றிப்படுக்கலாம்,புதுப்பபுது வேடம் பூண்டு தெய்வங்கள் தேவதைகளை வேடிக்கைப்பார்க்கச்சொல்லலாம். நடக்கும்வரை நடக்கட்டும்,எல்லாம் அடுத்தமுறைப்பெட்டியைத்திறக்கும்வரைதான்.அதுவரை காத்துக்கிடக்கட்டும் தெய்வங்கள் ஒரு பிடி சுண்டலுக்கும் ஒரு படி சங்கீதத்திற்கும்.
>>
——————— விருந்தாளி ——————-
பட்டுத் தெறித்த மழைத்துளியால்வீட்டுக்குள் வந்ததுமேகம் —————-நாகேந்திரபாரதி
>>
நவராத்திரி நினைவுகள்
உமா பாலு கள்ளிப் பெட்டியை அம்மா திறக்க,சொல்லனா ஆவலோடு காத்திருப்போம் பிள்ளைகள்பழைய துணிகள் சுற்றிய பொம்மைகளை வெளியே கொண்டுவந்து ஒவ்வொன்றாக தூசி தட்டி வைத்த நினைவுகள் .பொம்மைகளை சுற்றிய துணிகள்யாவும் நினைவுப் பேழைகளேஎட்டாவதுபடிக்கையில் , ஒண்ணாவதில் போட்ட கவுன்கள் வெளிப்படும்இது என்னுடையது …
>>
படி ….கொலுப்படி
வவேசு படியில் கொலுவிருக்கும் பொம்மைகள்நாம் பார்க்கஅசையாதிருந்துவிட்டு நாம் தூங்கும் போதுஓடி விளையாடுமாம் குழந்தைசொல்லிவிட்டு உறங்கிவிட்டாள் பொம்மைகள்விழித்துக் கொண்டன.
>>
சுரேஷ் ராஜகோபால் கவிதை
யார் ஒருவரிடம்நம்மால் இயல்பாகஇருக்க முடிகிறதோ… யார் அருகாமையில்நம்மால் பாதுகாப்பாகஉணர முடிகிறதோ… யார் முன்னால்நம் முகமூடிகளின்திரை விலகுகிறதோ… அந்த ஒருவரைத் தான்அத்தனை அலட்சியமாய்நாம் தொலைத்து விடுகிறோம்.
>>
புனித ஜோதி கவிதைகள்
கவிதை 1 மழையில்லாத பொழுதுகளிலும்உன் நினைவு மழையால்நனைந்துக்கொண்டிருக்கின்றேன். மழைக்காலத்தில்சொல்லவா வேண்டும்உன் நினைவுத்தாவணியில்வாடையை அணைக்கின்றேன்… ஐம்பூதங்களில் சீற்றம்என்ன செய்யப்போகிறது?நீ தான்என் நாடி பூதமாயிற்றே… உன் மௌன யுத்தத்தை விடவாபெரிய யுத்தத்தைஇந்த பிரபஞ்சம் கண்டுவிடப்போகிறது…. என்காதல் தேசத்துநீலாம்பிரியே… கிளைகள் அடர்ந்தமரமென்றாலும்மழை விட்டுவிடவா போகிறதுஇச் சிறுகூட்டை…. …
>>
கீச்சிடும் பறவைகள்!
🌷க.சோமசுந்தரி இரவின் மௌனத்தைகலைத்து செல்கின்றனவைகறை பொழுதில்கீச்சிடும் பறவைகள்!
>>
வண்ணமயமாதல்…!
ஆர்க்கே.! மலரில் அமர்ந்திருந்தஅந்த வண்ணத்துபூச்சிபூவுடன்என்ன பேசியதோஎன்ன தேடியதோஎன்ன பரிமாற்றம் நிகழ்ந்ததோஅவைகட்குள்.காற்றில் மீண்டது வண்ணத்துப்பூச்சி.மலரின் அழகு சரி பாதி குறைந்தது.
