முறைதெரியாக் கதைகள்/கால சுப்ரமணியம்

நபக்கவ் (Vladimir Nabokov) எழுதிய நாவல்கள் நவீனத்துவ நாவல்கள் அல்ல. சொல்லப்போனால் போர்ஹே, நபக்கவ் போன்றவர்களின் படைப்புகளின் அடிப்படையிலேயே பின் நவீனத்துவக் கோட்பாடுகள் மலர்ந்தன எனலாம்.

>>

கருங்கண்ணி பிள்ளையார்/ப்ரியா கல்யாணராமன்

நந்தவனம் என்று சொல்லப்படுகிற நான்கைந்து நந்தியாவட்டை மரங்கள் மட்டுமே இருக்கின்ற அந்த இடத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தான் வேம்பு. எட்டு வயதுப் பையன். வல இடதாய்ப் பூக்கூடையை மாட்டிக்கொண்டு ஒவ்வொன்றாய்ப்

>>

ஓஷோவின் ஞானக் கதைகள்

வந்தவன் தைத்து முடிக்கப்பட்ட ஆடையை அணிந்து பார்த்துவிட்டு, ஒரு கை மற்றொரு கையைவிட நீளம் அதிகமாக இருப்பதைக் கண்டு முணுமுணுக்க ஆரம்பித்து விட்டான்.

>>

லா.ச.ரா/சாருநிவேதிதா

பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக

>>

இனிக்கும் தமிழ் – 151/டி வி ராதாகிருஷ்ணன்

யூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன்? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால்

>>

நோபல் பரிசு ஏற்புரை
(எதற்கும் இருக்கட்டும் என்று)/பேயோன்

பெரியோர்களே-தாய்மார்களே, இங்கு கூடியிருக்கும் பதிப்பாளர்களே, படைப்பாளிகளே, இதனை உலகெங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிக வாசக எழுச்சிகளே, என் சூழலைச் சேர்ந்த சிலரின்

>>

காகித நிலவு/எம் டி முத்துக்குமாரசாமி


ஸ்டுட்கார்ட் ந்கரில் எனக்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் வரவேற்பாளர் எனக்கு ஏழாவது மாடியில் உள்ள தோட்டத்தைப் பார்த்த அறை வேண்டுமா அல்லது ஐந்தாவது மாடியிலுள்ள தெருவை நோக்கிய அறை வேண்டுமா என்று கேட்டார். நான் அவரிடம் நானொரு நிலவு கவனிப்பாளன் எந்த அறையிலிருந்து பார்த்தால் நிலவு தெரியுமோ அந்த அறையை எனக்குக்கொடுங்கள் என்று கேட்டேன். அவர் எனக்கு ஐந்தாவது மாடி அறையைத் தந்தார். என் அறையின் ஜன்னல் திரைச்சீலையை விலக்கியதுதான் தாமதம் தெரு, தெருவின் இரு பக்கங்களிலும் உயர்ந்திருந்த அடுக்ககங்கள், அதை விட உயரமான மலையுச்சி திராட்சைத் தோட்டங்கள் அதன் மேல் தொங்கும் நிலவு எனக் காட்சி விரிந்தது. மறு நாள் அந்த வரவேற்பாளர் நிலவு உங்களுக்குத் தெரிகிறதா நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டார். ஓ அது ஒரு காகித நிலவு என சலித்துக்கொண்டேன். எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் வா ஒரு காபி அருந்தலாம் என என்னைக்கூப்பிட்டார். அவர் நடுத்தர வயது பெண்மணியாக உயரமாக இருந்தார். நான் நண்பர் ஜேபி அவருடைய ஹோட்டலிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தேன். இன்னும் நேரமிருந்தது. நாங்கள் காபி அருந்த உட்கார்ந்தோம். நான் ஏன் ஸ்டுட்கார்ட் நிலவை காகித நிலவு என்றழைத்தேன் எனக் கேட்க அவர் ஆர்வமாய் இருந்தார். நான் Nat King Cole-இன் பாடல் “it is only a paper moon” பாடலைக் கேட்டிருக்கிறீர்களா அதில் அது காகித நிலவு அதை எங்கே வேண்டுமானாலும் மாட்டலாம் என ஒரு வரி வரும்; அந்தப் பாடலைப் பற்றி முராகமி தன் நாவல் IQ 84இல் கூட எழுதியிருக்கிறார். இங்கே ஸ்டுட்கார்ட் கட்டிடங்கள் எல்லாம் ஒழுங்காய் பிரம்மாண்டமாய் காங்க்ரீட் வனங்களின் பகுதி போல இருக்கின்றன. இதன் நடுவே நிலவு காகித நிலவு போலவே இருக்கிறது என்றேன். அவர் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் உயர் நிதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாய் பணியாற்றுவதாய் சொன்னார். அவருக்கும் ஃபிராங்க்ஃப்ர்ட்டின் நிலவு காகித நிலவு போலத்தான் தோன்றியதாம் ஆனால் அவருக்கு அதை விவரிக்க சரியான வார்த்தை கிடைக்கவில்லையாம். நீ அதைச் சொல்ல சரியான வார்த்தை கண்டுபிடித்துவிட்டாய் என்றார். அவர் அன்றே ஃபிராங்க்ஃபர்ட் செல்ல இருந்தார் இல்லையென்றால் நாம் கொஞ்சம் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்கலாம் என்றார். எங்காவது எப்போதாவது என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டோம். அன்றிரவு காகித நிலவு மேலும் தேய்ந்திருந்தது.

