சரியா பரமா? – ஸ்ரீராம்

பரமன் வரைந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு ஆளாளுக்கு ஒரு கருத்து கூறிக் கொண்டிருந்தார்கள். சிலர் அவனை சிவன் என்றார்கள். சிலர் அவனை சித்தர் என்றார்கள். சிலர் அவனை பித்தன் என்றார்கள். ஆளாளுக்கு ஒரு கருத்து கூறிவிட்டு சரியா என்பதுபோல் பரமன் முகத்தை பார்த்தார்கள். …

>>

மாம்பாக்கம் நாணா/பித்தன்

சாம்பலை உடலெங்கும் பூசியபடி, வெறித்த கண்களுடன் அமர்ந்திருந்தார் அந்த அகோரி. ஊரார் அவரை ஒரு பித்தன் என்று எள்ளி நகையாடினர். கையில் பிடித்திருந்த சுருட்டின் புகையை ஆழமாக இழுத்து வானத்தை நோக்கி ஊதினார். அவரது வலது கை சட்டென உயர்ந்து, ஒரே …

>>

லீலா ராமசாமி/அவனன்றி அணுவும் அசையாது

சத்திரத்தின் திண்ணையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தார் அந்தப் புதிய சாமியார். அவர் ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைக்க, அருகிலிருந்தவர் முகம் சுளித்தார். “ஏஞ்சாமி! ருத்ராட்சக் கொட்டையும் விபூதிப்பட்டையுமா சிவப்பழமா இருந்துகிட்டு, அந்தச் சிவத்தையே மறக்கடிக்கிற, அறிவை மழுங்கடிக்கிற இந்தக் …

>>

வனஜா முத்துகிருஷ்ணன்/பூச்சாண்டி

நெற்றி நிறைய விபூதிப் பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்து, சிவந்த தன் கண்களை உருட்டிக் கொண்டே வந்தவரைப் பார்த்து அந்த ஊரே அஞ்சியது. ‘யாருடி இவரு?பாக்கவே பயங்கரமா தலைய சாய்ச்சுகிட்டு நடக்கறாரு.’?என்று அவரைப் போலவே நடந்து கேலி செய்த கண்ணம்மா …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/புண்ணியகோடி

” ஏன்ட்டீ, டீ வச்சா சொல்ல மாட்டியா. ஆறி அவலாப் போச்சு. வரவர இந்த வீட்ல சாப்பாடு கூட ஏனோதானோன்னு பண்ண ஆரம்பிச்சுட்டே. எந்த நேரமும் மைபைலு, ஸீரியலுனுட்டு” பங்கஜத்தைத் தாளித்தெடுத்தார் அங்குசாமி. ஏதும் காதுல விழாத மாதிரி ஸீரியலில் மாமியார், …

>>

விஜி சம்பத்/மௌனகுரு

ஊருக்கு வெளியே இத்தனை வருடங்கள் யாராலும் கண்டு கொள்ளப் படாதிருந்த அந்தப் பாழடைந்த கோயிலில்நெற்றியில் பட்டை, கழுத்திலே ருத்ராட்ச கொட்டை. சிவந்திருக்கும் கண்கள். சடாமுடியும், விரலிடுக்கில் கனன்று கொண்டிருக்கும் சுருட்டு.இந்தக் கோலத்தில் ஒரு புது சாமியார். எந்தப் பிரச்சனை பற்றிக் கேட்டாலும் …

>>

பாலசாண்டில்யன்/சாமிக்கண்ணு

​நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் குங்குமப் பொட்டும் துலங்க, கலைந்த தலைமுடியும் அடர்ந்த தாடியுமாக அந்த அரசமரத்தடியில் அமர்ந்திருந்த அவரை ஊர் மக்கள் ‘சாமிக்கண்ணு’ என்று அழைத்தார்கள். ஒரு கையில் புகை சுருளும் சுருட்டு, மற்றொரு கையின் ஒற்றை விரல் வானத்தை நோக்கி …

>>

ஜெ.பாஸ்கரன்/தாய்மை

! “என்ன வள்ளி, கொழந்தைய தூக்கிட்டு எங்கப் போற?” கேட்ட சரோஜாவின் குரலில் சந்தேகம். வள்ளிக்கும், சரோஜாவுக்கும் அந்த மகப்பேறு மருத்துவ மனையில் பத்து வருடப் பழக்கம். ஆயாக்கள் ஆனாலும் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு அத்தனைப் பணிவிடைகளையும் கரிசனத்துடனும், முக மலர்ச்சியுடனும் …

>>

ஜி ஏ பிரபா/ஆசீர்வாதம்

“குழந்தையை எல்லார்கிட்டயும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிகோம்மா”…பூஜை முடித்துக் கிளம்பினார் சாஸ்திரிகள். ஹாலில் இருந்தவர்கள் கைகளுக்குள் தாவித்தாவி சென்றது குழந்தை.இரண்டு வயதுக் குழந்தை.பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு நோய் படுத்திக் கொண்டே இருக்கிறது. எப்போதும் ஒரு அழுகை.குழந்தைக்கு ஆயுஷ்ஹோமம் செய்தால் சரியாகும் என்றார்கள். ஹோமம் …

>>

ரிஷபன்/புது சாமியார்

அந்த மண்டபத்தில் அவன் பதினோராவது ஆளாய் உள்ளே வந்தான். ஏற்கனவே இருந்தவர்களின் முனகலை அவன் லட்சியம் செய்யவில்லை. தன் தோற்றத்தின் மீதான நம்பிக்கையா அல்லது மற்றவர்களைப் போல் ஒரு பிச்சைக்காரன் இல்லை என்கிற கர்வமா, ஏதோ ஒன்று. புகைப்பதும் தலையை எந்தக் …

>>

பாலசாண்டில்யன்/மயக்கும் சித்து

​”அம்மம்மா, நீங்க நாளைக்கு கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரீங்களா?” ​தன் குட்டி விரல்களால் அம்மம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, சித்து இதையே நான்காவது முறையாகக் கேட்டான். அவன் கண்களில் அத்தனை எதிர்பார்ப்பு. ​”நாளைக்கு நிச்சயம் வரேன் கண்ணா,” என்று சுந்தரி சிரித்துக்கொண்டே சொன்னாள். …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/ரெண்டு அம்மா

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு, அம்மா அத்தை இருவருடனும் வந்தபோது “உன் அம்மா யாரு?” என்று கேட்டார்கள்.நான் இருவர் கையும் பிடித்துக்கொண்டு நின்றேன்.டீச்சர் ஒன்றும் சொல்லவில்லை. புன்னகைத்தார்.அம்மாவின் கைகள் மெலிந்திருந்தன. ஆனால் அணைப்பு இறுக்கமாக இருந்தது.அத்தையின் கைகள் வலுவேறி இருந்தன. ஆனால் …

>>

ரிஷபன்/வாய்ப்பு

வாய்ப்பு தற்செயலாய்த்தான் சுகந்தியை சந்தித்தாள் பிரேமா. “ஏய் சுகா” இருவரும் அடுத்தடுத்த தெருக்கள் என்று புரிந்தது. பள்ளி நாட்களில் ஒன்றாய் சுற்றியவர்கள். இப்போது வாரம் ஒரு முறையாவது சுகந்தி வீட்டுக்கு பேரனுடன் வந்து விடுகிறாள் பிரேமா. சமயங்களில் இரண்டு முறை கூட. …