>>
அன்றும் இன்றும் ஒரு எழுத்து
செல்லப்பா சுப்ரமணியன் காமிரா போட்டோ எடுக்கையில் என்னையே பார்த்தார்கள் போட்டோவை காட்டுகையில் தன்னையே பார்த்தார்கள் சி சு செல்லப்பா செல்ஃபி போட்டோ எடுக்கையில் தன்னையே பார்த்தார்கள் போட்டோவை காட்டுகையில் தன்னையே பார்த்தார்கள் அன்றும் இன்றும் ஒரு எழுத்து மாற்றம்
>>
காத்திருத்தல்
உமா பாலு
>>“மனிதனும் தூக்கணாங் குருவியும்”
மீ.விசுவநாதன்
>>
இறுக்கம்
ஆர். வத்ஸலா ரசிக்க முடிவதில்லைஇப்பொழுதெல்லாம்முன் போல்மழையை கருமேகம் சூழ்ந்ததும்வந்து விடுகிறதுகவலைகுடியிருப்பை கட்டியவர்செய்த தவற்றால்வெளியில் பெய்யும் போதெல்லாம்வீட்டிற்குள்ளும்பெய்கிறது மழை தண்ணீராய் பணம் செலவழித்துவேனிற் காலத்தில் சரி செய்தாலும்ரசிக்க முடிவதுமுதல் மழையை மட்டுமேஇரண்டாவதற்குதேவையாயிருக்கிறதுமறுபடியும்வீட்டினுள் குடை நேரம் கழித்து வரும் வேலைக்காரியை கடிந்து கொள்வதில்லைஇங்கு வந்தது …
>>நண்பரின் கவிதை
இரா. முருகன் தொலைபேசி ஒலிக்க,’ஒரு கவிதை எழுதினேன், கேளுங்கஎட்டு வரிக் கவிதைஎன் சந்திரஹாசன் அண்ணா பற்றிஎன் அப்பா பற்றி, என்னைப் பற்றிஎன் எண்ணங்கள் பற்றிஇரண்டு நிமிடத்தில்எல்லா உணர்ச்சியும் பொங்கிவரகலைத்துப் போட்ட பிம்பங்களாககுரலில் உருமாறும் கவிதை.சரி சார், பார்க்கலாம்விடைபெற்றோம்
>>
தொலைந்துபோகிறேன்
செல்விபிகாஷ்🌹 ஏதோ ஒன்றின் நிசப்த சிந்தனையில், எண்ணம் ஏதுமற்ற வெறுமைப்பொழுதுகளில், “காகிதத்தை எப்படி நிரப்புவது?” என்று எழுதுகோலைக் கேள்விகேட்டபடி, பார்வையைத் திருடனாய் ஒளிந்து நகர்த்திய ஒரு தந்திரப்பொழுதில், வாழ்க்கைக்காய், வயிற்றுக்காய் உறவுக்காய்,உணர்வுக்காய்,மணித்துளிகளை விழுங்கி,காலத்தைத்தின்று குவித்த சில ஓய்வற்றப்பொழுதுகளில் கண்களைக் கசக்கி இதயத்தைப் …
>>
அவளும்தான்……
…வளவ. துரையன் சபரியைப் போலஇராமனின் வருகைக்குவிராதனும் கவந்தனும் கூடக்காத்திருக்கிறார்கள் நோக்கங்கள்வேறு வேறாயினும்எதிர்பார்ப்பு ஒன்றுதானே? ஒரு நீர்த்துளியாவதுவிழுமென்றுதான் அந்தஒரு முளை வெளியேவருகிறது அதன் எதிர்பார்ப்புஅன்று கருகுகையில்அது இடும் சாபம்கருக்குழந்தையும் கூடத்தாங்கமுடியாது சிறுபுழுவை அலகில்தூக்கிக் குஞ்சிற்காகவிரையும் குருவிக்குத் தெரியும்கூடு செல்லும் வழி பாதை இருட்டானாலும்பறந்து …
>>
எப்படியாயினும்
ஆர். வத்ஸலா நான் எழுதிய கவிதைநல்ல கவிதைசுமாரான கவிதைமோசமான கவிதைகவிதையே அல்லாத கவிதைஉனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்அது என் கவிதைநான் பெற்றது
>>
மூன்று கவிதைகள்
பானுமதி ந 1.வானும், நிலமும் கூப்பிடு தூரம் தான் என்றார்கள். எட்டும் தொலைவில் என்று சொன்னார்கள். வானம் கூட தொட்டு விடும் தூரம் தான். என் கால்கள் பாவும் நிலம். 2. தேடல் மஞ்சள் குளத்தின் மதகில் மைனாக்கள் உல்லாசம் கிளையில் …
>>
கைத்தடியுடன் எழுந்து வா!