>>

ஆய்க்குடி கிராமம்/ராமகிருஷ்ணன் தியாகராஜன் 

சமீபத்தில் அறிமுகமான ஒரு நண்பரின் தாய் 86 வயதை கடந்தவர். கடந்த மாத ஆரம்பத்தில், அவர் என்னிடம் கூறினார்: தீபாவளி முடிந்த மறுநாளிலிருந்து எங்கள் ஊரில் (தென்காசிக்கு அருகிலுள்ள

>>

இனிக்கும் தமிழ் – 150/டி வி ராதாகிருஷ்ணன்

இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. கோசலைக்கு
அளவிட முடியாத மகிழ்ச்சி. எல்லோருக்கும் தானம் தர்மம் எல்லாம் செய்தாள்.
பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.

>>

எஸ். சண்முகம் கவிதை

வெளிர் பச்சை முருங்கை இலைகளின்
அடர்விற்கிடையில்
மென்மஞ்சல் சிற்றிலைகள் சில
உடன் அசைவதை பார்த்துவிட்டு
வேறுபக்கம் திரும்பினேன்

>>

காதல் என்பது/ஜெயராமன் ரகுநாதன்

நான் முன்னே நடந்து போகும்போது ஒரு சின்ன பள்ளத்தைப்பார்த்ததும் திரும்பி “பாத்து வா, பள்ளம்” என்பதிலும், ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்ட த

>>

‘காதல்’ – தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்/கே.என்.சிவராமன்

வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன்

>>

நண்பரின் வாட்ஸ்அப் பதிவு

ஒருவருக்கு #தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன்

>>

அழகிய கிராமம் முழுவதும் பைத்தியக்காரத்தனம்/ராஜேஷ்குமார்

அழகிய கிராமம் முழுவதும் பைத்தியக்காரர்கள்: எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவிழ்த்த மர்மம் புத்தக வெளியீட்டில் பங்ககேற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார், தனது வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது கேள்வி கேட்ட வாசகர்கள் பொரும்பாலும், ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்டனர். அந்த கேள்வி, …

>>

இனிக்கும் தமிழ் – 148/டி வி ராதாகிருஷ்ணன்

“கொதிக்கும் நீரில் ஆமை” போல என்கிறார் நாவுக்கரசர்
இது எதற்கான உவமை..கொதிக்கும் நீரில் ஆமை என்ன செய்யும்..
இதற்கான விளக்கம் என்ன..

