விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 160

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 160 – இன்று (17.07.2026) மாலை 6.30 மணிக்கு அசோகமித்திரனின்இரண்டு கதைகளைஎடுத்துப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கீழ்க்கண்ட படைப்பாளிகள் பேசினார்கள். அழகியசிங்கர்

>>

அழகியசிங்கர்/காட்டில் பூத்த மலர்

அந்தப் பெண் இவ்வளவு அழகா என்று எண்ணி மாய்ந்து போனான். பின் அந்தக் காட்டில் அவளையே தொடர்ந்து போனான். எப்படியாவது அவளுடன் பேசி அவளைத் தன் வசமாக்க நினைத்தான். ஆனால் அவள் கூடவே வருகிற மயில் அவனை நெருங்க விடவில்லை.

>>

ஷைலஜா /சிட்டுக்குருவிகள்

அம்மன்கோவிலை ஒட்டிய மரத்தில் அந்தக் குருவிகள் கூடு கட்டி இருந்தன.குஞ்சுக் குருவிகளுக்கு இறக்கைகள் முளைத்து விட்டன…அவைகளையும் அழைத்துக் கொண்டு இன்றுஇரைக்குப போக வேண்டும் என்று தாய்க் குருவி சொல்லவும் தந்தை குருவி கவலைப்பட்டது .“பத்து இருபது அரிசி மணி கிடைத்தால்அதுவே நம் …

>>

சுஸ்ரீ/மானோ இது மயிலோ

இளமாறன் முதுகலை பட்டம் பெற்று அமெரிகாவில் நல்ல வேலையில் இருந்தான்.அவன் திடீரென வேலையை உதறி தன் கிராமத்துக்குத் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்ய வந்தது ஆச்சரியம்தான்.அவர்களுடைய மாந்தோப்பு அங்குத் தினம் உலவும் மயில் என வாழ்க்கை வாஷிங்டனை விடச் சுவாரஸ்யமாக இருந்தது.அன்று …

>>

நாபா.மீரா/சுரப்பிகள்

நடுக்குத்தகை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்த பக்கத்து டவுனில் தானியக் கிடங்கு கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை ராக்காயிக்கு.இந்தா பிடி ராக்காயி…காவலாளி வேலவன் கொடுத்த மூட்டையைக் கவனமாக வாங்கி தான் கொண்டு வந்திருந்த பழைய புடவையில் கட்டிக் …

>>

அமுதசுரபி/பெற்றோர் கவனத்திற்கு…

கர்நாடகாவில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் முதிபோர்களுக்குஒரு படமாகும்.களைவனை இழந்த வயதான தாய், தனது பல கோடி ரூபாய் மதிப்புன்ன வீட்டைத் தன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும். ‘தானப் பத்திரமாக (Gft: Del) எழுதிக் கொடுத்துவிட்டார். அவர்கள் தங்கள் அம்மாவைக் கடைசி வரை …

>>

மாலா மாதவன்/வீடற்றவளின் வீடு

அழுக்கின் மினுமினுப்பில் அவள் அழகியாகத் தெரிந்தாள். இப்பவோ அப்பவோ என அறுந்து போக நேரம் பார்த்திருந்த செருப்புக்களை இழுத்து இழுத்து நடந்து கொண்டிருந்தவள் முன்னே சென்று நின்றேன். உறுத்தாள்.“உன் தலைல குருவி கொத்துது!” என்றேன்.“ஆமா.. என் வீட்டுல அது கூடு கட்டுது.” …

>>

மரு.ச.கந்தசாமி/பறவைகள் பேசுமா

பூவாயி தரையில் ரோட்டில் குப்பை பொறுக்கி மூட்டையை தலையில் சுமந்து செல்ல மூட் டையின் மேல் சிட்டுக்குருவிகள் அமர்ந்து வர, இது தினசரி காட்சி. ஊரெல்லாம் குப்பைக் பொறுக்கி, அதை விற்று வரும் காசில், அவள் வண்டி ஓடும். அவளின் ஒரே …

>>

சுஸ்ரீ/சிட்டுக் குருவி எம்மை விட்டுப் போகாதே

வெயில் உச்சியில் இருந்தது. தலையில் மூட்டை, கையில் பை. அந்தப் பாட்டி மெதுவாக நடந்தாள். அவள் தலையிலிருந்த மூட்டையின் மீது இரண்டு சிட்டுக்குருவிகள் துள்ளி அமர்ந்தன. இன்னும் இரண்டு குருவிகள் துரத்திப் பறந்தன.அவள் அவற்றை விரட்டவில்லை; மாறாக, சிரித்தபடியே நடந்தாள்.எதிரில் வந்த …

>>

மரு.ச.கந்தசாமி/நாய் வால் நிமிராது

“மாப் கிஜியே மேம்சாப் “என மான்சிங் மேரியிடம் கெஞ்ச, மேரியோ ” உன் பாச்சா என்னிடம் பலிக்காது” என்று சொல்ல அதை ஆமோதிப்பது போல் பக்கத்தில் நின்ற ஜானி வாலை ஆட்டியது. மான்சிங் சிறுவயதில் எடுபிடி வேலைக்காக மேரியிடம் சேர்ந்தான். படிப்பில்லாததால் …