>>

அர்ஜுனன்/பாட்டி வைத்தியம்

மாலதியின் வீட்டுக்கு அன்றாட வேலைக்கு வந்த பணிப்பெண் அஞ்சலை, சின்னக் குட்டி ரித்தேஷின் சிரிப்பை பார்த்து, “குட்டி நேத்து முழுதும் அழுதுக்கிட்டு இருந்தானே, ஆஸ்பத்திரி போனீங்களா?” எனக் கேட்டாள். “நேத்து ஞாயிற்றுக்கிழமைனு எந்த கிளினிக்கும் திறக்கல. மல்டி ஸ்பெஷலாட்டி ஆஸ்பித்திரிக்கு போனா, …

>>

வி.பிரபாவதி/ஓம் நமசிவாய

அந்த சிவனே வந்து சொல்லட்டும். நான் விரதத்தை கைவிடுகிறேன் என்றார் சாம்ப மூர்த்தி. சமீப காலங்களில் உறவுகள், நாட்டு நடப்புகள், அரசியல், ஆன்மீகம் இவையெல்லாமே தடம் மாறிப் போவதாக நினைக்கிறார். “எப்போதோ ‘மாபாதகம் செய்தவனையெல்லாம் திருத்துவதற்காக விளையாடல்கள் நடத்தினானே! இப்போது என்ன …

>>

கரந்தை இந்து/குழந்தை யாரிடம்?

“நீ சொல்வதை ஏற்க முடியாது ராணி. உனக்கு அக்கா குழந்தைன்னா ,எனக்கு அண்ணன் வாரிசு எங்க வீட்டில் தான் வளரணும். நீயும், உங்க அம்மா அப்பாவும் அப்பப்போ பார்க்கலாம் . ஆனால் குழந்தையை உங்க கிட்ட விட முடியாது” என்று காட்டமாகச் …

>>

லால்குடி.வெ.நாராயணன்/மழலையின் உண்மை

​மாலையில் கமலா தன் கழுத்து மணியைக் காணாமல் பதறினாள். அவளது தங்கை விமலா விரலை வாயில் வைத்து, “அக்கா, வேலைக்காரி பொன்னிதான் எடுத்திருப்பாளோ?” எனச் சந்தேகத்தோடு கேட்டாள்.​அப்போது கமலாவின் மடியில் இருந்த சிறுவன் கவின், “அம்மா! மணி… பூனைக்குட்டி… பந்து விளையாட்டு!” …

>>

பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/சகோதரி பாசம்!

கமலிக்கு மணமாகி ஒரு குழந்தை,அவள்கணவன் ராமன் ஒரு ஐடி ஊழியர், கமலி வேலைக்காக அலைந்த சமயத்தில், அவள் சகோதரி நர்மதா படிப்பதற்காக சென்னைக்கு வந்து கமலி வீட்டில் தங்கினாள்.வேலைக்காக கமலி அலைந்த சமயத்தில் நர்மதா குழந்தையை பார்த்துக் கொண்டாள்.கமலிக்கு வேலை கிடைத்ததும், …

>>

பாலசாண்டில்யன்/அடுப்பில்லா சமையல் தர்பார்!

​மாப்பிள்ளை வீட்டார் வருகைக்காக ராகவன் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. மாப்பிள்ளை அசோக் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் தந்தை விஸ்வநாதன் கொஞ்சம் ‘வித்தியாசமான’ பேர்வழி. ​நிச்சயதார்த்தப் பேச்சுக்கள் மெல்ல நகர்ந்தபோது, விஸ்வநாதன் தனது வழக்கமான பாணியில் கேள்விக் கணைகளைத் …

>>

ஜே. செல்லம் ஜெரினா/சித்ராவின் குழந்தை!

“சித்ராக்கா நீ வேலைசெய்ற இல்லத்துலே இவனை சேர்த்துடுறீயா! “ “ச்சீ! வாயைக் கழுவு. கல்லுகுண்டாட்டம் பெத்தவங்கயிருக்க பச்சைமண்ணை அனாதைன்னு சொல்றே “ “எந்தலையெழுத்துக்கா! இவன் நார்மலா இல்லேன்னு உனக்கே தெரியுமே! இவங்கப்பனுக்கு அவமானமாயிருக்காம்..இவனை தலைமுழுகிட்டு வான்னு புருஷன் படுத்துறான். “ “பெத்தபுள்ளையை …

>>

எஸ்.எல். நாணு/ம்மா

செண்ட்ரல் ஸ்டேஷன்.அவள் குழந்தையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.“என்னங்க அப்படிப் பார்க்கறீங்க?”இவள் கேட்டாள்.“குழந்தை நல்ல களையா துரு துருன்னு இருக்கு. உங்க குழந்தையா?”அவள் பதிலுக்குக் கேட்டாள்இவள் கொஞ்சம் தயக்கத்துடன்“வந்து.. ஆமா””என்ன பேரு?”இவள் மௌனமாக இருந்தாள்.“பெயர் கேட்டா என்ன யோசிக்கறீங்க?”“வந்து.. ஷ்யாம்”“நல்ல பேர்.. கிருஷ்ண பகவானோட …

>>

ரேவதி பாலு /பொறுப்புத் துறப்பு

“ஏய் தங்கம் நீ இங்கேயா இருக்க?”இடுப்பில் இடுக்கிய குழந்தையுடன் திரும்பிய தங்கம் தன் பள்ளி தோழி லீலாவை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். “என்ன லீலா ? நீ கல்யாணம் ஆகி அமெரிக்கா போயிட்டேன்னு சொன்னாங்க? “அங்கேதான் இருக்கிறேன் . சும்மா இந்தியாவுக்கு …

>>

கௌரி சங்கர்/அன்னையர்கள்

அன்றைய தினம் ஆனந்துக்கு பிறந்த நாள். மாலை ஏழு மணிக்கு ஒரு ஹோட்டல் சிற்றரங்கத்தில் நடந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினர்.ஆனந்தின் தாயார் சுமதிக்கு அளவு கடந்த சந்தோசம். அவளுடைய தோழிகள், உறவினர்கள் என்று பலர் வந்திருந்து பரிசுகளை …

>>

நாபா.மீரா/ஆண் வாரிசு

‘கற்பக விருட்சம் சிறார் காப்பகம் ‘, தன் ஆறு வயது மகன் முகிலுடன் உள்ளே நுழைந்தாள் அனுபமா. தோட்டத்தை சுற்றிப் பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து சற்றே அதிர்ந்தாள். “சிவகாமி நீ இங்கே என்ன செய்யறே?” “வேலை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்தில் …

>>

அழகியசிங்கர்/மடி

அன்னம்மா குழந்தையைத் தூக்கிட்டு வந்து விட்டாள். இது அவளுடைய 5வது குழந்தை. இது சாமர்த்தியமான குழந்தை.அவள் இடுப்பை விட்டே இறங்க மாட்டேங்கறது.கொஞ்சம் இறக்கி விடலாமென்று பார்த்தால் பெரிதாகக் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறது.அன்னம்மாவைப் பார்க்கிறவங்க அவள் இப்படி குழந்தையைத் தூக்கிண்டு எங்கும் போகிறாளே …

