அழகியசிங்கர்/விருட்சம் கவிதைகள் தொகுதி 1

விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன். 230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120. ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே. வேண்டுவோர் தொடர்பு கொள்

>>

சுஜாதா தேசிகன்/சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது !

சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ஒன்றில்: ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள்.

>>

வண்ணதாசன் கவிதை

அவர் வேலை பார்த்தபள்ளிக்கூடம் வழியாகத்தான்அருணாசலம் வாத்தியாரைத்தூக்கிக்கொண்டு போனார்கள்.காரை பெயர்ந்தகரும்பலகைக்கு உள்ளிருந்துஎட்டிப் பார்த்தனஅகர முதல எழுத்தெல்லாம்.‘ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று’ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்தப்பிருக்கிறதா எனக் கவனிக்கதலை சற்று அசைந்துசாய்ந்தது போல் இருந்தது.‘ உருவாய் அருவாய் …’உதடசைத்து அவர் பாடுவதற்குள்திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்ததுதெருவெல்லாம் பூ உதிர்த்தஅவருடைய தேர்.

>>

கலைச்செல்வி /

இதெல்லாம் ஒரு ஆசையா என்று சிரித்துவிட்டு போனார்கள்
நான் இன்னும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்

>>

எஸ் வி வேணுகோபாலன்/உள்ளப் பொங்கல்

அடுப்பில்பொங்கும் போதேஉள்ளத்தில்பொங்குகிறதுஉற்சாகப் பொங்கல்! உதடுகள் பொங்கும்தன்னிச்சையாக…உள்ளம் பொங்கினால் தான்உல்லாசப் பொங்கல்! உள்ளமே ஓர்அடுப்பு தானே பல போதுஅனல் பொங்கும்சில போதுகுளிர்ந்து இருக்கும்அவ்வப்போதுநீறு பூத்த நெருப்பாயிருக்கும்! என்னென்னவோ பொங்கிக் கொண்டிருக்கும்ஓய்வில்லா உள்ளத்தில்அன்பு பொங்குகையில்அட்டகாசப் பொங்கல்! அமைதி குடியேறி விடுகையில்மௌனப் பொங்கல்! எல்லோர்க்குமானஇன்பம் பொங்கும்வரம் …

>>

பாவேந்தர் பாரதிதாசன் /முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே…..

முன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியே,
இந்நாள் மட்டும் இளமை மாறாமல்,
புதிது புதிதென்ப் போற்றும் பரிதியே ,
இந்நாள் புதுமையிற் புதுமை

>>

கலைச்செல்வி/நினைவுப் பூனை .. இப்படித்தான்

.*** நேற்றே தீர்மானித்திருந்தேன்நாளைக்குள் ஒரு பூனை படத்தை வரைந்து விடவேண்டுமென்று. மெது மெதுவாக வரைந்து முடித்து விட்டேன்கொஞ்சம் பூசினார்ப்போல் வந்துவிட்டதுமற்றபடி அது நான் வரைந்த பூனை இப்படியே இரு என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிடம் வெளியே போய்விட்டு வந்தேன் வெகுநேரமாக பசியில் …

>>

புவனா சந்திரசேகரன்/செயற்கையில் இயற்கை

82 ஆவது இணைய காலக் கவியரங்கம்! என் வீட்டின் எதிரே ஒருசெயற்கைத் தோட்டம்!நெகிழித் தொட்டிகள்போன்ஸாய் மரல்ங்கள்குள்ளர் சாம்ராஜ்யம்செயற்கை தலைவிரித்துஆடுகிறதுஇலையில்லா மரக்கிளைகள்குச்சி குச்சியாகசதையில்லா எலும்புக்கூடுகள்நட்ட நடுவில் ஒரு மரம்திடீரென ஒருநாள்ஒரே ஒரு மலர் மொட்டுதுளிர்த்தது!வியந்து நின்றேன்!அருகில் சென்றேன்!என்னை இங்கிருந்துஅகற்றி விடு என்றுஎன்னிடம் கெஞ்சியது!மூச்சு …

>>

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி/பிரம்ம ஞானம்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 62/ எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை . தலைப்பு பிரம்ம ஞானம் . பிரம்மத்தின் ஆதி நிலையான இறைவெளி முதல் ஆறறிவு கொண்ட மனித மனம் …

>>

ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்நாள் 19.12.23 வளர்க்கும் கிளிக்கொருதுணையாகப் பொம்மைக்கிளியொன்றை வாங்கிவாவென்றாள் மகள். கிளியின் நிறத்தைச் சற்றேனும்ஒட்டியிருக்கவேண்டுமென்றுகடைகடையாய் ஏறியிறங்கிப்பார்த்த கிளியெதிலுமில்லைஅதற்கான நிறம்.. பரவாயில்லை உருவத்தில்இருந்தால் போது மென்றாள்.. போதும் தான் போலிருக்கிறதுபொம்மைக் கிளியிடம்உறவாடிக் களிக்கிறதுஉயிர்க்கிளி.

>>