>>

சு. சமுத்திரம்‌ /ஒரு சத்தியத்தின் அழுகை

சட்டாம்பட்டியில் சகல மனித ஜீவராசிகளும் கலந்து கொள்ளும் கலகநாடி அம்மன் திருவிழா துவங்கப்போகிறது என்பதை, அங்கே வரும் வெளியூர்க்காரர்கள், உள்ளூர்க்காரர்கள் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோவில் முன்பு ‘சப்பரம்’ (தேர்) நுழையும் உயரத்துக்குச் சரிந்து குவிந்த பந்தல் போடப்பட்டு, பந்தலில் …

>>

கரந்தை இந்து /பார்க்காத அப்பா படம்

அதனால் தான் கலந்துக்கச் சொல்லி இருப்பார்”.“ஆனால் பாவம் அதைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை உங்கப்பாவுக்கு . நீ பிறக்கும் முன்பே ஒரு விபத்தில் தவறி விட்டதால் நீயும் அவரை போட்டோவில் தானே பார்த்தே கண்ணா”.“போட்டிக்கு ஏதும் தலைப்பு உண்டா? என்ன படம் …

>>

கௌரி சங்கர்/தியாகம்

என்னுடைய தாய்க்கு ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று ஆட்டுக்குட்டிகளில் நானும் ஒருத்தி. என்மேல் படர்ந்து இருந்த வெள்ளை வெளேர் என்ற மயிருக்காகவே, மங்கம்மா என்னை விலைக்கு வாங்கினாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நான் அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஹேமா …

>>

அழகியசிங்கர்/மே…மே…

சைமன் அன்று தாய் ஆட்டை வெட்டுவதற்கு தீர்மானித்தான். சிங்காரியைக் கூப்பிட்டு தாய் ஆட்டை அழைத்து வரச் சொன்னான். சிங்காரி தாய் ஆட்டை ஓட்டி வந்தாள். அதை ஒரு இடத்தில் கட்டி வைத்தான் சைமன்.குட்டி ஆடு மேரி தாய் ஆட்டையே சுற்றி சுற்றி …

>>

திருப்பூர் கிருஷ்ணன்./பெருந்தலைவரும் நானும்….

ஜூலை 15: காமராஜ் பிறந்த தினம்.……………………………………… *பெருந்தலைவர் காமராஜரை நான் முதன்முதலில் பார்த்தது, திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நான் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்….தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் …

>>

ஜெ.பாஸ்கரன்/கண்ணன் மன நிலையை…

1963 ஆம் வருடம் என்று நினைவு….அண்ணாமலை யூனிவர்சிடியின் ‘ஹாஸ்டல் டே’ கொண்டாட்டம்.பள்ளிச் சிறுவனாக, டார்க் மெரூன் அரை டிராயர் (ட்ரெளசர்தான்), ‘பீச்’ வண்ண அரைக்கை சட்டை (இப்படி வெளிர் வண்ண நல்ல சட்டையில், காப்பி, சாம்பார், சட்னி கரை படுவது வழக்கம் …

>>

பார்த்தசாரதி/யோகியுடன் கொஞ்ச நேரம்

அமெரிக்க நண்பர்கள் நான், முருகேசன், சிவசங்கரன் ஆகிய மூன்று பேரும் அவரவர் குடும்பத்துடன் சுமார் பத்து நாட்கள் சுவாமியுடன் சந்நிதித் தெரு வீட்டீல் தங்கியிருந்த சமயம் அது.சுவாமியின் உத்தரவுப்படி எங்கள் குடும்பத்தினர் சந்நிதித் தெரு வீட்டிலேயே சமையல் செய்து, சுவாமியுடன் நாங்கள் …

>>

அசோகமித்திரன்/நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது …

நூலகத்துக்குப் போகும் மாலைகளில் அந்தப் பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தின் மதில் சுவரை சைக்கிளை ஓட்டியபடியே எட்டிப் பார்ப்பது பழக்கமாகி விட்டது. அந்தப் பள்ளிக்கும் அந்த மைதானத்துக்கும் இடையில் நூறு வீடுகளும் பத்துத் தெருக்களும் இருந்தன. மாணவர்கள் விளையாட வேண்டும் அல்லது திறந்த …

>>

அசோகமித்திரன் /நாடகத்தின் முடிவு

இரவு மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டபடியால் தெருவில் நடமாட்டம் அதிகம் இல்லை. நிலவு பால்போல் காய்ந்துகொண்டிருந்தது. உடற்பிணியும் மனப்பிணியும் உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லாரும் உறங்கியாகிவிட்டது. ஆனந்தகுமாரும் தமது சுருட்டைப் புகைத்து முடித்துப் படுக்கையில் படுத்தார். ஆனால் பெருந் துக்கத்தைப் போன்று …

>>

அர்ஜுனன்/ஓவியம்

கடைசி வரிசை மாணவன், பாடத்தைக் கவனிக்காமல் ஏதோ ஓவியத்தை வரைந்து கொண்டிருக்க, அருகில் வந்த ஆசிரியர் கேட்டார்…“யார் இவர்?”“என் அப்பா…”ஓவியத்தில் கண்கள் சோர்வாக இருந்தன. முகத்தில் இருந்த மீசையும் கண்ணாடியும் அவரது தன்னம்பிக்கையைச் சொன்னது.கழுத்தின் நீளம், சுமைகளைத் தனியே சுமந்த வாழ்க்கையை …