>>

சசிகலா விஸ்வநாதன்/தங்கையின் பரிசு

” சுகந்தா! சொல்லுடி! என் திருமணத்தை முன்னிட்டு, நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்க நினைக்கிறேன். உனக்கு என்ன வேணும்; சொல்லு!” என்று தன் தமக்கையிடம் கேட்டாள்; மீனலோசனி.“கேட்டால், தட்டாமல் கொடுப்பாயா?” என்று சந்தேகத்துடன் சுகந்தா கேட்டாள்.”“என்னடி! உனக்கு என்ன, என் …

>>

நரம்பில்லா நாக்கு/கஸ்தூரி குருசாமி

வாசலில் யாரோ நிற்பது போல் தோன்றவே, செல்லம்மா போய் பார்த்தாள் அடுத்த வீட்டு தங்கம். வெளியூருக்கு போனவள் நாலு வருடத்திற்கு பின்பு வந்திருக்கிறாள். “தங்கம் எப்ப வந்த? அடடா உனக்கு குழந்தை இருக்கா? மறுபடியும் வந்து விட்டாயா?” “சிவகாசி போய் வேலை …

>>

பத்மா ராகவன்/நடிகை நடிக்கிறாள்

“ஏ சாந்தி. ரெடியா. குழந்தைக்கு வேண்டிய சாப்பாடு, துணிமணி எடுத்து வச்சிக்கோ. ரெண்டு நாள் ஏற்காடுல ஷுட்டிங். எனக்கு ரொம்ப டைட் ஷெட்யூல். கூடவே வந்தாலும் குழந்தை கிட்டகூட வரமுடியாது. பத்திரமா பாத்துக்கோ. டிரைவர் வண்டிய எடுங்க. கெளம்பலாம்.” பரபரத்தாள் நடிகை …

>>

எம்.ஷங்கர்/சுமை தாங்கி

“ ஏன்டி இந்த புள்ளைய நீ பெத்த புள்ள மாதிரி தூக்கி கொஞ்சற ஆனா அந்த நடிகை இத தம் புள்ளைங்குது?” “ஆமா அவங்க புள்ளதான்” “ ஆனா நீ பெத்த புள்ளன்னியே? தத்து கொடுத்திட்டியா?” “ சே சே.. தத்தெல்லாம் …

>>

வி.பிரபாதேவி/நிதர்சனம்

நிதர்சனம் கையில் குழந்தையுடன் வந்து நின்ற மேகலையைக் கண்டு திடுக்கிட்டாள் அஞ்சலை. “இன்னாடி, இத்தினி காலைல ஒத்தையாளா புள்ளையத் தூக்கிக்கினு வந்தவ” “இன்னாத்தச் சொல்ல, நீ எனக்குக் கட்டிவச்ச ராச தொரைக்கு கூட்டரு வேணுமா. அதுக்கு துட்டு வாங்கிணு வரச்சொல்லி அனுப்பிக்கிறான்” …

>>

எம்.எல்.பிரபா/ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

“ விஜயா குழந்தையுடன் பக்கத்து வீட்டிற்கு வந்தாள். ராதா.. “இந்தா குழந்தையை பத்திரமா பாத்துக்கோ. 10 மணிக்கு நம்ம தெருவுல கடைசியில் இருக்கிற பேபி ஸ்கூலில் கொண்டு போய்விட்டுடு அவங்க பார்த்துப்பாங்க. மறுபடியும் 12 மணிக்கு போய் குழந்தையை கூட்டிட்டு வந்து …

>>

ஷைலஜா/லூட்டி

“அம்மா பாத்ரூம்ல கீழ விழுந்துட்டாங்களாம்.லால்குடிக்குப்போய் நான் பார்த்திட்டு சாயந்திரமாதிருச்சி வரேன் .அதுவரை நந்துவை நீ பார்த்து க்கிறியா?” என்று பக்கத்து வீட்டுக்கு புதிதாய் குடி வந்த விமலாவிடம்கேட்டாள் சரோஜா. விமலாவுக்கு மூன்று வயது நந்து சில மணிநேரங்கள் தன்னுடன் இருக்கப்போவதில் மிக்க …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/அதிர்ஷ்டம்!இல்லையா

அதிர்ஷ்டமா! இல்லையா?—————-++——- “பாக்கியம்.! உன் வீட்டுக்காரருக்கு அடி பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காராம். பக்கத்து வீட்டு அக்கா ஆஸ்பத்திரியில பாத்து உன் நெம்பர் கொடுத்துவிட்டு வந்திருக்காம்” “நான் என்ன செய்வேன்? அக்கா புள்ளையை பார்த்துக்க நான் போய் பார்த்துட்டு வர்றேன்.” பாக்கியம் ஒரு …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தியாகம்

“செல்லம்மா, உன் புருசன் இன்னைக்கு பட்டாளத்துலேருந்து வாராகன்னு சீவி முடிச்சுச் சிங்காரமா நிக்கயோ?” “ஆமாம்கா! அவுகளுக்கு நான் இப்டி இருந்தாத்தான் புடிக்கும்!” “அதுசரி, மத்த நேரத்துலயும் இப்படியே பளிச்சுனு இருந்தா நல்லாத்தான இருக்கும்! பரட்டைத்தலையும், கிழிஞ்ச சீலையுமா பைத்தியக்காரி மாதிரி இருப்ப!” …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/வறுமையில் செம்மை

. 123 வார்த்தைகள் ” வண்டியை நிறுத்துங்க குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கணும் “ அவள்   கீழே இறங்க தடுக்கி உணவு கூடை கீழே சிதறியது.   தூரத்தில் ஒரே ஒரு சின்ன வீடு தென்பட்டது.   “இங்கே குழந்தைக்கு உணவு கேட்க …

>>

விஜி சம்பத்/இது எப்படி இருக்கு?

“அக்கா.. அக்கா..” ராஜிக்கா வீட்டு வாசல்லருந்து அழைத்தேன். “உள்ளே வா வித்யா வேலையா இருக்கேன்” குரல் மட்டும் வந்தது. குழந்தையுடன் உள்ளே போனேன். “ஹை குட்டிமா எப்படியிருக்கீங்க?” ராஜிக்கா தூரத்திலிருந்தே குழந்தையைக் கொஞ்ச, “அக்கா இவளை இன்னைக்கு கொஞ்ச நேரம் பாத்துக்க …

>>

ரஸவாதம் – ஸ்ரீராம்

“என்னடி சரோஜா! கைல குழந்தை.. யாரோட குழந்தை?”. தவடையில் கைவைத்து நீலா வியந்தாள். ” அட அதை ஏன் அக்கா கேக்கறீங்க? இவர் எப்படி பார்த்தாலும் அகத்தியரிஷி ஆகாசமுனின்னு படிச்சு சாவில்லாத வாழ்வு கண்டுபிடிக்கறேன்னு அலைவார்னு தெரியும்தானே? அப்பப்ப எதையாவது அரைச்சு, …