>>

முதலில் கவிதை எழுதினேன்/எம்.ஜி.சுரேஷ் 

இந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன்? பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா? ஒருவேளை பி

>>

வண்ணதாசன் கவிதை

புடவை சுற்றிக் காயப் போடும்
சேலையின் மறு நுனிப் பெண் மீது
அப்பியிருக்கிறது வெட்கமற்ற வெயில்.
கல் பாலத்தில் தனியே நின்று

>>

என்ன செய்ய?/க நா சு

எங்கேயோ தொலைதூரத்தில்
கண்ணுக்கெட்டாத தொலைவில் ஒரு நாய்
குலைக்கிறது. அது என்ன மாதிரி நாய்
என்று எனக்குத் தெரியாது. கறுப்பா
பளுப்பா, வெள்ளையா, சடைநாயா

>>

நம்மை நாமே வாசித்தல் – அழகிய சிங்கரின் அஞ்சலட்டை கதைகளை முன்வைத்து சில குறிப்புகள்/அதங்கோடு அனிஷ்குமார்

நூற்றாண்டைக் கடந்த தமிழ்ச் சிறுகதை காலத்திற்கேற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. கதைப் போக்கிலும் கதை சொல்லல் முறையிலும் வரவேற்கத்தக்க மாற்றங்களை இந்த நூற்றாண்டில் பார்க்க

>>

திராவிட நல்திருநாடு/கோவை எழிலன்

இப்பாடலில் முதலில் உலகைக் கடல் என்னும் ஆடை அணிந்த ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். அவ்வுலகின் அழகிய முகமாக நம் பாரதம் திகழ்கிறது. அம்முகத்தின் நெற்றியாகத் தென்னிந்தியாவும் அந்நெற்றியின் திலகமாகத் திராவிடப் பொன்னாடும் திகழ்கின்றன. அத்திலகத்தின் நறுமணமாக

>>

அது தீபாவளி, இது தீபாவலி / எழுத்தாளர் ராஜேஷ்குமார்

1960களில் தீபாவளி மறக்கமுடியாதது. அப்போது எனக்கு 14 வயது இருக்கும். எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பத்தை விட சாதாரண குடும்பம். அப்பா

>>

உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது/எம்.டி.முத்துக்குமாரசாமி

சமீபத்தில் நண்பரொருவர் உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது அதன் அறுதியான விழுமியம் என்ன என்று கேட்டார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு

>>

பா.செயப்பிரகாசம் கடைசிப் பேட்டி…..

ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம்

>>

மடக்கு நாற்காலிகள்/குந்தர் க்ராஸ்

இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கி விடுகிறோம்.
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் – கறி சமைக்கிறோம்.

>>

500 படங்கள், மல்டி டாஸ்க், ரகுவரனின் அன்பு/ ரோஹிணி

“இந்தி உட்பட ஐந்து மொழிகளில், 500 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். அதில், 100 படங்களுக்கும் மேல் ஹீரோயின்! ஹீரோயினா நடிச்சப்போ தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வரலைன்னு

>>

இனிக்கும் தமிழ் – 149/டி வி ராதாகிருஷ்ணன்

திருவையாறில்உள்ள மலைகளில் குயில்கள் கூவி இனிய ஒலியை எழுப்புகின்றன,மலர்களில் இருந்து இனிய நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஜிலு ஜிலு என்று தென்றல் பாதம் வருடிப் போகிறது…அந்த

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 158/அழகியசிங்கர்

மீசைகள் பலவிதம் டி.வி.ராதாகிருஷ்ணன் பரங்கியனுக்கு அடிபணியாவீரபாண்டியன் மீசைகப்பலோட்டிய தமிழனின்தொங்கு மீசைமீசையிலும் வெள்ளையனைஅணுகவிடா பாரதி மீசைஅவரது தாசனின்அடர்த்தி மீசைபகுத்தறிவுப் பகலவன்பெரியாரின் தாடி மீசைகர்மவீரன் காமராஜனின்களையான மீசைதிருத்தணி மீட்டம.பொ.சி.யின் முறுக்கு மீசைடி.கே.சி.யின் இலக்கிய மீசைகலைஞரின் தமிழ் மீசைப்கருமீசை தெரியாவைரமுத்துவின் மீசைவாலியின் தாகூர் மீசை தாடிதமிழனின் …