>>

அர்ஜுனன்/படையல்

“குடும்பம், குட்டியோட எங்கேயோ கிளம்பிட்டீங்க போலிருக்கு?”எதிர்ப்பட்ட நடேசனைப் பார்த்துக் கேட்டார் ஆசிரியர்.“ஆமாங்க..ய்யா.. குலதெய்வம் கோயிலுக்குப் போய்ப் படையல் போடப் போகிறோம்”“படையல்னு சொல்றது நாம விதைச்சு, இறைவன் அருளால வளர்ந்து வர்ற விளைச்சல்ல ஒரு பங்கை இறைவனுக்கு படைக்கிறது தானே?”“ஆமா..”“அப்படியிருக்க நீங்க வளர்க்கிற …

>>

மாலா மாதவன்/தொப்பிக் கடன்

பல மாதங்களாக உடல் நிலை சரியில்லாது படுத்திருப்பவளிடம் தொடர்ந்தாற்போல் அதே முனகல்.“தொப்பிக் கடனிருக்கு. சிவனுக்குச் செய்யணும்.”கோவில் கோவிலாய் போய்த் தொப்பிபோல் மாலைகள் போட்டனர் தத்துப் பிள்ளைகள்.தெளிவில்லை.“ஏம்மா. சிவன்ங்கறது கடவுள் சிவன் இல்லையோ? ஒரு வேளை ப்ரெண்டோ?” பிள்ளைகள் பெத்தவளின் டைரியைத் தேடினர். …

>>

ஸ்ரீராம்/நண்பனே… எனது உயிர் நண்பனே

சுவரில் மாட்டி இருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் 40 வருடங்களுக்கு முந்தைய பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் ராஜேந்திரன். “இந்தா இந்தக் குடையை கொண்டு போய் உன் ஃபிரண்டு கிட்ட குடு. இதோட போகட்டும். எங்கேயோ போய்ப் பிழைச்சுக்கட்டும்” என்றார் ஆனந்த்.“குடை எல்லாம் …

>>

சாந்தி சந்திரசேகரன் /பானு.!

முருகேசனை பதினெட்டு வயதில் கரம் பிடித்தபோது, அழகம்மாள் திருமணச் சீராகக் கொண்டு வந்தது இரண்டு ஆடுகளும் ஒரு கன்றுக்குட்டியும்.கன்றும் ஆடுகளும் அவனது குடிக்கு விலைக்குப் போயின.பிள்ளைகளும் மணமுடித்து அவரவர் வாழ்க்கை வாழத் துவங்கினர்.முருகேசன் இறந்தபோது, மிஞ்சிய இந்த ஆட்டுக்குட்டி ‘பானு’ மட்டுமே …

>>

மரு.ச.கந்தசாமி/தொப்பி உயர

எப்போ மழை பெஞ்சாலும் குடை தேடாமல் இந்தப் பிளாஸ்டிக் பையைத் தலையில் கவுத்தி மாட்டி விளையாடுவது ராமு கோமுவுக்கு விளையாட்டு. ராமு கொஞ்சம் முன் ஜாக்கிரதை பேர்வழி.கோமு சேட்டை நம்பர் ஒன்.ராமு கோமுவிடம்” டேய் மழை வருதுடா, நனையாமல் வீடு போய்ச் …

>>

நாபா.மீரா/செல்லாயி

நீலகிரித் தைல புட்டிகள் அடுக்கப்பட்ட அட்டைப் பெட்டியை அந்த அங்காடி முதலாளியிடம் கொடுத்தாள் பட்டம்மாக் கிழவி.சரியான நேரத்துக்கு வந்துட்ட பாட்டி. இப்ப சீசன் வேறயா நம்ம ஊரு தைல புட்டிக்கு மவுசு கூடிப் போச்சு. வாங்கி உடனே ஷோகேஸில் அடுக்கிய முதலாளி …

>>

ஸ்ரீராம்/அன்னக்கொடியும் ஆடும்

தொத்தா வீட்டிலிருந்து சந்தையைக் குறுக்கே கடந்து வீடு திரும்பி. கொண்டிருந்த அன்னக்கொடி, தன்னை கண்டதும் ஒரு ஆடு குதிப்பதையும், தாவுவதையும் கண்டாள்.முதலில் அலட்சியமாகக் கவனித்தாலும் பார்த்தவுடனே அது சட்டென அடையாளத்துக்கு வந்தது.“என்ன பண்ற இங்க நீ சடையா?” என்று அதனுடன் பேசிக்கொண்டே …

>>

குற்றத்தை உணர்த்தி சந்ததியைக் காத்த காஞ்சி மஹான்!