>>

வண்ணம் /அப்புசிவா

பத்து ஆண்டுகளுக்குப் பின் செவ்வந்திக்கு குழந்தை பிறந்ததாக கேள்விபட்டு பார்க்க வந்திருந்தாள் கருப்பாயி. “பாத்து பத்து வருஷமாச்சுடி, உன் வீட்டை கண்டுபிடிக்கறதுக்குள்ள உசுரே போச்சு” குழந்தையை கையில் வாங்கி கொஞ்சினாள். “ஏன் செவ்வந்தி? தப்பா நினைக்காதே… உரிமையா கேட்கிறேன், நீயும் அவரும் …

>>

உமா ஸ்வாமிநாதன்/இரட்டைத் தாய்மை

அன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்காக வெளியே கிளம்பினாள் சுமித்ரா. கைகளில் அவளது மூன்று வயது மகன் ரிஷி. ரிஷியின் கலகலப்பான சிரிப்பும், அவனது மழலைச் சொற்களும் அந்த வீட்டின் அமைதியைக் கலைத்து மகிழ்ச்சியைப் பொழியச் செய்தன. ​உள்ளே சமையலறையிலிருந்துஅருகில் வந்து நின்றாள் …

>>

முனைவர் என். பத்ரி/பணிப்பெண்

சாந்தி தன்னுடைய மூன்று வயது குழந்தையுடனும் கணவன் குமாருடனும் தனிக்குடும்பம் நடத்துகிறாள். துணைக்கு இவர்களுக்கு வீட்டில் பெரியவர்கள் யாரும் உதவுவதற்கு இல்லை. எனவே பக்கத்து வீட்டு அலமேலுவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு மாலை வேலை முடித்த பின்பு வந்து திரும்ப பெற்றுக் …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/அப்பா

     வேளச்சேரி டிபார்ட்மெண்ட் ஸ்டோரில்  மஞ்சுளாவைப் பார்த்ததும் வசீகர் ஒரே தாவாகத் தாவி அவளது இடுப்பில் ஏறிக் கொண்டான்.  பார்த்துக் கொண்டிருந்த சாருமதிக்கோ தன் மகன் அத்தையை மறக்கவில்லை என்ற சந்தோஷம். சாருதான் முதலில் வாயைத் திறந்தாள்.  “எப்படியிருக்கே மஞ்சு? தரமணிலருந்தா …

>>

சுபாஷிணி ரமணன் /கொண்டாடும் இடத்தில்

பானுமதி முகத்தை மூடிக் கொண்டு, விசும்பிக்கொண்டிருந்தாள். அருகில் வந்த மாமியார் நீலா,  “சொல்லச் சொல்லக் கேக்காம போய்ட்டு வந்து இப்போ அழுதுட்டு நிக்கறே.சரி, போகட்டும் விடு. உனக்குன்னு ஒரு கண்ணன் வராமலா போகப்போறான்” என்று சமாதானப் படுத்தினாள். பானுமதிக்குத் திருமணமாகி மூன்று …

>>

சுஶ்ரீ/ஸ்வீகாரம்

“உன் பையன் நல்லா துறுதுறுப்பா இருக்கான்டி, நல்லா படிக்க வச்சா டாப்ல வருவான்.” அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சினாள் அடுத்த வீட்டு பத்மா. கமலம், “ஆமாம், நீ வேற, ஏற்கனவே உள்ள குழந்தைகளையே சரியா வளக்க முடியலை. மூணு  வேளை …

>>

கரந்தை  இந்து /மறுபடியும்  நட்பு

       காலை  எழுந்ததிலிருந்து  ரம்யா  பரபரப்பாக  எல்லா  வேலைகளையும்  முடித்தாள். இந்த  நாளுக்காக  எத்தனை  வருடங்களாகக் காத்திருக்கிறாள். அவன்  வருவானா?   . பந்தயத்தை இந்தத்  தேதியை  நூலகத்தை  எல்லாம் மறந்திருப்பானா? . எப்படி இருப்பான் ?.      எனக்கு  வயசான  மாதிரி  …

>>

நாபா.மீரா/ரோபோக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல வருடங்களாக இயங்கி வரும் பெரிய நூலகம். மறுசீரமைப்புப் பணி ஒரு புறம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அறை வாயிலில் பரணில் பல நாட்கள் இருந்ததன் காரணமாக ஒட்டடை படிந்து காட்சி தரும் புத்தகங்கள். செல் அரித்து இன்றோ, …

>>

தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/ப்ளெஸி

“எல்லா பசங்களும் ப்ளெஸி பின்னாடி அலையுறோம்; அவ என்னான்னா புத்தகம் பின்னாடி அலையுறா. எந்நேரமும் லைப்ரேரிதான். ஞாயிற்றுக்கிழமை கூட அரசாங்க லைப்ரேரிக்கு ஓடிடுறா. நாலஞ்சு பேரு கல்யாண ப்ரொபஸல் வரை போயிட்டாங்க. ஒரே கண்டிஷன். வீடு ஃபுல்லா புத்தகமாயிருக்கணும்மா. சரியான புத்தகப் …

>>

எஸ்.எல். நாணு/ஏன் பிறந்தாய்?

”நீங்கக் கேட்கற “ஏன் பிறந்தாய்?” புஸ்தகம் பப்ளிஷ் ஆச்சான்னே தெரியலையே” நான் வந்திருக்கும் நூற்றி பதினெட்டாவது கடை. இங்கேயும் அதே பதில். மனோதத்துவத்தைப் பற்றிய ஆய்வுக்கு என்னுடைய வழிகாட்டி அந்தப் புத்தகத்தைத்தான் சான்றாதாரத்துக்கு சிபாரிசு செய்திருந்தார். “எம்.ஆர். எழுதின அந்தப்புஸ்தகத்துல உனக்குத் …

>>

 கீதா ஆர்/மௌன  மொழி

புறநகர்ப்பகுதியில் குடியேறியிருந்தேன். புத்தகங்களைக் குழந்தை போன்று மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு கிழவர் அத்தெருவில் நடந்து கொண்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. “கிழம் இதோடு 4, 5 தடவை போய்ட்டு போய்ட்டு வந்திருச்சு, வயசான காலத்துல இது தேவையா” “யாருங்க அவர்?” கேட்டேன். …

>>

வனஜா முத்துகிருஷ்ணன்/தாத்தாவின் பொக்கிஷங்கள்

வேலு தாத்தாவைத் தேடிக் கொண்டே வந்த சீனு, ‘இந்தத் தாத்தா எங்க போனாரு? ஒவ்வொரு வீடா தினமும் போயி பழைய புத்தகம் இருக்குதான்னு கேட்பாரு. இல்லைன்னா குப்பைத் தொட்டியைக் கிளறி அங்க ஒருவேளை புத்தகம் இருந்தா அதைத் தூசி தட்டி வீட்டுக்கு …

>>

அர்ஜுனன்/கரை கடந்த காதல்

ஃபிரான்ஸ் தேசத்திற்கு ராம் சுற்றுலா சென்றபோது, அந்த நூலகத்தில் தற்செயலாக அந்தப் புத்தகத்தைப் பார்த்தான். “கண்ணீர் பூக்கள்” கவிதை தொகுதி. அட்டைப் பக்கத்தைப் புரட்டியவுடன் வந்த முதல் பக்கத்தில். ‘கரை கடந்த காதல்’ என்ற குறிப்புடன் இரண்டு கையெழுத்துக்கள். முதலாவது அவனது …