கு. மா. பா. திருநாவுக்கரசு நெட்ட நெடு உயரம்! புன்னகைத் தவழும் முகம்! கைத்தடியுடன் வட்ட வடிவக் முகக்கண்ணாடி! முழுவழுக்கைத் தலை! அரையாடையில் ஆடும் கடிகாரம்! எளிய நின் தோற்றத்தை… இன்று நின் பிறந்தநாளைக் கொண்டாடி காந்தியம் பேசும் அரசியல்வாதி மட்டுமல்ல, …
>>
காந்தி வந்தார்..
வே.கல்யாணகுமார் காந்தி வந்தார்..காந்தி வீதியிலே.!பிராந்திக் கடைகள்நிறைந்திருக்கும்காந்தி வீதியிலே.!வருந்தி நின்றார்..வருந்தி நின்றார்..சிலையின் வடிவிலே!வாங்கித் தந்தசுதந்திரத்தால்..காந்தி வீதியிலே.! அரையாைடை யைக்கூட ஒருவன்..உருவி ஓடுகிறான்!அடிதடிக்கு இவர்த்தடியை.. எடுத்து ஓடுகிறான்.!மதுக் குடித்துசிலையருகே உருண்டு புரள்கிறான்.!மனம் பதைத்து நின்றிருந்தார்..காந்தி வீதியிலே.! கதர் சட்டைப் போட்டு ஒருவன் காரில்வருகிறான்!கறுப்புப் பணத்தைவெளிநாட்டில்..பதுக்கித் …
>>
மகாத்மாவே மீண்டும் வா!
பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚 அண்ணல் தேசபிதாவேஅகிம்சை சத்தியம்புன்னகையுடன் கடைபிடித்துஉடல் வருத்தி கண்ணீர் விட்டுவாங்கித் தந்த சுதந்திரம்விழலுக்கு இறைத்த நீராயின ! அப்பாவி மக்களின்அன்றாட வாழ்க்கையேவன்முறை வெறியாட்டத்தில்குண்டு முழக்கத்தின் நடுவேகுருதியில் மிதக்கிறது ! துப்பாக்கிக் குண்டில்நீ மட்டும் மடியவில்லைஅகிம்சை சத்தியம்மனிதநேயம் எல்லாம்மடிந்து கொண்டு …
>>
பத்தாவது?…….
வளவ. துரையன் பாற்கடலில்படுத்திருக்கும் பரந்தாமனே பத்தாவது எப்பொழுதென்றேன்பதிலின்றிச் சிரித்தார் கண்ணுக்குத் தெரியாமல்கைகுலுக்க வழியின்றி முகம் வாய் மூடிவிட்டுமூச்சுக்குக் காற்றின்றி படுக்கையும் இல்லாமல்புதைக்கவும் இடமின்றிஎரிக்கவும் விறகின்றிஎடுத்ததுதான் பத்தோ? எம்பெருமான் சிரித்தார் கையூட்டுக் கைகளிலேஅகத்தின் அழுக்குமுகத்தில் வடிகிறது தருக்களைத் தரிசாக்கித்தகர்த்தீர் நற்காற்றை எதிரதாக் காக்கும்அறிவினை …
>>