மஹா பெரியவாளின் ஒப்பற்ற கருணை உள்ளத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். மஹான் எந்தச் சமயத்தில், எந்தப் பக்தன் மீது தனது அருட் பார்வையைத் திருப்புவார் என்று சொல்லவே முடியாது. தன்னை மனப்பூர்வமாக வணங்கி, வாழ்க்கை நடத்தும், தனது பக்தர்கள் எந்த …

>>

ஒரு பக்தர் ரமண மகரிஷி பகவானிடம்

ஒரு பக்தர் ரமண மகரிஷி பகவானிடம் விடைபெற்றுச் செல்ல வந்தார். ஸ்வாமி ! நான் உங்களிடம் விடைபெற்று, தொலைதூரம் செல்ல வந்திருக்கிறேன் அதில் ஒரு சிறிய வருத்தம் எனக்கு உண்டு… ஆசிரமத்தில் உங்களோடு தங்கியிருப்பவர்கள் ஒவ்வொரு நிமிடமும் தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்துக் …

>>

‘ராமானுஜன்’ மனைவி

இரவுக் காட்சிகள் பார்ப்பதில்லை என்ற பத்தாண்டு விரதத்தை முறித்து, நேற்று இரவு ஞான ராஜசேகரனின் ‘ராமானுஜன்’ படச் சிறப்புக் காட்சிக்குச் சென்றேன். சில குறைகள் இருந்தபோதும் நல்ல முயற்சி. படத்தின் சிறப்பு அம்சம் ரமேஷ் விநாயகத்தின் இசை. படம் பார்த்து முடிந்து …

>>

ஜெ.பாஸ்கரன் /புதுமைப்பித்தனின் ‘செல்லம்மா’

1943 ஆம் வருடம் மார்ச் மாத கலைமகள் இதழில் வெளியான சிறுகதை செல்லம்மா.நோயில் வீழ்ந்து நடைபிணமான மனைவி செல்லம்மாளுக்கும் அவளைப் பார்த்துக்கொள்வதற்காகவே பட்டணத்தில் வாழ்ந்துவரும் கணவன் பிரமநாயகம் பிள்ளைக்கும் இடையிலான அன்பு, அந்நியோன்யம், கரிசனம் இவற்றின் கலவையான காதல் தான் ‘செல்லம்மாள்’. …

>>

சுஸ்ரீ/கரைஞ்சு போகாதே கனகு

கனகு ஞாபகப் படுத்தினா கணேசுக்கு,”ஞாபகம் இருக்கா ஸ்கூல் படிக்கறப்ப நான் மழைல நனையக் கூடாது, வெல்லம் போலக் கரைஞ்சு போவேன்னு என் தலைல ஒரு நீலக் கலர் பாலிதீன் பையை மாட்டி விட்டே.நான் பிடிவாதம் பிடிச்சேன் எனக்கும் உன் தலைல இருக்கற …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி(10.07.2026) மாலை 6.30 மணிக்குச் சூமில்சற்று நேரத்திற்கு முன் நடந்து முடிந்தது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். …

>>

ஜீரோ டிகிரி காயத்ரி / பதிப்பகத்துறைக்கு வரக் காரணமென்ன?

நீங்கள் பதிப்பகத்துறைக்கு வர காரணமென்ன? அதற்கு முன்பாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?” நான் இத்துறைக்கு வருவதற்கு முன்பாக ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பிரெஞ்சு மொழி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். அப்போது பிரெஞ்சு மொழி எழுத்தாளருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைத் தெரிந்துகொண்டபோது தமிழில் எத்தனையோ …

>>

சுஸ்ரீ/விஸ்வாசம்

புருஷோத்தமன், ஸ்டெல்லாவை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.ஸ்டெல்லா ஒரு அழகின்றதுக்காக மட்டுமில்லை.அவனுக்குத் தெரியும் அழகுன்றது ஒரு வயசு வரைதான் பணம்தான் இறுதிவரைன்னு.பரம்பரை பணக்காரர் ஜான் ஆப்ரகத்தோட ஒரே பொண்ணுஅளவற்ற ஆஸ்திக்கு ஒரே வாரிசுனு தெரிஞ்சுதான் ஸ்டெல்லாவுக்கு வலை விரிச்சான். பிறந்ததிலிருந்து அம்மா இல்லாததால் …

>>

சுஸ்ரீ/உயிர்த் தியாகம்

எனக்குத் தெரியாதுனு நினைச்சிருக்கு மும்தாஜ், எங்கே கூட்டிட்டுப் போறானு.அந்த முரடன் சலீம் அன்னிக்கு வந்தப்ப மும்தாஜ் தனியா சமையல் பண்ணிட்டிருக்கு வாப்பா வர நேரமாச்சே.அவன் எதுவும் பேசலை அவளைத் தரதரனு இழுத்துட்டு வந்தான் என் கண் எதிர்லயே கயித்துக் கட்டில்ல தள்ளினான்.சிறுசுல …

>>

சுஸ்ரீ/ஐ விட்னெஸ்

இன்ஸ்பெக்டர் சேகரன், ஐந்து வயது சிறுமி புஷ்பாவை அன்பாக விசாரித்தார்.“சொல்லு பாப்பா அந்தத் திருடனை எப்ப பாத்தே?”“நைட் பாத்ரூம் போக எழுந்தேனா இருட்டா இருக்குமே அப்பதான்.”புஷ்பாவோட தந்தை சுந்தரம்,”அதெல்லாம் ஒண்ணும் திருட்டு போகலை, அது சும்மா சொல்லுது”சுந்தரத்தோட நண்பர்தான் இன்ஸ்பெக்டர் சேகரன், …

>>

நா.பா.மீரா/சிங்கப் பெண்

தன் கையில் இருந்த சொற்பப் பணம் கொண்டு தாய் மைதிலிக்கும், கால் ஊனமுற்ற ஐந்து வயதுத் தம்பி நரசிம்மனுக்கும் சாப்பிட ஏதாவது வாங்கி வரும் எண்ணத்தில் சாலையைக் கடந்தாள் பத்து வயது அமுதா.தம்பியின் அழுகைக் குரல் கேட்க, திரும்பியவள் வெகுண்டாள். வேகமாகச் …

>>

ஸ்ரீராம் /முகராசி

‘இந்தப் படத்துக்குத் தகுந்த ஒரு கதை எழுதுங்கள்’ என்று சொல்லி வெளியிடப்பட்டிருந்த தன் படத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டான் சாரதி. கடைசியில் இப்படியாவது ஒரு பிரபல்யம் கிடைத்ததே என்று தோன்றியது.சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கிராமத்திலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தவன், நடிக்க …

>>

சாந்தி சந்திரசேகரன்/ஆள் பாதி ஆடை பாதி!