>>

அ. கௌரி சங்கர்/ஏணிப்படிகள்

நூலகத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன பேரன் கணேஷை கூட்டிக்கொண்டு வந்தார் தாத்தா ஷண்முகம். “என்ன தாத்தா – குப்பை மாதிரி அடுக்கி வைச்சிருக்காங்களே ?” “அதற்கும் காரணம் இருக்கிறது. வாசலில் இங்கும் அங்கும் சொருகி வைத்திருக்கிறார்களே அவை அனைத்தும் சில …

>>

எம்.எல்.பிரபா/காளி

“காளி” பஸ்ஸில் தனக்கு முன்னால் நின்ற வாலிபனி டத்தில் பிக் பாக்கெட் அடித்துப் பர்சை கையில் வைத்திருந்தான். மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அடுத்து வந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கினான்.நிம்மதி பெருமூச்சுவிட்டு திரும்பியபோது அங்கே ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டு போனில் …

>>

பத்மா ராகவன்/தினப்பலன்

“இன்று உன்னால் யாரோ ஒருவர் மகிழ்சியடைவார்” காலைப் பேப்பரில் தினப்பலனைப் படித்துச் சிரித்துக் கொண்டார், அரசு நடத்தும் நூலகத்தில் அந்த ஏரியா ப்ரான்ஞ்ச் பொறுப்பாளரான  சபேசன். ஆனால் நாள்பூரா ஏதும் நடக்கலை. மாலை நாலு முதல் ஏழுவரை திறக்கப்படும் லைப்ரரிக்கு வந்தவர், …

>>

எம். ஷங்கர்/ கண்ணாயிரம்

நண்பன் இந்திரனின் புதுமனை புகுவிழாவிற்காகச் சென்ற  கௌதமை இந்திரன் உற்சாகமாக வரவேற்று வீட்டைச் சுற்றிக்காட்டினான். “ இங்க பாரு. இந்த அறை முழுவதும் புத்தகங்கள்.” என்று பெருமையாகக் காட்டினான் ஏனென்றால் கௌதம் ஒரு புத்தகப் புழு. அடிக்கடி இந்திரன் அவனிடமிருந்து புத்தகங்களை …

>>

கிரிஜா ராகவன்/கனவில் கூட…!

நினைத்துக் கூடப் பார்த்ததில்லை, கனவில் கூட! இப்படியொரு கடற்கரையில் அமர்ந்திருப்போம் என்று! சொர்ணா, செல்வி இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.இரட்டையர்கள்போல் பிறந்ததிலிருந்து ஒன்றாய் வளர்ந்தவர்கள். மீன்பிடி குடும்பம். ஆண்கள் கடலுக்குச் சென்று விட, எல்லாப் பெண்களையும் போல் கருவாடு விற்பது தான் இருவரின் …

>>

கஸ்தூரி குருசாமி/புத்தகம் தரும் பாடம்

தினேஷ் ஒரு நேர்காணலுக்குச் சென்றான். அந்த அமைப்பின் தலைவர் இந்தப் படத்தைக் காட்டி உங்கள் மனதில் தோன்றுவதெல்லாம் கூறுங்கள் என்றார். தினேஷ் பதில் சொல்ல ஒரு வினாடி தயங்கினான். பின்பு,  புத்தகங்கள் அறிவை, பல கருத்துக்களை கூறுபவை.அதுபோல் நம் மனமும் அடிப்படையில் …

>>

லீலா ராமசாமி/புத்தக வாசல்

ஒரு ஃப்ரெஞ்ச்காரர் நடத்திய பழைய புத்தகக் கடையின் வாசல் முழுவதும் புத்தகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைத் தினமும் வந்து பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்த். வீட்டில் வறுமை; புத்தகம் வாங்கப் பணமில்லை. ஆனால் வாசிக்கும் ஆசை மட்டும் குறையவில்லை. ஒருநாள் கடைக்காரர் அவனைப் பார்த்து, “எதற்காகத் …

>>

அழகியசிங்கர்/சம்மதம்

எக்மோரில் தனி இடத்தில் விஸ்தார பரப்பளவில் உள்ள அந்தப் பழைய  நூலகத்திற்கு நான் வாரம் ஒருமுறை செல்வேன். அப்போதுதான் கவனித்தேன். அந்தப் பெண்ணும் அங்கு வருகிறாள் என்று. நூற்றாண்டாகச் சேகரித்த நூல்களை அங்குப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று. ஒருமுறை புத்தகம் தேடிக் …

>>

ஜெ.பாஸ்கரன்/பழைய புத்தகங்கள்!

‘காலம் மாறித்தான் போய்விட்டது’ மனதிற்குள் நினைத்துக்கொண்டார் முதியவர் மாணிக்கம். அந்தப் புராதன லைப்ரரியின் நூலகராக வேலை செய்த நாட்களை என்ணிக்கொண்டார். எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் புத்தகங்கள் இலட்சக் கணக்கில் பிரிவு வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம். புத்தகமும் கையுமாக – கைபேசி …

>>

ஸ்ரீராம் /ரசனை கெட்டவர்கள்

சாவியை வாங்கிக் கொண்டு சுத்தம் செய்ய உள்ளே வந்த சொர்ணாவுக்கு அந்த இடத்தைப் பார்த்ததுமே ‘சொரேர்’ என்றது.  இந்த அடைசலில் எங்கோ 3 தங்கச்சாவிகள் இருக்கின்றதாம்.  அதைத் தேடி எடுக்க வேண்டுமாம். அலங்கார வளைவுபோல அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததும் ‘சுர்’ …

>>

வி.பிரபாவதி/புத்தகக் குவியல்கள்

கோபாலன் சேர்த்து வைத்துள்ளப் புத்தகங்கள்.  அத்தனையும் தான் படித்தது என்கிறார்.  இருந்தாலும் இருக்கலாம்.  ஆம்.  அவரிடம் அரை மணி பேசினால் போதும்.  ஆயிரக்கணக்கான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். விஷ்ணுவிற்கு எப்படியாவது அந்தப் புத்தகம் இவரிடம் உள்ளதா என்று தெரிந்தாக வேண்டும்.  இருக்கு …

>>

தி.வள்ளி/ பொக்கிஷம்

“அந்தப் பாழடைஞ்ச ஜமீன் பங்களா நமக்கு எதுக்கு? உங்க அண்ணனுக்குக் கொடுத்துடுங்களேன்.” “கனகா நீ பேசாம இரு,” அதட்டினான் நகுலன். அப்பா இறக்கும்போது, “நகுலா பங்களாவுக்கு கீழே பொக்கிஷம் இருக்குன்னு உங்க தாத்தா சொல்லியிருக்கார்,” என்றாரே. கேஸ் ஜெயிச்சு பங்களாவும் பொக்கிஷமும் …

>>

சுபாஷிணி ரமணன்/நினைவுப் பரிசு

அந்தப் பிரம்மாண்டமான வீட்டின் ஒரு அறையின்  நுழைவு வாயில் மட்டும் புத்தகங்களால் ஆக்கப் பட்டிருந்தது. அங்கு ப்ரெஞ்ச் எழுத்துகளில் எதோ எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் எங்குப் பார்த்தாலும் புத்தகங்களே அறையிலும் நிறைந்திருந்தன. புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு அது புதுமையாக இருந்தது. ப்ரதீப் நாராயணனிடம் …

>>

சுஶ்ரீ/நாங்கள் என்ன குப்பையா?