>>

நீ ரசிக்க../கோ.முத்துசுவாமி

நீரசிக்க நானெழுத வேண்டும் நண்பா!
நிகழ்சுமையின் நகலெடுக்க கவிதை வேண்டாம்;
பூரசிக்கப் பொன்வண்டு; புனல் ரசிக்கப்
புகுந்தாடும் சிறுமீன்கள்! நுனிப்புல் தன்மேல்

>>

கதவு/ப.மதியழகன்

எங்குப் பார்த்தாலும்
கதவுகள் கதவுகள் கதவுகள்
தட்டப்படாத கதவுகள்
திறக்கப்படாத கதவுகள்
தட்டுவதற்கு முன்
யோசியுங்கள்

>>

வெங்கட்சாமிநாதன் நினைவு தினம் இன்று/அழகியசிங்கர்

சமீபத்தில் நான் பெங்களூர் சென்றேன். கிட்டத்தட்டப் பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன். எப்போதும் நான் பெங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரைச் சந்திக்காமல்

>>

இனிக்கும் தமிழ் – 147/டி வி ராதாகிருஷ்ணன்

கல்வி கற்றவர்கள் நம் நாட்டில் மிகவும் போற்றப் பட்டு இருக்கிறார்கள்.செல்வம், படை பலம் எல்லாவற்றையும் விட கல்வி மிகவும் போற்றப் பட்டு இருக்கிறது.

>>

பீட் கவிதை – ஆலன் கின்ஸ் பெர்க்

எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!

>>

குடை/ப.மதியழகன்

குடையின் உள்ளேமழை எட்டிப் பார்த்ததுமுதல்மழை வரும்வரைகுடைக்கு அஞ்ஞான வாசம்தான்யாரும் சீந்துவாரின்றிஒட்டடை படிந்துஓர் மூலையின் கிடக்கும்குடை ரிப்பேர் என்றுவருகின்றவனிடம் வாசலில்நின்று கத்தச் சொல்லும்கிழிசலை ஒட்டுப்போட்டால்மழைக்காலத்தை ஓட்டலாம்என்றாள் முதலாளியம்மாஐயா எப்பவும் போல்தலையசைத்தார்கும்மிருட்டு, இடி மின்னல்உள்ளே குதூகலம்காற்று வந்து கலைக்கும் வரைபட்டன் குடை வந்த பிறகுஇது …

>>

படி அளக்குறவரு பரமசிவம் /எஸ்ஸார்சி

குஞ்சுப்பாட்டிக்கு வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில் வீடு. அதுவும் கூரை வீடுதான். தன் கணவருக்கு சிவன் கோவில் நிர்வாகம் சொல்ப

>>

ஒரு நாயின்‌ காது – புக்மார்க் /எ.யாஸ்மின் பேகம்

புக் மார்க் என்பதற்கு பக்கக் குறி என்றும் புத்தகக் குறி என்பதாகும். இருந்தாலும் , பலர் நயக்குறி என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

>>

91வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 91வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. வெள்ளி அன்று – (21.10. 2022) – மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை …

>>

தென் ஆசியாவுக்குக் கிடைத்திருக்கும் புக்கர் பரிசு/யமுனா ராஜேந்திரன்

ருஸ்டி, ஓன்டாஜி, அருந்ததி ராய் போன்றவர்களையடுத்து தென் ஆசியாவுக்குக் கிடைத்திருக்கும் புக்கர் பரிசு இவ்வாண்டு இலங்கையின் செஹான் கருணதிலகவுக்குக் கிடைத்திருக்கிறது.

>>

புக்கர் மேடையில் ஒலித்த தமிழ்!/கணேஷ் வெங்கட் ராமன்

உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுமேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான்

>>

எழுத்தாளர் பூரணி பிறந்தநாள் இன்று/க்ருஷாங்கினி

அம்மா, அண்ணன் என எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் போது, யார் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தருவார் என்கிற ஏக்கத்தில் அதை ஒரு கதையாக எழுதி

>>