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் தனக்கு கீழ் பணியாற்ற ஒரு உதவி அறிவியல் வல்லுநரை நியமிக்க மிகச் சவாலான நேர்காணலை நடத்தினார்.பலரும் கோட் சூட் அணிந்து வந்திருந்த இடத்தில், மேல் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டை. சீராக இல்லாத பெரிய மீசை.. கண்களைச் …

>>

மரு.ச.கந்தசாமி/ஆதாரம்

சிறு வயது முதலே தான் அழகிலே என்று மன அழுத்தத்தில் வளர்ந்தான் முத்து.பள்ளியில் படிக்கும் போதே கண்ணாடி போட, “மூக்குக் கண்ணாடி முத்து” என்று அவனை நண்பர்கள் கேலி செய்தனர். அவன் தாயோ, “முத்து நீ கண்ணாடியிலும் அழகுடா,” என்றாள். முத்துவோ, …

>>

தங்கேஸ்/விடை பெறுதல்

எதுவும் சொல்லாமல் வாசல்துளசியையே பார்த்துக்கொண்டிருந்தாள் தானில்லாவிட்டால் யார் இதைதண்ணீர் ஊற்றிவளர்க்கப் போகிறார்கள்என்ற நினைப்பில்அவள் மனம் பட்டுப் போனது கல்யாணம் முடிந்த கையோடுஇதைப் புகுந்த வீட்டிற்கு கொண்டு போய் விடுகிறேன்என்று அம்மாவிடம் சொன்னபோது அம்மா அழுதாள் “நீ போனதுக்கப்புறம் இதை நீ ன்னுநெனச்சு …

>>

விஞ்ஞானி/நரியே நரியே ஓடி வா

வளைக்குள் இருந்துவானத்தைத் தேடுதுநண்டு மனசு முன்னே ஒரு அடிநகர்ந்தாலும்பின்னே நாலு நண்டுகள் இழுக்குது முடியாமல் முடிவில் மனசுநரி வாலுக்காகக் காத்திருக்குவெளியே வர.

>>

மாலா மாதவன்/அதிர்ச்சி வைத்தியம்

காணவில்லை என்ற சுவரொட்டியைப் பார்த்து அதிர்ந்தான் கேசவன்.காணாமல் போனவர்களைப் பற்றியெல்லாம் கண்டு கொள்பவன் இல்லை அவன். இருக்கிறோம் என்பதற்கே இத்தனை உழைப்பைக் கொட்ட வேண்டி இருக்கக் காணாமல் போனவர்களைப் பற்றிக் கவலைப் பட நேரமில்லை என்பது அவன் எண்ணம்.இந்தச் சுவரொட்டி மிகச் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இது புது அனுபவம்

காமேஷ் பக்கத்து வீட்டு கோகுல் அண்ணாவை கையோடு அழைத்து வந்துமுன் அறையில் நாற்காலியைப் போட்டு உட்காரவைத்தான்.ஒன்றும் புரியாமல் கோகுல் முழித்தான்.“என்னடா காமேஷ் என்னை ஏன் கைது பண்றே”என்று கேட்டான்.“அண்ணா, நீங்கக் கொஞ்ச நேரம் அப்படியே உட்காருங்க.என்னையே பாருங்க.எனக்காக அண்ணா, பிளீஸ் “என்றான் …

>>

அழகியசிங்கர்/எப்படி அழைக்கலாம்

அவன் தன்னையே வரைந்து கொண்டான். ஆனால் அது அவனில்லை என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் கிட்டத்தட்ட என்னைப் போல இருக்கிற ஒருவன்.தலை முடி தாடை எல்லாம் வேற ஒருவர் மாதிரி இருந்தது.அவனை எப்படி அழைப்பது? அண்ணா என்று …

>>

வளவ. துரையன்/மரணம்

​அதைத்தான் அவனும்எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்; நேற்று அடுத்தத் தெருவரைவந்து சென்றுவிட்டது;அங்கு ஒருவரைத் துணையாய்அழைத்துச் சென்று விட்டது; ​கடந்த வாரம்கடைசி வீடு வந்துசிறு குழந்தை ஒன்றைஆசையாய்க் காவு வாங்கிஅழைத்துச் சென்றது; பந்தல் போடும் பையன்களும்பாடைகட்டும் ஆள்களும்காத்துக் காத்துப்பொறுமை இழக்கிறார்கள்; அவரவர் வேதனை அவரவர்க்கு அக்கம்பக்கத்தால்அருகில்வந்த …

>>

ஜெ.பாஸ்கரன். /‘பத்மஸ்ரீயும், இலக்கியம்மூலம் இந்திய இணைப்பும்!