‘சப் டெ பப்’ பாரிஸ் நகரின் ஒரு பெயர் பெற்ற கம்யூனிகேஷன் & அட்வர்டைசிங் ஸ்கூல்ல ஒரு நூலகம் நான்.  ஜீன் ஆன்ட்ரே என் பிதா எவ்வளவு ஆசையா கட்டினார்.  இதில் கிடைக்காத புஸ்தகங்களே இல்லையென அமைக்கப் போறேன்னாரே? உலகெங்கும் இருந்து …

>>

உமா ஸ்வாமிநாதன்/ஏடுகளின் உறைவிடம்

​”ஏடுகளின் உறைவிடம்” என்ற பழமையான புத்தகக் கடைக்குச் சென்ற ரிஷி, நிறைய பழைய புத்தகங்கள் தேடினான். ​கடை உரிமையாளர் அவனிடம், “இங்குள்ள புத்தகங்களில் மனிதர்களின் கனவுகள் மறைந்துள்ளன,” என்றார். ​”இங்க நிறைய பழைய புத்தகம் இருக்கு. அதில் எங்கம்மா எழுதிய புத்தகம் …

>>

ஜே. செல்லம் ஜெரினா/ஊர்கூடித் தேர் இழுக்க!

 புத்தகங்கள்… புத்தகங்கள்.கண்ணில் பட்டதெல்லாமே புத்தகங்கள்.அபூர்வாவின் கைகள் நூல்களை வாஞ்சையோடு தடவின. ஒரு பெரியகூடத்தில் சுவரோரமிருந்த அலமாரிகள் போதாமல் நிலைப்படியில் அடுக்கியதே ஆர்ச்போல நிற்கும். முன்னே சிறு அரைவட்ட இடம் குறிப்புகள் எடுக்கக் கொள்ள.எந்த நூலைக்கேட்டாலும் தடுமாறாமல் தாத்தா எடுத்துத் தருவார்.  தாத்தாவின் …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/மாற்றியது யாரோ?

பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான் கண்ணன். திடீரென மழை பெய்யத் தொடங்கியது.  கண்ணன் மழைக்காக ஒரு கடையில் ஒதுங்கினான். அது ஒரு பழைய புத்தகக் கடை. புத்தகங்களே தோரணமாகத் தொங்கியது. ‘இதுவரை இந்தக் கட்டிடத்தைப் பார்த்தது இல்லையே’ என்று தனக்குள் …

>>

சாந்தி சந்திரசேகரன்/புத்தகங்ளின் இடுகாடு.!

அந்தச் சேமிப்புக் கிடங்கில் கால் வைக்க முடியத அளவு வாசல்வரை புத்தகங்கள் ஆக்ரமித்து இருந்தன. ​கோடீஸ்வரர் நாகராஜனிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் இருந்தன. உலகின் பழமையான சுவடிகள் முதல் அழிந்த மொழிகளின் நூல்கள்வரை அவரிடம் இருந்தன. ​ஒருநாள் கட்டிடக்கலை …

>>

விஜி சம்பத்/பூர்வ ஜென்ம(புத்தக) வாசனை

நகரமுமல்லாத கிராமமுல்லாத அந்த இரண்டும் கெட்டான் ஊரில் அமைந்திருந்தது அந்தப் பழமையான நூலகம் நூலகத்தின் அமைப்பே வித்தியாசமாகக் காண்போரைக் கவர்ந்திழுக்கும். நூலகத்தின் முன் வாயில் வளைவு புத்தகங்களால் அமைக்கப் பட்டிருந்தது. ஒரு விடுமுறை நாளின்போது ஒரு நடுத்தர வயது மனிதர் தன் …

>>

 முனைவர் என்.பத்ரி/எங்கே அவள்?

இது என்னுடைய கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு நகரத்து நூல் நிலையம் .ஒரு மாதமாக என் மனைவியின் அன்புத் தொல்லை. இப்பொழுது எனக்கு எழுபது வயது. அவளுக்கு 60 வயது. அவள் 10th படிக்கும்பொழுது முத்தாரத்தில் எழுதிய ஒரு துணுக்கு வெளியாகி …

>>

சசிகலா விஸ்வநாதன்/நூலகமாகிய இல்லம்

தாத்தா சோமேசனின் அந்திம சடங்குகளுக்காக இந்தியா வந்திருந்தான்; அதிரன். மயிலாடுதுறையில், இருந்த, அந்தப் பெரிய வீடு  பழைய புத்தகங்களினாலும், செப்பு பட்டயங்களினாலும், ஓலை சுவடிகளாலும், நிரம்பி வழிந்தது.  வயது முதிர்ந்த தந்தை  திருநாவுக்கரசை தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்த நிலையில், …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/”தூசேறிய புத்தகம் “

“LE Bal des Livres” வாசலில், புத்தகங்களால் ஆன அந்த வளைவு அழகாய் இருந்தது. உள்ளே பிரபல எழுத்தாளரின் புத்தகம். இரண்டே பக்கத்தில் சாதாரண எழுத்து _ ஆனால் விலை எண்ணூறு. மக்கள் கூட்டம் முட்டி மோதியது. பெயருக்காக வாங்கினார்கள். படிக்க …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/புத்தக வாசலில்

நகரத்தின் பழைய புத்தகக் கடையின் வாசலில் போய் நின்றாள் அவள். வாசல் முழுவதும் புத்தகங்களால் கட்டப்பட்டிருந்தது. “என்ன புத்தகம் தேடுறீங்க?” கடைக்காரரின் குரல். “ஒரு புத்தகம்… பெயர் தெரியாது.” “அப்படின்னா கதையைச் சொல்லுங்க.” அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். “ஒரு …

>>

சசிகலா விஸ்வநாதன்/மீன் வியாபாரம்

“ஏசப்பா! இன்று எப்படியாவது எல்லா மீனும் வித்துப் போவணும். கடலம்மா கைக்கொடுக்கணும். இன்று எம்பொண்ணு மரியத்துக்கு, பொறந்த நாள். மேலாக்கு போட்டு வான்னு, சேக்காளி பொண்ணுங்க சொல்லுதாங்க; ஒரு  தாவணி வேணும்னு, கேட்டுட்டே தான் இருக்கா.? வெச்சுக்கிட்டா கைநீட்டாம இருக்கேன். இல்லாத …

>>

எம் ஷங்கர் /மீன் மைன்ட்

“ கூடை நிறைய மீன வச்சுட்டு கூவரோம். ஒராளுகூட வாங்க மாட்டேங்காக” “ இன்னிக்கு முளிச்ச முளி.அது சரி ஒன்னோட அண்ணன் பொண்ணு வந்துருக்குன்ட்டு சொன்னியே. என்ன பண்ணுது?” “ஆமா அது  சொம்மா போனை நோண்டிட்டுயிருக்கு. அட அதுவே வருதே?” “என்ன …

