சிவந்த சிறு துளி விசிறல்கள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

கடல் வா வா என அழைத்தபோது
கைகள் கோர்த்து நீராட ஓடினோமே
களிவெறி ஏறி அலைகளில்
ஆடையற்று புரண்டோமே
அவ்வசைவுகளின் நளினங்களெல்லாம்
என் கனவுகளில் வருவதில்லை
பிரம்மாண்டத்தின்

>>

மெளன விரதம்/உமா சக்தி

இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!

>>

எந்தப் பறவை எப்போது வாலாட்டும்/எம் டி முத்துக்குமாரசாமி

ஹலோகார்லோஸ் காஸ்டனாடாஉற்சாகமாக இருப்பதற்கும்மனமுடைந்து இருப்பதற்கும்ஒரே அளவு பிரயத்தனம்தான் தேவைஎன்றீரல்லாவா?ரஷ்ய- உக்ரெய்ன் போர்ஆரம்பித்த உடனேயேகொரொனோ போன இடம் தெரியவில்லைமருந்து வியாபாரத்தின் போதுவீடடைந்து லயம் தொலைந்ததுஇப்போதுஆயுத வியாபாரத்தின் போதுவெளி அடைந்து மனம் பிசகியதுபிரயத்தனம் ஏதுமில்லைகுளிர் நீர் பூவாளி அடியில்தினமும் எவ்வளவு நேரம் நிற்கவேண்டும்?எந்தப் பறவை …

>>

எழுதிவிட்டாய் வருந்துகிறாய்/எம் டி முத்துக்குமாரசாமி

இரவுகளைக் கடப்பது எவ்வளவு
பெரிய சாகசமாய் மாறிவிட்டது
விட்டத்தை விட்டேத்தியாய் பார்த்தோமா
விட்டு விடுதலையாய் உறங்கினோமா
என்றில்லை எந்த இரவும்

>>

தாய்க் குருவித் தவிப்பு /நாகேந்திர பாரதி

இலைக்கூட்ட இருட்டுக்குள்ஊடுருவும் ஒளிக்கீற்றுதலையாட்டிக் கீச்சிட்டுதாய்க்குருவி நெளிப்பு விடும் இறக்கைக்குள் குஞ்சுகளைஇரவெல்லாம் வருடியதால்பறக்கின்ற முயற்சிக்குமுறுக்குகின்ற பயிற்சியது குஞ்சுகளின் வாய்ச்சிவப்பில்பசி வழியப் பார்த்துவிட்டுகூட்டத்து குருவிகளைக்கூப்பிட்டுச் சிறகடிக்கும் இலைமோதிப் பறக்கின்றஏராளச் சிறகுகளின்சளசளப்பில் சலித்தபடிதலையாட்டும் மரக்கூட்டம் பக்கத்து வயல் வெளியில்பரவிக் கிடக்கின்றதானியத்தைக் குறிவைத்துத்தானாக வழி போகும் வேட்டைக் …

>>

புத்தகக் காட்சி சிந்தனைகள் 2/அழகியசிங்கர்

புத்தகக் காட்சியில்எப்போதும்நான் சிங்கிள்ஸ்டால்தான்ஒவ்வொரு முறையும்என் ஸ்டாலில்ஸ்டால் கிடைக்காதவர்கள்புத்தகத்தை அச்சடித்தவர்மூட்டை நிறையபுத்தகங்களைவைத்து விட்டுப் போகிறார்கள் பின் யாரும்என்னிடம்வருவதில்லையே…

>>

புத்தகக் காட்சியில் அமர்ந்து இருக்கிறேன்
என் முன்னால்

>>

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே /டாக்டர் பாலசாண்டில்யன்

பக்கத்தில் எது நின்றாலும்பிடித்துக் கொண்டுமேலேறுகிறது கொடிஅருகில் எது இருந்தாலும்பிடித்துக் கொண்டுவிடுகிறது பாக்டீரியாகணினிகளை கைதுசெய்யும் வைரஸ்கள்எதிரில் எவர் இருந்தாலும்ஏமாற்றத் துடிக்கும் மனிதர்மறு புன்னகை வீசி விட்டாலேகாதல் சொல்லும் இளைய சமூகம்புத்திமதி யார் சொன்னாலும்தூக்கி எரிந்து பேசும் குழந்தைகள்வருவது எவராக இருந்தாலும்கையூட்டு வாங்கி விடும் …

>>

சுருங்கின ஒரு 76/வண்ணதாசன்

எனக்கு 76 வயது ஆனது மறந்துவிட்டது.
தட்டானைப் பிடித்துச் சிறு சரல் கல் தூக்கவைத்தேன்.
கால் இழைகளில் தட்டான் கல்லை உருட்டித் திணறியது.

>>