எழுத்தாளர் சிவசங்கரி அம்மா அவர்களுக்கு ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கப்பட்டதையொட்டி ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா சென்னை மைலாப்பூரில் நடந்தது. உரத்த சிந்தனை வாசகர், எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழிநடத்தலில், திரு உதயம்ராம், திருமதி பத்மினி பட்டாபிராமன், திரு …

>>

சாந்தி சந்திரசேகரன்/கோயில் திருவிழா..!

ரெங்கம்மா.. செல்லத்தாயி.. கோமதி அவர் கணவர் குமரேசன், வீரண்ணன், கருப்பசாமியென அவரவர் வீட்டு விளைச்சலை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு கோயில் திருவிழாவிற்கு படையலிட கிளம்பினார்கள்.“அம்மா.. கோயிலுக்கு இன்னும் எவ்ளோ நேரமாகும்?” கேட்ட கண்ணனின் விழியெங்கும் முதல் முறையாகக் கிடா வெட்டு காணும் ஆர்வம்.நேற்று …

>>

ஷைலஜா /சுமைகள்

“நாளைக்கு திருவிழா. காத்தான்சாமிக்கு முதல் அறுவடை படையல்.”*ஊர்த் தலைமையின் உத்தரவு.விடியற்காலை 5 மணி.அஞ்சலைதன் தலையில் நெல் கூடையை ஏற்றினாள். கூடவே கையில் குத்து விளக்கு.” நானும் வரேன்” என்று 8 வயது மகன் குமார் பின்னால் ஓடி வந்தான். வெள்ளை சட்டை, …

>>

கணேஷ் ராம்/நாய்

நாயும் கல்லும்நான்முகன் படைப்புகல்லால் அடிக்கப்பயிற்சிகள் வேண்டாம்இயல்பாய் வருவதுதவிப்பினில் இன்பம் வாலை ஆட்டும்விசுவாசம் காட்டும்தின்ற சோற்றுக்குஉயிரைக் கொடுத்துக்காவல் காக்கும்எட்டி உதைத்துஏவல் செய்தால்பெட்டிப் பாம்பாய்சேவகம் செய்யும் எலும்பும் தோலுமாய்எங்கோவொரு ஜீவன்எதிர்ப்பையும் காட்டும்காட்டினால் போச்சு கடலெனத் திரண்டுகற்றோர் மற்றோர்காரணம் என்றுக்கதைபல உரைப்பார் படிக்க விடாமல்குலைத்துக் கலைத்ததுவீதியில் …

>>

ஆத்மாநாம்/கேள்வி

ஜூலை 6 ஆம் தேதி ஆத்மாநாமின் நினைவுநாள் காலை எழுந்ததும்இரை தேடத் துள்ளும்இவ்வணில்இரவு எங்கே உறங்குகிறதுமலர்க்கிளைப் படுகையிலாஆற்றுமணற் சரிவிலாசதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலாநிச்சயம் நூற்றுக்கணக்கில் இருக்கும்இவ்வணில்கள்ஒன்றல்ல தம் குழந்தைத்தனமான முகங்களுடன்சிறு பிள்ளைக்கைகளுடன்அனுபவித்து உண்ணும்இவைதங்களைப் பற்றி என்ன கனவு காணும்உணவையும் …

>>

மரு.ச.கந்தசாமி/விதைகள்

“ஏம்பா ஆட்டத் தூக்கி மாட்டுல போட்ட கதையாத்தான் இருக்குது ,இங்க நம்ம நிலைமை ” என்று புலம்பினான் முனியன். வீரையனோ” ஆமாம்பா நெல்லு போட்டு விளையும்னு நினைச்சு விளையாம, மக்காச்சோளம் போட்டா மக்காச்சோளம் மக்கிப்போகுது”. விளைச்சலும் இல்லை எங்க நம்ம மங்கையர் …

>>

மாலா மாதவன்//மக்காச்சோளமும் ஆடுகளும்

இந்த முறை வானம் பொய்க்காது என்று நினைத்துப் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்களைப் பார்த்தவாறு இருந்தாள் வள்ளி. “என்னாச்சு! இந்த முறை தான் நல்ல விளைச்சல் கண்டுருச்சே! ஏண்டி சோகம்?” கணவனின் குரலில் அசைந்தவள். “காசு வருமாய்யா?” என்றாள். “அவங்க என்ன தராங்களோ …

>>

அண்ணாமலைச்சாமி ராஜேஸ்வரி /பணம் கொடுத்தது பகவானே

அண்ணாமலைச்சாமி ராஜேஸ்வரி /பணம் கொடுத்தது பகவானே தூத்துக்குடியில் தாமோதர நகரில் ஒரு சின்னக் குடிலில் வசித்துவரும் நானும் மனைவியும் ஏழைக்குடும்பத்தில் பிறந்து இன்றும் குறைந்த வருமானம் பெற்றுக் குடும்பம் நடத்தி வருகிறோம்.எங்களுக்குப் பகவானுடைய திருவடி பணிந்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்ற …

>>

மாலா மாதவன்/முகம் தொலைத்தவர்கள்

“அம்மா! உங்க அம்மா, பாட்டியைப் பத்திச் சொன்னீங்க. அவங்க அம்மா, அந்தம்மாவோட அம்மா அவங்கள்ளாம்?”நிலா கேட்டபோது எனக்குப் பதில் சொல்லத் தெரிய வில்லை.“எல்லோரும் வீட்டைப் பார்த்துக்கிட்டவங்க தான் நிலா என்னைப் போல.”“அதென்னம்மா வீட்டைப் பார்த்துக்கிட்டவங்க? அவங்களுக்குன்னு ஒரு அடையாளம், தனித்துவம் இல்லையா?”“இருந்திருக்கும். …

>>

ஆர்க்கே.!/அவரும் நானும்.!