>>

வாழ்தல் / அப்புசிவா

பைக்கை நிறுத்திவிட்டு வசூல் பேகை முதுகுக்கு தள்ளிவைத்துச் சற்றே கடற்கரை காற்றுடன் அளவளாவினான். அலைபேசியில் அழகான காட்சிகளாகப் பதிவு செய்தான். கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த மீனவப் பெண்களிடம் பேச்சு கொடுத்தபடி படம் பிடித்தான். “இதென்ன சின்னச் சின்னதா?” “அது நெத்திலி, கத்திரிக்கா …

>>

எம்.எல்.பிரபா /செம்பருத்தி

செம்பருத்தியும் , பொன்னியும் கடற்கரையில் அப்பாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேர அமைதிக்குப் பின் பொன்னி, செம்பருத்தியிடம் “ஏன் நீ சோகமாக இருக்க? ஒன்னும் பேச மாட்டேங்குற. என்ன ஆச்சு?” என்றாள். அதற்குச் செம்பருத்தி அக்கா, “நீயும் நானும் தினமும் …

>>

நாபா.மீரா/மச்சாவதாரம்

கூடைகளைக் கீழே இறக்கி வைத்துவிட்டு புடவை முந்தானையைக் கொண்டு முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டனர் முனியம்மாவும், செல்வியும். ஊம், இந்தப் புரட்டாசி வந்தாலும் வந்துது, நம்ம பொழைப்பு தெருத் தெருவாச் சுத்தியும் லாட்டரி அடிக்குதே!, ஓய்வாக உட்கார்ந்தவாறே புலம்பித் தீர்த்தனர் …

>>

கரந்தை  இந்து /அமுதாவின்  மேற்படிப்பு

 ” யக்கோவ், என்ன  உம்முனு  இருக்கே,  இன்னிக்கும்  மாமாவோடு  சண்டையா?” என்று  கேட்டாள் செல்லாயி. “அடி  நீ வேற,  அது தான்  பொழுதுக்கும்  சாராயக்  கடையில்  குடியிருக்குதே.  என் மகள் அமுதாவின் மேல் படிப்புபற்றித் தான்  யோசனை ,” என்று பதில் …

>>

லீலா ராமசாமி/கடல் தந்த வாழ்வு

“ஜாய்ஸு! இன்னிக்கிக் கடலுக்குப் போய்த் திரும்புனவங்க எல்லாருக்குமே மீன் நெறையக் கெடைச்சதாலே நமக்கும் விக்கிறதுக்கு கூடை மீனு சல்லிசான வெலையில கெடைச்சுது. ஆனாலும் ஒம்மொகத்துல சந்தோஷமே தெரியலையே!” “எங்கண்ணன் சூசையும்  கடலுக்குப் போயி மூணு நாளாச்சு பாத்திமா! அவங்களுக்கும் இப்படித்தானே நெறைய …

>>

வனஜா முத்துகிருஷ்ணன்/கடற்கரை மகள்கள்

“ஏட்டி மஞ்சு. ஏன் முகத்தை உம்னு வச்சுகினு கீர? இன்னிக்கு மீன்பாடு எப்படி?” “வலை நல்லாத்தான் இருந்துச்சு ஆத்தா.எல்லா மீனுங்களும் சிக்கிச்சு. ஆனா அல்லா மீனும் விக்காம அப்படியே இருக்குது.” “என்ன ஆச்சுடி? என்ற மீனாவிடம், “ஆத்தா… இன்னிக்கு ஆடித் திருவிழா. …

>>

எஸ். எல். நாணு/நடிகை

“வாங்க. வாங்க. சுவையான மீனு வாங்கிக்கினுபோய் வூட்டுல கொயம்பாக்கி ருசியா சோறு துண்ணுங்க. ராமரு பாலம் கட்டச்சொல்ல அணிலுக்கு மட்டும் ஆசி கொடுக்கலை. கடல்ல இருந்த மீனுகளுக்கும் ஆசி கொடுத்தாரு. ஆசி கிடைச்ச அந்த வம்சத்துல வந்த மீனுங்க இது. வாங்கிகினு …

>>

G.சியாமளா கோபு/கெழுத்தி

கடற்கரையில் மீன்கள் நிரம்பிய கூடைகளுடன் அமர்ந்திருந்தனர் கெழுத்தியும் ஆரோக்கியமும். “காலையிலேயே கடக்கரையில வந்து நிக்கிற மரக்காயர்ட்ட மீனை வித்துடலாம்னா ஏஜென்ட்ட தான் கொடுக்கணுமுனு என் புருஷன் சொல்லிட்டு போயிடுது, “என்றாள் கெழுத்தி. “சரக்கு அடிக்கப் போற அவசரம். வேறன்ன!” என்றாள் ஆரோக்கியம் …

>>

கௌரி சங்கர்/கூடை மீன்கள்

மீன் பிடி துறைமுகம் ஜெ ஜெ என்று இருந்தது. மீன் வாங்குபவர்களும், விற்பவர்களும் நடமாடிக்கொண்டு இருந்தனர்.வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. விடிகாலை ஐந்து மணிக்கு வந்து கடற்கரை மணலில் கூடைகளுடன் அமர்ந்து இருந்தனர் காதரினும், சரோபியும். காதரின் சொன்னாள் – “இன்னும் மூன்று …

>>

மரு.ச.கந்தசாமி/கனவுகள் இலவசம்

“ரோஸி,  இன்னும் கொஞ்சம்  ரைட்ல திரும்பி உட்கார். ராணி நீ தலையைக் கொஞ்சம் திருப்பு,” என‌ டைரக்டர்  சொன்னார். ரோஸி ராணி இருவரும், “இதான் இந்த விளம்பர மாடலாக இருந்தாலே தொல்லை தான் .நல்ல பேமெண்ட் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் …

>>

விஜி சம்பத்/அழியாத கோலம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான அந்த அழகிய கோவா கடற்கரையில் ஒவ்வொரு சீஸனுக்கும் தகுந்தவாறு பனிச் சிற்பம், ஓவியம் போன்ற போட்டிகள் நடக்கும். இந்த முறை கற்கள், பாறைகளைக் கொண்டு அவரவர்க்குப் பிடித்தமான உருவங்களை வடிவமைக்கும் போட்டி. பல்வேறு வடிவமுள்ள …

>>

விதிமீறல்/ அர்ஜுனன்

“எஸ்தரு. உனக்கொரு விஷயம் தெரியுமா? “என்ன.க்கா?” “அதோ புதுசா கட்டுறாங்க பாரு ஒரு பில்டிங்கு. அது மீன் மார்க்கெட்டுக்குக்காம்.. அடுத்த மாசமெல்லாம் அங்கே தான் விக்கணுமாம். “ “இங்கே வித்தா. என்ன?” “ம்ம். இந்த ரோடெல்லாம் நாறுதாம்” “சரி. அப்ப நாமும் …

>>

ஜெ.பாஸ்கரன்/மீனுவின் மீன் வறுவல்!