கிணற்று நீர் நான்.கமண்டல விரி காவிரி அவர்.கனவுக்கோட்டைக்கட்டடன் நான்.யதார்த்த வீட்டின்கலை வடிவமைப்பாளர் அவர்.மெத்தனத்தின் மொத்த உருவம் நான்.சுறுசுறுப்பின் உரிமையாளர் அவர்.அன்பைத்தெளித்தலாய் மட்டுமேஅறிந்தவன் நான்.அன்பைமழையாய் பொழிபவர் அவர்.நட்பின் பயணத்தில்சிறு பிணக்கையும்ஒரு சண்டையாக்குபவன் நான்.பெரும் பிரளயச் சரிவையும்எளிதாய் ஊதித் தள்ளுபவர் அவர்.குண்டுச் சட்டிக்குள்குதிரையோட்டுபவன் நான்.ஊரே …

>>

கரந்தை இந்து /எது என் முகம்?

ஹும் எத்தனை படங்கள் , எத்தனை விதமான வித்தியாசமான கேரக்டரில் அவள் நடித்து அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.எதிலும் சோடை போகாத அவளின் நடிப்பு எக்கச்சக்க புகழ், பணம், விருதுகள் எல்லாம் அள்ளிக் கொடுத்தது.அப்போதெல்லாம் தன் திறமைமேல் அவளும் மிகுந்த …

>>

முனைவர் சிவகாமசுந்தரி /நாகமணிஇரண்டு முகமூடிகள்

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தாள் மீனா. கையில் இரண்டு முகமூடிகள்.அம்மா: “என்னடி இது? பண்டிகைக்கா வாங்குன?”மீனா: “இல்லம்மா. ஒண்ணு ஆபீஸுக்கு. இன்னொண்ணு வீட்டுக்கு.”அம்மா: “புரியலையே?”மீனா: “ஆபீஸ்ல சிரிச்ச பொறுமையான முகமூடி போடுவேன். டார்கெட் ஆகலைனாலும் பரவால்லன்னு சொல்லுவேன். பாஸ் திட்டுனாலும் தலையாட்டுவேன்.”அம்மா, …

>>

நாபா.மீரா/விசுவாசம்

மேடம், இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டுடுங்க, இனிமே இந்த மாதிரி நடக்காது.போயும் போயும் ஒரு வாயில்லா ஜீவன்கிட்ட உன்னோட அல்பப் புத்தியைக் காமிச்சிருக்கயே.என் சாப்பாட்டுல கை வச்சிருந்தாக் கூடப் பரவாயில்லை. டாமியைப் பட்டினி போட்டுட்டியே!உன்னை நம்பித்தானே விட்டுட்டுப் போனேன்.இப்படி என் …

>>

கஸ்தூரி குருசாமி/முகமூடிகள்

லதா தன் படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அவளது கைகளில் இரு முகமூடிகள் ஒன்றில் வெகுளி, சோம்பேறி என்றும் இன்னொன்றில் மகளிர் திலகம், விருது எனவும் எழுதி இருந்தது. அக்கா தங்கை தம்பி அண்ணா எனப் பலரோடு பிறந்தாலும் அவள் யாருடனும் இணைந்து …

>>

கரந்தை இந்து/குரங்கு வேஷம்

ஏண்டிம்மா ஜானு என்றழைத்தபடி பக்கத்து வீட்டு மாமி அம்புஜம் வந்தாள்.” வாங்கோ மாமி உள்ளே ” என்றாள் ஜானு.” நீ தீவிர அனுமான் பக்தை என்பதற்காகக் கொடியில் காய்ந்த உங்க துணிகளை அந்த ஆஞ்சநேயரே வந்து வாலை வாலை ஆட்டிண்டு மடிச்சு …

>>

ராஜாமணி/புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்”

விருட்சம் கதை பேசும் நிகழ்ச்சியில்புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்” கதையைப் பற்றி நான் பேசிய உரை. தமிழ் இலக்கியத்தில் மனித மனத்தின் சிக்கல்களை மிக நுட்பமாகப் பதிவு செய்த அபூர்வமான படைப்புகளில் ஒன்று. இந்தக் கதையை வெறும் நோய், வறுமை அல்லது குடும்பத் துயரத்தின் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 159

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 159 – வெள்ளி (03.07.2026) மாலை 6.30 மணிக்குப் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் என்ற கதையை எடுத்துக் கீழ்க்கண்ட படைப்பாளிகள் சிறப்பாகப் பேசினார்கள்.அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள். Topic: Virutcham Meet …

>>

அர்ஜுனன் /முகமூடி

“உங்க வெற்றியின் ரகசியத்தைச் சொல்லுங்க”பிரபல நடிகையைப் பார்த்துப் பத்திரிக்கையாளர் கேட்டார்.தன் வீட்டு சுவற்றில் மாட்டியிருந்த அந்த இரண்டு முகமூடிகளை கையில் எடுத்துக்கொண்ட அவள் சொன்னாள்..“நான் எப்பவும் அணிஞ்சுக்கிற இந்த ரெண்டும் தான்”“இவைகளை நீங்க அணிஞ்சு நாங்க பார்க்கவே இல்லையே?”“இவை வெறும் உருவகம் …

>>

மரு.ச.கந்தசாமி/கன்னத்தில் குழி அழகு

காலையில் அலாரம் அடிக்கும் முன்னே எழுந்து பார்வதி” அம்மா காபி ரெடியா ?என்று கேட்டுக் கிச்சனுக்குள் ஓடினாள். அவள் அம்மா அம்புஜம் ” ஆமாண்டி எழுந்ததும் பல்லலம்பிண்டு காபிகுடிடா “என்றாள். பார்வதி பேங்கில் மேனேஜர் வேலை. காபி குடித்தபடியேபார்வதி” அம்மா இன்றைக்கு …

>>

அழகியசிங்கர்/ஒரு நாடக நடிகை

அவள் ஒரு நாடக நடிகை. பல பெண் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள்.அப்படி நடிப்பதால் அவளுக்கு அவள் யார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. கண்ணகி பாத்திரமேற்று நடிக்கும்போது அவள் ஆவேசமாக மாறி விடுகிறாள். திரௌபதி பாத்திரத்தில் நடிக்கும்போது அவள் எல்லா ஆண்களையும் ஒரு …

>>

சுஸ்ரீ/நூலகமும் போலி முகமும்

ரகோத்தமன் லைப்ரரியன் புதுசா வந்திருந்த புஸ்தகங்களுக்கு ஸ்டாம்ப் குத்தி ஏதோ எழுதி வேலை பாத்திட்டிருக்கறப்ப அவ வந்தா.எங்கயோ பாத்த முகம்போல இருந்தது.ஆனா கூண்டுக்குள்ள உக்காந்த கிளி மாதிரி இப்படியொரு முகம் வேணும்னே தன் அழகை மறைக்க வேஷம் போட்டது போல இருந்தா.வாரம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/தவிப்பு..!

அவளது முகம் அக்னியாய் எரிந்து கொண்டிருந்தது.“காலைலயே உங்களுக்கு நினைவு படுத்தினேன்ல. அப்போ சரின்னுட்டு இப்போ முடியாதுன்னா..? ஏங்க புரிஞ்சிக்கோங்க.. இப்போ ஒரு முக்கியமான நேர்காணல் நடத்துறேன். பாப்பாவை இப்போ உடனே கூப்பிடப் போக முடியாதுங்க” எதிர்த்துமுனையில் அவளுக்கு ஆதுரமான பதில் கிடைக்காமல் …

>>

இந்திரா ராமநாதன்/அதிகாலை அவசரம் !

என்ன சத்தம் இந்த நேரம்ஆவியோடு தூக்கி நின்று“உஷ் “ என்றது குக்கர் !விசில் சத்தம் மனம் எண்ண,“கா கா “என்று சன்னலில் சத்தம் !“அக்கக்கோ “ சத்தம் ! “ம்ம்ம்ம்” ரீங்காரமாய் மோட்டார் சத்தம் ,“பூ “பை” மாட்டிட்டேன் சத்தம் !“காபி”யைப்பையன் …

>>

சிவகாமசுந்தரி நாகமணி/ஒரு தேவதை வந்து விட்டாள் …

சுகன்யாவுக்குக் கோபம் கோபமாக வந்தது . அலுவலகத்தில் ஆடிட்டிங் நேரம் அது. அதிக வேலைகள் . வீட்டிலோ பாவம் ஸ்வேதா குட்டிக்கு உடம்பு சரியில்லை .உதவிக்கு யாரும் ஆள் இல்லாமல் தவித்துத் தான் போனாள் .குழந்தைகளுக்கு உடம்பு முடியவில்லை என்றாலே அன்னைக்குத்தான் …

>>

புத்திசாலி ஓவியர்

ஒரு காலத்தில் வயதான திருமணம் ஆகாத ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் செல்வந்தியாக இருந்தாலும், அவளுடைய நடத்தையில் பல விசித்திரங்கள் இருந்தன. அவளுக்குப் பல வினோதமான ஆசைகள் இருந்தன. ஒருநாள், தனது உருவப்படத்தை வரைய ஒரு ஓவியரை அழைத்தாள். …

>>

கவிஞர் புவியரசு கவிதை ஒன்று

தந்தை மகற்காற்றும் உதவி இதைப் பார் மகனே!மனதில் பதிய வைத்துக்கொள்!எதற்கும் படமெடுத்துக் கொள்!இது மண் சாலை அன்று,ஒரு காலத்தில் நீரோடிக்கொண்டிருந்தஉனது நதி.நீ அமரிக்காவுக்குசம்பாதிக்கப் போயிருந்தபோது,இதை விற்று விட்டார்கள்.என்னை அவர்கள் கேட்கவே இல்லை.நான் காய்ச்சலில்படுந்திருந்தபோது நடந்திருக்க வேண்டும்.உன் அம்மா சொல்லித்தான்தெரிந்தது.ஆற்றங்கரையில் குளிக்கப் போனபோதுஅது …

>>