“இன்னா மீனு, இவ்ளோ சுருக்கால வந்துட்ட?”  கேட்டபடி அருகில் வந்து உட்கார்ந்தாள் கயல். “ஆமாம் கயலு. பத்து நாளுக்குப் பொறவு இன்னிக்குத்தான் ஊர்லேர்ந்து வராரு. நாக்கும் ஒடம்பும் செத்துப் போயிட்டிருக்கும் – வூட்டுக்கு சீக்கிரமாப் போயி சமையல் செய்யணும்”. சதுப்பு நிலம், …

>>

வாசனையா? நாற்றமா?/முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

வள்ளியும் பொன்னியும் மீனவப் பெண்கள். மூன்று மாதம் முன் பொன்னியைப் பணக்கார வீட்டு மாப்பிள்ளை விரும்பித் திருமணம் செய்து கொண்டான். கணவன் வெளியூர் சென்றதால் அம்மா வீடு வந்திருந்தாள். சந்தையில் வள்ளியைப் பார்க வந்த பொன்னியின் முகம் வாடியிருந்தது. கண்களில் கருவளையம். …

>>

முகமற்ற உறவுகள்/ தி.வள்ளி

அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்தபோது  இரவு மணி மூன்றைத் தொட்டிருந்தது. வெளியே காரிருளும் மென்மையான மௌனமும்.  பழைய நாட்களின் வடு இன்னும் மனதில். அம்மாவும், அக்காவும் கண் முன் வந்து சென்றனர்.15 வயதில் அவர்களைப் பார்த்தது. நானும், அக்காவும் கருவாடு, …

>>

ஜே. செல்லம் ஜெரினா/முகமற்றவர்கள்

       அந்தஹால் சிறுசிறு கிசுகிசுப்பு முணுமுணுப்புகளுடன் மென்னொலியாய் நிரம்பியிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஓவியத்தின் முன்னே நின்று ரசித்தனர். சிலர் ரசித்ததை விலைக்கு வாங்கினர். அந்த ஆர்ட் எக்ஸிபிஷனுள்ளே அபர்ணா ஒரு சித்திரத்தின் முன்னே நின்றிருந்தாள்.அது நவினயுத்தி ஓவியம். பழையகாலத்து நெளிவு சுளிவுனின்றும் …

>>

காட்டிக் கொடுத்த ஓவியம்/ பத்மா ராகவன்

பிறந்தநாளுக்குக் கணவன் அளித்த பரிசைப் பார்த்த ஓவியா அதிர்ந்தாள்..”இந்தப் படத்தை எங்கே வாங்கினீங்க?” படபடத்தாள். இடத்தைச் சொன்னதும் குறித்துக் கொண்டாள். மறுநாள் கணவனை அலுவலகம் அனுப்பிவிட்டு, அந்தக் கண்காட்சி நடக்கும் இடத்துக்குப் பறந்தாள். மனதில் இனம்தெரியாத மகிழ்ச்சி. இரட்டைப் பிறவிகளான  ஓவியாவும் …

>>

சுபாஷிணி ரமணன்/மனம்

 “உச்சிக்கு வந்துருச்சு சூர்யன். இன்னும் கொண்டு வந்ததுல பாதி கூடக் காலி ஆகலையே” சிறியனவும், பெரியவைகளுமாய் நிறைந்திருந்த மீன்கள் இருந்த கூடையை வருத்தத்துடன் பார்த்தவாறு சொன்னாள் மீனாட்சி. “அக்கா, எனக்கொண்ணு தோணுது. சொல்லவா?” “என்ன சொல்லப் போறே? சொல்லு வள்ளி. எப்படியாவது …

>>

ருக்மணி வெங்கட்ராமன்/போராடும் மனசு

பொன்னி, மகள் வள்ளியுடன் மீன் வியாபாரம் செய்து வந்தாள். வள்ளிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. தையல் வேலை கற்றுக் கொண்டாள். தினமும் மாலை படகில் மீனவர்கள் கொண்டு வரும் மீனை வாங்கிச் சென்று தெருத் தெருவாக விற்பார்கள். கடற்கரை ஓரமாக நடந்தனர்.‌ …

>>

விஜி ஆர் கிருஷ்ணன்/விடிவு காலம்

” என்னடி சோலை சோகமா உக்காந்திருக்கவ “ ” ஏய் நாமளும் காலையிலிருந்து கூவிட்டே இருக்கோம், இந்த வெயில்ல மீனு கருவாடா போயிடும் போலயே” ” சரி சரி யாராச்சும் மொத்தமா வாங்க வந்தாலும் வரலாம், அது வரையில  கூவினு கிடப்போம்” “இருளாயீ …

>>

நானே நானா யாரோ தானா – கீதா ஆர்

கொந்தளிக்கும் மனதுடன் மீன் கூடைகளுடன் அமர்ந்திருந்தாள் ஜாஸ்மின். “மார்த்தாதான் வந்து சொன்னா. மாறு வேஷத்துல வந்துருக்க,  என்னைய பார்க்கணும்னு சொன்னன்னு….இப்ப எதுக்கு வந்த? ஆளுங்க வந்தா பிரச்சனையாகிடும்” – ஜாஸ்மின் வெடித்தாள். மேரி அமைதியாகக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளது தோற்றமும் …

>>

பானுமதி கண்ணன்/கடற்கரை காதல்

மணி 12. பெரும்பாலான மீன்கள் விற்றுத் தீர்ந்து விட்டது. அவரவர் வீட்டுக்குழம்புகளில் கொதித்துக்  கொண்டிருக்கும். “போலாமா?” என்றாள் பொன்னி. மிச்சத்தைச் சாயந்தரம் வித்துக்கலாம்.” “இன்னும் கொஞ்சநேரம் பாக்கலாம்கா!” என்றாள் செல்வி. பொன்னிக்கு ஆச்சரியமாக இருந்தது.  இருவரும் சகோதரிகள். பொன்னிக்குத் திருமணமாகி விட்டது.செல்விக்கு …

>>

முரண்பாடுகள் – ஸ்ரீராம்

ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தின் கீழே, ஒரு சிறிய பேப்பரில் “Sold Out – 500 Dollars” என்று எழுதியிருந்ததைப் படித்த மீனா பெருமூச்செறிந்தாள். அந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தவர்களும் அவள் சார்ந்த அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மீன் விற்றுக்கொண்டிருந்த அவளுடைய …

>>

சாந்தி சந்திரசேகரன்/கடல் தந்த ஓவியம்

​சுவர் முழுவதும் உப்புக்காற்றால் சிதைந்து போயிருந்தாலும், அந்த ஓவியம் மட்டும் உயிர்ப்புடன் இருக்கிறது. சுற்றுலா சென்ற இடத்தில், அம்மக்களின் உடை அணிந்து, அவர்களின் வியாபாரக்கூடத்தில் மீன்களுக்கும்,  சிப்பிகளுக்கும் மத்தியில் நானும் அம்மாவும் அமர, அப்பா அதை ஓவியமாக வரைந்தார். அன்று அதை …

>>

அழகியசிங்கர்/இருவரும்

அவர்கள் இருவரும் தனி இடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவள் மீனும், இன்னொருவள் கருவாடும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.   இந்த நேரத்தில் எல்லோரும் கூடி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் இன்றோ யாரும் வரவில்லை. அவர்களுக்குப் புரியவில்லை. ஏன் ஏன் என்று. அந்த …

>>